‘தேரை இழுத்துத் தெருவில் விட்ட அண்ணாமலை,’ என்று எச்.ராஜா கூறினாரா?

தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார் அண்ணாமலை என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக பாஜக எனும் தேரை அண்ணாமலை முன்னோக்கி இழுத்துவருவார் என டெல்லி தலைமை எதிர்பார்த்தது; ஆனால், அவரோ தேரை […]

Continue Reading

அதிமுக துணையின்றி ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியாது என்று எச்.ராஜா கூறினாரா?

அ.தி.மு.க துணையின்றி பா.ஜ.க-வால் ஒரு இடத்தில் வெல்ல முடியுமா என்று அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோர் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலை Vs ஹெச்.ராஜா. அதிமுக உடனான கூட்டணியை முறிக்க அண்ணாமலைக்கு யார் அதிகாரம் தந்தது? அதிமுக துணையின்றி […]

Continue Reading

நாங்கள் என்ன தேவிடியன் ஸ்டாக்ஸா என்று எச்.ராஜா கேட்டாரா?

‘’நாங்கள் என்ன தேவிடியன் ஸ்டாக்ஸா,’’ என்று எச். ராஜா கேள்வி கேட்டதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Twitter Claim Link I Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட […]

Continue Reading

காம படைத்தலைவர் எச்.ராஜா என போஸ்டர் ஒட்டப்பட்டதா?

பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டரில் காம படைத் தலைவர் என எச்.ராஜாவை குறிப்பிட்டிருந்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா கைது கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டரின் படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், கண்டிகின்றோம்! கண்டிகின்றோம்!! காம படைத்தலைவர் H.ராஜா அவர்களை கைது செய்த தமிழக அரசையும், காவல் துறையையும் […]

Continue Reading

கேரள ஆளுநராக எச்.ராஜா நியமிக்கப்பட்டாரா?

கேரள ஆளுநராக எச்.ராஜா நியமிக்கப்பட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா புகைப்படத்துடன் கூடிய பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “மகிழ்ச்சி, வாழ்த்துகள், கேரள மாநில ஆளுநராக, ஹெச்.ராஜா நியமனம்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Veerappan Veerappan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 20ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல […]

Continue Reading

அண்ணாமலைக்கு பைத்தியம் முற்றிவிட்டது என்று எச்.ராஜா கூறினாரா?

‘’அண்ணாமலைக்கு பைத்தியம் முற்றிவிட்டது – எச்.ராஜா கருத்து,’’ என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் இந்த ஸ்கிரின்ஷாட்டை அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதனை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றிலும் சிலர் உண்மையா பொய்யா என தெரியாமல் பகிர்வதைக் கண்டோம். Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த தகவல் பற்றி ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு […]

Continue Reading

தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் கோமாதாவுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று எச்.ராஜா கூறினாரா?

‘’தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் கோமாதாவுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று எச்.ராஜா குற்றச்சாட்டு,’’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்று பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெறுகிறது. இதையொட்டி நிதி பட்ஜெட், வேளாண் பட்ஜெட் என தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட்டது. 2 பட்ஜெட்களுக்கும் பல்வேறு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்படும் சூழலில், இதில் கோமாதாவுக்கு முக்கியத்துவம் தரவில்லை […]

Continue Reading

அஇஅதிமுக தோல்வி அடையும் என்று எச்.ராஜா கூறினாரா?

‘’அஇஅதிமுக தோல்வி அடையும் என்று எச்.ராஜா சவால்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் இரண்டு விதமான நியூஸ் கார்டுகளைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதேபோல, மற்றொரு நியூஸ் கார்டும் பகிரப்படுகிறது. அதனையும் கீழே இணைத்துள்ளோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், அஇஅதிமுக […]

Continue Reading

Rapid FactCheck: எச்.ராஜா தகுதி என்ன என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கேட்டாரா?

‘’பாஜக தலைவர் பதவி பெற எச்.ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கு என்று பாஜக மாநில நிர்வாகி எஸ்.ஆர்.சேகர் கேள்வி,’’ என ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link நியூஸ்7 தமிழ் லோகோவுடன் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட நியூஸ் கார்டில் ‘’பொன்னாரை விட எச்.ராஜாவை விட அண்ணாமலை மிகச் சிறந்தவர்.பார்ப்பனர் என்பதை தவிர்த்து எச்.ராஜாவுக்கு என்ன தகுதி […]

Continue Reading

FactCheck: நரிக்குறவர்களுக்கு அன்னதானம்; சேகர் பாபுவை எச்.ராஜா கண்டித்தாரா?

‘’சேகர் பாபுவின் செயல் கண்டிக்கத்தக்கது,’’ என்று எச்.ராஜா பேசியதாகக் கூறி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதே தகவலை ஃபேஸ்புக்கிலும் பலர் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:சென்னையை அடுத்த மாமல்லபுரம் […]

Continue Reading

FactCheck: எச்.ராஜா தலைமறைவு என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘’எச்.ராஜா தலைமறைவு,’’ என்று கூறி புதிய தலைமுறை லோகோவுடன் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் ( ) எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்து சமய அறநிலையத் துறை […]

Continue Reading

FactCheck: எச்.ராஜா தனது தந்தையை போன்றவர் என்று சீமான் கூறினாரா?

‘’எச்.ராஜா தனது தந்தையை போன்றவர் என்று சீமான் கருத்து,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதன் பேரில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நியூஸ்கார்டு இரண்டுமே […]

Continue Reading

FACT CHECK: தேர்தலில் ரூ.4 கோடி சம்பாதித்த ஏழை விவசாயி எச்.ராஜா?- பசுமை விகடன் பெயரில் வதந்தி!

தேர்தல் விவசாயத்தின் மூலம் 45 நாட்களில் ரூ.4 கோடியை அறுவடை செய்த காரைக்குடி ஏழை விவசாயி எச்.ராஜா என்று பசுமை விகடன் செய்தி வெளியிட்டதாக நையாண்டி பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா டிராக்டர் ஓட்டுவது போன்ற பசுமை விகடன் இதழ் அட்டைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “குறைவான செலவு நிறைவான இலாபம். தேர்தல் விவசாயத்தின் மூலம் 45 நாட்களில் 4 […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க யானை என்றால் அதன் சாணி அ.தி.மு.க என்று எச்.ராஜா கூறினாரா?

சாணியாக உள்ள அ.தி.மு.க எங்களுடன் சேர்ந்ததால் பிள்ளையார் ஆகியிருக்கிறது என்று பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா புகைப்படத்துடன் தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக யானை என்றால் அதிலிருந்து பிரிந்து வந்த அதிமுக அதன் சாணியே. ஆனால் […]

Continue Reading

FACT CHECK: எச்.ராஜாவின் புகைப்படத்தை எடிட் செய்து பரப்பும் விஷமிகள்!

“நான் சாகலாம் என்று இருக்கிறேன்” என்றும் “தீக்குளிக்கப் போகிறேன்” என்றும் எச்.ராஜா பதாகை பிடித்ததாக சில படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா பதாகை ஒன்றைப் பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “நான் சாகலாம் என்று இருக்கிறேன்..” என்று போட்டோஷாப் முறையில் தமிழில் எழுதப்பட்டுள்ளது. இந்த பதிவை ஜீவா லெனின் என்பவர் 2021 ஜூன் 13ம் தேதி பதிவிட்டுள்ளார். ஆயிரக்கணக்கானோர் இதை ஷேர் […]

Continue Reading

FactCheck: பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி விவகாரத்தை ஆதரித்து எச்.ராஜா பேசியதாக பரவும் வதந்தி…

‘’பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் நிகழ்ந்த பாலியல் முறைகேட்டை ஆதரித்துப் பேசிய எச்.ராஜா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  புதிய தலைமுறை லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ்கார்டை, நமது வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.  இதன்பேரில், நாம் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை […]

Continue Reading

FactCheck: பிராமணர் தவிர மற்றவர்களின் ஓட்டு தேவையில்லை என்று எச்.ராஜா பேசியதாகப் பரவும் வதந்தி…

‘’பிராமணர் தவிர மற்றவர்களின் ஓட்டு தேவையில்லை – எச்.ராஜா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: […]

Continue Reading

FACT CHECK: வெறிபிடிக்காமல் இருக்க தடுப்பூசி போட்டேன் என்று எச்.ராஜா கூறியதாக பரவும் போலி ட்வீட்!

வெறி பிடிக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்டுக்கொண்டேன் என்று எச்.ராஜா ட்வீட் பதிவு வெளியிட்டதாக பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்துடன் கூடிய எச்.ராஜா வெளியிட்ட ட்வீட் பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “வெறி பிடிக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்டுக்கொண்டேன்” என்று இருந்தது. இந்த பதிவை சொம்புதூக்கி டவுசர்பாய்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 மார்ச் 9 அன்று […]

Continue Reading

FACT CHECK: பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டு வண்டியில் செல்லுங்கள்… எச்.ராஜா பெயரில் வதந்தி!

பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டு வண்டியில் செல்லுங்கள் என்றும், பெட்ரோல் விலையைக் குறைத்து வாக்கு வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று எச்.ராஜா கூறியதாக இரண்டு நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டுகள் இரண்டு பகிரப்பட்டுள்ளன. அதில், “பெட்ரோல் விலையை குறைத்து வாக்கு வாங்க […]

Continue Reading

FactCheck: பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் எச்.ராஜா பேசினாரா?

‘’பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசிய எச்.ராஜா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link 1 Archived Link 2 இதில், எச்ச ராஜா திமிர் பேச்சு என்று கூறி நியூஸ்18 தமிழ்நாடு பெயரில் வெளியான வீடியோ காட்சியை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’பள்ளனும், பறையனும் கோயிலுக்குள் நுழையக் கூடாது. அப்படி நடந்தால், சூத்திரன் […]

Continue Reading

FACT CHECK: ஊழல் ராணிக்கு மணிமண்டபம் தேவையா என்று எச்.ராஜா கேட்டாரா?

ஊழல் ராணிக்கு மக்கள் பணத்தில் மணி மண்டபமா, அதை பிரதமர் திறந்து வைக்க வேண்டுமா என்று எச்.ராஜா கேள்வி எழுப்பியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிடும் நியூஸ் கார்டு போன்று ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஊழல் ராணிக்கு மக்கள் பணத்தில் மணி மண்டபமா? அதனை […]

Continue Reading

FactCheck: கேஜிஎஃப் நடிகர் யாஷ் பாஜகவை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தாரா?- முழு விவரம் இதோ!

‘’கேஜிஎஃப் நடிகர் யாஷ், பாஜகவை ஆதரித்து பிரசாரம் செய்தவர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 பாஜக ஆதரவாளர்கள் மட்டுமின்றி, பாஜக எதிர்ப்பாளர்கள் என்ற பாரபட்சம் இன்றி இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து […]

Continue Reading

FactCheck: முதல்வர் பதவிக்கு தயார் என்று எச்.ராஜா பேசியதாகப் பரவும் வதந்தி!

‘’முதல்வர் பதவிக்கு தயார் – எச்.ராஜா,’’ என்று எச்.ராஜா பேசியதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், எச்.ராஜா பெயரை குறிப்பிட்டு ஐபிசி தமிழ் ஊடகம் வெளியிட்டதைப் போன்ற ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:தமிழ்நாட்டில் தற்போது சட்டமன்ற தேர்தல் நேரம் […]

Continue Reading

FACT CHECK: இந்துக்கள் தமது நாய்களை பாதுகாத்திட வேண்டும் என்று எச்.ராஜா கூறினாரா?

மார்கழி மாதம் இந்துக்கள் தங்கள் நாய்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாக பரவும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “மார்கழி மாதம் இந்துக்கள் தங்களது தெரு நாய்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். மாற்று மத தெருவில் உள்ள தெருநாய்கள் மதமாற்றம் செய்யக்கூடும் […]

Continue Reading

FACT CHECK: மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று எச்.ராஜா கூறினாரா?

மாமிசம் சாப்பிடுபவர்கள் வாக்கு பாரதிய ஜனதா கட்சிக்குத் தேவையில்லை என்று எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா படத்துடன் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நவம்பர் 17, 2020 அன்று வெளியிட்ட நியூஸ் கார்டு என்று ஒன்றை ஷேர் செய்துள்ளனர். அதில், “விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு! மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவுக்கு […]

Continue Reading

தீபாவளி தினத்தில் இறைச்சி சாப்பிடுவோர் இந்து அல்ல என்று எச்.ராஜா சொன்னாரா?

‘’தீபாவளி அன்று மாமிசம் சாப்பிடுவோர் ஹிந்துக்கள் அல்ல என்று எச்.ராஜா விமர்சனம்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  மேற்கண்ட தகவலை நமது வாசகர் ஒருவர், வாட்ஸ்ஆப் மூலமாக, அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் இதனை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என தேடினோம். அப்போது, பலரும் இதனை பகிர்ந்து வரும் விவரம் கிடைத்தது.  Facebook Claim Link 1 […]

Continue Reading

FactCheck: எச்.ராஜா மற்றும் எல்.முருகனின் ‘கை’ எடிட் செய்யப்பட்டதா?

‘’பசும்பொன்னில் எச்.ராஜா கையெடுத்து கும்பிடவில்லை, எல்.முருகனின் கையை எடிட் செய்து, எச்.ராஜா போல அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றுகின்றனர்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Screenshot: FB Post for reference Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link […]

Continue Reading

FACT CHECK: எச்.ராஜாவை தமிழ்நாடு பிராமணர் சங்கம் பாராட்டியதாக பரவும் வதந்தி!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தாமல் குலப் பெருமை காத்த எச்.ராஜா என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் பாராட்டியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜா மட்டும் கைகூப்பி மரியாதை செலுத்தாமல் உள்ளார். அதன் கீழ், […]

Continue Reading

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, எச்.ராஜாவை மாமா என்று கூறினாரா?

‘’எச். ராஜாவை மாமா என்றுதான் அழைப்பேன் – அண்ணாமலை,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே தகவலை பலரும் உண்மை போல பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:  கர்நாடகாவைச் சேர்ந்த அண்ணாமலை என்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, ஆகஸ்ட் 25, 2020 அன்று பாஜகவில் இணைந்தார்.  இந்நிலையில், அவரை பற்றி விமர்சித்து […]

Continue Reading

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ பற்றி பரவும் போலி நியூஸ் கார்டு!

‘’தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, எச்.ராஜாவுக்கு ஆதரவாகப் பேசினார்,’’ என்று கூறி பகிரப்படும் நியூஸ் கார்டின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், அமைச்சர் கடம்பூர் ராஜூ பற்றி புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டதைப் போன்ற நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’எச்.ராஜாவை தவிர எந்த மதத்தை யார் புண்படுத்தினாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது – அமைச்சர் கடம்பூர் ராஜூ,’’ என்று […]

Continue Reading

கூவம் ஆற்றங்கரையில் சிலை வைக்கும்படி எச்.ராஜா கேட்டாரா?

‘’கூவம் ஆற்றங்கரையில் சிலை வைக்கும்படி எச்.ராஜா கேட்டார்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், எச்.ராஜா பெயரில் வெளியான ட்வீட் ஒன்றை இணைத்துள்ளனர். அதில், ‘’சீனாவுடன் போர் நடந்து, நான் பலியானால், எனக்கு கூவம் ஆற்றங்கரையில் எனக்கு சிலை வைப்பீர்களா?,’’ என்று எச்.ராஜா கேட்டதாகவும், அதற்கு மற்றொருவர் ‘’நீ எங்க பலி ஆவ? […]

Continue Reading