நீட் தேர்வுக்கு எதிராக ‘100% எம்பிபிஎஸ் சீட்களும் தங்களுக்கே’ என்று தெலுங்கானா மாநிலம் சட்டம் இயற்றியதா? 

‘’நீட் தேர்வுக்கு எதிராக ‘100% எம்பிபிஎஸ் சீட்களும் தங்களுக்கே’ என தெலுங்கானா மாநிலம் சட்டம் இயற்றியுள்ளது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அட மானம் கெட்ட திமுக , அதிமுக நீங்க இவருகிட்ட ஆளுக்கு 2 கப் வாங்கி குடிங்கயா.  அப்படியாவது ஏதாவது வருதானு பார்ப்போம்  […]

Continue Reading

நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் அதிமுக பங்கேற்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் அதிமுக பங்கேற்காது’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இதில், ‘’ கையெழுத்திட மாட்டோம் – எடப்பாடி. நீட் தேர்வுக்கு எதிராக திமுக மற்றும் அமைச்சர் உதயநிதி சார்பில் நடத்தும் கையெழுத்து […]

Continue Reading

நீட் தேர்வு விவகாரம்: ‘தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை’ என்று கி. வீரமணி பேசினாரா? 

நீட் தேர்வு விவகாரத்தில், ‘’தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை’’ என்று கி. வீரமணி பேசியதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை. நீட் தடை செய்யவில்லை என்றால் அனிதா போன்று தற்கொலை செய்யவும் நான் தயார் என் உயிர் […]

Continue Reading

‘உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்’ என்று அண்ணாமலை கூறினாரா?

‘‘என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்- அண்ணாமலை சபதம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ என் உயிர் உள்ளவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை’’, என்று எழுதப்பட்டுள்ளது.  தந்தி டிவி […]

Continue Reading

கேதன் தேசாய் பெயரை குறிப்பிட்டு அவசர கதியில் பகிரப்படும் வாட்ஸ்ஆப் வதந்தியால் சர்ச்சை…

‘’கேதன் தேசாய் பற்றிய உண்மைகள்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் மிகவும் வைரலாக இதனைப் பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:முதலில், குஜராத் மெடிக்கல் கவுன்சில் தலைவராக, […]

Continue Reading

வட இந்தியாவில் ஒன்றாக அமர்ந்து நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

வட இந்தியாவில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வீடியோ மற்றும் அதனுடன் தகவல் ஒன்றை சேர்த்து அனுப்பிய வாசகர் ஒருவர், இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த வீடியோவில் மாணவர்கள் தரையில் அமர்ந்து தேர்வு எழுதும் காட்சி இடம்பெற்றிருந்தது. அவர் அனுப்பிய பதிவில் “வடநாட்டில் நீட் தேர்வு […]

Continue Reading

Explainer: நீட் தேர்வின் அருமையைப் புரிந்துகொண்ட முதல்வர் என்று தகவல் பரப்பும் நெட்டிசன்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்களை சுத்தம் செய்துகொடுக்கும் வேலை செய்து வரும் பெண் ஒருவர் தன் மகளை மருத்துவம் படிக்க வைத்தார் என்ற செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த பெண்ணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து வாழ்த்தியதன் மூலம் நீட் தேர்வின் அவசியத்தை முதல்வர் புரிந்துகொண்டார் என்று சிலர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வரவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

நீட் தேர்வை கண்டித்து தற்கொலை செய்துகொள்வேன் என்றாரா மு.க.ஸ்டாலின்?

‘’நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்துகொள்வேன்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நியூஸ் கார்டை பார்த்தாலே அது எடிட் செய்யப்பட்டு, ‘’தற்கொலை’’ என்ற வார்த்தையை புதியதாக சேர்த்துள்ளனர் என்று தெரிகிறது. பார்க்கும்போதே போலி என்று தெரியும் இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி கேலி […]

Continue Reading

உதயநிதி உண்மை பேச வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறினாரா?

நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று தெரிந்துகொண்டு வேண்டுமென்றே மக்களை உதயநிதி குழப்பி வருகிறார், அவர் உண்மையைப் பேச வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உதயநிதி […]

Continue Reading

ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும்படி மு.க.ஸ்டாலின் கட்டாயப்படுத்துகிறார் என்று வேல்முருகன் கூறினாரா?

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்களைக் கட்டாயப்படுத்துகிறார் என்று வேல்முருகன் எம்.எல்.ஏ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஆளுநர் மாளிகையை முற்றுகையிடக் கூறி முதல்வர் ஸ்டாலின் எங்களை […]

Continue Reading

Rapid FactCheck: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த வட இந்திய மாணவரின் ஆங்கிலப் புலமை?- வதந்தியால் சர்ச்சை…

‘’நீட் தேர்வில் முதலிடம் பிடித்த வட இந்திய மாணவரின் ஆங்கிலப் புலமை,’’ என்று தலைப்பிட்டு ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த வீடியோ பதிவை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

FACT CHECK: நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தீக்குளிப்பேன் என வன்னி அரசு கூறியதாக பரவும் போலியான செய்தி!

வேளாண் சட்டங்களைப் போல நீட் தேர்வையும் ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றம் முன்பு தீக்குளிப்பேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு ஆகியோர் படங்களை இணைத்து ஏபிபி நாடு வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

FACT CHECK: நடிகை சாய் பல்லவி மரணம் என்று அதிர்ச்சி கிளப்பிய யூடியூப் பதிவு!

பிரபல நடிகை சாய் பல்லவி திடீர் மரணம் என்று ஃபேஸ்புக், யூடியூபில் ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “நடிகை சாய் பல்லவி திடீர் மரணத்தால் பெரும் சோகத்தில் தமிழகம் ரசிகர்கள் வேதனை” என்று இணையதள செய்தி ஒன்றின் லிங் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.  Anitha Sampath Followers என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த பதிவை 2021 செப்டம்பர் 28ம் தேதி […]

Continue Reading

FACT CHECK: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற வட இந்திய மருத்துவர் படமா இது?

நீட் தேர்வில் வெற்றி பெற்ற வட இந்திய மருத்துவர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மருத்துவர் ஒருவர் கண்கள் மீது ஸ்டெதஸ்கோப் கருவியை வைத்து பரிசோதிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மேல், “நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற வடநாட்டு கண் டாக்டர்” என்று தமிழில் உள்ளது. இந்த பதிவை ஆனந்த சித்தர் என்பவர் 2021 […]

Continue Reading

FACT CHECK: நீட் விலக்கு தீர்மானத்தை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்ததா?

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை கண்டித்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது என்று சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நேற்று, இரண்டு என இரண்டு புகைப்படங்களை ஒன்று சேர்த்துப் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நேற்று பகுதியில், “மாணவன் தனுஷ் நீட் தேர்வால் தற்கொலை செய்ததற்கு திமுக தான் காரணம்” என்றும் இன்று பகுதியில் “நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை கண்டித்து […]

Continue Reading

FACT CHECK: நீட் தேர்வுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று செந்தில்வேல் கூறினாரா?

நீட் தேர்வுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று ஊடகவியலாளர் செந்தில் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Facebook ஊடகவியலாளர் செந்தில்வேல் புகைப்படத்துடன் தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம்- செந்தில்வேல்! நீட் தேர்வுக்கு எதிராக ஊடகவியலாளர் தமிழ் கேள்வி செந்தில்வேல் சாகும் வரை உண்ணாவிரதம்! அறிவிப்பு திமுக […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க மீது சந்தேகம் எழுந்துள்ளது என்று செந்தில்வேல் கூறியதாக பரவும் வதந்தி!

நீட் விவகாரத்தில் தி.மு.க பொய் வாக்குறுதிகளை தேர்தலில் அளித்து மாணவர்களை கொலை செய்து கொண்டிருக்கிறதா என்ற அச்சம் எழுந்திருக்கிறது என்று செய்தியாளர் செந்தில்வேல் கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Facebook புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தொடர் நீட் தேர்வு மரணங்கள் வேதனையளிக்கிறது. தி.மு.க பொய் வாக்குறுதிகளை […]

Continue Reading

FACT CHECK: நீட் விவகாரம்… 2017ல் நளினி சிதம்பரம் பேசியதை தற்போது பகிர்வதால் குழப்பம்!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நீட் விலக்கு வழங்கக் கோரி மசோதா நிறைவேற்றப்பட்ட சூழலில், நீட் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று வழக்கறிஞர் நளினி சிதம்பரம் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட வழக்கறிஞர் நளினி சிதம்பரம் பேட்டியின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “நீட் விவகாரத்தில் தமிழக அரசின் […]

Continue Reading

FACT CHECK: கொடநாடு வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

கொடநாடு கொலை வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு அளிக்கத் தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார் என்று ஒரு நியூஸ் சார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொடநாடு கொலை வழக்கு […]

Continue Reading

FACT CHECK: நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி கோரியதா?

நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாக சில செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அதைப் பலரும் ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த […]

Continue Reading

FACT CHECK: தமிழகத்தின் மருத்துவக் கல்லூரிகள் முழு இந்தியாவிற்கும் என்று மோடி கூறியதாக பரவும் போலி நியூஸ்!

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் நாடு முழுமைக்கானது. ஆகவே நீட் என்பது தேச வளர்ச்சியின் மைல் கல் என்று பிரதமர் மோடி பேசியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை அடிப்படையாகக் கொண்டு மேலேயும் கீழேயும் கூடுதலாக சில விஷயங்களைச் சேர்த்து புகைப்படப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை […]

Continue Reading

FACT CHECK: அனிதா பெயரில் நீட் தேர்வு மையம் தொடங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தாரா?

அனிதா பெயரில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் நேரடி ஒளிபரப்பு காட்சியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “ஸ்டாலின் பரப்புரை. அனிதா பெயரில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் – ஸ்டாலின்” என்று இருந்தது. நிலைத் தகவலில், “திமுக […]

Continue Reading

சிட்டி ஸ்கேன் என்று தவறாக எழுதிக் கொடுத்த டாக்டர்… தமிழக மருத்துவர்களின் தரம் பற்றி சந்தேகம் கிளப்பிய பதிவு!

சி.டி ஸ்கேன் என்பதை சிட்டி ஸ்கேன் என்று மருத்துவர் எழுதிக் கொடுத்ததாகவும், இதற்காகத்தான் நீட் தேர்வு அவசியம் என்றும் சிலர் ஒரு பிரிஸ்கிரிப்ஷனை சமூக ஊடகங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அது தமிழகத்தில் நடந்ததா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் (+91 9049053770) சாட்பாட் எண்ணுக்கு வாசகர் ஒருவர் ஃபேஸ்புக் லிங்க் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி […]

Continue Reading

FACT CHECK: அஸ்ஸாம் அரசியல்வாதி வீடியோவை நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என்று பரப்பும் நெட்டிசன்கள்!

ஆங்கிலத்தில் பேசத் திணறும் அரசியல்வாதியின் வீடியோவை நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என்று சமூக ஊடகங்களில் பலரும் பரப்பி வருகின்றனர்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஆங்கிலத்தில் பேசத் திணறும் இளைஞர் ஒருவரின் வீடியோவை பகிர்ந்துள்ளனர். வீடியோவிலேயே “வடக்கன்ஸ். நீட் தேர்வில் பாஸ் ஆன உடன் எடுத்த பேட்டி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நீட் தேர்வில் இவன் தேர்ச்சி!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வீடியோவில் நிஜத்தின் நிழல் என்ற […]

Continue Reading

Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்!

வட மாநிலங்களில் நீட் தேர்வு நடைபெறும் விதம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தேர்வு எழுதும் மாணவர் ஒருவருக்கு ஆசிரியை உதவும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. தெளிவாக அதில் 10ம் வகுப்பு வாரியத் தேர்வு என்று உள்ளது. நிலைத் தகவலில் “தமிழ்நாடு (vs) வட மாநிலம்…!!! நீட் தேர்வு மையத்தின் பாரபட்சம்…!!! தமிழகத்தில் தாலி கழட்டும் கட்டுப்பாடு வடமாநிலத்தில் அதிகாரிகள் […]

Continue Reading

நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு: அர்ஜூன் சம்பத் பற்றிய தகவல் உண்மையா?

‘’நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 19, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், அர்ஜூன் சம்பத் மற்றும் சூர்யா இருவரும் நேரடியாகக் கருத்து மோதலில் ஈடுபட்டது போன்ற ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் […]

Continue Reading

நடிகர் சூர்யா மற்றும் கவுண்டர் சமூகம் பற்றி கல்யாண ராமன் விமர்சித்தாரா?

‘’காட்ட வித்து கள்ளு குடிச்ச நேரத்துல ஒழுங்கா இந்தி படிச்சிருந்தா நீட்ல பாஸாகியிருக்கலாம்,’’ என்று பாஜக ஆதரவாளர் கல்யாணராமன் கூறியதாகக் கூறி ஒரு தகவல் சமூக வலைதளத்தில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ட்வீட்டரில் சர்ச்சையான கருத்து பகிர்வதன் மூலமாக பிரபலமானவர் கல்யாண ராமன். பாஜக ஆதரவாளரான இவர், சிலருக்கு நேரடி […]

Continue Reading

நீட் தேர்வு ஆதரவு புத்தகம் வெளியிட்டாரா சூர்யா?- முழு விவரம் இதோ!

நீட் தேர்வை ஆதரித்து நடிகர் சூர்யா மற்றும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு ஆகியோர் புத்தகம் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர் சூர்யா, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோர் புத்தகம் ஒன்றை வெளியிடும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சூர்யாவும் நீதிபதி சந்துறுவும் 2017இல் […]

Continue Reading

+2 தேர்வை நிறுத்தலாமா என்று அண்ணாமலை கேட்டாரா?- போலி ட்வீட்!

12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலையின் ட்வீட் ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பா.ஜ.க-வைச் சேர்ந்த அண்ணாமலை ட்வீட் பதிவு ஒன்றின் படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், “12th fail ஆகிட்டோம்னு வருசா வருசம்தான் சில மனவலிமை குறைந்த மாணவர்கள் சாகுறாங்க. எதுக்கு 12th வச்சுருக்கீங்க?  அது போலதான் #NEET entrance. இந்தியா […]

Continue Reading

தமிழ்நாடு கல்வித்தரம் பற்றி ரமேஷ் போக்ரியால் விமர்சித்ததாக பரவும் வதந்தி!

நீட், ஜெ.இ.இ தேர்வை ரத்து செய்தால் தமிழகத்தில் உருவானது போல தரமற்ற மருத்துவர்கள், பொறியாளர்கள் உருவாகிவிடுவார்கள் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இணைய ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மாணவர்கள் கோரிக்கைகளை ஏற்று நீட், ஜெ.இ.இ தேர்வுகளை ரத்து செய்தால் தேசம் முழுவதும் தமிழ்நாட்டில் சென்ற […]

Continue Reading

நிர்மலா சீதாராமன் பற்றி பரவும் தகவல்கள் உண்மையா?

‘’நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் தகவல்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  பாசிசபாஜக ஆட்சிஒழிக எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி, நீட், ஆட்டோமொபைல் வீழ்ச்சி மற்றும் வெங்காயம் விலை உயர்வு பற்றி பல்வேறு விதமாக கருத்து வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் […]

Continue Reading

பாஜக, அதிமுக அரசுகள் இருக்கும் வரை நீட் தொடரும்– விஜயபாஸ்கர் பெயரில் வதந்தி

பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இருக்கும் வரை நீட் தேர்வு தொடரும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அக்டோபர் 6, 2019 தேதியிட்ட புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜயபாஸ்கர் படம் உள்ளது. “பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இருக்கும் வரை நீட் தேர்வு தொடரும். […]

Continue Reading

“திறமைசாலிகளை அழிக்க உருவாக்கப்பட்டது நீட்” – சுந்தர் பிச்சை பெயரில் பரவும் செய்தி உண்மையா?

திறமைசாலிகளை அழிக்க உருவாக்கப்பட்டது நீட் தேர்வு என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ‘வாட்ஸ் அப்’பில் வலம் வந்த செய்தி! என்று பத்திரிகையில் வெளியான ஒரு துணுக்கு செய்தியைப் பகிர்ந்துள்ளனர். அதில், தமிழ் நண்பர்கள் குழு என்ற ஃபேஸ்புக் பக்கத்தின் லோகோ, சுந்தர் பிச்சை படத்துடன் “நீட் எக்ஸாம் போன்ற ஒர […]

Continue Reading

“தமிழக அரசின் நீட் பயிற்சி பெற்ற ஒருவர் கூட வெற்றிபெறவில்லை” – ஃபேஸ்புக் அதிர்ச்சி!

நீட் தேர்வில் பங்கேற்க தமிழக அரசு 19,355 பேருக்கு பயிற்சி அளித்ததாகவும் அதில் ஒருவர் கூட நீட் தேர்வில் வெற்றிபெறவில்லை என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தமிழக அரசு அளித்த நீட் பயிற்சியில் பங்கேற்ற 19,355 மாணவர்களில் ஒருவருக்குக் கூட மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கிலத்தில் வெளியிட்ட செய்தியை புகைப்படமாகப் பகிர்ந்துள்ளனர். […]

Continue Reading

“ஸ்டூலில் நிற்கும் சூர்யா கருத்து சொல்லலாமா?” – தனிமனித தாக்குதல் நடத்திய ஃபேஸ்புக் பதிவு

நடிகர் சூர்யா ஸ்டூல் ஒன்றில் நின்று கொண்டிருப்பது போன்ற திரைப்படத்தில் ஒரு காட்சியை வெளியிட்டு, முதலில் தரையில் இரண்டு கால்களும் நிற்கட்டும்… அதன் பிறகு கருத்து சொல்லலாம் தோழர் சூர்யா என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின்விவரம்: Facebook Link I Archived Link சிங்கம் படத்தில் வரும் காட்சி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், நடிகர் சூர்யா, நடிகை அனுஷ்கா உள்ளனர். புகைப்படத்துக்குக் கீழே ஓவியம் போல […]

Continue Reading

“சூர்யாவை கிறிஸ்தவர் என்று விமர்சித்த எச்.ராஜா!” – வைரல் ஃபோட்டோ உண்மையா?

நடிகர் சூர்யாவை கிறிஸ்தவர் என்றும் அவர் இந்து விரோதி என்றும் எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link சன் நியூஸ் தொலைக்காட்சியின் இரண்டு நியூஸ் கார்டுகள் பகிர்பட்டுள்ளன. முதல் நியூஸ் கார்டில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா பேசியது உள்ளது. அதில், “30 கோடி மாணவர்கள் எதிர்காலம் தொடர்புடையது புதிய கல்விக் […]

Continue Reading

மருத்துவ படிப்பில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீடு இல்லை என உத்தரப் பிரதேச அரசு அறிவிப்பு: ஃபேஸ்புக் வதந்தி

‘’இனி மருத்துவ படிப்புகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீடு இல்லை என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது‘’, என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Manickam Bhoudhan என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டை மருத்துவ படிப்புகளில் உத்தரப் பிரதேச அரசு ரத்து செய்துள்ளதாகக் கூறியுள்ளார். அதன் மேலே, காம கொடூரனின் […]

Continue Reading