மாடுகளுக்கு மாஸ்க் போடும்படி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாரா?

மாட்டுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாஸ்க் அணிவிக்கும்படி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதாக தந்தி டி.வி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி டிவி நியூஸ் கார்டு போல ஒன்றை வெளியிட்டுள்ளனர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படம், உத்தரப்பிரதேச மாநில வரைபடம், பா.ஜ.க தேர்தல் சின்னம் ஆகியவை இதில் வைக்கப்பட்டுள்ளது. மாட்டுக்கு மாஸ்க் என்று […]

Continue Reading

இந்துக்களை நேபாளத்துக்கு அனுப்ப வேண்டும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்னாரா?

இந்துக்களை நேபாளம், தாய்லாந்துக்கும் இஸ்லாமியர்களை பாகிஸ்தான், வங்கதேசத்துக்கும் அனுப்பிவைக்க வேண்டும் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சிஏஏ விவகாரம்: விஜய் தந்தை பேட்டி. ஹிந்துக்கள் நேபாளம், தாய்லாந்திலும், முஸ்லிம்கள் […]

Continue Reading

டெல்லியில் 40 இஸ்லாமியர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா?

டெல்லி வன்முறையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் 40 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட 16 வயது சிறுமி என்று ஒரு சிறுமியின் படத்தை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: சிறுமி ஒருவரின் படத்தின் மீது போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டுள்ளது. அதில், “டெல்லி வன்முறையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் 40 பேரால் கற்பழிக்கப்பட்டு ஒட்டுத்துணியில்லாமல் சாக்கடையில் வீசப்பட்ட 16 வயதே ஆன என் தேசத்துச் சிறுமி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  […]

Continue Reading

இந்து முன்னணியினர் தாக்கப்பட்டதற்கு எச்.ராஜாதான் காரணம் என்று அர்ஜூன் சம்பத் சொன்னாரா!

கோவையில் இந்து முன்னணியினர் தாக்கப்பட்டதற்கு எச்.ராஜாதான் காரணம் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அர்ஜூன் சம்பத் படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கோவையில் இந்து முன்னணியினர் தாக்கப்பட்டதற்கு எச்.ராஜாதான் காரணம். பலமுறை தமிழக மக்கள் கூறியும் ஏன் எச்.ராஜாவிற்கு மனநல பரிசோதனை செய்யவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

சென்னை துறைமுகத்தில் சிங்கங்கள் நுழைந்ததா? வதந்தியால் பொதுமக்கள் பீதி!

‘’சென்னை துறைமுகத்தில் நுழைந்த 3 சிங்கங்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் சில ஃபேஸ்புக் பதிவுகளை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link உண்மை அறிவோம்: இதுபற்றி வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் ஏற்கனவே தகவல் பகிரப்பட்டதால் பொதுமக்களும் இது உண்மை என நம்பி அச்சம் அடைந்தனர். எனவே, இது உண்மையா, பொய்யா என்ற சந்தேகத்தில் பாலிமர் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் விரிவான செய்தி வெளியிட்டுள்ளன. […]

Continue Reading

மார்த்தாண்டம் பகுதியில் நாய் இறைச்சி விற்றது இவர்களா?

‘’மார்த்தாண்டம் பகுதியில் நாய் இறைச்சி விற்றவர்கள் பிடிபட்டனர்,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்படும் சில புகைப்படங்களை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link கடந்த 2018, ஜனவரி 14ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதனை இன்றளவும் பலர் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்வதை காண முடிகிறது.  உண்மை அறிவோம்:மேற்கண்ட சம்பவம் போல ஏதேனும் உண்மையிலேயே மார்த்தாண்டம் பகுதியில் நிகழ்ந்ததா […]

Continue Reading

மார்வாடிகள் இல்லை என்றால் தமிழர்கள் பிச்சை எடுக்க நேரிடும் என்று ராஜேந்திர பாலாஜி கூறினாரா?

“மார்வாடிகள் மட்டும் இல்லையென்றால் பல தமிழகர்கள் பிச்சை எடுக்கும் நிலை வரும்” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமைச்சர் ராஜேந்திர பாலாஜி படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மார்வாடிகள் மட்டும் இல்லையென்றால் பல தமிழர்கள் பிச்சை எடுக்கும் நிலை வரும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி” […]

Continue Reading

கலவரத்தின் போது சிறுவனை அடிக்கும் போலீஸ்;– இது டெல்லியில் எடுக்கப்பட்ட புகைப்படமா?

சிறுவன் ஒருவனை போலீஸ் தாக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கருப்பு நிற சீருடை அணிந்த நபர் ஒருவர் மிகப்பெரிய தடியால் சிறுவன் ஒருவரைத் தாக்குகிறார். நிலைத் தகவலில், “உன் பிள்ளையை இப்படித்தான் அடிப்பாயா வெறி பிடித்த காக்கி மிருகமே” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Abdul Rahman என்பவர் 2020 பிப்ரவரி 27 அன்று வெளியிட்டுள்ளார். டெல்லி வன்முறை […]

Continue Reading

மோடியின் வாயில் ரத்தம் சொட்டும் அட்டைப் படம் வெளியிட்டதா டைம் இதழ்?

பிரதமர் மோடியின் வாயில் இருந்து ரத்தம் சொட்டும் வகையில் டைம் இதழ் அட்டைப்படம் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டைம் இதழின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடியின் வாயில் கோரைப் பற்கள் நீண்டு இருப்பது போலவும், அவரது வாயில் இருந்து ரத்தம் வடிவது போலவும் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், “டைம்ஸ் இந்தியா பத்திரிகையின் […]

Continue Reading

டெல்லியில் ஒன்று கூடிய தொழிலாளர், விவசாயிகள் புகைப்படமா இது?

டெல்லியில் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக ஒன்று கூடிய விவசாயிகள், தொழிலாளர்களின் படம் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணி புகைப்படங்களை ஒன்று சேர்த்து பதிவிட்டுள்ளனர். அதில், “இன்று டெல்லியில் தொழிலாளர்கள், விவசாயிகள் மோடி அரசே வெளியேறு என முழக்கமிட்ட பேரணி காட்சி. ஊடகங்களில் வெளிவராது தோழர்களே ஷேர் செய்யுங்கள்” என்று போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டுள்ளது. […]

Continue Reading

சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவரை நாய் போல வலை வீசி பிடித்தார்களா?

‘’சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவரை நாய் போல வலை வீசி பிடிக்கும் காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link பிப்ரவரி 23, 2020 அன்று இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. இது உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோவை ஒருமுறை நன்றாக பார்வையிட்டோம். அதன்போது, சில போலீஸ் […]

Continue Reading

போலீசை துப்பாக்கி காட்டி மிரட்டியது ஷாரூக்கா… மிஸ்ராவா? – உண்மை அறிவோம்!

டெல்லி கலவரத்தின்போது போலீசாரை துப்பாக்கி காட்டிய நபரின் பெயர் ஷாரூக் இல்லை என்றும், அவரது உண்மையா பெயர் மிஸ்ரா என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டெல்லியில் போலீசை துப்பாக்கி காட்டி மிரட்டிய குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராளி ஷாரூக் என்ற பதிவின் படம், அனுராக் டி மிஸ்ரா என்ற ஃபேஸ்புக் ஐடி படம் என சில படங்கள் […]

Continue Reading

சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரானாரா இயக்குநர் சங்கர்?- நியூஸ் 7 தமிழ் செய்தியால் குழப்பம்

இயக்குநர் சங்கர் சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link 1 Article Link Archived link 2 இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து: சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் இயக்குநர் ஷங்கர்! என்று நியூஸ்7 தமிழ் வெளியிட்ட செய்தி ஒன்று ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. நியூஸ்7 தமிழ் இணையளத்தில் வெளியான செய்தியை News7Tamil […]

Continue Reading

போலீஸ் முன்னிலையில் கத்தியை காட்டும் நபர்களின் புகைப்படம்; டெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்டதா?

போலீஸ் முன்னிலையில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் கத்தியோடு பயணிக்கும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. டெல்லி கலவரத்தின்போது எடுக்கப்பட்டது என்று பகிரப்படும் இந்த படத்தின் பின்னணியை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link போலீஸ் அதிகாரி ஒருவர் பின்னால் கை கட்டிக்கொண்டு நிற்கிறார். அவருக்கு முன்பாக இருசக்கர வாகனம் ஒன்றில் காவி சட்டை, துண்டு அணிந்த மூன்று பேர் கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் செல்கின்றனர். நிலைத் தகவலில், […]

Continue Reading

கேலிக்கு உள்ளாகும் தலைவர்களில் ஸ்டாலின் முதலிடம் என்று நியூஸ் 18 செய்தி வெளியிட்டதா?

உலக அளவில் கேலிக்கு உள்ளாகும் தலைவர்களில் முதலிடத்தை மு.க.ஸ்டாலின் பிடித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய நியூஸ்18 தமிழ்நாடு நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “முதலிடத்தைப் பிடித்தார் ஸ்டாலின். உலக அளவில் கேலிக்கு உள்ளாகும் தலைவர்களில் முதலிடத்தைப் பிடித்தார் ஸ்டாலின் – கருத்துக்கணிப்பில் தகவல்” என்று உள்ளது. இந்த நியூஸ் […]

Continue Reading

டிரம்ப் கையில் இந்தியா – அமெரிக்காவுக்கு இயேசு தேவை என்ற டி-ஷர்ட்: உண்மை என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இயேசு தேவை என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை காட்டுவது போன்ற படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமெரிக்க அதிபர் டிரம்ப் டி-ஷர்ட் ஒன்றை காட்டுகிறார். அதில் இந்தியா மற்றும் அமெரிக்க தேசியக் கொடிகளுடன், “India & America Needs Jesus” என்று அச்சிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, கிறித்தவ விசுவாச வீடியோக்கள் என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

படுகொலை செய்யப்பட்ட ஜாமியா மாணவி என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

காவி பாசிச கும்பலால் படுகொலை செய்யப்பட்ட ஜாமியா மாணவி என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கும் படத்தையும், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியின் படத்தையும் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், ஜாமிய மாணவியை படுகொலை செய்த காவி இந்துத்துவ ஃபாசிச கும்பல்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Ghouse Basha Arcot Tmmk […]

Continue Reading

குஜராத் குடிசைப்பகுதி என்று பகிரப்படும் படம் உண்மையா?

குஜராத் குடிசைப்பகுதி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு டிரம்ப் வந்ததையொட்டி சாலைகள் அழகுபடுத்தப்பட்ட படத்தையும் குடிசைப் பகுதி படத்தையும் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “திரைக்கு பின்னால் இருப்பதுதான் குஜராத்தின் புதிய இந்தியா” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Tindivanam Sathik என்பவர் 2020 பிப்ரவரி 19 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் […]

Continue Reading

ஜே.என்.யூ மாணவர்களுக்கு வேலை இல்லை என்று ரத்தன் டாடா அறிவித்தாரா?- 4 ஆண்டுகளாக பரவும் வதந்தி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்லைக் கழகத்தில் (ஜே.என்.யூ) படித்த மாணவர்களுக்கு டாடா நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படாது என்று டாடா நிறுவனங்களின் தலைவர் ரத்தன் டாடா அறிவித்ததாக ஒரு பதிவு சில ஆண்டுகளாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 ரத்தன் டாடா படத்துடன் கூடிய புகைப்பட பதிவு ஒன்றை ஆங்கிலத்தில் உருவாக்கியுள்ளனர். அதில், “ரத்தன் […]

Continue Reading

பாம்புக் கடியில் இருந்து காப்பாற்ற உதவும் சித்த வைத்தியக் குறிப்பு நம்பகமானதா?

‘’பாம்புக் கடியில் இருந்து காப்பாற்ற உதவும் சித்த வைத்தியக் குறிப்பு,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இந்த பதிவில் பாம்பு மற்றும் செடி ஒன்றின் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’ஒருவருக்கு பாம்பு கடித்து அவர் இறந்துவிட்டதாக, மருத்துவர் சொன்னால், உடனடியாக ஒரு காதில் எண்ணெய் ஊற்றி மறு காது வழியாக வரவைக்க […]

Continue Reading

திமுக ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் போல தமிழ்நாடு மாறிவிடும் என்று உலக அமைதிக்கான அமைப்பு அறிவித்ததா?

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஐ.நா-வால் பயங்கரவாத நாடாக அறிவிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் போலவே தமிழ்நாடும் மாறும், என உலக அமைதிக்கான அமைப்பு (World Peace Organization) நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிபிசி செய்தி வாசிப்பாளர் ஒருவரின் படத்துடன் பிபிசி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய மாநிலம் […]

Continue Reading

தடுப்பூசி உடல் நலத்துக்கு கேடா?- பகீர் ஃபேஸ்புக் பதிவு

தடுப்பூசிகள் உடல்நலத்திற்கு என்றுமே தீங்கு விளைவிப்பவையாகும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link குழந்தைகளுக்கு தடுப்பூசி, சொட்டு மருந்து அளிக்கும் படத்துடன் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், “தடுப்பூசிகள் உடல் நலத்திற்கு என்றுமே தீங்கு விளைவிப்பவையாகும்…. Vaccines are Injurious to Health ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இந்த பதிவு விழிப்புணர்வுக்கானது… தடுப்பூசிகள் குறித்து எனக்குத் தெரிந்த உண்மைகளை உங்களோடு […]

Continue Reading

வன்னியர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்தாரா?

“ஒடுக்கப்பட்ட அப்பாவி மக்கள் மீது வன்னிய சமூகத்தினர் நடத்தும் தாக்குதல் கண்டனத்துக்குரியது. வன்னியர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்”, என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒடுக்கப்பட்ட அப்பாவி மக்கள் மீது வன்னிய சமூகத்தினர் […]

Continue Reading

நடிகர் அஜித் விபத்துக்குள்ளான வீடியோ இதுவா?

‘’நடிகர் அஜித் விபத்துக்குள்ளான வீடியோ,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஒரு வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதே பதிவை மேலும் பலரும் வைரலாக பகிர்வதை காண முடிகிறது.  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 Facebook […]

Continue Reading

உலகின் பழமையான ராசா மசூதியில் சிவலிங்கம்? – ஃபேஸ்புக் வதந்தி

அரபு நாட்டில் உள்ள உலகின் மிகப் பழமையான ராசா மசூதியில் சிவ லிங்கம் உள்ளது என்று ஒரு படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமிய கட்டிடக்கலையில் உருவாக்கப்பட்ட கட்டிடம் ஒன்றில் நந்திகளுக்கு நடுவே சிவலிங்கம் உள்ளது. நிலைத் தகவலில், “உலகின் மிக பழமையான ராசா மசூதி!அரபு நாட்டில் உள்ளது! இதன் சிறப்பம்சம் என்னவென்றால் சிவலிங்கம் மற்றும் இரண்டு நந்திகள் இதில் பொறிக்கப்பட்டுள்ளதுதான்! ஜூம் […]

Continue Reading

முஸ்லீம்களை குறிவைத்து விற்கப்படும் கேக்: ஃபேஸ்புக் புகைப்பட பதிவு உண்மையா?

‘’முஸ்லீம்களை குறிவைத்து விற்கப்படும் மாத்திரை கலந்த கேக், பிஸ்கட்’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு புகைப்பட பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Abdul Kader என்பவர் இந்த பதிவை கடந்த ஜனவரி 12, 2020 அன்று பகிர்ந்துள்ளார். இதில், முஸ்லீம் மக்களை குறிவைத்து கேக், பிஸ்கட் போன்றவற்றில் மாத்திரை கலந்து விற்கப்படுவதாகக் கூறியுள்ளனர். ஆனால், இது எங்கே விற்கப்படுகிறது, […]

Continue Reading

டிரம்ப் வருவதால் தெரு நாய்கள் கொல்லப்பட்டதா?- அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் ஆயிரக் கணக்கான தெரு நாய்கள் கொல்லப்பட்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link லாரியில் கொல்லப்பட்ட ஏராளமான நாய்கள் உள்ள படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்க அதிபர் வருகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான தெரு நாய்களைக் கொன்று குவிக்கும் குஜராத் அரசு😢😢😢 இதற்கு எந்த பீட்டாவும் (PETA) குரல் கொடுக்காதது ஏன்? […]

Continue Reading

வண்ணாரப்பேட்டையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபர்!- ஃபேஸ்புக் படம் உண்மையா?

வண்ணாரப்பேட்டையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அரை நிர்வாண கோலத்தில் இளைஞர் ஒருவரை போலீசார் இருவர் அழைத்து வருகின்றனர். பின்னணியில் எஸ்டிபிஐ கொடி உள்ளது.  நிலைத் தகவலில், “வண்ணாரப்பேட்டையில் பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்த சல்மான் என்பனை போலிசார் கைது செய்தனர்!” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Suresh Babu என்பவர் 2020 […]

Continue Reading

திருப்பூரில் குழந்தை கடத்தில் ஈடுபட்ட கும்பல் கைது?- பதற்றத்தை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

திருப்பூரில் குழந்தைகள் கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டதாகவும், வட இந்தியாவிலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் குழந்தை கடத்த திருப்பூர் வந்துள்ளதாகவும் கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link கைவிலங்கு போடப்பட்ட இளைஞர்கள் ஐந்து பேர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வைத்து போட்டோ கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ள குழந்தை கடத்தல் கும்பலில்.. 5 பேர் திருப்பூர் பகுதியில் […]

Continue Reading

இந்த சிறுமியை நேற்று முதல் காணவில்லை: பல மாதங்களாக பகிரப்படும் புகைப்படம்!

‘’இலங்கையை சேர்ந்த இந்த சிறுமியை நேற்று முதல் காணவில்லை,’’ என்று கூறி பகிரப்பட்டுள்ள ஒரு ஃபேஸ்புக் பதிவை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஆளப்போறான் தமிழன் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட பதிவின் கமெண்ட் பகுதியிலேயே, இது மிக பழைய மற்றும் தவறான தகவல் […]

Continue Reading

கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாரா பொன் ராதாகிருஷ்ணன்?

பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மறைந்த சங்கராச்சாரியார் முன்னிலையில் பொன் ராதாகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருக்கும் படத்தையும் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பொன் ராதாகிருஷ்ணன் தலையில் கை வைத்து ஆசிர்வதிக்கும் படத்தையும் சேர்த்து பகிர்ந்துள்ளனர். சங்கராச்சாரியாருடன் உள்ள படத்தில், “இந்து […]

Continue Reading

அர்ஜூன் சம்பத் மது அருந்தும் புகைப்படம் உண்மையா?

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், மது அருந்துவது போன்று புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அர்ஜூன் சம்பத் ஒரு அறையில் சிலருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய மேசை மீது மது பாட்டில்கள் உள்ளன. படுக்கையில் அமர்ந்துள்ள ஒருவர் கையில் மது கிளாஸ் உள்ளது. இந்த படத்தை Troll 420 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 பிப்ரவரி […]

Continue Reading

டெல்லியில் 36 இடங்களில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க தோல்வியைத் தழுவியதா?

டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 36 தொகுதிகளில் 2000-ம் வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்திலேயே பா.ஜ.க தோல்வியை தழுவியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமித்ஷா, மோடி, அத்வானி படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இலவசங்களைத் தவிர்த்து, பா.ஜ.கவுக்கு வாக்களித்த டெல்லியின் 40% வாக்காளர்களுக்கு மிக்க நன்றி.  தில்லி: பிஜேபி தோல்வியடைந்த ஓட்டு வித்தியாசம்..  […]

Continue Reading

ஐஎஸ் பயங்கரவாதிகள் எய்ட்ஸ் கிருமியை பரப்புவதாக தமிழக போலீசார் எச்சரிக்கை வெளியிட்டனரா?

தமிழகத்தில் இலவச ரத்தப் பரிசோதனை செய்கிறோம் என்று கூறி எய்ட்ஸ் நோயை ஐ.எஸ் பயங்கரவாதிகள் பரப்பி வருவதாக தமிழக போலீஸ் வெளியிட்ட போன்ற அறிவிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக போலீஸ் லோகோவுடன் ஒரு அறிவிப்பு வாட்ஸ் ஆப்-பில் வைரலாக பரவி வருகிறது. அதில், “Attention. எச்சரிக்கை. அவசரம்… அவசரம்… யாராவது உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நாங்கள் […]

Continue Reading

அகமதாபாத்தில் குடிசையை மறைத்து எழுப்பப்பட்ட சுவர்; புகைப்படம் உண்மையா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி குஜராத்தில் குடிசைப் பகுதிகளை மறைக்க ஏழு அடி சுவர் அமைக்கப்பட்டுள்ளது என்ற தலைப்பில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சுவர் எழுப்பப்படுவதற்கு முன்பு, எழுப்பப்பட்ட பிறகு என்று இரண்டு படங்கள் ஒன்று சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது. சுவர் எழுப்பப்படுவதற்கு முந்தைய படத்தில் சாதா இந்தியா என்றும், சுவர் எழுப்பப்பட்ட படம் டிஜிட்டல் இந்தியா என்றும் […]

Continue Reading

முட்டையைத் திருடிய பா.ஜ.க பிரமுகர்! – ஃபேஸ்புக்கில் பரவும் தந்தி டி.வி நியூஸ் கார்டு உண்மையா?

நாமக்கல்லில் சத்துணவுத் திட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட முட்டையை பா.ஜ.க பிரமுகர் திருடியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நாமக்கலில் இருந்து சத்துணவுத் திட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட முட்டைகளை திருடிய பா.ஜ.க பிரமுகர்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த நியூஸ்கார்டை தந்தி டிவி பிப்ரவரி 13ம் தேதி வெளியிட்டது போல குறிப்பிட்டுள்ளனர். நிலைத் […]

Continue Reading

தொப்புள் கொடி ரத்தம் குழந்தைக்கு செல்வது தடுக்கப்படுகிறதா?

பிறந்த குழந்தைக்கு தொப்புள் கொடி ரத்தம் உடலுக்குள் செல்லாமல் தடுக்கப்படுவதாகவும் இதனால், குழந்தைகளுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் ஒரு போட்டோ கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஹலோ ஆப்பில் பந்த பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். அந்த ஸ்கிரீன் ஷாட்டில், “ஒரு குழந்தை பிறந்த ஒரு மணி நேரம் வரைக்கும் தொப்புள் கொடியை அறுக்காமல் அப்படியே விட்டுவிட்டால் […]

Continue Reading

பகத் சிங் தூக்கிலிடப்பட்ட தினம் பிப்ரவரி 14, 1931 என்று ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி!

பகத் சிங் தூக்கிலிடப்பட்ட நாள் பிப்ரவரி 14, 1931 என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பகத் சிங் படத்துடன் பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், “பிப்ரவரி 14 என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காதலர் தினம் மட்டுமே… நம்முள் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது, மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள் என்று. பிப்ரவரி 14, 1931” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading

கொரோனா வைரஸ் போகர் எழுதிய பாடல் என்று ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி!

கொரோனா வைரஸ் குறித்து போகர் எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கொரோனா வைரஸ் குறித்து கி.மு. 400 நூற்றாண்டில் வாழ்ந்த போகர் சித்தர் பாடல் எழுதியுள்ளார் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது என்று நாளிதழ் ஒன்று வெளியிட்ட நியூஸ் கிளிப் பகிரப்பட்டுள்ளது. அதில், “கொரோனா வைரஸ் குறித்து கி.மு. 400ம் நூற்றாண்டில் போகர் சித்தர் எழுதிய பாடல் […]

Continue Reading

இந்து மதத்திற்கு பாதுகாப்பான கட்சி என்றால் பா.ஜ.க என்று அஜித் கூறினாரா?

இந்து மதத்திற்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது பா.ஜ.க மட்டுமே என்று அஜித் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 2019ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நடிகர் அஜித் படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்து மதத்திற்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது பாஜக மட்டுமே நடிகர் அஜித்” […]

Continue Reading

நெதர்லாந்தில் 5ஜி சோதனையால் 297 குருவிகள் உயிரிழந்தனவா?

நெதர்லாந்தில் 5ஜி நெட்வொர்க் சோதனையில் 297 குருவிகள் உயிரிழந்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 5ஜி சேவை என்பதன் மாதிரி படம், குருவிகள் இறந்து கிடக்கும் படங்களை ஒன்று சேர்த்து பதிவை உருவாக்கியுள்ளனர். அதில், 5ஜி நெட்வொர்க் சோதனையில் நெதர்தலாந்தில் 297 குருவிகள் அதிவேக அலையால் உயிர்விட்டன. நமக்கு தேவை இல்லை 5ஜி. இதன் ரேடியேஷன் மோசமானது. பறவைகளை பாதுகாப்போம். […]

Continue Reading

மோடி அத்வானியை கிண்டல் செய்து பஜனை பாடல் பாடப்பட்டதா?

மோடி, அத்வானி உள்ளிட்டவர்களை கிண்டல் செய்து மலையாளத்தில் பஜனைப் பாடல் ஒன்று பாடப்படுவதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 3 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், மோடி, அத்வானி உள்ளிட்ட பா.ஜ.க-வினை திட்டும், கிண்டல் செய்யும் வகையில் பஜனைப் பாடல் பாடப்படுகிறது.  நிலைத் தகவலில், “தரமான பாடல். அத்வானிக்கு வரதட்சணையாக கிடைத்தது […]

Continue Reading

இடது கையால் மரியாதை செலுத்திய ராகுல்?- பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

தேசியக்கொடிக்கு ராகுல் காந்தி இடது கையால் மரியாதை செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராகுல் காந்தி இடது கையால் மரியாதை செய்யும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “லூசு பப்பு இது இந்தியா. உன் தாய்நாடு இத்தாலி இல்லை. தேசியகொடிக்கு வலது கைய்யால தான் சல்யூட் அடிக்கணும்னு தெரியாத ஒரு முட்டாள்தான் காங் பிரதமர் வேட்பாளர்! […]

Continue Reading

ஜெயலலிதா காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசன் படமா இது?

ஜெயலலிதா காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசன் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜெயலலிதாவின் காலில் ஒருவர்  சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறார். ஜெயலலிதா கையில் உறுப்பினர் கார்டு உள்ளது. காலில் விழுந்தவர் யார் என்று தெரியவில்லை. புகைப்படத்தில் dinamalar.com என்ற வாட்டர் மார்க் தெரிகிறது.  நிலைத் தகவலில், “ஜெயலலிதா காலில் விழுந்து கிடக்கும் திண்டுக்கல் சீனிவாசன்..” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்தாரா பிரதமர் மோடி?

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி விப்லவ் தாக்கூர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் மோடி விழித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மக்களவையில் இருக்கும் பிரதமர் மோடி மற்றும் மாநிலங்களவையில் பேசும் விப்லவ் தாக்கூர் வீடியோ காட்சிகளை ஒன்றிணைத்து 1.14 நிமிடத்துக்கு ஒரே வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.  நிலைத் தகவலில், “பாராளுமன்றத்தில் கேள்விகளுக்கு […]

Continue Reading

சிஏஏவுக்குப் பிறகு பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டதா?

குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்த பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக 79 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே கருத்துக் கணிப்பு வெளியிட்டது என்று ஒரு பதிவ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்தியா டுடே சிஒட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆங்கிலத்தில் “நாட்டின் மனநிலை, மோடி […]

Continue Reading

தற்காலிக டெண்டில் வசிக்கும் குடியரசு முன்னாள் தலைவர் ஃபக்ருதீன் அலி குடும்பம் இதுவா?

முன்னாள் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீனின் குடும்பம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தற்காலிக டெண்ட் முன்பு வயதான ஆண், பெண், ஒரு சிறு குழந்தை இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தவலில், “முன்னாள் குடியரசுத்தலைவர் ஃபக்ருதீனின் குடும்பம் வாழும் நிலையை பாருங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Mohmed Meeran Saleem என்பவர் 2020 பிப்ரவரி 7ம் […]

Continue Reading

கிறிஸ்தவ மத பிரசாரத்தில் பங்கேற்றாரா நடிகர் விஜய்?

நடிகர் விஜய் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் பங்கேற்றார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 வெறும் 7 விநாடி ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். அதில் இந்திய தேசியக் கொடி இருக்கிறது. நடிகர் விஜய் உடன், வெளிநாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் அருகில் இருக்கிறார். பின்னணியில் அமெரிக்க தூதரகங்களில் செயல்படும் அமெரிக்கன் சென்டரின் சின்னமும் உள்ளது. […]

Continue Reading

முதல்வரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தாரா சீமான்? – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆபாசமாக பேசிய வழக்கில் சீமான் மன்னிப்புக் கடிதம் வழங்கினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு ஒன்றை அளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “முதல்வரை ஆபாசமா பேசிய வழக்கில்..மன்னிப்பு கடிதம்.. கொடுத்தார் சீமான்.. மண்டியிட்ட மான தமிழ் பிள்ளை” […]

Continue Reading

ஜேசன் மோமோவா நடித்துள்ள விளம்பர படத்தால் சர்ச்சை: உண்மை அறிவோம்!

ஹாலிவுட் நடிகர் ஜேசன் மோமோவா சமீபத்தில் நடித்துள்ள ஒரு விளம்பர படத்தால் சமூக ஊடகங்களில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஜேசன் இவ்வளவு நாள் பில்டப் கொடுத்து, போலியான கெட்டப்பில் ரசிகர்களை ஏமாற்றி வந்ததாகவும் பலர் அதிருப்தி தெரிவிப்பதை காண முடிகிறது. இதுபற்றிய உண்மை கண்டறியும் சோதனையே இந்த செய்தித் தொகுப்பு. தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ஹாலிவுட் நடிகர் ஜேசன் மோமோவா நடித்துள்ள புதிய விளம்பர படத்தை பகிர்ந்து, […]

Continue Reading