மோடியை கிண்டல் செய்த மலையாளம் டி.வி ரியாலிட்டி ஷோ?- ஃபேஸ்புக்கில் பரவும் வீடியோ

பிரதமர் மோடி மற்றும் ரூ.500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று வெளியிடப்பட்ட அறிவிப்பைக் கிண்டல் செய்து மலையாளம் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றில் பாடல் பாடப்பட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 “இந்த மாதிரி ஒரு பாடல் பாட தமிழ் சேனல் அனுமதிப்பாங்களா… கேரளா கெத்துதான்” என்று குறிப்பிட்டு சூப்பர் […]

Continue Reading

ரஷ்ய நாடாளுமன்றத்தில் காமராஜர் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதா?

‘’ரஷ்ய நாடாளுமன்றத்தில் காமராஜர் புகைப்படம் உள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் புகைப்பட பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link வீரன் சு.பாரதிராஜன் என்பவர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், புடின் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் உள்ளது. மேலே, காமராஜர் புகைப்படம் இருப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தின் மேலே, ‘’ தமிழ்நாடு சட்டமன்றத்துல இவர் படம் இவர் படம் இருக்கா இல்லையானு […]

Continue Reading

கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மழை, வெள்ளம் நிறுத்தப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னாரா?

‘’கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் உடனே மழை, வெள்ளம் தடுத்து நிறுத்தப்படும்,’’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னதாகக் கூறி, ஃபேஸ்புக்கில் பரவி வரும் தகவலை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Rahmath Hameed என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், பொன்.ராதாகிருஷ்ணன் பெயரில் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ஏங்க, உங்க கட்சியிலே ஒருத்தன்கூட அறிவாளியே […]

Continue Reading

சோனியா காந்தி 1988 முதல் காங்கிரஸ் கட்சித் தலைவராக உள்ளாரா?

‘’சோனியா காந்தி 1988 முதல் காங்கிரஸ் கட்சித் தலைவராக உள்ளார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link போங்கடா முட்டாப் பசங்களா என்ற ஃபேஸ்புக் ஐடி, ஆகஸ்ட் 15, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், பாஜக, காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளின் தலைவராக இருந்தவர்களின் பட்டியலை பகிர்ந்து, ‘’1988 முதல் கட்சித் […]

Continue Reading

அத்தி வரதரை சந்திக்க லஞ்சம் கொடுத்த ரஜினி: பரபரப்பை ஏற்படுத்திய ஏஷியா நெட் செய்தி!

காஞ்சிபுரம் அத்தி வரதரை அருகில் இருந்து தரிசிக்க ரஜினிகாந்த் லஞ்சம் கொடுத்தார் என்று ஏஷியா நெட் தமிழ் பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Article Link I Archived Link Archived Link ரஜினிகாந்த் அத்தி வரதரை தரிசிக்கும் படத்துடன், “அத்தி வரதரை அருகில் இருந்து சந்திக்க ரஜினி கொடுத்த லஞ்சம் எவ்வளவு தெரியுமா?” என்று தலைப்பிட்டு ஒரு செய்தி பகிரப்பட்டுள்ளது. இந்த செய்தியை ஏஷியா நெட் தமிழ் தன்னுடைய […]

Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பாக். பிரதமர்?- அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு

காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த மு.க.ஸ்டாலினுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டது போன்ற ட்வீட்டின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் தமிழாக்கம்…, “என் நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகள். பா.ஜ.க பாசிச ஆட்சிக்கு […]

Continue Reading

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திமுக ஆட்சியில் அனுமதி தரப்பட்டதா?

‘’தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திமுக ஆட்சியில் அனுமதி தரப்பட்டது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஆமை கறி சீமான் என்பவர் ஆகஸ்ட் 14, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என ஸ்டாலின் பேசியதாக நியூஸ் 7 வெளியிட்ட செய்தியை […]

Continue Reading

திருமுருகன் காந்தி பற்றி பாகிஸ்தான் பிரதமர் பேசியது உண்மையா?

ஐ.நா சபைக்கு அடிக்கடி சென்றுவரும் திருமுருகன் காந்தியிடம் உதவி கேட்டு இருந்தால், எங்களுக்கு இன்று இந்த நிலை வந்திருக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தந்தி டி.வி வெளியிட்ட இரண்டு நியூஸ் கார்டுகளை ஒன்று சேர்த்துப் பதிவிட்டுள்ளனர். முதல் நியூஸ் கார்டில், “இந்தியாவுக்கு எதிரான கோரிக்கையை நிராகரித்தது, ஐ.நா […]

Continue Reading

வாஜ்பாய்க்காக போஸ்டர் ஒட்டிய வெங்கையா நாயுடு! – தந்தி டி.வி நியூஸ் கார்டு உண்மையா?

ஆந்திராவுக்கு வாஜ்பாய் வந்தபோது அவருக்காக போஸ்டர் ஒட்டிய நான், பின்னாளில் அவருக்கு அருகில் கட்சித் தலைவராக அமர்ந்தேன் என்று வெங்கையா நாயுடு கூறியதாக தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தந்தி டி.வி நியூஸ் கார்டு மற்றும் தமிழ்த் திரைப்பட காட்சி இணைக்கப்பட்டு போட்டோ கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. தந்தி டி.வி நியூஸ் கார்டில், “ஆந்திராவுக்கு வாஜ்பாய் […]

Continue Reading

இந்திய அரசை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராட்டம்: வைரலாகும் வீடியோ

‘’இந்திய அரசை எதிர்த்து காஷ்மீர் மக்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு போராடி வருகிறார்கள்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Mohamed Hakkeem என்பவர் ஆகஸ்ட் 9, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், பாகிஸ்தான் கொடி போன்ற ஒன்றை பொதுமக்கள் ஏராளமானோர் ஏந்தியபடி நடந்துசெல்கிறார்கள். இதன் கீழே, ‘’ தமிழர்களின் ஜல்லிக்கட்டுக்கு […]

Continue Reading

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மிரட்டி கருணாநிதி சமாதியில் வணங்க வைத்தார்களா?

‘’வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மிரட்டி கருணாநிதி சமாதியில் வணங்க வைத்தார்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஆகஸ்ட் 13, 2019 அன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், புதிய தலைமுறை பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்து, வெளிநாட்டு பயணிகளை மிரட்டி அழைத்து வந்து கருணாநிதி சமாதியில் வணங்க வைத்த திமுக.,வினர் மீது […]

Continue Reading

பொள்ளாச்சி பாலியல் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று எச்.ராஜா ட்வீட் செய்தாரா?

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா ட்வீட் செய்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link எச்.ராஜாவின் ட்விட் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “பொள்ளாச்சி கற்பழிப்புகள் லவ் ஜிகாதை போன்ற மோசமான குற்றம் அல்ல. பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் வழக்கைத் திரும்பப் பெற்று இந்து தர்மத்தின் […]

Continue Reading

இந்தியாவிற்கு ஆதரவாக பாகிஸ்தான் கொடியை காஷ்மீர் முஸ்லீம்கள் எரித்தனரா?

‘’இந்தியாவிற்கு ஆதரவாக பாகிஸ்தான் கொடியை காஷ்மீர் முஸ்லீம்கள் தீயிட்டு எரித்தனர்,’’ எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் வீடியோ பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Saravana Vel என்பவர் ஆகஸ்ட் 13, 2019 அன்று இந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதில், முஸ்லீம் ஆண்கள், சிறுவர்கள் பலர் ஒன்று சேர்ந்து பாகிஸ்தான் தேசியக் கொடி போல உள்ள ஒரு கொடியை […]

Continue Reading

காவிரியில் அனகோண்டா போன்ற மலைப்பாம்பு – அதிர்ச்சியைத் தந்த ஃபேஸ்புக் வீடியோ

காவிரி ஆற்றில் மிகப்பெரிய அனகோண்டா போன்ற மலைப்பாம்பு ஒன்று வெள்ளத்தில் செல்லும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 ஆற்றில் மிகப்பெரிய அனகோண்டா பாம்பு நீந்தி கடந்து செல்வது போன்று உள்ளது. வீடியோ தெளிவின்றி உள்ளது. வீடியோவில், “கர்நாடகாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் அனகோண்டா போன்ற […]

Continue Reading

வாங்கிய காசை சீமானிடம் கொடுத்தேன்: சாட்டை துரைமுருகன் பேரில் பரவும் வதந்தி

‘’வண்டாரி தமிழ்மணியிடம் இருந்து வாங்கிய காசை நாம் தமிழர் கட்சித் தலைமையிடம் கொடுத்தேன்,’’ என சாட்டை துரைமுருகன் பெயரில் பரவி வரும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link உண்மை அறிவோம்: மேகவண்ணன் புதியதடம் என்பவர் ஆகஸ்ட் 3, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், சாட்டை துரைமுருகன் பாண்டியன் பெயரில் வெளியான ட்விட் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். உண்மையில், அந்த […]

Continue Reading

நிவாரண உதவியாக இரண்டு வாழைப் பழம் வழங்கிய பா.ஜ.க நிர்வாகிகள்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

கன மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு பா.ஜ.க-வினர் நிவாரண உதவி வழங்கியபோது எடுத்த படம் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link படுக்கையில் அமர்ந்திக்கும் முதியவர் ஒருவருக்கு, கட்சிப் பிரமுகர்கள் நான்கு பேர் சேர்ந்து இரண்டு வாழைப் பழம் வழங்கும் படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மீது, “கன மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு பா.ஜ.க-வினர் நிவாரண […]

Continue Reading

வெள்ளத்தில் மூழ்கிய இந்து அமைப்பு தலைவரின் வீடு; நிவாரண முகாமுக்கு வர மறுத்தாரா?

கேரளாவில் இந்து அமைப்பு ஒன்றின் தலைவரின் வீடு மழை வெள்ளத்தில் மூழ்கியதாகவும் கிறிஸ்தவ ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு வர மறுத்து அவர் போராட்டம் செய்து வருவதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஹிந்து ஐக்கிய வேதி என்ற அமைப்பின் தலைவராக உள்ள சசிகலா என்பவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவர், சசிகலா… ஹிந்து ஐக்கிய வேதி […]

Continue Reading

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தோல்வி அடைவார் என்று பாலாஜி ஜோசியம் சொன்னாரா?

‘’திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார்,’’ என்று பாலாஜி ஜோசியம் சொன்னதாகக் கூறி ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Vsprabu Susi என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ஜோதிடர் பாலாஜியின் பெயரில் வெளியான பாலிமர் டிவி நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், பாலாஜி மற்றும் துரைமுருகன், அவரது மகன் […]

Continue Reading

இந்தியா முழுக்க ஆர்எஸ்எஸ்க்கு 40 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் உள்ளதா?

இந்தியா முழுக்க ஆர்.எஸ்.எஸ்-க்கு 40 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் உள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஆர்.எஸ்.எஸ் பிரம்மாண்ட பயிற்சி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அதில், “நாடு முழுவதும் 40 ஆயிரம் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்வி சேவை செய்து வரும் உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனமான ஆர்.எஸ்.எஸ் தற்போது முதலாவது ராணுவ பள்ளியை அமைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, […]

Continue Reading

இந்திய பாதுகாப்பு மற்றும் நிதித்துறையின் முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமனா?

‘’இந்திய பாதுகாப்பு மற்றும் நிதித் துறையின் முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Agri Vel Murugan என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை கடந்த மே 31, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், நிர்மலா சீதாராமன் புகைப்படத்தை பகிர்ந்து, ‘’ வாழ்த்துக்கள். இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு துறை […]

Continue Reading

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக சவூதி இளவரசர் பேசினாரா?

‘’காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசிய சவூதி இளவரசர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link I Live In J&K. என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை ஜூன் 7, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், அரச பரம்பரையை சேர்ந்தவர் அல்லது மதத் தலைவர் போன்ற ஒருவர், விருந்தினர்களின் கேள்விக்கு பதில் அளித்து […]

Continue Reading

லடாக் எம்.பி கேள்வியால் தலைகுனிந்த கனிமொழி – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

நாடாளுமன்றத்தில் பேசிய லடாக் பா.ஜ.க எம்.பி, லடாக் எங்கே இருக்கிறது என்று தெரியுமா என்று கனிமொழியிடம் கேட்டதாகவும், அதனால் தலைகுனிந்த கனிமொழி, தலையை நிமிர்த்தவே இல்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link லடாக் பா.ஜ.க எம்.பி ஜாம்யாங் ஸெரிங் நாம்க்யால் படத்துடன் யாரோ வெளியிட்ட பதிவை அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்து போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். அந்த […]

Continue Reading

காஷ்மீரில் லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்- ஃபேஸ்புக் வைரல் வீடியோ

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370 நீக்கம், ஜம்மு – காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை கண்டித்து காஷ்மீரில் மிகப்பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 பெண்களின் மிகப்பெரிய ஊர்வலம் ஒன்றின் வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில், “இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் லட்சக்கணக்கான காஷ்மீர் மக்கள் தங்கள் நிலத்தை […]

Continue Reading

மெரினா போராட்டத்தில் காண்டம் வழங்கப்பட்டது- திருமாவளவன் பெயரில் பரவும் தகவல்

“மெரினா போராட்டத்தில் காண்டம் வழங்கப்பட்டது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link திருமாவளவன் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டங்களை ஒன்று சேர்த்து ஒரே படமாக பகிர்ந்துள்ளனர். திருமாவளவன் படத்தின் மீது, “மெரினா போராட்டத்தில் காண்டம் வழங்கப்பட்டது – திருமா” என்று உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் படத்தின் கீழ், […]

Continue Reading

காஷ்மீரில் சொத்து வாங்க மாட்டேன் என்று உங்கள் தலைவர் உறுதி அளிப்பாரா?- அமித்ஷா பேச்சு உண்மையா?

நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது, “காஷ்மீரில் எந்த சொத்துக்களையும் வாங்க மாட்டோம் என்று உங்கள் தலைவர் உறுதி அளிப்பாரா?” என்று அமித்ஷா கேள்வி கேட்டதாகவும் அதற்கு பதில் சொல்ல முடியாமல் டி.ஆர்.பாலு அமர்ந்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link அமித்ஷா, டி.ஆர்.பாலு மோதல் என்று இருவர் படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “டி.ஆர்.பாலு கப்சிப் ஆன கதை” என்று […]

Continue Reading

இந்தியா கேட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதா?

‘’இந்தியா கேட்டில் 95, 300 சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Mohammed Sait என்பவர் இந்த பதிவை ஜூலை 30, 2019 அன்று வெளியிட்டுள்ளார். அதில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒவைசி பேசும் வீடியோ ஒன்றை இணைத்துள்ளனர். அவர், ‘’டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் 95,300 சுதந்திரப் போராட்ட […]

Continue Reading

பாஜக எம்எல்ஏ அனில் உபாத்யாய் போலீஸ் அதிகாரியை அடித்தாரா?

‘’பாஜக எம்எல்ஏ அனில் உபாத்யாயின் இந்த செயல் குறித்து மோடி என்ன கூறுவார்,’’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவுவதைக் காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நெற்றிக்கண் மனோஹரன் என்பவர் இந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ஒரு இளைஞர் போலீஸ் அதிகாரியை தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன் மேலே, ‘’ B.J.P எம்.எல்.ஏ அனில் உபாத்யாயின் இந்த […]

Continue Reading

தேங்காய் லாரியை கடத்திய பாஜக நிர்வாகிகள்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

10 டன் தேங்காய் ஏற்றிய லாரியை பா.ஜ.க நிர்வாகிகள் கடத்தியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், இளைஞர் ஒருவரின் படம் உள்ளது. போட்டோஷாப் மூலம், “லாரியில் ஜிபிஎஸ் கருவி இருப்பதை அறியாமல் 10 டன் தேங்காய் கொண்ட லாரியை கடத்திய பொள்ளாச்சி நகர பா.ஜ.க செயலாளர் மணிகண்டன், கோகுல் உள்பட […]

Continue Reading

உ.பி.யில் இரண்டு மாதங்களில் 729 கொலை, 800 பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளதா?

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு மாதங்கள் 729 கொலையும் 800 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடந்துள்ளது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இரண்டு மாதங்களில் மட்டும் உ.பியில் 729 கொலை, 800 கற்பழிப்பு #பிபிசி_செய்தி” என்று குறிப்பிட்டுள்ளனர். இரண்டு மாதங்களில் என்று சொல்லியுள்ளார்கள்… ஆனால் எந்த இரண்டு மாதம் […]

Continue Reading

பிறப்பில் ஏற்றத்தாழ்வு உண்டு!- எச்.ராஜா கூறியதாகப் பரவும் வதந்தி!

பிறப்பில் ஏற்றத் தாழ்வுகள் உள்ளதை நம் வேத சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளது, என்று எச்.ராஜா ட்வீட் செய்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link எச்.ராஜா ட்வீட் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் எப்போது இந்த ட்வீட் வெளியிடப்பட்டது என்று இல்லை. ஒரு நாளைக்கு முன்பு என்று உள்ளது. அதில், “பிறப்பில் ஏற்ற தாழ்வுகள் உள்ளதை நம் வேத சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளது. தாழ்ந்தவன் […]

Continue Reading

ராஜ்ய சபாவில் முத்தலாக் மசோதாவுக்கு எதிராக வெளிநடப்பு செய்த தி.மு.க?– ஃபேஸ்புக் வதந்தி

மாநிலங்களவையில், முத்தலாக் தடுப்பு மசோதாவுக்கு எதிராக தி.மு.க வெளிநடப்பு செய்து, அந்த சட்டம் நிறைவேற உதவி செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மாநிலங்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேறியது தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை அடிப்படையாக கொண்டு, போட்டோ கார்டு ஒன்றை உருவாக்கி உள்ளனர். புதிய தலைமுறை நியூஸ் கார்டில் வெளிநடப்பு 29 என்று […]

Continue Reading

திராவிட கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி வைப்பது பற்றி ராமதாஸ் பேசியது என்ன?

‘’திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது பெற்ற தாயுடன் படுப்பதற்குச் சமம்,’’ என்று ராமதாஸ் சொன்னதாகக் கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பக்கோடா பாய்ஸ் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை கடந்த ஜூலை 11 அன்று வெளியிட்டுள்ளது. இதில், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது சொந்த அம்மாவுடன் படுப்பதற்குச் சமம், என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை ராமதாஸ் […]

Continue Reading

எடியூரப்பாவுக்கு 75 வயதாகிவிட்டதால் முதலமைச்சர் ஆக முடியாதா?

‘’எடியூரப்பாவுக்கு 75 வயதாகிவிட்டதால் முதல்வராக பதவி ஏற்க முடியாது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இந்த பதிவு கடந்த ஜூலை 27ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், எடியூரப்பாவுக்கு, 75 வயதாகிவிட்டதால் முதலமைச்சராக முடியாது என்று கூறியுள்ளனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நபர் இந்த பதிவை ஜூலை 27ம் தேதி வெளியிட்டுள்ளார். ஆனால், எடியூரப்பா ஜூலை 26ம் […]

Continue Reading

குஜராத்தில் சாக்கடையில் விழுந்த மாவட்ட ஆட்சியர்: உண்மை என்ன?

‘’குஜராத்தில் சாக்கடையில் விழுந்த மாவட்ட ஆட்சியர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Vaithialingam Natarajan என்பவர் இந்த பதிவை ஜூலை 28, 2019 அன்று பகிர்ந்துள்ளார். அதில், பெண் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென நின்றுகொண்டிருந்த பலகை சரிந்து, சாக்கடையில் விழுகிறார். அவருடன் நின்றவர்களும் கீழே விழ, சுற்றி நிற்கும் அதிகாரிகள், போலீசார் […]

Continue Reading

முதல்வர் அறிமுகம் செய்த கார் வெடித்து சிதறியது! – பரபரப்பை ஏற்படுத்திய ‘சமயம் தமிழ்’

முதல்வர் பழனிசாமி அறிமுகம் செய்த கார் வெடித்துச் சிதறியது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link 1 I News Link I Archived Link 2 “முதல்வர் பழனிசாமி அறிமுகப்படுத்திய சொகுசு கார் வெடித்து சிதறியது! ஹூண்டாய் நிறுவனத்துக்கு சோதனை! அதிமுக உறுப்பினர்கள் வேதனை!” என்று நிலைத்தகவலுடன் செய்தி ஒன்றை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தமிழ் பிரிவான […]

Continue Reading

“உலகின் மிகவும் ஊழல் மலிந்த கட்சிகள் பட்டியலில் தி.மு.க!” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

உலகின் மிகவும் ஊழல் மலிந்த கட்சிகள் பட்டியலில் தி.மு.க-வுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளதாக ஒரு புகைப்படத்துடன் கூடிய தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஒரு இன்ஃபோகிராபிக்ஸ் கார்டு பகிர்ந்துள்ளனர். அதில், தி.மு.க உலக அளவில் 4வது ஊழல் கட்சி என சர்வே முடிவு சொல்கிறது என்று தலைப்பு உள்ளது. ஃபாக்ஸ் நியூஸ் டாட் காம் 2017ம் ஆண்டு வெளியிட்ட சர்வே […]

Continue Reading

சீமான் அருகில் கூட போலீசாரால் நெருங்க முடியவில்லை: ஃபேஸ்புக் விஷமம்

‘’சீமான் அருகில் கூட போலீசாரால் நெருங்க முடியாது, அவரை இதுவரை போலீஸ் கைது செய்யவில்லை,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் செய்தி பற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Aashiq என்ற நபர் கடந்த ஜூலை 7, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், வடிவேலுவின் நகைச்சுவை காட்சி ஒன்றை பகிர்ந்து, அதனை சீமானுடன் ஒப்பிட்டு, ‘’திருமுருகன் காந்தி, வேல்முருகன், வைகோவை […]

Continue Reading

“சீமானுக்கு சொந்தமான போலி மதுபான ஆலை?” – ஃபேஸ்புக் பகீர் தகவல்!

துறையூர் அருகே சீமானுக்கு சொந்தமான போலி மதுபான ஆலையை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 2019 பிப்ரவரி 21 தேதியிட்ட நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு மற்றும் செய்தியைப் பகிர்ந்துள்ளனர். நியூஸ் கார்டில், “துறையூர் அருகே சீமானுக்கு சொந்தமான கள்ளச்சாராய ஆலைக்கு போலீசார் சீல்! மேனேஜர் தப்பி ஓட்டம்!” […]

Continue Reading

கிறிஸ்தவத்தை பரப்ப தடையாக இருப்பது இந்து கோவில்கள்! – கமல் கூறியதாகப் பரவும் பகீர் ஃபேஸ்புக் தகவல்

“தமிழ்நாட்டில் கிறிஸ்தவத்தைப் பரப்பத் தடையாக இருப்பது இந்து கோவில்கள்தான். அதை ஒழிக்க இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டுள்ளது… அதில் கிறிஸ்தவர்களை நியமித்து கருணாநிதி துணை செய்தார்” என்று அமெரிக்க கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link கமல்ஹாசன் போட்டோ கார்டு ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அதில், கமலஹாசன் அமெரிக்காவில் கல்லூரி விழாவில் […]

Continue Reading

தமிழன் என்பதால் இஸ்ரோ சிவனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மோடி ரத்து செய்தாரா?

‘’தமிழன் என்பதால் இஸ்ரோ சிவனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மோடி ரத்து செய்துவிட்டார்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link குறிஞ்சி நாதன் என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை ஜூலை 25, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், இஸ்ரோ சிவன் பற்றி நியூஸ் 7 தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியை பதிவிட்டு, தமிழன் என்பதாலும், அவர் […]

Continue Reading

அத்தி வரதரை தரிசித்த சீமான்: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை என்ன?

‘’அத்தி வரதரை தரிசித்த ஆன்மீக தமிழன் சீமான்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link சூர்ய புத்திரன். என்.பிரபாகரன். விருதுநகர் என்பவர் ஜூலை 16, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், குழந்தையை சுமந்தபடி நிற்கும் ஒரு பெண்ணின் அருகே சீமான் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ பெண்டாட்டி […]

Continue Reading

வைகோவுக்கு மரண அடி கொடுத்த வெங்கையா நாயுடு?

நாடாளுமன்றத்தில் பேசிய வைகோவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்வோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link வெங்கையா நாயுடு புகைப்படத்துடன் கூடிய பிரேக்கிங் நியூஸ் கார்டு போன்ற ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், “வைகோவுக்கு ஆரம்பமே சறுக்கல்” என்று பெரிய தலைப்பு வைத்துள்ளனர். தொடர்ந்து, “கோரிக்கை வைப்பதோடு நிறுத்தி கொள்ளுங்கள், எச்சிரிப்பதெல்லாம் கருப்பு பலூனோடு வைத்துக் கொள்ளுங்கள், […]

Continue Reading

யோகாவும், வேத மருத்துவமும் கைவிட்டதால் அலோபதி சிகிச்சை பெறும் பாபா ராம்தேவ்! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

யோகாவும், வேத மருத்துவமும் கைவிட்டதால் எம்.பி.பி.எஸ் டாக்டரிடம் சிகிச்சை பெறும் பிரபல யோகா குருவும் பதஞ்சலி நிறுவனத்தைத் தொடங்கியவருமான ராம்தேவ் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பிரபல யோகா குரு ராம்தேவ் படுக்கையில் இருக்கிறார். அவரை ஸ்டெதஸ்கோப் வைத்து மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்கிறார். இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் இல்லை. […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் இறந்த பெண்ணின் கை, காலை ஒடித்து மூட்டை கட்டினார்களா?

‘’உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்சிற்கு கொடுக்க காசில்லாததால் இறந்த மனைவியின் கை, காலை ஒடித்து மூட்டை கட்டிய அப்பா, மகன்,’’ என்று கூறி ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தட்டிக் கேட்போம் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சடலம் ஒன்றின் கை, கால்களை சிலர் முறித்து, மூட்டை கட்டும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, […]

Continue Reading

இந்துக்களை திட்டிய நடிகர் விஜய் அப்பா! – நியூஸ்7 செய்தி உண்மையா?

இந்துக்கள் துரோகிகள் என்பதை நிரூபித்துவிட்டார்கள் என்று விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 2019ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி வெளியானதாக கூறப்படும் நியூஸ் 7 தொலைக்காட்சியின் சமூக ஊடகத்தில் பகிரப்படும் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வளர்த்த கிடா மாரில் பாய்ந்துவிட்டது! இந்துக்கள் துரோகிகள் என்பதை […]

Continue Reading

தமிழர்கள் ஓட்டு போட்டு எடியூரப்பா முதல்வராகவில்லை” – தமிழிசை பெயரில் பரவும் ட்வீட்!

எடியூரப்பாவிடம் பேசி காவிரி நீர் வாங்கித் தர சொல்கிறார்கள். தமிழர்கள் ஓட்டு போட்டு ஒன்றும் எடியூரப்பா முதல்வர் ஆகவில்லை என்று தமிழிசை ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தமிழிசை செய்த இரண்டு ட்வீட்கள் ஒன்றின் மீது ஒன்றாக வைத்து புகைப்படமாகப் பதிவிடப்பட்டுள்ளது. முதல் ட்வீட்டில், “பெங்களூர் சென்று அவர்களின் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் நீர்ப் […]

Continue Reading

ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்ற சிதம்பரம் – ஃபேஸ்புக் பகீர் பதிவு

அதிக தொகை கொடுத்ததால் இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அந்த படத்தின் மீது, “இந்திய ரூபாய் அச்சடிக்கும் இயந்திரத்தின் ஆயுட்காலம் முடிந்தமையால் […]

Continue Reading

அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு திமுக கூட்டணியின் 38 எம்பிகள் மட்டுமே காரணமா?

‘’அஞ்சல் துறை தேர்வுகளை ரத்து செய்து தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உத்தரவிட்டதற்கு திமுக கூட்டணியின் 38 எம்பிகள் மட்டுமே காரணம்,’’ என்று கூறி வைரலாக ஷேர் செய்யப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Sadhu Sadhath என்ற நபர் கடந்த ஜூலை 16, 2019 அன்று இந்த […]

Continue Reading

மருத்துவமனைகளில் ஜோதிடரை நியமிக்க உத்தரப் பிரதேச அரசு திட்டம்: உண்மை அறிவோம்!

‘’உத்தரப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஜோதிடர்களை பணியமர்த்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பெரியார் பேரவை பெரியார் பேரவை என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 20, 2019 அன்று பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் […]

Continue Reading

மத்திய பிரதேச பெண் அமைச்சர் இமார்த்தி தேவி பா.ஜ.க-வை சேர்ந்தவரா?

கழிவறையில் உணவு சமைப்பது பிரச்னைக்குரியது இல்லை என்று மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி கூறியிருந்தார். அவர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி புகைப்படம் மற்றும் தமிழ் திரைப்படத்தின் காட்சி ஒன்று ஒன்றின் கீழ் ஒன்றாக வைக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது. அமைச்சரின் படத்தின் மேல், “கழிவறையில் உணவு […]

Continue Reading