2019ம் ஆண்டு வீடியோவை எடுத்து திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று பரப்பும் நெட்டிசன்கள்!
கடந்த 2019ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் இளைஞர்கள் நான்கு பேர் சேர்ந்து காவலர் ஒருவரை தாக்கிய வீடியோவை தற்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
காவலர் ஒருவரை நான்கு - ஐந்து இளைஞர்கள் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்குது. போலீஸுக்கே தண்ணி திமுகவினர். அதிகாரம் கண்ணை கட்டுது. ஆணவம் தலை தூக்குது. கண்டுகொள்ளத்தான் ஆள் இல்லை.விடியல் ஆட்சியில் காவலர்களுக்கே இந்த கதி என்றாள் பெண்களின் நிலமை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை யாமிருக்க பயமேன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டநபர் 2022 ஜூன் 28ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2019ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் இளைஞர்கள் சிலர் காவலர் ஒருவரை தாக்கியது வைரல் ஆனது. அப்போது, அவர்கள் குறிப்பிட்ட மதத்தைச் சேர்த்தவர்கள் என்பதால் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டு பலரும் அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தனர். போலீசை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த நிலையில், பழைய வீடியோவை எடுத்து, தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது. போலீசார் மீது தி.மு.க-வினரே தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இந்த வீடியோ 2019ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களைத் தேடினோம். சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி யூடியூபில் தேடினோம். அப்போது, என்டிடிவி உள்ளிட்ட ஊடகங்களில் இந்த வீடியோ 2019ம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது.
2019ம் ஆண்டு வீடியோவை இப்போது ஏன் பகிர்ந்து வருகிறார்கள் என்று பார்த்தோம். அப்போது, பா.ஜ.க-வின் நிர்வாகி சௌதா மணி என்பவர் இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துவிட்டு அகற்றியிருப்பது தெரிந்தது. சௌதா மணி இந்த வீடியோவை பதிவிட்டதும், சென்னை மாநகர போலீஸ் இந்த வீடியோ 2019ம் ஆண்டு எடுக்கப்பட்டது.
உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive 1 I nakkheeran.in I Archive 2
உடனடியாக இந்த பதிவை அகற்ற வேண்டும் என்று கூறியது. அதைத் தொடர்ந்து அவர் அந்த ட்வீட் பதிவை அகற்றிவிட்டார். ஆனாலும், சமூக ஊடகங்களில் இந்த வீடியோ தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்கிறது என்று குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.
சென்னையில் காவலர் ஒருவர் தாக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அது தி.மு.க ஆட்சியில் நடந்தது என்றும் அதனால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறுவதும் தவறானதாகும். இந்த சம்பவம் நடந்த போது, அதாவது 2019ம் ஆண்டு தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு ஆட்சியில் இருந்தது. அதிமுக ஆட்சியில் நடந்த நிகழ்வின் வீடியோவை எடுத்து தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறுவது சரியில்லை. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று பகிரப்படும் வீடியோ 2019ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதையும், அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தார் என்பதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:2019ம் ஆண்டு வீடியோவை எடுத்து திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று பரப்பும் நெட்டிசன்கள்!
Fact Check By: Chendur PandianResult: Partly False