FACT CHECK: நீட் விலக்கு தீர்மானத்தை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்ததா?

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை கண்டித்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது என்று சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நேற்று, இரண்டு என இரண்டு புகைப்படங்களை ஒன்று சேர்த்துப் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நேற்று பகுதியில், “மாணவன் தனுஷ் நீட் தேர்வால் தற்கொலை செய்ததற்கு திமுக தான் காரணம்” என்றும் இன்று பகுதியில் “நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை கண்டித்து […]

Continue Reading

FACT CHECK: கொடநாடு வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

கொடநாடு கொலை வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு அளிக்கத் தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார் என்று ஒரு நியூஸ் சார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொடநாடு கொலை வழக்கு […]

Continue Reading

FactCheck: தனுஷ் தற்கொலை விவகாரம்; எடப்பாடி பழனிசாமி பற்றி நியூஸ்7 தமிழ் இந்த செய்தியை வெளியிடவில்லை!

‘’தனுஷ் தற்கொலை செய்துகொண்டதற்கு நேரில் அஞ்சலி செலுத்த சென்ற எடப்பாடி பழனிசாமியை உறவினர்கள் சூழ்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு,’’ என்று கூறி நியூஸ்7 தமிழ் லோகோவுடன் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு +919049053770 அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதனை வைரலாக ஷேர் செய்வதைக் […]

Continue Reading

FACT CHECK: மோடி ஆட்சி இருக்கும் வரை எங்களை கைது செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

மத்தியில் மோடி ஆட்சி இருக்கும் வரை திமுகவால் எங்களை ஊழல் வழக்கிலோ கொலை வழக்கிலோ கைது செய்ய முடியாது என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், “மத்தியில் மோடிஜி ஆட்சி […]

Continue Reading

FACT CHECK: எடப்பாடி பழனிசாமி அரசு வீட்டை காலி செய்ய மறுப்பது அழகல்ல என்று ஸ்டாலின் கூறினாரா?

முதல்வர் பதவியை விட்டு மக்கள் துரத்திய பின்னும் அரசு வீட்டை காலி செய்ய மறுப்பது பழனிசாமிக்கு அழகல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  அசல் பதிவைக் காண: Facebook I Archive முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “முதல்வர் பதவியை விட்டு மக்கள் துரத்திய பின்னும் அரசு […]

Continue Reading

FACT CHECK: பினராயி விஜயன் வாக்களித்த பள்ளியின் லட்சணம் என்று பரவும் படம் தற்போது எடுத்தது இல்லை!

பினராயி விஜயன் வாக்களித்த பள்ளியின் லட்சணம் என்றும் ஒரு பள்ளியின் படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வாக்களித்த படங்களை ஒப்பிட்டு ஒரே படமாக பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எடப்பாடியார் வாக்களித்த அவர் கிராமத்தின் சிலுவம்பாளையம் அரசுத் […]

Continue Reading

முக்குலத்தோர் ஓட்டு தேவையில்லை என்று அஇஅதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா கூறினாரா?

‘’முக்குலத்தோர் ஓட்டு தேவையில்லை என்று அஇஅதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா கருத்து,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களின் வழியே கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், தந்தி டிவி லோகோவுடன் ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், ‘’அதிமுகவிற்கு பக்கபலமாக இருக்கும் ஒரே காரணத்திற்காக வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. தங்களுக்கு […]

Continue Reading

FACT CHECK: ஒன்றுமில்லாத பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை பெரிதாக்கும் தி.மு.க என்று முதல்வர் பழனிசாமி கூறினாரா?

ஒன்றுமில்லாத பொள்ளாச்சி பாலியல் பிரச்னையை தி.மு.க ஊதி பெரிதாக்குகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முதலமைச்சர் பழனிசாமி படத்துடன் கூடிய நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்! பொள்ளாச்சி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே பெண்களுக்கு பாதுகாப்பானதுதான். ஒன்றுமில்லாத பிரச்சினையை திமுக ஊதி பெரிதாக்குகிறது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  நிலைத் […]

Continue Reading

FACT CHECK: ஊர்க்காவல் படையினருக்கு பணி நிரந்தரம், மாதம் ரூ.16,500 சம்பளம் அறிவித்தாரா எடப்பாடி பழனிசாமி?

ஊர்க் காவல் படை வீரர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் மாதம் ரூ.16,500 வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறையின் இரண்டு நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டுள்ளன. அதில், “ஊர் காவல் படை வீரர்களுக்கு மாதம் முழுவதும் பணி நிரந்தரம். மாதம் ரூ.16,500 சம்பளம் […]

Continue Reading

FactCheck: எடப்பாடி பழனிசாமி பினாமி செய்யாதுரை வீட்டில் எடுத்த புகைப்படங்களா?- உண்மை இதோ!

‘’எடப்பாடி பழனிசாமி பினாமி செய்யாதுரை வீட்டில் சோதனை நடத்தியபோது கிடைத்த பணம், தங்கம்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படங்கள் சிலவற்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link கடந்த 2018 ஜூலை 21 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ எடப்பாடி_பழனிசாமியின் #பினாமி #செய்யாதுரை வீட்டில் கட்டி கட்டியாக நூறு கிலோ தங்கமும்,கரன்சி கட்டுகளும் தோண்ட தோண்ட அலிபாபா குகையில் இருந்து […]

Continue Reading

FACT CHECK: அ.தி.மு.க நல்லாட்சி வழங்கியது என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

அ.தி.மு.க நல்லாட்சி வழங்கிய அரசு, என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு முடிவு வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறையில் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் ஸ்கிரீன்ஷாட்கள் பகிரப்பட்டுள்ளது. அதில், எல்லா விதத்திலும் அ.தி.மு.க முன்னிலை பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Knr Sivara என்பவர் 2021 மார்ச் 3ம் தேதி வெளியிட்டுள்ளார். இந்த […]

Continue Reading

FACT CHECK: பெட்டிக் கடை பாக்கி தள்ளுபடி என அறிவிப்பு!– நையாண்டி என்று கூட தெரியாமல் பரவும் போலிச் செய்தி!

பெட்டிக் கடையில் வைத்திருந்த டீ, வடை, சிகரெட் பாக்கி தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததாக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என்று அதே அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டதாக போலியான நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. உண்மை அறிவோம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive I Archive 2 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், […]

Continue Reading

FACT CHECK: முக்குலத்தோர் தயவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

முக்குலத்தோர் தயவு இல்லாமல் என்னால் ஆட்சிக்கட்டிலில் அமர முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “முக்குலத்தோர் தயவு இல்லாமல் என்னால் ஆட்சிக்கட்டிலில் அமர முடியும்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது போல உள்ளது.  இந்த பதிவை தஞ்சை வடசேரி […]

Continue Reading

FactCheck: திண்டுக்கல் சீனிவாசன் உளறியதாகக் கூறி பகிரப்படும் வதந்தி!

‘’அம்மா உயிரோடு இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக நினைவிடம் அமைத்திருக்க முடியாது- திண்டுக்கல் சீனிவாசன்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அந்த கார்டில், ‘’அம்மா உயிரோடு இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக நினைவிடம் அமைத்திருக்க முடியாது. முதல்வர் எடப்பாடி […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க-வுக்கு வாக்களிக்கச் சொன்ன எடப்பாடி பழனிசாமி?- ஃபேஸ்புக் வதந்தி

பொங்கல் பரிசு வாங்கிய கையோடு சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும். பொங்கல் […]

Continue Reading

Fact Check: தமிழக அரசின் பொங்கல் பணப் பரிசு அறிவிப்பை அண்ணாமலை விமர்சனம் செய்தாரா?

‘’மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் மக்களுக்கே பொங்கல் பரிசு வழங்குகிறது,’’ என்று பாஜக அண்ணாமலை விமர்சனம் செய்ததாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 உண்மை அறிவோம்: மேற்கண்ட செய்தி ஒரு சர்ச்சைக்குரியதாகும். ஆம், இந்த செய்தியை முதலில் […]

Continue Reading

FACT CHECK: ராமதாஸ், நிவர் புயலை ஒப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாக பரவும் போலிச் செய்தி!

நிவர் புயல் ஒரே இடத்தில் நிற்காமல் ராமதாஸ் மாதிரி மணிக்கொரு முறை மாறிக்கொண்டே இருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.  தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “நிவர் புயல் ஒரே இடத்தில் நிற்காமல் ராமதாஸ் மாதிரி மணிக்கொரு முறை மாறிக் […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி பற்றி பகிரப்படும் தவறான பேனர் புகைப்படம்!

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி பகிரப்படும் பேனர் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.  Facebook Trending Link இதேபோல, ட்விட்டரிலும் ஏராளமானோர் இதனை உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.  Twitter Trending Link உண்மை அறிவோம்:சாமானின் முதல்வர் எனக் […]

Continue Reading

பால் பாக்கெட் போட்ட இடத்தில் இருப்பேன் என்று எஸ்.வி.சேகர் கூறினாரா?

“எங்கே வந்து பால் பாக்கெட் போட்டீர்களோ அங்கேயேதான் இருப்பேன்” என்று எஸ்.வி.சேகர் கூறியது போன்று நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எடப்பாடி பழனிசாமி, எஸ்.வி.சேகர் புகைப்படத்துடன் கூடியு நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “முதல்வருக்கு எஸ்.வி.சேகர் பதிலடி! ஓடி ஒளிய வேண்டிய அவசியம் எனக்கில்லை. […]

Continue Reading

ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம்!

‘’ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் புகைப்படம்,’’ என்று கூறி பரவி வரும் ஒரு புகைப்படத்தை உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருக்க, எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் அவரை வணங்குவது போல காட்சி இடம்பெற்றுள்ளது. இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட புகைப்படத்தை உற்று கவனித்தால், ஓ.பன்னீர்செல்வமே சற்று பட்டும் படாமல்தான் அமர்ந்துள்ளார் என்று தெளிவாக தெரிகிறது. அதுவும் […]

Continue Reading

தமிழக அரசு மீது குற்றம்சாட்டினாரா தாமோதரனின் மனைவி?

கொரோனா பாதிப்பு காரணமாக தன்னுடைய கணவர் மரணம் அடைய முதல்வர் அலுவலகத்தின் அலட்சியம்தான் காரணம் என்று தனிச் செயலாளர் தாமோதரனின் மனைவி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “என் கணவரின் மரணத்திற்கு முதல்வர் அலுவலகத்தின் அலட்சியம்தான் காரணம் – தனிச் செயலாளர் தாமோதரனின் மனைவி” என்று உள்ளது.  நிலைத் […]

Continue Reading

மேட்டூர் அணை திறப்பு விழாவில் சமூக இடைவெளி இல்லையா?- பழைய புகைப்படத்தால் சர்ச்சை

மேட்டூர் அணை திறப்பின் போது சமூக இடைவெளி கேள்விக்குறியானதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மேட்டூர் அணை திறப்பு விழா புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “கொரோனா பரவாமல் இருக்க சமூக இடைவெளி அவசியம் – அரசு” என உள்ளது. நிலைத் தகவலில், “ஒன்பது கிரகம் உச்சம்பெற்ற ஒருவனுக்கு மாஸ்க்கும் சமுக இடைவெளியும் அவசியமில்லாதது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Sabak […]

Continue Reading

தமிழகத்தில் மதுக்கடைகள் இயங்கும் என்று அறிவித்ததா தமிழக அரசு?

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மார்ச் 31ம் தேதி வரை இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்ததாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 18 தமிழ் பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மார்ச் 31 முதல் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இயங்கும். – தமிழக அரசு” […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியை பின்பற்றி மு.க.ஸ்டாலின் வயலில் நாற்று நடச் சென்றாரா?

‘’எடப்பாடி பழனிசாமியை காப்பி அடித்து மு.க.ஸ்டாலின் வயலில் நாற்று நடச் சென்றார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படம் பற்றி உண்மை அறிய இதனை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இது பல ஆண்டுகளாகவே […]

Continue Reading

இயேசுவை பிரார்த்திக்க சொன்னாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி?- ஃபேஸ்புக் வதந்தி

‘’கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்திகளை நம்ப வேண்டாம். அனைவரும் இயேசுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள்,’’ என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக முதலமைச்சர் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி கொரானா தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளை […]

Continue Reading

ஜெயலலிதா காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசன் படமா இது?

ஜெயலலிதா காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசன் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜெயலலிதாவின் காலில் ஒருவர்  சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறார். ஜெயலலிதா கையில் உறுப்பினர் கார்டு உள்ளது. காலில் விழுந்தவர் யார் என்று தெரியவில்லை. புகைப்படத்தில் dinamalar.com என்ற வாட்டர் மார்க் தெரிகிறது.  நிலைத் தகவலில், “ஜெயலலிதா காலில் விழுந்து கிடக்கும் திண்டுக்கல் சீனிவாசன்..” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading

முதல்வரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தாரா சீமான்? – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆபாசமாக பேசிய வழக்கில் சீமான் மன்னிப்புக் கடிதம் வழங்கினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு ஒன்றை அளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “முதல்வரை ஆபாசமா பேசிய வழக்கில்..மன்னிப்பு கடிதம்.. கொடுத்தார் சீமான்.. மண்டியிட்ட மான தமிழ் பிள்ளை” […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி அரசு அமைத்த தரமற்ற சாலை; வைரல் புகைப்படம் உண்மையா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைத்த தரமற்ற சாலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மழை வெள்ளம் காரணமாக தார் சாலை நகர்ந்து சாலைக்கு வெளியே இருப்பது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், ரோடு லேசா மழைல நனஞ்சிடுத்து அதான் காயபோட்டுள்ளோம்… நன்றி எடப்பாடி அரசு” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, தமிழ்தேசிய ஆதரவாளர்கள் […]

Continue Reading

காலை உணவுத் திட்டத்தை தொடங்குகிறதா தமிழக அரசு?

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்க உள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link “வரலாற்றில் இடம் பெறுகிறார் தமிழக முதலமைச்சர். இந்தியாவின் முதல்முறையாக #தமிழகத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு  காலை_உணவுத் திட்டம் அறிமுகம். இட்லி, சப்பாத்தி, பொங்கல் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய பச்சைப்பயறு, கேழ்வரகு அடை, குதிரைவாலி, சாமைக்கஞ்சி, கொண்டைக்கடலை வழங்க முதலமைச்சர் எடப்பாடி […]

Continue Reading

புதுச்சேரி அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

புதுச்சேரி காங்கிரஸ் அரசை தரங்கெட்ட ஆட்சி என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்ததாகவும், இதனால் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி முறிவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதுச்சேரி நாராயணசாமி படத்தின் அருகில், “யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரிக்கு முதலிடம் – மத்திய அரசின் தரவரிசைப் பட்டியல்” என்று உள்ளது. அதற்கு கீழ், மு.க.ஸ்டாலின் படத்தின் அருகில், “தரங்கெட்ட ஆட்சிக்கு […]

Continue Reading

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க பரிசீலனை என்று அமித்ஷா அறிவித்தாரா?

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்கிறேன் என்று அமித்ஷா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரேக்கிங் நியூஸ் கார்டு என்று ஒன்று பகிரப்பட்டுள்ளது. ஆனால், எந்த ஒரு பத்திரிகை, தொலைக்காட்சி வெளியிட்டது என்று இல்லாமல் பொதுவான நியூஸ் கார்டாக இருந்தது. அதில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த […]

Continue Reading

போலீசிடம் கெஞ்சிய எடப்பாடி பழனிசாமி- ஃபேஸ்புக் படம் உண்மையா?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலீசாரிடம் “நான்தான் முதல்வர் எடப்பாடி” என்று கூறி கெஞ்சுவது போல ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எடப்பாடி பழனிசாமியின் படங்கள் நான்கை கொலாஜ் செய்து பதிவிட்டுள்ளனர். அதில் போலீசாரிடம் எடப்பாடி பழனிசாமி “யோவ் நான்தான் முதல்வர் எடப்பாடி” என்று கூறுவது போலவும் அதற்கு போலீஸ்காரர் “யாருடா கோமாளி நீ..?” என்று தள்ளிவிடுவது போலவும் பதிவிட்டுள்ளனர். […]

Continue Reading

கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்த எடப்பாடி: குழப்பிய நக்கீரன் தலைப்பு!

“கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்” என்று நக்கீரனில் வெளியான செய்தி குழப்பத்தை ஏற்படுத்தியது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Article Link Archived Link நக்கீரன் இணையதளம் வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய செய்தி ஒன்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்” என்று செய்தி இணைக்கப்பட்டு இருந்தது. 2019 நவம்பர் 9ம் தேதி பதிவிடப்பட்டுள்ள இந்த செய்தியை […]

Continue Reading

டாக்டர் பட்டம் பெற்றதற்காக எடப்பாடி பழனிசாமியை கேலி செய்தாரா தமிழிசை?

‘’டாக்டர் பட்டம் பெற்றதற்காக எடப்பாடி பழனிசாமியை கேலி செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Video Link  Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 22, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், பாஜக தமிழக முன்னாள் தலைவரும், இந்நாள் தெலுங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பேசுகிறார். அவர், ‘’ஒரு […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியை கூப்பிட்டு செங்கோலை பிடிக்கச் சொன்னாரா எம்ஜிஆர்?

‘’எடப்பாடி பழனிசாமியை கூப்பிட்டு செங்கோலை பிடிக்கச் சொன்ன எம்ஜிஆர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link Anand Sekar என்பவர் செப்டம்பர் 23, 2019 அன்று இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இது அதிமுக.,வின் பழைய கட்சி நிகழ்ச்சி பற்றியதாகும். இதில், ஜெயலலிதா எம்ஜிஆர் கையில் வெள்ளி செங்கோல் ஒன்றை கொடுக்க, அதனை அருகில் இருக்கும் நபரை அழைத்து ஒரு கை […]

Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்- உண்மை என்ன?

‘’மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Mohanraj T என்பவர் அக்டோபர் 1, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், ‘’1330 குறள்களில் ஏதேனும் ஒன்றை பிழையின்றி சொன்னால் முதல்வர் நாற்காலியை தர தயார்,’’ என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் […]

Continue Reading

எந்த தமிழனும் உண்மையான இந்தியன் கிடையாது: ராஜேந்திர பாலாஜி பெயரில் பரவும் வதந்தி

‘’இந்தியாவிற்குள் இருக்கும் எந்த தமிழனுமே உண்மையான இந்தியன் கிடையாது,’’ என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாக, ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Royapuram Khadhar Chennai‎facebook DMK என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாகக் கூறி ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்து, அதன் மேலே, […]

Continue Reading

தமிழக முதல்வர் பழனிசாமி தனது மகளுக்கு தங்கத்திலான தையல் மெசின் வாங்கி கொடுத்தாரா?

‘’தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது மகளுக்காக தங்கத்தில் தையல் மெஷின் வாங்கி கொடுத்தார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Ponnurangam Chockalingam என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இவரைப் போலவே, நிறைய பேர் ஃபேஸ்புக்கில் இதனை பகிர்ந்துள்ளனர். அதுதொடர்பான ஸ்கிரீன்ஷாட் கீழே ஆதாரத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது. உண்மை அறிவோம்: இவர்கள் குறிப்பிடுவதைப் போல, மேற்கண்ட புகைப்படத்தில் […]

Continue Reading

காமராஜருக்குப் பின் முதல்வர் பதவி வகிக்கும் தமிழர் எடப்பாடி பழனிசாமி: ஃபேஸ்புக் வதந்தி

‘’காமராஜருக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு தமிழர் முதல்வர் என்ற பெருமையை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Tamizh Pasanga.com என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், காமராஜர் மற்றும் எடப்பாடி பழனிசாமி புகைப்படங்களை இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’54 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழர்களுக்குக் கிடைத்த […]

Continue Reading

கேரள முதல்வரின் தண்ணீர் உதவியை நிராகரித்தார் இபிஎஸ்: ஃபேஸ்புக் வதந்தியால் பரபரப்பு

‘’கேரள அரசு சென்னைக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்புவதாகச் சொன்னதை நிராகரித்த எடப்பாடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Admk Fails என்ற ஃபேஸ்புக் ஐடி, 2019 ஜூன் 20ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன் புகைப்படத்தையும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தையும் பகிர்ந்து, […]

Continue Reading

அ.தி.மு.க-வினர் டி.வி விவாதங்களை புறக்கணிக்க தண்ணீர் பஞ்சம் காரணமா?

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்கும் பதில் சொல்ல முடியாததால்தான் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்கள் பங்கேற்பது இல்லை என்று ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சியில் பங்குபெறும் அ.தி.மு.க நிர்வாகிகள் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில், “தவிக்கும் தமிழகம்… பதில் […]

Continue Reading

பிற மாநிலங்களில் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வாபஸ் பெற்ற இ.பி.எஸ்! – நியூஸ்7 செய்தி உண்மையா?

பிற மாநிலங்களில் தமிழை பயிற்று மொழியாக்குமாறு பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் கோரிக்கை விடுத்தார். வேறு விதமான சந்தேகங்களை அந்த ட்வீட் கிளப்பியதால், அதை டெலீட் செய்துவிட்டார். இதைத் தொடர்ந்து, தன்னுடைய கருத்தை முதலமைச்சர் வாபஸ் பெற்றார் என்று ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் வெளியாகி உள்ளது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link 1 Archived link 2 பிற மாநிலங்களில் தமிழை பயிற்று மொழியாக்குமாறு விடுத்த கோரிக்கையை முதல்வர் […]

Continue Reading

தமிழக அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர்கள் சேர சட்ட திருத்தம் செய்யப்பட்டதா?

தமிழக அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்கவும், தமிழக அரசுப் பணிகளில் சேரவும் ஓ.பன்னீர்செல்வம் சட்ட திருத்தம் செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: Archived link தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் படங்களை சேர்த்து, பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

ஓட்டுக்குப் பணம் கொடுத்தாரா எடப்பாடி பழனிசாமி? – உண்மை அறிவோம்!

சேலத்தில் பெண்மணி ஒருவருக்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: முதல்வரே ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்..! வாழ்க ஜனநாயகம்…! வாழ்க தேர்தல் ஆணையம்..! Archived link வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பழம் விற்பனை செய்யும் பெண்மணி ஒருவருக்கு பணம் கொடுக்கும் காட்சி வீடியோவாக வெளியாகி உள்ளது. பின்னால் […]

Continue Reading

மோடி புகைப்படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்தாரா எடப்பாடி பழனிசாமி?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியின் புகைப்படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்திருந்ததாகக்கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருவதை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். அப்போது கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்: அடப்பாவி அம்மா ஆவி உன்ன சும்மா விடாது Archived Link ஏப்ரல் 7ம் தேதி வெளியிடப்பட்ட பதிவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின், புகைப்படத்தை பகிர்ந்து, அவரது சட்டை பாக்கெட்டில், பிரதமர் மோடியின் புகைப்படம் […]

Continue Reading