வக்ஃப் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டாரா பிரியங்கா காந்தி?

வக்ஃப் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரியங்கா காந்தி போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வக்ஃப் போராட்டத்தில் சின்ன ( இந்திரா காந்தி ) பிரியங்கா காந்தி அவர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி வங்கிக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ததா?

நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி (write-off) செய்ததாகப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிந்துகொள்ள ஆய்வு செய்தோம். பிரபல பாலிவுட் நடிகையும் ஐபிஎல் கிரிக்கெட் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தொடர்பாக சமீபத்தில் கேரள காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டது. அதில், “நடிகை ப்ரீத்தி ஜிந்தா தன்னுடைய சமூக ஊடக பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பாஜக-வுக்கு கொடுத்து, வங்கிக் கடன் […]

Continue Reading

மன்மோகன் சிங்கை அவமதித்த சோனியா காந்தி என்று பரவும் வீடியோ உண்மையா?

மன்மோகன் சிங்கை கண்டுகொள்ளாமல் சோனியா காந்தி கடந்து சென்றது போன்ற வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ பின்னணி தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I Archive மன்மோகன் சிங் மற்றும் சில தலைவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். அப்போது காரில் இருந்து இறங்கி நடந்து வரும் சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை கடந்து செல்கிறார். சோனியா காந்தியை பார்த்தபடி மன்மோகன் சிங் திரும்ப, சோனியா […]

Continue Reading

மன்மோகன் சிங்கின் கடைசி படம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மன்மோகன் சிங் சிகிச்சை பெற்ற போது கடைசியாக எடுத்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படத்தை வைத்து நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மன்மோகன் சிங்கின் கடைசி புகைப்படம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) நேற்று இம்மண்ணை விட்டு பிரிந்த நிலையில் […]

Continue Reading

காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தியதால் நாட்டைவிட்டு ஓடினேன் என்று நீரவ் மோடி கூறினாரா?

நாட்டைவிட்டு ஓடும்படி காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் என்னை வற்புறுத்தியதால்தான் இந்தியாவை விட்டு வெளியேறினேன் என்று நீரவ் மோடி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நீரவ் மோடி வாக்குமூலம் என்று ஆங்கிலத்தில் வெளியான பதிவு ஒன்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “நானாக சுயமாக இந்தியாவை விட்டு தப்பித்து ஓட வில்லை. பாஜக ஆட்சிக்கு […]

Continue Reading

“வங்கதேச இந்துக்கள் பற்றி கவலையில்லை” என்று கைப்பை கொண்டு வந்தாரா பிரியங்கா காந்தி?

“வங்கதேச இந்துக்கள் பற்றி எனக்குக் கவலையில்லை” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்ட கைப் பை ஒன்றை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கொண்டு வந்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரியங்கா காந்தியின் கைப் பையில் “I dont care about Bangladeshi Hindus” என்று எழுதப்பட்டிருப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

“உங்கள் வீட்டிற்குள் நுழைந்து பணத்தை எடுத்து முஸ்லிம்களுக்கு வழங்குவோம்” என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினாரா?

உங்கள் வீட்டிற்குள் காங்கிரஸ்காரர்கள் நுழைந்து அலமாரியை உடைத்து பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு வழங்குவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “காங்கிரஸ்காரர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? காங்கிரஸ் கட்சிக்காரர்கள் உங்கள் வீட்டுக்குள் நுழைந்து அலமாரியை […]

Continue Reading

ராகுல் காந்தியை விரட்டி அடித்த மணிப்பூர் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’மணிப்பூருக்கு வந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மக்கள் திரும்பிப் போ என்று விரட்டினர்,’’ என ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராகுல் காந்திக்கு எதிராக மக்கள் போராடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மணிப்பூருக்கு சென்ற ராகுல் காந்தியை மணிப்பூர் வராதே வெளியே போ , கோ பேக் ராகுல் என்று பதாகைகளை […]

Continue Reading

‘ராகுல் காந்தியை நேருக்கு நேர் கேள்வி கேட்ட அனுராக் தாக்கூர்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ராகுல் காந்தியை நேருக்கு நேர் கேள்வி கேட்ட அனுராக் தாக்கூர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஒரே ஒரு கேள்வி, பதில் சொல்ல முடியாமல் திணறிய ராகுல் காந்தி’’, என்று எழுதப்பட்டுள்ளது.  ‘இந்திய அரசியல் சாசனத்தில் எத்தனை பக்கங்கள் உள்ளன?’, என்று அனுராக் தாக்கூர் கேட்பது […]

Continue Reading

இத்தாலி நாட்டில் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்று பரவும் தகவல் உண்மையா?

‘’இத்தாலி நாட்டில் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பப்புவின் பாட்டி நாடான இத்தாலியில் மோடிஜி எப்படி  வரவேற்கப்பட்டார் என்பதை பாருங்கள். 🇮🇳🇮🇳* *சைக்கோபான்ட்கள் இதை பார்க்க வேண்டாம், ஏனென்றால் உங்களால் இதை ஜீரணிக்க முடியாது 😊😇*😡😡😡,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link […]

Continue Reading

இந்துக்களை விரட்டுவோம் என்று கமல்நாத் கூறினாரா?

இந்துக்களை விரட்டுவோம் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் இஸ்லாமியர்களுடன் பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்துக்களை விரட்டுவோம், தேர்தல் வரை நீங்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்; ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும்.”* […]

Continue Reading

பாங்காங் செல்லும் ராகுல் காந்தி என்று பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

‘’பாங்காங் செல்லும் ராகுல் காந்தி – டிக்கெட் ஆதாரம் இதோ,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ 24 பாராளுமன்றத்‌ தேர்தலில் வெற்றிவாகை சூடிய  கான்கிராஸ் பிரதமர் வேட்பாளர் நேரு குடும்ப பட்டத்து இளவரசர் ராகுல் காந்தி அவர்கள் ஜூன் 6ந்தேதி பாங்காக்கில் இந்தியப் பிரதமர் பதவியை […]

Continue Reading

காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது என்று திருமாவளவன் கூறியது உண்மையா?

காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது என்று திருமாவளவன் கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “”தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் ஜெயிக்க வாய்ப்பில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

மோடியின் உருவ பொம்மையை எரிக்க வந்த காங்கிரஸ் கட்சியினரின் வேட்டியில் தீப்பிடித்ததா?

கர்நாடகாவில் மோடியின் உருவ பொம்மையை எரிக்க வந்த காங்கிரஸ் கட்சியினரின் லுங்கியில் தீப்பிடித்து என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சிலர் நில நிற கொடியை ஏந்தியபடி வந்து உருவ பொம்மையை தீ வைத்து எரிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. தீ வைக்க வந்தவரின் வேட்டியில் தீ பற்றிக்கொள்கிறது. நிலைத் தகவலில், “கர்நாடகாவில் மோடியின் உருவ பொம்மையை […]

Continue Reading

ராகுல் காந்தியின் குஜராத் ரோடு ஷோ என்று பரவும் வீடியோ உண்மையா?

குஜராத்தில் ராகுல் காந்தி நடத்திய ரோடு ஷோ எனப்படும் பேரணியைப் பல ஊடகங்கள் மக்களுக்குக் காட்டாமல் மறைத்துவிட்டன என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராகுல் காந்தி பங்கேற்ற பேரணி வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. வீடியோ மீது குஜராத் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “இந்தியாவில் எத்தனை மீடியாக்கள் இதை காட்டியது குஜராத்தில் ராகுல் […]

Continue Reading

ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் நேரத்தை செலவிடும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.8500 வழங்கப்படும் என்று ராகுல் கூறினாரா?

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நேரம் செலவழிக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.8500 வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராகுல் காந்தி பிரசார வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வேலை இல்லாமல் facebook instagram இல் நேரம் செலவழிக்கும் இளைஞர்களுக்கு மாதம் மாதம் ₹8500 இது தான் இந்திய […]

Continue Reading

அல்லு அர்ஜுன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தாரா?

2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் – இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் பிரசாரம் செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவை மீட்க காங்கிரஸ்க்கு ஆதரவாக […]

Continue Reading

கேரளாவில் ராகுல் காந்திக்கு பாகிஸ்தான் கொடியேந்தி வரவேற்பு அளிக்கப்பட்டதா?

கேரளாவில் பாகிஸ்தான் கொடியுடன் வந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்ற தொண்டர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முஸ்லிம் லீக் கட்சிக் கொடியுடன் ஊர்வலமாக சென்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், நிலைத் தகவலில், “கேரளா வயநாட்டில் ராகுல் வருகைக்கு பாகிஸ்தான் கொடியை ஏந்தி வரவேற்பு இந்துக்களே சிந்தியுங்கள் என்று நான் முட்டாளாக […]

Continue Reading

‘பீகாரில் ராகுல் காந்திக்கு வந்த கூட்டம்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

பீகாரில் ராகுல் காந்திக்குத் திரண்ட கூட்டம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒரு மிகப்பெரிய மைதானம் முழுக்க மக்கள் இருப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் 2024 மார்ச் 4ம் தேதி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீகாரில் ராகுல் காந்திக்கு கூடிய கூட்டம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்பட பதிவை பலரும் தங்கள் […]

Continue Reading

பாஜக ஆதரவாகக் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பேசியதாக பரவும் வீடியோ உண்மையா?

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை காரணமாக மிகப்பெரிய அரசியல் மாற்றம் வரும் என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியின் பேட்டி ஒரு சிறு பகுதி மட்டும் வெட்டி சினிமா காட்சியுடன் இணைத்து வீடியோ உருவாக்கி ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். அதில் […]

Continue Reading

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடந்தபோது காங்கிரஸ் எம்.பி.,க்கள் கருப்பு உடையில் வந்தனரா?

கடந்த 2020ம் ஆண்டு ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்த போது நாடாளுமன்றத்துக்கு காங்கிரஸ் எம்.பி-க்கள் கருப்பு உடையில் சென்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் எம்.பி-க்கள் கருப்பு உடையில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.நிலைத் தகவலில், “ஒருபோதும் மறக்காதே. ஒருபோதும் மன்னிக்காதே. 🤬🤬 ஆகஸ்ட் 5, 2020 […]

Continue Reading

பெண்களுடன் நடனமாடிய நரேந்திர மோடி என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரதமர் மோடி பெண்களுடன் நடனமாடுவது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடி பெண்களுடன் சேர்ந்து நடனமாடுவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் 2023 நவம்பர் 9ம் தேதி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரதமர் வேலையை தவிர எல்லா வேலையும் செய்யுறிங்க” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இந்த […]

Continue Reading

RAPID FACT CHECK: மத்திய பிரதேச காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் மோதலா?

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானதால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ்காரர்கள் அடித்துக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 இரண்டு தலைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் பழைய வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#மத்திய_பிரதேசம் எ#காங்கிரசின் முதல் கட்ட #வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை […]

Continue Reading

கர்நாடக முதல்வரான பின் இஸ்லாமிய உடையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டாரா சித்தராமையா?

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் இஸ்லாமியர்கள் போல ஆடை அணிந்து இஸ்லாமியர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோர் இப்தார் நோம்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “The CM and Deputy […]

Continue Reading

கர்நாடகாவில் பசுவைக் கொன்று காங்கிரஸ் வெற்றியைக் கொண்டாடிய இஸ்லாமியர்கள் என்று பரவும் வதந்தி!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதத்தில் பசுவைக் கொன்று பாஜக கொடி மீது ரத்தத்தைத் தெளித்த இஸ்லாமியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பசுமாடு ஒன்றைக் கொல்லும் கொடூர வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடகாவில் காங்கிரசின் வெற்றியைக் கொண்டாடும் இஸ்லாமியர்கள்…  கோமாதாவை கொன்று பாரதிய ஜனதா கட்சியின் […]

Continue Reading

கர்நாடக பாடப்புத்தகங்களில் சாவர்க்கர் பாடம் நீக்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் அறிவித்தாரா?

கர்நாடக அரசு பாடப் புத்தகங்களிலிருந்து சாவர்க்கர் பாடங்கள் கிழித்து எறியப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் புத்தகம் ஒன்றை கிழிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், கர்நாடக பாடப்புத்தகங்களில் இனி சாவர்க்கர் பாடம் கிழித்து எறியப்படும். – டி.கே.சிவக்குமார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்குச் சென்ற பாஜக வாகனத்தை பொதுமக்கள் தாக்கினார்களா?

‘‘கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்குச் சென்ற பாஜக வாகனத்தை பொதுமக்கள் தாக்கினார்கள்’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவை கவனித்தபோது, பொதுமக்கள் […]

Continue Reading

பொது இடத்தில் பெண்ணிடம் அத்துமீறிய பா.ஜ.க நிர்வாகி என்று பரவும் வீடியோ உண்மையா?

பொதுவெளியில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரசியல்வாதி ஒருவர், பெண்மணி ஒருவருக்கு மாலை அணிவித்து சேட்டைகள் செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், அந்த நபர் மாலை அணிவித்ததும் அந்த பெண்மணியிடம் கைகுலுக்க முயல்கிறார். ஆனால், அந்த பெண்மணியோ வணக்கம் கூறி மறுக்கிறார். வலுக்கட்டாயமாக அந்த பெண்மணிக்கு அவர் கையை […]

Continue Reading

ராகுல் காந்தி மது அருந்தியதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

ராகுல் காந்தி மது அருந்துவது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராகுல் காந்தி உணவருந்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அவருக்கு முன்பாக ஒரு கிளாசில் மது உள்ளது. ஒரிஜினல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன், “சரக்கு அடிக்கும் போது நிறைய ஸைடிஸ் எடுத்துக்கனும் இல்லாட்டி குடல் பாதிக்கு காங்கிஸ் முதியவர்களுக்கு பப்பு அறிவுரை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை […]

Continue Reading

குஜராத்தில் வாக்கு கேட்டுச் சென்ற காங்கிரஸ் கட்சியினரை எருமை முட்டியதா?

குஜராத்தில் வாக்கு கேட்டுச் சென்ற காங்கிரஸ் கட்சியினர் மீது எருமை மாடுகள் முட்டியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: எருமை மாடுகள் கூட்டமாக இருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவற்றின் முன்னாள் காங்கிரஸ் கொடியுடன் மூன்று பேர் நிற்கின்றனர். திடீரென்று எருமை மாடு ஒன்று வேகமாக ஓடிவந்து முட்ட முயற்சிக்கிறது. நிலைத் தகவலில், “காங்கிரஸ் நிர்வாகிகள் குஜராத்தில் ஓட்டு கேட்க சென்றபோது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை […]

Continue Reading

தாடி வளர்த்த ராகுல் காந்தி என்று கேலியாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

இந்திய ஒற்றுமை பயணத்தில் நடந்தால் தாடிதான் வளருமே தவிர கட்சி வளராது என்று ராகுல் காந்தி தாடி மீசையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிகவும் அதிகமாகத் தாடி, மீசை மற்றும் தலைமுடி வளர்ந்த நிலையில் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நடந்து நடந்து தாடி தான் வளருமே தவிர கட்சியோ???ஓட்டோ […]

Continue Reading

இந்திய ஒற்றுமை பயணம்; மது போதையில் காங்கிரஸ் தலைவர்கள் என்று பரவும் வீடியோ பின்னணி என்ன?

இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் கட்சியினர் மது அருந்திவிட்டு தள்ளாடியபடி வருகின்றனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஹோட்டல் ஒன்றிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக சிலர் வருகின்றனர். ஒரு கட்டத்தில் அனைவரும் தடுமாறி நடப்பது போன்று உள்ளது. கடைசியில் ராகுல் காந்தி வருகிறார். பின்னணியில் மலையாளத்தில் பேசப்படுகிறது. நிலைத் தகவலில், “பாரத் ஜூடோ நகி பையா…! […]

Continue Reading

பெண்களுடன் புகைப்படம் எடுத்தாலே தப்பா?- ராகுல் காந்தி பற்றி பரவும் விஷம பதிவு!

ராகுல் காந்தி பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ஒரு மாதிரி யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரசார வாகனத்தில் இருக்கும் ராகுல் காந்தியுடன் பெண் ஒருவர் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அந்த”பாத யாத்திரை” பின் “பாதிரி யாத்திரை”யாக மாறி இப்பொழுது “ஒரு மாதிரி யாத்திரை”யாக […]

Continue Reading

ராகுல் காந்தியின் இன்பச் சுற்றுலா என்று பரவும் பழைய புகைப்படங்கள்!

ராகுல் காந்தி யாத்திரை மேற்கொள்ளும் போது அவர் தங்குவதற்காக பயன்படுத்தும் கன்டெய்னர் அறைகளின் படங்கள் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராகுல் காந்தியின் யாத்திரை வாகனங்களின் புகைப்படம், அவற்றின் உட்புற காட்சி மற்றும் செய்தி ஆகியவற்றின் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “இன்பச் சுற்றுலா மாதிரி இருக்கு பப்பு யாத்திரை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

கரூரில் ரூ.90 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறையா?

கரூரில் ஜோதிமணி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.90 லட்சத்திற்கு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கரூரில் ஜோடிமணி எம்.பி நிதியில் கட்டப்பட்ட பொதுக்கழிவறை! அதுக்கு என்னன்னு கேக்குறீங்களா? செலவு ஜஸ்ட் 90 லட்ச ரூபாய்தான்!” என்று […]

Continue Reading

ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்று பகிரப்படும் சினிமா காட்சியால் சர்ச்சை…

ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link 2018ல் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவை இன்றளவும் உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவை பார்க்கும்போதே, அதில் கேமிரா பலவித கோணங்களில் ஆடாமல், அசையாமல் படம்பிடிப்பதையும், பின்னணி இசை ஒலிப்பதையும் தெளிவாக உணர முடிகிறது. உண்மையான […]

Continue Reading

இளம் பெண்ணுடன் ராகுல் காந்தி என்று பரவும் திரைப்பட ஸ்டில்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இளம் பெண் ஒருவருடன் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராகுல் காந்தி போன்று தோற்றம் கொண்ட ஒருவர் பெண் ஒருவரைத் தூக்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த பப்பு ஒரு பாப்பாவ தூக்கிட்டு சுத்துறான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Tn Modi followers Hosur.என்ற […]

Continue Reading

மான் வேட்டையாடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ என்று பகிரப்படும் வங்கதேச வீடியோ!

காங்கிரஸ் எம்.எல்.ஏ பூங்காவுக்கு சென்று மான்களை வேட்டையாடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பூங்காவில் மான்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அப்போது கையில் துப்பாக்கி வைத்துள்ள நபர் ஒருவர் மான்களை நோக்கி சுடுகிறார். இறந்த மானின் முன்பு துப்பாக்கியை உயர்த்தி காட்டி போஸ் கொடுக்கிறார். நிலைத் தகவலில், “காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அனில் உபாத்யாய் பூங்காவில் […]

Continue Reading

சோனியாவுக்கு மரியாதை கொடுக்கத் தவறிய மோடி என்று பரவும் படம்- உண்மை என்ன?

சோனியா காந்தி வணக்கம் தெரிவித்த போது, பிரதமர் மோடி கைக்கட்டி நின்று அவமரியாதை செய்தார் என்று ஒரு புகைப்பட பதிவு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் புகைப்பட பதிவு ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். பிரதமர் மோடி கைக்கட்டியபடி நிற்க, சோனியா காந்தி வணக்கம் சொல்வது போன்று அந்த படம் இருந்தது. அந்த […]

Continue Reading

உதயநிதி உண்மை பேச வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறினாரா?

நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று தெரிந்துகொண்டு வேண்டுமென்றே மக்களை உதயநிதி குழப்பி வருகிறார், அவர் உண்மையைப் பேச வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உதயநிதி […]

Continue Reading

FACT CHECK: காங்கிரஸ் கட்சி சின்னத்தை அழித்தாரா பிரியங்கா காந்தி?

காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை பிரியங்கா காந்தி பெருக்கி அகற்றினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தரையில் வரையப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தைப் பெருக்கி சுத்தம் செய்வது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மதிப்பிற்குரிய பிரியங்கா காந்தி அவர்கள் அறையில் உள்ள காங்கிரஸ் கட்சியினை கூட்டி […]

Continue Reading

FACT CHECK: நீட் விவகாரம்… 2017ல் நளினி சிதம்பரம் பேசியதை தற்போது பகிர்வதால் குழப்பம்!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நீட் விலக்கு வழங்கக் கோரி மசோதா நிறைவேற்றப்பட்ட சூழலில், நீட் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று வழக்கறிஞர் நளினி சிதம்பரம் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட வழக்கறிஞர் நளினி சிதம்பரம் பேட்டியின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “நீட் விவகாரத்தில் தமிழக அரசின் […]

Continue Reading

FACT CHECK: இந்தியாவின் கௌரவத்துக்கு எதிராகச் செயல்படும் காங்கிரஸ் என்று உமர் அப்துல்லா விமர்சித்தாரா?

இந்தியாவின் கௌரவத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சரும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான உமர் அப்துல்லா கூறியதாக ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா புகைப்படத்துடன் கூடிய ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. Omar […]

Continue Reading

FactCheck: தாஜ்மஹாலை விபச்சார விடுதியாக மாற்ற காங்கிரஸ் முயற்சியா?- குலாம் நபி ஆசாத் பெயரில் வதந்தி!

‘’தாஜ்மஹாலை விபச்சார விடுதியாக மாற்ற நினைத்தது காங்கிரஸ் – குலாம்நபி ஆசாத்,’’ என்று கூறி பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். எனவே, நாம் இதுபற்றி தகவல் தேட தொடங்கினோம். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நியூஸ் கார்டு புதிய தலைமுறை பெயரில் பகிரப்பட்டுள்ளது. அதில், ‘’தாஜ்மஹாலை […]

Continue Reading

FACT CHECK: மாஸ்க் போட்டு சாப்பிடுவது போல ராகுல் போஸ் கொடுத்தாரா?- விஷம பதிவு

மாஸ்க் போட்டு ராகுல் காந்தி சாப்பிடுவது போல் புகைப்படம் எடுத்ததாகக் கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ராகுல் காந்தி உணவு விருந்து ஒன்றில் மாஸ்க் போட்டு அருகில் அமர்ந்திருந்த பெண்களுடன் பேசும் புகைப்படமும் தமிழ் திரைப்பட காட்சி ஒன்றும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லக்கினத்தில் ஒன்பது கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவன்…. ஒருவன்… […]

Continue Reading

FactCheck: பாஜகவினர் தடவியது பற்றி குஷ்பு கருத்து: விஷமத்தனமான வதந்தி…

‘’பாஜகவினர் என்னைத் தடவியதில் தவறில்லை என்று கூறிய குஷ்பு,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது பார்க்க அசலானதாக இருந்ததால், பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link கடந்த அக்டோபர் 13, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், புதிய தலைமுறை ஊடகத்தின் பெயரில் குஷ்பு பற்றி ஒரு நியூஸ் கார்டு வெளியிட்டதாகக் […]

Continue Reading

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பற்றி பகிரப்படும் போலிச் செய்தி

‘’குஷ்பு, நமீதாவை மொழிப் போர் தியாகிகள் என்று சொன்ன அண்ணாமலை,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link அக்டோபர் 12, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பற்றி தினமலர் ஊடகத்தின் பெயரில் வெளியான செய்தியைப் போன்ற நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’குஷ்பு, நமீதா போன்ற […]

Continue Reading

FACT CHECK: குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்று அடிவாங்கிய பாஜகவினர்?- பழைய வீடியோ!

குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்று அடிவாங்கிய பா.ஜ.க-வினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 கூட்ட நெரிசலில் செல்லும் குஷ்பு, திடீரென்று திரும்பி இளைஞர் ஒருவரை அடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஷ்பு விடம் தவறாக நடக்க முயன்று அடி வாங்கிய பாஜக-வினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வீடியோ பதிவை […]

Continue Reading

FACT CHECK: காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மகள் பா.ஜ.க-வில் இணைந்தாரா?

காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மகள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாக, தினமலர் செய்தி வெளியிட்டு பிறகு அதனை திருத்திக் கொண்டதால் சமூக ஊடகங்களில் குழப்பம் நிலவுகிறது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மகள் பா.ஜ.-வில் ஐக்கியம்” என்று தினமலர் செய்தி வெளியிட்டது போன்ற ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது.  இந்த படத்தை Srisai Selvam என்பவர் அக்டோபர் 7, 2020 அன்று […]

Continue Reading

காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ரூ.10 கோடி வாங்கினாரா சீமான்?

காங்கிரஸ் எம்.எல்.ஏ மூலமாக சீமான் ரூ.10 கோடி பணம் பெற்றார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ்18 தமிழ்நாடு நியூஸ் கார்டுடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் “காங்கிரஸ் எம்.எல்.ஏ மூலம் நடிகர் சீமான் அவர்களுக்கு 10 கோடி பணம் பரிமாற்றம் அம்பலம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை குறிஞ்சி வேந்தன் பாரதம் என்பவர் 2020 ஜூலை 28ம் […]

Continue Reading