FACT CHECK: அரசு பள்ளிக்கூட புத்தகப்பையில் ஸ்டிக்கர் ஒட்டியதா தி.மு.க?

அரசு வழங்கிய பள்ளிக்கூட பேகில் தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டி வழங்கியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive EPS போட்டோவே இருக்கட்டும்.. பெருந்தன்மை காட்டிய முதல்வர்… என சில மாதங்களுக்கு முன்பு வெளியான நியூஸ்கார்டை பயன்படுத்தி பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அதில், புளுகுமூட்டை திமுக என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த படத்துக்கு கீழ் தி.மு.க ஸ்டிக்கர் […]

Continue Reading

FACT CHECK: ஆர்த்தி டோக்ரா ஐஏஎஸ் காலில் பிரதமர் மோடி விழுந்தாரா?

ராஜஸ்தான் மாநில ஐஏஎஸ் அதிகாரியான ஆர்த்தி டோக்ரா காலில் பிரதமர் மோடி விழுந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உயரம் குறைவான பெண்மணி ஒருவரின் பாதங்களை பிரதமர் மோடி தொடுவது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரதமர் காலில் விழுந்ததன் பின்னணி இதுதாண்டா_RSS இதுதாண்டா_சஙகி. காசி விஸ்வநாதர் கோயிலைப் புதுப்பித்ததன் பின்னணியில் தலைமைக் […]

Continue Reading

FactCheck: நடிகை கிருத்தி ஷெட்டி கையில் மோடி, ஸ்டாலின் பற்றி பதாகை?- எடிட் செய்த புகைப்படத்தால் குழப்பம்!

நடிகை கிருத்தி ஷெட்டி கையில் மோடியை ஆதரித்தும், மு.க.ஸ்டாலினை விமர்சித்தும் பதாகை உள்ளது போன்று, ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். ஃபேஸ்புக்கிலும் பலர் இதனை பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:திருக்குறளை டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து திமுக அரசு […]

Continue Reading

FactCheck: 65 நாடுகளில் Snickers தடை செய்யப்பட்டுள்ளதா?

65 நாடுகளில் Snickers தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதே தகவலை பலரும் ஃபேஸ்புக்கில் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட தகவலில் கூறப்படுவதைப் போல, ‘Snickers […]

Continue Reading

FACT CHECK: திருப்பதி அர்ச்சகர் வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் என்று பரவும் ஜோஸ் ஆலுகாஸ் வீடியோ!

திருப்பதியில் ஒரு அர்ச்சகர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையில் 128 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மேசை மீது அடுக்கி வைக்கப்பட்டுள்ள தங்க நகைகள் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருப்பதி திம்பத்தில் பணியாற்றும் 16 அர்ச்சகர்களில் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய […]

Continue Reading

FactCheck: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கமா?- உண்மை இதோ!

‘’டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கப்பட்டது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் முழு விவரம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கப்பட்டதாகக் கூறி, திமுக அரசை விமர்சித்து, இந்த ஃபேஸ்புக் பதிவை டிசம்பர் 28, 2021 அன்று வெளியிட்டுள்ளனர். உண்மை அறிவோம்:டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், […]

Continue Reading

FACT CHECK: நல்லாட்சி மாநிலங்கள்: மகாராஷ்டிரா 2ம் இடம் என தினத்தந்தி தலைப்புச் செய்தி வெளியிட்டது ஏன்?

நல்லாட்சி வழங்கும் மாநிலங்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த மகாராஷ்டிராவை கொட்டை எழுத்தில் போட்டுவிட்டு, முதல் இடம் வாங்கிய தமிழ்நாட்டை சிறிய எழுத்தில் போட்டுள்ளது தினத்தந்தி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தினத்தந்தி முதல் பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட் உடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. தினத்தந்தியில் “மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் இந்தியாவிலேயே மராட்டியம் 2-ம் இடம். […]

Continue Reading

FACT CHECK: யோகி ஆதித்யநாத் மீது 2021 டிசம்பரில் நடந்த தாக்குதலை ஊடகங்கள் மறைத்தனவா?

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற வாகனத்தை பொது மக்கள் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டதாகவும் அந்த செய்தியை ஊடகங்கள் மறைத்துவிட்டதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive வாகன அணிவகுப்பை சிலர் தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்துகின்றனர். கல்லூரி வாசல் போன்று காட்சியளிக்கும் இடத்தில் மாணவிகள் […]

Continue Reading

FactCheck: பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி மக்கள் கோஷமிட்டார்களா?

‘’நள்ளிரவில் நகர்வலம் சென்ற பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி மக்கள் கோஷமிட்டனர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link காசி (வாரணாசி) நகரில் இரவு நேரத்தில் வெளியே சென்ற மோடியை கண்டித்து, பொதுமக்கள் கோஷமிட்டனர் என்று மேற்கண்ட வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இதனை வாசகர்கள் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி […]

Continue Reading

Rapid FactCheck: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த வட இந்திய மாணவரின் ஆங்கிலப் புலமை?- வதந்தியால் சர்ச்சை…

‘’நீட் தேர்வில் முதலிடம் பிடித்த வட இந்திய மாணவரின் ஆங்கிலப் புலமை,’’ என்று தலைப்பிட்டு ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த வீடியோ பதிவை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

FACT CHECK: ஜெர்மனியில் மேகக் கூட்டத்தில் இருந்து பாங்கு சத்தம் கேட்டதா?

ஜெர்மனியில் மேகக் கூட்டத்திலிருந்து பாங்கு சப்தம் கேட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive வீடியோ பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் இஸ்லாமியர்களின் பாங்கு சப்தம் கேட்கிறது. பலரும் தங்கள் மொபைல் போனில் அதை வீடியோ எடுப்பது போன்று உள்ளது. இந்த வீடியோவுடன் புகைப்பட பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஜெர்மனியில் திடீரென மேகக்கூட்டம் திரண்டு அதிலிருந்து […]

Continue Reading

FACT CHECK: கிறிஸ்துமஸ் கொண்டாடியவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுபவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட வீடியோவில் இருந்து ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுபவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். – அர்ஜூன் சம்பத்” என்று இருந்தது. நிலைத் […]

Continue Reading

FactCheck: புதுச்சேரியில் பிப்ரவரி 2022-ல் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடக்கிறதா?

‘’புதுச்சேரியில் 2022 பிப்ரவரி மாதம் இந்திய ராணுவத்திற்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆட்களை தேர்வு செய்வு செய்யும் முகாம் நடைபெறுகிறது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். Facebook Claim Link I Archived Link Shakthi News என்ற ஊடகம் வெளியிட்டுள்ள […]

Continue Reading

FACT CHECK: தமிழகத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டார் என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழ்நாட்டில் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டார் என்றும், தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்றும் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive பேருந்து ஓட்டுநர் ஒருவரை இளைஞர் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விடியா திமுக ஆட்சியில் மிக மோசமான நிலையில் தமிழகத்தின் சட்டம் ஓழுக்கு சீர் […]

Continue Reading

FACT CHECK: தீபாவளியைப் புறக்கணித்து கிறிஸ்துமஸ்க்கு மட்டும் வாழ்த்து கூறியதா ஆவின்?

ஆவின் நிறுவனம் தீபாவளி உள்ளிட்ட இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமல் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஆவின் பால் நிறுவனம் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியிட்ட பால் பாக்கெட் கவர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” நேற்று  #ஆவின் பாலில் வந்த கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்#. அரசாங்கமே மறைமுக மதப் பிரச்சாரத்தை  […]

Continue Reading

FactCheck: ஒமிக்ரான் பரவல்; புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தாரா?

‘’புதுச்சேரியில் ஒமிக்ரான் தொற்று பரவுவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முதலமைச்சர் ரங்கசாமி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link குறிப்பிட்ட பதிவை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். ‘’ஒமிக்ரான் பரவல் காரணமாக, புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி பள்ளி, கல்லூரிகளுக்கு […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க ஆட்சியில் கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்ததா?

தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் என்று ஒரு இந்திய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாடு முதலிடம் கடன் வாங்கியதில் Credite goes to whom? கடன், தமிழ்நாடு, திமுக அராஜகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ராம் […]

Continue Reading

FactCheck: மாணவர்கள் காதல் செய்யுங்கள் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாரா?

‘’மாணவர்கள் தினமும் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,’’ என்று ஒரு செய்தி தந்தி டிவி லோகோவுடன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன் பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்வதை கண்டோம். Facebook Claim Link 1 […]

Continue Reading

FACT CHECK: சீனப் போரின் போது தமிழக முதல்வராக அண்ணா இருந்தார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

இந்தோ – சீனப் போரின் போது இந்திய ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது அப்போதைய அண்ணாவின் ஆட்சி என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை வைத்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. சன் நியூஸ் கார்டு பகுதியில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரை! திமுகவுக்கு யாரும் […]

Continue Reading

FACT CHECK: ராஜிவ் காந்தி – சோனியா திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்ததாக பரவும் வதந்தி!

ராஜிவ் காந்தியும் சோனியா காந்தியும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டதாகவும் அப்படி இருக்கும் போது ராகுல் காந்தி எப்படி இந்துவாக இருக்க முடியும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ராகுல் காந்தி தான் அணிந்திருக்கும் பூணூலைக் காட்டுவது போன்ற படம் மற்றும் ராஜிவ் காந்தி – சோனியா காந்தி அமர்ந்திருக்க அவர்களுக்கு முன்பு பாதிரியார் […]

Continue Reading

FactCheck: பிரதமர் மோடி தொழிலாளர்களுடன் ஒன்றாக சாப்பிடுவது போல நடித்தாரா?

‘’தொழிலாளர்களுடன் ஒன்றாக சாப்பிடுவது போல பிரதமர் மோடி நடித்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை விரிவுபடுத்தும் பணிகளை செய்த தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து பிரதமர் மோடி உணவு அருந்தும் புகைப்படத்தை மேலே பகிர்ந்துள்ளனர். அதற்கு, ‘’ உடன் உட்கார வைக்கப்பட்ட எவரும் அவரோடு சரிநிகராக சாப்பிட்டுவிடக் கூடாது எல்லாமே ஒரு போட்டோ […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க அரசு ஆரம்பித்த பெண்களுக்கான மதுக்கடை என்று பரவும் படம் உண்மையா?

விடியல் அரசின் பெண்களுக்கான மதுக் கடை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ சாட்பாட் வாட்ஸ் அப் எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். மதுக்கடை ஒன்றில் பெண் ஒருவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மேல், “விடியல் அரசின் மம்மி மதுக் கடை” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  அசல் […]

Continue Reading

Rapid FactCheck: போரில் பாதித்த ராணுவ வீரர்களுக்கு உதவ, ஆயுதங்கள் வாங்க இந்த வங்கிக் கணக்கு உதவுகிறதா?

‘’இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவ, ஆயுதங்கள் வாங்க இந்த வங்கிக் கணக்கில் ஒவ்வொரு இந்தியரும் ரூ.1 செலுத்துங்கள்,’’ என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link மேற்கண்ட செய்தியை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) என்ற எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடினோம். உண்மை அறிவோம்:ராணுவ […]

Continue Reading

FACT CHECK: 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அதிசய பிப்ரவரி 2022 என்று பரவும் வதந்தி!

வருகிற 2022 பிப்ரவரி மாதம் அதிசய மாதம் என்றும் 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக் கூடிய சிறப்பான மாதம் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive போட்டோ பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிசய மாதம். வரும் பிப்ரவரி உங்கள் வாழ்நாளில் மீண்டும் ஒருபோதும் வராது. ஏனெனில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 […]

Continue Reading

FactCheck: முஸ்லிம் ப்ரோ ஆப் அமெரிக்க ராணுவத்திற்கு பயனாளர்களின் விவரத்தை விற்றதா?

‘’முஸ்லிம் ப்ரோ ஆப் அமெரிக்க ராணுவத்திற்கு பயனாளர்களின் ரகசியங்களை விற்றது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த செய்தியை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) நமக்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். ‘’பயனாளர்களின் விவரத்தை அமெரிக்க ராணுவத்திற்கு முஸ்லிம் ப்ரோ ஆப் விற்றுவிட்டது,’’ எனும் தலைப்பில் செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தியை கட்டிங் எடுத்து, மேற்கண்ட வகையில் வாட்ஸ்ஆப் […]

Continue Reading

FACT CHECK: உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியருக்கு கரண்ட் ஷாக் கொடுத்து தாக்கிய காவி கும்பல் என்று பரவும் தகவல் உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவரைத் திருடன் என்று கூறி 9 பேர் கொண்ட காவி கும்பல் கரண்ட் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்தது என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ சாட் பாட் எண்ணுக்கு வாசகர் ஒருவர் வீடியோ ஒன்றை அனுப்பி, அது பற்றி உண்மை விவரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த இணைப்பைத் திறந்து பார்த்த போது 2017ம் ஆண்டு […]

Continue Reading

FactCheck: கோவையில் கல்லூரி மாணவர்கள் பிபின் ராவத் மரணத்தை கொண்டாடினார்களா?

‘’கோவையில் கல்லூரி மாணவர்கள் பிபின் ராவத் மரணத்தை கொண்டாடினார்கள்,’’ என்று கூறி ஒரு வீடியோ செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த செய்தியை வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பி உண்மையா எனச் சந்தேகம் கேட்டிருந்தார். இதுபற்றி தகவல் தேடியபோது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் இதனை உண்மை போல பகிர்வதை கண்டோம். Twitter Claim Link I Archived Link […]

Continue Reading

FACT CHECK: டெல்லி அக்பர் சாலைக்கு பிபின் ராவத் பெயரை சூட்டினாரா மோடி?

டெல்லியின் பிரபலமான அக்பர் சாலைக்கு பிபின் ராவத் பெயரைப் பிரதமர் மோடி சூட்டினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிபின் ராவத் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “டில்லி சாலைக்கு தளபதி பிபின் இராவத் பெயர். டில்லியில் உள்ள அக்பர் சாலைக்கு இராணுவ தளபதி பிபின் இராவத் பெயர் சூட்டினார் பிரதமர் மோடி” என்று இருந்தது. […]

Continue Reading

FACT CHECK: சென்னை நபரை கைது செய்த உ.பி போலீஸ்… எப்போது நடந்தது?

பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறு பேசிய சென்னை நபரை உத்தரப்பிரதேச போலீசார் தமிழ்நாடு வந்து கைது செய்து அழைத்துச் சென்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிரதமர் மோடி குறித்து அவதூறு சென்னை நபரை தட்டி தூக்கிய உத்திர பிரதேச போலீசார்! பிரதமர் மோடி […]

Continue Reading

FACT CHECK: பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுகிறது என்று பரவும் வதந்தி!

தொழிற்சாலையில் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தொழிற்சாலை ஒன்றில் பிளாஸ்டிக்கை உருக்கி, சிறு சிறு துண்டுகளாக மாற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படும் விதம். அரிசி வாங்கும் போது கவனமாக இருக்கவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “அரிசியில் இப்போது பிளாஸ்டிக் அரிசியும் கலப்படம் பன்றானுக மக்களே அரிசி […]

Continue Reading

FactCheck: அர்ஜூன் சம்பத் மாரிதாஸ்க்கு ஆதரவாக போராட்டம் அறிவித்தாரா?

‘’மாரிதாஸ் கைதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் என்று அர்ஜூன் சம்பத் அறிவிப்பு,’’ என ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: FB Claim Link I Archived Link ‘’மாரிதாஸ் கைது செய்யப்பட்ட கண்டித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உண்ணாவிரதப் போராட்டம்,’’ எனும் தலைப்பில் மேற்கண்ட செய்தியை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:பிபின் ராவத் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய […]

Continue Reading

FactCheck: தேனி, ஆந்திராவில் சுற்றி திரியும் விசித்திர மிருகங்கள்?- கிராபிக்ஸ் வீடியோவால் சர்ச்சை!

‘’தேனி மாவட்டம், வருசநாடு மலைப் பகுதியில் சுற்றி திரியும் விசித்திர மிருகங்கள்,’’ என்றும், ‘’ஆந்திராவில் சுற்றி திரியும் விசித்திர மிருகங்கள்,’’ என்றும் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் 3 வீடியோக்கள் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனை தேனி மாவட்டம் என்று சிலரும், ஆந்திராவில் என்று சிலரும் கூறி, தகவல் பகிர்கின்றனர். இது தவிர, இந்த ஓநாய் போன்ற விசித்திர மிருகங்கள் கடித்து, பலர் காயமடைந்ததாகவும் […]

Continue Reading

FACT CHECK: பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து என்று பரவும் சிரியா வீடியோ!

பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து வீடியோ என்று ஒரு ஹெலிகாப்டர் விபத்து வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தபடி பறக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேருடன் சென்ற, விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் …” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Thamarai Shyam என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

FACT CHECK: கயிறு கட்டி ஆற்றைக் கடக்கும் மாணவர்கள் புகைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?

கயிறு கட்டி, அதன் மீது நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இப்படி ஒரு சூழல் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு உள்ளதால் இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பள்ளிக்கூட மாணவர்கள் ஆற்றைக் கடக்க, இரண்டு மரங்கள் இடையே கயிறு கட்டி, அதன் மீது நடந்து செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “பாலம் […]

Continue Reading

FactCheck: பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய வீடியோ இதுவா?

‘’இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி,’’ என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link ‘’இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணத்திற்கு உள்ளான ஹெலிகாப்டர் விபத்து,’’ என்று கூறி மேற்கண்ட வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் சக அதிகாரிகள் […]

Continue Reading

FACT CHECK: கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டதா?

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அம்மாநில அரசு தடை செய்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் வடிவேலு புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கேரளாவில் RSS இயக்கத்தை தடை செய்து கேரள மாநில அரசு உத்தரவு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Shali Mary என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2021 டிசம்பர் 3ம் தேதி […]

Continue Reading

FactCheck: இலங்கை தமிழ் இந்துக்கள் 6 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கியதாக அமித் ஷா கூறினாரா?

‘’6 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது- அமித் ஷா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்வதை கண்டோம். FB Claim Link I […]

Continue Reading

RAPID FACT CHECK: தமிழ்நாட்டின் பெயரை தக்‌ஷிண பிரதேஷ் என மாற்றுவோம் என்று பா.ஜ.க கூறியதாக மீண்டும் பரவும் வதந்தி!

தமிழ்நாடு பா.ஜ.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தக்‌ஷிண பிரதேசம் என தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவோம் என்று கூறியதாகவும், அப்போது அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அமைதி காத்தார் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “பொங்கல் பரிசு பைகளில் தமிழ் புத்தாண்டு மற்றும் […]

Continue Reading

FACT CHECK: அமித்ஷா படத்திற்கு பதில் சந்தான பாரதி படத்தை வைத்து வாழ்த்து வெளியிட்டாரா தெலங்கானா பா.ஜ.க பொதுச் செயலாளர்?

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினரும் தெலங்கானா மாநில பா.ஜ.க பொதுச் செயலாளருமான தாலோஜூ ஆச்சாரி (Thaaloju Achary) அமித்ஷா பிறந்த நாளுக்கு, அமித்ஷா படத்துக்கு பதில் தமிழ் திரைப்பட நடிகர் சந்தான பாரதியின் படத்தை வைத்து வாழ்த்து தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து பெயர் […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க ஆட்சியில் மதுரையில் பெண்களுக்கு தனி பார் திறக்கப்பட்டதா?

தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு என்று தனியாக மது பார் திறக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் மது அருந்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ் வளர்த்த மதுரையில் பெண்களுக்காக தனி பார் அமைத்து விடியல் சாதனை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Balachandar Nagarajan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 […]

Continue Reading

FactCheck: 2021ல் நிகழ்ந்த சென்னை வெள்ள பாதிப்பு வீடியோவா இது?

‘’2021ல் நிகழ்ந்த சென்னை வெள்ள பாதிப்பு வீடியோ- மக்கள் அவதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் வீடியோ ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link சென்னையில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவிக்கும் காட்சிகள் மேற்கண்ட வீடியோ செய்தியில் இடம்பெற்றுள்ளன. இதனை பலரும் 2021 நவம்பர் மாதத்தில் நிகழ்ந்ததைப் போல குறிப்பிட்டு, தகவல் பகிர்ந்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

FACT CHECK: கிழக்கிந்திய கம்பெனி 1612ல் ஐயப்பன் நாணயத்தை வெளியிட்டதா?

கிழக்கிந்திய கம்பெனி 1612ம் ஆண்டிலேயே ஐயப்பன் உருவம் பதித்த நாணயங்களை வெளியிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஐயப்பன் உருவம் பதிக்கப்பட்ட நாணயத்தின் இருபக்கங்கள் பகிரப்பட்டுள்ளன. கிழக்கிந்திய கம்பெனி 1616ம் ஆண்டு அந்த நாணயத்தை வெளியிட்டதாக அதில் உள்ளது. அதனுடன் “400 வருடங்களுக்கு முன்பு ஐயப்பன் உருவத்துடன் ஆங்கிலேயர் வெளியிட்ட நாணயம். கடந்த 1616 […]

Continue Reading

FACT CHECK: ஒமிக்ரான் வைரஸ் பற்றி ஏற்கனவே திரைப்படம் வந்ததா?

உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பற்றி ஏற்கனவே படம் வந்துவிட்டது என்றும், திட்டமிட்டபடி கொரோனா வைரஸ் பரவல் நடந்து வருகிறது என்றும் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “The omicron Variant” என்ற திரைப்படம் ஒன்றின் போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த நாகரீக வாழ்வே.. அவன் கட்டமைத்த நாடக மேடையில் தான்.. அதில் இருந்துகொண்டு நம்மை நாம் உணரமுடியாது..எல்லாமே […]

Continue Reading

FactCheck: வட இந்தியாவில் அழியாமல் கிடைத்த 300 ஆண்டுகள் பழமையான சடலம் என்று பகிரப்படும் வதந்தி…

‘’வட இந்தியாவில் அழியாமல் கிடைத்த 300 ஆண்டுகள் பழமையான சடலம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link ‘’வடநாட்டின் லட்ச்மண்புரா தர்ஹாவில் ரோடு அகலப்படுத்தும்போது வெளிப்பட்ட 300 வருட பழமையான அழியாத ஜனாஸா,’’ என்று கூறி மேற்கண்ட தகவலை சிலர் பகிர்ந்து வருகின்றனர். இதனை +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் […]

Continue Reading

FACT CHECK: பாஜகவுடன் அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா நீக்கப்பட்டாரா?

பாஜக-வோடு அ.தி.மு.க-வை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா என ஏபிபி நாடு கேள்வி எழுப்பி செய்தி வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா புகைப்படத்துடன் ஏபிபி நாடு வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகவோடு […]

Continue Reading

FACT CHECK: கொரோனா வேரியண்ட் வெளிப்படும் காலம் தொடர்பான அட்டவணையை உலக சுகாதார நிறுவனம் வைத்துள்ளதா?

புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா எப்போது வெளியாகும், அதன் அறிவியல் பெயர் என்ன என்பது பற்றி உலக சுகாதார நிறுவனம் ரகசியமாக பட்டியல் தயாரித்து வைத்திருந்தது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஜான்ஸ் ஹாப்கின்ஸ், வேர்ல்ட் எக்கனாமிக் ஃபோரம், உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் லோகோவோடு கூடிய பட்டியலை யாரோ சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அதை […]

Continue Reading