ராகவேந்திரா மண்டபத்தை தர முடியாது என்று லதா ரஜினிகாந்த் கூறவில்லை!

கொரோனா சிகிச்சைக்கு மண்டபங்கள் தேவைப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு அங்கு பராமரிப்பு பணி நடைபெற உள்ளது என்று லதா ரஜினிகாந்த் அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: புதிய தலைமுறை நியூஸ் டிக்கரோடு, தினத்தந்தி முதல் பக்கத்தை இணைத்து புகைப்பட பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி செய்தியில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த 750 திருமண மண்டபங்களில் முகாம்கள், பள்ளி, கல்லூரிகளில் 50 […]

Continue Reading

திருப்பத்தூர் டவுனில் நள்ளிரவில் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள்! – ஃபேஸ்புக் வதந்தி

திருப்பத்தூரில் நள்ளிரவில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் சாலைகளில் ஒன்று கூடி தொழுகை நடத்துவதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் டவுனில், ஜூம்மா மசூதி தெருவில் கடந்த இரண்டு நாட்களாக, நள்ளிரவு 1 மணிக்கு நடு ரோட்டிலேயே சுமார் 700நபர்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் உயரதிகாரிகளின் […]

Continue Reading

ஊட்டி – கோவை சாலையில் திரியும் மயில்கள்; இந்த புகைப்படம் உண்மையா?

ஊட்டி – கோவை சாலையை மயில்கள் ஆக்கிரமித்துள்ளதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஊட்டி – கோவை சாலை அதன் உண்மையான உரிமையாளரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று சாலை முழுக்க மயில்கள் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இதை Vanakkam Chennai என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஏப்ரல் 6ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

ஜோதிகா காலமானார் என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

நடிகை ஜோதிகா ஏப்ரல் 20ம் தேதி காலமானார் என்று விஷமிகள் வதந்தி பரப்பி வருகின்றனர். இதுபற்றி உண்மை நிலையை ஆய்வு செய்தோம். வதந்தியின் விவரம்: Facebook Link Archived Link நடிகை ஜோதிகா படத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. அதில், “நடிகை ஜோதிகா, ஏப்ரல் 20, 2020 அன்று இரவு இயற்கை எய்தினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Venkatesh Mba என்பவர் 2020 ஏப்ரல் 21 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து […]

Continue Reading

கொரோனாவில் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தாரா பூங்கோதை ஆலடி அருணா?

கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா எதிர்ப்பு தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பூங்கோதை ஆலடி அருணா படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “செய்தி:-கொரனோவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய திமுக MLA பூங்கோதை எதிர்ப்பு. ஏன்டா நேற்று தான் சுடலை ஒன்றிணைவோம் மயிரை புடுங்குவோம் சொன்னாரு” என்று குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading

மது மற்றும் போதைப் பொருள் விநியோகம் செய்ததா தமிழக பா.ஜ.க?

தமிழக பா.ஜ.க மது மற்றும் போதைப் பொருளை கட்சியினருக்கு விநியோகம் செய்தது போல ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பாரதிய ஜனதா கட்சி வழங்க கொரோனா நிவாரண பொருட்கள் அடங்கிய பையின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு, மது மற்றும் போதைப் பொருட்கள். பாஜக உறுப்பினர்களுக்கு மட்டும். தனித்திரு… மகிழ்ந்திரு…” என குறிப்பிடப்பட்டுள்ளது. “இதெல்லாம் […]

Continue Reading

மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சு.வெங்கடேசன் கூறினாரா?

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாண படங்களுடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “மதுரை சித்திரைத் திருவிழா ரத்து! மதுரை சித்திரை திருவிழா […]

Continue Reading

இந்தியாவில் 7 லட்சம் மாநிலங்கள் உள்ளது என்று எச்.ராஜா கூறினாரா?

ஏழு லட்சம் மாநிலங்கள் உள்ளது என்று எச்.ராஜா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எச்.ராஜா வெளியிட்ட ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை ஷேர் செய்துள்ளனர். அதில், “சில தகவல்கள், ரேப்பிட் டெஸ்ட் கிட் 7 லட்சம் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்திற்கு 1 லட்சம். இதன் மூலம் ஒருவருக்கு ரத்தப் பரிசோதனையின் முடிவு 20-30 நிமிடங்களில் கிடைத்துவிடும். விரைவில் அனைத்து […]

Continue Reading

மோடியின் அழைப்பை ஏற்று மு.க.ஸ்டாலின் மெழுகுவர்த்தி ஏற்றினாரா?

ஏப்ரல் 5ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்ற மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மெழுகுவர்த்தி ஏற்றியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடேய் நீங்களுமாடா? அட திராவிட தற்குறிகளா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, […]

Continue Reading

கோ பேக் கொரோனா பலூன் பறக்க விட்டார்களா தி.மு.க-வினர்?

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் கொரோனா கோ பேக் என்று தி.மு.க சார்பில் கருப்பு பலூன் பறக்கப்பட்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இரண்டு படங்களை இணைத்து பதிவை உருவாக்கியுள்ளனர். முதல் படத்தில் பிரம்மாண்ட கருப்பு பலூன் பறக்கவிடப்படுகிறது. பலூனில், “தமிழ்நாட்டை வஞ்சிக்கும் கொரோனா கோ பேக் – சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க” என்று எழுதப்பட்டுள்ளது. அடுத்த படத்தில், “சைனீஸ்ல […]

Continue Reading

மாஸ்டர் படம் வெளிவருவதைத் தடுக்கவே ஊரடங்கு என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினாரா?

சி.ஏ.ஏ சட்டத்தை திசை திருப்ப, மாஸ்டர் படம் வெளிவருவதைத் தவிர்க்கவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் பிரேக்கிங் நியூஸ் கார்டு ஷேர் செய்யப்பட்டதை ஸ்கிரீன் ஷாட் எடுத்தது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. அதில், சிஏஏ சட்டத்தை திசை திருப்பவே வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று மோடி அறிவித்துள்ளார். […]

Continue Reading

தமிழகத்தில் மதுக்கடைகள் இயங்கும் என்று அறிவித்ததா தமிழக அரசு?

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மார்ச் 31ம் தேதி வரை இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்ததாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 18 தமிழ் பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மார்ச் 31 முதல் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இயங்கும். – தமிழக அரசு” […]

Continue Reading

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள்?

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வரன் நேற்று மரணமடைந்தார் ஆனால் தமிழக ஊடகங்களில் செய்தி வெளியிடவில்லை என்று ஒரு பதிவு பல ஆண்டுகளாக பகிரப்பட்டு வருகிறது. தற்போதும் வைரலாக பகிரப்படும் அந்த தகவல் சரியா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதியவர் ஒருவரின் படத்தோடு பதிவு வெளியாகி உள்ளது. அதில், “கண்ணீர் வணக்கம்! கப்பலோட்டிய தமிழன் அய்யா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் பெற்ற மகன் வாலேஸ்வரன் நேற்று மரணமடைந்தார்… பாழாய்ப்போன […]

Continue Reading

தமிழகத்தில் 9 பேர் மரணம் என்று மு.க.ஸ்டாலின் வதந்தி பரப்பினாரா?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் இறந்ததாக ட்விட்டரில் வதந்தி பரப்பிவிட்டு அதை நீக்கிவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Link Archived Link மு.க.ஸ்டாலின் ட்வீட் பதிவு ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் உயிரிழப்பு, 8000 பேருக்கு பாதிப்பு, சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல் ஆகியவை மக்களுக்கு அச்சத்தை […]

Continue Reading

கோவை ஊட்டி சாலையில் மான்கள்!- வைரல் புகைப்படம் உண்மையா?

ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கியதால் கோவை – ஊட்டி சாலையில் மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஓய்வெடுத்தது என்று ஒரு புகைப்படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலையில் மான்கள் ஓய்வெடுக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#கோவையில் மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கியதால் #மகிழ்ச்சியாக இருக்கும் #மான்கள்..😍 கோவை டூ #ஊட்டி மெயின் ரோடு🖤🖤🖤🖤” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Tamil Cinema […]

Continue Reading

இந்து பாரம்பரியத்தை விமர்சித்து சீமான் பேசினாரா? போலி நியூஸ் கார்டு!

“இந்துக்களின் பாரம்பரியத்தில் ஒழுக்கமோ சுயமரியாதையோ இருந்ததில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகைப்படத்துடன் புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஹிந்துக்களின் பாரம்பரியத்தில் அவர்களுக்கு ஒழுக்கமோ சுயமரியாதையோ இருந்ததில்லை – சீமான், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல்! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

இந்து மக்கள் கட்சி திருப்பூர் மாவட்ட நிர்வாகி பகவான் நந்து மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link யாரோ ஷேர் செய்த பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில்,  “இந்து மக்கள் கட்சி தமிழகம் திருப்பூர் மாவட்ட நிர்வாகி “பகவான் நந்து” மீது கொலை […]

Continue Reading

தமிழக பாஜக தலைவர் நியமனத்தை எதிர்த்து எஸ்.வி.சேகர் ட்வீட் செய்தாரா?- வைரல் பதிவு

தமிழக பா.ஜ.க தலைவராக முருகன் நியமிக்கப்பட்டதை கண்டித்து எஸ்.வி.சேகர் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முருகன் படம் மற்றும் எஸ்.வி.சேகர் ட்வீட் படத்தை இணைத்துப் பதிவிட்டுள்ளனர். எஸ்.வி.சேகர் ட்வீட்டில், “கன்னக்கோல் கொள்ளைக்காரர்கள் எல்லாம் தேசியக் கட்சியின் மாநிலத் தலைமை பொறுப்பிலா? இந்து மதத்தை திறந்துவிட்டது போதாதா? கட்சியும் சூத்திரர்களின் கடை சரக்கா?” […]

Continue Reading

தி.மு.க பொதுச் செயலாளராக ஆ.ராசா நியமிக்கப்பட்டாரா?- போலி செய்தியால் பரபரப்பு

தி.மு.க-வின் அடுத்த பொதுச் செயலாளராக ஆ.ராசா ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக ஆ.ராசாவை ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளோம். ஏப்ரல் 1ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் – […]

Continue Reading

நாடார்கள் தமிழர்கள் இல்லை என்று எச் ராஜா கூறினாரா?

நாடார்கள் தமிழர்கள் இல்லை என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link Archived Link 1 Archived Link 2 9 வினாடிகள் மட்டும் ஓடக்கூடிய எச்.ராஜா பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், “நாடார்கள் தமிழர்கள் இல்லை. இவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள்” என்று எச்.ராஜா கூறுகிறார்.  நிலைத் தகவலில், “நாடார்கள் தமிழர்கள் இல்லை என்று பீகாரி […]

Continue Reading

இயேசுவை பிரார்த்திக்க சொன்னாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி?- ஃபேஸ்புக் வதந்தி

‘’கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்திகளை நம்ப வேண்டாம். அனைவரும் இயேசுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள்,’’ என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக முதலமைச்சர் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி கொரானா தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளை […]

Continue Reading

நிர்வாண சாமியாரை தரிசிக்க மனைவியுடன் சென்றாரா ஓ.பி.ரவீந்திரநாத்?

நிர்வாண சாமியாரை தரிசிக்க தன் மனைவியை அழைத்துக் கொண்டு சென்ற ஓபிஎஸ் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Link Archived Link தலைகுனிந்தபடி சாமியார் ஒருவரிடம் ஆசி வாங்கும் நபர் படத்தை பகிர்ந்துள்ளனர். அருகிலுள்ள பெண்மணி முகத்தை கைகளால் மூடிக்கொண்டபடி உள்ளார். நிலைத்தகவலில், “நிர்வாண சாமியாரை தரிசிக்க தன் மனைவியை கூட அழைத்து சென்ற OPS மகன் […]

Continue Reading

பொது இடத்தில் பெண்ணை கட்டிப்பிடித்த ஆ.ராசா! – வைரல் புகைப்படம் உண்மையா?

பொது இடத்தில் பெண்மணி ஒருவரை முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க எம்.பி-யுமான ஆ.ராசா கட்டிப்பிடித்ததாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஆ.ராசா பொது இடத்தில் பெண்மணி ஒருவரை கட்டிப் பிடிப்பது போல் படம் வெளியிட்டுள்ளனர். சுற்றிலும் போலீசார், பொது மக்கள் என்று எல்லோரும் உள்ளனர். நிலைத் தகவலில், “இது திராவிட முன்னேற்றக் கழகமா இல்லை *** முன்னேற்ற கழகமாடா? அட […]

Continue Reading

கொரோனா வைரஸ் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளதா?

கொரோனா வைரஸ் பற்றி சிலப்பதிகாரத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிலப்பதிகார ஓவியத்துடன் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் பதிவின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “சிலப்பதிகாரத்தின் நான்காவது அத்தியாயத்தில், மூன்றாவது பந்தியில் (???) கண்ணகி பாண்டிய மன்னனிடம் கேட்கும் கேள்வி” என்று செய்யுள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், அகத்தியர் […]

Continue Reading

திருமாவளவனை தரையில் அமர வைத்தாரா மு.க.ஸ்டாலின்?- அதிர்ச்சி தந்த ஃபேஸ்புக் பதிவு

திருமாவளவனை மட்டும் மு.க.ஸ்டாலின் தரையில் அமரவைத்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link மேற்கண்ட பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில், மு.க.ஸ்டாலின், நடிகர் கமல், டி.ஆர்.பாலு, துரைமுருகன் ஆகியோர் சோஃபாவில் அமர்ந்துள்ளனர். ஆனால், தொல் திருமாவளவன் மட்டும் தரையில் அமர்ந்திருப்பது போல உள்ளது.  நிலைத் தகவலில், “தலித் என்ற காரனத்தால் திருமாவை இருக்கையில் அமர வைக்காமல் தரையில் அமர வைத்து […]

Continue Reading

இந்துக்களை நேபாளத்துக்கு அனுப்ப வேண்டும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்னாரா?

இந்துக்களை நேபாளம், தாய்லாந்துக்கும் இஸ்லாமியர்களை பாகிஸ்தான், வங்கதேசத்துக்கும் அனுப்பிவைக்க வேண்டும் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சிஏஏ விவகாரம்: விஜய் தந்தை பேட்டி. ஹிந்துக்கள் நேபாளம், தாய்லாந்திலும், முஸ்லிம்கள் […]

Continue Reading

இந்து முன்னணியினர் தாக்கப்பட்டதற்கு எச்.ராஜாதான் காரணம் என்று அர்ஜூன் சம்பத் சொன்னாரா!

கோவையில் இந்து முன்னணியினர் தாக்கப்பட்டதற்கு எச்.ராஜாதான் காரணம் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அர்ஜூன் சம்பத் படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கோவையில் இந்து முன்னணியினர் தாக்கப்பட்டதற்கு எச்.ராஜாதான் காரணம். பலமுறை தமிழக மக்கள் கூறியும் ஏன் எச்.ராஜாவிற்கு மனநல பரிசோதனை செய்யவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரானாரா இயக்குநர் சங்கர்?- நியூஸ் 7 தமிழ் செய்தியால் குழப்பம்

இயக்குநர் சங்கர் சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link 1 Article Link Archived link 2 இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து: சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் இயக்குநர் ஷங்கர்! என்று நியூஸ்7 தமிழ் வெளியிட்ட செய்தி ஒன்று ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. நியூஸ்7 தமிழ் இணையளத்தில் வெளியான செய்தியை News7Tamil […]

Continue Reading

கேலிக்கு உள்ளாகும் தலைவர்களில் ஸ்டாலின் முதலிடம் என்று நியூஸ் 18 செய்தி வெளியிட்டதா?

உலக அளவில் கேலிக்கு உள்ளாகும் தலைவர்களில் முதலிடத்தை மு.க.ஸ்டாலின் பிடித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய நியூஸ்18 தமிழ்நாடு நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “முதலிடத்தைப் பிடித்தார் ஸ்டாலின். உலக அளவில் கேலிக்கு உள்ளாகும் தலைவர்களில் முதலிடத்தைப் பிடித்தார் ஸ்டாலின் – கருத்துக்கணிப்பில் தகவல்” என்று உள்ளது. இந்த நியூஸ் […]

Continue Reading

பெரியார் படத்தை வெளியிட இயக்குனர் வேலு பிரபாகரனுக்கு ரஜினி உதவினாரா?

பெரியார் படம் வெளிவர வேண்டும் என்று ரஜினிகாந்த் தனக்கு பணம் கொடுத்து உதவினார் என்று இயக்குநர் வேலு பிரபாகரன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இயக்குநர் வேலு பிரபாகரன் படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மன்னிப்பு கேட்க முடியாது. பெரியார் படத்துக்கு பைனான்ஸ் செய்த பெரியாரிஸ்ட் கூட வட்டிக்கு வட்டிபோட்டு, என் வீட்டை எழுதி வாங்கிட்டான்க. […]

Continue Reading

நடிகர் கவுண்ட மணி மரணம்; பல ஆண்டுகளாக பரவும் வதந்தி!

நடிகர் கவுண்ட மணி மரணம் அடைந்தார் என்று பல ஆண்டுகளாக ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link “சற்று முன் மாரடைப்பால் மரணமடைந்தார் காமெடி நடிகர் கவுண்ட மணி. நல்ல ஒரு நடிகரை இழந்துவிட்டோம்” என்று குறிப்பிட்டு திரை உலகினர் அஞ்சலி செலுத்தும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். Sri Raja என்பவர் 2016 செப்டம்பர் 20ம் தேதி ஷேர் செய்த பதிவை, மூன்றரை ஆண்டுகள் ஆன […]

Continue Reading

கள்ளக் காதலனைக் கொன்றாரா சீரியல் நடிகை தேவிப்பிரியா?

பிரபல தொலைக்காட்சி நடிகை தேவி பிரியா தன்னுடைய கள்ளக் காதலனைக் கொலை செய்ததாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Article Link Archived Link 1 Facebook Link Archived Link 2 வாசகர் ஒருவர் ஒரு செய்தியின் லிங்கை அனுப்பி அந்த தகவல் உண்மையா என்று கண்டறிந்து கூறும்படி கேட்டார். பிரபல டி.வி நடிகை தேவிப் பிரியா படத்துடன் செய்தி இணைப்பு பகிரப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

சமயபுரம் டோல்கேட்டில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் படம் உண்மையா?

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பு மக்களால் திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட்டில் நெரிசல் ஏற்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டோல் பிளாஸாவில் வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வேற எந்த நாடும் இல்ல. நம்ம திருச்சி சமயபுரம் டோல்ல பொங்கல் லீவு முடிஞ்சு சென்னை திரும்பும் மக்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த […]

Continue Reading

பொன்.ராதாகிருஷ்ணன் மனநலம் சரியில்லாதவர் என்று எச்.ராஜா விமர்சித்தாரா?

பொன்.ராதாகிருஷ்ணன் மனநலம் சரியில்லாதவர் போன்று செயல்படுகிறார் என்று எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 18 தமிழ்நாடு ஆகிய நியூஸ் கார்டுகளை ஒன்று சேர்த்துப் பதிவிட்டுள்ளனர். நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டில், “மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு மனநலம் சரியில்லாதவர் போன்று செயல்படுகின்றார் – ஹெச்-ராஜா விமர்சனம்” என்று […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி அரசு அமைத்த தரமற்ற சாலை; வைரல் புகைப்படம் உண்மையா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைத்த தரமற்ற சாலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மழை வெள்ளம் காரணமாக தார் சாலை நகர்ந்து சாலைக்கு வெளியே இருப்பது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், ரோடு லேசா மழைல நனஞ்சிடுத்து அதான் காயபோட்டுள்ளோம்… நன்றி எடப்பாடி அரசு” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, தமிழ்தேசிய ஆதரவாளர்கள் […]

Continue Reading

திரௌபதி பட இயக்குநரை அழைத்து பாராட்டினாரா அஜித்?

திரௌபதி படத்தின் இயக்குநர் மோகனை நடிகர் அஜித் அழைத்து பாராட்டியதாக படத்துடன் கூடிய செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர் அஜித் உடன் திரௌபதி பட இயக்குநர் மோகன் இருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திரௌபதி இயக்குநர் மோகனை அழைத்து பாராட்டினார் அஜித். சில நேரங்களில் அஜீத்தின் நேர்மையான துணிவு என்னை பிரமிக்க வைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading

லால்பேட்டையில் நுழைந்த முதலை! – ஃபேஸ்புக் படம் உண்மையா?

லால்பேட்டை கள்ளத்தோப்பில் முதலை வந்தது என்ற இரண்டு படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இரண்டு தனித்தனிப் படங்கள் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லால்பேட்டையில் கனமழை👇👇👇லால்ப்பேட்டை கள்ளத்தோப்பில் முதலை வந்துவிட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Samsudeen Safik என்பவர் டிசம்பர் 3ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: லால்பேட்டையில் முதலை வந்துவிட்டது என்று மட்டும் […]

Continue Reading