‘’இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காசர்கோடு அலுவலகம் திறப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’

ராகுல் காந்தி தொகுதியில் கேரளாவில்

பாகிஸ்தானின் கிரிக்கெட் ஜெர்சி அணிந்து கேரளா காசர்கோடு லீக் அலுவலகம் திறப்பு. நாளை நாட்டில் ஒரு எதிர்பாராத சம்பவம் என்றால் இவர்கள் யாருக்கு துணையாக இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்

என்ன கொடுமை..... இந்த நாட்டில் காங்கிரஸ் ஆரம்பித்து வைத்துள்ளது.....!’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்படம் உண்மையா என்று நாம் கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது நமக்கு சில செய்தி ஆதாரங்கள் கிடைத்தன.

Mathrubhumi Link

இதன்படி, கேரள மாநிலம், காசர்கோடு பகுதியில் அமைந்துள்ள Arangadi என்ற இடத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கிளை அலுவலகம் கடந்த ஜூன் 30 அன்று திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவின்போது, அக்கட்சித் தொண்டர்கள், தங்களது கட்சியின் சின்னம் மற்றும் கிளையின் பெயர் உள்ளிட்டவற்றை கொண்ட பிரத்யேக ஜெர்ஸியை தங்களுக்கென வடிவமைத்து, அணிந்து, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இதுதொடர்பான பல வீடியோக்கள், புகைப்படங்களை, அவர்களது ஃபேஸ்புக் பக்கத்தில் (പച്ചപ്പട ആറങ്ങാടി) காண முடிகிறது. அதேசமயம், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அணியும் ஜெர்ஸியின் வடிவமைப்புக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்த விவகாரம் தற்போது வைரலாக விவாதிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளதால், இதுபற்றி முன்னாள் எம்எல்ஏ.,வும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளருமான KM Shaji அவர்களை நமது Fact Crescendo Malayalam பிரிவினர் தொடர்பு கொண்டு, விளக்கம் கேட்டனர். அப்போது, அவர், ‘’இது முற்றிலும் தவறான தகவல். இதுபோன்ற வதந்தி பரப்புவோர் மீது நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்,’’ என்று தெரிவித்துள்ளார்.

Fact Crescendo Malayalam Link

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் திறப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி பயன்படுத்தப்பட்டதா?

Written By: Fact Crescendo Team

Result: False