வனிதா விஜயகுமார் 5வது திருமணம் என்றும் பரவும் புகைப்படம் உண்மையா?

நடிகை வனிதா விஜயகுமார் ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை வனிதா விஜயகுமார் – நடன இயக்குநர் ராபர்ட் ஆகியோர் திருமணம் செய்துகொள்வது போன்ற புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தனது மூன்றாவது கணவனை ஐந்தாவது கணவனாக மீண்டும் திருமணம் செய்த நடிகை.. […]

Continue Reading

“வேட்டையன் படம் சரியில்லை என்ற யூடியூப் விமர்சகர்” என்று பரவும் பதிவு உண்மையா?

ரஜினிகாந்தின் வேட்டையன் படம் சரியில்லை என்று யூடியூப் விமர்சகர் ஒருவர் கடுமையாக விமர்சித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook யூடியூப் திரை விமர்சகர் ஒருவர் சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த வேட்டையன் திரைப்படம் சரியாக இல்லை என்று கூறியது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “First half , second half rendumey mmbiruchu pola 😭😭🤣🤣  […]

Continue Reading

காமசூத்ரா புத்தகத்துடன் கவர்ச்சி போஸ் கொடுத்தாரா ஜோதிகா?

‘’காமசூத்ரா புத்தகத்துடன் கவர்ச்சி போஸ் கொடுத்த ஜோதிகா’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவின் தலைப்பில் ‘’பள்ளிக்கூடம் கட்ட நிதி திரட்டிய போது…,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் ஒரு புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. அதில், ஜோதிகா கவர்ச்சியான உடை அணிந்துள்ளார்; அவருடன் ஆண் ஒருவர் மேலாடையின்றி நிற்கிறார். இருவரது […]

Continue Reading

தங்கலான் படம் சரியில்லை என்று பணத்தை திரும்பிக் கேட்டு ரசிகர்கள் வாக்குவாதம் செய்தனரா?

தங்கலான் படம் சரியில்லை என்பதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் டிக்கெட் பணத்தை திரும்ப கேட்டதாதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive தந்தி டிவி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “தங்கலான் பார்த்த ரசிகர்கள் ஆத்திரம்.. டிக்கெட்டை திரும்ப கேட்டு வாக்குவாதம். படம் பாதியில் நிறுத்தப்பட்டு பணத்தை திரும்ப வழங்கிய […]

Continue Reading

நடிகர் சிவ கார்த்திகேயனை தாக்கிய தனுஷ் ரசிகர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

நடிகர் தனுஷைப் பற்றி தவறாகப் பேசிய நடிகர் சிவ கார்த்திகேயனை தனுஷ் ரசிகர்கள் தாக்கினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் நடிகர் சிவ கார்த்திகேயனை சிலர் தாக்குவது போன்ற வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தனுஷ் தன்னை வளர்த்து விட வில்லை என கூறிய  நடிகர் சிவகார்த்திகேயன் […]

Continue Reading

‘லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள்’ என்று பரவும் தகவல் உண்மையா?

‘’ லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள்*  இந்த உலகில் மரணத்தை விட உண்மை எதுவுமில்லை.   உலகின் மிக விலையுயர்ந்த பிராண்டட் கார் எனது கேரேஜில் நிறுத்தப்பட்டுள்ளது.   ஆனால், நான் சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டேன்!   […]

Continue Reading

இறக்கைகளுடன் பிறந்த குழந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?

இரண்டு இறக்கைகளுடன் பிறந்த மனித குழந்தை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குழந்தை ஒன்றுக்கு இறகு இருப்பது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் அந்த குழந்தை பறக்கிறது. நிலைத் தகவலில், “இரண்டு இறக்கைகளுடன் பிறந்து பறவை போல குழந்தை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

‘கவுண்டம்பாளையம் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள்’ என்று பரவும் மும்பை புகைப்படம்!

கவுண்டம்பாளையம் திரைப்படம் பார்க்க திரையரங்கம் முன்பு கூடிய ரசிகர்கள் என்று சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு மும்பையில் ரசிகர்கள் அளித்த சிறப்பான வரவேற்பு புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “கவுண்டம்பாளையம் வெளியாக உள்ள திரையரங்கு முன்பு ரசிகர்கள் கூட்டம்.. ரெண்டு வாரத்துக்கு புக்கிங் […]

Continue Reading

நடிகை சரோஜா தேவியின் பேத்தியா கீர்த்தி சுரேஷ்?

நடிகை சரோஜா தேவியின் பேத்திதான் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வ செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை சரோஜாதேவி, நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சுரேஷ் ஆகியோரின் படங்களை ஒன்று சேர்த்து, பாட்டி, அம்மா, பேத்தி என்று குறிப்பிட்டு புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், “தமிழ் சினிமாவின் அன்று முதல் […]

Continue Reading

நடிகர் டேனியல் பாலாஜியின் திருமண காட்சி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் திருமண காட்சி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் டேனியல் பாலாஜியின் பழைய சினிமா ஸ்டில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Daniel Balaji அழகான திருமண காட்சி புகைப்படம் | RIP DANIEL BALAJI” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: பிரபல தமிழ் […]

Continue Reading

சினிமா வாய்ப்பு இல்லாததால் ஆட்டோ ஓட்டும் நடிகர் பரத் என்று பரவும் தகவல் உண்மையா?

நடிகர் பரத், சினிமா வாய்ப்பு இல்லாததால் ஆட்டோ ஓட்டி வருகிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நடிகர் பரத் ஆட்டோ ஓட்டும் திரைப்பட ஸ்டில் ஒன்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சினிமாவி்ல் வாய்ப்பு இல்லாத்ததால் ஆட்டோ ஓடும் நடிகர் “பரத்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: நடிகர் பரத்துக்கு திரைப்பட வாய்ப்பு குறைவுதான்… ஆனால் அவ்வப்போது […]

Continue Reading

‘நடிகர் நம்பியாரின் மகள்தான் டிவி நடிகை ஸ்நேகா’ என்று பரவும் தகவல் உண்மையா?

மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் மகள்தான் பிரபல சீரியல் நடிகை ஸ்நேகா நம்பியார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் எம்.என்.நம்பியார் தன் மகளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் சீரியல் நடிகை ஸ்நேகா நம்பியார் ஆகியோரின் புகைப்படங்கள் ஒன்று சேர்த்து நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், “எத்தனை பேருக்கு தெரியும். அகல்யா, செல்லமே […]

Continue Reading

‘சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழித்துவிடுமா’ என்று நடிகர் சித்தார்த் கேட்டாரா?

‘’சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழித்துவிடுமா’’, என்று நடிகர் சித்தார்த் கேட்டதாக, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: நடிகர் சித்தார்த் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் ரீதியான கருத்துகள் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், […]

Continue Reading

நடிகை சாய் பல்லவிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை…!

‘’ நடிகை சாய் பல்லவி திருமணம் செய்துகொண்டார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட செய்தி தமிழ் மொழி மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இது உண்மையல்ல.  […]

Continue Reading

நடிகர் விஜய் – இயக்குநர் லோகேஷ் மோதல் என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

நடிகர் விஜய்க்கும் இயக்குநர் லோகேஷ்க்கும் மோதல் என்று சமூக ஊடகங்களில் ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சினிமா விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “லோகேஷ் விஜய் மோதல்!? லோகேஸ் இயக்கத்தில் விஜய் திரிஷா இணைந்து நடிக்கும் படம் லியோ. சமீபத்தில் லியோ படப்பிடிப்பின் பொழுது நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷிடம் படத்தில் திரிஷாவுடன் ரொமான்ஸ் […]

Continue Reading

ஜிபி முத்துக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறாரா?

டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவுடன் நடிகை சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக இணைந்து படம் நடிக்க உள்ளதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை சிருஷ்டி டாங்கே, டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “ஜிபி முத்துவுக்கு ஜோடியான சிருஷ்டி டாங்கே – வைரலான புகைப்படம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

மகாபாரதம் 10 பாகங்களாக வரும் என்று ராஜமௌலி அறிவித்தாரா?

மகாபாரதத்தை 10 பாகங்களாக வெளியிட உள்ளதாக ராஜமவுலி அறிவிப்பு வெளியிட்டதால், திராவிடர்கள் கதறி வருகின்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive தினத்தந்தி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “மகாபாரதம் படம் 10 பாகங்களாக வரும். டைரக்டர் ராஜமவுலி தகவல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சும்மா மெரட்ட போறாப்ள 🔥🔥🔥 இனி திரா**யா மவனுங்க கதறல் சத்தம் காதை […]

Continue Reading

‘Worst திராவிட மாடல்’ என்று சிஎஸ்கே ரசிகர் காட்டியதாகப் பரவும் வதந்தி…

‘‘திராவிட மாடல் Worst என்று எழுதிக் காட்டிய சிஎஸ்கே ரசிகர்’’, என சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் […]

Continue Reading

ரசிகர்களுடன் எளிமையாகப் பழகும் அமீர் கான் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘‘ரசிகர்களுடன் எளிமையாகப் பழகும் அமீர் கான்’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட புகைப்படம் பற்றி நாமும் நீண்ட நேரம் தகவல் […]

Continue Reading

நடிகர் சரத்பாபு மறைந்துவிட்டார் என்று வதந்தி பரப்பிய ஊடகங்கள்!

நடிகர் சரத்பாபு மறைந்துவிட்டார் என்று ஊடகங்கள் போட்டிப் போட்டு வதந்தி பரப்பின. இந்த தகவல் தவறானது என்று தெரிந்ததும் ஊடகங்கள் அந்த செய்தியை அகற்றிவிட்டன. ஆனால், நெட்டிசன்கள் அந்த நியூஸ் கார்டுகளை தொடர்ந்து பகிர்ந்து வரவே அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவால் காலமானார் என்று ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்த நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. Ramana Prakash என்ற ஃபேஸ்புக் ஐடி […]

Continue Reading

துணிவை துரத்தி அடித்த விஜய் என்று தந்தி டிவி நியூஸ் கார்டு வெளியிட்டதா?

துணிவை துரத்தி அடித்த விஜய் என்று தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் மற்றும் அஜித் படத்தை வைத்து தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “துணிவை துரத்தி அடித்த விஜய்… பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணி திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. இந்நிலையில் வெளியாகி […]

Continue Reading

சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை புகார் அளித்தாரா?

நடிகர் சிவ கார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை புகார் அளித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஃபேஸ்புக், ட்விட்டரில் நக்கீரன் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், “பிரின்ஸ் பட நடிகை புகார்! பிரின்ஸ் படபிடிப்பு நடக்கும்போது நடிகர் சிவகார்த்திகேயன் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என பிரின்ஸ் […]

Continue Reading

நடிகர் விஜய்யின் வாரிசு பட போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டதா?

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு படத்தின் போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு படத்தின் போஸ்டர் மற்றும் ஓட்டோ என்ற ஆடை நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றாக இருப்பது போன்று பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “முதலெல்லாம் படத்தைத்தான் காப்பி அடிச்சுட்டு இருந்தீங்க… ஆனா […]

Continue Reading

விருது பெறும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தலையில் இருந்த விக் கழன்றதா?

விருது வாங்கிய விழாவில், நடிகர் விஜய் தலையில் வைத்திருந்த விக் கையோடு கழன்று வந்தது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த விருதைக் கழற்றுவது போலவும், அப்போது அவரது தலையில் இருந்து விக் கழன்று, அவர் தலை வழுக்கையாக இருப்பது போன்றும் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை […]

Continue Reading

விமானநிலையத்தில் சிறுநீர் கழித்த ஷாரூக்கான் மகன் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஷாரூக்கான் மகன் ஆர்யான்கான் போதை தலைக்கேறி விமான நிலையத்தில் பொது வெளியில் சிறுநீர் கழித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு வீடியோ மற்றும் பதிவு ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், இளைஞர் ஒருவர் விமானநிலையத்தில் பொது வெளியில் சிறுநீர் கழிக்கிறார். அந்த பதிவில், “ஷாருக்கான் மகன் ஆர்யான்கான் போதை ததலைக்கேறி  பண்ணும் […]

Continue Reading

FACT CHECK: IMDb ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்ததா ஜெய்பீம்?

IMDb ரேட்டிங்கில் தி ஷஷாங் ரிடம்ஷன் என்ற ஹாலிவுட் படத்தை பின்னுக்குத் தள்ளி ஜெய் பீம் முதல் இடத்தை பிடித்தது என்ற செய்தியை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I abplive.com I Archive 2 ஜெய் பீம் படத்தின் சாதனை… ஐஎம்டிபி-யில் முதலிடம் பிடித்தது என்று செய்தி ஒன்று பகிரப்பட்டுள்ளது. அந்த செய்தியை கிளிக் […]

Continue Reading

FACT CHECK: நடிகை சாய் பல்லவி மரணம் என்று அதிர்ச்சி கிளப்பிய யூடியூப் பதிவு!

பிரபல நடிகை சாய் பல்லவி திடீர் மரணம் என்று ஃபேஸ்புக், யூடியூபில் ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “நடிகை சாய் பல்லவி திடீர் மரணத்தால் பெரும் சோகத்தில் தமிழகம் ரசிகர்கள் வேதனை” என்று இணையதள செய்தி ஒன்றின் லிங் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.  Anitha Sampath Followers என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த பதிவை 2021 செப்டம்பர் 28ம் தேதி […]

Continue Reading

FactCheck: நடிகர்கள் ரகுமான், செல்வா மற்றும் ஸ்ரீ இறந்துவிட்டதாகச் செய்தி வெளியிட்டு வாசகர்களை குழப்பிய இணையதளம்!

‘’நடிகர்கள் ரகுமான், செல்வா மற்றும் ஸ்ரீ ஆகியோர் கொரோனா பாதித்து 2021ல் மரணம்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களின் வழியே காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியின் லிங்கை பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியில், 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இறந்த தமிழ் சினிமா பிரபலங்கள் என்று தலைப்பிட்டுள்ளனர்.  Tn365news.com Link  Archived Link  […]

Continue Reading

எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா நெகடிவ் என்று கூறி பரவும் வதந்தி

‘’எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா நெகடிவ்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Lotus News FB Post Link Archived Link உண்மை அறிவோம்: பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 2 வாரத்திற்கும் மேலாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நலம் பற்றி நாளுக்கு நாள் புதுப்புது வதந்திகள் பரவுவது வழக்கமாக உள்ளது.  சில […]

Continue Reading

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இறந்துவிட்டதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘’பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உயிர் பிரிந்தது,’’ என்று கூறி பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இதில், புதிய தலைமுறை ஊடகம் பெயரில் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். இதன்பேரில், எஸ்பி பாலசுப்ரமணியம் உயிரிழந்துவிட்டாரா, எனக் கேட்டு பலரும் நமது வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகம் எழுப்பி […]

Continue Reading

நடிகர் சூர்யா மதம் மாறினாரா?- தவறான செய்தி தலைப்பால் சர்ச்சை

‘’நடிகர் சூர்யா மதம் மாறியது உண்மைதான்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  Tamizhakam.com Link Archived Link  இந்த ஃபேஸ்புக் பதிவில், Tamizhakam என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:நடிகர் சூர்யா, அவரது சகோதரர் கார்த்தி மற்றும் சூர்யாவின் […]

Continue Reading

நடிகர் விவேக்கின் தாயார் இறந்தது எப்போது?

‘’நடிகர் விவேக் தாயார் இன்று இறந்துவிட்டார்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், நடிகர் விவேக் அவரது தாயாருடன் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ ஆழ்ந்த இரங்கல் செய்தி #நடிகர் விவேக் அவர்களின்.. தாயார் S.#மணியம்மாள் (86), இன்று இயற்கை எய்தினார்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

இந்த வீடியோ அமிதாப் பச்சனின் கொரோனா சிகிச்சை தொடர்பானது இல்லை!

‘’இந்த வீடியோ அமிதாப் பச்சனின் கொரோனோ சிகிச்சையின்போது எடுத்தது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ‘’அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் உள்ளிட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமிதாப், மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசுகிறார்,’’ என்று இந்த வீடியோ பற்றி குறிப்பிட்டுள்ளனர். இதனை உண்மை […]

Continue Reading

நிவேதா பெத்துராஜ், நமீதா புகைப்படங்களை வைத்து பகிரப்படும் வதந்தி!

நடிகைகள் நிவேதா பெத்துராஜ், நமீதா போன்றவர்களின் புகைப்படத்தை இணைத்து ‘’பீகாரில் பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை சுட்டுக் கொன்ற பெண் போலீஸ்,’’ என்ற தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதைக் காண நேரிட்டது. இதுபற்றி வாசகர்கள் பலரும் நம்மிடம் முறையிட்டதால் இதன் உண்மைத்தன்மையை தெரிவிக்க வேண்டிய கட்டாயமாகியுள்ளது. தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே நபர் நமீதா புகைப்படத்தை இணைத்து மற்றொரு பதிவையும் வெளியிட்டிருந்தார். அதனையும் இங்கே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.  Facebook Claim Link 1 […]

Continue Reading

பின்னணி பாடகி எஸ்.ஜானகி இறந்துவிட்டதாகப் பரவும் வதந்தி!

‘’பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைந்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வதந்தி ஒன்றை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link பலரும் இது உண்மை என நம்பி தகவல் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ஒவ்வொரு ஆண்டும் பரபரப்பான செய்தி எதுவும் கிடைக்காத பட்சத்தில், பின்னணி பாடகி எஸ்.ஜானகி மரணம், என்று கூறி வதந்தி பரப்புவதை சில சமூக ஊடக பயனாளர்கள் கடமையாகவே செய்து வருகின்றனர். அப்படி பரப்பப்பட்ட […]

Continue Reading

இயக்குனர் மோகனை விமர்சித்த கவுதம் வாசுதேவ் மேனன்- போலிச் செய்தியால் சர்ச்சை

‘’இயக்குனர் மோகனை கவுதம் வாசுதேவ் மேனன் விமர்சித்தார்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், இயக்குனர் மோகன், சமீபத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட குறும்படம் ஒன்றை பற்றி விமர்சித்ததைப் போலவும், அதற்கு கவுதம் பதில் கூறியதாகவும் ஒரு ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர்.  உண்மை அறிவோம்:இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில், சிம்பு, திரிஷா நடிப்பில், […]

Continue Reading

நடிகை கவுசல்யா மற்றும் நடிகர் முத்துக்காளை புகைப்படத்தை இணைத்து பகிரப்படும் செய்தியால் குழப்பம்!

‘’அழகை பார்க்காமல் திருமணம் செய்த நடிகர்கள்,’’ எனும் தலைப்பில் நடிகை கவுசல்யா மற்றும் நடிகர் முத்துக்காளையின் புகைப்படத்தை வைத்து பகிரப்படும் ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். அந்த செய்தியின் தலைப்பில், ‘’பணம்தான் முக்கியம் எ ன்று அழகைக் கூட பார்க்காமல் அசிங்கமான நடிகர்களை திருமணம் செய்த நடிகைகள்,’’ எனக் […]

Continue Reading

இவர்கள் ஒன்றும் மாஸ்டர் பட டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கவில்லை!

‘’மாஸ்டர் பட டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கும் பெண்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் புகைப்பட பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link பெண்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றோடு வரிசையில் நிற்கும் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’விரைவில் வரவுள்ள மாஸ்டர் படத்தின் டிக்கெட் முன்பதிவு செய்ய பெண்கள் கூட்டம் அலைமோதியது,’’ என எழுதியுள்ளனர். இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட […]

Continue Reading

இது ரிஷி கபூர் சாகும் முன்பாக எடுத்த வீடியோ இல்லை!

‘’ரிஷி கபூர் சாகும் முன்பு எடுத்த கடைசி வீடியோ,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு வீடியோவைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதேபோன்ற தகவலை பலரும் வைரலாக ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது.  Facebook Claim Link 1 Archived Link Facebook Claim Link 2 Archived Link உண்மை அறிவோம்: பாலிவுட் நடிகர் ரிஷி […]

Continue Reading

ஜோதிகாவை ஆதரித்து ட்வீட் வெளியிடவில்லை: விஜய் சேதுபதி மறுப்பு

‘’நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஜோதிகாவை ஆதரித்து வெளியிட்ட ட்வீட் பதிவு,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  இதேபோல, விஜய் சேதுபதி பெயரில் வெளியிடப்பட்ட ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை சிலர் ஆதாரமாக இணைத்திருந்தனர். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: நடிகை ஜோதிகா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘’தஞ்சை பெரிய கோயிலை […]

Continue Reading

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏப்ரல் ஃபூல் செய்த விஜய்?- ஃபேஸ்புக் விஷமம்!

‘’முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏப்ரல் ஃபூல் செய்த விஜய்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link விஜய் மக்கள் இயக்கம் நைஜீரியா என்ற ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ‘’நடிகர் விஜய், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கொரோனா வைரஸ்க்கு ரூ.250 கோடி தருகிறேன் என்று சும்மா சொன்னேன். 10 பைசா தரமாட்டேன். ஏப்ரல் […]

Continue Reading

நடிகர் விஜய் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக ரூ.300 கோடி கொடுத்தாரா?

‘’நடிகர் விஜய் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக ரூ.300 கோடி கொடுத்தார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  இந்த பதிவில் நடிகர் விஜய், ‘’கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு ரூ.300 கோடி நிவாரண உதவி செய்துள்ளார். அவரை நாம் முதல்வராக மாற்ற வேண்டும்,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் […]

Continue Reading

அமலா பால் இரண்டாவது திருமணம்?- தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

நடிகை அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டது என்று தமிழ் ஊடகங்கள் போட்டிப் போட்டு செய்தி வெளியிட்டுள்ளன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Article Link Archived Link “ரகசியமாக நடந்த அமலா பாலின் இரண்டாவது திருமணம்: வைரல் புகைப்படம்!” என்று செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த செய்தியை தமிழ் சமயம் 2020 மார்ச் 20 அன்று வெளியிட்டுள்ளது.  Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 தமிழ் […]

Continue Reading

இயக்குனர் சுந்தரராஜன் மரணம் என்று பகிரப்படும் வதந்தியால் பரபரப்பு

‘’இயக்குனர் சுந்தரராஜன் மரணம்,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது. இதன்பேரில் ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே இதுபற்றி சுந்தரராஜன், அவரது மகன் மூலமாக ஃபேஸ்புக்கில் புகைப்படத்துடன் தோன்றி இது […]

Continue Reading

சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரானாரா இயக்குநர் சங்கர்?- நியூஸ் 7 தமிழ் செய்தியால் குழப்பம்

இயக்குநர் சங்கர் சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link 1 Article Link Archived link 2 இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து: சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் இயக்குநர் ஷங்கர்! என்று நியூஸ்7 தமிழ் வெளியிட்ட செய்தி ஒன்று ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. நியூஸ்7 தமிழ் இணையளத்தில் வெளியான செய்தியை News7Tamil […]

Continue Reading

காதல் படத்தில் நடித்த சிறுவன் பற்றி Startamila இணையதளம் சொல்ல மறந்த கதை!

‘’காதல் படத்தில் நடித்த சிறுவனின் தற்போதைய நிலை,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Archived Link 1  Startamila Link Archived Link 2  உண்மை அறிவோம்: மேற்கண்ட செய்தியின் தலைப்பை பார்த்ததும், நமக்கும் இந்த சிறுவன் பற்றிய தகவலை தெரிந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டது உண்மைதான். ஆனால், சம்பந்தப்பட்ட நியூஸ் லிங்கை கிளிக் செய்து படித்து பார்த்தபோது, சப்பென […]

Continue Reading

நடிகர் அஜித் விபத்துக்குள்ளான வீடியோ இதுவா?

‘’நடிகர் அஜித் விபத்துக்குள்ளான வீடியோ,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஒரு வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதே பதிவை மேலும் பலரும் வைரலாக பகிர்வதை காண முடிகிறது.  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 Facebook […]

Continue Reading

நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியை விவகாரத்து செய்தாரா? தவறான செய்தியால் குழப்பம்!

‘’என் மனைவி கர்ப்பமான போது எங்களுக்குள் விவாகரத்து. நீண்ட நாள் ரகசியத்தை போட்டுடைத்த நடிகர் சிவகார்த்திகேயன்,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Archived Link 1 News Link Archived Link 2 இந்த செய்தியின் தலைப்பை பார்த்தால் எதோ நடிகர் சிவகாரத்திகேயனுக்கு விவாகரத்து ஆனதுபோல தோன்றுகிறது. எனவே, இதனை பலரும் உண்மையா, பொய்யா என தெரியாமல், ஒருவித […]

Continue Reading

விஜய்க்குச் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு பற்றி சமயம் தமிழ் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

‘’ரெய்டில் ரூ.65 கோடி பணம் பறிமுதல்,’’ என்ற தலைப்பில் சமயம் தமிழ் இணையதளம் வெளியிட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link 1 Samayam Tamil Link Archived Link 2 உண்மை அறிவோம்: மேற்கண்ட சமயம் தமிழ் ஃபேஸ்புக் பதிவில் ‘’ரூ.65 கோடி பறிமுதல்: விஜய்யை பிடித்து விசாரிக்க காரணம் தெரிஞ்சிடுச்சு,’’ என்ற தலைப்பையும், அதே அவர்களின் இணையதள […]

Continue Reading

நடிகை மஞ்சுளா மரணம்: பழைய செய்தியை புதிதுபோல பகிர்ந்த இணையதளம்!

‘’நடிகை மஞ்சுளா மரணம்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link 1 Mediatimez Link Archived Link 2 இதே செய்தியை மேலும் பலர் பகிர்ந்திருந்ததை காண நேரிட்டது. உண்மை அறிவோம்:நடிகை மஞ்சுளா கடந்த 2013ம் ஆண்டு உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றைத்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர்.  7 ஆண்டுகள் பழைய செய்தியை […]

Continue Reading