காவிரி விவகாரம்: ராகுல் காந்தி பற்றி பரவும் வதந்தி

‘’கர்நாடகாவில் பா.ஜ.க வென்றால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுத்துவிடுவார்கள்,’’ என்று தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக, புதிய தலைமுறை பெயரில் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்: கர்நாடகாவில் பா.ஜ.க வென்றால் காவேரித் தண்ணீரைத் தமிழகத்துக்குக் கொடுத்துவிடுவார்கள் என் கர்நாடகாவில் காங்கிரஸ் பரப்புரை…. இதற்கு திமுக என்ன சொல்லப் போகுது Archive link புதிய தலைமுறையின் பிரேக்கிங் ஃபோட்டோ கார்டில், ராகுல் […]

Continue Reading

பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் இளம்பெண்களுடன் செல்ஃபி எடுத்தாரா?

‘’பொள்ளாச்சி ஜெயராமன் மகன்‘’ என்ற தலைப்பில், இளைஞர் ஒருவர் பல இளம்பெண்களுடன் செல்ஃபி எடுத்த புகைப்படங்களை, ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டதை காண நேர்ந்தது. எனவே, இந்த புகைப்படங்களின் உண்மைத்தன்மை பற்றிய ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அப்போது கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். வதந்தியின் விவரம்: பொள்ளாச்சி ஜெயராமன் மகன் Archive Link இந்த பதிவில், இளைஞர் ஒருவர், பல இளம்பெண்களுடன் நெருக்கமான நிலையில், செல்ஃபி எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். அனைத்து புகைப்படங்களிலும், ஒரே இளைஞர் நிற்க, […]

Continue Reading

மோடியின் மேக்அப் ஊழியருக்கு ரூ.15 லட்சம் சம்பளமா? விடாமல் தொடரும் வதந்தி!

‘’ஏழைத்தாயின் மகன் என சொல்லிக்கொள்ளும் மோடியின் ஒரு மாத மேக்-அப் செலவு ரூ.15 லட்சம்,’’ என்று சமூக வலைதளங்களில் ஒரு பதிவை காண நேரிட்டது. மோடியை எதிர்ப்பதாகக் கூறும் பலரும், இதனை அதிகளவில் ஷேர் செய்வதால், இந்த தகவலின் நம்பகத் தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். அதன் விவரம் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளது. வதந்தியின் விவரம் #மோடி யின் தாய் ஏழை தாயாக இருக்கிறாள். இந்த தறுதலை, ‘ஏழை தாயின் மகன்‘ என்று சொல்லிக் கொண்டு ஊதாரி புள்ளையாய் […]

Continue Reading

மதுரை சித்திரை திருவிழாவை தள்ளி வைக்கச் சொன்னாரா எச்.ராஜா?

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, மதுரை சித்திரை திருவிழாவை தள்ளிவைக்கச் சொன்னதாகக் கூறி, அவரது புகைப்படத்துடன் வெளியான பதிவு ஒன்றை, ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இந்த பதிவை சுமார் 4,400க்கும் அதிகமானோர் உண்மை பற்றி யோசிக்காமல் பகிர்ந்துள்ளனர். எனினும், இந்த பதிவை பார்க்கும்போதே சித்தரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என தோன்றியதால், இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். வதந்தியின் விவரம்: இந்த நாயை என்ன பண்ணலாம்? Archive Link இந்த நாயை என்ன பண்ணலாம்? என தலைப்பிட்டு, […]

Continue Reading

ராகுல்காந்தி பற்றி டைம் மேகசின் கேலிச்சித்திரம் வெளியிட்டதா?

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்றும் பயங்கரவாதிகளை வளர்த்துவிடுவதே காங்கிரஸ் கட்சிதான் என்றும் பிரபல டைம் பத்திரிகை அட்டைப்படம் மற்றும் செய்தி வெளியிட்டுள்ளதாக ஒரு கார்ட்டூன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு. வதந்தியின் விவரம்:அசிங்கம் செய்தது–. உலக பத்திரிக்கை ஊடகம்.”. நியுயார்க் டைம்ஸ்..” பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிக்கும்..கைகூலியாம்..காங்கிரஸ் ..!! உலகம் கீழீத்து தொங்கவிட்டது..ராகுல் காந்தியை…??..உலகம் எச்சரிக்கை செய்கிறது.!!. கேவலப்பட்டது… காங்கிரஸ்.. ராகுல் […]

Continue Reading

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த யோகி ஆதித்யநாத்: வைரல் வீடியோ உண்மையா?

உச்ச கட்டம்.— பணத்தை கொடுத்து விட்டு … தன்னுடைய காலில் ………….. வேண்டும்.!.?., என்று மக்களுக்கு கட்டளையிடும் பாஜக வின் ,யோகி… என்ற தலைப்பில் ஒரு வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. பலரும் இந்த வீடியோவை வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர். இது தேர்தல் நேரம் என்பதால், யோகி ஆதித்யநாத் பற்றி சித்தரிக்கப்பட்ட வீடியோ கூட பரவ வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில், குறிப்பிட்ட வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி பரிசோதிக்க முடிவு செய்தோம். அதன் விவரத்தை இங்கே தொகுத்து தந்துள்ளோம். […]

Continue Reading

முஸ்லீம் பெண்கள் என்ற பெயரில் இந்து பெண்களை பிரசாரத்திற்கு பயன்படுத்திய பாஜக: போலி புகைப்படத்தால் சர்ச்சை

நாடாளுமன்ற தேர்தல் 2019 பிரசாரத்திற்காக, பாஜக.,வினர், இஸ்லாம் பெண்கள் என்ற பெயரில், இந்து பெண்களை ஈடுபடுத்தியதாகவும், இது பெரிய மோசடி எனவும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வைரலாகி வருவதை காண நேரிட்டது. இது, உண்மையா, பொய்யா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், விரிவான ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். வதந்தியின் விவரம்: வீதி வீதியாக பிஜேபி’க்கு பிரச்சாரம் செய்யும் இசலாம் பெண்கள்NOTE: பொட்டு நல்லா இருக்குஇந்த கருப்பு ட்ரெஸ் வாடகை […]

Continue Reading

தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வரவில்லை: எச்.ராஜா பரபரப்பு

“தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வரவில்லை” என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதாக சமூக வலைத்தளங்களில் ஒரு மீம்ஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். வதந்தியின் விவரம் “நீங்க எந்த தமிழக மக்கள் ஓட்டு போட்டு ஆட்சிக்கு வரலைனு ஏளனமா சொன்னீங்ளோ, இன்னைக்கு அதே தமிழக மக்கள் கிட்ட ஓட்டு கேட்க வச்சாரு பார்த்தீங்களா” என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவை கேட்கும் வகையில் இந்த மீம் […]

Continue Reading

கேன்சர் என்பது நோய் அல்ல; வியாபாரம்: வைரல் செய்தியால் அதிர்ச்சி

“கேன்சர் என்பது நோயே இல்லை… அது வெறும் வியாபாரமே” என்று சமூக வலைத்தளங்களில்அதிக அளவில் செய்தி பகிரப்படுகிறது. உண்மையில், புற்றுநோயைக் குணப்படுத்த முடியுமா… வணிகத்துக்காகப் புற்றுநோய் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றார்களா என்று ஆய்வு செய்ய தீர்மானித்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு. வதந்தியின் விவரம் #புற்றுநோய்_CANCER கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய். உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோய் என்பது நோய் அல்ல #வியாபாரம். புற்றுநோய் என்பது இன்று பரவி […]

Continue Reading

ரங்கராஜ் பாண்டே புதிய சேனல் தொடங்கினாரா?

‘’புதிய சேனலை தொடங்கினார் பாண்டே தமிழகத்தில் இதுதான் முதல்முறை பெருகும் ஆதரவு!’’ என்ற தலைப்பில் ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவி வருகிறது. இதுவரை 3000-க்கும் அதிகமான ஷேர்களை இந்த செய்தி பெற்றுள்ளது. TNNews என்ற இணையதளம் வெளியிட்டுள்ள இந்த செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த தகவல்களை உரிய ஆதாரங்களுடன் இங்கே தொகுத்து அளித்துள்ளோம். வதந்தியின் விவரம்: புதிய சேனலை தொடங்கினார் பாண்டே தமிழகத்தில் இதுதான் முதல்முறை பெருகும் ஆதரவு ! […]

Continue Reading

இந்துக்களின் வாக்கு வேண்டாம்: மு.க.ஸ்டாலின் பற்றி பரவும் போலி ட்வீட்

‘திருந்துமா மனித ஜென்மம்,’ என்று தலைப்பிட்டு கோவிலுக்கு செல்பவர்கள் வாக்கு தி.மு.க-வுக்கு தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் சொல்வது போன்ற ட்விட்டர் பதிவு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையை அறிய முடிவு செய்தோம். வதந்தியின் விவரம்: திருந்துமா மனித ஜென்மம் Archive Link கோவிலுக்கு செல்லும் யாரும் தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக, ஒரு புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இந்துக்கள் வாக்கு வேண்டாம் […]

Continue Reading

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குடோனில் தீ விபத்து; பணக்குவியல் கண்டுபிடிப்பு?

தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான குடோனில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டதாகவும், அதில் அதிக சேதம் ஏற்படாதபோதும், குடோனில் இருந்து மலை போல பதுக்கிவைக்கப்பட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குறிப்பாக, ஃபேஸ்புக்கில் நிறைய பேர் இந்த வீடியோ பகிர்ந்து வருகின்றனர். எனவே, அந்த வீடியோவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இந்த செய்தியில் தொகுத்துள்ளோம். வதந்தி: நேற்று காலை தமிழக அமைச்சர் வேலுமணி அவர்கள் […]

Continue Reading

சித்திரை திருவிழாவை தள்ளிவைக்க சொன்னாரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்?

மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலை வேறு தேதிக்கு மாற்றுவதற்கு பதில், சித்திரைத் திருவிழாவை தள்ளிவைக்கலாம், என்று மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சு.வெங்கடேசன் தெரிவித்ததாக வதந்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை அறிய நாம் முடிவு செய்தோம். ஆய்வின் முடிவு உங்கள் பார்வைக்கு… வதந்தியின் விவரம் மதுரையில் தேர்தலைத் தள்ளிவைக்க தேவையில்லை சித்திரைத் திருவிழாவை தள்ளி வைக்கலாம். அல்லது திருவிழாவுக்கு இந்த வருடம் தடைவிதிக்கலாம் .ஒரு […]

Continue Reading

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.98 கோடி செக் கொடுத்தாரா நீரவ் மோடி?

ஃபேஸ்புக்கில், ‘’காங்கிரஸ் கட்சிக்கு நீரவ் மோடி கொடுத்த ரூ.98 கோடி மதிப்பிலான செக்‘’, என்றும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நண்பர் நீரவ் மோடி என்றும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதைப் பார்த்ததும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சித்தரிக்கப்பட்ட தேர்தல் பிரசாரம் போல தோன்றியது. எனவே, இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். வதந்தியின் விவரம்: இந்த காசோலைக்கு சொந்தகாரர் ர.ராகுலின் நண்பர் நீராவ் மோடி Archived Link இந்த பதிவை பார்த்தாலே, போட்டோஷாப் […]

Continue Reading

மோடி வருகைக்காக அடைத்து வைக்கப்பட்ட வாரணாசி பட்டியலின மக்கள்!

‘’பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியில், பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் பட்டியலின மக்கள் அடைத்துவைக்கப்பட்டனர்,‘’  என்ற செய்தியை புதிய தலைமுறை இணையதளத்தில் பார்க்க நேரிட்டது. இந்த செய்தி, புதிய தலைமுறையின் ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. இதனை, உண்மை என நம்பி, 2,500 பேர் லைக் இட்டுள்ளனர், 1,600 பேர் ஷேர் செய்தும் உள்ளனர். எனினும், இந்த செய்தியின் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் எழுந்தது. இதன் அடிப்படையில், விரிவான ஆய்வு செய்து அதன் விவரங்களை இங்கே வழங்கியுள்ளோம். வதந்தியின் […]

Continue Reading

மலையாள நடிகர் ஜெயராம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தங்கக் கதவை அளித்தாரா?

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் ஜெயராம், தங்கக் கதவை தானமாக அளித்துள்ளதாக ஃபேஸ்புக்கில் ஒரு செய்தி மற்றும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். அதன் விவரம் உங்கள் பார்வைக்கு. வதந்தியின் விவரம் நடிகர் ஜெயராமன் அவர்கள் சபரிமலை கோவிலுக்கு தங்கத்திலான கதவுகளை சொந்த செலவில் அர்பணித்தார். Archive Link தமிழர்களின் இஷ்ட தெய்வங்களுள் ஒன்றாக ஐயப்பன் இருக்கிறார். இதனால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு […]

Continue Reading

பாத்திமா பாபுவை கடத்தினாரா ஸ்டாலின்? 30 ஆண்டுகளாகத் துரத்தும் வதந்தி!

30 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபுவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனால், பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பேச ஸ்டாலினுக்குத் தகுதி இல்லை என்றும் கூறி பல பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. இதன் நம்பகத் தன்மையைக் கண்டறிய ஆய்வு மேற்கொண்டோம். அதன் விவரம்: வதந்தியின் விவரம் 30 வருஷத்துக்கு முன்னாடி சென்னையில் ஒரு பெரிய ரேப்பிஸ்ட் இருந்தானாம். அவனோட அப்பன் செல்வாக்குல ஊரையே […]

Continue Reading

பாதியில் வெளியேறிய ராகுல் காந்தி; மீண்டும் வைரலாகும் செய்தி

‘’காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி கல்லூரி ஒன்றில் மாணவியின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் பாதியிலேயே தனது கேள்வி-பதில் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு வெளியேறினார்,’’ என்ற செய்தியை ஒரு இணையதளம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இந்த செய்தியை, 2000-க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர். ஏற்கனவே, ராகுல் காந்தி பற்றி இதுபோன்ற பல போலி செய்திகள் பரவி வருவதால், இந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். ஆய்வில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து தந்துள்ளோம். வதந்தியின் […]

Continue Reading

சோனியா காந்தி காலில் விழுந்தாரா மன்மோகன் சிங்?

காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி இருந்த போது, அவரது காலில் தலைப்பாகை கட்டிய ஒருவர் விழுந்து ஆசிபெற்ற புகைப்படத்தை வெளியிட்டு, ‘முன்னாள் பிரதமரின் நிலை உலகத்தில் எந்த ஜீவராசிக்கும் வரக் கூடாது’ என்று ஃபேஸ்புக் பக்கத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதை 2200க்கும் மேற்பட்டவர்கள் ஷேர் செய்திருந்தனர். உண்மையில் சோனியா காந்தியின் காலில் மன்மோகன் சிங் விழுந்தாரா என்று ஆய்வு செய்தோம். அதன் விவரம் உங்களுக்காக. வதந்தியின் விவரம்: முன்னாள் பிரதமரின் நிலை உலகத்தில் எந்த ஜிவராசிக்கும் […]

Continue Reading

மாணவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பயந்து ஓடினாரா ராகுல் காந்தி?

ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கல்லூரி மாணவிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பியோடுவதாகக் கூறி ஒரு புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. அதை பார்க்கும்போது, ராகுல் காந்தி நிஜமாகவே அப்படிச் செய்தாரா அல்லது எதிர்க்கட்சியினர் யாரும் இப்படி வதந்தி பரப்புகிறார்களா என்ற கேள்வி எழுந்தது. இதன் அடிப்படையில், குறிப்பிட்ட புகைப்படத்தின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்: அரங்கத்தை விட்டு வெளியேறினார் ராகுல் இந்தியாவுக்கு கிடைத்த இடத்தை ஏன் சீனாவுக்கு கொடுத்தீங்க ஒரே ஒரு கேள்வி […]

Continue Reading

அஜித்தை வம்புக்கு இழுத்தாரா குறளரசன்?

திரைப்பட நடிகர் அஜித், அரசியலுக்கு வர வேண்டும் என்று பிரபல இயக்குநர் சுசீந்திரன் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு டி.ராஜேந்தரின் மகன் குறளரசன் சர்ச்சைக்குரிய வகையில் பதில் ட்வீட் செய்ததாகக் கூறி தமிழ் இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில், உண்மை உள்ளதா என்று நாம் ஆய்வைத் தொடங்கினோம். வதந்தியின் விவரம்: அடுத்த முதல்வர் எங்க அப்பாதான்? அஜித்தை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கிய குறளரசன் […]

Continue Reading

அய்யர்லயே நாங்க ரவுடி அய்யராக்கும்: வைரலாகும் அபிநந்தனின் போலி புகைப்படம்

பாகிஸ்தானிடம் சிக்கி, பின்னர் பத்திரமாக விடுதலை செய்யப்பட்ட இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் ஒரு பிராமணர் என்று கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். அதன் விவரம் இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளது. வதந்தியின் விவரம்: எங்களுக்கு மணி அடிக்கவும் தெரியும் மண்டையை பிளக்கவும் தெரியும். இந்தியன் டா நாங்க. Archive Link இவ்வாறு அந்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது. அதில் உள்ள புகைப்படத்தில், 2 பேர் சிரித்தபடி […]

Continue Reading

முருங்கைக் கீரையால் புற்றுநோய் வருமா… தலைப்பால் வந்த குழப்பம்!

முருங்கை இலையால் புற்றுநோய் வந்த ஆபத்து என்று ஃபேஸ்புக்கில் ஒரு செய்தி வைரல் ஆனது. முருங்கை இலையில் நிறைய சத்துக்கள் உள்ளன. பல நோய்களை குணமாக்கும் தன்மை முருங்கை கீரைக்கு உண்டு. அப்படி இருக்கையில் முருங்கை இலையால் புற்றுநோய் வருமா என்று அதிர்ச்சி அடைந்தோம். முருங்கைக் கீரையால் புற்றுநோய் வருமா… அப்படி ஏதேனும் ஆராய்ச்சி கட்டுரை வெளியாகி இருக்கிறதா என்று நம்முடைய ஆய்வைத் தொடங்கினோம். செய்தியின் விவரம் லங்காபுரி என்ற இணையத்தில், மார்ச் 17ம் தேதி முருங்கைக் கீரை […]

Continue Reading

பொள்ளாச்சி பாலியல் கொடூர வீடியோவில் இருப்பது பார் நாகராஜா அல்லது வேறு யார்?

பொள்ளாச்சியில், இளம்பெண்களை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக படம்பிடித்து மிரட்டி வந்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பார் நாகராஜ் என்பவர் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் இருப்பவர் […]

Continue Reading

இந்து கோயிலை இடிப்போம் என்றாரா ஸ்டாலின்? மீண்டும் பரவும் வதந்தி…

இந்து கோவில்களை தகர்ப்போம் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக, தந்தி டி.வி-யின் பிரேக்கிங் கார்ட் மாடலில் ஒரு தகவல் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. பதிவிட்ட ஒரு வாரத்திலேயே 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் நம்பகத்தன்மை உள்ளதா என்று பரிசோதிக்க முடிவு செய்தோம். வதந்தியின் விவரம் #திமுகத் தலைவர் #திரு_ஸ்டாலின் மீண்டும் ஆவேசம்…. #இந்து_கோவில்களை #தகரப்போம் என்று #சூழுரை….? உண்மையான இந்துக்கள் தகவலைப் பரப்புங்கள்…. என்று […]

Continue Reading