பொங்கல் பரிசுத் தொகுப்பு; தமிழ்நாட்டு மக்களை மு.க.ஸ்டாலின் விமர்சித்தாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களை விமர்சித்த மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டனர். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது ஃபேஸ்புக்கில் இதனை பலரும் உண்மை என்று நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற வெல்லம் போன்றவறை விநியோகிக்கப்பட்டதாக பலரும் விமர்சனம் தெரிவித்தனர். இதற்கு, சமூக வலைதளங்களின் வழியே திமுக ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்து, சர்ச்சை ஏற்படுத்தியிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நிறைய வதந்திகளும் திமுக தலைவர்களின் பெயரை வைத்து பரப்பப்படுகின்றன.

அவற்றில் சில தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி நாமும் ஆய்வு செய்திருக்கிறோம்.

Fact Crescendo Tamil Link 1

Fact Crescendo Tamil Link 2

இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்தியே மேற்கண்ட தகவலும். இதுபற்றி தந்தி டிவி ஆசிரியர் குழுவினரிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:பொங்கல் பரிசுத் தொகுப்பு; தமிழ்நாட்டு மக்களை மு.க.ஸ்டாலின் விமர்சித்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False