FACT CHECK: கும்பமேளா பற்றி உண்மை பேசிய பெண் பத்திரிகையாளர் குத்திக் கொலையா?

கும்பமேளா ஊர்வலத்தின் உண்மைகள் பற்றி பேசிய பெண் பத்திரிகையாளர் குத்திக்கொலை செய்யப்பட்டதாக ஒரு தகவல், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் சாலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதனுடன் வீடியோ ஒன்றும் உள்ளது. பிரக்யா லைவ் என்று அதில் ட்விட்டர் ஐடி இருந்தது. கும்பமேளா காட்சிகள் வருகிறது. கும்பமேளாவில் லட்சக் கணக்காணோர் ஒன்று சேர அனுமதி […]

Continue Reading

FACT CHECK: டெல்லியில் லவ் ஜிகாத் காரணமாக இந்து பெண்ணை கொன்ற இஸ்லாமியர் என பரவும் வதந்தி!

டெல்லியில் பட்டப்பகலில் இந்து பெண் ஒருவரை லவ் ஜிகாத் செய்து ஏமாற்றிய இஸ்லாமிய இளைஞர் கத்தியால் குத்தி படுகொலை செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 1.41 நிமிட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் பெண்மணி ஒருவருடன் ஆண் ஒருவர் பேசிக்கொண்டு இருக்கிறார். திடீரென்று கத்தியை எடுத்து சரமாரியாக, அந்த பெண்ணை, […]

Continue Reading

FACT CHECK: உத்தரப்பிரதேச போலீஸ் நிகழ்த்திய இரட்டைக் கொலை என பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேச போலீஸ் அதிகாரி ஒருவர் தம்பதியினரை பொது இடத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 கார் அருகே போலீஸ் அதிகாரியுடன் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போலவும், இதனால் போலீஸ் அதிகாரி துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுக்கொல்வது போலவும் வருகிறது. அந்த இளைஞருடன் இருந்த […]

Continue Reading

FACT CHECK: பாலியல் குற்றவாளியை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி என்று கூறி பரவும் நடிகை தபு படம்!

பீகார் மாநிலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவனை என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரி பூஜா என்று நடிகை தபு படத்தை பலர் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நடிகை தபுவின் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “பீகாரில் சிறுமியை கற்பழித்து கொன்றவனை சிறைக்கு கொண்டு செல்லாமல் அந்த இடத்திலேயே எங்கவுண்டர் செய்து சுட்டு கொன்ற அதிகாரி பூஜாவுக்கு ஒரு லைக் உண்டா?? பாராட்ட […]

Continue Reading

FACT CHECK: ஹரித்வார் கும்பமேளா என்று பகிரப்படும் பழைய படங்கள்!

கொரோனா காலத்தில் ஹரித்வார் கும்பமேளாவுக்கு கூடிய கூட்டம் என்று சமூக ஊடகங்களில் சில படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவை உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இந்தியாவில் கொரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில் ஹரித்வார் கும்பமேளா 2021ல் கூடிய கூட்டம் என்று சில படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. Senthilkumar Ksp Senthilkumar Ksp என்பவர் வெளியிட்டிருந்த பதிவில், “இந்த கும்பமேளா கும்பல் தான் இனி இந்தியா […]

Continue Reading

FACT CHECK: ஔவைக்கு அதியமான் நெல்லிக்கனி தந்த கோவில் கிறிஸ்தவ ஆலயமாக மாற்றப்பட்டதாக வதந்தி!

ராமநாதபுரத்தில் உள்ள ஔவைக்கு அதியமான் நெல்லிக்கனி தந்த கோவில் தற்போது கிறிஸ்தவ ஆலயமாக மாற்றப்பட்டுவிட்டது என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ் இந்து கோவில் போல் தோற்றம் அளிக்கும் ஆனால் சிலுவை சின்னம் உள்ள கோவிலின் புகைப்படத்தின் மீது போட்டோ எடிட் முறையில் எழுதப்பட்டுள்ளது. அதில், “நன்றாக உறங்குவோம் இந்துக்களே. ஔவையாருக்கு நெல்லிக்கனி […]

Continue Reading

FACT CHECK: கேரளாவில் அபூர்வ உயிரினம் சிக்கியதாகப் பரவும் போலியான செய்தி!

கேரளாவில் அதிசய உயிரினம் சிக்கியதாகவும், அதை பல லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க அமெரிக்க முயற்சி செய்து வருவதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I online50media.com I Archive 2 கேரளாவில் சிக்கிய அபூர்வ உயிரினம் என்ற புகைப்படத்துடன் செய்தி இணைப்பு பகிரப்பட்டுள்ளது. “அதிர்ச்சியில் இந்திய அரசு | கேரளாவில் சிக்கிய இந்த விசித்திர […]

Continue Reading

FACT CHECK: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சாலையில் தரையிறக்கப்பட்டதா?– இது ஒரு வீடியோ கேம்!

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சாலையில் தரையிரக்கப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது என்று ஒரு விடியோ கேம் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I wbnewz.com I Archive 2 “இப்படி ஒரு அசாத்திய திறமையா – இந்த பைலட்க்கு! கடைசி வரை பாருங்க” என்று ஒரு செய்தி இணைப்பு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விமானத்தை […]

Continue Reading

FACT CHECK: லண்டனில் வைக்கப்பட்டுள்ள அதிர்ஷ்டமான மாயன் வானியல் சக்கரம் என்று பரவும் வதந்தி!

லண்டனில் வைக்கப்பட்டுள்ள மாயன் வானியல் சக்கரத்தின் படம் என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மாயன் நாட்காட்டி போன்ற ஒன்றின் படத்தை பகிர்ந்துள்ளனர். அதனுடன், “படத்தில் உள்ள இந்த சக்கரம் மாயன்களின் வானியல் சாஸ்திரம் கண்டறிய பயன்படுவது. இது கண்டவுடன் அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வரும். இதை எதிரி நாட்டவர் கண்ணில் படாமல் மறைத்து வைத்தனர். ஆனால் அந்நாடு மிகவும் ஏழ்மை […]

Continue Reading

FACT CHECK: ரூ. 5, 10, 100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை!

ரூ.5, 10, 100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததாக பல செய்தி மற்றும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I kumudam.com I Archive 2 “ரூ.5, ரூ.10, ரூ.100 விரைவில் திரும்பப் பெறப்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!” என்று குமுதம் இதழ் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்ட செய்தி 2021 ஜனவரி 23ம் […]

Continue Reading

FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா?

குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாடு என தமிழில் எழுதப்படவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஊர்தியின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு என இந்தியில் எழுதப்பட்டுள்ளதை வட்டமிட்டு காட்டியுள்ளனர். நிலைத் தகவலில், “தமிழ்நாடு என தமிழில் எழுதப்படாமல் இந்தியில் எழுதப்பட்டிருகிறது… […]

Continue Reading

FACT CHECK: லண்டன் விமான நிலையத்தில் டீக்கடை திறந்த தமிழன்?- உண்மை அறிவோம்

லண்டன் விமானநிலையத்தில் தமிழர் ஒருவர் நம் ஊர் பாணியில் டீக்கடை ஒன்றைத் திறந்துள்ளார் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அரங்கு ஒன்றுக்குள் கிராமத்து டீக்கடை செட் அப் கடை ஒன்று இருப்பது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லண்டன் ஏர்போர்ட்டில் நம்ம ஊரு பாணியில் டீக்கடை போட்ட நம்ம தமிழனின் துணிவு…..” என்று […]

Continue Reading

FACT CHECK: ஆந்திராவில் கிறிஸ்தவ மத போதகர்களால் 2 இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

ஆந்திராவில் இயேசு உயிர்ப்பிப்பார் என்று நம்பி இரண்டு இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட் மற்றும் தொலைக்காட்சி ஒன்றின் விவாதம் ஆகியவற்றை இணைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆந்திர மாநிலம் சித்தூரில் கிறிஸ்தவ மத போதகர்களின் “இயேசு உயிர்ப்பிப்பார்” என்ற ஏமாற்று […]

Continue Reading

FACT CHECK: சிங்கக் குட்டியை சுமந்து செல்லும் யானை… இந்த ஆண்டின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டதா?

சிங்கக் குட்டி ஒன்றை யானை சுமந்து செல்லும் புகைப்படம் இந்த ஆண்டின் சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சிங்கக் குட்டி ஒன்றை யானை தன் துதிக்கையால் சுமந்து செல்வது போன்ற படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஆண்டின் மிகச்சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட புகைப்படம் இது. தனது குட்டியுடன் கடும் வெயிலில் […]

Continue Reading

FACT CHECK: டெல்லி டிராக்டர் பேரணி ஒத்திகை என்று கூறி பகிரப்படும் கிறிஸ்துமஸ் பேரணி வீடியோ!

டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்த திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணியின் ஒத்திகை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 மூன்று வெவ்வேறு வீடியோக்களை இணைத்து, மீண்டும் மீண்டும் அவை ஒளிபரப்பாகும் வகையில் 19 நிமிட வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவசாயிகளின் அசத்தல் டிராக்டர் பேரணி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை […]

Continue Reading

FACT CHECK: ரஜினிகாந்த் படத்தின் மீது ஊற்றிய பால்… சாலையில் தேங்கிய நீரை அருந்திய மூதாட்டி… உண்மை இதோ!

ரஜினிகாந்த் கட் அவுட்டுக்கு அவரது ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யும்போது, சாலையில் தேங்கிய அதை மூதாட்டி ஒருவர் அருந்துவது போன்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook  I Archive ரஜினிகாந்த் படத்துக்கு அவரது ரசிகர்கள் பால் ஊற்ற, சாலையில் கழிவு நீருடன் கலந்த அதை மூதாட்டி ஒருவர் எடுத்து அருந்துவது போல புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “2020ல் என்னை […]

Continue Reading

FACT CHECK: டெல்லி முற்றுகையை தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இறங்கிய பஞ்சாப் மக்கள்?

பஞ்சாபிகள் இந்தி எதிர்ப்பில் குதித்தார்கள் என்று ஒரு புகைப்படத் தொகுப்பு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 பெயர்ப் பலகையில் இந்தி, ஆங்கில மொழியை கருப்பு பெயிண்ட் பூசி அழிக்கும் போராட்ட புகைப்படங்களை தொகுத்து பதிவிட்டுள்ளனர். அதில், “காலம் கடந்தாலும் பஞ்சாபிகள் விழித்து கொண்டார்கள். தன் மொழி […]

Continue Reading

FACT CHECK: டெல்லி டிராக்டர் பேரணி என்று கூறி பகிரப்படும் ஜெர்மனி படம்!

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி ஒத்திகை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 டெல்லியில் பெருமக்கள் டிராக்டர் பேரணி ஒத்திகை என்று குறிப்பிட்டு ஒரு படம் பகிரப்பட்டுள்ளது. இதை தினமலர் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Nags Rajan 2021 ஜனவரி 8 அன்று பகிர்ந்துள்ளார். […]

Continue Reading

FACT CHECK: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கூடாரம் என்று பகிரப்படும் கும்பமேளா படம்!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அமைத்துள்ள கூடாராம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 கூடாரங்கள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டில்லி விவசாயிகள் போராட்டம் கூடாரங்கள் அமைத்து” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Manisekar MahaKarthi‎ என்பவர் 2021 ஜனவரி 8ம் தேதி பகிர்ந்துள்ளார். […]

Continue Reading

FACT CHECK: கமல்ஹாசன் பாடலுக்கு நடனமாடிய ரோபோ?- ஆடியோ எடிட் செய்யப்பட்ட வீடியோ!

தமிழ் பாடலுக்கு ரோபோக்கள் நடனமாடின என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 நடிகர் கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் ‘ராஜா கைய வச்சா’ பாடலுக்கு ரோபோக்கள் நடனமாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ் பாடலுக்கு ரொபோக்கள் ஆடும் நடனம் அருமை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Senthil […]

Continue Reading

FACT CHECK: பெங்களூருவில் விவசாயிகள் இணைந்து சூப்பர் மார்க்கெட் உருவாக்கியதாக பரவும் வதந்தி!

பெங்களூருவில் விவசாயிகள் இணைந்து சூப்பர் மார்க்கெட் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாலையோர வியாபாரிகள் வைத்திருக்கும் தள்ளுவண்டிகளைக் கொண்டு காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பலரும் காய்கறிகளை வாங்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “n Bangalore the farmers have started their own super market . They are […]

Continue Reading

FACT CHECK: இந்திய ராணுவ வீரர் என்று கூறி பரவும் ஈராக் புகைப்படம்!

எல்லையில் மலைகள், காடுகளில் கிடைத்த இடத்தில் படுத்து ஓய்வெடுக்கும் இந்திய ராணுவ வீரர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது இந்திய ராணுவ வீரரின் படமா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மண் குகைக்குள் ராணுவ வீரர் ஒருவர் ஓய்வெடுக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாம் இங்கே நிம்மதியாக தூங்க, எல்லையை காக்கும் பணிகளுக்கிடையே கிடைக்கும் ஓய்வை, காடுகளில் மலைகளில் கழிக்கும் […]

Continue Reading

FACT CHECK: 2020-ம் ஆண்டில் 146வது பிறந்த நாளை கொண்டாடும் முதியவர் என்று பரவும் வதந்தி!

முதியவர் ஒருவர் தன்னுடைய 146வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முதியவர் ஒருவர் படம் மற்றும் 146 என்று பிறந்த நாள் கேக் மீது வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி உள்ளிட்ட படங்களை கொலாஜ் செய்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “1874 இல் பிறந்த இவர் தனது 146 வது பிறந்த நாளைக் […]

Continue Reading

FACT CHECK: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி மகள் மரணம் என்று மீண்டும் பரவும் வதந்தி!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடியின் மகள் ரத்த புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இறந்த குழந்தை ஒருவரின் படம் மற்றும் சிகிச்சை பெற்று வரும் குழந்தையை பார்க்கும் அப்ரிடி படத்தை இணைத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “my favourite cricketer சாகித்அப்ரிடி. புகழ் பெற்ற மிகுந்த […]

Continue Reading

2017 ஒக்கி புயல் படங்களை நிவர் புயலுடன் தொடர்புபடுத்தி குழப்பும் நெட்டிசன்கள்!

புயல் வெள்ள பாதிப்புக்குப் பிறகு மிகவும் அசாதாரண சூழலில் பணியாற்றும் ஊழியர்கள் சேவையை ஊடகங்கள் காட்டாமல் மறைத்து விட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மழை நீர் தேங்கி நிற்கும் இடத்தில் மின்சார ஊழியர்கள் மின் கம்பம் நடும் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இது எல்லாம் Tv ல வராது நல்லது பன்றத யாரும் காட்ட […]

Continue Reading

FACT CHECK: மரடோனாவின் இறுதி ஊர்வலம் என்று கூறி பரவும் 26 ஆண்டுகள் பழைய புகைப்படம்!

கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனாவின் இறுதி ஊர்வலம் என்று கூறி ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாலையின் இரு புறமும் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டிருக்கும் இறுதி ஊர்வலம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மரடோனாவின் இறுதிப்பயணம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Subramanian Santhanam என்பவர் 2020 நவம்பர் 27 […]

Continue Reading

FACT CHECK: கோவை – மேட்டுப்பாளையம் சாலை என்று கூறி பகிரப்படும் கிரீஸ் நாட்டின் படம்!

கோவை முதல் மேட்டுப்பாளையம் சாலையின் புகைப்படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நெடுஞ்சாலையின் மறுமுனையில் நிலவு இருப்பது போன்று அழகிய படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கோவை முதல் மேட்டுப்பாளையம் சாலை ஒரு முழு பவுர்ணமி நாளில் புகைப்படம் எடுக்கப்பட்டது!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை Senthil Ganesh Rajalakshmi என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

FACT CHECK: இந்து அறநிலையத் துறையும் பகவானும் கண்டுகொள்ளாத கோவில் அர்ச்சகர்! – விஷம ஃபேஸ்புக் பதிவு

இந்து அறநிலையத் துறையும் இறைவனும் கண்டுகொள்ளாத அர்ச்சகர் என்று ஒரு முதியவர் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive வயதான அர்ச்சகர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்து அறநிலையத்துறை சம்பளம் கொடுப்பதில்லை . கிராமத்தில் தட்டு வருமானம் இல்லை . இறைவனும் கண்டுகொள்ளவில்லை . வயது முதுமை. பெரிய கோவில்களில் நடப்பதும் பெரிய பெரிய படிகளில் ஏறி இறங்குவதும் […]

Continue Reading

FACT CHECK: பிரான்சில் இஸ்லாமிய பெண்ணை அடித்ததால் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதலா?

பிரான்சில் இஸ்லாமிய பெண்ணை போலீசார் தாக்கியதை கண்டித்து போலீஸ் வாகனங்களை இஸ்லாமியர்கள் அடித்து உடைத்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் வந்து கொண்டிருந்த போலீஸ் வாகனம் மீது சிலர் திடீரென்று தாக்குதல் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேற்றைய தினம் பிரான்ஸ் போலீசார் ஒரு முஸ்லிம் பெண்ணை அடித்து கைது செய்யும் காட்சியொன்றை […]

Continue Reading

FACT CHECK: பிரான்சில் இஸ்லாமிய தாய் ஒருவர் தாக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி!

பிரான்ஸ் நாட்டில் குழந்தைகளுடன் சாலையில் நடந்து சென்ற பெண் தாக்கப்பட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் நான் நான்கு குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த புர்கா அணிந்த பெண்மணி ஒருவரை பின்னால் இருந்து ஒருவன் எட்டி மிதித்து தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமைதிகள்,பிரான்ஸ் மக்களை எந்த அளவுக்கு வெறுப்பின் உச்சத்துக்கே கொண்டு போயிருக்கானுங்க […]

Continue Reading

FACT CHECK: ஜார்ஜ் ஃப்ளாய்ட் மகளிடம் ஜோ பைடன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரா?

அமெரிக்க போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டின் மகளிடம் அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், சிறுவன் ஒருவன் முன்பு முட்டிபோட்டு அமர்ந்து பேசும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆட்சிக் காலத்தில் கறுப்பின அமெரிக்கர் […]

Continue Reading

FACT CHECK: குவைத் மக்கள் பிரான்ஸ் தயாரிப்புகளை குப்பையில் வீசினார்களா?

பிரான்ஸ் நாட்டுத் தயாரிப்புகளை குப்பையில் தூக்கி வீசிய குவைத் மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 கடையில் இருந்து ஒரு குறிப்பிட்ட பொருளை எடுத்துவந்து குப்பை லாரியில் கொட்டும் வீடியோ பகிரப்பட்டள்ளது. நிலைத் தகவலில், “குவைத்தில் அனைத்து பிரான்ஸ் தயாரிப்பு பொருட்களையும் குப்பைகளில் வீசி எறியப்பட்டது…” என்று கூறப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

FACT CHECK: உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை அறிவித்ததா யுனெஸ்கோ?

உலகின் தொன்மையான மற்றும் நம்பிக்கையான இனமாக நாடார் சமூகத்தை யுனெஸ்கோ அறிவித்தது என்று ஒரு சான்றிதழ் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட் பாட் எண்ணுக்கு (+91 9049053770) புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். நாடார் சமூகத்துக்கு யுனெஸ்கோ சான்றிதழ் வழங்கியது போன்று புகைப்படத்தை வைத்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ஐ.நா வின் பாரம்பரிய […]

Continue Reading

FACT CHECK: பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் மீது முட்டை வீச்சு என பரவும் பழைய வீடியோ!

பிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீசிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. எனவே, அது பற்றிய ஆய்வை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 தற்போது பிரான்ஸ் அதிபராக இருக்கும் இம்மானுவல் மேக்ரான் தலையில் முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ பகிரப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பிரான்ஸ் அதிபரின் மீது முட்டை வீச்சு” என்று […]

Continue Reading

FACT CHECK: இஸ்லாமியர்களை தண்ணீர் அடித்து விரட்டிய பிரான்ஸ் என்று பரவும் வதந்தி!

சாலையில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்களை பிரான்ஸ் அரசு தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விரட்டியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 சாலையில் தொழுகையில் ஈடுபட்ட நபர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கூட்டத்தைக் கலைக்க பயன்படுத்தப்படும் வாகனத்தைப் பயன்படுத்தி தண்ணீர் அடிக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமைதியான முறையில் தொழுகை நடத்தும் […]

Continue Reading

FACT CHECK: குடகு கலெக்டருக்கு மக்கள் நன்றி செலுத்தியதாகப் பரவும் தவறான வீடியோ!

குடகு மாவட்டத்தில் நர்ஸாக பணியாற்றியவர் அதே மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக உயர்ந்தார், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாட்ஸ்அப் சாட்பாட்டுக்கு வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் தகவல் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார்.  இளம் பெண் ஒருவர் நடந்து வர, அவருக்கு ஆண்களும் பெண்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். பலரும் அவருடைய காலில் விழுந்து ஆசி பெற […]

Continue Reading

FACT CHECK: பீகாரில் பா.ஜ.க பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதா?

பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தையொட்டி நடந்த பா.ஜ.க பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பேரணியாக வந்த பா.ஜ.க-வினரை பெருந்திரளான மக்கள் தடுத்து நிறுத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சங்கிகளை தெருவுக்கு தெரு விரட்டி அடிக்கும் பீகார் மக்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை தமிழன் மீம்ஸ் 4.0 என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

FACT CHECK: பாகிஸ்தான் உள்நாட்டுப் போர் என்று பகிரப்படும் படங்கள் உண்மையா?

பாகிஸ்தானில் உள்நாட்டு போர் வெடித்துள்ளது என்று கூறி பல படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “பாகிஸ்தானில் உள்நாட்டு கலவரம் வெடித்தது, ராணுவம் மற்றும் போலீஸ் இடையே கடும் மோதல்” என்று சில படங்கள் பகிரப்பட்டுள்ளன. Namo Ananthan என்பவர் 2020 அக்டோபர் 21ம் தேதி அதைப் பகிர்ந்துள்ளார். அசல் பதிவைக் காண: Facebook I Archive இதே போல் […]

Continue Reading

FACT CHECK: பிரபல பிராண்ட் மசாலாவில் ஆண்மைக் குறைவு மருந்து கலக்கப்படுவதாக வதந்தி!

பிரபல பிராண்ட் மசாலாவில் ஆண்மைக் குறைவு மருந்து கலக்கப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரபல பிராண்ட் மசாலா பாக்கெட் படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஆச்சி மசாலா யாரும் வாங்க வேண்டாம் ஆண்மை குறைவு மருந்து கலக்கபடுகிறது… கையுடன் பிடித்த அதிகாரிகள்… கீலே உள்ளவர்கள் கலப்படம் செய்து மக்களை கெடுக்கும் தேசவிரோதிகளை கைதுசெய்து கீலே உட்கார […]

Continue Reading

FACT CHECK: உணவகம் முன்பு தொழுகை செய்த மைக் டைசன்- உண்மை என்ன?

அமெரிக்காவில் இஸ்லாமியர்கள். கறுப்பினத்தவர்கள் அனுமதியில்லை என்று ஒரு உணவகத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு மைக் டைசன் சென்று கடை முன்பு தொழுகை நடத்தியதாகவும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உணவகம் முன்பு மைக் டைசன் தொழுகை செய்வது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்க நாட்டின் லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரிலுள்ள ஒரு சிற்றுண்டி கடையின் […]

Continue Reading

FACT CHECK: ஹைதராபாத் மழை வெள்ளம்; வீட்டுக்குள் மீன்- பழைய வீடியோ!

ஹைதராபாத்தில் மழை வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மீன்கள் வீடுகளில் நிறைந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive வீட்டுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. அதில் மிகப்பெரிய மீன்கள் நீந்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் ஒரு நபர் ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார், பிறகு இந்தி போன்ற மொழியில் ஏதோ சொல்கிறார். வீடியோவில், “ஹைதராபாத்தில் ஒரு வீட்டுக்குள்ளே, கொடுத்து வச்சவங்க, வேளாவேளைக்கு பிரெஷ்ஷா மீன் […]

Continue Reading

FACT CHECK: யானை மேலிருந்து விழுந்த பாபா ராம்தேவ் சிகிச்சை என்று பகிரப்படும் படம் உண்மையா?

யானையின் மீது அமர்ந்து யோகா செய்யும்போது தவறி விழுந்த பாபா ராம்தேவ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போலப் படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாபா ராம் தேவ் யானை மீது அமர்ந்து யோகா செய்யும் படம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படங்கள் இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அந்த யானைக்கு ஒண்ணும் ஆகலையே… ஏண்டா யோகாவ […]

Continue Reading

FACT CHECK: தாழ்த்தப்பட்ட ஆசிரியை மீது உயர் வகுப்பு மாணவர்கள் தாக்குதலா?- உண்மை அறிவோம்!

உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியையை உயர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆசிரியையைத் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது உ.பி யில் தாழ்த்தப்பட்ட ஆசிரியைக்கு உயர் சாதி மாணவர்களால் நேர்ந்த கொடூரம்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Nidhi என்பவர் அக்டோபர் 11, […]

Continue Reading

FACT CHECK: சர் என்றால் ‘உங்களின் அடிமை’ என்று அர்த்தம் இல்லை!

சர் என்றால், ‘நான் உங்களின் அடிமை’ என்று அர்த்தம் எனக் கூறி ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பத்திரிகையில் பிரசுரமான தகவலை புகைப்படமாக எடுத்துப் பகிர்ந்தது போல படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “படித்ததில் பிடித்தது!  எந்த ஒரு பன்னாட்டு நிறுவனங்களிலும் (SIR) சார் என்று அழைக்கக் கூடாது. முதல் பெயர் (First name) சொல்லித் தான் அழைக்க […]

Continue Reading

FACT CHECK: போதை மருந்து கடத்தல்- பிரபல மசாலா நிறுவனத்திற்கு சிக்கல் என பரவும் வதந்தி!

சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட இருந்த 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை சுங்கத்துறையினர் கைது செய்துள்ளதாகவும், இதனால் பிரபல மசாலா தயாரிப்பு நிறுவனம் சிக்கலில் உள்ளதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் பதிவு ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பி, இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதில், “சிக்கலில் ஆச்சி நிறுவனம்? ஆச்சி – மசாலா தூள் […]

Continue Reading

FACT CHECK: இது சரோஜ் நாராயணசாமி படம் இல்லை!

ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமான சரோஜ் நாராயணசாமியின் படம் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படத்தின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஆல் இந்தியா ரேடியோவில் செய்திவாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசாமியின் இன்முகம் காண்போம் என்று குறிப்பிட்டு ஒரு படம் பகிரப்பட்டுள்ளது. நீண்ட பதிவில் சரோஜ் நாராயணசாமி பற்றிய தகவல் இடம் பெற்றிருந்தது. இந்த பதிவை ‎தினம் ஒரு தகவல் DAILY INFORMATION […]

Continue Reading

சைக்கிள் ரிக்‌ஷாவை பறிகொடுத்து கதறி அழும் இளைஞர்- இது இந்தியாவில் நிகழவில்லை!

சைக்கிள் ரிக்‌ஷாவை அதிகாரிகள் லாரியில் ஏற்றும்போது இளைஞர் ஒருவர் கதறி அழும் வீடியோ ஒன்று இந்தியாவில் எடுக்கப்பட்டது என்ற வகையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 சைக்கிள் ரிக்‌ஷாக்களை புல்டோசர் உதவியோடு லாரியில் ஏற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. சைக்கிள் ரிக்‌ஷா உரிமையாளர் எதுவும் செய்ய முடியாமல் கதறி அழுகிறார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அழுதபடி பேட்டி […]

Continue Reading

FACT CHECK: பிரேசிலில் அரசியல்வாதிகளிடம் இருந்து கைப்பற்றிய பணம் காட்சிக்கு வைக்கப்பட்டதா?

பிரேசிலில் ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 4 பில்லியன் டாலர் பணம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 சாலையின் நடுவே கட்டக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தின் வீடியோ காட்டப்படுகிறது. நிலைத் தகவலில், “இது ஒரு கட்டிடம் அல்ல, பிரேசில் அரசாங்கம் அதன் ஊழல் […]

Continue Reading

FACT CHECK: உ.பி-யில் சாதி காரணமாக நிகழ்ந்த வன்கொடுமை என்று பரவும் தவறான படம்!

உத்தரப் பிரதேசத்தில் தலித் சாதி வன்கொடுமை காரணமாக பெண் தாக்கப்பட்டார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கைகள் இரண்டும் பின்புறம் கயிறால் கட்டப்பட்ட பெண் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மனிதர்கள் வாழ தகுதி இல்லாத நாடு இந்தியா. காரணம் தலித் ஜாதி கொடுமை உத்திரபிரதேசம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவைத் திறமை டைம் […]

Continue Reading

மாமரம் என்று கூறி அத்தி மரத்தின் புகைப்படத்தை பகிரும் விநோதம்!

‘’காய்த்து தொங்கும் மாமரம்,’’ என்று கூறி புகைப்படம் ஒன்று வைரலாக ஃபேஸ்புக்கில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link அக்டோபர் 7, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், அத்தி மரம் போன்ற மரம் ஒன்றில் காய்த்து தொங்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ இயற்கையின் அதியசம் ! மாமரத்தில் மாங்காய்கள் இதுமாதரி காய்த்து இருப்பதை இதற்குமுன் எங்காவது பார்த்து இருக்கீங்களா […]

Continue Reading