FACT CHECK: தாழ்த்தப்பட்ட பெண்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறி உ.பி.,யில் கழிப்பிடம் இடிக்கப்பட்டதா?

உத்தரப் பிரதேசத்தில் பெண்கள், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக கழிப்பறை இடிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஜெய் ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்பியபடி கழிப்பறை இடிக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் யாரும் கழிப்புடத்தை உபயோக படுத்தகூடாது என்று சங்கிகள் உடைக்கும் காட்சி, […]

Continue Reading

FactCheck: விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற டிராக்டரை போலீசார் துரத்தியதாக பரவும் வதந்தி

‘’விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற டிராக்டரை போலீசார் துரத்தும் வீடியோ,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Video Link கடந்த ஜனவரி 26, 2021 அன்று மேற்கண்ட தகவல் பகிரப்பட்டுள்ளது. இதில் டிராக்டர் ஒன்றை கார் ஒன்று துரத்திச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன் மேலே, ‘’போராட்டத்திற்கு போகவிடாமல் #டிராக்டரை முடக்க நினைத்த போலீஸ் […]

Continue Reading

FACT CHECK: டாக்டர் கஃபீல் கான் டெல்லி விவசாயிகள் பேரணியில் பங்கேற்றாரா?

கோரக்பூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடிய குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்த டாக்டர் கஃபீல் கான் டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் பங்கேற்றதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உத்தரப்பிரதேச குழந்தைகள் நல டாக்டர் கஃபீல் கான் டிராக்டர் ஓட்டும் காட்சியுடன் கூடிய புகைப்பட பதிவு பகிரப்பட்டு வருகிறது. அதில், “26.1.2021 தில்லி வந்த டிராக்டர் […]

Continue Reading

FACT CHECK: விவசாய போராட்டத்தில் சீக்கியர் வேடத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்; உண்மை என்ன?

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் போல வேடம் அணிந்து பங்கேற்ற இஸ்லாமியர் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர் ஒருவர் இஸ்லாமியர் போல தொழுகை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவசாய போராட்டத்தில் அவ்வளவு பிசியாக இருப்பதால் வேஷத்தைக் கலைக்க டைம் கிடைக்கவில்லையாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

FACT CHECK: கலைஞர் நினைவிடத்துக்குச் சென்ற அ.தி.மு.க தொண்டர்கள்: ஜெயக்குமார் பெயரில் பரவும் வதந்தி

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவின்போது கலைஞர் நினைவிடத்துக்கு சென்றவர்கள் அ.தி.மு.க தொண்டர்கள் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் ஜெயக்குமார் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கலைஞர் நினைவிடத்துக்குச் சென்றவர்கள் அதிமுகவினரே அல்ல. உண்மையான தொண்டர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். […]

Continue Reading

FactCheck: செங்கோட்டையில் தேசியக் கொடியை அவமதித்ததால் இவரை போலீசார் அடித்தனரா?

‘’டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டையில் கொடி ஏற்றிய விவசாயிக்கு போலீஸ் அடி,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link   ‘’செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி அவமானப்படுத்தியதால் டெல்லி போலீசாரால் தாக்கப்பட்ட நபர்,’’ என்று கூறி இந்த புகைப்படம் தொடர்பான தகவலை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:  […]

Continue Reading

FACT CHECK: ஊழல் ராணிக்கு மணிமண்டபம் தேவையா என்று எச்.ராஜா கேட்டாரா?

ஊழல் ராணிக்கு மக்கள் பணத்தில் மணி மண்டபமா, அதை பிரதமர் திறந்து வைக்க வேண்டுமா என்று எச்.ராஜா கேள்வி எழுப்பியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிடும் நியூஸ் கார்டு போன்று ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஊழல் ராணிக்கு மக்கள் பணத்தில் மணி மண்டபமா? அதனை […]

Continue Reading

FactCheck: திண்டுக்கல் சீனிவாசன் உளறியதாகக் கூறி பகிரப்படும் வதந்தி!

‘’அம்மா உயிரோடு இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக நினைவிடம் அமைத்திருக்க முடியாது- திண்டுக்கல் சீனிவாசன்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அந்த கார்டில், ‘’அம்மா உயிரோடு இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக நினைவிடம் அமைத்திருக்க முடியாது. முதல்வர் எடப்பாடி […]

Continue Reading

FACT CHECK: மாஸ்க் போட்டு சாப்பிடுவது போல ராகுல் போஸ் கொடுத்தாரா?- விஷம பதிவு

மாஸ்க் போட்டு ராகுல் காந்தி சாப்பிடுவது போல் புகைப்படம் எடுத்ததாகக் கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ராகுல் காந்தி உணவு விருந்து ஒன்றில் மாஸ்க் போட்டு அருகில் அமர்ந்திருந்த பெண்களுடன் பேசும் புகைப்படமும் தமிழ் திரைப்பட காட்சி ஒன்றும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லக்கினத்தில் ஒன்பது கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவன்…. ஒருவன்… […]

Continue Reading

FactCheck: ஆந்திராவில் உள்ள கோயிலில் சிலுவை வரைந்த கிறிஸ்தவர்கள்?- விவரம் இதோ!

‘’ஆந்திராவில் உள்ள கோயிலில் சிலுவை வரைந்த கிறிஸ்தவர்கள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link ஜனவரி 18, 2021 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ஆந்திராவில் உள்ள ஒரு கோயிலில் பாவாடைகள் செய்த அட்டகாசம்,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading

FACT CHECK: ஆந்திராவில் கிறிஸ்தவ மத போதகர்களால் 2 இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

ஆந்திராவில் இயேசு உயிர்ப்பிப்பார் என்று நம்பி இரண்டு இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட் மற்றும் தொலைக்காட்சி ஒன்றின் விவாதம் ஆகியவற்றை இணைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆந்திர மாநிலம் சித்தூரில் கிறிஸ்தவ மத போதகர்களின் “இயேசு உயிர்ப்பிப்பார்” என்ற ஏமாற்று […]

Continue Reading

FACT CHECK: சிங்கக் குட்டியை சுமந்து செல்லும் யானை… இந்த ஆண்டின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டதா?

சிங்கக் குட்டி ஒன்றை யானை சுமந்து செல்லும் புகைப்படம் இந்த ஆண்டின் சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சிங்கக் குட்டி ஒன்றை யானை தன் துதிக்கையால் சுமந்து செல்வது போன்ற படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஆண்டின் மிகச்சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட புகைப்படம் இது. தனது குட்டியுடன் கடும் வெயிலில் […]

Continue Reading

FactCheck: கோத்தபய ராஜபக்சே அளித்த சர்ச்சை பேட்டி; முழு விவரம் என்ன?

‘’கனிமொழி, திருமாவளவனுக்கு பரிசு கொடுத்தோம்- கோத்தபய ராஜபக்சே வாக்குமூலம்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இதனை நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049053770), வாசகர்கள் சிலர் அனுப்பி நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். இதன்பேரில் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனை பலரும் ஷேர் செய்வதை கண்டோம். Facebook Claim Link  Archived Link  உண்மை அறிவோம்:இதன்படி, ‘’விடுதலைப் புலிகள் […]

Continue Reading

FactCheck: திருப்பதி வெங்கடாஜலபதி ஒரு கருங்கல் பொம்மை என்று கனிமொழி கூறினாரா?

‘’திருப்பதி வெங்கடாஜலபதி ஒரு கருங்கல் பொம்மை என்று கனிமொழி விமர்சனம்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த தகவலை வாசகர் ஒருவர், நமது வாட்ஸ்ஆப் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.  Facebook Claim Link 1 […]

Continue Reading

FACT CHECK: பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று பகிரப்படும் பழைய படம்!

பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்தின் படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது பால் தினகரன் வீட்டில் கைப்பற்றிய பணம்… டேய் வாட்டிகன் பாய்ஸ் இது எப்படி இருக்கு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை வரை ஆடு என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

FACT CHECK: தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்களா?- விளக்கம் அளித்த பிறகும் பரவும் வீடியோ

தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 மருத்துவர்களுக்கு தடுப்பூசி போடுவது போன்ற பாலிமர் டிவி வெளியிட்ட செய்தி வீடியோ பகிரப்பட்டுள்ளது. செவிலியர் ஊசியை அழுத்தாமல், போடுவது போல போஸ் கொடுக்கிறார். போட்டு முடித்தது போல வெற்றி சின்னத்தைக் காட்டியபடி பெண் ஒருவர் எழுந்திருக்கிறார். […]

Continue Reading

FACT CHECK: 1500 ஆக இருந்த குறளின் எண்ணிக்கையை 1330 ஆக குறைத்துவிட்டார்கள் என்று பரவும் தகவல்!

திருக்குறளில் 1500 குறள் இருந்ததாகவும் அதை தற்போது 1330 ஆக குறைத்துவிட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive திருவள்ளுவ நாயானாரின் ஞானவெட்டியான் என்ற நூலின் அட்டைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருக்குறள் 1500 குறளின் சான்று இது… சரி…அப்ப 1330 குறளா யாரு குறைச்சிருப்பா… அதுசரி வள்ளுவரையே மாத்துனவங்களுக்கு அவர் எழுதுன குறளை மாத்தமாட்டாங்களா என்ன” என்று […]

Continue Reading

FactCheck: சசிகலாவை வரவேற்று ஓபிஎஸ் ட்வீட் வெளியிட்டதாகப் பரவும் வதந்தி…

‘’சசிகலாவை வரவேற்று ஓபிஎஸ் ட்வீட் வெளியிட்டுள்ளார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ட்வீட் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் பகிரப்பட்டுள்ள ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். அதில், ‘’மதிப்பிற்குரிய சின்னமா முழுமையாக குணமடைந்து கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றி, மத்திய பா.ஜ.க அரசிடம் சீக்கித் தவிக்கும் அதிமுகவை மீட்க […]

Continue Reading

FactCheck: செப்பு பாத்திரத்தில் தேங்காய் தண்ணீர் வைத்து குடித்தால் உயிருக்கு ஆபத்தா?

‘’செம்பு பாத்திரத்தில் தேங்காய் தண்ணீர் வைத்துக் குடித்தால் உயிருக்கே ஆபத்து,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  குறிப்பிட்ட தகவலை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதை காண முடிந்தது.  Facebook Claim Link Archived […]

Continue Reading

FACT CHECK: தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு அதிகம் உண்டு என்று ராஜேந்திர பாலாஜி கூறினாரா?

தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு அதிகமாக உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எஸ்.வி.சேகருடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருக்கும் புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டது போன்று ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. எஸ். […]

Continue Reading

FACT CHECK: டெல்லி டிராக்டர் பேரணி ஒத்திகை என்று கூறி பகிரப்படும் கிறிஸ்துமஸ் பேரணி வீடியோ!

டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்த திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணியின் ஒத்திகை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 மூன்று வெவ்வேறு வீடியோக்களை இணைத்து, மீண்டும் மீண்டும் அவை ஒளிபரப்பாகும் வகையில் 19 நிமிட வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவசாயிகளின் அசத்தல் டிராக்டர் பேரணி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை […]

Continue Reading

FACT CHECK: பாலகோட் தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் இறந்ததை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதா?

பாகிஸ்தானின் பாலகோடில் இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று அந்நாட்டின் முன்னாள் தூதர் தெரிவித்தார் என்று செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக பா.ஜக இளைஞரணி வெளியிட்ட பிரதமர் மோடியின் புகைப்படம், டைம்ஸ் நவ் பத்திரிகையில் வெளியான செய்தியின் படம் ஆகியவற்றைக் கொண்டு புகைப்பட பதிவு ஒன்று தயாரிக்கப்பட்டு […]

Continue Reading

FACT CHECK: கோனார்க் அதிசயம் என்று பகிரப்படும் அமெரிக்கா நித்தியானந்தா கோயில் சிவலிங்கம்!

ஒடிஷா கோனார்க் கோயிலில் 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சூரிய உதய காட்சி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சிவ லிங்கம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரிசாவில் உள்ள கோனார்க் கோவிலில் 200 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம். கோவிலின் உள்ளே சூரியன் உதிப்பது.(2017)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

FactCheck: பெண்களுக்கு பெரியார் 1951-ல் சொன்ன அறிவுரை என்று கூறி பகிரப்படும் வதந்தி…

‘’05.12.1951 அன்று குடியரசு நாளிதழில் பெரியார் பெண்களுக்கு சொன்ன அறிவுரை,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவு உண்மையா, என்று சிலர் சந்தேகம் கேட்க, இதனை பகிர்ந்தவர் உண்மைதான் என்று ஆமோதித்து கமெண்ட் பகிர்ந்துள்ளதையும் காண முடிகிறது. இது தவிர, இன்னொரு ஃபேஸ்புக் வாசகர் இந்த பதிவுக்கான ஆதாரம் என்று கூறி […]

Continue Reading

FACT CHECK: இந்தோனேஷிய காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் வீடியோவா இது?

இந்தோனேஷிய காட்டில் பழமையான சிவ லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 சிவலிங்கம் ஒன்றின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், “காராக் ஹைவேயில் சிவன் கோவில் உள்ளது. ஹைவேயில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சிவ லிங்கம் மீது இருந்து தண்ணீர் ஊற்றுகிறது” என்று தமிழில் கூறுகிறார். […]

Continue Reading

FACT CHECK: சசிகலா காலில் விழத் தயார் என்று குருமூர்த்தி கூறினாரா?- போலி நியூஸ் கார்டு!

தி.மு.க-வை வீழ்த்த சசிகலா காலில் விழத் தயார் என்று குருமூர்த்தி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி புகைப்படத்துடன் புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுகவை வீழ்த்த நான் சசிகலா காலில் விழத் தயார்! – குருமூர்த்தி, துக்ளக் ஆசிரியர்” என்று இருந்தது. இந்த பதிவை தி […]

Continue Reading

FactCheck: சீனாவில் 50 வழி சாலையா? முழு விவரம் இதோ!

‘’சீனாவில் 50 வழி சாலை. 2000 கிமீ நீளத்திற்கு 20 முதல் 50 வழி வரை விரிவடைந்து சுருங்குகிறது,’’ என பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (9049053770) நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இந்த தகவலை பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.  தமிழில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என தேடியபோது, 06.01.2021 அன்று கால்டுவெல் […]

Continue Reading

FactCheck: சீமான் மகனுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் துலாபாரம் நடத்தப்பட்டதா?

‘’திருப்பதி கோயிலில் மகனுக்கு துலாபாரம் செய்த சீமான்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:   இந்த தகவலை நமது வாசகர் ஒருவர், வாட்ஸ்ஆப் மூலமாக (9049053770) அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டிருந்தார். இந்த தகவல் முதலில், ட்விட்டரில் பகிரப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. Archived Link அதற்கடுத்தப்படியாக, இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டரிலும் பலர் […]

Continue Reading

FACT CHECK: டைனோசர் வாழ்வதாக துணிந்து பொய் சொன்ன இணையதளம்!

டைனோசர் இனம் இன்னும் உயிரோடு வாழ்கிறது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “டைனோசர் இனங்கள் அழிந்து விட்டது என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்… ஆனால் இன்னும் உயிருடன் வாழும் டைனோசர்.. இணையதளங்களில் வைரல் வீடியோ” என்று இணையதளம் ஒன்று வெளியிட்ட செய்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.  அசல் பதிவைக் காண: online14media.com I […]

Continue Reading

FactCheck: யுபிஐ பணப் பரிவர்த்தனை கட்டணம் 30% உயர்த்தப்பட்டதாக பரவும் வதந்தி…

‘’2021 ஜனவரி 1 முதல் யுபிஐ பணப் பரிவர்த்தனை கட்டணம் 30% உயர்வு,’’ என்று கூறி பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  செய்தித்தாள் ஒன்றில் வந்த இந்த செய்தியை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே நமக்கு (+91 9049053770) அனுப்பி, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்யும் […]

Continue Reading

FACT CHECK: கார்த்தி சிதம்பரம் குடும்பத்தோடு ஜாமீன் பெற்று நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும் படமா இது?

நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குடும்பத்தோடு ஜாமீன் பெற்று நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook  I Archive ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மறுமகள் ஶ்ரீநிதி, பேத்தி உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நம்ம  கார்த்திக் சிதம்பரம்   குடும்பத்தோட  […]

Continue Reading

FACT CHECK: ரஜினிகாந்த் படத்தின் மீது ஊற்றிய பால்… சாலையில் தேங்கிய நீரை அருந்திய மூதாட்டி… உண்மை இதோ!

ரஜினிகாந்த் கட் அவுட்டுக்கு அவரது ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யும்போது, சாலையில் தேங்கிய அதை மூதாட்டி ஒருவர் அருந்துவது போன்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook  I Archive ரஜினிகாந்த் படத்துக்கு அவரது ரசிகர்கள் பால் ஊற்ற, சாலையில் கழிவு நீருடன் கலந்த அதை மூதாட்டி ஒருவர் எடுத்து அருந்துவது போல புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “2020ல் என்னை […]

Continue Reading

FACT CHECK: டெல்லி முற்றுகையை தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இறங்கிய பஞ்சாப் மக்கள்?

பஞ்சாபிகள் இந்தி எதிர்ப்பில் குதித்தார்கள் என்று ஒரு புகைப்படத் தொகுப்பு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 பெயர்ப் பலகையில் இந்தி, ஆங்கில மொழியை கருப்பு பெயிண்ட் பூசி அழிக்கும் போராட்ட புகைப்படங்களை தொகுத்து பதிவிட்டுள்ளனர். அதில், “காலம் கடந்தாலும் பஞ்சாபிகள் விழித்து கொண்டார்கள். தன் மொழி […]

Continue Reading

FactCheck: கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் செவிலியர் உயிரிழந்தாரா?- உண்மை இதோ!

‘’கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற செவிலியர் டிவியில் பேசிக் கொண்டிருந்தபோதே துடிதுடித்து இறந்துபோனார்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Video Link இதில், ‘’பெண் ஒருவருக்கு, கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்காக போடுகிறார்கள்; சிறிது நேரத்தில் அந்த பெண் பேசியபடியே மயங்கி விழுகிறார். அவர் இறந்துவிட்டார்,’’ என்று குறிப்பிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது […]

Continue Reading

FACT CHECK: டெல்லி டிராக்டர் பேரணி என்று கூறி பகிரப்படும் ஜெர்மனி படம்!

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி ஒத்திகை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 டெல்லியில் பெருமக்கள் டிராக்டர் பேரணி ஒத்திகை என்று குறிப்பிட்டு ஒரு படம் பகிரப்பட்டுள்ளது. இதை தினமலர் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Nags Rajan 2021 ஜனவரி 8 அன்று பகிர்ந்துள்ளார். […]

Continue Reading

FACT CHECK: பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று 11 மடாதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டனரா?

பா.ஜ.க உள்ளிட்ட இந்து விரோத சக்திகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்று 11 மடாதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டார்கள், எனக் கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மடாதிபதிகள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்து_விரோத_சக்திகளுக்கு_வாக்களிக்க_கூடாது. தமிழகத்தை சார்ந்த 11 மடாதிபதிகள் கூட்டறிக்கை மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இறந்த 240 பேரில் 230 பேர் இந்துக்கள். […]

Continue Reading

FactCheck: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான நபர் மு.க.ஸ்டாலினை சந்தித்தாரா?

‘’பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 உண்மை அறிவோம்:தமிழ்நாடு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக, ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக மீது பெரும் சர்ச்சை நிலவுகிறது. […]

Continue Reading

FACT CHECK: அமெரிக்க நாடாளுமன்றம் முற்றுகை என்று பகிரப்படும் பழைய படம்!

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த கலவரத்தின் போது காவிக் கொடியோடு இந்தியர்கள் பங்கேற்றார்கள் என்பது போல ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 I Facebook 3 I Archive 3 டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டது தொடர்பான புகைப்பட பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், காவிக் […]

Continue Reading

FactCheck: கேஜிஎஃப் நடிகர் யாஷ் பாஜகவை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தாரா?- முழு விவரம் இதோ!

‘’கேஜிஎஃப் நடிகர் யாஷ், பாஜகவை ஆதரித்து பிரசாரம் செய்தவர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 பாஜக ஆதரவாளர்கள் மட்டுமின்றி, பாஜக எதிர்ப்பாளர்கள் என்ற பாரபட்சம் இன்றி இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து […]

Continue Reading

FACT CHECK: இந்த முருகன் சிலை கம்போடியாவை சேர்ந்தது இல்லை!

கம்போடியாவில் உள்ள 1500 ஆண்டு பழமையான முருகன் சிலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவலை சரி பார்த்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மயில்மேல் அமர்ந்திருக்கும் முருகன் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1500 ஆண்டு பழமை வாய்ந்த முருகன் சிலை கம்போடியாவில்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை TAMIL PAKKAM என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Anuratha Anuratha Anuratha என்பவர் 2021 ஜனவரி […]

Continue Reading

FactCheck: முதல்வர் பதவிக்கு தயார் என்று எச்.ராஜா பேசியதாகப் பரவும் வதந்தி!

‘’முதல்வர் பதவிக்கு தயார் – எச்.ராஜா,’’ என்று எச்.ராஜா பேசியதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், எச்.ராஜா பெயரை குறிப்பிட்டு ஐபிசி தமிழ் ஊடகம் வெளியிட்டதைப் போன்ற ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:தமிழ்நாட்டில் தற்போது சட்டமன்ற தேர்தல் நேரம் […]

Continue Reading

FACT CHECK: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கூடாரம் என்று பகிரப்படும் கும்பமேளா படம்!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அமைத்துள்ள கூடாராம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 கூடாரங்கள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டில்லி விவசாயிகள் போராட்டம் கூடாரங்கள் அமைத்து” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Manisekar MahaKarthi‎ என்பவர் 2021 ஜனவரி 8ம் தேதி பகிர்ந்துள்ளார். […]

Continue Reading

FACT CHECK: கமல்ஹாசன் பாடலுக்கு நடனமாடிய ரோபோ?- ஆடியோ எடிட் செய்யப்பட்ட வீடியோ!

தமிழ் பாடலுக்கு ரோபோக்கள் நடனமாடின என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 நடிகர் கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் ‘ராஜா கைய வச்சா’ பாடலுக்கு ரோபோக்கள் நடனமாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ் பாடலுக்கு ரொபோக்கள் ஆடும் நடனம் அருமை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Senthil […]

Continue Reading

FactCheck: இந்த படத்தில் இருப்பவர் பிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் இல்லை!

‘’இந்த புகைப்படத்தில் இருப்பவர் பிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட். அவரது பொக்கிஷ அறைக்குள்ளேயே சிக்கி உணவின்றி இறந்துபோனார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், வயதான முதியவர் ஒருவர், தங்கக் கட்டிகள் மீது அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ இந்தப் படத்தில் இருப்பவர்தான் #ரூட்ஷெல்ட். பிரிட்டனில் பெரும் செல்வந்தராக […]

Continue Reading

FactCheck: பிராமணர் – பள்ளர் திருமண உறவு தேவை என்று குருமூர்த்தி கூறினாரா?

‘’பார்ப்பனர்களும், தேவேந்திர குலத்தவரும் திருமண உறவு வைத்துக் கொள்ள வேண்டும்,’’ என்று அரசியல் விமர்சகர் குருமூர்த்தி பேசியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஜனவரி 5, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், குருமூர்த்தியின் புகைப்படம் பகிர்ந்து, ‘’பிராமணர் – பள்ளர் திருமண உறவு வேண்டும்: குருமூர்த்தி வேண்டுகோள்,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை […]

Continue Reading

FACT CHECK: காமராஜர் நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டது மோடியா, மன்மோகன் சிங்கா… ஃபேஸ்புக் பதிவால் குழப்பம்!

காமராஜர் நினைவு நூறு ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive காமராஜர் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தின் புகைப்படம் மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படம் இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நாணயமான மனிதருக்கு நாணயம் வெளியிட்ட பாரத பிரதமர் ஐயாவுக்கு பல கோடி நன்றிகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

FACT CHECK: தைப்பூசம் விடுமுறையை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் கூறினாரா?

தி.மு.க வெற்றி பெற்றால் தைப்பூச திருநாள் அரசு விடுமுறை ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக வெற்றி பெற்றால் தைப்பூசத் திருநாள் விடுமுறை ரத்து செய்யப்படும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்” என்று உள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

FactCheck: இது ராமாயணத்தில் வரும் ஜடாயு பறவை அல்ல; வதந்தியை நம்பாதீர்!

‘’இது ராமாயணத்தில் வரும் ஜடாயு பறவை,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்பட பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link டிசம்பர் 29, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. ‘’ஆதிகாலத்தில் ஜடாயூ என்றழைக்கப்படும் பறவை இனம்,’’ என்று கூறி இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதையும் காண முடிகிறது.  உண்மை […]

Continue Reading

FACT CHECK: டெல்லி போராட்டத்தில் இறந்த விவசாயி என்று கூறி பரவும் பழைய படம்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இறந்தவர் என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முதியவர் ஒருவர் இறந்து கிடக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. “இதெல்லாம் பாத்துட்டு எப்படியா ஒருவாய் சோறு இறங்குது..?! #கார்ப்பரேட்டுனா அவ்ளோ இனிக்குது..?!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை புருசோத்தமன் ஏகாம்பரம் என்பவர் 2021 ஜனவரி 3ம் தேதி ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இவரைப் போல […]

Continue Reading

FactCheck: ஜியோ தானிய மூட்டைகள் என்ற பெயரில் பகிரப்படும் புகைப்படங்கள்- உண்மை என்ன?

‘’பருப்பு, கோதுமை கொள்முதல் செய்ய தொடங்கியுள்ள ஜியோ,’’ எனும் பெயரில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்களை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 குறிப்பிட்ட புகைப்படத்தில் ஜியோ பெயருடன் உள்ள சாக்குப் பைகளில், கோதுமை உள்ளிட்ட தானியங்களை மூட்டை கட்டுவதைக் காண […]

Continue Reading