FACT CHECK: காந்தியை சுட்டுக் கொன்றவர் தேசபக்தர் என்று கமல் கூறவில்லை!

“தேசபக்தி கொண்ட இந்தியரால் காந்திஜி சுட்டுக்கொல்லப்பட்டார்” என்று கமல் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஒன் இந்தியா தமிழ் வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “தேசபக்தி கொண்ட இந்தியரால் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.. கமல்ஹாசன் புது விளக்கம்” என்று கூறப்பட்டு இருந்தது. இந்த பதிவை Manoharan Karthik என்பவர் 2021 பிப்ரவரி 1 […]

Continue Reading

FACT CHECK: ரூ. 5, 10, 100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை!

ரூ.5, 10, 100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததாக பல செய்தி மற்றும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I kumudam.com I Archive 2 “ரூ.5, ரூ.10, ரூ.100 விரைவில் திரும்பப் பெறப்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!” என்று குமுதம் இதழ் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்ட செய்தி 2021 ஜனவரி 23ம் […]

Continue Reading

FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா?

குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாடு என தமிழில் எழுதப்படவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஊர்தியின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு என இந்தியில் எழுதப்பட்டுள்ளதை வட்டமிட்டு காட்டியுள்ளனர். நிலைத் தகவலில், “தமிழ்நாடு என தமிழில் எழுதப்படாமல் இந்தியில் எழுதப்பட்டிருகிறது… […]

Continue Reading

FACT CHECK: லண்டன் விமான நிலையத்தில் டீக்கடை திறந்த தமிழன்?- உண்மை அறிவோம்

லண்டன் விமானநிலையத்தில் தமிழர் ஒருவர் நம் ஊர் பாணியில் டீக்கடை ஒன்றைத் திறந்துள்ளார் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அரங்கு ஒன்றுக்குள் கிராமத்து டீக்கடை செட் அப் கடை ஒன்று இருப்பது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லண்டன் ஏர்போர்ட்டில் நம்ம ஊரு பாணியில் டீக்கடை போட்ட நம்ம தமிழனின் துணிவு…..” என்று […]

Continue Reading

கொரோனாவால் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் என்று பகிரப்படும் விஷம வீடியோ!

இந்த ஆண்டு கொரோனா தேர்வால் வெற்றி பெற்ற மாணவன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 சிறுவன் ஒருவர் பொருட்களை எடை போடும் இயந்திரத்தில் அரிசியை எடைபோடுவது போல உள்ளது. எடை பார்க்கும் இயந்திரம் பற்றித் தெரியாமல் அதன் மீதே அரிசி கிண்ணத்தை வைத்துவிட்டு, அதிலிருந்து பிளாஸ்டிக் பைக்குள் அரிசியை எடுத்துப் போடுகிறான். […]

Continue Reading

45 ஆண்டுக்கு ஒரு முறை காணப்படும் நாகபுஷ்பா என்று பகிரப்படும் பவளப் பாறையின் புகைப்படம்!

45 ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படும் நாகபுஷ்பம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மலர் போல தோற்றம் அளிக்கும் ஒன்றில் அருகே நல்ல பாம்பு படம் எடுத்தபடி இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாகபுஷ்பா சுமார் 45 ஆண்டுகளுக்கு ஒருமுறை காணப்படுகிறது.. பார்த்தவுடன் ஓம் என்று சொல்லுங்கள்.. நல்லதே நடக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ‎ஓம் […]

Continue Reading

லலிதா ஜூவல்லரி நிறுவனம் கொரோனா நிவாரணம் வழங்கவில்லையா?- இதோ உண்மை!

ஆந்திரா, தெலங்கானாவுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய பிரபல ஜூவல்லரி நிறுவனம் தமிழகத்துக்கு எதுவும் தரவில்லை என தமிழர்களைத் திருந்தும்படி கூறும் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரபல ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் ரெட்டி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கொரோனா நிவாரணம் வழங்கும் புகைப்படத்துடன் ஸ்கிரீன்ஷாட் எடுத்த பதிவை பகிர்ந்துள்ளனர்.  அதில், “லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் […]

Continue Reading

மினி பாகிஸ்தான் ஆகிறதா சென்னை?- நடக்காத விசயத்துக்கு கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

சென்னை மெரினாவில் கஞ்சா போதையில் பெண்களிடம் தகராறு செய்த இஸ்லாமியர்களை தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளர் அகிலன் தாக்கப்பட்டார், என்று சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காவலர் ஒருவர் தாக்கப்பட்ட படத்துடன் வெளியான பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “என் கவுண்டர்ல போட்டு ஃபைலை குளோஸ் பண்றத விட்டு… மினி பாகிஸ்தான் ஆகும் சென்னை: மெரினா கடற்க்கரையில் கஞ்சா […]

Continue Reading

ஆறு மாதம் கழித்து இயக்கியதால் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் ஓட்டுநர்?- விஷமத்தனமான பதிவு

ஆறு மாதம் கழித்து ஓட்டியதால், பிரேக்குக்கும், ஆக்சிலேட்டருக்கும் வித்தியாசம் தெரியாமல் அரசு பஸ் ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்திவிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அரசு பஸ் தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆறு மாசமா ரெஸ்ட் எடுத்தவனை, திடீர்னு இன்னிக்கு பஸ்சை ஓட்றா னு சொன்னுதும் சொன்னாங்க… பிரேக்கு எங்க இருக்கு, ஆக்சிலேட்டர் எங்க […]

Continue Reading

செயற்கையாக முந்திரிப் பருப்பு தயாரிக்கப்படுவதாக பரவும் வதந்தி!

தொழிற்சாலையில் செயற்கை முறையில் முந்திரி தயாரிக்கப்படுவதாகக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இயந்திரம் ஒன்றில் இருந்து முந்திரி வடிவத்தில் வெளிவரும் உணவுப் பொருள் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். இந்தியில் ஏதோ சொல்கிறார்கள். நிலைத் தகவலில், “செயற்கையாக உருவாக்கப்படும் முந்திரிப்பருப்பு! இது ஒரு எச்சரிக்கை பதிவு!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Veeramani Sekar என்பவர் 2020 ஆகஸ்ட் 23ம் தேதி […]

Continue Reading

‘எச்.ராஜா இருக்கும்வரை தாமரை மலராது’ என்று எல்.முருகன் கூறியதாகப் பரவும் வதந்தி

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து எச்.ராஜா விலகாத வரை தமிழ்நாட்டில் தாமரை மலர்வது கடினம் என்று எல்.முருகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவல் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை நியூஸ் கார்டுடன் நடிகர் வடிவேலுவின் திரைப்பட காட்சியைச் சேர்த்துப் பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “பாஜகவிலிருந்து எச்.ராஜா விலகாதவரை; தமிழ்நாட்டில் தாமரை மலர்வது என்பது மிகக்கடினம். – எல்.முருகன், தமிழக […]

Continue Reading

2021-ல் முதல்வர் ஆகாவிட்டால் கைலாசா சென்றுவிடுவேன் என்று ஸ்டாலின் கூறினாரா?

“2020ல் முதல்வர் ஆகவில்லை என்றால் நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்குச் சென்றுவிடுவேன்” – என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, தந்தி டி.வி பெயரில் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில் “2021ல் நான் முதல்வர் ஆகவில்லை என்றால் நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்குச் சென்றுவிடுவேன் – மு க ஸ்டாலின் ஆவேசம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. […]

Continue Reading

கும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்?

கும்பகோணம் நாச்சியார்கோவிலில் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் கோபாலை இஸ்லாமியர்கள் கொலை செய்தார்கள் என்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முகத்தில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடக்கும் முதியவர் படம் மற்றும் வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில் கொலை செய்தது யார் என்று தெரியவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக மாநாடு நடத்தப்பட்டதால் ஆத்திரத்தில் இப்படி செய்தார்களா என்று தெரியவில்லை என்று ஒருவர் கூறுகிறார். […]

Continue Reading

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை வீடியோ உண்மையா?

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சித்ரவதை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 தலைகீழாக தொங்க விடப்பட்ட நபருக்கு பின்புறம் லத்தி போன்ற கம்பை நுழைத்து தாக்கும் கொடூர வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சாத்தான் குளத்தில் அப்பாவி வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை […]

Continue Reading

எஸ்பிஐ விசாரிக்கும்படி மு.க.ஸ்டாலின் கேட்டதாகப் பரவும் வதந்தி!

‘’சாத்தான்குளம் விவகாரத்தில் எஸ்பிஐ விசாரிக்க வேண்டும்,’’ என்று மு.க.ஸ்டாலின் கேட்டதாகக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ‘’சாத்தான்குளம் விவகாரத்தில் தமிழக அரசு SBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,’’ என்று மு.க.ஸ்டாலின் கேட்டதாக, இதில் தகவல் பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட செய்தி பார்ப்பதற்கு, எதோ ஒரு […]

Continue Reading

மொழிப் போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராஜன் திமுக உறுப்பினர்கள் இல்லை!

‘’மொழிப் போர் தியாகிகள் நடராஜன், தாளமுத்து இருவரும் திமுகவினர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் பற்றி ஆராய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 உண்மை அறிவோம்: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தார். இவரது மறைவை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பல விதமான வதந்திகள் […]

Continue Reading

போலீசாருடன் தகராறு செய்யும் இவர் திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் இல்லை!

‘’திமுக வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர் போலீசாருடன் தகராறு செய்யும் வீடியோ,’’ என்று கூறி பரவும் ஒரு தகவலை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இந்த வீடியோவில், வெள்ளை வேட்டி, சட்டை அணிந்த ஒருவர், அதிகார தோரணையில் போலீசாரிடம் டோல்கேட் ஒன்றில் மல்லுக்கு நிற்பதைக் காண முடிகிறது. […]

Continue Reading

கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததா? – வைரல் ஃபேஸ்புக் வதந்தி

கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 நிலத்தடியில் இருந்து நடராஜர் சிலை எடுக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “கீழடியில் கிடைக்கபெற்ற அம்பலத்தாடும் திருகூத்தர் நடராஜ பெருமான்!!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Mohan என்பவர் 2020 ஜூன் 24ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து […]

Continue Reading

Fact Check: ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்ததா?

தமிழகத்தில் வருகிற ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் சிலர் தகவல் பரப்பி வருகின்றனர். அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “ஜன.6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த […]

Continue Reading

தமிழக அரசு மீது குற்றம்சாட்டினாரா தாமோதரனின் மனைவி?

கொரோனா பாதிப்பு காரணமாக தன்னுடைய கணவர் மரணம் அடைய முதல்வர் அலுவலகத்தின் அலட்சியம்தான் காரணம் என்று தனிச் செயலாளர் தாமோதரனின் மனைவி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “என் கணவரின் மரணத்திற்கு முதல்வர் அலுவலகத்தின் அலட்சியம்தான் காரணம் – தனிச் செயலாளர் தாமோதரனின் மனைவி” என்று உள்ளது.  நிலைத் […]

Continue Reading

டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டதால் சிக்கிய மைனர் திருமண ஜோடி இவர்களா?

டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டதால் போலீசாரிடம் சிக்கிய மைனர் திருமண ஜோடி என்று கூறி பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி இங்கே பார்க்கலாம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், இளம் திருமண ஜோடியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களின் திருமண வீடியோவை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்த மாப்பிள்ளையின் நண்பன், மாப்பிள்ளை, இருவீட்டாரின் குடும்பத்தார் ஆகியோர் மீது 5 […]

Continue Reading

விபூதி பூசியதால் பிரக்ஞானந்தாவின் சாதனையை மறைத்த திராவிட ஊடகங்கள்!- ஃபேஸ்புக் விஷமம்

நெற்றியில் விபூதி போட்ட காரணத்தால் மும்பையில் நடந்த 18 வயதிற்குட்பட்டோருக்கான உலக செஸ் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சிறுவன் பிரக்ஞானந்தாவின் சாதனையை திராவிட (தமிழ்) ஊடகங்கள் மறைத்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “திராவிடத்தின் பெயரில் திட்டமிட்டு மறைக்கப்படும் சாதனை சிறுவனின் புகழ். நெற்றியில் விபூதி […]

Continue Reading

மோடியை எதிர்த்து களம் இறங்கிய பெண் போலீஸ் அதிகாரி!- ஃபேஸ்புக் வதந்தி

பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்று டி.வி நடிகை ஒருவர் படத்தை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link டி.வி நடிகை ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மோடியை எதிர்த்து களமிறங்கிய இந்த பெண் IPS அதிகாரிக்கு ஒரு சேர் செய்து ஆதரவளிக்கலாமே நண்பர்களே!” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை ‎ஈரோட்டு வேந்தன் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Chandru Covai என்பவர் ஜூன் 7ம் […]

Continue Reading

மாஸ்க் அணியாவிட்டால் பாஜக உறுப்பினர் அட்டை தரப்படும் என்று போலீசார் கூறினரா?

‘’மாஸ்க் அணியாவிட்டால் பாஜக உறுப்பினர் அட்டை தரப்படும் என போலீசார் எச்சரிக்கை,’’ என்று கூறி பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link நியூஸ் 7 டிவி வெளியிட்டதைப் போல இந்த பிரேக்கிங் நியூஸ் கார்டு உள்ளது. இதனால் பலர் உண்மை என நம்பி குழப்பமடைந்துள்ளனர். இந்த செய்தியை வேறு டெம்ப்ளேட்டில் மற்றொரு ஃபேஸ்புக் பயனாளரும் பகிர்ந்திருந்தார்.  Facebook Claim […]

Continue Reading

ஜெயலலிதா உடன் இருப்பவர் நிர்மலா சீதாராமன் இல்லை; முழு விவரம் இதோ!

‘’ஜெயலலிதா உடன் இருப்பவர் நிர்மலா சீதாராமன்,’’ என்று கூறி ஒரு வைரல் புகைப்படம் பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ‘’ஜெயலலிதாவுடன் தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றாக இருக்கும் அரிய புகைப்படம்,’’ என்று கூறி பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ஜெயலலிதா பிறந்தது கர்நாடகாவில், நிர்மலா சீதாராமன் பிறந்தது மதுரையில். இதுதவிர, இருவருக்கும் இடையே 11 ஆண்டுகள் வயது வித்தியாசம் […]

Continue Reading

கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.14,500 இழப்பீடு கோரியதா திமுக?

‘’கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.14,500 இழப்பீடு கோரிய திமுக,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அதில், ‘’கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு ரூ.7,500ம், மாநில அரசு ரூ.5,000ம் ஆக மொத்தம் ரூ.14,500 உடனே வழங்க வேண்டும் […]

Continue Reading

தமிழக அரசு மட்டன், சிக்கனுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளதா?- விஷமத்தனமான வதந்தி!

‘’மட்டன், சிக்கன் போன்ற இறைச்சிகளுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link  இந்த பதிவில், ஒரு விளம்பர அறிவிக்கை போன்ற ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதில், ‘’மட்டன் சிக்கன் இறைச்சிகளுக்கு அரசால் விலை நிர்ணயம். மட்டன் ரூ.550 (ஒரு கிலோ), சிக்கன் ரூ.200 (ஒரு கிலோ). இன்று முதல் இறைச்சி கடைகளுக்கு மாவட்ட ஆட்சியரால் […]

Continue Reading

திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்!

‘’பர்மா கட்சியை பார்த்து சின்னம், பெயரை திருடிய திமுக,’’ என்ற பெயரில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், கடந்த 2019ம் ஆண்டில் வெளியான மற்றொரு ஃபேஸ்புக் பதிவின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த அசல் பதிவையும் கீழே இணைத்துள்ளோம்.  Facebook Claim Link  Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், பர்மா திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட […]

Continue Reading

நாயிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பாஜக?- ஃபேஸ்புக் விஷம பதிவு

சென்னையில் நாயை பா.ஜ.க இளைஞன் கற்பழித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link செய்தி ஒன்றின் மொபைல் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “சென்னையில் பயங்கரம்! நடுரோட்டில் வைத்து நாயைக் கதற கதற கற்பழித்த (பஜக) இளைஞன்!” என்று உள்ளது. நிலைத் தகவலில், “நாயை கற்பழித்த சங்கீஸ்சென்னையில் ஆட்டை தொடர்ந்து தற்போது நாயின் கற்புகள் சூறயாடபடுகிறது, இதனை அனைவரும் பகிர்ந்து கண்டனங்களை எழுப்பி […]

Continue Reading

சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா? உண்மை அறிவோம்!

‘’போட்டோஷாப் செய்து ஏமாற்றும் சீமான், பிரபாகரனை சந்திக்கவில்லை,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், திருமாவளவன் – பிரபாகரன் மற்றும் சீமான் – திருமாவளவன் மற்றும் பிரபாகரன் – சீமான் ஆகியோர் சந்தித்த புகைப்படங்களை இணைத்து, ‘’உயரம் குறைவாக உள்ளதால், சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறார்; அவர் பிரபாகரனை சந்திக்கவில்லை,’’ எனக் கூறியுள்ளனர்.  உண்மை […]

Continue Reading

விஜய் சேதுபதி மனைவி பற்றி பகிரப்படும் அநாகரீக பதிவு!

‘’எனது மனைவி உடைமாற்றும் காட்சிகளை வெளியிடத் தயார்,’’ என்று விஜய் சேதுபதி கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர் விஜய் சேதுபதி படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டுடன் நடிகர் மணிவண்ணன் புகைப்படத்துடன் கூடிய புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “என் மனைவி உடைமாற்றும் காட்சிகளை வெளியிடவும் தயார்! – இந்து கடவுள் குறித்து […]

Continue Reading

குடியரசுத் தலைவர் விருது 2020 விண்ணப்ப பட்டியலில் தமிழ் மொழி புறக்கணிப்பா?

‘’குடியரசுத் தலைவர் விருது 2020 விண்ணப்ப பட்டியலில் தமிழ் மொழி புறக்கணிப்பு,’’ என பகிரப்படும் வைரல் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி உண்மை விவரம் கண்டறியும்படி கேட்டிருந்தார். இதே தகவலை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என விவரம் தேடினோம். அப்போது பலரும் இதனை பகிர்வதைக் கண்டோம்.  Facebook Claim Link 1 Archived Link Facebook Claim Link 2 Archived Link […]

Continue Reading

முன்னாள் அமைச்சர் பொன்முடி குத்தாட்டம்; வைரல் வீடியோவின் முழு உண்மை இதோ!

‘’முன்னாள் அமைச்சர் பொன்முடி குத்தாட்டம்,’’ என்ற தலைப்பில் டிரெண்டிங் ஆகியுள்ள ஒரு வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  இந்த பதிவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும் முன்பாக, இதே வீடியோ பற்றி கடந்த 2019ம் ஆண்டில் வெளியான மற்றொரு செய்தியையும் கண்டோம். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.  FB Link Archived Link 1 Asianet News Link Archived […]

Continue Reading

ஜோதிகாவை ஆதரித்து ட்வீட் வெளியிடவில்லை: விஜய் சேதுபதி மறுப்பு

‘’நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஜோதிகாவை ஆதரித்து வெளியிட்ட ட்வீட் பதிவு,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  இதேபோல, விஜய் சேதுபதி பெயரில் வெளியிடப்பட்ட ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை சிலர் ஆதாரமாக இணைத்திருந்தனர். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: நடிகை ஜோதிகா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘’தஞ்சை பெரிய கோயிலை […]

Continue Reading

சுப வீரபாண்டியன் பற்றி பகிரப்படும் தவறான புகைப்படம்!

சுப வீரபாண்டியன் பற்றி பகிரப்படும் ஒரு புகைப்பட பதிவை ஃபேஸ்புக்கில் கண்டோம். அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த புகைப்படத்தை பலர் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:‘கள்ளக்காதல்’ என்று சொல்லாமல் ‘திருமணம் கடந்த உறவு’ என்று சொல்லுங்கள், என சமீபத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் பேசியிருந்தார். அவரது கருத்து பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. […]

Continue Reading

முட்டாள் பட்டம் கிடைக்க விளக்கேற்ற வேண்டும்- போலியான காலண்டர் பழமொழி!

‘’முட்டாள் பட்டம் கிடைக்க விளக்கேற்ற வேண்டும்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு தமிழ் காலண்டர் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், காலண்டர் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’முட்டாள் பட்டம் கிடைப்பதற்கு அறிவு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, வேண்டுதல் இன்றி விளக்கு ஏற்றினாலே கிடைத்துவிடும்,’’ என ஒரு பழமொழி எழுதப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர். இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

தமிழக அரசின் கடனை ஏற்றுக் கொள்வதாக கனடா பிரதமர் வாக்குறுதி அளித்தாரா?

‘’தமிழக அரசின் கடனை ஏற்றுக் கொள்வதாக கனடா பிரதமர் வாக்குறுதி அளித்தார்,’’ என்று கூறி பகிரப்பட் டுவரும் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புகைப்படத்தை இணைத்து ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’தமிழகத்தின் கடன் 3.59 லட்சம் கோடியை தானே அடைத்து விடுவதாக கனடா பிரதமர் சொல்லி விட்டார்,’’ […]

Continue Reading

முகமது அலி ஜின்னா சிறையில் வாடும் புகைப்படம் இதுவா?

‘’முகமது அலி ஜின்னா சிறையில் வாடும் புகைப்படம்,’’ என்ற பெயரில் பகிரப்படும் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், நெல்சன் மண்டேலாவின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’இருபத்தியேழு ஆண்டுகள் இவர் தனிமைச் சிறையில் வாடியபோது, நம்மால் 21 நாட்கள் வீட்டில் இருக்க முடியாதா,’’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், இந்த புகைப்படத்தின் தலைப்பில் ‘’மொஹம்மட் அலி ஜின்னா’’ எனக் […]

Continue Reading

ஆலங்கட்டி மழை பெய்தது திருத்தணியா… கொடைக்கானலா?– ஃபேஸ்புக் வீடியோவால் குழப்பம்

திருத்தணியில், கொடைக்கானலில் பனிமழை பெய்தது என்று ஒரே வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த வீடியோ உண்மையில் எங்கே எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 3.18 நிமிடம் ஓடக்கூடிய ஆலங்கட்டி மழை பொழியும் வீடியோவை Manickam Mahimairaj என்பவர் ஏப்ரல் 8, 2020 அன்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கொடைக்கானலில் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.  ஏப்ரல் […]

Continue Reading

கனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றாரா?

‘’பாடகி கனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றார். அவரால் அந்த மருத்துவமனை முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இதில், கனிகா கபூர் பற்றி ஊடகங்களில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி, மிகவும் தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். […]

Continue Reading

ரேசன் கடையில் குவார்ட்டர் கேட்ட கிஷோர் கே சுவாமி தாக்கப்பட்டாரா?

‘’ரேஷன் கடையில் குவார்ட்டர் கேட்ட கிஷோர் கே சுவாமி தாக்கப்பட்டார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: இந்த பதிவின் கமெண்ட் பகுதியில் இது உண்மையா என ஃபேஸ்புக் பயனாளர் ஒருவர் கேட்க, பதிவை வெளியிட்ட நபர், ‘’அடி வாங்குனது உண்மைன்னு கேள்விப்பட்டேன்.. ஆனால், விருகம்பாக்கத்துல இல்ல.. அசோக் நகர் பக்கம்.. பிளாக் […]

Continue Reading

தமிழக மக்கள் தங்க நகைகளை தரும்படி பாஜக தலைவர் முருகன் கூறினாரா?

‘’தமிழக மக்கள் தமது தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்,’’ என்று பாஜக தலைவர் முருகன் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 தந்திடிவி பெயரில், பாஜக தமிழக தலைவர் முருகனின் புகைப்படத்துடன் இந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘’தேசநலன் கருதி […]

Continue Reading

கொரோனா வைரஸ் ஊரடங்கு; புதுக்கோட்டையில் மான்கள் சுற்றும் காட்சி உண்மையா?

‘’கொரோனா வைரஸ் ஊரடங்கால் புதுக்கோட்டை தெருக்களில் மான்கள் சுற்றி திரியும் காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவை வெளியிட்டவர், இது நிச்சயமாக புதுக்கோட்டையில் நிகழ்ந்ததுதான் என்று நம்பிக்கையுடன் கூறுவதைக் காண முடிகிறது. அதனையடுத்து, உண்மை என நம்பி பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட புகைப்படம் உண்மையிலேயே புதுக்கோட்டையில்தான் எடுக்கப்பட்டதா […]

Continue Reading

நடிகர் விஜய் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக ரூ.300 கோடி கொடுத்தாரா?

‘’நடிகர் விஜய் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக ரூ.300 கோடி கொடுத்தார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  இந்த பதிவில் நடிகர் விஜய், ‘’கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு ரூ.300 கோடி நிவாரண உதவி செய்துள்ளார். அவரை நாம் முதல்வராக மாற்ற வேண்டும்,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் […]

Continue Reading

கொரோனா வைரஸ் பற்றி புரியாத மொழியில் கமல்ஹாசன் ட்வீட் வெளியிட்டாரா?

‘’கொரோனா வைரஸ் பற்றி கமல்ஹாசன் வெளியிட்ட புரியாத ட்வீட்,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்படும் பதிவு ஒன்றை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய நேரிட்டது. தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link கமல்ஹாசன், 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் மற்றும் சீனா பற்றி கேலி செய்து பதிவு வெளியிட்டார் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது பார்க்க பகடி போல இருந்தாலும், பலர் இதனை உண்மை என […]

Continue Reading

கொரோனா வைரஸ்: கருணாநிதி சமாதியில் யாகம் நடத்தப்பட்டதா?

‘’கொரோனா வைரஸ் வராமல் தடுக்கும் வகையில் கருணாநிதி சமாதியில் யாகம் நடத்தப்பட்டது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில் கருணாநிதியின் சமாதியில் சில பிராமணர்கள் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைய சமாதியில் ஹோமம். பிராமணர்களை அழைத்து வந்து திமுக அசத்தல். பகுத்தறிவு ஹோமம்,’’ […]

Continue Reading

மட்டன் சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் பரவியதா?

மட்டன் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் பழைய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கேரளாவையொட்டி தமிழகத்திலும் ஆட்டுக்கறி உண்டதால் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, தமிழன் சிவா என்பவர் 2020 மார்ச் 16ம் தேதி பதிவிட்டுள்ளார். நிலைத் தகவலில் “900ஓவாயாடா? […]

Continue Reading

ரஜினி, கமலுடன் மோடி நிற்கும் போலியான புகைப்படம்!

நடிகர் ரஜினி மற்றும் கமலுக்கு மத்தியில் மோடி இருக்கும் வகையில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த்துக்கு நடுவே அவர்கள் தோள் மீது கைபோட்டபடி நரேந்திர மோடி நிற்கும் பழைய புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், “ரெண்டு பேருமே நம்ப ஜீயோட சிஷ்யனுங்கதான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Ameer Sulthan S என்பவர் […]

Continue Reading

அப்பா, அம்மா இல்லாத குழந்தைகளுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2000 நிதி உதவி வழங்குகிறதா?

‘’அப்பா, அம்மா இல்லாத மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2000 நிதி உதவி வழங்குகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், கிராம நிர்வாக அலுவலர் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளனர். ஆனால், அவர் எந்த கிராம நிர்வாக அலுவலர் என்று பெயர் விவரம் எதுவும் வெளியிடவில்லை. அத்துடன், ‘’நமது மாணவ மாணவியர்களின் […]

Continue Reading

பெரியார் சிலையை தொட்டால் கோயில் சிலைகளை உடைப்போம்- கி.வீரமணி பெயரில் பரவும் வதந்தி

‘’பெரியார் சிலையை தொட்டால் கோயில் சிலைகளை உடைப்போம்,’’ என்று கி.வீரமணி சொன்னதாகக் கூறி பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இந்த பதிவை உண்மை என நம்பி பலர் ஷேர் செய்வதையும், கமெண்ட் செய்வதையும் காண முடிகிறது. உண்மை அறிவோம்: இந்த நியூஸ் கார்டு புதிய தலைமுறை பெயரில் வெளியாகியுள்ளதால், முதலில் இது உண்மையா இருக்குமோ என்ற சந்தேகத்தில், […]

Continue Reading