19 ஆண்டுகள் வாடகை பாக்கி வைத்த சீமான்?- பரபரப்பை ஏற்படுத்திய தகவல்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 19 ஆண்டுகள் வாடகை பாக்கி வைத்திருந்ததாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பெரியவர் ஒருவரின் புகைப்படங்களை ஒன்று சேர்த்து பதிவிட்டுள்ளனர். அதில், சீமான் படம் இருக்கும் பகுதியில், “ஐந்து வருடம் என்னிடம் இந்த நாட்டை கொடுத்துப் பாருங்கள் – சைமன்” என்று […]

Continue Reading

சுவாமி விவேகானந்தா அமெரிக்காவில் பேசிய வீடியோ: ஃபேஸ்புக் வதந்தி

‘’சுவாமி விவேகானந்தா அமெரிக்காவில் பேசியபோது எடுத்த அரிய வீடியோ,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்த வீடியோவை உண்மையாலுமே விவேகானந்தர் பேசுவதாக நினைத்து பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:விவேகானந்தர் 1893ம் ஆண்டு அமெரிக்கா சென்று சிகாகோவில் நடைபெற்ற சமய மாநாட்டில் பேசியது உண்மைதான். அதுபற்றிய புகைப்படங்களே உள்ளன, வீடியோ எதுவும் […]

Continue Reading

மூன்று கண்கள், மூன்று கொம்புகள் உள்ள காளை மாடு: உண்மை அறிவோம்!

‘’மூன்று கண்கள், மூன்று கொம்புகள் கொண்ட காளை மாடு,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link Sudha Annadurai என்பவர் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், மூன்று கண்கள் உள்ளது போலவும், மூன்று கொம்புகள் உள்ளது போலவும் ஒரு காளை மாட்டை காட்டுகிறார்கள். இந்த வீடியோவை உண்மை என நினைத்து பலரும் […]

Continue Reading

நாக்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தமிழ் பேசும் குழந்தை– ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

பெற்றோர் தவறவிட்ட குழந்தை ஒன்று நாக்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் உள்ளதாகவும் அந்த குழந்தைக்கு தமிழ் மட்டுமே தெரியும் என்றும் பெற்றோருடன் சேரும் வரை இந்த வீடியோவை பகிருங்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 காவல்துறை அதிகாரி ஒருவரின் கையில் குழந்தை உள்ள வீடியோவை பகிர்ந்துள்ளனர். 1.04 நிமிடங்கள் வீடியோ ஓடுகிறது. […]

Continue Reading

திமுகவை விமர்சித்த ஜெகன் மோகன் ரெட்டி- ஃபேஸ்புக் வைரல் பதிவு உண்மையா?

எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என தி.மு.க-வைப் பார்த்து கற்றுக்கொள், என தனது தந்தை கூறியதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என திமுகவை பார்த்து கற்றுக்கொள் என என் தந்தை ராஜசேகர ரெட்டி கூறுவார் […]

Continue Reading

தமிழில் பெயர் பலகை வைக்காத திருச்சி தமிழ் ரெஸ்டாரண்ட்: பேஸ்புக் குழப்பம்

திருச்சி தமிழ் ரெஸ்டாரண்ட் என்ற பெயர் கொண்ட உணவகம் தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Link Archived Link திருச்சி தமிழ் ரெஸ்டாரண்ட் என்று ஆங்கிலம் மற்றும் அரபு மொழியில் பெயர் பலகை உள்ள ஒரு உணவகத்தின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வட இந்தியர்கள் அதிகம் வந்து தரிசனம் செய்யும் மதுரை கோயில் வாசல்ல இந்தியாவில் […]

Continue Reading

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க சொன்னாரா உதயநிதி ஸ்டாலின்?

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link உதயநிதி ஸ்டாலின் படம் மற்றும் திரைப்பட காட்சி ஒன்றின் படம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து ஒரே படமாக பதிவிட்டுள்ளனர். படத்தின் மேல் பகுதியில், “பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்” என்று உள்ளது. படத்தின் கீழ் பகுதியில், […]

Continue Reading

சீமான் புத்தகத்தை வாசிக்கும் ஜெகன்மோகன் ரெட்டி: ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்

சீமானின் “திருப்பி அடிப்பேன்!” என்ற புத்தகத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாசிப்பது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சீமானின் “திருப்பி அடிப்பேன்!” என்ற புத்தகத்தை வாசிப்பது போல புகைப்படம் உள்ளது. நிலைத் தகவலில், “அண்ணன் இல்லாத இடமே இல்லடா##தம்பிகளா வாங்க காவிகளை கதற விடுவோம்##” என்று உள்ளது. இந்த […]

Continue Reading

கடலுக்கு அடியில் இருக்கும் துவாரகா: ஃபேஸ்புக் புகைப்படங்கள் உண்மையா?

‘’கடலுக்கு அடியில் இருக்கும் துவாரகா புகைப்படங்கள்,’’ எனக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Renganayagalu என்பவர் இந்த பதிவை செப்டம்பர் 27, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதில், சில புகைப்படங்களை பகிர்ந்து, ‘’ குஜராத் : கிருஷ்ணா பகவான் அரசாண்ட துவாரகா. இன்று கடல் கொண்டு விட்ட பகுதியாக உள்ளது. கடல் கொண்ட, அந்த […]

Continue Reading

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கரவாத குழு என்று அறிவித்ததா அமெரிக்கா?

உலகின் நான்காவது பெரிய பயங்கரவாத குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்று அமெரிக்க உள்துறை அறிவித்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நல்லக்கண்ணு, த.பாண்டியன், டி.ராஜா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமகிருஷ்ணன் ஆகியோர் படங்கள் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகள் எலும்புகளின் மீது பறப்பது போன்ற படம் ஆகிய அனைத்தையும் கொலாஜ் செய்து […]

Continue Reading

பள்ளி மாணவிகளின் முடியை வெட்டிய பாதிரியர்கள்: ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

பள்ளி மாணவிகளின் தலைமுடியை பாதிரியர்கள் வெட்டுவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 38 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளனர். அதில், கிறிஸ்தவ பாதிரியார் உள்ளிட்டவர்கள் மேடையில் நிற்பது போல உள்ளது. அப்போது பள்ளி மாணவி ஒருவர் அவர்கள் முன்பு வந்து நிற்கிறார். அவரது தலைமுடியை ஒருவர் வெட்டுகிறார். அந்த மாணவி […]

Continue Reading

மணிப்பூரில் பாஜக எம்எல்ஏவை தாக்கிய பொதுமக்கள்: வைரல் வீடியோ உண்மையா?

‘’மணிப்பூரில் பாஜக எம்எல்ஏவை தாக்கிய பொதுமக்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Salahudeen என்பவர் அக்டோபர் 6, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், வீடியோ ஒன்றை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ மணிப்பூர் BJP MLA மேம் பாலம் கட்டி தருகிறேன் என்று கூறி மேம்பாலம் கட்டாமல் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் […]

Continue Reading

ரஜினி ஸ்கூல் வாடகை பாக்கி பொய் பிரசாரமா? – வைரல் ஃபேஸ்புக் செய்தி

ரஜினிகாந்த் பள்ளிக்கூட வாடகை பாக்கி என்பது பொய் பிரசாரம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link திரைப்பட தயாரிப்பாளரான கலைஞானத்திற்கு ரூ.45 லட்சத்தில் வீடு ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் வாங்கிக் கொடுத்ததாகக் கூறி, அதுதொடர்பான புகைப்படங்கள் கொலாஜாக பகிரப்பட்டுள்ளன. அவற்றின் மேல், “கலைஞானத்திற்கு 45 லட்சத்தில் வீடு… ஸ்கூல் வாடகை பாக்கி என்று பொய் பிரசாரம் செய்தவர்கள், உங்கள் மனசாட்சியை […]

Continue Reading

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் பாஜக பொருளாளர் கைது: உண்மை அறிவோம்!

‘’லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் திருவாரூர் மாவட்ட பாஜக பொருளாளர் மணிகண்டன் கைது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Yousuf Riaz என்பவர் இந்த பதிவை அக்டோபர் 4, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதில், ‘’லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த விளமல் பகுதி பாஜக நிர்வாகி மணிகண்டன், சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஆர்எஸ்எஸ் பயிற்சிக்கு சென்று வந்ததாக தெரிகிறது. எனவே […]

Continue Reading

பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட நாணயத்தில் ராமர்? – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

பிரிட்டிஷ் அரசு 1818ம் ஆண்டு வெளியிட்ட நாணயத்தில் ராமர், தாமரை சின்னம் உள்ளதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் ரைவல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பழைய நாணயம் ஒன்றின் முன், பின் பக்க படம் வைக்கப்பட்டுள்ளது. நாணத்துக்கு மேல் பகுதியில், “உடனே மோடி பி.ஜே.பி ஒழிகனு கூவாமல் பார்…” என்றும் கீழ் பகுதியில், “1818ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட இந்திய அடையாளம் ராமர், […]

Continue Reading

ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் 9 வங்கிகளை மூட முடிவு செய்துள்ளதா?

‘’ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் உள்ள வங்கிகளில், 9 வங்கி நிறுவனங்களை விரைவில் நிரந்தரமாக மூட உள்ளது,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வைரலாகி வருவதாக, வாசகர் ஒருவர் நமக்கு இமெயில் அனுப்பி சந்தேகம் கேட்டார். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link Abdul Hameedஎன்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை அக்டோபர் 1, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இந்த பதிவில், ‘’ *எச்சரிக்கை!!!* 9 […]

Continue Reading

கர்நாடகத்தில் வழங்கப்படும் பாஸ்போர்ட்டில் கன்னடம்?

கர்நாடகாவில் வழங்கப்படும் இந்திய பாஸ்போர்ட்டில் கன்னடமும் உள்ளது போன்ற படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் வழங்கப்படும் பாஸ்போர்ட் என்று இரண்டு படங்களை ஒன்று சேர்த்து ஒரே படமாக வெளியிட்டுள்ளனர். கர்நாடகாவில் வழங்கப்படும் பாஸ்போர்ட்டில் கன்னடமும் உள்ளது போல படம் உள்ளது. இந்த பதிவை, ஷரீப் மன்பயீ காஞ்சிரங்குடி என்பவர் வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “என் தாய் மொழி […]

Continue Reading

ஏசி ஆடிட்டோரியத்தில் குப்பையை கொட்டி அள்ளுவது போல விளம்பரம் செய்தாரா மோடி?

‘’ஏசி ஆடிட்டோரியத்தில் குப்பையை கொட்டி அள்ளுவது போல விளம்பரம் செய்த பாஜக கோஷ்டி,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் வீடியோ பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Dhanaraj Palanisamy என்பவர் இந்த ஃபேஸ்புக் வீடியோ பதிவை செப்டம்பர் 12, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதில், மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றின் வீடியோவை இணைத்து, அதன் மேலே, ‘’வெளிய கிடந்த […]

Continue Reading

ஆயுதபூஜை கொண்டாடுவோர் ஓட்டு தேவையில்லை: மு.க.ஸ்டாலின் பெயரில் பரவும் வதந்தி

ஆயுத பூஜை கொண்டாடுபவர்கள் யாரும் இனி தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆயுதபூஜை கொண்டாடுபவர்கள் யாரும் இனி திமுகவிற்கு வாக்கு அளிக்க வேண்டாம். இது பெரியார் மண் அதனால்தான் ஆயுதபூஜை வாழ்த்துக்கள் சொல்லாமல் விடுமுறை தினம் […]

Continue Reading

லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை குற்றவாளி எச்.ராஜாவுடன் நிற்கும் புகைப்படம் உண்மையா?

‘’லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை குற்றவாளி எச்.ராஜாவுடன் நிற்கும் புகைப்படம்,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வரும் புகைப்படம் ஒன்றின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link நையாண்டி மேளா எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில் எச்.ராஜாவுடன் நிற்கும் ஒரு நபரை குற்றவாளி எனக்கூறி, அதன் மேலே, ‘’விதை எங்கிருந்து போட்டதுனு தெரியுதா அப்பு????திருவாரூர் விளம்மல் தொகுதி பாஜக பொருளாளர்?????,’’ என்று எழுதியுள்ளனர். […]

Continue Reading

ம.பி முன்னாள் முதல்வர் கைமுறிவு நாடகமா? – ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்!

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் கையில் போடப்பட்டுள்ள கட்டு போலியானது என்ற வகையில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எலும்பு முறிவு காரணமாக கையில் கட்டுப் போட்டுள்ள மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகானின் இரண்டு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. முதல் படத்தில் கட்டு இடது கையில் உள்ளது. அடுத்த படத்தில் கட்டு […]

Continue Reading

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக டோல்கேட்: பீதி கிளப்பும் கலைஞர் செய்திகள்!

‘’நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக டோல்கேட் உள்ளது,’’ என்ற பெயரில் கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா என்ற சந்தேகத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Kalaignar News Link  Archived Link 2 Kalaignar Seithigal இந்த ஃபேஸ்புக் பதிவை கடந்த 11 செப்டம்பர் 2019 அன்று பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

101 வயதில் குழந்தை பெற்ற பாட்டி? – ஃபேஸ்புக்கில் பரவும் விஷம பதிவு!

101 வயதில் பாட்டி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக வீடியோ மற்றும் பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வயதான பாட்டி ஒருவர் கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், இத்தாலியைச் சார்ந்த 101 வயதான அனடொலியா வெர்ட்டெல்லா என்ற பெண்மணிக்கு 17வது குழந்தை பிறந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை நமது தமிழன் குரல் என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

திருச்சி நகைக்கடை கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடையில் கொள்ளையடித்தவர்களை 24 மணி நேரத்துக்குள் தமிழக போலீசார் பிடித்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழ்நாடு காவல் துறையின் லோகோவை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில், “திருச்சி லலிதா ஜுவெல்லரியில் நகைகளைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள்.மேலும் பல மாநிலங்களில் கைவரிசை காட்டி சிக்காமல் இருந்த கொள்ளையர்களை 24மணி நேரத்தில் பிடித்த தமிழக காவல்துறை….பாராட்டலாமே” என்று குறிப்பிட்டு இருந்தனர். […]

Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்- உண்மை என்ன?

‘’மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Mohanraj T என்பவர் அக்டோபர் 1, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், ‘’1330 குறள்களில் ஏதேனும் ஒன்றை பிழையின்றி சொன்னால் முதல்வர் நாற்காலியை தர தயார்,’’ என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் […]

Continue Reading

அமித்ஷா காலில் விழுந்த கனிமொழி, மு.க.ஸ்டாலின்? – போலி புகைப்படத்தால் சர்ச்சை!

இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்ய மாட்டோம் என்று அமித்ஷா காலில் கனிமொழி, மு.க.ஸ்டாலின் விழுந்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சோஃபாவில் அமர்ந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காலில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விழுவது போலவும் அவருக்கு அருகில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காலில் விழ தயாரான நிலையில் இருப்பது போலவும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.  நிலைத் […]

Continue Reading

எஸ்ஜே சூர்யா காதல் வலையில் பிரியா பவானி சங்கர்; குழப்பம் தரும் ஏசியா நெட் தமிழ் செய்தி

‘’எஸ்ஜே சூர்யா காதல் வலையில் விழுந்த பிரியா பவானி சங்கர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link  Archived Link 1 Asianet News Tamil Archived Link 2 ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை இந்த ஃபேஸ்புக் பதிவில் இணைத்து பகிர்ந்துள்ளனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட செய்தியின் தலைப்பை படிக்கும்போது, நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் […]

Continue Reading

நாஞ்சில் சம்பத் கிளு கிளு வீடியோ: உண்மை அறிவோம்!

‘’நாஞ்சில் சம்பத் கிளு கிளு வீடியோ,’’ என்ற பெயரில் பகிரப்பட்டு வரும் பதிவுகளை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 News Link Archived Link 2 The Cineflix என்ற ஃபேஸ்புக் ஐடி, செப்டம்பர் 29, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இது Tamizhakam.com என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்க் ஆகும். இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

“குழந்தையின் உடலில் மின்சாரம்?” – அதிசயிக்க வைத்த ஃபேஸ்புக் செய்தி!

ஆறு மாத குழந்தை உடலில் மின்சாரம் உள்ளதாகவும், குழந்தையின் மீது எல்.இ.டி பல்ப்பை வைத்தால் அது ஒளிர்வதாகவும் பல செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 News 7 Article Link Archived Link 2 மின்சார பெண் குழந்தை என்று ஒரு குழந்தையின் படத்துடன் கூடிய செய்தி இணைப்பை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஆறு மாத குழந்தையின் உடலில் பட்டவுடன் […]

Continue Reading

நடிகை சமந்தா பெட்ரூமில் ஆண் சடலம்? – அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு!

நடிகை சமந்தாவின் படுக்கை அறையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது என்று ஒரு செய்தி இணைப்பு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 “அதிர்ச்சியில் திரையுலகம்! சற்றுமுன்பு நடிகை சமந்தாவின் பெட்ரூமில் ஆண் சடலம்!” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்ட புகைப்படத்துடன் கூடிய செய்தி இணைப்பு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.  அந்த செய்தி இணைப்பில், “சற்றுமுன் சமந்தாவின் படுக்கையறையின் காட்சிகள் […]

Continue Reading

சுவிட்சர்லாந்து கொடியை எரித்து இஸ்லாமியர்கள் போராட்டம்: பரபர ஃபேஸ்புக் பதிவு!

சுவிட்சர்லாந்து கொடியில் உள்ள சிலுவையை அகற்றக் கோரி கொடியை எரித்து சுவிட்சர்லாந்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சுவிட்சர்லாந்து கொடியில் உள்ள சிலுவை சின்னத்தை அகற்ற வேண்டும் என்று சுவிட்சர்லாந்தில் வாழும் இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்ற செய்தியின் லிங் புகைப்படத்தை வைத்துள்ளனர். பார்க்கும்போது அந்த செய்தி முழுமையாக உள்ளதுபோல் தெரியவில்லை.  அந்த படத்துக்குக் கீழே, […]

Continue Reading

காவிரி கூக்குரலுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற லியனார்டோ?- ஃபேஸ்புக் வைரல் செய்தி

ஈஷா மையம் சார்பில் காவிரி கரை ஓரம் மரங்களை நடும் காவிரியின் கூக்குரல் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அளித்த ஆதரவை ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ திரும்ப பெற்றதாக ஜெயா பிளஸ் நியூஸ் கார்டு ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஈஷா யோகா மையம் பழங்குடியினருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளதாகவும், மரம் நடுவோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்படுவதாகவும் […]

Continue Reading