இளம் பெண்ணுடன் ராகுல் காந்தி என்று பரவும் திரைப்பட ஸ்டில்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இளம் பெண் ஒருவருடன் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராகுல் காந்தி போன்று தோற்றம் கொண்ட ஒருவர் பெண் ஒருவரைத் தூக்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த பப்பு ஒரு பாப்பாவ தூக்கிட்டு சுத்துறான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Tn Modi followers Hosur.என்ற […]

Continue Reading

விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது… கீதையை பின்பற்றும்படி நிர்மலா சீதாராமன் அட்வைஸ் செய்தாரா?

விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது எனவே மக்கள் கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்ற கீதை சாரத்தை நினைவில்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

ராஜஸ்தான் போலீஸ்காரர் போலியான காயத்துக்கு கட்டுப் போட்டு வன்முறையைத் தூண்டினாரா?

ராஜஸ்தானில் போலீஸ்காரர் ஒருவர் போலியாகக் காயம் ஏற்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெளிவில்லாத வீடியோ பகிரப்பட்டுள்ளது. போலீஸ்காரர் ஒருவர் கைக்குட்டையை எடுத்து தலையில் கட்டிக்கொள்கிறார். சுற்றிலும் கலவர சூழல் காணப்படுகிறது. துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்கிறது. நிலைத் தகவலில், “ராஜஸ்தானில் சங்கி போலீஸ்காரர் போலியாக காயப்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக […]

Continue Reading

திருமணம் ஒரு பாவச்செயல்; நான் சொல்லித்தான் மோடி அவரது மனைவியை விட்டு பிரிந்தார் என்று மோகன் பகவத் கூறினாரா?

திருமணம் ஒரு பாவச் செயல். எனவே, ஸ்வயம்சேவக்குகள் கண்டிப்பாக திருமண பந்தத்தில் ஈடுபடக்கூடாது என்றும், தன்னுடைய யோசனைப்படி செயல்பட்டுத்தான் பிரதமர் மோடி தன்னுடைய மனைவியை விலக்கினார் என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு […]

Continue Reading

பலுசிஸ்தான் மக்கள் பா.ஜ.க கொடியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனரா?

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மக்கள், இந்தியப் பிரதமர் மோடி தங்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவார் என்று பா.ஜ.க கொடியுடன் கொண்டாட்டம் மேற்கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமிய பெண்கள் பாட்டுப் பாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் ஒருவர் பாஜக கொடியை வைத்துள்ளார். ஒருவர் மோடி முகமூடி அணிந்து வருகிறார். நிலைத் தகவலில், “பாகிஸ்தானில் பாஜக கொடி……. பாகிஸ்தானில் […]

Continue Reading

பத்திரிகையாளர்களைப் பார்த்ததும் ஓ மை காட் என்று மோடி பதறினாரா?

ஊடகவியலாளர்களை பார்த்து பதில் சொல்ல முடியாமல் மோடி ஓ மை காட் என்று அலறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “டென்மார்க்கில் ஷாக் ஆன பிரதமர் மோடி. டென்மார்க்கில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் “ஓ மை காட்” என்று மட்டும் கூறிச் சென்ற […]

Continue Reading

மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்டாரா?

மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்ட மம்தா பானர்ஜி, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தி ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link இது […]

Continue Reading

மோடி, டென்மார்க் பிரதமர் சந்திப்பின்போது அகண்ட பாரதம் ஓவியம் இருந்ததா?

பிரதமர் மோடி, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் சந்திப்பின் போது சுற்றில் பிரிக்கப்படாத (அகண்ட) இந்தியா படம் இருந்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய பிரதமர் மோடி, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் ஆகியோர் சந்தித்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. புகைப்படத்தில் இரண்டு நாட்டு பிரதமர்கள் பின்புறம் பிரிக்கப்படாத பழைய இந்தியாவின் வரைபடம் ஓவியமாக மாட்டப்பட்டிருந்தது. […]

Continue Reading

Rapid Fact Check: வழிபாட்டுக்கு இடையூறாக இருந்ததால் ரயில் நிலையத்தை இஸ்லாமியர்கள் தாக்கினரா?

நமாஸ் செய்ய இடையூறாக இருந்தது என்று கூறி மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் ரயில் நிலையத்தைத் தகர்த்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கலவரக்காரர்கள் ரயில் நிலையத்தை அடித்து உடைக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ரயில் விசில் சத்தம் அவர்களின் முஸ்லிம்கள் நமாஸ் ஓத இடையூறாக இருக்கிறது என்று கூறி மேற்கு வங்காளத்தில் உள்ள *முர்ஷிதாபாத் […]

Continue Reading

குஜராத் மாநிலத்தில் தினசரி 8 மணிநேரம் மின் தடையா?

‘’குஜராத் மாநிலத்தில் தினசரி 8 மணிநேரம் மின் தடை மற்றும் தொழிற்சாலைகள் வாரத்தில் 2 நாள் இயங்க தடை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, பலரும் இந்த மீம் பதிவை உண்மை போல குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் நமாஸ்க்கு இடையூறாக இருந்ததால் ரயில் தண்டவாளத்தை இஸ்லாமியர்கள் பெயர்த்தெடுத்தனரா?

மேற்கு வங்கத்தில் நமாஸ் செய்ய ரயில் சத்தம் இடையூராக இருந்தது என்பதற்காக ரயில் தண்டவாளத்தை இஸ்லாமியர்கள் பெயர்த்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மக்கள் ரயில் தண்டவாளத்தை பெயர்த்தெடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்தில் நவாப்ரோ, மகிசாசூர் என்ற ஊரில் உள்ள மக்கள் ரயில் தண்டவாளத்தையும் பெயர்த்தெடுத்து […]

Continue Reading

உலகின் தலை சிறந்த தலைவர் என மோடியின் தபால் தலையை வெளியிட்டதா துருக்கி?

உலகின் தலை சிறந்த தலைவரின் நினைவாக மோடியின் தபால் தலையைத் துருக்கி வெளியிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய துருக்கி நாட்டு தபால் தலை படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன் “பெருமை மிக்க தருணம் இந்த நேரத்தில் உலகின் தலைசிறந்த தலைவரின் நினைவாக நரேந்திர மோடியின் தபால் தலையைத் துருக்கி வெளியிட்டுள்ளது. […]

Continue Reading

விமானப் பணிப்பெண்ணாக இருந்த ராம்நாத் கோவிந்த் மகளுக்கு மாற்று வேலை ஒதுக்கியதா டாடா நிறுவனம்?

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கிய பிறகுதான் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மகள் ஏர் இந்தியாவில் விமானப் பணிப் பெண் வேலை செய்து வந்த விவரம் தெரியவந்துள்ளது என்றும் அதைத் தொடர்ந்து அவருடைய பணியை டாடா நிறுவனம் மாற்றிவிட்டது என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராம்நாத் கோவில் மற்றும் அவரது மகள் இருக்கும் […]

Continue Reading

அகமதாபாத் குடிசைப்பகுதி துணியால் மறைக்கப்பட்டது என்று பரவும் படம்- உண்மை என்ன?

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவின் அகமதாபாத் நகருக்கு வந்த போது, குடிசைப்பகுதிகள் வெள்ளைத் துணியால் மறைக்கப்பட்டது என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலை நடைபாதை வெள்ளைத் துணியால் மறைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “17 ஸ்டேட்டை ஆளறோம்… யாராவது வந்தா துணியைப் போட்டு மூடறோம்.!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை இ. […]

Continue Reading

வட இந்தியாவில் ‘தலித்’ அரசு ஊழியர் ஜாதி காரணமாக தாக்கப்பட்டாரா?

‘’வட இந்தியாவில் அரசு ஊழியராக இருந்தும் ஜாதி வெறியர்களால் தாக்கப்படும் தலித்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாட்ஸ்ஆப் (+91 9049044263 & +91 9049053770) மூலமாக, நமது வாசகர்கள் பலரும் அனுப்பி, இதுபற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். இதே தகவலை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவின் ஒரு […]

Continue Reading

கூல்டிரிங்ஸில் விஷம் கலந்த பயங்கரவாதிகள்?- வாட்ஸ் ஆப் வீடியோ பற்றிய உண்மை!

புதிதாக தீவிரவாதிகள் கூல் டிரிங்ஸில் விஷம் கலந்துவிட்டதாகவும், இதை குடித்த மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்ததாகவும் ஒரு வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு (+91 9049053770) வீடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். வாட்ஸ் அப்பில் பரவி வரும் அந்த வீடியோ பற்றிய உண்மை விவரம் அறிய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அந்த வீடியோவில் […]

Continue Reading

குண்டர்கள் நிறைந்த கட்சியே பாஜக என்று ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறினாரா?

பா.ஜ.க என்பது ஒரு அரசியல் கட்சி அல்ல, அது ஒரு கட்டமைக்கப்பட்ட குண்டர்களின் கும்பல் என்று ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ புகைப்படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல. அது ஒரு கட்டமைக்கப்பட்ட […]

Continue Reading

நாடாளுமன்றத்தில் அம்பேத்கருக்கு சிலை வைத்தாரா மோடி?

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலையை அமைத்தது பிரதமர் மோடி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டெல்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாராளுமன்றத்தில் கால் மேல் கால் போட்டு அம்பேத்காருக்கு சிலை வையித்தது யாரு..? பிரதமர். […]

Continue Reading

சுதந்திர இந்தியாவின் முதல் இஃப்தார் விருந்து புகைப்படம் இதுவா?

‘’சுதந்திர இந்தியாவின் முதல் இஃப்தார் விருந்து புகைப்படம்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு புகைப்படத்தின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link I Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவின் தலைப்பில், ‘’ அரிய புகைப்படம் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மதிப்புமிகு மவுலானா அப்துல் கலாம் ஆசாத் ஒருங்கிணைத்த முதல் #இப்தார் நிகழ்ச்சி இந்நிகழ்வில் மாண்புமிகு ஜவஹர்லால் நேரு புரட்சியாளர் அம்பேத்கர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து […]

Continue Reading

ம.பி-யில் ராம நவமி ஊர்வலத்தில் கல் வீசிய பெண்கள் கைது என்று பரவும் பழைய வீடியோ!

மத்தியப் பிரதேசத்தில் ராமநவமி ஊர்வலத்தின் மீது கல்வீசிய பெண்களை போலீசார் கைது செய்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் இந்தி பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “ராம நவமி நிகழ்ச்சியில் ஹிந்துக்கள் மீது கல் எறிந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்…இடம்…மத்திய பிரதேசம்…கார்கோன்..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

துப்பாக்கியுடன் வந்த ஜேஎன்யூ ஏபிவிபி மாணவி கைது என்று பரவும் வீடியோ உண்மையா?

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஏபிவிபி அமைப்பைச் சார்ந்த மாணவி துப்பாக்கியுடன் கைது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாணவி போன்று தோற்றமளிக்கும் இளம் பெண்ணின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து போலீசார் துப்பாக்கியை எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “டெல்லி நேரு யூனிவர்சிட்டியில் கைத்துப்பாக்கியுடன் வந்த ABVPஅமைப்பை சேர்ந்த மாணவி படிக்கும் போதே மாணவர்களுக்கு […]

Continue Reading

டீ ரூ.1, பிரியாணி ரூ.8… நாடாளுமன்றத்தில் உணவு விலை என்று பரவும் பழைய தகவல்!

நாடாளுமன்றத்தில் தேநீர் ரூ.1க்கும், பிரியாணி ரூ.8க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நாடாளுமன்றம் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் உணவு எங்கே கிடைக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா…?  தேநீர்.  1.00 .ரூ,  சூப்.  5.50.  கொட்டை கறி.  1.50,  மதிய உணவு.  2.  00,  […]

Continue Reading

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன்?- ஊடகச் செய்தியும், உண்மையும்!

‘’பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன், அரை மயக்கத்தில் என்கவுன்ட்டர் செய்யும் பரிதாபம்,’’ என்று கூறி ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link கடந்த ஏப்ரல் 6, 2022 அன்று பல்வேறு ஊடகங்களிலும் வெளியான இந்த செய்தியில் பெரும்பாலும், ‘’நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் ஒரு 17 வயது சிறுவன் மயக்க நிலையில் சேர்க்கப்பட்டார். அவர், வீடியோ […]

Continue Reading

ராணுவ வீரரின் அஸ்தியை திருநீறாகப் பூசினாரா யோகி ஆதித்யநாத்?

வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரின் அஸ்தியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திருநீறாகப் பூசிக்கொண்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive யோகி ஆதித்யநாத் சாம்பல் மேட்டில் குனிந்து, சாம்பலை எடுத்து திருநீறு போல நெற்றியில் வைத்துக்கொள்ளும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் இந்திப் பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “வீர […]

Continue Reading

மும்பை விமான நிலையத்தை வாங்க அதானி பெற்ற கடனை தள்ளுபடி செய்ததா எஸ்பிஐ?

மும்பை விமான நிலையத்தை வாங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து அதானி பெற்ற ரூ.12,770 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடியுடன் அதானி இருக்கும் புகைப்படம், பாரத ஸ்டேட் வங்கி லோகோவுடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் “மும்பை விமான நிலையம் வாங்கியதற்கு அதானியின் கடன் தொகை 12,770 கோடி […]

Continue Reading

இந்தியர்களைப் போல விலைவாசி உயர்வை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாரா கோத்தபய ராஜபக்‌ச?

‘’இந்தியர்களைப் பார்த்து, விலைவாசியை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கை மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அறிவுரை,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இதனைப் பகிர்ந்துள்ள நபர் @Muthalvant, சென்னையில் IBC Tamil என்ற ஊடகத்தில் பணிபுரிவதாக அவரது சுய விவர பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் வாசகர்கள் நம்மிடம் விளக்கம் […]

Continue Reading

பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்த பெண்ணை உள்ளே விட மறுத்த ஓட்டல் பணியாளர் ஒரு இந்தியரா?

‘’ஹிஜாப் அணிந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த இந்தியர் பணியிடை நீக்கம், ஓட்டலை மூடியது பஹ்ரைன் அரசு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதே செய்தியை கலைஞர் செய்திகள் ஊடகமும் வெளியிட்டிருந்ததைக் கண்டோம். Kalaignar Seithigal Link I Archived Link உண்மை அறிவோம்:சமீபத்தில் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்தபடி, […]

Continue Reading

மான் வேட்டையாடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ என்று பகிரப்படும் வங்கதேச வீடியோ!

காங்கிரஸ் எம்.எல்.ஏ பூங்காவுக்கு சென்று மான்களை வேட்டையாடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பூங்காவில் மான்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அப்போது கையில் துப்பாக்கி வைத்துள்ள நபர் ஒருவர் மான்களை நோக்கி சுடுகிறார். இறந்த மானின் முன்பு துப்பாக்கியை உயர்த்தி காட்டி போஸ் கொடுக்கிறார். நிலைத் தகவலில், “காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அனில் உபாத்யாய் பூங்காவில் […]

Continue Reading

இந்திய ராணுவம் இலங்கை சென்றதாக பரவும் வதந்தி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பிரச்னையை சமாளிக்க இந்திய ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொழும்பில் தரையிறங்கிய மூன்று இந்திய இராணுவ விமானம்  நேற்று நள்ளிரவு, ஸ்ரீலங்காவில்  ஏற்பட்ட  அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா அதன்  நட்பு நாடான இலங்கையை, பாதுகாக்கும் நோக்கில் […]

Continue Reading

மக்களின் பேராசையே பெட்ரோல் விலை உயர காரணம் என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

‘’பொதுமக்கள் பேராசையில் அதிக வாகனம் வாங்குவதே பெட்ரோல் விலை உயர காரணம் என்று நிர்மலா சீதாராமன் கருத்து,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்வதாக, நடுத்தர மக்கள் […]

Continue Reading

சோனியாவுக்கு மரியாதை கொடுக்கத் தவறிய மோடி என்று பரவும் படம்- உண்மை என்ன?

சோனியா காந்தி வணக்கம் தெரிவித்த போது, பிரதமர் மோடி கைக்கட்டி நின்று அவமரியாதை செய்தார் என்று ஒரு புகைப்பட பதிவு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் புகைப்பட பதிவு ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். பிரதமர் மோடி கைக்கட்டியபடி நிற்க, சோனியா காந்தி வணக்கம் சொல்வது போன்று அந்த படம் இருந்தது. அந்த […]

Continue Reading

பாகிஸ்தான் டிவி வழியே பண்டிட்களிடம் மன்னிப்பு கேட்ட காஷ்மீர் இஸ்லாமியர்?- முழு விவரம் இதோ!

‘’பாகிஸ்தான் டிவி மூலமாக, காஷ்மீர் பண்டிட்களுக்கு நிகழ்ந்த வன்முறைகளை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்ட காஷ்மீர் இஸ்லாமியர்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link டிவி நிகழ்ச்சி ஒன்றின் காட்சிகளை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ The Kashmir Files படம் பகைமையை வளர்க்கும்னு உருட்டுபவர்கள் கவனத்திற்கு … இப்படி மனிதத்தையும் தட்டி எழுப்பும் என்பதை சொல்லும் காணொளி […]

Continue Reading

ஹிஜாப் விவகாரம்; மும்பை உயர் நீதிமன்றத்தின் 2018 உத்தரவு தற்போது பரவுவதால் சர்ச்சை…

‘’ஹிஜாப் அணிய மாணவியருக்கு அனுமதி,’’ என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’மாணவிகள் பள்ளிகள் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று சொல்ல கல்லூரி மேனேஜ்மென்றுகளுக்கோ பிறின்ஸிபலுக்கோ தலைமை ஆசிரியர்களுக்கோ எந்த உரிமையும் இல்லை மும்பை உயர்நீதிமன்றம்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

உ.பி-யில் 165 இடங்களில் வாக்குகளை பிரித்து பாஜக வெற்றிக்கு ஓவைசி உதவினாரா?

நடந்து முடிந்த உத்தரப்பிரதேச தேர்தலில் 165 இடங்களில் ஓவைசி வாக்குகளைப் பிரித்து, பாஜக வெற்றிக்கு காரணமாக அமைந்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஓவைசி புகைப்படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “200 வாக்குகள் வித்தியாசத்தில் 7 தொகுதிகள். 500 வாக்குகள் வித்தியாசத்தில் 23 தொகுதிகள். 1000 வாக்குகள் வித்தியாசத்தில் 49 தொகுதிகள். 2000 வாக்குகள் […]

Continue Reading

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பார்க்கும்போது அத்வானி மற்றும் யோகி ஆதித்யநாத் கதறி அழுதனரா?

‘’தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பார்க்கும்போது கதறி அழுத அத்வானி மற்றும் யோகி ஆதித்யநாத்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பதிவுகள் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதேபோல, யோகி ஆதித்யநாத் அழுவதைப் போன்ற ஒரு வீடியோவையும் பகிர்ந்து, காஷ்மீர் ஃபைல்ஸ் பார்க்கும்போது அவர் அழுதார் என்று தகவல் பரப்புவதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: ஜம்மு […]

Continue Reading

மோகன் பகவத்துடன் ஓவைசி இருக்கும் படம் உண்மையா?

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி இருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உடன், அசாதுதீன் ஓவைசி அமர்ந்திருப்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இப்பொழுது தெரிகிறதா யார் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறார் என்று மோகன் […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் ஓட்டுப் போடாமல் இருப்பதற்காக வாக்காளர்களுக்கு ரூ.500 கொடுத்ததா பாஜக?

‘’உத்தரப் பிரதேசத்தில் ஓட்டுப் போடாமல் இருப்பதற்காக வாக்காளர்களுக்கு ரூ.500 கொடுத்த பாஜக.,வினர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பதிவு ஒன்றை கண்டோம். இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இந்த பதிவின் கமெண்ட் பிரிவில் இதே வீடியோவில் உள்ள பெண் பேசும் மற்றொரு வீடியோவையும் இணைத்துள்ளனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோக்களில் News18 ஊடகத்தின் லோகோ இடம்பெற்றுள்ளதால், இதுபற்றி நாம் ஆய்வு செய்தோம். அப்போது, இதுபற்றி ஏற்கனவே […]

Continue Reading

இந்தியாவில் இருந்துகொண்டே உக்ரைனில் இருப்பதாக வீடியோ வெளியிட்ட பெண் கைது என்று பரவும் தகவல் உண்மையா?

இந்தியாவில் இருந்துகொண்டே உக்ரைனில் சிக்கிக்கொண்டதாக சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டதாகவும் அவரை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்தனர் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளம் பெண் ஒருவரின் புகைப்படத்துடன் இந்தியில் வெளியான ஃபேஸ்புக் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “தேச துரோகிகள்..! தான், உக்ரைனில் தற்போது […]

Continue Reading

உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை தோளிலா ஏற்றி வர முடியும் என்று நிர்மலா சீதாராமன் கேட்டாரா?

‘’சொந்த நாட்டில் படிக்காமல் உக்ரைன் சென்ற மாணவர்களை என் தோளிலா ஏற்றிக் கொண்டு இந்தியா வர முடியும்,’’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாகக் கூறி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் பலரும் இதனை உண்மை என நம்பி […]

Continue Reading

தேர்தலில் தோற்றால் நாடு முழுவதும் தீ வைப்பேன் என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா?

‘’உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் தோற்றால், இந்தியா முழுவதும் தீ வைத்துக் கொளுத்துவேன் என்று யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, கடந்த 2019ம் ஆண்டு முதலே இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி ஷேர் […]

Continue Reading

இமய மலையில் வாழும் 200 வயது இந்து மத துறவி என்று பரவும் வீடியோ உண்மையா?

இமய மலையில் 200 ஆண்டுகள் ஒரு இந்து மத துறவி வாழ்ந்து வருகிறார் என்றும் அவர் சிவ நாமத்தையே உணவாக கொண்டு வாழ்ந்து வருகிறார் என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உடல் மெலிந்த துறவி ஒருவரின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சிவன் நாமமே உணவு..இமாலய மலையில் 200 வருடங்களாக வாழும் துறவியின் வைரல் வீடியோ” […]

Continue Reading

இஸ்லாமிய பெண்கள் மீது தண்ணீரை வாரி இரைக்கும் வீடியோ கர்நாடகாவில் எடுக்கப்பட்டதா?

கர்நாடகாவில் புர்கா அணிந்த இஸ்லாமிய பெண்கள் மீது இந்துத்துவ அமைப்பைச் சார்ந்தவர்கள் தண்ணீரை வாரி இரைத்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புர்கா அணிந்த இஸ்லாமிய பெண்கள் மீது இளைஞர்கள் சிலர் தண்ணீரை வாரி இரைக்கின்றனர். அவர்களிடமிருந்து தப்பி இஸ்லாமிய பெண்கள் வேகமாக ஓடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஹிஜாப் அணிந்த மாணவிகள் மீது […]

Continue Reading

ஹிஜாப் அணிந்து வந்து போலீஸ் மீது பாஜக.,வினர் கல் வீசியதாகப் பரவும் வதந்தி!

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்து போலீஸ் மீது கல் எறிந்த சங்கிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஹிஜாப் அணிந்த ஆண் ஒருவரை போலீசார் கைது செய்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் பெண்கள் போன்ற வேடத்தில் ஹிஜாப் அணிந்து கொண்டு போலீசார் மீது கல் […]

Continue Reading

அல்லாஹூ அக்பர் கோஷமிட்ட கர்நாடகா மாணவியின் உண்மை முகம் இதுவா?

கர்நாடகா ஹிஜாப் மாணவியின் உண்மை முகம் என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:சமீபத்தில் கர்நாடகாவில் இந்து மத ஆதரவாளர்களுக்கு மத்தியில் மாணவி ஒருவர் துணிச்சலாக அல்லஹூ அக்பர் என கோஷமிட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள், செய்திகள் ஊடகங்களிலும் பரவின. இந்த நிகழ்வை மையப்படுத்தி, குறிப்பிட்ட […]

Continue Reading

குஜராத்தில் நடந்த கொடூர கொலையை வைத்து தமிழ்நாட்டில் வாக்கு கேட்கும் பா.ஜ.க-வினர்!

குஜராத்தில் முஸ்லிமாக மதம் மாற மறுத்ததால் இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார், அதனால் பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சூரத்தில் ஒரு இந்து பெண் முஸ்லீமாக மாற மறுத்ததால் ஒரு மதவெறியன்  முஸ்லீம் ஒரு ஹிந்து  பெண்ணைக் […]

Continue Reading

இஸ்ரோ வடிவமைத்த ரேடியோ கார்டன் செயலி என்று பகிரப்படும் வதந்தி…

‘’இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட ரேடியோ கார்டன் செயலி,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது போல, Radio Garden Live என்பது ஆன்லைன் வழியே, உலக வரைபடம் கொண்டிருக்கும். அதில், உலகம் முழுக்க எந்தெந்த பகுதிகளில் வானொலி நிலையங்கள் செயல்படுகின்றன என்பதைக் குறிக்கும் வகையில் பச்சை நிறத்தில் புள்ளிகள் […]

Continue Reading

அல்லாஹூ அக்பர் என்று கோஷமிட்ட கல்லூரி மாணவி என்று பகிரப்படும் படங்கள் உண்மையா?

கர்நாடகாவில் தன்னை சூழ்ந்து ஜெய் ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்பிய மாணவர்களுக்கு எதிராக அல்லாஹூ அக்பர் என்று கோஷம் எழுப்பிய பெண்ணின் படங்கள் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கர்நாடகாவில் புர்கா அணிந்து வந்த இஸ்லாமிய கல்லூரி மாணவி ஒருவரை ஏராளமான இந்து மாணவர்கள் சூழ்ந்து கொண்டு ஜெய் ஶ்ரீராம் கோஷம் எழுப்பினர். பதிலுக்கு அந்த […]

Continue Reading

கர்நாடகாவில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு காவிக் கொடி ஏற்றப்பட்டதா?

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு, காவிக் கொடியை மாணவர்கள் ஏற்றினார்கள் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கொடி கம்பம் உச்சியில் காவிக் கொடியை இளைஞர் ஒருவர் கட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்னாடகா : ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை அகற்றி காவிக் கொடியேற்றிய மாணவர்கள்” […]

Continue Reading

ஆப்கானிஸ்தானில் மொபைல் போன் வைத்திருந்தால் மரண தண்டனையா?

ஆப்கானிஸ்தானில் மொபைல் போன் வைத்திருந்தால் மரண தண்டனை என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, ரிவர்ஸ் இமேஜ் முறையில் கூகுளில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இது பாகிஸ்தானைச் சேர்ந்தது என்பதற்கான சில செய்தி மற்றும் வீடியோ ஆதாரங்கள் கிடைத்தன. The Tribune Link I The News Link […]

Continue Reading

நாட்டிலே மதக் கலவரம் செய்திட வாக்களிப்பீர் பாஜக என பகிரப்படும் வதந்தி…

‘’நாட்டிலே மதக் கலவரம் செய்தட வாக்களிப்பீர் பாஜக,’’ என்று கூறி பகிரப்படும் போஸ்டர் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட போஸ்டரை பார்த்தாலே, பாஜக.,வை கேலி செய்யும் நோக்கில் பகிரப்படும் போலியான ஒன்று என தெரிகிறது. இருந்தாலும், பலர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதால், சந்தேகத்தின் […]

Continue Reading