“இந்திய கிரிக்கெட் அணியின் ‘அவே’ஜெர்ஸி எது?” – குழப்பும் ஃபேஸ்புக் பதிவு!

முழுக்க முழுக்க ஆரஞ்சு நிற ஜெர்ஸியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இருக்கும் படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ள, செய்தி இணைய தளம் ஒன்று, இதுதான் இந்தியாவின் புது ஆரஞ்சு ஜெர்ஸி என்று குறிப்பிட்டுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link 1 I Archived  Link 2 2019 ஜூன் 29ம் தேதி, Cinemapettai என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், “இது தான் இந்தியாவின் புதிய ஆரஞ்சு ஜெர்சி. […]

Continue Reading

ஜெய் ஸ்ரீராம் சொன்னதால் மீண்டும் உயிர்த்தெழுந்த அன்சாரி: விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

‘’ஜெய் ஸ்ரீராம் சொன்னதால் மீண்டும் உயிர்த்தெழுந்த அன்சாரி,’’ என்ற தலைப்பில் ஒரு விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த தகவல்கள் இதோ… தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Jagan Rajendar என்பவர் ஜூன் 28, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டிருக்கிறார். இதில், தப்ரீஸ் அன்சாரி அடிவாங்கும் புகைப்படம் மற்றும் போலீசாருடன் நிற்கும் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, ஜெய் ஸ்ரீராம் சொன்னதால் மீண்டும் […]

Continue Reading

“நடந்தது பாலியல் பலாத்காரம் இல்லை… ஞான சடங்கு!” – பிஷப் பிராங்கோ கூறியதாக வதந்தி!

“நடந்தது பாலியல் பலாத்காரம் அல்ல… ஞான சடங்கு” என்று கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிஷப் பிரான்கோ முலக்கல் விளக்கம் அளித்துள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link  பிஷப் பிரான்கோ முலக்கல் படம் வைக்கப்பட்டுள்ளது. அதன் மேல், “கன்னியாஸ்திரிகளை ஏசு எனக்குள் வந்து சல்லாபித்தார். உடம்பு என்னுடையது… உள்ளிருந்து செயல்பட்டது இயேசு. நடந்தது பாலியல் […]

Continue Reading

“இஸ்ரேல் பிரதமர் வருகையை புறக்கணித்த பாகிஸ்தான் பிரதமர்!” – பெருமை பேசும் ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

மாநாடு ஒன்றில், இஸ்ரேல் பிரதமர் வரும்போது அரங்கிலிருந்த அனைவரும் நிற்கின்றனர். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மட்டும் அமர்ந்திருந்ததாக ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மாநாட்டு அரங்கமே எழுந்து நிற்கும் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மட்டும் அமர்ந்திருக்கும் காட்சி வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. தொலைவில் ஒருவர் நடந்து வருகிறார். அவருக்காக மாநாட்டு அரங்கமே […]

Continue Reading

#ReleaseNandhini ஹேஷ்டேக் டிரெண்டிங்; பின்னணி என்ன?

சமூக ஊடகங்களில் #ReleaseNandhini என்ற பெயரில் டிரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக் ஆவதாகக்கூறி, நியூஸ்18 சேனல் ஒரு ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டிருந்தது. அந்த செய்தியை பலரும் வைரலாக பகிர்ந்து வருவதால், நாமும் இதுபற்றி உண்மை கண்டறிய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link News18 Tamil Nadu இந்த செய்தியை பகிர்ந்துள்ளது. பலரும் இதனை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், நியூஸ்18 இணையதள செய்தி ஒன்றின் லிங்க் பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading

40 ஆண்டுகளுக்குப் பின் வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர்: உண்மை என்ன?

40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்பட்ட அத்தி வரதர் சிலை என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Hindu Samayam என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூன் 28, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இந்த பதிவில், அவர்களின் இணையதள செய்தியின் லிங்கையும் இணைத்துள்ளனர். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். செய்தியின் உள்ளே, […]

Continue Reading

பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு ரூ.562 கோடி கொடுத்து வெளிநாடு தப்பிய நீரவ் மோடி?– ஃபேஸ்புக் பகீர்

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.562 கோடி கொடுத்த பிறகே அவர்கள் தன்னை வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல அனுமதித்தார்கள் என்று நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு செய்து வெளிநாட்டுக்கு தப்பி பிரபல வைர வியாபாரி ஓடிய நீரவ் மோடி படம் வைக்கப்பட்டுள்ளது. அதில், “காங்கிரஸிற்கு ரூ.562 கோடி […]

Continue Reading

ஜெயலலிதா காலில் விழுந்தார் ப.சிதம்பரம்: ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா?

‘’ஜெயலலிதா காலில் ப.சிதம்பரம் வீழ்ந்த படம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Sarika Lashkar என்பவர் கடந்த 22, ஏப்ரல் 2014 அன்று இந்த பதிவை பகிர்ந்திருக்கிறார். ஆனால், இந்த பதிவு தற்போதும் ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. Facebook Link I Archived Link இவ்விரு புகைப்படங்களும் ஒன்றுதான். இதில், ஜெயலலிதா, சசிகலா […]

Continue Reading

செங்கல்பட்டு ஏரியில் இருந்து ரயிலில் உறிஞ்சப்படும் நீர் எங்கே போகிறது?

‘’செங்கல்பட்டு ஏரியில் இருந்து ரயிலில் உறிஞ்சப்படும் நீர் மதுபான ஆலைகளுக்குச் செல்வதாகக் குற்றம்சாட்டி,’’ ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவு பகிரப்படுவதை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நெல்லைத் தமிழன் இம்மான் என்பவர் கடந்த ஜூன் 16ம் தேதியன்று மேற்கண்ட பதிவை பகிர்ந்துள்ளார். இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இந்த பதிவில், ரயிலில் செல்லும் தண்ணீர் டேங்குகள் புகைப்படத்தை பகிர்ந்து, […]

Continue Reading

“தலைப்புச் செய்தி போட தெரியாத ஊடகங்கள்!” – ஃபேஸ்புக் பதிவின் உண்மை

நடிகர் சங்கத் தேர்தல் செய்தியை முதல் பக்கத்திலும், நதி நீர் இணைப்புத் திட்டம் தொடர்பான செய்தியை உள்ளேயும் போட்டு தமிழக ஊடகங்கள் விவஸ்தையே இல்லாமல் செயல்படுகின்றன என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தினத்தந்தியில் வெளியான இரண்டு செய்திகளின் படத்தை வைத்துள்ளனர். முதல் படத்தில், தினத்தந்தியின் முதல் பக்கத்தில் நடிகர் சங்க வாக்குப் பதிவு செய்தியை வைத்துள்ளனர். […]

Continue Reading

“இழிவாக பேசியவரின் கையை உடைத்த போலீஸ்?” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா!

சென்னையில் குடி போதையில் தகராறு செய்த இளைஞரின் கையை போலீசார் உடைத்ததாகவும், சில நாட்களுக்கு முன்பு போலீசை தாக்கிய இஸ்லாமியர்களை எதுவும் செய்யவில்லை ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link  கையில் கட்டுப்பட்ட இளைஞர் ஒருவரின் படமும், போலீஸ்காரரை இரண்டு பேர் தாக்கும் படமும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “குடிபோதையில் காவலர்களை இழிவாக பேசியவனின் கையை உடைத்தனர் காவல்துறையினர்… சூப்பர். இதே மாதிரி […]

Continue Reading

பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி ஏந்தியபடி போஸ் கொடுத்தாரா இம்ரான் கான்?

‘’பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி ஏந்தியபடி போஸ் கொடுக்கும் இம்ரான் கான்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இந்திய இராணுவச் செய்திகள் என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த பிப்ரவரி 28, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது போல […]

Continue Reading

பிரான்மலையில் முருகன் கோயிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டதா?

‘’1000 ஆண்டு பழமையான முருகன் கோயிலை இடித்து விட்டு மசூதி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த விவரங்கள் இதோ உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Hindu Samayam என்ற ஃபேஸ்புக் ஐடி, மே 4, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதன் மேலே, ‘’ பிரான் மலையில் உள்ள 1000-ஆண்டு பழமையான முருகன் மற்றும் […]

Continue Reading

“டெல்லி இந்தியா கேட்டில் 61 ஆயிரம் இஸ்லாமிய ராணுவ வீரர்கள் பெயர் உள்ளது!” – ஃபேஸ்புக் பதிவு சரியா?

இந்தியா கேட் போர் நினைவு சின்னத்தில் மொத்தம் 95,300 ராணுவ வீரர்கள் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 61,495 பெயர் இஸ்லாமியர்களுடையது என்றும் ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link 1 I Archived Link 2 டெல்லியில் உள்ள இந்தியா கேட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், போர் நினைவு சின்னத்தில் முதல் உலகப் போரில் பங்கேற்று உயிர் நீத்த பிரிட்டிஷ் இந்தியா […]

Continue Reading

முதியவரை மிரட்டி ஆட வைத்த பெரியாரிஸ்ட்கள்; வீடியோ செய்தி உண்மையா?

‘’ரோட்டில் சென்ற முதியவரை மிரட்டி ஆட வைத்த பெரியாரிஸ்ட்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் வீடியோ செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Hindu Munnani Jaikarthick என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், முதியவர் ஒருவர் கூட்டத்தினருடன் நடனமாட மற்றவர்கள் அதனை உற்சாகப்படுத்தி கைதட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை பதிவிட்ட நபரோ, ‘’தனியாக ரோட்டில் […]

Continue Reading

அண்ணனின் கண் முன்னே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமியர்கள்? – உண்மை அறிவோம்!

லக்னோவில், இந்துக்கள் என்ற காரணத்தால் அண்ணன் கண் முன்னே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link 1 I Archived Link 2 இளம் வயதுடைய ஆண், பெண் இருவரை காட்டுகின்றனர். அவர்கள் உடல் முழுக்க ரத்தம் வழிகிறது. அந்த பெண் மயக்கமடையும் அளவுக்கு மிகவும் பலமாக தாக்கப்பட்டிருக்கிறார். அவர்கள் […]

Continue Reading

ரூ.5 ½ லட்சம் கோடியில் நதிநீர் இணைப்புத் திட்டம்… அடுத்த மாதம் மோடி தொடங்குகிறார் – பரபரப்பை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு!

இந்தியாவில் உள்ள 60 நதிகளை இணைக்க ரூ.5.50 லட்சம் கோடியில் திட்டம் தயார் என்றும், அடுத்த மாதம் இதைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்றும் சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1  இந்தியாவில் ரூ.5.50 லட்சம் கோடி செலவில் 60-நதிகளை இணைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஜூலை) 17ம் தேதி தொடங்கிவைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

கேரளாவில் விவசாயிகளாக மாறிய பொறியியல் படித்த மாணவர்கள்: ஃபேஸ்புக் வதந்தி

‘’கேரளாவில் விவசாயிகளாக மாறிய பொறியியல் படித்த மாணவர்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Keerthana என்ற ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்துவருகின்றனர். எனவே, இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தும்படி நமது வாசகர் ஒருவர் இமெயிலில் புகார் அனுப்பியிருந்தார். உண்மை […]

Continue Reading

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய அமைச்சர் மகன்; போலீசாருடன் சண்டையிட்டாரா?

‘’குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு போலீசாருடன் சண்டையிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மகன்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Nattu nai – நாட்டு நாய் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை, ஜூன் 26, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், இளைஞர் ஒருவர் குடிபோதையில் சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு, போலீசாரிடம் ஆபாசமான முறையில் […]

Continue Reading

“இந்தி தெரியாது என்ற சுந்தர் பிச்சை!” – கரக்பூர் ஐ.ஐ.டி மாணவர் உரையாடலில் நடந்தது என்ன?

தனக்கு இந்தி தெரியாது என்றும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேள்வி கேட்கும்படியும் கரக்பூர் ஐ.ஐ.டி-யில் நடந்த மாணவர்களுடனான சந்திப்பின்போது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியதாக ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived link 2 சுந்தர் பிச்சையின் கரக்பூர் ஐ.ஐ.டி மாணவர் சந்திப்பு படத்தை பகிர்ந்துள்ளனர். அந்த படத்தின் மீது, “எனக்கு இந்தி தெரியாது. கேள்வியை […]

Continue Reading

ஃபேஸ்புக்கில் பரவும் நவோதயா பள்ளிக்கூட வீடியோ – உண்மையா?

ஃபேஸ்புக்கில் நவோதயா பள்ளி என்று கூறி, ஒரு பள்ளிக்கூடத்தின் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். உண்மை உங்கள் பார்வைக்கு: தகவலின் விவரம்: Facebook link I Archived Link 1 I Archived Link 2 தனியார் பள்ளி போன்று பிரம்மாண்டமாக, அழகாக, நேர்த்தியாக இருக்கும் பள்ளிக் கூடத்தின் வீடியோ காட்டப்படுகிறது. அந்த வீடியோவில் அது எந்த பள்ளிக்கூடம், எங்கு உள்ளது என்று எந்த ஒரு விவரத்தையும் காட்டவில்லை. பின்னணியில் பேசுபவர் டெல்லியில் […]

Continue Reading

எம்ஜிஆர் ஒரு முஸ்லீம்; அவரது உண்மை பெயர் முகமது காஸ் ரஹ்மத்துல்லா: ஃபேஸ்புக் சர்ச்சை

‘’எம்ஜிஆர் ஒரு முஸ்லீம், அவரது உண்மையான பெயர் முகமது காஸ் ரஹ்மத்துலா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இதனை Mubarak Abdul Majeeth என்பவர் ஜூலை 25, 2018 அன்று வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதனை பலரும் உண்மை என நினைத்து குழம்ப தொடங்கியுள்ளனர். உண்மை அறிவோம்:எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு […]

Continue Reading

ஃபேஸ்புக்கில் பரவும் திருவள்ளுவரின் ஒரிஜினல் போட்டோ! – அந்த காலத்தில் ஏது கேமரா?

திருவள்ளுவரின் ஒரிஜினல் போட்டோ கிடைத்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link  முனிவர் போன்று இருக்கும் ஒருவரின் படத்தின் மீது, ஐயன் திருவள்ளுவரின் ஒரிஜினல் போட்டோ!!! பாதுகாக்க வேண்டிய பொக்கிசம்!!! தீ வைத்துக் கொளுத்தப்பட்ட இலங்கை யாழ்ப்பாண நூலகத்தில் இருந்து கிடைத்ததாம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, உலக தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம் என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

பாகிஸ்தான் பெண்ணிடம் காதலை சொன்ன இந்தியர்: புதிய தலைமுறை செய்தி உண்மையா?

‘’பாகிஸ்தான் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்திய இளைஞர்,’’ என்ற தலைப்பில் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இதே செய்தி புதிய தலைமுறை இணையதளத்திலும் பகிரப்பட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link இந்த செய்தியை உண்மை என நினைத்து பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:புதிய தலைமுறை இணையதளம் […]

Continue Reading

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற நபரை சுட்டுப் பிடித்த ஐபிஎஸ் அதிகாரி அஜய் சர்மா!

‘’உத்தரப் பிரதேசத்தில் 6 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்தவனை என்கவுன்டர் செய்து ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் ஷர்மா அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link கிராமத்து இளைஞனின் நாளைய விடியல்கள் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை ஜூன் 24ம் தேதி வெளியிட்டுளளது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

தமிழகத்துக்கு தண்ணீர் அனுப்பும் கனடா பிரதமர்– பேஸ்புக் வதந்தி!

தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க விமானங்கள் மூலம் 8000 கோடி லிட்டர் தண்ணீர் அனுக்க கனடா பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ படத்தை பகிர்ந்துள்ளனர். படத்தின் கீழ், “தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தைக் கேள்விப்பட்டு கண்ணீர் வடித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவிலிருந்து விமானம் மூலம் […]

Continue Reading

“நீதிபதியை கொலை செய்த அமித்ஷா” – பகீர் ஃபேஸ்புக் தகவல்!

 இஸ்ரேல் நாட்டில் பிரதமரின் மனைவிக்கே தண்டைனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் நீதிபதியை கொலை செய்த அமித்ஷாவுக்கு மத்திய உள்துறை அமைச்சராகப் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மனைவி சாரா மற்றும் மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க தேசிய தலைவருமான அமித்ஷா படமும் […]

Continue Reading

திருப்பூர் போக்குவரத்து பணிமனையில் நடந்த 10 ரூபாய் நாணய சர்ச்சை

10 ரூபாய் நாணயத்தை வாங்காதீர் என்றும், பிறகு வாங்குங்கள் என்றும் திருப்பூர் போக்குவரத்து பணிமனை நடத்துனர்களுக்கு மாறி மாறி சுற்றறிக்கை விட்டதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link புதிய தலைமுறை இணையதளம் ஜூன் 23ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதுபற்றி அந்த இணையதளம் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். உண்மை அறிவோம்: மேற்கண்ட […]

Continue Reading

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்த மு.க.ஸ்டாலின்! – ஃபேஸ்புக் போட்டோ உண்மையா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாத்திமா பாபு வரும் காட்சியை தன்னுடைய பேரன் – பேத்திகளுடன் மு.க.ஸ்டாலின் பார்த்தது போன்று ஒரு படம் ஃபேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய பேரன் – பேத்திகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது போன்று படத்தை பகிர்ந்துள்ளனர். டி.வி-யில் பிரபல செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான பாத்திமா பாபு வரும் […]

Continue Reading

பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள் இந்திய முஸ்லீம்கள்: விபரீத ஃபேஸ்புக் பதிவு

‘’பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள் பட்டியலில் இந்திய முஸ்லீம்கள் முதலிடம்- மகளிர் ஆணையம் பாராட்டு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இஸ்லாம் ஒர் இனிய மார்கம் என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த ஜூன் 19, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒரு கிறிஸ்தவர்! – விஷம பிரசாரம் செய்யும் ஃபேஸ்புக் பதிவர்கள்!

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள சுப்பா ரெட்டி ஒரு கிறிஸ்தவர் என்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 அந்த பதிவில், “ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாய் மாமாவும் கிறிஸ்தவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டியை திருப்பதி தேவஸ்தானத்தை நிர்வகிக்கும் தலைமை பதவிக்கு அமர்த்தியிருப்பது கொடுமை. நவாப்கள், வெள்ளையர்கள் […]

Continue Reading

அணுக்கழிவு மையத்தை எதிர்க்காத ஸ்டாலின், டி.டி.வி, ரஜினி, கமல்! – ஃபேஸ்புக் குற்றச்சாட்டு உண்மையா?

தமிழ்நாட்டை ஆள நினைக்கும் மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், கமல், ரஜினிகாந்த் கூடங்குளம் அணுக்கழிவு மையத்துக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஆகியோரின் படங்கள் சேர்த்து ஒரே படமாக தயாரித்துள்ளனர். அதன் மேலும் கீழும்,  “தமிழ்நாட்டையும் தமிழர்களையும் ஆள […]

Continue Reading

ராமதாஸ் மற்றும் அன்புமணியை தவறாக சித்தரிக்கும் ஃபோட்டோஷாப் பதிவு!

ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி புகைப்படத்தை வைத்து, ‘’பூத் – Son of Agni’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுபற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Troll Mafia என்ற ஃபேஸ்புக் ஐடி, ஜூன் 22, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், ராமதாஸ் அமர்ந்தபடியும், அன்புமணி நிற்பது போலவும் ஃபோட்டோஷாப் செய்துள்ளனர். இது வேடிக்கையாக இருந்தாலும், அரசியல் […]

Continue Reading

கேரள முதல்வரின் தண்ணீர் உதவியை நிராகரித்தார் இபிஎஸ்: ஃபேஸ்புக் வதந்தியால் பரபரப்பு

‘’கேரள அரசு சென்னைக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்புவதாகச் சொன்னதை நிராகரித்த எடப்பாடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Admk Fails என்ற ஃபேஸ்புக் ஐடி, 2019 ஜூன் 20ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன் புகைப்படத்தையும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தையும் பகிர்ந்து, […]

Continue Reading

காமராஜருக்கு பின் தமிழகத்தில் யாருமே அணை கட்டவில்லை: ஃபேஸ்புக் வதந்தியால் சர்ச்சை

‘’காமராஜருக்கு பிறகு யாருமே தமிழகத்தில் அணை கட்டவில்லை,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link விவசாயம் மற்றும் மருத்துவ குறிப்புகள் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூன் 21, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பலரும், வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு எதோ ஒரு […]

Continue Reading

தான தர்மம் செய்வதில் உலகிலேயே முஸ்லிம்கள் முதலிடம்: ஃபேஸ்புக் குசும்பு

‘’அதிக தான தர்மம் வழங்குவதில் உலக அளவில் முஸ்லிம்கள் முதலிடம்,’’ என்று கூறும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இஸ்லாம் ஒர் இனிய மார்கம் என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த ஜூன் 19, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் […]

Continue Reading

“கோவிலில் ஆண்கள் சட்டையில்லாமல் இருப்பதை பார்க்கும்போது…” – வழக்கறிஞர் அருள்மொழி கூறியதாக பரவும் வதந்தி!

கோவிலுக்குள் ஆண்கள் சட்டை இல்லாமல் இருப்பதைப் பார்க்கும் போது எனக்குக் காம உணர்வு ஏற்படுகிறது என்று திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி பேசியதாக ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 வழக்கறிஞர் அருள்மொழி புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேல், “கோவிலுக்குள் ஆண்கள் சட்டை இல்லாமல் இருப்பதைப் பார்க்கும் போது எனக்குக் காம உணர்வு […]

Continue Reading

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின் நடந்த அத்தி வரதர் தரிசனம்: ஃபேஸ்புக் வதந்தி

‘’காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற அத்தி வரதர் தரிசனம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாசறை சுதன் என்பவர் ஜூன் 20, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். அதில், ‘’ 40 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் அத்திவரதர் கிணற்றிலிருந்து வெளியே வருகிறார் மீண்டும் 2059 ஆம் […]

Continue Reading

“மூன்றே மாதத்தில் உடைந்த மோடி கட்டிய பாலம்…” – ஃபேஸ்புக் பதிவு கிளப்பிய பரபரப்பு!

குஜராத்தில் மோடி முதல்வராக இருக்கும்போது அடிக்கல் நாட்டி, இந்திய பிரதமர் ஆன பிறகு திறந்துவைத்த பாலம் ஒன்று திறப்பு விழா கண்ட மூன்றே மாதத்தில் இடிந்து விழுந்துவிட்டது என்று ஒரு படத்துடன் கூடிய தகவல் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived link 1 I Archived link 2 உடைந்த சாலை பாலம் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் […]

Continue Reading

சாதி காரணமாக நிர்வாணமாக்கப்பட்ட இஸ்லாமிய காதலர்கள்! – ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

அஸ்ஸாமில் இஸ்லாமிய மதத்துக்குள் உள்ள சாதி ஏற்றத்தாழ்வு காரணமாக காதலர்கள் நிர்வாணமாக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டதாக ஒரு தகவல் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 ஒரு மரத்தில் ஒரு ஆண், பெண் நிர்வாண நிலையில் கட்டப்பட்டுள்ளனர். நிலைத் தகவலில், “அஸ்ஸாமில் உயர்சாதி அஹமதியா முஸ்லீம் பெண்ணை காதலித்த கீழ்சாதி லெப்பை முஸ்லீம் பையன். இருவரையும் நிர்வாணமாக்கி, […]

Continue Reading

அ.தி.மு.க-வினர் டி.வி விவாதங்களை புறக்கணிக்க தண்ணீர் பஞ்சம் காரணமா?

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்கும் பதில் சொல்ல முடியாததால்தான் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்கள் பங்கேற்பது இல்லை என்று ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சியில் பங்குபெறும் அ.தி.மு.க நிர்வாகிகள் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில், “தவிக்கும் தமிழகம்… பதில் […]

Continue Reading

எச்.ராஜாவுக்கு சூடான பதிலடி கொடுத்த ஸ்டாலின்! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

இரண்டு பொண்டாட்டி கட்டுவது திராவிட கலாச்சாரம் என்று எச்.ராஜா ஃபேஸ்புக் போஸ்ட் செய்ததாகவும் அதற்கு மு.க.ஸ்டாலின் சூடான பதிலடி கொடுத்ததாகவும் ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 I Archived Link 2 எச்.ராஜா ஃபேஸ்புக் போஸ்டுக்கு, மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளது போன்று ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. எச்.ராஜா ஃபேஸ்புக் போஸ்டில், “இரண்டு பொண்டாட்டி கட்டுவது திராவிட கலாச்சாரம்” என்று உள்ளது. […]

Continue Reading

26 வயதான மணியம்மையை பெரியார் திருமணம் செய்தார்: ஃபேஸ்புக் கலாட்டா

26 வயது வளர்ப்பு மகளை திருமணம் செய்துகொண்ட 72 வயது பெரியார், என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் தகவலை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழ் சங்கம் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை ஜூன் 20ம் தேதி பகிர்ந்துள்ளது. இதில், பெரியார் 26 வயதான மணியம்மையை திருமணம் செய்துகொண்டார் என்று கூறியதோடு, தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியில் வசைபாடியுள்ளனர். இதை பலரும் வைரலாக […]

Continue Reading

ஹிட்லரை சந்தித்த முதல் தமிழன் ஜிடி நாயுடு: ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

‘’ஹிட்லரை சந்தித்த முதல் தமிழன் ஜிடி நாயுடு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இது உண்மையா என்ற சந்தேகம் எழவே, இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நம்ம கோயம்புத்தூர் என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த ஜூன் 11 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இது உண்மையில் நொய்யல் மீடியா என்ற இணையதளத்தில் வெளியான செய்தியாகும். அந்த லிங்கையே, இந்த ஃபேஸ்புக் ஐடி பகிர்ந்துள்ளது. குறிப்பிட்ட இணையதள […]

Continue Reading

ஆமாயா, நாங்க பணக்காரய்ங்களுக்கு சாதகமாதான் தொழிலாளர் சட்டங்கள மாத்துறோம்: குட் ரிட்டர்ன்ஸ் செய்தியால் குழப்பம்

‘’ஆமாயா, நாங்க பணக்காரய்ங்களுக்கு சாதகமா தான் தொழிலாளர் சட்டங்கள மாத்துறோம்,’’ என்ற தலைப்பில் மோடி, அமித் ஷா புகைப்படத்தை முன்வைத்து குட் ரிட்டர்ன்ஸ் பகிர்ந்துள்ள ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்:குறிப்பிட்ட செய்தியை ஒன் இந்தியா இணையதளத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். Facebook Link Archived Link இதே செய்தி, குட் ரிட்டர்ன்ஸ் இணையதளத்தின் ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. Facebook Link Archived Link இந்த செய்தியின் தலைப்பை […]

Continue Reading

கோவையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் குண்டுவைக்க திட்டமிட்ட கோயில்கள் லிஸ்ட்! – அதிர்ச்சியை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு!

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள், கோவையில் ஐந்து கோயில்களில் குண்டு வைக்க திட்டமிட்டது தெரியவந்துள்ளது என்று ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: குண்டு வைக்க திட்டமிடப்பட்ட கோவில்கள்: Facebook Link Archived Link டைம்ஸ் நவ் செய்தி தொலைக்காட்சி வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குண்டு வைக்க திட்டமிடப்பட்ட கோவில்கள்” என்று ஐந்து கோவில்களின் பட்டியலை அளித்துள்ளனர். அவை… […]

Continue Reading

கோவையில் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் இந்து தமிழர் கட்சி: போலி புகைப்படங்களால் சர்ச்சை

‘’கோவையில் இல்லந்தோறும் இலவச ஐந்து குடம் குடிநீர் வழங்கும் திட்டம்,’’ என்ற பெயரில் போலியான புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வைரலாகி பரவி வருகின்றன. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link இரா. ராஜேஷ் காவிபுரட்சியாளன் என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். அதில், லாரிகளின் புகைப்படத்தை பகிர்ந்து, அவற்றின் மேலேயே ஃபோட்டோஷாப் என தெளிவாக தெரியும் வகையில், தகவல் பரப்பியுள்ளனர். இதனை பார்க்கும்போதே ஃபோட்டோஷாப் என தெரிந்தாலும், உணர்ச்சியின் பெயரில் பலரும் வைரலாக […]

Continue Reading

1250 கோடி வீடுகள் கட்டித் தருவோம் என்று மோடி வாக்குறுதி அளித்தாரா?

‘’1250 கோடி வீடுகள் கட்டித் தருவோம்- மோடி ஜி வாக்குறுதி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவில், மோடியின் புகைப்படத்தையும், தமிழ் சினிமா நகைச்சுவை காட்சி ஒன்றையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். ஜூன் 12ம் தேதி வெளியிடப்பட்ட இந்த பதிவில்,1250 கோடி இந்தியர்களுக்கு வீடு கட்டித் தருவேன் என்று மோடி சொன்னதாகக் கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

“பா.ஜ.க.,வை தோல்வியடைய செய்ததால்தான் தமிழகத்தில் வறட்சி” – தமிழிசை பற்றி பரவும் வதந்தி

தமிழகத்தில் பா.ஜ.க-வை தோல்வியடைய செய்ததால்தான் தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link தந்தி தொலைக்காட்சியின் நியூஸ் கார்டில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாக ஒரு பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “பா.ஜ.க-வை தோல்வியடைய செய்த பாவத்தின் வினைப்பயனைதான் வறட்சியாக தமிழகம் அனுபவிக்கிறது – தமிழிசை சவுந்தரராஜன்” என்று உள்ளது. இந்த […]

Continue Reading

நர்மதா – ஷிப்ரா நதி இணைப்பு நிதின் கட்கரியின் முதல் சாதனையா?

நர்மதா – ஷிப்ரா நதிகள் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டதாகவும், இது மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும், இதேபோல் கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் ஒரு ஃபேஸ்புக் பதிவு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. அந்த தண்ணீர் ஆற்றில் விடப்படுகிறது. எந்த இடம், எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் அந்த வீடியோவில் […]

Continue Reading