ஸ்டாலின் அணிந்த கூலிங் ஜாக்கெட் விலை ரூ. 17 கோடி என்று பிடிஆர் கூறினாரா?

துபாய் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை ரூ.17 கோடி என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கூலிங் ஜாக்கெட் 17 கோடி. துபாய் […]

Continue Reading

அரசுப் பேருந்துகள் நிற்கும் ஓட்டல்கள் சைவமா, அசைவமா? தமிழ்நாடு அரசு கூறியது என்ன?

‘’சைவ ஓட்டல்களில் மட்டுமே அரசுப் பேருந்துகள் நிற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிடவில்லை. ஊடகங்கள் வதந்தி பரப்புகின்றன,’’ என்று குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்கள் பகிரும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் (SETC) சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் உணவு இடைவெளியின்போது சாலையோர ஓட்டல்களில் நின்று செல்வது வழக்கம். இதற்காக, […]

Continue Reading

தி.மு.க-வில் இருந்து கனிமொழி விலக உள்ளதாக நியூஸ் 7 செய்தி வெளியிட்டதா?

திமுக-வில் இருந்து கனிமொழி விலக உள்ளதாக நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கனிமொழி மற்றும் மு.க.ஸ்டாலின் புகைப்படங்களுடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கனிமொழி திமுகவில் இருந்து விலகல்? திமுகவில் அதிகரித்து வரும் பாலியல் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக கட்சியில் இருந்து […]

Continue Reading

கே.என்.நேரு தரையில் அமர்ந்த படம் போலியானதா?

பங்காரு அடிகளார் முன்பாக, அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் முன்னிலையில் தமிழக அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தின் மீது ஃபேக் என்று குறிப்பிட்டும், அமைச்சர் சோஃபாவில் அமர்ந்திருப்பது போல உள்ள படத்தின் மீது ஒரிஜினல் என்றும் குறிப்பிட்டு புகைப்பட பதிவு […]

Continue Reading

அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று தி.மு.க எம்.பி கூறினாரா?

கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று தி.மு.க எம்.பி. செந்தில்குமார் கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க எம்.பி. செந்தில் குமார் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைச் சேர்த்து தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கே.என்.நேரு பதவி விலக வேண்டும். சுய மரியாதை இல்லாமல் […]

Continue Reading

கொலுசு கொடுத்ததால் மின்சார கட்டணத்தை உயர்த்தப் போகிறேன் என்று செந்தில் பாலாஜி கூறினாரா?

உள்ளாட்சித் தேர்தலின் போது மக்களுக்குக் கொலுசு கொடுத்ததால் மின்சார கட்டணத்தை உயர்த்தப்போகிறேன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் செந்தில் பாலாஜி புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொலுசு கொடுத்ததால் மின்சாரம் விலையேற்றம். கோவை மாநகராட்சி தேர்தலின் போது மக்களுக்கு […]

Continue Reading

தேர்தலில் தோற்றால் நாடு முழுவதும் தீ வைப்பேன் என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா?

‘’உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் தோற்றால், இந்தியா முழுவதும் தீ வைத்துக் கொளுத்துவேன் என்று யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, கடந்த 2019ம் ஆண்டு முதலே இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி ஷேர் […]

Continue Reading

உள்ளாட்சித் தேர்தல்: தி.மு.க 60 இடங்களில் டெபாசிட் இழந்தது என்று பரவும் வதந்தி!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 60 வார்டுகளில் டெபாசிட் இழந்தது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின், உதய சூரியன் சின்னத்துடன் கூடிய ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆளும் திமுக 60 இடங்களில் டெபாசிட் இழந்தது. பெரும்பாலான இடங்களில் பாஜக வேட்பாளர்களிடம் டெபாசிட் இழந்தது திமுக” […]

Continue Reading

பாஜக உள்ளாட்சித் தேர்தல் வாக்குறுதி என்று கூறி பகிரப்படும் வதந்தி…

‘’பூர்வஜோன் கீ விராசாத் திட்டத்தின் கீழ் மூதாதையரின் தொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு கடன் – பாஜக உள்ளாட்சித் தேர்தல் வாக்குறுதி,’’ என்று கூறி பகிரப்படும் போஸ்டர் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இந்த போஸ்டரை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதை கண்டோம். Facebook Claim […]

Continue Reading

நீட் தேர்வை கண்டித்து தற்கொலை செய்துகொள்வேன் என்றாரா மு.க.ஸ்டாலின்?

‘’நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்துகொள்வேன்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நியூஸ் கார்டை பார்த்தாலே அது எடிட் செய்யப்பட்டு, ‘’தற்கொலை’’ என்ற வார்த்தையை புதியதாக சேர்த்துள்ளனர் என்று தெரிகிறது. பார்க்கும்போதே போலி என்று தெரியும் இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி கேலி […]

Continue Reading

கூட்டணிக் கட்சிகளால் எந்த பயனும் இல்லை என்று துரைமுருகன் கூறினாரா?

கூட்டணிக் கட்சிகளால் எந்த பயனும் இல்லை, அவைகளுக்கு ஒதுக்கிய அனைத்து வார்டுகளுமே வீண்தான் என்று திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கூறியதாக நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் துரைமுருகன் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கூட்டணி கட்சிகளால் எந்த பயனும் இல்லை. கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த […]

Continue Reading

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக பரவும் வதந்தி!

உள்ளாட்சித் தேர்தலில் திமுக பின்னடைவைச் சந்திக்கும் என்று லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உள்ளாட்சி தேர்தலில் திமுக பின்னடைவை சந்திக்கும். 2022 பிப்ரவரி 19ஆம் தேதி நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க மிகவும் பின்னடைவை சந்திக்க […]

Continue Reading

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை; துரைமுருகன் அலட்டல் பேச்சு உண்மையா?

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தேர்தல் வாக்குறிதிகளை நிறைவேற்ற முடியாமல் போகிற போது மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆட்சியை பிடித்த பிறகு வாக்குறிதிகளை நிறைவேற்ற […]

Continue Reading

பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம் நிறுத்தப்படும் என்றாரா அமைச்சர் ராஜ கண்ணப்பன்?

‘’நிதிநிலை பற்றாக்குறையால் விரைவில் அரசு பேருந்தில் பெண்கள் பயணிக்கும் இலவச திட்டம் நிறுத்தப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு,’’ என குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, திமுக ஆட்சி அமைந்ததும், நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலமாக, படிக்க மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் பயன்பெறுவர் என […]

Continue Reading

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு பரோல்; திமுக மீது ஈவிகேஎஸ் இளங்கோவன் பாய்ச்சலா?

‘’ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு திமுக அரசு அடிக்கடி பரோல் தருவதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக்கில் இதனை பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link  உண்மை அறிவோம்:  தமிழ்நாட்டில் தற்போது […]

Continue Reading

ஸ்டாலின் டீ குடித்ததால் கடையை மூடிய உரிமையாளர் என்று பரவும் வதந்தி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டீ குடித்ததால் கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக மூடிய டீ கடை உரிமையாளர் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் டீ குடிக்கும் புகைப்படத்துடன் கூடிய ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில் “ஸ்டாலின் டீ குடித்ததில் இருந்து கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தும் சமூக நீதி அமைப்பில் சேர முடியாது என்று மம்தா பானர்ஜி கூறினாரா?

ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி அமைப்பில் சேர வேண்டிய அவசியமில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மம்தா பானர்ஜி புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலினுக்கு மம்தா பேனர்ஜி பதிலடி. ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி அமைப்பில் சேர […]

Continue Reading

பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி சாத்தியமில்லை என்று பழனிவேல் தியாகராஜன் கூறினாரா?

‘’பெண்களுக்கு மாதம் ரூ.1000 சாத்தியமில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு முழுக்க குடும்ப அட்டை வைத்துள்ள பெண் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது அறிவிப்பு வெளியிட்டிருந்தார். திமுக.,வின் […]

Continue Reading

ஸ்டாலின் பிரதமர் ஆன பிறகு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிப்போம் என்று கே.என்.நேரு கூறினாரா?

மு.க.ஸ்டாலின் இந்தியப் பிரதமர் ஆன பிறகு வேண்டுமானால் சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அமைச்சர் சர்ச்சை கருத்து. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இது சரியான தருணம் அல்ல. […]

Continue Reading

தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

சமூக நீதியை காக்க தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக, ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு தமிழ்நாடு போன்ற மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், மத்திய அரசு இதனை கண்டும் காணாதது போல செயல்படுவதாக, கல்வி ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். […]

Continue Reading

பாஜக.,வின் மத அரசியல்தான் சரி என்று அண்ணாமலை கூறினாரா?

‘’பாஜக மத அரசியல்தான் சரியான பாதை,’’ என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: மேற்கண்ட நியூஸ்கார்டை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கிலும் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Linkஉண்மை அறிவோம்:கிறிஸ்தவ பள்ளியில் படித்த […]

Continue Reading

மாணவி தற்கொலை; பாஜக நடத்தும் போராட்டம் நியாயமானது என்று ஜெகத்ரட்சகன் கூறினாரா?

மத மாற்றம் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்று பாஜக முன்னெடுத்த போராட்டம் நியாயமானது என்று திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “போராட்டம் நியாயமானதே. கட்டாய மதமாற்றத்தால் பலியான மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு […]

Continue Reading

கூட்டுறவு வங்கிக் கடன் நகைகள் ஏலம் விடப்படும் என்று ஐ.பெரியசாமி கூறினாரா?

கூட்டுறவு வங்கிக் கடன் நகைகள் ஏலம் விடப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் இதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கூட்டுறவு வங்கிக்கடன் நகைகள் ஏலம். கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாதவர்களின் நகைகள் விரைவில் ஏலம் விடப்படும். தமிழக முதல்வரின் […]

Continue Reading

பொங்கல் பரிசுத் தொகுப்பு; தமிழ்நாட்டு மக்களை மு.க.ஸ்டாலின் விமர்சித்தாரா?

‘’இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களை விமர்சித்த மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டனர். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது ஃபேஸ்புக்கில் இதனை பலரும் உண்மை என்று நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link […]

Continue Reading

விவசாய, கல்விக் கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்று ஸ்டாலின் கூறினாரா?

கல்விக் கடன், விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கூறினோம். அதைத் தள்ளுபடி செய்வது சாத்தியமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கல்விக் கடன், விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்வதாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக […]

Continue Reading

குடியரசு தின அலங்கார ஊர்தியில் பெரியார் சிலை; தமிழ்நாடு அரசை கி.வீரமணி கண்டித்தாரா?

குடியரசு தின அலங்கார ஊர்தியில் பெரியார் சிலை வைக்கப்பட்டதற்கு கி.வீரமணி கண்டனம் என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் விவரம் தேடியபோது பலரும் ஃபேஸ்புக்கில் இந்த செய்தியை பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்திய குடியரசு […]

Continue Reading

திமுக.,வினர் இனி தினத்தந்தி படிக்க வேண்டாம் என்று பகிரப்படும் போலி நியூஸ் கார்டு…

‘’திமுக.,வினர் யாரும் இனி தினத்தந்தி வாங்க தேவையில்லை என்று தினத்தந்தி நிறுவனர் அதிரடி அறிவிப்பு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி வைத்திருந்தார். இதனையே பலரும் உண்மை போல, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பகிர்வதையும் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் நாளிதழ்களில் முக்கியமானது […]

Continue Reading

குடியரசு தின அணிவகுப்பில் கருணாநிதி சிலை நீக்கம்; மு.க.ஸ்டாலின் விளக்கம் கூறியதாகப் பரவும் வதந்தி…

‘’குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த கருணாநிதி சிலை நீக்கப்பட்டது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம்,’’ எனக் குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பாலிமர் நியூஸ் லோகோவுடன் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் உண்மையா எனக் கேட்டு சந்தேகம் எழுப்பியிருந்தார். இந்த செய்தியை ஃபேஸ்புக்கிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை […]

Continue Reading

மக்களுக்கு நன்றியே இல்லை என்று அமைச்சர் சக்கரபாணி கூறினாரா?

பொங்கல் பரிசை முதல்வரே பார்த்து பார்த்து உருவாக்கினார் ஆனால் மக்களுக்கு நன்றி இல்லை என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று அமைச்சர் சக்கரபாணி புகைப்படத்துடன் கூடிய ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மக்களுக்கு நன்றியே இல்லை. பொங்கல் பரிசை […]

Continue Reading

நல்லாட்சி குறியீட்டில் தமிழ்நாட்டுக்கு 18வது இடம் கிடைத்ததா?

மாநில அரசுகளின் நிர்வாகம் குறித்த தரவரிசைப் பட்டியலான குட் கவர்னன்ஸ் இன்டெக்ஸ் பட்டியலில் தமிழ்நாடு 18வது இடம் பிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அஸ்ஸாம் முதல்வர் ஆகியோர் படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மாநில அரசுகள் நிர்வாகம் குறித்த தரவரிசைப் பட்டியல் ஒன்றை Good Governance Index என்ற […]

Continue Reading

பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினாரா?

பொங்கல் பரிசு ரொக்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த சூழலில், மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம் என்று தமிழ்நாடு அரசின் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பொங்கல் தொகுப்பு – அமைச்சர் விளக்கம். […]

Continue Reading

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வளர்ச்சி பெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 11வது இடத்துக்கு தள்ளப்பட்டதா?

தி.மு.க ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் வளர்ச்சி பெறும் மாநிலங்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 11வது இடத்துக்கு தள்ளப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வெள்ளை அறிக்கை. வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடத்திலிருந்து 11வது இடத்திற்கு தள்ளப்பட்டது” […]

Continue Reading

ஒமிக்ரான்; தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அறிவித்ததா?- தந்தி டிவி பெயரில் வதந்தி…

‘’தமிழ்நாடு அரசு ஒமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி முதல் மார்ச் வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம். FB Claim Link I Archived Link உண்மை அறிவோம்:கொரோனா […]

Continue Reading

தி.மு.க மகளிரணி செயல்படுவதே இல்லை என்று உதயநிதி கூறினாரா?

தி.மு.க மகளிரணி செயல்படுவதே இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை. இளம் பெண்களை இளைஞர் அணியில் சேர்ப்பதில் தவறு எதுவும் இல்லை. மகளிர் அணி செய்ய தவறியதை தான் […]

Continue Reading

தமிழ்நாடு அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது குறைக்கப்பட்டதா?

தமிழ்நாடு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்பட்டது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆகக் குறைப்பு அமல்..! 05-01-2022 முதல் அரசாணை வெளியீடு” என்று இருந்தது. இந்த பதிவை பசும்பொன் தாரா என்ற […]

Continue Reading

FACT CHECK: அரசு பள்ளிக்கூட புத்தகப்பையில் ஸ்டிக்கர் ஒட்டியதா தி.மு.க?

அரசு வழங்கிய பள்ளிக்கூட பேகில் தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டி வழங்கியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive EPS போட்டோவே இருக்கட்டும்.. பெருந்தன்மை காட்டிய முதல்வர்… என சில மாதங்களுக்கு முன்பு வெளியான நியூஸ்கார்டை பயன்படுத்தி பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அதில், புளுகுமூட்டை திமுக என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த படத்துக்கு கீழ் தி.மு.க ஸ்டிக்கர் […]

Continue Reading

FACT CHECK: தமிழகத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டார் என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழ்நாட்டில் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டார் என்றும், தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்றும் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive பேருந்து ஓட்டுநர் ஒருவரை இளைஞர் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விடியா திமுக ஆட்சியில் மிக மோசமான நிலையில் தமிழகத்தின் சட்டம் ஓழுக்கு சீர் […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க ஆட்சியில் கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்ததா?

தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் என்று ஒரு இந்திய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாடு முதலிடம் கடன் வாங்கியதில் Credite goes to whom? கடன், தமிழ்நாடு, திமுக அராஜகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ராம் […]

Continue Reading

FactCheck: மாணவர்கள் காதல் செய்யுங்கள் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாரா?

‘’மாணவர்கள் தினமும் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,’’ என்று ஒரு செய்தி தந்தி டிவி லோகோவுடன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன் பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்வதை கண்டோம். Facebook Claim Link 1 […]

Continue Reading

FACT CHECK: சீனப் போரின் போது தமிழக முதல்வராக அண்ணா இருந்தார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

இந்தோ – சீனப் போரின் போது இந்திய ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது அப்போதைய அண்ணாவின் ஆட்சி என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை வைத்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. சன் நியூஸ் கார்டு பகுதியில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரை! திமுகவுக்கு யாரும் […]

Continue Reading

FACT CHECK: சென்னை நபரை கைது செய்த உ.பி போலீஸ்… எப்போது நடந்தது?

பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறு பேசிய சென்னை நபரை உத்தரப்பிரதேச போலீசார் தமிழ்நாடு வந்து கைது செய்து அழைத்துச் சென்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிரதமர் மோடி குறித்து அவதூறு சென்னை நபரை தட்டி தூக்கிய உத்திர பிரதேச போலீசார்! பிரதமர் மோடி […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க ஆட்சியில் மதுரையில் பெண்களுக்கு தனி பார் திறக்கப்பட்டதா?

தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு என்று தனியாக மது பார் திறக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் மது அருந்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ் வளர்த்த மதுரையில் பெண்களுக்காக தனி பார் அமைத்து விடியல் சாதனை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Balachandar Nagarajan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 […]

Continue Reading

FactCheck: மழை, வெள்ளத்திற்கு திமுக அரசு காரணம் என்று சென்னை மக்கள் கேலி?- எடிட் செய்த வீடியோவால் சர்ச்சை

‘’மழை வெள்ளத்திற்கு திமுக அரசு காரணம் என்று சென்னை மக்கள் கேலி செய்தனர்,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Tweet Link I Archived Link சென்னையை அடுத்த தாம்பரம், திருமலை நகரில் குடியிருப்பு பகுதி முழுக்க, மழை நீர் சூழ்ந்ததால், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். அதுபற்றி சன் நியூஸ் வெளியிட்ட செய்தியில் பேசும் பொதுமக்களில் ஒருவர், ‘’வெள்ளம் பாய்ந்து […]

Continue Reading

FACT CHECK: நிதி உதவிக்காக மத்திய அரசு என்று கூறினாரா மு.க.ஸ்டாலின்?

ஒன்றிய அரசு என்று கூறி வந்த மு.க.ஸ்டாலின், நிதி உதவி பெறுவதற்காக மத்திய அரசு என்று குறிப்பிட்டுள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “நெடுஞ்சாலைத் திட்டம்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!” என்று அச்சு ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின் புகைப்படத்தை யாரோ ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டதை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பதிவிட்டுள்ளனர். செய்தியில் மத்திய […]

Continue Reading

FACT CHECK: அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று வைகோ அறிவித்தாரா?

அரசியலிலிருந்து விலகுகிறேன், மதிமுக-வை கலைக்கிறேன் என்று வைகோ அறிவித்ததாக ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் வரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அரசியலில் இருந்து விலகுகிறேன். மதிமுக கலைக்கப்பட்டு விரைவில் திமுகவுடன் இணைக்கப்படும் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீர் அறிவிப்பு” என்று இருந்தது. இந்த பதிவை Mannai Rafik என்பவர் […]

Continue Reading

FactCheck: மழை நீர் வராமல் தடுக்க பொதுமக்கள் வீட்டின் கேட்களை மூடி வைக்கும்படி மு.க.ஸ்டாலின் கூறினாரா?

‘’மழை நீர் வீட்டிற்குள் வராமல் தடுக்க வீட்டின் கதவுகளை மூடி வையுங்கள்,’’ என்று பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார் என ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, இது பலராலும், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்டவற்றில் பகிரப்படுவதைக் கண்டோம். FB Claim Link […]

Continue Reading

FACT CHECK: வன்னியர்களை தவறாக சித்தரிக்க திமுக பணம் கொடுத்தது என்று ஜெய்பீம் பட இயக்குநர் கூறினாரா?

ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரிக்க தி.மு.க பணம் கொடுத்தது என்று அந்த படத்தின் இயக்குநர் ஞானவேல் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் ராஜா தகவல்! வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுக […]

Continue Reading

FACT CHECK: பேருந்தில் பயணிகளை சந்தித்த மு.க.ஸ்டாலின்?- வைரலாகும் பழைய புகைப்படத்தால் குழப்பம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகுந்த முன்னேற்பாடு செய்துகொண்டு, பஸ் பயணிகளை சந்தித்த படம், என்று சமூக ஊடகங்களில் சிலர் பழைய படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive மு.க.ஸ்டாலின் பஸ்ஸில் பயணிகளுடன் பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆமா..திடீர்னு(?) பஸ்ஸூக்குள்ளே தோரணம் எப்படி வந்துச்சு? எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?.. சென்னையன்ஸ அவ்வளவு பலகீனமாவா இருக்கீங்க..ஏமாறுமளவு?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

FACT CHECK: தனித் தமிழ்த்தேசியம் கேட்டு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சீமான் அறிவித்தாரா?

தனித் தமிழ்த்தேசியம் கேட்டு, டெல்லியில் மிக விரைவில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீமான் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உண்ணாவிரதப் போராட்டம். தனித் தமிழ்தேசியம் கேட்டு, டெல்லியில் மிகவிரைவில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் […]

Continue Reading

FACT CHECK: ‘திருட்டு ரயில் திமுக’ என்று பேனர் பிடித்த ஐபிஎல் ரசிகர்?- உண்மை என்ன?

துபாயில் நடந்த ஐ.பி.எல் இறுதி போட்டியின் போது ரசிகர் ஒருவர் மைதானத்தில் திருட்டு ரயில் திமுக என்று போஸ்டர் பிடித்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் புகைப்பட பதிவு ஒன்றை நம்முடைய சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770)  அனுப்பி, இந்த படம் உண்மையானதுதானா என்று கேள்வி எழுப்பியிருந்தார். விளையாட்டு மைதானத்தில் ரசிகர் ஒருவர் “திருட்டு இரயில் திமுக” என்ற போஸ்டரை பிடித்திருக்கும் புகைப்படத்துடன் […]

Continue Reading