FACT CHECK: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் குழந்தை பருவ படமா இது?–சொந்த கட்சிக்காரர்களே பரப்பும் வதந்தி!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் குழந்தைப் பருவ படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தாயுடன் குழந்தை இருக்கும் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தங்க நாற்கர சாலை தந்த தலைமகனுக்கு பிறந்த நாள் இன்று” என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவை மோடி ராஜ்யம் Modi Rajyam என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

FactCheck: வைரலாக பகிரப்படும் தமிழிசை சவுந்தரராஜனின் பழைய வீடியோ

‘’பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி ரைமிங்காக பேசும் தமிழிசை,’’ எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் வீடியோ பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link டிசம்பர் 17, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவில், ‘’ பெட்ரோல்,டீசல்,கேஸ் மட்டுமல்லாமல் மண்ணெண்ணெய் விலை உயர்வை எதிர்த்தும் ரைம்சில் கண்டனம் தெரிவித்த இந்த சகோதரியை வாழ்த்துவீங்களா ப்ரன்ச்🤣🤣,’’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. உள்ளே, புதிய […]

Continue Reading

பாஜக- அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பற்றி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியது என்ன?

‘’பாஜக- அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று ஜே.பி. நட்டா அறிவிப்பார்,’’ என்று தமிழ்நாடு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link டிசம்பர் 27, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், சன் நியூஸ் ஊடகம் வெளியிட்ட வீடியோ ஒன்றை இணைத்து, அதன் மேலே, ‘’ முதல்வர் […]

Continue Reading

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பங்க் உரிமையாளர்களுக்கு பாதிப்பு என்று அண்ணாமலை கூறினாரா?

‘’பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பங்க் உரிமையாளர்களுக்கு பாதிப்பு என்று கூறிய அண்ணாமலை,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  குறிப்பிட்ட தகவலை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், நாமும் இதே தகவலை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என தேடியபோது, பலரும் இதனை ஷேர் செய்து வருவதைக் […]

Continue Reading

FACT CHECK: இந்துக்கள் தமது நாய்களை பாதுகாத்திட வேண்டும் என்று எச்.ராஜா கூறினாரா?

மார்கழி மாதம் இந்துக்கள் தங்கள் நாய்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாக பரவும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “மார்கழி மாதம் இந்துக்கள் தங்களது தெரு நாய்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். மாற்று மத தெருவில் உள்ள தெருநாய்கள் மதமாற்றம் செய்யக்கூடும் […]

Continue Reading

FactCheck: இது தயாநிதி மாறனின் கார் அல்ல!

‘’தயாநிதி மாறனின் காரை பாமகவினர் சேலத்தில் தாக்கிய புகைப்படம்,’’ எனக் கூறி பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 இந்த ஃபேஸ்புக் பதிவில், தயாநிதி மாறனின் புகைப்படங்களையும், கார் ஒன்று தாக்கப்பட்டது போன்ற புகைப்படத்தையும் இணைத்து, அதன் மேலே, ‘’ தரமான சம்பவம் 🔥🔥 1 1/2கோடி பென்ஸ் காரை உடைத்து… […]

Continue Reading

FactCheck: தருமபுரம் ஆதீனம் பற்றி பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் விமர்சித்தாரா?

‘’தருமபுரம் ஆதீனத்தை விமர்சனம் செய்த நாராயணன் திருப்பதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இந்த ஃபேஸ்புக் பதிவில், தருமபுரம் ஆதீனத்தை, பிராமணர்கள் வணங்கி வரவேற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் பிராமணர்களுக்கு […]

Continue Reading

FACT CHECK: கேரள உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தேசிய துணைத் தலைவர் அப்துல்லா குட்டி 20 வாக்குகள் பெற்றாரா?

கேரள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் அப்துல்லா குட்டிக்கு மொத்தம் 20 வாக்குகள்தான் கிடைத்தது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive யாரோ ஒருவர் பதிவிட்டதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில், “கேரள உள்ளாட்சி தேர்தல் பாஜக தேசிய துணைத் தலைவர் #அப்துல்லாகுட்டிக்கு மொத்தமே 20 வாக்குகள்தான்.. 😁😁 […]

Continue Reading

Fact Check: தமிழக அரசின் பொங்கல் பணப் பரிசு அறிவிப்பை அண்ணாமலை விமர்சனம் செய்தாரா?

‘’மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் மக்களுக்கே பொங்கல் பரிசு வழங்குகிறது,’’ என்று பாஜக அண்ணாமலை விமர்சனம் செய்ததாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 உண்மை அறிவோம்: மேற்கண்ட செய்தி ஒரு சர்ச்சைக்குரியதாகும். ஆம், இந்த செய்தியை முதலில் […]

Continue Reading

FactCheck: மோடி இனி கனடா வரக்கூடாது என்று ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்தாரா?

‘’மோடி இனி கனடா வரக்கூடாது,’’ என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link 18 டிசம்பர் 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், தந்தி டிவி பெயரில் ஒரு நியூஸ் கார்டை வெளியிட்டுள்ளனர். அதில், மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புகைப்படங்களை வைத்து, ‘’தமிழர்களை […]

Continue Reading

FactCheck: சமையல் எரிவாயு பயனாளர்களை கேலி செய்தாரா நிர்மலா சீதாராமன்?

‘’கேஸ் சிலிண்டர் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் விறகு அடுப்பில் சமைக்க பழகிக் கொள்ளுங்கள்,’’ என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக, புதிய தலைமுறை பெயரில் ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  நமது வாசகர் ஒருவர் இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று கேட்டு, நமக்கு வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். அதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை பகிர்ந்து […]

Continue Reading

FactCheck: கவுதம் அதானி மனைவியை மோடி வணங்கியதாகப் பரவும் வதந்தி

‘’அதானி மனைவி முன் குனிந்து நிற்கும் மோடி,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இந்த தகவல் உண்மையா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், பெண் ஒருவரை பார்த்து, பிரதமர் மோடி குனிந்து வணங்குவதைப் போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ வேறுயாருமல்ல.கெளதம் அதானியின் மனைவிதான்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என […]

Continue Reading

விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட பாஜக நபர்?- முழு விவரம் இதோ!

‘’விவசாயிகள் ஆதரவு போராட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட பாஜக நபருக்கு அடி உதை,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 Facebook Claim Link 4 Archived Link 4 […]

Continue Reading

இந்திய தேசிய கீதம் உலகிலேயே சிறந்தது என்று யுனெஸ்கோ அறிவித்ததா?

‘’இந்திய தேசிய கீதம் உலகிலேயே சிறந்தது என்று யுனெஸ்கோ அறிவிப்பு,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  மேற்கண்ட தகவலை நமது வாசகர்கள் சிலர் வாட்ஸ்ஆப் வழியே, நமக்கு அனுப்பி உண்மைத்தன்மை பற்றி கண்டறியும்படி கேட்டுக் கொண்டனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கிலும் இதனை யாரேனும் பகிர்ந்துள்ளனரா என தகவல் தேடியபோது, இந்த தகவல் கடந்த பல ஆண்டுகளாகவே பகிரப்பட்டு வரும் ஒன்று […]

Continue Reading

FactCheck: செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர்செல்வம் பற்றி பரவும் வதந்தி

‘’பனிமலர் பன்னீர்செல்வம் உடன் கண்ணா பாண்டியன் காதல்,’’ எனும் தலைப்பில் பரவும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இதேபோல, இன்னொரு புகைப்படமும் பகிரப்படுகிறது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 உண்மை அறிவோம்: இது பார்க்கும்போதே, உண்மையில்லை, […]

Continue Reading

ஊட்டி மலை ரயில் சர்ச்சை; நிர்மலா சீதாராமன் பற்றி பரவும் போலிச் செய்தி!

‘’நிர்மலா சீதாராமன் ஊட்டி மலை ரயில் டிக்கெட் விலை உயர்வு பற்றி விமர்சனம்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: மேற்கண்ட செய்தியை நமது வாசகர்கள் சிலர், வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். எனவே, இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் வேறு யாரேனும் பகிர்ந்துள்ளனரா என்ற விவரம் தேடினோம். அப்போது, ஃபேஸ்புக் வாசகர்கள் […]

Continue Reading

Rapid FactCheck: ராமநாதபுரத்தில் தலித் சிறுவர்கள் சித்ரவதையா?- பழைய புகைப்படம்!

‘’ராமநாதபுரத்தில் பிஸ்கட் திருடியதால் தலித் சிறுவர்களை கட்டிப் போட்டு மொட்டையடித்து சித்ரவதை செய்த சாதி வெறியர்கள்,’’ என்ற தலைப்பில் வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  நமது வாசகர்கள் சிலர், மேற்கண்ட தகவலை வாட்ஸ்ஆப் வழியே, நம்மிடம் அனுப்பி சந்தேகம் கேட்டனர். இதனை ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில், ராமநாதபுரத்தில் நிகழ்ந்த சாதிக் கொடுமை எனக் கூறி பலரும் ஷேர் செய்வதாகவும், இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு […]

Continue Reading

ஆன்மீக ஜனதா கட்சி என்ற பெயர் கேட்டு ரஜினி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளாரா?

‘’ரஜினிகாந்த், தேர்தல் ஆணையத்திடம், ஆன்மீக ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க விண்ணப்பித்துள்ளார்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link  இதில், ரஜினி பற்றி நியூஸ் 7 தமிழ் ஊடகம் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்து, கவுண்டமணி, செந்தில் சினிமா காட்சி ஒன்றையும் இணைத்து, பதிவிட்டுள்ளனர். […]

Continue Reading

முரசொலி மாறனின் ஆலோசகராக அர்ஜூன மூர்த்தி பணிபுரிந்தாரா?

‘’முரசொலி மாறனின் ஆலோசகராக அர்ஜூன மூர்த்தி பணிபுரிந்தார்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த புகைப்படத்தை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி, இதில் முரசொலி மாறனுடன் இருப்பர் யார், என சந்தேகம் கேட்டிருந்தார். மேலும், ஃபேஸ்புக்கில், ‘இதில் இருப்பவர் அர்ஜூன மூர்த்தி,’ என்றும், ‘அவர் முரசொலி மாறனிடம் பணிபுரிந்தார்,’ என்றும் ஃபேஸ்புக்கில் தகவல் பகிர்வதாக, […]

Continue Reading

FACT CHECK: ஹரியானாவில் பேரணி சென்ற விவசாயிகளை விரட்டிய போலீஸ்- பழைய புகைப்படங்கள்!

ஹரியானாவில் தடுத்து நிறுத்திப்பட்ட விவசாயிகளின் பேரணி படம் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “புதிய விவசாய மசோதாவை கண்டித்து ஹர்யானாவில் விவசாயிகள் மாபெரும் போராட்டம், தண்ணீரை பாய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்கும் போலிசார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை சற்று முன் […]

Continue Reading

FactCheck: எஸ்.வி.சேகர் திமுக.,வில் இணைந்ததாகப் பகிரப்படும் வதந்தி

‘’நடிகர் எஸ்.வி.சேகர் திமுகவில் இணைந்தார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இந்த செய்தியை நமக்கு வாட்ஸ்ஆப் மூலமாக, வாசகர்கள் பலரும் சந்தேகம் கேட்கவே, நாமும் ஃபேஸ்புக்கில் யாரும் பகிர்ந்துள்ளனரா என்று விவரம் தேடினோம். அப்போது, பலரும் இதனை ஷேர் செய்வதை கண்டதன் […]

Continue Reading

மோடி இளமைப் பருவத்தில் யோகா செய்யும் அரிய வீடியோ என்று பரவும் வதந்தி

‘’இளமைப் பருவத்தில் மோடி யோகா செய்யும் அரிய வீடியோ,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நவம்பர் 24, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், இளம் வயதில் உள்ள ஒருவர் யோகா செய்யும் கறுப்பு, வெள்ளை வீடியோ காட்சியை இணைத்துள்ளனர். அதன் கீழே, ‘’நரேந்திர மோடி ஜி அவர்கள் இளம் […]

Continue Reading

FACT CHECK: விஜய் மல்லையா பாஜக.,வுக்கு தந்த ரூ.35 கோடி காசோலை என்று பரவும் வதந்தி!

வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல பாரதிய ஜனதா கட்சிக்கு விஜய் மல்லையா ரூ.35 கோடி செக்-ஆக கொடுத்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். காசோலையுடன் பகிரப்பட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்தது போல இருந்தது. காசோலையில், பாரதிய ஜனதா கட்சிக்கு விஜய் […]

Continue Reading

மோடி மற்றும் ஜீ ஜின்பிங் சண்டையிடும் கார்ட்டூன் ஜப்பான் ஊடகங்களில் வெளியிடப்பட்டதா?

‘’ஜப்பானிய ஊடகங்கள், மோடி மற்றும் ஜீ ஜின்பிங் சண்டையிடும் இந்த கார்ட்டூனை ஒளிபரப்பி வருகின்றன,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link 9, ஜூலை 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் வீடியோ பதிவை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். இதுபற்றி உண்மைத்தன்மை கண்டறியும்படி நமது வாசகர்கள் சிலர் […]

Continue Reading

ஜப்பான் ஊடகங்கள் ஒளிபரப்பும் மோடி பற்றிய அதிரடி வீடியோ- உண்மை என்ன?

‘’ஜப்பான் ஊடகங்கள் ஒளிபரப்பும் இந்தியா மற்றும் மோடி பற்றிய அதிரடி வீடியோ,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link  கடந்த செப்டம்பர் 7, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க தலைவர்கள் பங்கேற்று, குத்துச்சண்டை போடுவது […]

Continue Reading

யோகி ஆதித்யநாத் பற்றி டிஎன் நியூஸ் 24 ஊடகம் வெளியிட்ட செய்தி உண்மையா?

‘’தமிழகத்தில் இருந்து பட்டாசு வாங்க முடியாது என்று கூறிய யோகி ஆதித்யநாத் -டிஎன் நியூஸ் 24 செய்தி,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 மேற்கண்ட தகவலை நமது வாசகர்கள் சிலர் வாட்ஸ்ஆப் வழியே, நமக்கு அனுப்பி, இது உண்மையா […]

Continue Reading

தீபாவளி தினத்தில் இறைச்சி சாப்பிடுவோர் இந்து அல்ல என்று எச்.ராஜா சொன்னாரா?

‘’தீபாவளி அன்று மாமிசம் சாப்பிடுவோர் ஹிந்துக்கள் அல்ல என்று எச்.ராஜா விமர்சனம்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  மேற்கண்ட தகவலை நமது வாசகர் ஒருவர், வாட்ஸ்ஆப் மூலமாக, அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் இதனை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என தேடினோம். அப்போது, பலரும் இதனை பகிர்ந்து வரும் விவரம் கிடைத்தது.  Facebook Claim Link 1 […]

Continue Reading

FactCheck: பாஜகவுக்கு ஓட்டுப் போட்ட பின் வேலை தேடி தமிழகம் வரும் பீகாரிகள்- உண்மை என்ன?

‘’பாஜகவுக்கு ஓட்டுப் போட்டதும், வேலை தேடி தமிழகம் வரும் பீகாரிகள்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  நவம்பர் 11, 2020 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், ரயிலில் பலர் கூட்டமாகச் செல்லும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’பீகார் தேர்தலில் பிஜேபிக்கு வாக்கு செலுத்திய பின் பிழைப்பதற்கு தமிழகம் கிளம்பிய பீகாரிகள். அதான் […]

Continue Reading

FACT CHECK: மேகாலயாவில் சிலுவை அணிந்து வாக்கு கேட்ட சங்கிகள்- புகைப்படம் உண்மையா?

மேகாலயாவில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அங்கு காவி உடை அணிந்து சங்கிகள் வாக்கு கேட்டார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive காவி உடை அணிந்த கிறிஸ்தவ பாதிரியார்கள் படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “மேகாலயா இடைத் தேர்தலில் கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதினால், சிலுவை மாட்டிக் கொண்டு ஓட்டு கேட்கும் நாகரீக சங்கிகள்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

FactCheck: பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திர மோசடி?- முழு விவரம் இதோ!

‘’பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 கடந்த சில நாட்களாகவே, சமூக வலைதளங்களில் மேற்கண்ட வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதனை, ‘’இதோ இப்போது பீகார் தேர்தலில் ⚖️🐘 யானை சின்னத்தில் […]

Continue Reading

FactCheck: அர்னாப் கோஸ்வாமி கைது பற்றி பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு!

‘’அர்னாப் கோஸ்வாமிக்கு சிறையில் முதலிரவு,’’ என்று கூறி அவர் நடத்தும் ரிபப்ளிக் டிவியில் செய்தி வெளியானதாக, சமூக வலைதளங்களில் பலரும் தகவல் பகிர்கின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டது பற்றி, அவருக்குச் சொந்தமான ரிபப்ளிக் டிவியில் ‘’அர்னாப்புக்கு சிறையில் முதலிரவு‘’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை […]

Continue Reading

FactCheck: எச்.ராஜா மற்றும் எல்.முருகனின் ‘கை’ எடிட் செய்யப்பட்டதா?

‘’பசும்பொன்னில் எச்.ராஜா கையெடுத்து கும்பிடவில்லை, எல்.முருகனின் கையை எடிட் செய்து, எச்.ராஜா போல அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றுகின்றனர்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Screenshot: FB Post for reference Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link […]

Continue Reading

FactCheck: இந்த Go Back Modi புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டதா?

‘’பீகார் மக்கள் கோ பேக் மோடி போராட்டம் நடத்தும் காட்சி,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link அக்டோபர் 23, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், சாலை ஒன்றின் நடுவே, Go Back Modi என எழுதப்பட்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’பிரதமர் மோடி வருகைக்கு பீகாரில் வலுக்கும் […]

Continue Reading

இந்து கோயில்களுக்கு மின் கட்டணம் வசூலிப்பதில் பாரபட்சம் எனக் கூறி பரவும் வதந்தி…

‘’இந்து கோயில்களுக்கு மின் கட்டணம் வசூலிப்பதில் பாரபட்சம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link கடந்த ஜூலை 10, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘’ கோயில்களுக்கு மின் கட்டணம் யூனிட்₹8/-. சர்ச், மசூதிக்கு,₹2.85. மதசார்பற்ற நாட்டிலே இந்த வேறுபடு ஏன்.??,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனைப் பலரும் உண்மை […]

Continue Reading

பாஜக கூட்டங்களில் ரெக்கார்ட் டான்ஸ் ஆடுவேன் என்று குஷ்பு கூறினாரா?

‘’பாஜக கூட்டங்களில் ரெக்கார்ட் டான்ஸ் ஆடுவேன் என்று கூறிய குஷ்பு,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: FB Claim Link  Archived Link இந்த தகவலை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக, நமக்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். அதன்பேரில், இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். இதன்பேரில் மீண்டும் தகவல் தேடியபோது, […]

Continue Reading

FACT CHECK: நாயிடம் சில்மிஷம் செய்த பாஜக உறுப்பினர் என்று பகிரப்படும் வதந்தி!

நாயிடம் சில்மிஷம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (9049053770) வாசகர் ஒருவர் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், “நள்ளிரவில் குடிபோதையில் நாயிடம் சில்மிஷம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர் […]

Continue Reading

FACT CHECK: இது சரோஜ் நாராயணசாமி படம் இல்லை!

ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமான சரோஜ் நாராயணசாமியின் படம் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படத்தின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஆல் இந்தியா ரேடியோவில் செய்திவாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசாமியின் இன்முகம் காண்போம் என்று குறிப்பிட்டு ஒரு படம் பகிரப்பட்டுள்ளது. நீண்ட பதிவில் சரோஜ் நாராயணசாமி பற்றிய தகவல் இடம் பெற்றிருந்தது. இந்த பதிவை ‎தினம் ஒரு தகவல் DAILY INFORMATION […]

Continue Reading

FactCheck: பாஜகவினர் தடவியது பற்றி குஷ்பு கருத்து: விஷமத்தனமான வதந்தி…

‘’பாஜகவினர் என்னைத் தடவியதில் தவறில்லை என்று கூறிய குஷ்பு,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது பார்க்க அசலானதாக இருந்ததால், பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link கடந்த அக்டோபர் 13, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், புதிய தலைமுறை ஊடகத்தின் பெயரில் குஷ்பு பற்றி ஒரு நியூஸ் கார்டு வெளியிட்டதாகக் […]

Continue Reading

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பற்றி பகிரப்படும் போலிச் செய்தி

‘’குஷ்பு, நமீதாவை மொழிப் போர் தியாகிகள் என்று சொன்ன அண்ணாமலை,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link அக்டோபர் 12, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பற்றி தினமலர் ஊடகத்தின் பெயரில் வெளியான செய்தியைப் போன்ற நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’குஷ்பு, நமீதா போன்ற […]

Continue Reading

FACT CHECK: குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்று அடிவாங்கிய பாஜகவினர்?- பழைய வீடியோ!

குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்று அடிவாங்கிய பா.ஜ.க-வினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 கூட்ட நெரிசலில் செல்லும் குஷ்பு, திடீரென்று திரும்பி இளைஞர் ஒருவரை அடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஷ்பு விடம் தவறாக நடக்க முயன்று அடி வாங்கிய பாஜக-வினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வீடியோ பதிவை […]

Continue Reading

குஷ்பு பற்றி அவதூறான வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாக பரவும் வதந்தி!

‘’குஷ்பு பற்றி தரக்குறைவான வகையில் விமர்சித்த பொன்.ராதாகிருஷ்ணன்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 புதிய தலைமுறை பெயரில் மிகவும் தரக்குறைவான வாசகங்கள் அடங்கிய இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நியூஸ் கார்டை முதலில் […]

Continue Reading

ஜெயேந்திரரை விமர்சித்து தகவல் பகிர்ந்தாரா கே.டி.ராகவன்?

‘’ஜெயேந்திரரை விமர்சித்து தகவல் பகிர்ந்த கே.டி.ராகவன்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், பாஜக தமிழ்நாடு பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் பெயரில் வெளியான ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த ட்வீட்டில், பொன்.ராதாகிருஷ்ணன், காலஞ்சென்ற காஞ்சி ஜெயேந்திரரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரை சாதியை காரணம் […]

Continue Reading

குஷ்பூ மற்றும் அவரது சகோதரர் பற்றி பகிரப்படும் விஷமத்தனமான வதந்தி…

‘’குஷ்பூ மீது ஊடகங்கள் முன்னிலையில் கை வைத்து தடவும் பாஜகவினர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல்களை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link அக்டோபர் 12, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், நடிகை குஷ்பூ பாஜகவில் இணையும் நிகழ்வின்போது, அவரது தோளில் ஆண் ஒருவர் கை போட்டு நிற்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் […]

Continue Reading

FactCheck: ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி ஒரு விதவை என பரவும் தவறான தகவல்!

‘’ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி ஒரு விதவை,’’ எனக் கூறி பகிரப்படும் தகவலை ஃபேஸ்புக்கில் கண்டோம். இதனை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 23, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிட்டுள்ளனர். இதில், ‘’மதுவதந்தி உன்னிடம் ஒரு கேள்வி. நீங்க கணவரை இழந்தவராமே, உங்க வர்ணாசிரமப்படி நீங்கள் விதவையாமே, அது உண்மையாக இருந்தால், நீங்கள் தலைக்கு மொட்டையடித்து, வெள்ளைப் புடவை அணிந்து, பொட்டு வைக்காமல் வீட்டிலேயே […]

Continue Reading

Fact Check: தமிழக சட்டமன்ற தேர்தலில் 660 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ராகவன் கூறினாரா?

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பா.ஜ.க 660 இடங்களில் வெற்றி பெறும் என்று தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாளிதழில் ஒன்ற வெளியான, “தமிழகத்தில் தனித்துப்போட்டியிட்டால் 660 இடங்களில் ஜெயிப்போம்! – பா.ஜ.க பொதுச் செயலாளர் பேட்டி” என்ற செய்தியின் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், இந்த அறிவாளியை வைத்திருக்கும் […]

Continue Reading

தமிழ்நாடு பாஜகவில் நாய்கள் பிரிவு தொடங்கப்பட்டதா?

‘’தமிழ்நாடு பாஜகவில் நாய்கள் பிரிவுக்கு புதிய துணைத் தலைவர் நியமனம்,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 Facebook Claim Link 4 Archived Link 4 இதன்படி, பாஜக நிர்வாகிகள் நாயுடன் […]

Continue Reading

நடிகர் சூர்யா மற்றும் கவுண்டர் சமூகம் பற்றி கல்யாண ராமன் விமர்சித்தாரா?

‘’காட்ட வித்து கள்ளு குடிச்ச நேரத்துல ஒழுங்கா இந்தி படிச்சிருந்தா நீட்ல பாஸாகியிருக்கலாம்,’’ என்று பாஜக ஆதரவாளர் கல்யாணராமன் கூறியதாகக் கூறி ஒரு தகவல் சமூக வலைதளத்தில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ட்வீட்டரில் சர்ச்சையான கருத்து பகிர்வதன் மூலமாக பிரபலமானவர் கல்யாண ராமன். பாஜக ஆதரவாளரான இவர், சிலருக்கு நேரடி […]

Continue Reading

கள்ள நோட்டு அச்சடித்து சிக்கிய ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வினர்; வீடியோ உண்மையா?

கள்ள நோட்டு அச்சடித்து சிக்கிய பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கட்டுக்கட்டாக புதிய 2000ம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 1000ம் ரூபாய் நோட்டு கட்டுக்கள், அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணங்கள் இருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் ப செல்வம் பற்றி பரவும் போலி நியூஸ் கார்டு!

‘’இந்தி தெரியாவிட்டால் பாகிஸ்தான் போய்விடுங்கள்,’’ என்று பாஜக தமிழ்நாடு இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் கூறியதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 8, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவில், Narathar Media என்ற லோகோவில் வெளியிடப்பட்ட நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அதில், ‘’இந்தி தெரியாது என்றால் பாகிஸ்தானுக்கு போய் விடுங்கள் – வினோஜ் ப […]

Continue Reading

பீகார் மக்களுக்கு சாலை நடுவே குடிசை கட்டி தந்த மோடி- வதந்தியை நம்பாதீர்!

‘’பீகார் மக்களுக்கு சாலை நடுவே குடிசை கட்டி தந்த மோடி,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 6, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், சாலை நடுவே குடிசைகள் அமைத்து வாழும் மக்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் கீழே, ‘’பீகாரில் மதுபானி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை 57ல் நடுவில் வீடு கட்டி கொடுத்த நம் […]

Continue Reading