FactCheck: மதுரை எய்ம்ஸ் திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பங்கேற்பார் என்று மோடி கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம்

‘’மதுரை எய்ம்ஸ் திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பங்கேற்பார் – பிரதமர் மோடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட நியூஸ் கார்டில், ‘’எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் நிச்சயமாகத் திறந்து வைக்கப்படும். முதல்வர் என்ற முறையில் மு.க ஸ்டாலினும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத்தான் போகிறார் – பிரதமர் மோடி,’’ என்று எழுதியுள்ளனர்.

இதனை வாசகர்கள் சிலர் உண்மையா என்று கேட்டு, தொடர்ச்சியாக +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தனர்.

சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வரும் இந்த செய்தி பற்றி நாமும் ஆய்வை தொடங்கினோம்.

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. இதற்கான பிரசார பணிகளில் ஈடுபட, பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள், தமிழ்நாட்டிற்கு வந்து சென்றனர்.

இதையொட்டி, பிரதமர் மோடியும், தமிழ்நாட்டிற்கு வந்து, பாஜக – அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாகக் கூறி ஏராளமான வதந்திகளும் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இதுபற்றி நாமும் ஆய்வு செய்து, அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகிறோம்.

அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்திதான் மேற்கண்ட தந்தி டிவி லோகோவுடன் உள்ள நியூஸ் கார்டும். ‘’பிரதமர் மோடி இவ்வாறு பேசவில்லை. அப்படி நாங்கள் செய்தியும் வெளியிடவில்லை,’’ என்று தந்தி டிவி ஆசிரியர் குழு தரப்பில் தெரிவித்தனர்.

இதுதவிர, தேர்தல் நேரத்தில் தந்தி டிவி மோடி பற்றி வெளியிட்ட நியூஸ் கார்டுகளின் ஃபாண்ட் வேறு ஒன்றாகவும், நாம் ஆய்வு செய்யும் நியூஸ் கார்டின்ஃபாண்ட் வேறு ஒன்றாகவும் உள்ளது. 

எனவே, தந்தி டிவி பெயரில், போலியாக உருவாக்கப்பட்ட செய்திதான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு என, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மதுரை எய்ம்ஸ் திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பங்கேற்பார் என்று மோடி கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply