அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே ஒரு ஊருக்கு ராசு வன்னியர் எனப் பெயர் சூட்டப்பட்டதா?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள பகுதி ஒன்றுக்கு ராசு வன்னியர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ஒரு சாலை வழிகாட்டி “சைன் போர்டு” படம் பகிரப்பட்டுள்ளது. அதில், ராசு வன்னியர் என்ற பகுதிக்கு செல்லும் வழி என்று உள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

பா.ஜ.க தொண்டர்களிடம் வருத்தம் தெரிவித்தாரா துரை வைகோ?

அண்ணாமலையை ஒருமையில் பேசியதற்கு மன வருத்தம் தெரிவித்த துரை வைகோ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோரின் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலையை ஒருமையில் பேசியதற்கு மனமார வருத்தம் தெரிவிக்கிறேன்!! பாஜக தொண்டர்களிடமும் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்!! – துரை வைகோ” என்று இருந்தது. […]

Continue Reading

‘டெலிவரி இந்து’- அர்ஜூன் சம்பத் பெயரில் தொடர்ந்து பரவும் விஷம பதிவுகள்!

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் ட்வீட் என்று சில வேடிக்கையான பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன, அவற்றுக்குப் பலரும் மிகவும் கடுமையாக கண்டன பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர். எனவே, அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அர்ஜூன் சம்பத் வெளியிட்டது போன்று ட்வீட் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “Ram + John. நாளடைவில் Ram + zan என்றானது. #Ramzan இஸ்லாமிய […]

Continue Reading

வெயில் காரணமாக பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்ப வேண்டாம் என்று இந்தியன் ஆயில் எச்சரித்ததா?

வாகனங்களில் பெட்ரோல் டேங்கை நிரப்ப வேண்டாம். இப்படி செய்வதால் பெட்ரோல் டேங்க் வெடிக்க வாய்ப்பு உள்ளது என்று இந்தியன் ஆயில் எச்சரிக்கை வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டது போன்று எச்சரிக்கை ஒன்று ஆங்கிலத்திலிருந்தது. அதில், “வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களின் டேங்கை […]

Continue Reading

அண்ணாமலைக்கு பைத்தியம் முற்றிவிட்டது என்று எச்.ராஜா கூறினாரா?

‘’அண்ணாமலைக்கு பைத்தியம் முற்றிவிட்டது – எச்.ராஜா கருத்து,’’ என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் இந்த ஸ்கிரின்ஷாட்டை அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதனை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றிலும் சிலர் உண்மையா பொய்யா என தெரியாமல் பகிர்வதைக் கண்டோம். Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த தகவல் பற்றி ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு […]

Continue Reading

பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவா?- உண்மை அறிவோம்!

பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் பெட்ரோல், டீசல் விலை ரூ.100க்கு கீழ் உள்ளது என்றும், தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளனர். அதில், பாஜக ஆளும் மாநிலங்கள் […]

Continue Reading

வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தாரா?

வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி. வீடு மற்றும் கடைகளுக்கான வாடகைக்கு 12% ஜிஎஸ்டி வரி […]

Continue Reading

நடிகர் கருணாஸ் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகள்!

நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் மாரடைப்பால் காலமானார் என்று ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் கருணாஸ் மறைந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சற்றுமுன் மாரடைப்பால் முன்னால் MLA கருணாஸ் காலமானார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை A K Pandiyan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் […]

Continue Reading

தலித்துகள் சிறிய வீடுதான் கட்ட வேண்டும் என்று பிராமணர் சங்கத் தலைவர் கூறினாரா?

பிராமணர்கள் வீட்டை விட உயரமாக மற்றவர்கள் வீடு கட்டக் கூடாது, தலித்துக்கள் தங்கள் வீட்டை சிறியதாக கட்ட வேண்டும் என்று பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தலித்துக்கள் சிறிய வீடாக கட்ட வேண்டும். பிராமணர்கள் வீட்டை விட […]

Continue Reading

Rapid FactCheck: கோவையில் இந்து மக்களுக்கு ஆண்மைக் குறைவு மருந்து கலந்த பிரியாணி விற்பனையா?

‘’கோவையில் இந்து மக்களுக்கு ஆண்மைக் குறைவு மருந்து கலந்த பிரியாணி விற்ற முஸ்லீம்கள் கைது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே +91 9049053770 நமக்கு அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, குறிப்பிட்ட ஸ்கிரின்ஷாட்டின் ஃபேஸ்புக் பதிவு கிடைக்கவில்லை. அதேசமயம், இதனை சிலர் ஆங்கிலத்தில், ட்விட்டரில் பகிர்வதைக் கண்டோம். Twitter Claim […]

Continue Reading

மாதம் 50 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட விகடன்?- இந்தியா டுடே பெயரில் வதந்தி…

மாதம் ரூ.50 லட்சத்திற்கு அடமானம் வைக்கப்பட்ட விகடன் குழுமம் என்று குறிப்பிட்டு இந்தியா டுடே தமிழ் அட்டைப்பட செய்தி வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவலை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் இதனை உண்மை போல சமூக வலைதளங்களில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்தியா டுடே […]

Continue Reading

ஏழை பெண்களின் திருமணத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி உதவி செய்கிறதா லாட்லி அறக்கட்டளை?

மகளின் திருமணச் செலவுக்கு பணம் இன்றி கவலைப்படுபவர்கள் லாட்லி அறக்கட்டளையைத் தொடர்புகொண்டால் ரூ.1 லட்சம் வரை நிதி உதவி கிடைக்கும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் பதிவு ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், “,, முக்கிய அறிவிப்பு.  ,, மகளின் திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் குடும்பம்  உங்கள் சொந்த விருப்பத்தின் […]

Continue Reading

வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்கு அதிருப்தி தெரிவித்தாரா செந்தில்வேல்?

சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைக்காமல், வில் ஸ்மித்துக்கு கிடைத்திருப்பது வேதனை அளிக்கிறது என்று செந்தில்வேல் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்டது போன்று ட்வீட் பகிரப்பட்டுள்ளது. அதில், “உழைக்கும் மக்களின் குரலாக #ஜெய்பீம் திரைப்படத்தில் ஒலித்த நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைக்காமல், ஹரித்வாரில் கங்கா […]

Continue Reading

ஊது பாவை என்ற பெயரில் மூலிகை உள்ளதா?

அழிவின் விளிம்பில் இருக்கும் ஊது பாவை என்ற மூலிகை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செடி ஒன்று புகை வெளியேற்றுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அழிவின் விளிம்பில் இருக்கும் ஊது பாவை வகையைச் சேர்ந்த மூலிகை இது தன் இனவிருத்திக்காக தன் மகரந்தத்தை இப்படி ஊதித் தள்ளி கொண்டே இருக்கும் அடர்ந்த மழைப்பொழிவு […]

Continue Reading

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று அண்ணாமலை கூறினாரா?

பெட்ரோல், டீசல், கேஸ் விலையைக் குறைக்காவிட்டால் தீக்குளித்து சாவேன் என்று அண்ணாமலை சபதம் ஏற்றதாக ஒரு போலியான நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியுள்ளது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய “தமிழ் கேள்வி” என்ற இணைய ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்காவிட்டால் நான் தீக்குளித்து சாவுவேன் […]

Continue Reading

ஸ்டாலின் அணிந்த கூலிங் ஜாக்கெட் விலை ரூ. 17 கோடி என்று பிடிஆர் கூறினாரா?

துபாய் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை ரூ.17 கோடி என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கூலிங் ஜாக்கெட் 17 கோடி. துபாய் […]

Continue Reading

பிரியாணி பீஸ் கேட்டு அடி வாங்கியதால் கட்சி ஆரம்பித்தேன் என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

பீப் பிரியாணியில் இரண்டு பீஸ் கூடுதலாக கேட்டதற்காக பாய் அடித்ததால் இந்து மக்கள் கட்சியை ஆரம்பித்தேன் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்து மக்கள் கட்சி வெளியிட்டது போன்று ட்வீட் பதிவு ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒருநாள் பீப் பிரியாணி ரெண்டு பீஸ் extra கேட்டேன். அந்த பாய் […]

Continue Reading

அரசுப் பேருந்துகள் நிற்கும் ஓட்டல்கள் சைவமா, அசைவமா? தமிழ்நாடு அரசு கூறியது என்ன?

‘’சைவ ஓட்டல்களில் மட்டுமே அரசுப் பேருந்துகள் நிற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிடவில்லை. ஊடகங்கள் வதந்தி பரப்புகின்றன,’’ என்று குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்கள் பகிரும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் (SETC) சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் உணவு இடைவெளியின்போது சாலையோர ஓட்டல்களில் நின்று செல்வது வழக்கம். இதற்காக, […]

Continue Reading

20 ஆயிரம் புத்தகம் படித்ததாகக் கூறிய அண்ணாமலையை கேலி செய்து அட்டைப்படம் வெளியிட்டதா துக்ளக்?

20 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்களைப் படித்திருக்கிறேன் என்று அண்ணாமலை கூறியதைக் கிண்டலடித்து துக்ளக் அட்டைப்படம் வெளியிட்டதாக புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive துக்ளக் அட்டைப்பட ஓவியம் பகிரப்பட்டுள்ளது. இரண்டு கழுதைகள் பேசக்கொள்வது போல ஓவியம் உள்ளது. அதில், “இதுவரை 20 ஆயிரம் புத்தகங்களை தின்னுருக்கேன்,நீ எத்தனை தின்னுருக்கே” என்று இருந்தது. இந்த பதிவை […]

Continue Reading

நாக்கால் நடனமாடும் திறமை படைத்தவர் சாவர்க்கர் என்று இந்து மக்கள் கட்சி கூறியதா?

‘’நாக்கை மட்டும் தரையில் ஊன்றி 40 நிமிடங்கள் நடனமாடும் திறமை படைத்தவர் தேசத்தந்தை சாவர்க்கர்,’’ எனக் குறிப்பிட்டு, இந்து மக்கள் கட்சி ட்வீட் வெளியிட்டதாகப் பரவும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் சிலர் இதனை உண்மை என நம்பி பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:சமீப […]

Continue Reading

பெரியாரை புரிந்து கொள்ளாத எந்த இந்துவும் ஞானமடைய முடியாது என்று சுகிசிவம் கூறினாரா?

பெரியாரைப் புரிந்துகொள்ளாத எந்த இந்துவும் ஞானம் அடைய முடியாது என்று பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம் கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சுகி.சிவம் மற்றும் தந்தை பெரியார் ஆகியோர் படங்களை இணைத்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த ஹிந்துவும் ஞானமடைய முடியாது! – சுகி.சிவம்” என்று போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டிருந்தது. […]

Continue Reading

தி.மு.க-வில் இருந்து கனிமொழி விலக உள்ளதாக நியூஸ் 7 செய்தி வெளியிட்டதா?

திமுக-வில் இருந்து கனிமொழி விலக உள்ளதாக நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கனிமொழி மற்றும் மு.க.ஸ்டாலின் புகைப்படங்களுடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கனிமொழி திமுகவில் இருந்து விலகல்? திமுகவில் அதிகரித்து வரும் பாலியல் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக கட்சியில் இருந்து […]

Continue Reading

தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் கோமாதாவுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று எச்.ராஜா கூறினாரா?

‘’தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் கோமாதாவுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று எச்.ராஜா குற்றச்சாட்டு,’’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்று பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெறுகிறது. இதையொட்டி நிதி பட்ஜெட், வேளாண் பட்ஜெட் என தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட்டது. 2 பட்ஜெட்களுக்கும் பல்வேறு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்படும் சூழலில், இதில் கோமாதாவுக்கு முக்கியத்துவம் தரவில்லை […]

Continue Reading

ஊடகத்தினரைப் பார்த்து மோடி அருவருக்கிறார் என்று அண்ணாமலை கூறினாரா?

ஊடகத்தினரைப் பார்த்து பிரதமர் மோடி அருவருக்கிறார் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஊடக பிரச்சைக்காரர்களை பார்த்து மோடி அருவருக்கிறார். ஊடகத்துறையினர் பிச்சைக்காரர்களைப் போல் பிரதமர் மோடியை சுற்றி நின்று “தேர்தல் வாக்குறுதியான […]

Continue Reading

மீன் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் கிடையாது என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் வதந்தி…

‘’மீன் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் கிடையாது என்று அண்ணாமலை கருத்து,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link I Archived Link இதே செய்தியை ஏசியாநெட் நியூஸ் தமிழ் ஊடகமும் வெளியிட்டுள்ளது.  Asianet News Tamil FB Post I Article Link I Archived Link உண்மை அறிவோம்: கடந்த ஜனவரி மாதம், சென்னை குயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கோயில் கட்டிட நிலத்தில் […]

Continue Reading

பிரியாணி சாப்பிட்டதால் ஆண்மைக்குறைவு ஏற்பட்டது என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

பிரியாணி சாப்பிட்டதால் தனக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டது என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அர்ஜூன் சம்பத் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பிரியாணியால் எனக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டுள்ளது. பிரியாணி ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் என்பது உண்மைதான். பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் நான் இதை பதிவு […]

Continue Reading

கே.என்.நேரு தரையில் அமர்ந்த படம் போலியானதா?

பங்காரு அடிகளார் முன்பாக, அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் முன்னிலையில் தமிழக அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தின் மீது ஃபேக் என்று குறிப்பிட்டும், அமைச்சர் சோஃபாவில் அமர்ந்திருப்பது போல உள்ள படத்தின் மீது ஒரிஜினல் என்றும் குறிப்பிட்டு புகைப்பட பதிவு […]

Continue Reading

அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று தி.மு.க எம்.பி கூறினாரா?

கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று தி.மு.க எம்.பி. செந்தில்குமார் கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க எம்.பி. செந்தில் குமார் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைச் சேர்த்து தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கே.என்.நேரு பதவி விலக வேண்டும். சுய மரியாதை இல்லாமல் […]

Continue Reading

கே.என்.நேரு தரையில் அமர்ந்த விவகாரம்; டி.ஆர்.பி. ராஜா கண்டனம் தெரிவித்தாரா?

‘’கே.என்.நேரு தரையில் அமர்ந்த விவகாரத்திற்கு டி.ஆர்.பி.ராஜா கண்டனம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனைப் பலரும் உண்மை போல ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். FB Claim Link I Archived Link உண்மை அறிவோம்:திமுக அமைச்சர் கே.என்.நேரு, பங்காரு அடிகள் சாமியாரை நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதன்போது, நேரு […]

Continue Reading

மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்குத் தடை- மோடிக்கு கடிதம் எழுதினாரா அண்ணாமலை?

‘’மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்,’’ என்று பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதனை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் பலரும் உண்மை போல பகிர்வதையும் கண்டோம். Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பாஜக […]

Continue Reading

பிரியாணி சாப்பிடுபவர்கள் உண்மையான இந்துக்கள் இல்லை என்று அண்ணாமலை கூறினாரா?

‘’பிரியாணி சாப்பிடுபவர்கள் இந்துக்கள் இல்லை – அண்ணாமலை,’’ என்று குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’பிரியாணி சாப்பிடுபவர்கள் இந்துக்கள் இல்லை. பிரியாணி, கிரில் சிக்கன், பார்பிக்யூ போன்ற அரேபிய உணவுகளை உண்பவர்கள் உண்மையான இந்துக்கள் இல்லை. இதுபோன்ற அந்நிய உணவுகளை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை,’’ என்று எழுதியுள்ளனர். […]

Continue Reading

கொலுசு கொடுத்ததால் மின்சார கட்டணத்தை உயர்த்தப் போகிறேன் என்று செந்தில் பாலாஜி கூறினாரா?

உள்ளாட்சித் தேர்தலின் போது மக்களுக்குக் கொலுசு கொடுத்ததால் மின்சார கட்டணத்தை உயர்த்தப்போகிறேன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் செந்தில் பாலாஜி புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொலுசு கொடுத்ததால் மின்சாரம் விலையேற்றம். கோவை மாநகராட்சி தேர்தலின் போது மக்களுக்கு […]

Continue Reading

பெட்ரோல் விலை உயராது என்று அண்ணாமலை கூறினாரா?

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தால் பெட்ரோல் விலை உயராது என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பெட்ரோல் விலை உயராது. தேர்தல் முடிந்தால் பெட்ரோல் விலை […]

Continue Reading

நான் இந்து தீவிரவாதி என்று கூறியவரின் தாயார் பேட்டி என பகிரப்படும் போலி நியூஸ் கார்டு!

கிஷோர் கே சுவாமி கூறியதால்தான் எனது மகன் ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன் பெரியார் பற்றி விமர்சித்தார் என்று அவரது தாயார் குற்றஞ்சாட்டியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பணம் வேண்டாம், மகன்தான் வேண்டும்! பெரியார், அம்பேத்கர் பற்றி இழிவாக பேசினால் இரண்டு லட்சம் […]

Continue Reading

கோட்சே சிலை அமைக்கப்படும் என்று பா.ஜ.க கவுன்சிலர் உமா கூறினாரா?

கோட்சேவுக்கு சிலை எழுப்பப்படும் என்று சென்னை மாநகராட்சி பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்தன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கதிர் என்ற இணைய ஊடகம் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “பதவி ஏற்றதும் முதல் வேலை இது தான். மேற்கு மாம்பலத்தில், தேசபக்தர் கோட்சேவிற்கு சிலை எழுப்பப்படும். மேற்கு […]

Continue Reading

முன்னாள் மிஸ் உக்ரைன் அனஸ்டாஷியா லென்னா ராணுவத்தில் சேர்ந்தாரா?

‘’முன்னாள் மிஸ் உக்ரைன் அனஸ்டாஷியா லென்னா ரஷ்யாவுக்கு எதிராகப் போரிடும் நோக்கில் தனது நாட்டு ராணுவத்தில் சேர்ந்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Fb Claim Link I Archived Link I Maalaimalar Website I Archived Link இதே செய்தியை தமிழ் இந்து இணையதளமும் வெளியிட்டிருந்ததைக் கண்டோம். Tamil The Hindu FB Link I Archived Link I Website […]

Continue Reading

லாவண்யா தற்கொலை விவகாரம்: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கூறியது என்ன?

‘’மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் இல்லை என்று தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை,’’ எனக் குறிப்பிட்டு கலைஞர் செய்திகள் ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link I Archived Link இதேபோல, கலைஞர் செய்திகள் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றும் வேகமாகப் பரவி வருகிறது. அதனையும் கீழே இணைத்துள்ளோம். Kalaignar Seithigal Tweet Link I Archived Link இந்த […]

Continue Reading

கன்னியாகுமரி என் குழந்தை; அண்ணாமலை இன்ஷியல் போடக்கூடாது என்றாரா பொன்.ராதாகிருஷ்ணன்?

‘’கன்னியாகுமரி என் குழந்தை. அங்கு பாஜக வெற்றி பெற்றதற்கு, அண்ணாமலை இனிஷியல் போடக்கூடாது,’’ எனக் குறிப்பிட்டு பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி பார்க்கலாம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டு டெம்ப்ளேட்டில், பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை இருவரின் புகைப்படத்தை இணைத்து, அதன் கீழே, ‘’பொன் ராதாகிருஷ்ணன் கருத்து – நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரியில் பாஜக […]

Continue Reading

உள்ளாட்சித் தேர்தல்: தி.மு.க 60 இடங்களில் டெபாசிட் இழந்தது என்று பரவும் வதந்தி!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 60 வார்டுகளில் டெபாசிட் இழந்தது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின், உதய சூரியன் சின்னத்துடன் கூடிய ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆளும் திமுக 60 இடங்களில் டெபாசிட் இழந்தது. பெரும்பாலான இடங்களில் பாஜக வேட்பாளர்களிடம் டெபாசிட் இழந்தது திமுக” […]

Continue Reading

நாம் தமிழர் கட்சியை கலைக்கப் போகிறேன் என்று சீமான் கூறினாரா?

நாம் தமிழர் கட்சியைக் கலைக்கப் போகிறேன் என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீமான் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மக்களுக்காக போராடி பத்து ஆண்டுகள் வீண். மக்கள் திருந்துவதாக இல்லை, நான் திருந்தப் போகிறேன் ஆம் கட்சியை கலைக்கப்போகிறேன் – சீமான்” என்று இருந்தது. […]

Continue Reading

பாஜக உள்ளாட்சித் தேர்தல் வாக்குறுதி என்று கூறி பகிரப்படும் வதந்தி…

‘’பூர்வஜோன் கீ விராசாத் திட்டத்தின் கீழ் மூதாதையரின் தொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு கடன் – பாஜக உள்ளாட்சித் தேர்தல் வாக்குறுதி,’’ என்று கூறி பகிரப்படும் போஸ்டர் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இந்த போஸ்டரை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதை கண்டோம். Facebook Claim […]

Continue Reading

நீட் தேர்வை கண்டித்து தற்கொலை செய்துகொள்வேன் என்றாரா மு.க.ஸ்டாலின்?

‘’நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்துகொள்வேன்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நியூஸ் கார்டை பார்த்தாலே அது எடிட் செய்யப்பட்டு, ‘’தற்கொலை’’ என்ற வார்த்தையை புதியதாக சேர்த்துள்ளனர் என்று தெரிகிறது. பார்க்கும்போதே போலி என்று தெரியும் இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி கேலி […]

Continue Reading

கூட்டணிக் கட்சிகளால் எந்த பயனும் இல்லை என்று துரைமுருகன் கூறினாரா?

கூட்டணிக் கட்சிகளால் எந்த பயனும் இல்லை, அவைகளுக்கு ஒதுக்கிய அனைத்து வார்டுகளுமே வீண்தான் என்று திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கூறியதாக நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் துரைமுருகன் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கூட்டணி கட்சிகளால் எந்த பயனும் இல்லை. கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த […]

Continue Reading

வெளிநாட்டில் அரைகுறை ஆடையுடன் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் என்று பரவும் தஸ்லிமா நஸ்ரின் புகைப்படம்!

இந்தியாவுக்குள் புர்கா அணிந்தும், வெளிநாடு சென்றால் அரைகுறை ஆடையுடனும் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா இருக்கிறார் என்று பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு புகைப்படங்களை ஒன்று சேர்த்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படம் உள்ளது. அந்த படத்திற்குள் “உள்நாட்டு கதீஜா” என்றும் அதற்குக் கீழ், “இந்தியாவுக்குள் மட்டும் புர்கா அணிந்து […]

Continue Reading

பாஜக வெற்றி பெறும் வார்டுகளில் ஞாயிறு மட்டுமே அசைவத்துக்கு அனுமதி என்று அண்ணாமலை கூறினாரா?

பா.ஜ.க வெற்றி பெறும் வார்டுகளில், மாட்டிறைச்சி நிரந்தரமாகத் தடை செய்யப்படும் என்றும் ஞாயிறு மட்டுமே அசைவ உணவுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக சில நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன், நியூஸ் தமிழ் ஊடகங்களின் நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டு வருகின்றன. ஜூனியர் விகடன் வெளியிட்டது […]

Continue Reading

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக பரவும் வதந்தி!

உள்ளாட்சித் தேர்தலில் திமுக பின்னடைவைச் சந்திக்கும் என்று லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உள்ளாட்சி தேர்தலில் திமுக பின்னடைவை சந்திக்கும். 2022 பிப்ரவரி 19ஆம் தேதி நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க மிகவும் பின்னடைவை சந்திக்க […]

Continue Reading

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை; துரைமுருகன் அலட்டல் பேச்சு உண்மையா?

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தேர்தல் வாக்குறிதிகளை நிறைவேற்ற முடியாமல் போகிற போது மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆட்சியை பிடித்த பிறகு வாக்குறிதிகளை நிறைவேற்ற […]

Continue Reading

கொலை செய்ய விரும்பு; கேலி என்ற பெயரில் பாஜக மீது பகிரப்படும் தவறான போஸ்டர்!

‘’கொலை செய்ய விரும்பு – பாஜக,’’ எனக் குறிப்பிட்டு பகிரப்படும் போஸ்டர் ஒன்றை சமூக வலைதளம் வழியே கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட போஸ்டர் ஃபேஸ்புக்கில் மிகவும் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது. பாஜக சின்னத்துடன் உள்ளதால், தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் இந்த போஸ்டர் சமூக வலைதள பயனாளர்களை குழப்பும் வகையில் உள்ளது. பாஜக.,வே இப்படி சுய விளம்பரத்திற்காக, போஸ்டர் […]

Continue Reading

பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம் நிறுத்தப்படும் என்றாரா அமைச்சர் ராஜ கண்ணப்பன்?

‘’நிதிநிலை பற்றாக்குறையால் விரைவில் அரசு பேருந்தில் பெண்கள் பயணிக்கும் இலவச திட்டம் நிறுத்தப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு,’’ என குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, திமுக ஆட்சி அமைந்ததும், நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலமாக, படிக்க மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் பயன்பெறுவர் என […]

Continue Reading

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு பரோல்; திமுக மீது ஈவிகேஎஸ் இளங்கோவன் பாய்ச்சலா?

‘’ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு திமுக அரசு அடிக்கடி பரோல் தருவதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக்கில் இதனை பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link  உண்மை அறிவோம்:  தமிழ்நாட்டில் தற்போது […]

Continue Reading