குங்கும பொட்டு வைத்திருந்த மு.க.ஸ்டாலின்!

‘’மு.க.ஸ்டாலின் குங்கும பொட்டு வைத்திருந்தார்,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இது பார்ப்பதற்கு சந்தேகமாக இருந்ததால், இதுபற்றி உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link DMK Fails என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்துவருகின்றனர். உண்மை அறிவோம்:ஸ்டாலின் குங்கும பொட்டு வைத்திருப்பது உண்மையான என்ற சந்தேகத்தில் ஃபேஸ்புக்கில் இதுதொடர்பாக வேறு ஏதேனும் பதிவு வெளியாகியுள்ளதா, என தேடிப் […]

Continue Reading

பினராயி விஜயன் மானஸ்தன்; ரஜினி மானங்கெட்ட ஜென்மம்: ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை

‘’பினராயி விஜயன் மானஸ்தன், இங்கேயும் சில மானங்கெட்ட ஜென்மங்கள் இருக்கானுங்களே,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இது பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: Archived Link அச்சம் தவிர் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை மே 29ம் தேதி வெளியிட்டுள்ளது. பினராயி விஜயன் புகைப்படத்தையும், ரஜினி நடித்த மன்னன் படக் காட்சிகளையும் இணைத்து, ‘’மோடி பதவியேற்பு விழாவில் பினராயி விஜயன் கலந்துகொள்ளவில்லை, ரஜினி மட்டும் கலந்துகொள்கிறார். மானங்கெட்ட ஜென்மம்,’’ […]

Continue Reading

ஜியோ நெட் உதவியுடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதா?

‘’ஜியோ நெட் உதவியுடன் இந்தியா முழுவதும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டன,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link மே 24ம் தேதி, Abbasali Abbas Abbas என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. ஜியோ நெட் உதவியுடன் ஒரே இடத்தில் இருந்துகொண்டு இந்தியா முழுவதும் கம்ப்யூட்டர் மூலம் ஹேக் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் ஓட்டுப் பெட்டிகள் என்று, […]

Continue Reading

டைம் பத்திரிகை மோடியை கிண்டல் செய்து கார்ட்டூன் வெளியிட்டதா?

‘’மோடியை கிண்டல் செய்து டைம் பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டுள்ளது,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவை மே 26ம் தேதி Sivasuriya என்பவர் வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 2வது முறையாக பிரதமர் மோடி ஆட்சியமைக்க […]

Continue Reading

மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாகக் கூறி மத்திய பிரதேசத்தில் 3 பேர் மீது கொடூர தாக்குதல்!

‘’மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி பிரச்னையால் 3 பேர் மீது கொடூர தாக்குதல்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்:விகடன் இணையதளம் குறிப்பிட்ட செய்தியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. Archived Link மே 25ம் தேதி வெளியிடப்பட்ட அந்த செய்தியின் விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும். இதன்படி, மத்திய பிரதேசம் மாநிலத்தின் சியோனி பகுதியில் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட […]

Continue Reading

குரான் படித்த முஸ்லீம் ஒருவரை மனிதாபிமானம் இன்றி கைது செய்த இலங்கை அதிகாரிகள்; உண்மை அறிவோம்!

‘’நடுவானில் பறக்கும்போது குரான் படித்த முஸ்லீம் ஒருவரை மனிதாபிமானம் இன்றி கைது செய்த இலங்கை அதிகாரிகள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link Sri Lanka post box என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை கடந்த மே 27ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘’ #விமானத்தில்_அல்குர்ஆனை_ஓதினார் என்ற ஒரே காரணத்துக்க முஸ்லிம் ஒருவரை சந்தேகத்தின் பேரில் 12 மணி நேரம் […]

Continue Reading

ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றாரா மோடி?

‘’ரூ.15 லட்சம் பணம் போடுறேன்னு பொய் பிரச்சாரம் பண்ணி மக்களை ஏமாத்தி ஜெயித்தவர் மோடி‘’, என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link அச்சம் தவிர் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை மே 28ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், ரஜினிகாந்த் ஊடகங்களில் அளித்த பேட்டியை மேற்கோள் காட்டி, அதன் கீழே, நாட்டாமை படத்தில் மனோரமா பேசும் காட்சி புகைப்படத்தை இணைத்துள்ளனர். ‘’நேரு, […]

Continue Reading

பாஜக வெற்றி பெற்ற விரக்தியில் புலம்பிய மம்தா பானர்ஜி: வைரல் வீடியோவால் குழப்பம்

‘’மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால் விரக்தியடைந்து மிக மோசமாக நடந்துகொண்ட மம்தா பானர்ஜி‘’, என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வீடியோ பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link PN செய்திகள் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை, மே 28ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், மம்தா பானர்ஜி ஆக்ரோஷமாக, வங்க மொழியில் கோஷம் போடுகிறார். அவரை ஊடகத்தினர் சுற்றி வளைத்து பேட்டி எடுக்கின்றனர். அந்த இடத்தை […]

Continue Reading

தமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்?- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் வசிக்கின்றனர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link கடந்த மே 9ம் தேதியன்று, குறிப்பிட்ட பதிவை, Mukkulathor Community என்ற ஃபேஸ்புக் ஐடி வெளியிட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவை பார்க்கும்போதே, ஜாதி பெருமைக்காகவும், ஜாதி ரீதியான வன்முறையை விதைக்கும் நோக்கத்திலும் […]

Continue Reading

கனிமொழி சொந்தமாக சாராய ஆலை வைத்துள்ளார்: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

‘’தனது சொந்த சாராய ஆலையை கனிமொழி மூடுவாரா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link காலத்தின்குரல் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த மே மாதம் 26ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள் மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோரின் புகைப்படங்களை இணைத்து, அதன் மேலே, ‘’60,575 வாக்குகள் பெற முடிந்த காளியம்மாவால் […]

Continue Reading

பிஎஸ்என்எல் நிறுவனம் 54,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்?

‘’பிஎஸ்என்எல் நிறுவனம் 54 ஆயிரம் ஊழியர்களை நீக்க ஒப்புதல்,’’ என்ற பெயரில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பெயரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link சேகுவேரா போராளி என்ற ஃபேஸ்புக் ஐடி கடந்த ஏப்ரல் 3ம் தேதியன்று இந்த பதிவை நக்கல் மன்னன் கவுண்டமணி என்ற பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதில், பிரதமர் மோடியின் புகைப்படத்தையும், பத்திரிகையாளர் அருண் ஷோரியின் புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’54 ஊழியர்களை நீக்க […]

Continue Reading

வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய பாஜக, தேர்தல் ஆணையம் சதித்திட்டம்: சர்ச்சை கிளப்பும் வீடியோ

இந்திய அளவில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய, பாஜக.,வும், தேர்தல் ஆணையமும் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறி, ஒரு பரபரப்பு வீடியோ ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை பரிசோதித்தோம். வதந்தியின் விவரம்: Archived Link இந்த பதிவில், Tricolour News Network என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சியின் செய்தி வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதில் ஒரு வெள்ளைக்காரப் பெண் பேசுகிறார். அவர், இந்திய தேர்தல் பற்றியும், வாக்குப் பதிவு இயந்திரங்களில் […]

Continue Reading

பொன். ராதாகிருஷ்ணன் தோல்விக்கு மத ரீதியான ஓட்டுகள் காரணமா?

‘’பொன்.ராதாகிருஷ்ணன் தோற்றதற்கு மத வேறுபாடுதான் காரணம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link நாங்க நாகர்கோவில் காரங்க என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பொன்.ராதாகிருஷ்ணன் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’குமிரியில் நீங்கள் மதத்தால் தோற்று போகலாம், ஆனால் நீங்கள் செய்த சாதனைகள் என்றும் உங்கள் புகழ் பாடும்!!!,’’ என்று எழுத்துப் பிழைகளுடன் எழுதியுள்ளனர். இதனை பலரும் […]

Continue Reading

தமிழக விவசாயிகளுக்காக இந்திய நதிகளை காவிரியுடன் இணைப்போம்: இந்தியா டுடே பேட்டியில் நிதின் கட்கரி சொன்னாரா?

மக்களவை தேர்தல் முடிவுகளை அடுத்து, “விவசாயிகளின் நன்மை கருதி, உடனடியாக, தேசிய நதிகளை காவிரியுடன் இணைத்து, தமிழகம் செழிக்க பாடுபடுவேன்,’’ என்று இந்தியா டுடே டிவியில் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி, கண்ணீர் மல்க பேசியதாக, சில ஃபேஸ்புக் வதந்திகளை பார்க்க நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். வதந்தியின் விவரம்: Archived Link Archived Link மேற்கண்ட 2 ஃபேஸ்புக் பதிவுகளிலுமே ஒரே விசயத்தைத்தான் கூறியுள்ளனர். அதன் விவரம் கீழே வருமாறு: ***நேற்று […]

Continue Reading

மக்களவைத் தேர்தல் 2019 வெற்றிக்காக மோடியை கட்டியணைத்து அத்வானி வாழ்த்தினாரா?

‘’பிரதமர் மோடியை வாழ்த்திய பாஜக மூத்த தலைவர் அத்வானி,’’ என்ற தலைப்பில் ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Kalaiselvi Samyraj என்பவர் மே 23ம் தேதி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இது 2019 மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து நடைபெற்ற சம்பவம் என்பதுபோல அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட புகைப்படத்தில், மோடியை அரவணைத்து, அத்வானி […]

Continue Reading

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உயிரிழந்தார்: விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

‘’பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சற்று முன் வீரமரணம் அடைந்தார்,’’ என்ற தலைப்பில் ஒரு விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link நக்கல் மன்னன்-2.0 என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை, மே 23ம் தேதி வெளியிட்டுள்ளது. இது வேடிக்கையாக இருந்தாலும், அரசியல் விஷமத்தனம் நிறைந்ததாக உள்ளது. பலரும் இதனை உண்மை போல பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மே 23ம் தேதி இந்திய […]

Continue Reading

டென்னிஸ் ராக்கெட் வைத்து டேபிள் டென்னிஸ் விளையாடிய மு.க.ஸ்டாலின்: வைரல் புகைப்படம்

‘’டென்னிஸ் ராக்கெட் வைத்து டேபிள் டென்னிஸ் விளையாடினார் மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி, ஒரு ஃபேஸ்புக் புகைப்பட பதிவை காண நேரிட்டது. இதனைப் பலரும் வைரலாக ஷேர் செய்து வருவதால், இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link கடந்த மே 13ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. பூபாலன் சிதம்பரம் சிட்டங்காடு என்பவர் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி, அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது: அஜய் அகர்வால் சொன்னது என்ன?

‘’ தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது? பாஜக மூத்த தலைவர்!,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. சத்தியம் தொலைக்காட்சி பகிர்ந்துள்ள இச்செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது? பாஜக மூத்த தலைவர்!#BJP #Ajay_Agarwal #Parliament_election_2019 #PM #Modi Archived Link சத்தியம் தொலைக்காட்சியின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியை அப்படியே, அவர்களின் அதிகாரப்பூர்வ […]

Continue Reading

சற்றுமுன் நடந்த சம்பவம்; உதவி தேவை- பீதியை கிளப்பும் வைரல் வீடியோ

‘’சற்றுமுன் நடந்த சம்பவம், உதவி தேவை, தீயணைப்புத் துறை வரும் வரை அதிகமாக பகிரவும், ப்ளீஸ்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வீடியோ பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:சற்றுமுன் நடந்த சம்பவம் உதவி தேவை தீயணைப்புத்துறை வரும் வரை அதிகமாக பகிரும் ப்ளீஸ்.. Archived Link இந்த வீடியோ பதிவை, Tamil Android Boys என்ற ஃபேஸ்புக் குழு, கடந்த மே 16ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், மின்சார […]

Continue Reading

தங்கையை பலாத்காரம் செய்தவனின் தலையை துண்டித்த வீரமான அண்ணன்: ஃபேஸ்புக் வதந்தி

‘’தங்கச்சியை #பலாத்காரம் செய்தவனின் தலையை வெட்டிய #வீரமான அண்ணன்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Pmkpavun Kumar என்பவர் இந்த பதிவை, மே 22ம் தேதி வெளியிட்டுள்ளார். இதில், போலீஸ் நிலையத்தில் ரத்தக்கறையுடன் கையில் ஒரு தலையை வைத்துக் கொண்டு நிற்கும் ஒரு இளைஞரின் 3 புகைப்படங்களை ஒன்றாகச் சேர்த்து பதிவிட்டுள்ளனர். அதன் மேலே, ‘’ தங்கச்சியை #பலாத்காரம் […]

Continue Reading

மோடியின் தியானம்- குகையே இல்லையாம்… குழப்பும் ஒன் இந்தியா செய்தி!

‘’மோடியின் தியானம்- குகையே இல்லையாம்… அரசின் குகை மாடல் கெஸ்ட் ஹவுஸாம்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link இதே செய்தியை, ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திலும் விரிவாக வெளியிட்டுள்ளனர். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link இந்த செய்தி மே 19ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.  உண்மை அறிவோம்: ஒன் இந்தியா செய்தியில் குறிப்பிட்டுள்ளது […]

Continue Reading

காமராஜ் 1975ம் ஆண்டில் உயிரிழந்தார்: ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

காமராஜ் காலமானார், என்ற தலைப்பில் ஒரு வைரல் செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Sutralam Suvaikalam என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை ஏப்ரல் 16ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், தினமணி நாளிதழின் பழைய செய்தியை புகைப்படமாக எடுத்து, பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் வைரலாக ஷேர் செய்துவருகின்றனர். உண்மை அறிவோம்:கடந்த 1903ம் ஆண்டு விருதுநகரில் பிறந்தவர் கே.காமராஜ். இந்திய தேசிய காங்கிரஸ் […]

Continue Reading

கோட்சே சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாரா மோடி?

‘’எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை. ஆனால், மனிதர்கள்…,’’ என்ற தலைப்பில் கோட்சே சிலைக்கு மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாகக் கூறி ஒரு புகைப்பட பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்வதால், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Tamil Makkal என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை, கடந்த மே 15ம் தேதி வெளியிட்டுள்ளது. இப்பதிவில், காந்தி சிலைக்கும், காந்தியை கொன்றவர் சிலைக்கும் மோடி மாலை அணிவித்து […]

Continue Reading

ராமநாதபுரத்தில் லஞ்சம் கேட்ட டிராஃபிக் போலீஸை புரட்டியெடுத்த குட்டியானை ஓட்டுநர்- உண்மை என்ன?

ராமநாதபுரத்தில் லஞ்சம் கேட்ட டிராஃபிக் போலீஸை புரட்டியெடுத்த குட்டியானை ஓட்டுநர் என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதேபோல, மற்றொரு பதிவில், தன்னை தாக்கிய போலீஸ் அதிகாரியை திருப்பி தாக்கிய டிரைவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு என்றும் மற்றொரு ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது. இவ்விரு பதிவுகளும் ஒரே செய்தி பற்றியவை என்பதால், இவற்றின் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்:…சற்றுமுன் அதிகமாக பகிரவும் ப்ளீஸ்… ராமநாதபுரத்தில் லஞ்சம் […]

Continue Reading

தந்தி டிவி நிகழ்ச்சியில் திமுக, அமமுக கட்சிகளை விமர்சித்த ராஜேந்திர பாலாஜி!

‘’திமுக, அமமுக கட்சிகளை போட்டு கிழி கிழி,’’ என்ற தலைப்பில், தந்தி டிவி நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதை வீடியோவாக ஃபேஸ்புக்கில் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:அன்னே ராஜேந்திர பாலாஜி அன்னே….இவ்ளோ நாள் எங்க அன்னே இருந்தீங்க….#DMK#AMMKபோட்டு கிழி கிழி…… Archived Link இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காரசாரமாகப் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவர் பேசும் மேடை, […]

Continue Reading

டூரிஸ்ட் கைடாக இருந்தவர் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை அறிவோம்!

‘’ஏன்டா டூரிஸ்ட் கைடா இருந்த ஆளை பிரதமராக்குனா ஊரு சுத்தமா என்னய்யா செய்வான்,’’ என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதில் பிரதமர் மோடியின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link நீதியின் குரல் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை கடந்த மே 15ம் தேதி பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading

மத போதகர்களால் கற்பழிக்கப்படும் பெண்கள் போலீசில் புகார் செய்யக்கூடாது: போப் ஆண்டவர் சொன்னது என்ன?

‘’மத போதகர்களால் கற்பழிக்கப்படும் பெண்கள் காவல்துறையில் புகார் செய்யக்கூடாது,‘’ என்று போப் ஆண்டவர் சொன்னதாகக் கூறி, ஃபேஸ்புக்கில் ஒரு சர்ச்சை பதிவை காண நேரிட்டது. அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link Pragash R Goundar என்பவர் இந்த பதிவை கடந்த மே 14ம் தேதி பகிர்ந்துள்ளார். இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக, ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:முதலில் இந்த பதிவு, இவராகச் சொந்தமாக தயாரித்ததில்லை என […]

Continue Reading

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக நடவு நட்ட வயல்களில் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம்!

தரங்கம்பாடி அருகே நடவு நட்ட வயல்களில் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம் என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுவரை 12 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ள இந்த பதிவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link மே 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவில், பொக்லைன் இயந்திரங்கள் ஒரு நெல்வயலில் இறங்கி, சேதம் செய்யும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதன் மேலே, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக, தரங்கம்பாடி அருகே நடவு நட்ட […]

Continue Reading

ஜெயலலிதா பொறுக்கி எடுத்த விஞ்ஞானிகள்: தமிழக அமைச்சர்கள் பற்றிய ஃபேஸ்புக் பதிவு

‘’ஜெயலலிதாவால் பார்த்து பொறுக்கி எடுக்கப்பட்ட தரமான விஞ்ஞானிகள்,’’ என்று கூறி, தமிழக அமைச்சர்களை கேலி செய்து ஒரு ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டிருந்தனர். அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டிருந்த இப்பதிவில் உள்ள உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link மே 7ம் தேதி இந்த பதிவு, வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி அனைவரையும் கிண்டல் செய்து, அவர்கள் பேசியது மற்றும் அவர்கள் சமீபத்தில் செய்தது போன்ற செயல்களையும் சேர்த்து பகிர்ந்துள்ளனர். […]

Continue Reading

இது உண்மையாக இருந்தால் நானும் பாஜகவை எதிர்ப்பேன்: ஃபேஸ்புக் பதிவின் உண்மை விவரம்!

‘’இது உண்மையாக இருந்தால் நானும் பாஜக.,வை எதிர்ப்பேன்,’’ என்று கூறி, ஃபேஸ்புக்கில் ஒருவர், விகடன் செய்தியை மேற்கோள் காட்டி பதிவிட்டிருந்தார். இதனைப் பலரும் ஷேர் செய்திருந்தார்கள். எனவே, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link கடந்த மே மாதம் இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், விகடன் இணையதளத்தில் வெளியான செய்தியை இணைத்து, இதன் மேலே, ‘’இது உண்மையாக இருந்தால், நானும் பாஜக.,வை எதிர்ப்பேன்… எதைச் செய்தாலும், கண் மூடிக்கொண்டு ஆதரிக்கும் […]

Continue Reading

ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி பற்றிய பதிவால் சர்ச்சை

‘’திருட்டுக் காவலாளிகள்,’’ என்ற தலைப்பில், ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி பற்றி, விஷமத்தனமாக பதிவிடப்பட்டுள்ள ஒரு ஃபேஸ்புக் பதிவு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அதில், கிடைத்த தகவல்கள் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Stalin Panimayam என்பவர் மேற்கண்ட பதிவை, கடந்த ஏப்ரல் 12ம் தேதி வெளியிட்டுள்ளார். இதில், திருட்டுக் காவலாளிகள் எனக் குறிப்பிட்டு, அதன் கீழே, ஸ்மிருதி இரானி புகைப்படத்தை வைத்து, அவர் 2014ல் பி.காம். படித்ததாகச் சொன்னார் என்றும், 2019ல் பிளஸ் 2 […]

Continue Reading

காந்தி உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்ட இந்து மகாசபை தலைவர்!

இந்து மகாசபை தலைவர் பூஜா சகுண பாண்டே, காந்தி உருவபொம்மையை துப்பாக்கியால் சுடுவது போல, ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, இந்த பெண் இந்து தீவிரவாதியா அல்லது கிறிஸ்தவரா, இஸ்லாமியரா எனக் கேட்டு, ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவு வெளியிட்டுள்ளார். அது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருவதால், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link மே 15ம் தேதி, Jaffar Ali Melur என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’இந்து மதத்தைச் […]

Continue Reading

இனி எவனும் நீட்டு காட்டுன்னு வந்தா கொண்டேபுடுவேன்: வைரல் பதிவால் சர்ச்சை

‘’இனி எவனும் நீட்டு காட்டுன்னு வந்தா, வக்காளி கொண்டேபுடுபேன்,’’ என எழுத்துப்பிழைகளுடன் கூடிய ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்து, அதன் முடிவுகளை இங்கே தொகுத்துள்ளோம். தகவலின் விவரம்: Archived Link தீ தமிழன் என்பவர் கடந்த மே மாதம் 3ம் தேதியன்று, இப்பதிவை பகிர்ந்துள்ளார். இதில், அர்விந்த் கெஜ்ரிவால், டெல்லியில் படிக்கும் தமிழ் மாணவர்கள் பற்றி பேசியதாக ஒரு செய்தியையும், ராஜ்கிரண் புகைப்படத்தையும் வைத்து பதிவிட்டுள்ளனர். அதில், ‘’உங்க […]

Continue Reading

நித்யானந்தா தலைமையில் ஆசிரமங்கள் அமைக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதா?

‘’மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நித்யானந்தா தலைமையில் ஆசிரமங்கள் அமைக்கப்படும்…!,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதன் விவரம் இதோ… தகவலின் விவரம்: Archived Link மக்கள் உரிமை குரல் என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை, ஏப்ரல் 8ம் தேதி வெளியிட்டுள்ளது. நித்யானந்தாவும், எச்.ராஜாவும் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’வெளியானது 2019 நாடாளுமன்ற தேர்தலின் […]

Continue Reading

பாகிஸ்தான் பிரதமரின் ஆசி பெற்ற வேட்பாளர் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை என்ன?

‘’பாகிஸ்தான் பிரதமரின் ஆசி பெற்ற வேட்பாளர் மோடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link I Support Thirumurugan Gandhi என்ற ஃபேஸ்புக் குழு கடந்த ஏப்ரல் 10ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பிரதமர் மோடியின் புகைப்படத்தையும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பற்றி நியூஸ் 7 தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன்கீழே, பாகிஸ்தான் […]

Continue Reading

கல்ராஜ் மிஸ்ரா இன்னமும் மத்திய அமைச்சர் பதவியில் உள்ளார்: தி இந்து தமிழ் திசைக்கு வந்த குழப்பம்

‘’மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா,’’ என்று கூறி ஒரு செய்தியை தி இந்து தமிழ் திசை இணையதளம் வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை, தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் இந்து தமிழ் திசை பகிர்ந்துள்ளது. கல்ராஜ் மிஸ்ரா இன்னமும் மத்திய அமைச்சர் பதவியில் தொடர்கிறாரா என்ற கோணத்தில் இதுபற்றி நாம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: குடிமக்கள் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக பாஜக உறுதி அளிக்கவில்லை: மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா மறுப்பு Archived […]

Continue Reading

கோவை குடிநீர் கோவிந்தா: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

‘’கோவை குடிநீர் கோவிந்தா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை, காண நேரிட்டது. இதனைப் பலரும் வைரலாக ஷேர் செய்து வருவதால், இதன் உண்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: கோவை குடிநீர் கோவிந்தா….!!! கோவையை வச்சு செய்ய கங்கனம் கட்டிவிட்டார்கள் காவி கார்பரேட் கூட்டம்… இனி திராவிட தேசிய கட்சிகளை நம்பி வாக்களித்தால்…சர்வநாசம் நிச்சயம்…. Archived Link கடந்த மார்ச் 26ம் தேதியன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒரு வீடியோ […]

Continue Reading

இஸ்ரேலின் இன்னொரு கொடூர முகம்தான் ஐஎஸ்ஐஎஸ்: ஃபேஸ்புக் தகவலின் உண்மை என்ன?

‘’ஐஎஸ் தீவிரவாதிகளை வளர்த்துவிடுவதே இஸ்ரேல் நாடுதான்,’’ என்கிற ரீதியில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் அடிப்படையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதன் விவரம் இதோ… தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட பதிவில், ஐஎஸ் தீவிரவாதிகளை வளர்த்துவிட்டு, உலகம் முழுக்க இஸ்லாம் என்றால் அது பயங்கரவாதம்தான் என பரப்புரை செய்து, இஸ்லாம் மதத்தை […]

Continue Reading

வாக்குப் பதிவு இயந்திரம் உத்திரமேரூரில் உடைக்கப்பட்டதா?

‘’உத்திரமேரூரில் வாக்கு எந்திரத்தின் சீல் உடைக்கப்பட்டது,’’ என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. அதன் உண்மைத்தன்மை பற்றி நாம் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு, ஏப்ரல் 20ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். ஆம் நாங்கள் சமூக விரோதிகள் என்ற பெயரிலான ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. உண்மை அறிவோம்:இந்த பதிவில், வாக்கு இயந்திரங்களை சிலர் சரிபார்ப்பதுபோன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் […]

Continue Reading

20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது: சர்க்காரியா கமிஷனிடம் கருணாநிதி இப்படி சொன்னாரா?

‘’20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது,’’ என்று கருணாநிதி, சர்க்காரியா கமிஷன் முன்பு, சாட்சியம் அளித்ததாகக் கூறி, ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: #ஊழலின் பிதாமகன்… கட்டுமரம் Archived Link ஏப்ரல் 6ம் தேதி Mohan Raj என்பவர் இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளார். இதனை உண்மை என நம்பி, ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்த பதிவை பார்க்கும்போதே இது […]

Continue Reading

மோடி கோரிக்கையை ஏற்று சவூதி அரசு 850 கைதிகளை விடுதலை செய்யவில்லை: ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை

‘’மோடியின் கோரிக்கையை ஏற்று சவூதி அரசு 850 கைதிகளை விடுதலை செய்யவில்லை. சவூதியில் ரமலான் மாதத்தை முன்னிட்டு பொது மன்னிப்பாக அவர்களை விடுதலை செய்துள்ளனர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ரமளான் மாத பொது மன்னிப்பாக சௌதி அரேபிய அரசு சிறைக் கைதிகளை ஆண்டு தோறும் விடுதலை செய்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 850 இந்தியர்களையும் விடுதலை செய்துள்ளது. அதை தனது […]

Continue Reading

அர்விந்த் கெஜ்ரிவால் பேசியதற்கும், தமிழ்நாடு வேலை தமிழருக்கே என்பதற்கும் என்ன தொடர்பு?

‘’தமிழ்நாடு வேலை தமிழருக்கே போராட்டம் விளைவு,’’ என்று கூறி ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: #தமிழ் பிரிவினை போராட்டம் விளைவு…!#அனைத்து மாநிலங்களிலும் #மொழி #பிரிவினை பேச #ஆரம்பித்தால் நிலைமை நினைத்து பாருங்கள்..? மே 4ம் தேதி பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், கெஜ்ரிவால் பற்றி நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியை இணைத்து, ‘’தமிழ் பிரிவினை போராட்டம் விளைவு, அனைத்து மாநிலங்களிலும் மொழி பிரிவினை பேச ஆரம்பித்தால் நிலைமை […]

Continue Reading

சிதம்பரத்தில் திமுக வன்னியர்கள் எனக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று திருமாவளவன் சொன்னாரா?

‘’சிதம்பரத்தில் திமுக வன்னியர்களின் ஓட்டு எனக்குத் தேவையில்லை என்று திருமாவளவன் பேசியதால் பரபரப்பு,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதன் விவரம் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்:வன்னியர்கள் ஓட்டு எனக்கு தேவையில்லை திருமாவளவன் திட்டவட்டம்.பிரச்சாரம் செய்ய ஊருக்குள் அனுமதிக்காததால் திருமாவளவன் ஆத்திரம். Archived Link ஏப்ரல் 11ம் தேதியன்று, இந்த பதிவை கோபிநாத் தமிழன் என்பவர் பகிர்ந்துள்ளார். இதில், திருமாவளவனின் புகைப்படத்தை பகிர்ந்து,’’வன்னியர்கள் ஜாதி […]

Continue Reading

அன்புமணி ராமதாஸ் மீது 12 குற்ற வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுவது உண்மையா?

‘’இந்தியா முழுவதும் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் குற்ற வழக்குகள் அதிகம் உள்ள வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. ஆதாரத்திற்கு, தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டையும் சேர்த்து பகிர்ந்துள்ளதால், இந்த பதிவில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Hemanathan Murugesan என்பவர் திமுக இணையதள அணி என்ற ஃபேஸ்புக் குழுவில் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், தந்தி டிவி […]

Continue Reading

அம்மா அனுப்பும் பணத்தில் மோடி உல்லாச வாழ்வு வாழ்கிறாரா?

அம்மா அனுப்பும் பணத்தில் மோடி உல்லாச வாழ்வு வாழ்வதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்துள்ளோம். தகவலின் விவரம்: தரமான வடை ஜி ??? Archived Link இந்த பதிவை ஏப்ரல் 24ம் தேதியன்று, அரசியல் உண்மைகள் 2.0 என்ற ஃபேஸ்புக் ஐடி வெளியிட்டுள்ளது. இதில், நியூஸ் 7 தொலைக்காட்சி பெயரில் வெளியான நியூஸ் கார்டை வைத்து, அதன் கீழே பதிவரின் […]

Continue Reading

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாததற்கு மாநில அரசுகள் காரணமா?

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாததற்கு, மாநில அரசுகள்தான் காரணம், என்ற தலைப்பில் தினமலர் வெளியிட்ட வீடியோ, வைரலாகப் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:ஏன்�பெட்ரோல் டீசல் ஜி.எஸ்.டி.யில் வரவில்லை? | Petrol | Diesel price | GST #gst #petrol #diesel Archived Link ஏப்ரல் 4ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி மற்றும் பெட்ரோல், டீசல் விலை போன்ற வார்த்தைகள் இருப்பதன் காரணமாக, பலரும் […]

Continue Reading

சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ராகுல் காந்தி பற்றி பரவும் புகைப்படம் உண்மையா?

சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ராகுல் காந்தி பற்றி ஃபேஸ்புக்கில் வைரலாகப் பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: படத்தில் போலீஸ் தூக்கி கொண்டு வருவது சிவராஜ்சிங் சௌகான், பாஜக தலைவர்,.. மற்றொரு படம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி… Archived Link இந்த பதிவில், வெள்ள நீரில் சிவராஜ் சிங் சவுகானை போலீசார் தூக்கிக் கொண்டு வருவது போலவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் […]

Continue Reading

ஒடிசாவை பானி புயல் தாக்கியதற்கு எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின் கூறியது உண்மையா?

‘’ஒடிசாவில் பானி புயல் தாக்கியதற்கு காரணமான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதைப் போன்ற ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரம் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. வதந்தியின் விவரம்:…ஒடிசாவில் பானி புயல் தாக்குதல் காரணமாண தமிழக முதல்வர் எடிபாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்… Archived Link மே 5ம் தேதியன்று இந்த பதிவை தர்மபுரி […]

Continue Reading

கோமதி மாரிமுத்துவிற்கு ஒரு டஜன் ஷூ அனுப்பி வைக்கப்படும்: கனடா பிரதமர் பற்றி வதந்தி

‘’கோமதி மாரிமுத்து கிழிந்த ஷூவுடன் ஓடியதை கேள்விப்பட்ட கனடா பிரதமர் வேதனை‘’, என்ற தலைப்பில் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. நியூஸ் 18 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு போலவே, அச்சு அசலாக வெளியிடப்பட்டுள்ள இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: #அதிகம்_பகிரவும் இந்தா வந்துட்டான்டா என் தலைவேன்… ????தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே ஒப்பற்ற தலைவன்… நீங்க நல்லா இருக்கணும்… ??? Archived Link ரிடயர்டு ரவுடி 3.0 என்ற ஃபேஸ்புக் குழு, […]

Continue Reading

இலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல்: உண்மை என்ன?

‘’இலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் உணவில் கலக்க வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல்,’’ என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். இதில் தெரியவந்த விவரம், இந்த செய்தித்தொகுப்பில் தரப்பட்டுள்ளது. வதந்தியின் விவரம்: …தமிழர் வேலை தமிழருக்கே !!! – இது டிரண்டிங் செய்தி இலங்கையில் முஸ்லீம் ஹோட்டல் உணவில் கலக்க வைத்திருந்த ஆண்மை இழப்பு /மலடு மருந்து பிடிபட்டது – உண்மைசெய்தி  தமிழக மக்கள் […]

Continue Reading