பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம் முன் ஆணுறை வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம் முன் ஆணுறை வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Claim Tweet Link l Archived Link

உண்மை அறிவோம்:

பாஜக.,வை சேர்ந்த திருச்சி சூர்யா சிவா மற்றும் டெய்சி ஆகியோர் ஃபோன் மூலமாக ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டிக்கொண்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

FactCrescendo Tamil Link 1 l Link 2 l Link 3

இந்த நிகழ்வை தொடர்ந்து, பலரும் பாஜக.,வை விமர்சித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாகவே, மேற்கண்ட வகையில் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை சிலர் பகிர்ந்து வருகின்றனர். உண்மையில், இப்படி எந்த இயந்திரமும் கமலாலயம் முன்பாக வைக்கப்படவில்லை.

இதுபற்றி பாஜக ஐ.டி., பிரிவினரிடம் பேசினோம். அவர்கள், கமலாலயம் பற்றி ஏற்கனவே ஊடகங்களில் வெளியான ஒரு புகைப்படத்தை எடுத்தே இவ்வாறு எடிட் செய்து, சிலர் பரப்பி வருவதாக, தெரிவித்தனர். உண்மையான புகைப்படத்தை கீழே இணைத்துள்ளோம். 

எடிட் செய்த புகைப்படத்தையும், உண்மயான புகைப்படத்தையும் ஒப்பிட்டு, கீழே மீண்டும் ஒருமுறை இணைத்துள்ளோம். 

முடிவு
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம் முன் ஆணுறை வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: ALTERED