விவசாயிகள் போராட்ட வீடியோவை எடுத்து நுபுர் சர்மா கைது என்று பரப்பும் நெட்டிசன்கள்!

‘’நுபுர் சர்மா கைது செய்யப்பட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பாஜக.,வைச் சேர்ந்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் சமீபத்தில் நபிகள் நாயகம் பற்றி தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை சர்வதேச அளவில் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, இஸ்லாமிய நாடுகள் பலவும் இந்தியாவிற்கு கண்டனம் […]

Continue Reading

ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் தொடங்க எஸ்பிஐ அதானி குழுமத்திற்கு ரூ.60,000 கோடி கடன் வழங்கியதா?

‘’ஆஸ்திரேலியாவில் சுரங்கம் வாங்க அதானி குழுமத்திற்கு ரூ.60,000 கோடி கடன் வழங்கிய எஸ்பிஐ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் சமூக வலைதளங்களில் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I […]

Continue Reading

மன்மோகன் சிங் பெற்றதைப் போல மோடிக்கு வெளிநாடுகளில் வரவேற்பு கிடைப்பதில்லையா?

இந்தியப் பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போது வெளிநாட்டில் பெரிய வரவேற்பு கிடைத்தது போலவும், மோடிக்கு வரவேற்பு கிடைப்பது இல்லை என்பது போலவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 2019 மற்றும் 2005ம் ஆண்டில் இந்தியா என்று இரு வேறு வீடியோக்களை ஒன்றிணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நம் நாட்டை எங்க கொண்டு போய் நிறுத்தி வச்சுருக்கானுங்கன்னு […]

Continue Reading

பிரம்மபுத்திரா ஆற்றின் கீழ் கட்டப்பட்ட 14 கி.மீ சுரங்கப்பாதையா இது?

இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமைக்கப்பட்ட சாலை மற்றும் ரயில் பாதை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி கையசைக்கும் புகைப்படங்கள் மற்றும் தண்ணீருக்கு அடியில் அமைக்கப்பட்ட சாலை மற்றும் ரயில் பாதையின் மாதிரி படம் ஆகியவற்றை இணைத்து புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவின் முதல் நீருக்கடியில் சாலை மற்றும் ரயில் பாதை, இத […]

Continue Reading

மோடியை வரவேற்க தமிழ்நாடு போக்குவரத்து போலீசாருக்கு காவி நிழற்குடைகளை திமுக அரசு வழங்கியதா?

‘’மோடியை வரவேற்பதற்காக, தமிழ்நாடு போக்குவரத்து போலீசாருக்கு காவி நிழற்குடைகளை அரசு வழங்கியுள்ளது,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பிரதமர் மோடி கடந்த வாரம் (மே 26, 2022) தமிழ்நாட்டிற்கு வந்தார். இதன்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. TOI Link I […]

Continue Reading

பண மதிப்பிழப்பு மூலம் இந்தியாவை மோடி காப்பாற்றினார் என ரிசர்வ் வங்கி ஆளுநர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தாரா?

பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், இந்தியா சோமாலியா நாடாக மாறி இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார் என ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் புகைப்படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா […]

Continue Reading

2022 குவாட் உச்சி மாநாட்டில் மோடியை புறக்கணித்தாரா அமெரிக்க அதிபர் ஜோ பைடன்?

மோடி பேசினால் அமெரிக்காவே கேட்கும் என்று கூறிய நிலையில், குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மோடியை கண்டும் காணாமல் ஒதுக்கிவிட்டார் எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனை பலரும் ஃபேஸ்புக் மட்டுமின்றி, ட்விட்டர் போன்றவற்றில் ஷேர் செய்வதைக் கண்டோம். Twitter Claim Link 1 I Twitter Claim Link 2 […]

Continue Reading

கர்நாடகா சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை அறிவித்தாரா?

‘’கர்நாடகா சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை அறிவிப்பு,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.   தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதே தகவலை பலரும் உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பகிர்வதையும் கண்டோம். Twitter Claim Link I Archived Link உண்மை […]

Continue Reading

வெளிநாட்டுப் பயணங்களின்போது மோடி மது அருந்துகிறாரா?

‘’வெளிநாட்டுப் பயணங்களின்போது மோடி மது அருந்துகிறார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கிலும் சிலர் இந்த புகைப்படத்தை தமிழ் மட்டுமின்றி இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை […]

Continue Reading

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு; உள்ளாடை போல சரிகிறது என்று ஜூஹி சாவ்லா கூறினாரா?

‘’அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு, எனது ஜட்டி போல உள்ளது என்று நடிகை ஜூஹி சாவ்லா விமர்சனம் தெரிவித்து, ட்வீட் வெளியிட்டுள்ளார்,’’ என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) எண்ணிற்கு வாசகர் ஒருவர் இதனை அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தார். இதே ஸ்கிரின்ஷாட் பதிவை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் […]

Continue Reading

மோடி பேசினால் அமெரிக்கா வரை கேட்கும்; ஆனால் அவர்களுக்கு இந்தி புரியாது என்று அண்ணாமலை கூறினாரா?

‘’மோடி பேசினால் அமெரிக்கா வரை கேட்கும். ஆனால், அவர்களுக்கு இந்தி தெரியாது என்பதால் பேசியும் பயனில்லாத நிலை ,’’ என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக நமக்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதனை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived […]

Continue Reading

2015ல் எடுக்கப்பட்ட ராஜபக்சே குடும்ப புகைப்படம் தற்போது பரவுவதால் குழப்பம்…

‘’ராஜபக்சே குடும்பம் கொழும்பில் இருந்து, ஹெலிகாப்டர் உதவியுடன் திருகோணமலைக்கு தப்பியோடும் புகைப்படம்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த நியூஸ் கார்டில் one india tamil லோகோ இடம்பெற்றுள்ளதைக் காண முடிகிறது. இதன்பேரில், குறிப்பிட்ட ஒன் இந்தியா ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் தேடியபோது இந்த நியூஸ் கார்டு இருந்தது. ஆனால், அதனை ஆர்கிவ் செய்து முடிப்பதற்குள் […]

Continue Reading

திருமணம் ஒரு பாவச்செயல்; நான் சொல்லித்தான் மோடி அவரது மனைவியை விட்டு பிரிந்தார் என்று மோகன் பகவத் கூறினாரா?

திருமணம் ஒரு பாவச் செயல். எனவே, ஸ்வயம்சேவக்குகள் கண்டிப்பாக திருமண பந்தத்தில் ஈடுபடக்கூடாது என்றும், தன்னுடைய யோசனைப்படி செயல்பட்டுத்தான் பிரதமர் மோடி தன்னுடைய மனைவியை விலக்கினார் என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு […]

Continue Reading

மோடியை நம்பும் இந்தியர்களை வணங்குகிறேன் என்று மகிந்த ராஜபக்சே கூறினாரா?

‘’மோடி மீது நம்பிக்கை வைத்துள்ள இந்தியர்களை வணங்குகிறேன் – ராஜபக்சே,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இலங்கையில் ஏற்பட்டுள்ள […]

Continue Reading

பலுசிஸ்தான் மக்கள் பா.ஜ.க கொடியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனரா?

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மக்கள், இந்தியப் பிரதமர் மோடி தங்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவார் என்று பா.ஜ.க கொடியுடன் கொண்டாட்டம் மேற்கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமிய பெண்கள் பாட்டுப் பாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் ஒருவர் பாஜக கொடியை வைத்துள்ளார். ஒருவர் மோடி முகமூடி அணிந்து வருகிறார். நிலைத் தகவலில், “பாகிஸ்தானில் பாஜக கொடி……. பாகிஸ்தானில் […]

Continue Reading

பத்திரிகையாளர்களைப் பார்த்ததும் ஓ மை காட் என்று மோடி பதறினாரா?

ஊடகவியலாளர்களை பார்த்து பதில் சொல்ல முடியாமல் மோடி ஓ மை காட் என்று அலறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “டென்மார்க்கில் ஷாக் ஆன பிரதமர் மோடி. டென்மார்க்கில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் “ஓ மை காட்” என்று மட்டும் கூறிச் சென்ற […]

Continue Reading

மோடி, டென்மார்க் பிரதமர் சந்திப்பின்போது அகண்ட பாரதம் ஓவியம் இருந்ததா?

பிரதமர் மோடி, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் சந்திப்பின் போது சுற்றில் பிரிக்கப்படாத (அகண்ட) இந்தியா படம் இருந்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய பிரதமர் மோடி, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் ஆகியோர் சந்தித்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. புகைப்படத்தில் இரண்டு நாட்டு பிரதமர்கள் பின்புறம் பிரிக்கப்படாத பழைய இந்தியாவின் வரைபடம் ஓவியமாக மாட்டப்பட்டிருந்தது. […]

Continue Reading

குஜராத் மாநிலத்தில் தினசரி 8 மணிநேரம் மின் தடையா?

‘’குஜராத் மாநிலத்தில் தினசரி 8 மணிநேரம் மின் தடை மற்றும் தொழிற்சாலைகள் வாரத்தில் 2 நாள் இயங்க தடை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, பலரும் இந்த மீம் பதிவை உண்மை போல குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் […]

Continue Reading

பெட்ரோல், டீசல் வருமானத்தில் ராமர் கோயில், அனுமன் சிலை போன்ற வளர்ச்சித் திட்டங்கள் நடப்பதாக வானதி சீனிவாசன் கூறினாரா?

‘’பெட்ரோல், டீசல் வருமானத்தில் மத்திய அரசு ராமர் கோயில், அனுமன் சிலை நிறுவுதல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது,’’ என்று வானதி சீனிவாசன் பேசியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே நமக்கு அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் […]

Continue Reading

உலகின் தலை சிறந்த தலைவர் என மோடியின் தபால் தலையை வெளியிட்டதா துருக்கி?

உலகின் தலை சிறந்த தலைவரின் நினைவாக மோடியின் தபால் தலையைத் துருக்கி வெளியிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய துருக்கி நாட்டு தபால் தலை படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன் “பெருமை மிக்க தருணம் இந்த நேரத்தில் உலகின் தலைசிறந்த தலைவரின் நினைவாக நரேந்திர மோடியின் தபால் தலையைத் துருக்கி வெளியிட்டுள்ளது. […]

Continue Reading

அகமதாபாத் குடிசைப்பகுதி துணியால் மறைக்கப்பட்டது என்று பரவும் படம்- உண்மை என்ன?

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவின் அகமதாபாத் நகருக்கு வந்த போது, குடிசைப்பகுதிகள் வெள்ளைத் துணியால் மறைக்கப்பட்டது என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலை நடைபாதை வெள்ளைத் துணியால் மறைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “17 ஸ்டேட்டை ஆளறோம்… யாராவது வந்தா துணியைப் போட்டு மூடறோம்.!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை இ. […]

Continue Reading

நாடாளுமன்றத்தில் அம்பேத்கருக்கு சிலை வைத்தாரா மோடி?

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலையை அமைத்தது பிரதமர் மோடி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டெல்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாராளுமன்றத்தில் கால் மேல் கால் போட்டு அம்பேத்காருக்கு சிலை வையித்தது யாரு..? பிரதமர். […]

Continue Reading

மும்பை விமான நிலையத்தை வாங்க அதானி பெற்ற கடனை தள்ளுபடி செய்ததா எஸ்பிஐ?

மும்பை விமான நிலையத்தை வாங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து அதானி பெற்ற ரூ.12,770 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடியுடன் அதானி இருக்கும் புகைப்படம், பாரத ஸ்டேட் வங்கி லோகோவுடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் “மும்பை விமான நிலையம் வாங்கியதற்கு அதானியின் கடன் தொகை 12,770 கோடி […]

Continue Reading

ஊடகத்தினரைப் பார்த்து மோடி அருவருக்கிறார் என்று அண்ணாமலை கூறினாரா?

ஊடகத்தினரைப் பார்த்து பிரதமர் மோடி அருவருக்கிறார் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஊடக பிரச்சைக்காரர்களை பார்த்து மோடி அருவருக்கிறார். ஊடகத்துறையினர் பிச்சைக்காரர்களைப் போல் பிரதமர் மோடியை சுற்றி நின்று “தேர்தல் வாக்குறுதியான […]

Continue Reading

டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் திருவள்ளுவர் சிலை இடம் பெற்றதா?

டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் மத்திய கல்வித் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்தியில் திருவள்ளுவர் உருவ சிலை வைக்கப்பட்டிருந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டெல்லியில் நடந்த குடியரசு தின ஊர்வலத்தில் இடம் பெற்ற வாகனம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டில்லி குடியரசு தின ஊர்வலத்தில் மத்திய கல்வி துறை […]

Continue Reading

மோடியை விட அமித் ஷா திறமையானவர் என்று அண்ணாமலை கூறினாரா?

பிரதமர் பதவிக்கு மோடியை விட அமித் ஷா திறமையானவர் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். குறிப்பிட்ட நியூஸ் கார்டை உண்மை என நம்பி பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து வருகின்றனர். சிலர் […]

Continue Reading

ஜீ டிவி உரிமையாளர் முன்பாக மோடி கை கட்டி நின்றாரா?

ஜீ டிவி (Zee) உரிமையாளர் முன்பு பிரதமர் மோடி கைக்கட்டி நின்றார் என்று ஒரு புகைப்படத்தைச் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சில மாதங்களுக்கு முன்பு தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பிரதமர் மோடியை சந்தித்தபோது எடுத்த படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இவர்தான் Zee tmail tv ஓனராம் மோடியைவே கையை கட்டி நிற்க்க வெச்சுருக்கார் அப்போ ஆடு […]

Continue Reading

FACT CHECK: ஆர்த்தி டோக்ரா ஐஏஎஸ் காலில் பிரதமர் மோடி விழுந்தாரா?

ராஜஸ்தான் மாநில ஐஏஎஸ் அதிகாரியான ஆர்த்தி டோக்ரா காலில் பிரதமர் மோடி விழுந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உயரம் குறைவான பெண்மணி ஒருவரின் பாதங்களை பிரதமர் மோடி தொடுவது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரதமர் காலில் விழுந்ததன் பின்னணி இதுதாண்டா_RSS இதுதாண்டா_சஙகி. காசி விஸ்வநாதர் கோயிலைப் புதுப்பித்ததன் பின்னணியில் தலைமைக் […]

Continue Reading

FactCheck: பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி மக்கள் கோஷமிட்டார்களா?

‘’நள்ளிரவில் நகர்வலம் சென்ற பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி மக்கள் கோஷமிட்டனர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link காசி (வாரணாசி) நகரில் இரவு நேரத்தில் வெளியே சென்ற மோடியை கண்டித்து, பொதுமக்கள் கோஷமிட்டனர் என்று மேற்கண்ட வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இதனை வாசகர்கள் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி […]

Continue Reading

FACT CHECK: டெல்லி அக்பர் சாலைக்கு பிபின் ராவத் பெயரை சூட்டினாரா மோடி?

டெல்லியின் பிரபலமான அக்பர் சாலைக்கு பிபின் ராவத் பெயரைப் பிரதமர் மோடி சூட்டினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிபின் ராவத் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “டில்லி சாலைக்கு தளபதி பிபின் இராவத் பெயர். டில்லியில் உள்ள அக்பர் சாலைக்கு இராணுவ தளபதி பிபின் இராவத் பெயர் சூட்டினார் பிரதமர் மோடி” என்று இருந்தது. […]

Continue Reading

FACT CHECK: திபெத்தில் கண்டெடுக்கப்பட்ட 201 வயது துறவியின் உடல் அருகே மோடி பற்றிய குறிப்பு என்று பரவும் வதந்தி!

திபெத் குகையில் 200 வயதான புத்தமத துறவி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர் அருகில் பிரதமர் மோடி பற்றிய குறிப்புகள் இருந்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புத்தமத துறவி ஒருவரின் உடலை சிலர் பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த புத்த துறவி யின் வயதை 201 ஆண்டுகளாம்…அன்மையில் திபெத் மலை குகை […]

Continue Reading

FACT CHECK: நொய்டா விமான நிலையத்தின் மாதிரி என்று பரவும் தென் கொரியா புகைப்படம்!

நொய்டாவில் அமைய உள்ள புதிய விமான நிலையத்தின் மாதிரி தோற்றம் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றைப் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நொய்டா சர்வதேச விமானநிலையத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் என்று ஒரு நீண்ட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. பதிவில் நொய்டாவில் அமைய உள்ள புதிய விமானநிலையத்தின் மாதிரி வடிவமைப்பு என்று குறிப்பிடவில்லை. ஆனால், பிரதமர் மோடியுடன விமான நிலைய படத்தை […]

Continue Reading

FACT CHECK: உலக வங்கியில் கடன் வாங்காமல் ஆட்சி செய்கிறாரா மோடி?

உலக வங்கியில் இதுவரை கடன் வாங்காமல் ஆறு வருடம் ஆட்சி செய்த ஒரே பிரதமர் மோடி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “உலகின் முன்னோடி! உலக வங்கியில் இதுவரை கடன் வாங்காமல் 6 வருடம் ஆட்சி செய்த ஒரே பிரதமர் மோடி மட்டுமே. மோடி […]

Continue Reading

FactCheck: வாடகை காரில் மோடியை வரவேற்ற வாடிகன்?- போலியான புகைப்படத்தால் சர்ச்சை…

‘’வாடகை காரில் மோடியை வரவேற்ற வாடிகன் போப் ஆண்டவர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை போல பகிர்வதைக் கண்டோம். FB Claim Link I […]

Continue Reading

FACT CHECK: யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் தேநீர் கடை நடத்துகிறாரா?

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் தேநீர் கடை வைத்துள்ளார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்று தோற்றம் அளிக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உபி முதல்வரின் மூத்த சகோதரர் இன்னும் விளக்கமில்லாத தேநீர் கடையில் இருந்து குறைந்த வருமானத்தில் பிழைத்து வருகிறார். ❤️❤️❤️ ஆனால் […]

Continue Reading

FactCheck: பாகிஸ்தானில் வாழும் 210 வயது பெண்மணி; ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

‘’பாகிஸ்தானில் வாழும் 210 வயது பெண்மணி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link ‘’ பாகிஸ்தானில் உள்ள அதிக வயதான தாய், சில நாட்களூக்கு முன் தனது 210 வயது பிறந்தநாளை கொண்டாடினார்,’’ என்று குறிப்பிட்டு, இந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் புகைப்படம் […]

Continue Reading

FactCheck: மோடியின் வருகையை எதிர்த்து அமெரிக்க மக்கள் போராட்டம் நடத்தினரா?

‘’மோடியின் வருகையை எதிர்த்து அமெரிக்க மக்கள் போராட்டம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனை பலரும் தற்போது நிகழ்ந்தது போல குறிப்பிட்டு, ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதைக் கண்டோம். உண்மை அறிவோம்:இந்திய பிரதமர் மோடி, அமெரிக்காவிற்கு சமீபத்தில் சுற்றுப் பயணமாகச் சென்றிருந்தார். இதன்போது நடைபெற்ற போராட்டம், சம்பவம் என்று கூறி சமூக வலைதளங்களில் நாள்தோறும் […]

Continue Reading

FACT CHECK: பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவிட்டதா?

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது என்று ஒரு செய்தியின் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி மூக்கு வரை முழுமையாக மாஸ்க் அணியாத புகைப்படத்துடன் கூடிய என்டிடிவி தமிழ் வெளியிட்டது போன்ற செய்தி ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க […]

Continue Reading

FACT CHECK: தமிழகம் ஜிஎஸ்டி பங்கை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினாரா?

தமிழகம் போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் ஜிஎஸ்டி-யில் தங்கள் பங்கை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி புகைப்படத்துடன் தமிழ்நாடு பா.ஜ.க வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகம் போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் உ.பி, ம.பி போன்ற பின்தங்கிய மாநிலங்களின் […]

Continue Reading

FACT CHECK: ஊடக சந்திப்பு வேண்டாம் என்று கமலா ஹாரிஸிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டாரா?

ஊடக ஒவ்வாமை இருப்பதால் அமெரிக்க பயணத்தின்போது ஊடக சந்திப்புகள் ஏதும் வேண்டாம் என்று கமலா ஹாரிசிடம் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடன் இந்திய பிரதமர் மோடி இருக்கும் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தனக்கு கடந்த ஏழு […]

Continue Reading

FACT CHECK: உலகின் மிகவும் விரும்பப்படும், வலிமை மிக்க தலைவர் என்று மோடியை புகழ்ந்ததா நியூயார்க் டைம்ஸ்?

உலக மக்களால் விரும்பப்படும், மிகவும் வலிமை மிக்க தலைவர் நம்மை ஆசிர்வதிக்க வந்துள்ளார் என்று பிரதமர் மோடி குறித்து தி நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய நியூயார்க் டைம்ஸ் முதல் பக்கம் பகிரப்பட்டுள்ளது. அதில், “Last, Best Hope of Earth, Worlds […]

Continue Reading

FACT CHECK: உலக ஊழல் நாடுகள் பட்டியலில் 76ம் இடத்தில் இருந்த இந்தியா முதலிடம் பிடித்ததா?

உலக ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடியின் புகைப்படம், தினத் தந்தியில் வெளியான “ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதல் இடம்” என்ற செய்தியின் புகைப்படம் மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு ஆகியவற்றை சேர்த்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

FACT CHECK: நரேந்திர மோடியை புகழ்ந்து நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் ஜோசப் ஹோப் எழுதியதாக பரவும் வதந்தி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்களை புகழ்ந்து நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் ஜோசப் ஹோப் என்பவர் கட்டுரை எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு வாசகர் ஒரு பதிவை அனுப்பி. அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், ” “👌😄*பிரதமர் மோடியைப் பற்றி நியூயார்க் டைம்ஸ் பார்வையைப் பார்க்கவும்:* ஜோசப் ஹோப், நியூயார்க் டைம்ஸின் தலைமை […]

Continue Reading

FACT CHECK: ஆப்கானிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களின் படமா இது?

ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரே விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட 800 இந்தியர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive விமானத்தில் மிகவும் நெருக்கமாக மக்கள் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மரண பயத்துடன் இருந்த 800 இந்தியர்களை ஒரே விமானத்தில்  அழைத்து வந்தது இந்திய ராணுவ விமானம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

FactCheck: நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் யார்? மோடி அரசை விமர்சித்த உவ் ஹான்- முழு விவரம் இதோ!

‘’நீரஜ் சோப்ராவின் முன்னாள் பயிற்சியாளர் உவ் ஹான் மோடி அரசை விமர்சித்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதே செய்தியை ஃபேஸ்புக்கிலும் பலர் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:சமீபத்தில் […]

Continue Reading

FACT CHECK: மோடி அரசை விமர்சித்து அண்ணாமலை பேசியதாக பரவும் போலி நியூஸ் கார்டு!

ஏழு வருடங்கள் பா.ஜ.க ஆட்சியைப் பார்த்து மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு. ஏழு வருடங்கள் பாஜக ஆட்சியைப் பார்த்து மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது – தமிழக […]

Continue Reading

FACT CHECK: சீன வங்கிகள் திவால்; மோடியை கண்டித்து ட்வீட் வெளியிட்டாரா திருமாவளவன்?

சீன வங்கிகள் திவால் ஆனதற்கு மோடிதான் காரணம் என்று திருமாவளவன் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தொல் திருமாவளவன் வெளியிட்ட நியூஸ் கார்டுக்கு ஒருவர் பதில் அளித்தது போன்று ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், தொல் திருமாவளவன் வெளியிட்டதாகக் கூறப்படும் ட்வீட்டில், “சீனாவில் சனாதன பாசிச மோடி அரசின் ஆட்சியில் […]

Continue Reading

FACT CHECK: நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி எம்.பி என்று பரவும் ராஜஸ்தான் சட்டமன்ற வீடியோ!

நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி எம்.பி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive  சட்டமன்றம் போன்று காட்சி அளிக்கும் அவையில் ஒருவர் ஆவேசமாக பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்தியில் அவர் பேசுகிறார். நிலைத் தகவலில், “*பாராளுமன்றத்தில் மோடியை கிழித்து எடுத்த எதிர் கட்சி MP. தினமும் சாப்பிட உனக்கு காஸ்ட்லியான தாய்வான் காளான்,  15 […]

Continue Reading

FACT CHECK: மோடி பற்றி சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து பரப்பும் விஷமிகள்!

கொரோனா உருமாற்றம் பற்றி பிரதமர் மோடி பேசியது தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டை விஷமத்தனமாக எடிட் செய்து சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருவது வைரல் ஆகியுள்ளது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடியின் இளமைக் கால புகைப்படம் மற்றும் தற்போதைய புகைப்படத்தை இணைத்து சன் நியூஸ் தொலைக்காட்சி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் ஆபத்தானவை! உருமாற்றம் அடைந்த வைரஸ்களின் […]

Continue Reading

FactCheck: வானதி சீனிவாசன் பற்றி பகிரப்படும் பலவிதமான வதந்திகள்

‘’வானதி சீனிவாசன் மத்திய அரசுக்கு எதிராகப் போராடினார்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் புகைப்படங்கள் பலவற்றை காண நேரிட்டது. அவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஜூன் 13, 2021 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை, திராவிடத் தமிழன் என்ற ஐடி வெளியிட்டுள்ளது. இதில் வானதி சீனிவாசன் கையில் பதாகை ஒன்றை ஏந்தியுள்ளார். அந்த பதாகையில், ‘’மானங்கெட்ட ஒன்றிய அரசே போடுறன்னு சொன்ன 15 லட்சத்தை அக்கௌண்டில் […]

Continue Reading