Fact Check: தமிழக அரசின் பொங்கல் பணப் பரிசு அறிவிப்பை அண்ணாமலை விமர்சனம் செய்தாரா?

‘’மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் மக்களுக்கே பொங்கல் பரிசு வழங்குகிறது,’’ என்று பாஜக அண்ணாமலை விமர்சனம் செய்ததாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 உண்மை அறிவோம்: மேற்கண்ட செய்தி ஒரு சர்ச்சைக்குரியதாகும். ஆம், இந்த செய்தியை முதலில் […]

Continue Reading

FactCheck: மோடி இனி கனடா வரக்கூடாது என்று ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்தாரா?

‘’மோடி இனி கனடா வரக்கூடாது,’’ என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link 18 டிசம்பர் 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், தந்தி டிவி பெயரில் ஒரு நியூஸ் கார்டை வெளியிட்டுள்ளனர். அதில், மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புகைப்படங்களை வைத்து, ‘’தமிழர்களை […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க உண்ணாவிரதப் போராட்டம் என்று கூறி பகிரப்படும் அதிமுக.,வினர் படம்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தி.மு.க நடத்திய உண்ணாவிரதத்தின் போது தொண்டர்கள் உணவு சாப்பிட்ட காட்சி என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது தொடர்பான ஆய்வை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஒதுக்குப்புறமான இடத்தில் சிலர் உணவு உட்கொள்ளும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தி.மு.கவின் உண்ணாவிரதப் போராட்டம் மாபெரும் வெற்றி, வெற்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ந.முத்துராமலிங்கம் என்பவர் 2020 டிசம்பர் 18ம் […]

Continue Reading

FACT CHECK: அதானி ரயில் என்று பகிரப்படும் தகவல் உண்மையா?

இந்தியாவில் அதானிக்கு என்று தனி ரயில் வந்துவிட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 I Facebook 3 I Archive 3 அதானி நிறுவனத்தின் சமையல் எண்ணெய் ஒன்றின் விளம்பரம் ஒட்டப்பட்ட ரயில் இன்ஜின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஐயா எங்க […]

Continue Reading

FactCheck: சமையல் எரிவாயு பயனாளர்களை கேலி செய்தாரா நிர்மலா சீதாராமன்?

‘’கேஸ் சிலிண்டர் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் விறகு அடுப்பில் சமைக்க பழகிக் கொள்ளுங்கள்,’’ என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக, புதிய தலைமுறை பெயரில் ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  நமது வாசகர் ஒருவர் இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று கேட்டு, நமக்கு வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். அதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை பகிர்ந்து […]

Continue Reading

FACT CHECK: கொரோனா வைரஸ் கிருமியை உருவாக்கிய நிறுவனம்தான் தடுப்பூசியும் தயாரித்ததா?

சீனாவின் வூகானில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்தை நடத்தி வரும் மருந்து தயாரிப்பு நிறுவனம்தான் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மாதிரி படங்களை இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எல்லாமே_தற்செயலாக……… சீனாவின் Wuhan (வுஹான்) மாகாண‌த்தில் […]

Continue Reading

FACT CHECK: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான், இம்ரான்கான் ஆதரவு கோஷமா?

டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்க என்று விவசாயிகள் கோஷம் எழுப்பியதாக, ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர்கள் காலிஸ்தான் ஜிந்தாபாத், இம்ரான்கான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இம்ரான் வாழ்க, காலிஸ்தான் வேண்டும், பாகிஸ்தான் வாழ்க என்று போராடும் இவர்களா விவசாயிகள் […]

Continue Reading

FactCheck: பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி எடப்பாடி பழனிசாமி ட்வீட் வெளியிட்டாரா?

‘’கமல் ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி விமர்சித்து ட்வீட் வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், கமல்ஹாசன் மற்றும் எடப்பாடி பழனிசாமி பெயரில் வெளியான ஃபேஸ்புக் பதிவு மற்றும் ட்வீட் ஆகியவற்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்து பகிர்ந்துள்ளனர். அதனை பார்க்கும்போது, ‘’முதல்வர் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பது […]

Continue Reading

FactCheck: கவுதம் அதானி மனைவியை மோடி வணங்கியதாகப் பரவும் வதந்தி

‘’அதானி மனைவி முன் குனிந்து நிற்கும் மோடி,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இந்த தகவல் உண்மையா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், பெண் ஒருவரை பார்த்து, பிரதமர் மோடி குனிந்து வணங்குவதைப் போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ வேறுயாருமல்ல.கெளதம் அதானியின் மனைவிதான்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என […]

Continue Reading

FACT CHECK: இந்திய ராணுவ வீரர் என்று கூறி பரவும் ஈராக் புகைப்படம்!

எல்லையில் மலைகள், காடுகளில் கிடைத்த இடத்தில் படுத்து ஓய்வெடுக்கும் இந்திய ராணுவ வீரர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது இந்திய ராணுவ வீரரின் படமா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மண் குகைக்குள் ராணுவ வீரர் ஒருவர் ஓய்வெடுக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாம் இங்கே நிம்மதியாக தூங்க, எல்லையை காக்கும் பணிகளுக்கிடையே கிடைக்கும் ஓய்வை, காடுகளில் மலைகளில் கழிக்கும் […]

Continue Reading

FACT CHECK: 2020-ம் ஆண்டில் 146வது பிறந்த நாளை கொண்டாடும் முதியவர் என்று பரவும் வதந்தி!

முதியவர் ஒருவர் தன்னுடைய 146வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முதியவர் ஒருவர் படம் மற்றும் 146 என்று பிறந்த நாள் கேக் மீது வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி உள்ளிட்ட படங்களை கொலாஜ் செய்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “1874 இல் பிறந்த இவர் தனது 146 வது பிறந்த நாளைக் […]

Continue Reading

விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட பாஜக நபர்?- முழு விவரம் இதோ!

‘’விவசாயிகள் ஆதரவு போராட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட பாஜக நபருக்கு அடி உதை,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 Facebook Claim Link 4 Archived Link 4 […]

Continue Reading

FACT CHECK: டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வந்ததாக பரவும் வதந்தி!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1  I Archive 1 I Facebook  2 I Archive 2 ராணுவ வாகனங்கள் செல்லும் காட்சி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மிகப்பெரிய அளவில் ராணுவத்தை குவிக்க மோடி அரசு திட்டம்? – போராட்டக்களத்தை நோக்கி […]

Continue Reading

FACT CHECK: பாபர் மசூதி இடிப்பு போராட்டத்தில் பங்கேற்றாரா அசோக் மோச்சி?

குஜராத் கலவரத்தில் பங்கேற்றவர் என்று கூறப்படும் அசோக் மோச்சியை பாபர் மசூதி இடிப்பு போராட்டத்தில் பங்கேற்றவர் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive குஜராத் கலவரத்தின் பிரபல புகைப்படத்தை, தற்போது விவசாயிகள் போராட்ட காட்சி ஒன்றுடன் இணைத்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “அன்று – பாபர் மசூதி இடிப்பு போராட்டத்தில்! – அசோக் மோச்சி. இன்று விவசாயிகள் போராட்டத்தில். மாற்றம் ஒன்றே […]

Continue Reading

இந்திய தேசிய கீதம் உலகிலேயே சிறந்தது என்று யுனெஸ்கோ அறிவித்ததா?

‘’இந்திய தேசிய கீதம் உலகிலேயே சிறந்தது என்று யுனெஸ்கோ அறிவிப்பு,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  மேற்கண்ட தகவலை நமது வாசகர்கள் சிலர் வாட்ஸ்ஆப் வழியே, நமக்கு அனுப்பி உண்மைத்தன்மை பற்றி கண்டறியும்படி கேட்டுக் கொண்டனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கிலும் இதனை யாரேனும் பகிர்ந்துள்ளனரா என தகவல் தேடியபோது, இந்த தகவல் கடந்த பல ஆண்டுகளாகவே பகிரப்பட்டு வரும் ஒன்று […]

Continue Reading

FACT CHECK: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி மகள் மரணம் என்று மீண்டும் பரவும் வதந்தி!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடியின் மகள் ரத்த புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இறந்த குழந்தை ஒருவரின் படம் மற்றும் சிகிச்சை பெற்று வரும் குழந்தையை பார்க்கும் அப்ரிடி படத்தை இணைத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “my favourite cricketer சாகித்அப்ரிடி. புகழ் பெற்ற மிகுந்த […]

Continue Reading

FACT CHECK: அம்பானி பேரனை பார்க்க மருத்துவமனை சென்ற மோடி?- பழைய படம்!

அம்பானி பேரனை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற மோடி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் ஐ.சி.யு வார்டில் பிரதமர் மோடி, அம்பானி, நீடா அம்பானி, தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்தவரும் மகாராஷ்டிரா ஆளுநராக இருந்தவருமான வித்யாசாகர் ராவ் உள்ளிட்டவர்கள் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “போராடும் விவசாயிகளை பார்க்க நேரமில்லை. […]

Continue Reading

இது கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு அல்ல; முழு விவரம் இதோ!

‘’கிரிக்கெட் வீரர் நடராஜின் வீடு,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், நடராஜனின் வீடு என்று கூறி ஒரு குடிசையின் புகைப்படத்தை இணைத்து, தகவல் பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். Facebook Claim Link 1 Archived Link 1 உண்மை […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் தேசியக் கொடி அவமரியாதை செய்யப்பட்டதா?

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் இந்திய தேசியக் கொடியை சீக்கியர்கள் அவமதித்தார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 சீக்கியர் ஒருவர் இந்திய தேசியக் கொடியை காலணியால் அடித்து அவமரியாதை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இதுதான் விவசாயிகள் போராட்டமா.????” என்று […]

Continue Reading

FactCheck: செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர்செல்வம் பற்றி பரவும் வதந்தி

‘’பனிமலர் பன்னீர்செல்வம் உடன் கண்ணா பாண்டியன் காதல்,’’ எனும் தலைப்பில் பரவும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இதேபோல, இன்னொரு புகைப்படமும் பகிரப்படுகிறது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 உண்மை அறிவோம்: இது பார்க்கும்போதே, உண்மையில்லை, […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் வேடத்தில் இஸ்லாமியரா?- மீண்டும் ஒரு விஷம பதிவு!

விவசாயிகள் போராட்டத்தில் இஸ்லாமியர் ஒருவர் சீக்கியர் போல வேடமிட்டு பங்கேற்றுள்ளார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தெளிவில்லாத புகைப்படம் ஒன்றை வைத்து போட்டோ கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “விவசாய போராட்டத்தில் மீசை இல்லாத சிங். எங்காவது முறுக்கிய மீசை இல்லாத சிங்கை பார்த்திருக்கீங்களா?  விவசாயிகள் போராட்டத்திற்கு, விவசாயிகளை விட, எதிர் கட்சிகளை விட, மொத்த […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற ராணுவ அதிகாரி தாக்கப்பட்டாரா?

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை போலீசார் தாக்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீக்கிய ராணுவ அதிகாரி மற்றும் கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக கட்டுப் போட்ட சீக்கியர் ஒருவரின் படத்தை இணைத்து பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இரண்டு புகைபடத்தில் இருப்பவர் ஒருவரே எல்லைபாதுகாப்பு படை கேப்டன் PPS திலன்சஹேப் ஓய்வு […]

Continue Reading

FactCheck: தமிழர்களை இழிவுபடுத்தி துக்ளக் பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டதா?

‘’தமிழர்களை இழிவுபடுத்தி துக்ளக் பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டுள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  மேற்கண்ட கார்ட்டூனை, நமது வாசகர் ஒருவர், வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். அதனை சற்று பெரிபடுத்தி கீழே இணைத்துள்ளோம்.  இது, 7.06.2017 தேதியிட்டு வெளிவந்த துக்ளக் பத்திரிகையின் அட்டைப் புகைப்படம் ஆகும். அதில், ஒரு கார்ட்டூனும் இடம்பெற்றுள்ளது. அந்த கார்ட்டூனில், எறும்புகள் […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் தனி நாடு கோரிக்கை எழுப்பிய சீக்கியர்கள் என்று பரவும் வதந்தி!

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் போது தனிநாடு கேட்டு சீக்கியர்கள் பேனர் பிடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ‘வீ வாண்ட் காலிஸ்தான்’ என்று ஆங்கிலத்தில் எழுதிய காகிதத்தை சீக்கியர் பிடித்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவசாயிகள் போராட்டமாம்… காலிஸ்தான் பிரிவினைவாதிகள்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை Karthikeyan S […]

Continue Reading

ஊட்டி மலை ரயில் சர்ச்சை; நிர்மலா சீதாராமன் பற்றி பரவும் போலிச் செய்தி!

‘’நிர்மலா சீதாராமன் ஊட்டி மலை ரயில் டிக்கெட் விலை உயர்வு பற்றி விமர்சனம்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: மேற்கண்ட செய்தியை நமது வாசகர்கள் சிலர், வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். எனவே, இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் வேறு யாரேனும் பகிர்ந்துள்ளனரா என்ற விவரம் தேடினோம். அப்போது, ஃபேஸ்புக் வாசகர்கள் […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் ஆசாதி கோஷமிட்ட மாணவர்கள்- உண்மை என்ன?

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் மாணவர்கள் ஆசாதி கோஷத்துடன் பங்கேற்றார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive செங்கொடியுடன் மாணவர்கள் ஊர்வலமாக ஆசாதி கோஷம் எழுப்பியபடி செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருடனுக்கு #தேள் கொட்டுன மாதிரி இருக்குமே😜😝 விவசாயிகளுக்கு ஆதரவாக மானவர்கள் மீண்டும் ஆஷாதி முழக்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Allah […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்திற்கு நடுவே இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியதாக பரவும் பழைய படம்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு நடுவே இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய, அவர்களுக்கு பின்னர் பஞ்சாப் சீக்கியர்கள் அமைதியாக நின்று பார்க்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நெனச்சன்டா ! தில்லி விவசாயி போராட்டதுல இப்படி ஒரு போட்டோ வரும்னு ! அமைதி மார்க்க ஸ்கெட்ச் நாட்டுக்கு […]

Continue Reading

Rapid FactCheck: ராமநாதபுரத்தில் தலித் சிறுவர்கள் சித்ரவதையா?- பழைய புகைப்படம்!

‘’ராமநாதபுரத்தில் பிஸ்கட் திருடியதால் தலித் சிறுவர்களை கட்டிப் போட்டு மொட்டையடித்து சித்ரவதை செய்த சாதி வெறியர்கள்,’’ என்ற தலைப்பில் வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  நமது வாசகர்கள் சிலர், மேற்கண்ட தகவலை வாட்ஸ்ஆப் வழியே, நம்மிடம் அனுப்பி சந்தேகம் கேட்டனர். இதனை ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில், ராமநாதபுரத்தில் நிகழ்ந்த சாதிக் கொடுமை எனக் கூறி பலரும் ஷேர் செய்வதாகவும், இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு […]

Continue Reading

ஆன்மீக ஜனதா கட்சி என்ற பெயர் கேட்டு ரஜினி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளாரா?

‘’ரஜினிகாந்த், தேர்தல் ஆணையத்திடம், ஆன்மீக ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க விண்ணப்பித்துள்ளார்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link  இதில், ரஜினி பற்றி நியூஸ் 7 தமிழ் ஊடகம் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்து, கவுண்டமணி, செந்தில் சினிமா காட்சி ஒன்றையும் இணைத்து, பதிவிட்டுள்ளனர். […]

Continue Reading

FACT CHECK: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பிரிவினைவாத கோஷம் என்று பரவும் வதந்தி

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர்கள் தனி நாடு கோஷம் எழுப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive காலிஸ்தான் ஜிந்தாபாத் என்றும் இந்தியாவை மிகக் கடுமையாக விமர்சித்தும் சீக்கியர்கள் கோஷம் எழுப்பும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லி விவசாயிகளின் போராட்டம் காலிஸ்தான் போராட்டமாகியது சாயம் வெளுத்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Buvaneswaran Buvanesh என்பவர் 2020 […]

Continue Reading

FACT CHECK: 1236 கி.மீ உயரத்தில் இருந்து குதித்த நபர் என்று பரவும் தகவல் உண்மையா?

விண்ணில் 1236 கி.மீ உயரத்தில் இருந்து குதித்து பூமிக்கு நான்கே நிமிடத்தில் வந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive விண்வெளியில் இருந்து எந்த ஒரு வாகனம் இன்றி பாதுகாப்பு உடை, உபகரணம் மட்டும் பயன்படுத்தி பூமிக்கு வந்த விண்வெளி வீரர் வீடியோ பகிரப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், “பூமியை நோக்கி ஆஸ்திரியா  நாட்டைச்  சேர்ந்த  விண்வெளி […]

Continue Reading

மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதா?

‘’ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது,’’ என்று கூறி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஒரு செய்தி வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தியின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த செய்தியில், ‘’மேட்டுப்பாளையம் – உதகை இடையே 8 மாதங்களுக்குப் பிறகு மலை ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கியது. […]

Continue Reading

முரசொலி மாறனின் ஆலோசகராக அர்ஜூன மூர்த்தி பணிபுரிந்தாரா?

‘’முரசொலி மாறனின் ஆலோசகராக அர்ஜூன மூர்த்தி பணிபுரிந்தார்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த புகைப்படத்தை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி, இதில் முரசொலி மாறனுடன் இருப்பர் யார், என சந்தேகம் கேட்டிருந்தார். மேலும், ஃபேஸ்புக்கில், ‘இதில் இருப்பவர் அர்ஜூன மூர்த்தி,’ என்றும், ‘அவர் முரசொலி மாறனிடம் பணிபுரிந்தார்,’ என்றும் ஃபேஸ்புக்கில் தகவல் பகிர்வதாக, […]

Continue Reading

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றால் ரூ.350 தருவதாகப் பரவும் வதந்தி…

‘’டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றால் ரூ.350 தருகிறார்கள். பணம் தராததால் சண்டையிடும் விவசாயிகள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link இந்த வீடியோவில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் வாக்குவாதம் செய்துகொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இவர்களை ‘’டெல்லி விவசாயி போராட்டத்தில் பங்கேற்றவர்கள்; பேட்டா ரூ.350 தரவில்லை என்பதால் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்,’’ […]

Continue Reading

FACT CHECK: டெல்லி விவசாயிகள் பேரணி வீடியோ என்று பகிரப்படும் மகாராஷ்டிரா வீடியோ!

டெல்லியை மையம் கொண்டுள்ள விவசாயிகள் புயல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive செங்கொடி ஏந்தியபடி ஆயிரக் கணக்கான விவசாயிகள் பேரணியாக செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியை மையம் கொண்டுள்ள விவசாயிகள் புயல். #save_pujabfarmer” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Kavi Arasu என்பவர் 2020 நவம்பர் 30ம் தேதி பகிர்ந்துள்ளார். Kavi Arasu-வைப் […]

Continue Reading

FACT CHECK: கனரா வங்கி முன்பு போராட்டம் நடத்திய பா.ஜ.க என்று பகிரப்படும் வதந்தி!

உத்தரப்பிரதேசத்தில் கனடா அரசைக் கண்டித்து கனரா வங்கி முன்பு பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாம கிண்டலுக்கு சொன்னது உண்மையாவே நடந்துருச்சு😂😂😂😂 உத்திரபிரதேசத்தில் கனடா நாட்டு பிரதமரை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜக ஆர்ப்பாட்டம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

FACT CHECK: அயோத்தி சாலை சந்திப்புகளில் தெய்வீக சின்னம்- புகைப்படம் உண்மையா?

அயோத்தியில் நான்கு சாலை சந்திப்பு பகுதிகளில் தெய்வீக சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு படம் சமூக ஊடகங்களில் பகரப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த படம் அயோத்தியில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாலையின் நடுவே காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள பழங்கால போர்க் கருவிகளின் பிரம்மாண்ட சிலைகள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்திமா நகரில் புதிதாக நாற்சந்தியில் அமைக்கப்பட்ட தெய்வீகமான சின்னம்..! இதே போல் பல ஹிந்து […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பியதாகப் பரவும் வதந்தி!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற சீக்கியர்கள் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர்கள் சிலர் பாகிஸ்தான் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்புகின்றனர்.  இந்த வீடியோவை Saravanan Vetrivel என்பவர் 2020 நவம்பர் 30ம் தேதி வெளியிட்டுள்ளார். Saravanan Vetrivelஐ போல பலரும் […]

Continue Reading

FactCheck: சென்னை பூந்தமல்லியில் புயல் காற்றில் தகரம் பறந்து விழுந்தது என்று பரவும் வீடியா!

‘’சென்னை பூந்தமல்லியில் புயல் காற்றில் பறந்து வந்து விழுந்த தகரம்,’’ எனக் கூறி சமக வலைதளங்களில் பகிரப்படும் வைரல் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 இதில், மழை நேரத்தில் சாலையில் வாகனங்கள் செல்வதையும், அதன் பின் […]

Continue Reading

ரஜினிகாந்த் பற்றி அவரது ரசிகர்கள் ‘புண்டரே’ என்று போஸ்டர் ஒட்டியதாகப் பரவும் வதந்தி

‘’ரஜினிகாந்த் பற்றி புண்டப்ரே புண்டரே எனக் கூறி அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பாக, திருவொற்றியூர் பகுதியில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால், இதில், ‘’புண்டப்ரே புண்டரே‘’, எனக் கூறியுள்ளதால், இதனை வைத்து, ரஜினியையும், அவரது ரசிகர்களையும் கிண்டல் செய்து பலரும் […]

Continue Reading

FACT CHECK: சௌதி அரேபியாவில் யோகா செய்யும் புகைப்படம் உண்மையா?

சௌதி அரேபியாவில் யோகா செய்யும் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமிய பள்ளி மாணவிகள் யோகா செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதற்கு மேல், “சௌதி அரேபியாவில் இதுக்கு பெயர் யோகா.. நம்ம ஊர்ல இதுக்கு பெயர் மதவாதம்..!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்பட பதிவை R M Elango என்பவர் 2020 டிசம்பர் […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் பேரணியில் பங்கேற்க டிராக்டரில் வந்த பெண்கள்- பழைய படம்!

வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தின் படம் என்று 2017ம் ஆண்டு நடந்த ஜாட் போராட்ட படம் பகிரப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பெண்கள் டிராக்டர் ஓட்டி வரும் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும். டெல்லி பேரணிக்கு வந்த ராஜஸ்தானி வீரம் நிறைந்த விவசாய தாய்மார்கள்… ஒரு நல்ல சமுதாயத்தை.. உருவாக்க… ஆதரவு தாரீர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

FactCheck: விவசாயிகள் போராட்டத்தில் டர்பன் அணிந்து இஸ்லாமியர் பங்கேற்றாரா?

விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் போல டர்பன் அணிந்து பங்கேற்ற இஸ்லாமியர் சிக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர் ஒருவரின் தலைப்பாகையை போலீசார் கழற்றி அவரை இழுத்துச் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிளாஸ்டிக் டர்பன் அணிந்து சிக்கியராக முஸ்லிம். விவசாய போராட்டம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Chandru Kundadam என்பவர் 2020 நவம்பர் […]

Continue Reading

FactCheck: டெல்லியை முற்றுகையிட வந்த விவசாயிகள்?- பழைய புகைப்படம்!

டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் பேரணி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியுடன் விவசாயிகள் பிரம்மாண்ட பேரணியாக நடந்து வரும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டுவிட்டரில் மார்க்சிஸ்ட் கட்சி/ மகாராஷ்ட்ரா: விவசாயிகள் தில்லியில் 6 மாதங்களுக்கு தங்கும் முடிவோடு வந்துள்ளனர். இந்திய மக்கள் அவர்களை 9 […]

Continue Reading

FactCheck: உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய முஸ்லீம் எனப் பரவும் வதந்தி!

மார்பளவு தண்ணீரில் தன் உயிரை பயணம் வைத்து குழந்தையை காப்பாற்றிய இஸ்லாமியர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது நிவர் புயல் சமயத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மார்பளவுக்கு செல்லும் வெள்ள நீரில் ஒரு பக்கெட்டில் குழந்தையை வைத்து தலையில் சுமந்து செல்லும் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “மார்பளவு தண்ணீரில் தன் உயிரை பயணம் வைத்து குழந்தையை […]

Continue Reading

2017 ஒக்கி புயல் படங்களை நிவர் புயலுடன் தொடர்புபடுத்தி குழப்பும் நெட்டிசன்கள்!

புயல் வெள்ள பாதிப்புக்குப் பிறகு மிகவும் அசாதாரண சூழலில் பணியாற்றும் ஊழியர்கள் சேவையை ஊடகங்கள் காட்டாமல் மறைத்து விட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மழை நீர் தேங்கி நிற்கும் இடத்தில் மின்சார ஊழியர்கள் மின் கம்பம் நடும் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இது எல்லாம் Tv ல வராது நல்லது பன்றத யாரும் காட்ட […]

Continue Reading

FactCheck: 108 ஆம்புலன்ஸ் உதவி எண் இயங்கவில்லை எனக் கூறி பரவும் வதந்தி!

‘’108 ஆம்புலன்ஸ் உதவி எண் இயங்கவில்லை,’’ எனக் கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இதனை நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு, வாசகர் ஒருவர் அனுப்பி உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived […]

Continue Reading

மாஸ்டர் படம் ஓடிடி.,யில் ரீலிஸ்?- தயாரிப்பாளர் மறுப்பு!

‘’மாஸ்டர் படம் ஓடிடி முறையில் ரிலீஸ் செய்யப்படுகிறது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வரும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இந்த செய்தியை முன்னணி ஊடகங்கள் தொடங்கி தனிநபர் வரையிலும் பலரும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே பகிர்ந்து வருகின்றனர். ஆனால், கடந்த நவம்பர் 27, 28ம் தேதியன்று இது அதிகபட்சமாக டிரெண்டிங்கில் இருந்தது.  […]

Continue Reading

இந்திய வானிலை ஆய்வு மையம் நிவர் புயலின்போது இந்தியில் மட்டுமே ட்வீட் வெளியிட்டதா?

‘’இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியில் நிவர் புயல் தொடர்பான பதிவுகளை வெளியிட்டுள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:   Facebook Claim Link Archived Link நவம்பர் 25, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ இந்திய வானிலை நிலையம், ஏன் தமிழகத்தை தாக்கும் புயலுக்கு, இந்தியில் விளக்கம் அளிக்க வேண்டும்? இந்த புயலை […]

Continue Reading

FACT CHECK: மரடோனாவின் இறுதி ஊர்வலம் என்று கூறி பரவும் 26 ஆண்டுகள் பழைய புகைப்படம்!

கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனாவின் இறுதி ஊர்வலம் என்று கூறி ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாலையின் இரு புறமும் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டிருக்கும் இறுதி ஊர்வலம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மரடோனாவின் இறுதிப்பயணம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Subramanian Santhanam என்பவர் 2020 நவம்பர் 27 […]

Continue Reading