பார்லே ஜி பிஸ்கட் பன்றி கொழுப்பில் தயாரிக்கப்பட்டது: சர்ச்சை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

பார்லே ஜி பிஸ்கட்டில் பன்றியின் கொழுப்பு கலந்துள்ளதாகக் கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருவதால், இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link ஜூன் 13ம் தேதி Jerry memes என்ற ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. பார்லே ஜி உள்ளிட்ட பிஸ்கட்களில் எமல்சிஃபயர் 471 என்ற பொருள் கலக்கப்படுவதாகவும், இது பன்றியின் கொழுப்புப் பொருள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட 6000 ஆண்டுகள் பழமையான ஹனுமான், ராமர் சிலைகள்: ஃபேஸ்புக் வதந்தி

‘’6000 ஆண்டுகளுக்கு முந்தைய ராமன், அனுமன் சிலைகள் ஈராக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link இந்துத்துவம் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. மதம் சார்ந்த விசயமாக உள்ளதால், இதனை பலரும் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் உண்மையானதுதானா என உறுதி […]

Continue Reading

ஏழைகளுக்கு வெறும் 10 ரூபாயில் சிகிச்சை பார்க்கும் டாக்டர் ரூபிணி: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

‘’ஏழைகளுக்கு வெறும் 10 ரூபாயில் மருத்துவம் பார்க்கும் டாக்டர் ரூபிணி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுபற்றி நமது வாசகர் ஒருவர் இமெயில் மூலமாக புகார் அளித்திருந்தார். எனவே, இதன்மீது உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Keerthana என்ற பெயரில் ஒரு ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில் ஒரு பெண் பார்ப்பதற்கு சினிமா நடிகை போல இருக்கிறார். ஆனால், டாக்டர் மாதிரி இல்லை. […]

Continue Reading

“மழைக்காக கருணாநிதி சமாதி முன்பு வேண்டுதல் நடத்திய தி.மு.க-வினர்”– வீடியோ உண்மையா?

மழைக்காக கருணாநிதி சமாதி முன்பு தி.மு.க-வினர் வேண்டுதல் நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: மழை வேண்டி திராவிடர் முன்னேற்ற கழகத்தினர் கருணாநிதி சாமாதி முன் நடத்திய வேண்டுதல் Archived link திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் தமிழக அமைச்சருமான ஏ.வ.வேலு மற்றும் குழுவினர் கருணாநிதி நினைவிடத்தில் இசைக் கருவிகளைப் பயன்படுத்தி, பாடல்களை பாடுகின்றனர். ஆனால், சினிமா பாடல் ஒலிக்கிறது. […]

Continue Reading

கூடங்குளம் அணுக்கழிவு மையத்துக்கு தி.மு.க ஆதரவா?

கூடங்குளத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள அணுக்கழிவு மையம் தொடர்பாக தி.மு.க எதுவும் பேசவில்லை என்றும் ஆந்திராவில் இந்த மையத்தை அமைத்தால் எதிர்த்திருப்பார்கள் என்றும் ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link கூடங்குளம் அணு மின் நிலையத்தின் படம் வைக்கப்பட்டுள்ளது. அதன் பக்கத்தில், “கூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணு கழிவு மையம் – செய்தி” என்று பெரிதாக உள்ளது. இவற்றுக்கு கீழ், ராதாபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அ.தி.மு.க-வைச் […]

Continue Reading

குவைத்தில் வெப்பநிலை 63 டிகிரி செல்ஷியஸை தாண்டியதாம்! – ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு

குவைத் நாட்டில், வெப்பநிலை 63 டிகிரி செல்ஷியஸை தாண்டியதாகவும் 80 டிகிரி செல்ஷியஸ் வரை செல்லக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: குவைத் நாட்டின் வெப்பநிலை 63 டிகிரி …? இன்னும் 80 டிகிரி வரை போகும்னு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது … Archived link உருகிய நிலையில் உள்ள ஒரு போக்குவரத்து சிக்னல் கம்பம் காட்டப்பட்டுள்ளது. எந்த இடம், எப்போது […]

Continue Reading

முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகத்தை ஆதரித்துப் பேசிய மம்மூட்டி: ஃபேஸ்புக் செய்தியால் பரபரப்பு

முல்லைப் பெரியாறு அணையை திறந்துவிட போராட்டம் செய்யவும் தயங்க மாட்டேன் என்று கேரள நடிகர் மம்மூட்டி பேசியதாகக் கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுபற்றி சந்தேகம் தெரிவித்து, நமது வாசகர் ஒரு இமெயில் மூலமாக புகார் கூறியிருந்தார். எனவே, இதன் நம்பகத்தன்மையை பரிசோதிக்க தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link சமுத்திரக்கனி என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த ஜூன் 15ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. எந்த தேதியில், எப்போது இவ்வாறு மம்மூட்டி பேசினார் […]

Continue Reading

ஏழை குழந்தைகளை தத்தெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை லட்சுமி: திருந்தாத ஃபேஸ்புக் பதிவர்!

ஏழை குழந்தைகளை தத்தெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை லட்சுமி என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வதந்தியை காண நேரிட்டது. இதனை பகிர்ந்துள்ள ஃபேஸ்புக் பதிவர் மீது சந்தேகம் தெரிவித்து நமது வாசகர் ஒருவர் இமெயில் அனுப்பியிருந்தார். இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். வதந்தியின் விவரம்: Archived Link Time pass என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இது தவறான தகவல் என்று கூட உணராமல் பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.   […]

Continue Reading

இந்தியாவுக்கு எதிராக போராட தேவாலயங்கள் மூலம் பணம் அனுப்ப சொன்ன உதயகுமார்? ஃபேஸ்புக் ஃபோஸ்ட் உண்மை அறிவோம்!

இந்தியாவுக்கு எதிராக போராட தேவாலயம் மூலமாகவே பணம் அனுப்புங்கள் என்று கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் சுப உதயகுமார் கூறியதாக ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக ரிபப்ளிக் டிவி வீடியோ ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்தியாவுக்கு எதிராக போராட சர்ச் மூலமாகவே பணம் அனுப்புங்கள். வங்கி கணக்கு வேண்டாம் உதயகுமரின் முகத்திரையை வெளியிட்ட ரிப்பப்ளிக் டிவி…மக்கள் பார்வைக்கு … Archived link ரிபப்ளிக் […]

Continue Reading

கனிமொழியின் உண்மையான தந்தை நடிகர் செந்தாமரை: விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

‘’நடிகர் செந்தாமரை கனிமொழியின் முதல் தந்தை,’’ எனக் கூறி ஒரு விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link விளையாட்டு பையன் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இது பார்க்கும்போதே மிகத் தவறான தகவல் என தெரிகிறது. இருந்தாலும், இதனை பலரும் உண்மை என நினைத்து ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:கனிமொழியின் தந்தை திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி ஆவார். அவரது […]

Continue Reading

அரசியலுக்கு வரும் முன் போலீஸ் அதிகாரியாக இருந்த சீமான்: ஃபேஸ்புக் பதிவால் குழப்பம்

‘’அரசியலில் குதிக்கும் முன் சீமான் ஒரு போலீஸ் உயர் அதிகாரியாக இருந்தார்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link Suresh Thiruvallur என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சீமானின் போலீஸ் சீருடை புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அதனை உண்மை போல சித்தரித்துள்ளனர். இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக […]

Continue Reading

தமிழகத்தின் இரண்டாவது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சுஜிதாவா?

தமிழகத்தின் இரண்டாவது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சுஜிதாவை வாழ்த்துவோம் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இன்றைய முக்கிய செய்தி… தமிழகத்தின் இரண்டாவது. I p s. பெண் அதிகாரி. இஸ்லாமிய பெண்… முடிந்தால் வாழ்த்துவோம்… Archived Link பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சுஜிதா முகமதுவின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. “படத்தின் மீது, தமிழகத்தின் இரண்டாவது பெண் இஸ்லாமிய ஐ.பி.எஸ் அதிகாரி சுஜிதா முகம்மது” என்று எழுதப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், […]

Continue Reading

Anti Indians மாதிரி தண்ணீர் இல்லை என்று பொய் சொல்வதை நிறுத்துங்கள்! – மத்திய அமைச்சர் பேட்டி உண்மையா?

இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை என்று பேசுபவர்கள் எல்லாம் ஆன்டி இந்தியன்ஸ், மோடி எதிர்ப்பாளர்கள் என்ற வகையில் மத்திய நீர் சக்தித் துறை அமைச்சர் பேசியதாக தமிழ் குட் ரிட்டர்ன்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மொதல்ல Anti Indian மாதிரி தண்ணி இல்லன்னு பொய் சொல்வதை நிறுத்துங்க..! நிறைய தண்ணி இருக்கு! சொல்வது பாஜக அமைச்சர்! #Water #Waterscarcity Archived link 1 Archived link 2 மத்திய நீர் […]

Continue Reading

சிட்ரால்கா குடித்ததால் சிறுநீரகக் கட்டி மறைந்துவிட்டது! – வைரல் ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

சிட்ரால்கா என்ற சிரப் குடித்ததால் தன்னுடைய சிறுநீரக கட்டி மறைந்து விட்டதாக ஒருவர் ஃபேஸ்புக்கில் மிகப்பெரிய பதிவை வெளியிட்டுள்ளார். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை. சிறு அறுவை சிகிச்சை கூட இல்லை. பதினைந்து நாட்களுக்கு முன் அடிவயிற்றில் கடும் வலி! பெங்களூரில் தவிர்க்க முடியாத திருமணங்கள். போய் விட்டேன் வலி அதிகமாயிற்று! உடனே மருத்துவமனைக்கு சென்று காண்பிக்க ஸ்கேனில் சிறுநீரகக் கட்டி என்று வந்தது. என் மனைவி எத்தனை […]

Continue Reading

இந்தியா தமிழர்களுக்குச் சொந்தமானது: மம்தா பானர்ஜி சொன்னது உண்மையா?

இந்திய நாடு தமிழர்களுக்குச் சொந்தமானது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சொன்னதாகக் கூறி வைரலாக பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link திமிரு பிடிச்ச தனிஒருவன் என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை இதுவரை 17 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர். மேலும் இது வைரலாகி வருவதால், இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்கும்படி நமது வாசகர் ஒருவர் […]

Continue Reading

தந்தையை உட்காரவைத்து கை ரிக்‌ஷாவை இழுத்துச் சென்ற ஐ.ஏ.எஸ் மாணவி?

கொல்கத்தாவில், தன்னுடைய தந்தையின் கை ரிக்‌ஷாவில் அவரை உட்கார வைத்து இழுத்துச் சென்ற ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: இதற்கு எத்தனை #ஷேர் குடுக்கலாம் நீங்களே தீர்மானியுங்க…! Archived link கை ரிக்‌ஷாவில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அந்த வண்டியை இளம் பெண் ஒருவர் மகிழ்ச்சியாக இழுத்துச் செல்கிறார். படத்துக்கு மேல் தமிழில், “ஈன்ற […]

Continue Reading

பாம்பு என நினைத்து மனைவியை அடித்த கணவன்: காமதேனு செய்தியால் குழப்பம்!

‘’பாம்பு போன்ற கால்சட்டையை அணிந்த மனைவியை அடித்த கணவன்‘’, என்ற தலைப்பில் ஒரு செய்தியை காமதேனு இணையதளம் வெளியிட்டிருந்தது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link இதே பதிவை, ஹிந்து டாக்கீஸ் ஃபேஸ்புக் பக்கத்திலும் கடந்த ஜனவரி 7ம் தேதி பகிர்ந்திருந்தனர். Archived Link மேற்கண்ட செய்தியை காமதேனு இணையதளத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link பாகிஸ்தானில், பெண் ஒருவர் பாம்பு போன்ற தோற்றத்திலான கால்சட்டை அணிந்திருந்ததாகவும், இரவில் […]

Continue Reading

5 ஏழைக்குழந்தைகளை தத்தெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை கவிதா: விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

‘’5 அரசுப் பள்ளி குழந்தைகளை தத்தெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை கவிதா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த தகவல்கள் இதோ… வதந்தியின் விவரம்: Archived Link Time pass என்ற ஃபேஸ்புக் ஐடி இத்தகைய தவறான தகவலை பதிவிட்டுள்ளதாக, நமது வாசகர் ஒருவர் இமெயில் மூலமாக புகார் அளித்திருந்தார். இந்த புகைப்பட பதிவை பலரும் உண்மை என நம்பி, வைரலாக ஷேர் செய்து […]

Continue Reading

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அலிகார் சிறுமி: இணையதள செய்தி உண்மையா?

அலிகாரில் இரண்டரை வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார் என்று பாலிமர் மற்றும் கதிர் நியூஸ் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Archived link 1 Archived link 2 இரண்டரை வயது சிறுமி கொலை வழக்கில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது நிரூபணம் : அதிர்ச்சி உண்மைகள் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு சமூக […]

Continue Reading

ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி கண்ணீர் விட்டதாகக் கூறும் செய்தியால் சர்ச்சை

தனது தந்தை மதம் மாறியதால் உயிரிழந்ததாகவும் தற்போது இந்து மதம் திரும்பியது நிம்மதியை அளிக்கிறது எனவும் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாக டிஎன்நியூஸ்24 என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நான் இந்துவாக மாறியதும் அந்த ஏழுமலையானின் அருளும் தான் வேத மந்திரம் முழங்க முதல் கையெழுத்திட்ட ஜெகன் மோகன் ரெட்டி கண்ணீர் Archived link 1 Archived link 2 ஆந்திர முதல்வராகப் பொறுப்பேற்ற ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி, நான் […]

Continue Reading

மோடி அரசுக்கு எதிராக கேள்வி கேட்டதால் பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டாரா?

மோடி அரசுக்கு எதிராக கேள்வி கேட்டதால், மும்பையில் பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link முகம் முழுவதும் அடிவாங்கிய நிலையில் பெண் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோடி அரசின் தவறுகளை கேள்வி கேட்டதற்காக தாக்கப்பட்ட மும்பை ஊடகவியலாளர் நிகிதா ராவ். கடந்த 2 நாட்களில் காவி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட 4-வது ஊடகவியலாளர்” என்று குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த விவசாயி மகள்: வைரல் புகைப்படம் உண்மையா?

‘’நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த விவசாயியின் மகள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link Time pass என்ற ஃபேஸ்புக் ஐடி ஜூன் 6ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பார்த்தாலே, பொழுதுபோக்கிற்காக பகிரப்பட்ட பதிவாக தெரிகிறது. ஆனால், இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இது குழப்பம் ஏற்படுத்தும் தகவலாக, […]

Continue Reading

அரசு சட்டங்களை மீறி வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி செயல்படுகிறதா? – சர்ச்சையைக் கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு!

வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மத்திய – மாநில அரசு விதிமுறைகளை மீறி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எல்லாம் சட்டத்திற்கு அடங்காத அல்லது அடக்க முடியாத கொம்பன்களா என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்வோம். தகவலின் விவரம்: Archived link வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது இடத்துக்கு 12 சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி கிளிப் காட்டப்பட்டுள்ளது. அந்த செய்தி […]

Continue Reading

ஓடாத பேருந்தை முன்புறமாக தள்ளிய அன்புமணி: பழைய புகைப்படத்தால் வந்த சர்ச்சை

‘’உலகத்துலயே ஓடாத வண்டியை ஓடவைக்க முன்னாடி நின்னு தள்ளுன ஒரே குரூப் நம்ம மாற்றம் முன்னேற்றம் குரூப் தான்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என இந்த புகைப்படத்தின் மேலே எழுதியுள்ளனர். Troll Mafia என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இது பார்ப்பதற்கு தற்போது நடந்துள்ள சம்பவம் என்பது போல உள்ளது. […]

Continue Reading

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை மகனுக்கு நக்சல்களுடன் தொடர்பு? – ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மகனுக்கு நக்சல் இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம். எனவே, இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை தேவை என்று சமூக ஊடகங்களில் ஒரு பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link தமிழிசை சவுந்திரராஜனின் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “தமிழிசையின் மகன் சுகநாதனுக்கு தீவிரவாத நக்சல் இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம். சிபிஐ விசாரணை தேவை. நீ பற்ற வைத்த நெருப்பொன்று!” என்று […]

Continue Reading

விஜய் படத்தில் படுக்க அழைத்தார்கள்: சர்ச்சையை கிளப்பும் இணையதள செய்தி

விஜய் படத்தில் நடிக்க என்னை படுக்க அழைத்தார்கள் என்று பிரபல நடிகை கூறியதாக, இணையதளம் ஒன்று வெளியிட்ட செய்தியால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link இதே செய்தியை தனது இணையதள பக்கத்திலும் Cinefield.com வெளியிட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link உண்மை அறிவோம்:மேற்கண்ட செய்தியின் தலைப்பில் நடிகர் விஜய் படத்தில் நடிக்க என்னை படுக்க அழைத்தார்கள் எனக் கூறிவிட்டு, செய்தியின் […]

Continue Reading

ஊழல் மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

ஊழல் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளதாகவும், அதிலும் குறிப்பாக காவல் துறையில் அதிக ஊழல் நடப்பதாகவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வெக்கபட. வேன்டீயது யாரு அவங்களுக்கு கொஞ்சம் கூட கிடையாது. உங்களுக்கு Archived link விகடன் டி.வி லோகோவுடன் “தமிழ்நாடு ஊழல் நம்பர் 1” என்ற நியூஸ்கார்டு உள்ளது. அதன் மேல் பகுதியில், “ஊழல் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தைப் […]

Continue Reading

பா.ஜ.க-வினரை எங்கு பார்த்தாலும் அடிப்பேன்! – வேல்முருகன் கூறியதாக ஃபேஸ்புக்கில் பரவும் தகவல்

பா.ஜ.க-வினரை எங்கு பார்த்தாலும் அடிப்பேன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தேச விரோதிகளை களையெடுக்க போகும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே, இவனே என்னா…. பண்ணலாம் ? Archived link டவர் நியூஸ் என்ற லோகோவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “BJPயினரை எங்கு பார்த்தாலும் உதைப்போம் – வேல்முருகன்” […]

Continue Reading

பொது நிகழ்ச்சிக்கு உள்ளாடை இன்றி சென்ற பிரியங்கா சோப்ரா: குட்டையை குழப்பும் இணையதள செய்தி

‘’பொது நிகழ்ச்சிக்கு உள்ளாடை இன்றி கணவருடன் சென்ற பிரியங்கா சோப்ரா,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு இணையதள செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:பொது நிகழ்ச்சிக்கு உள்ளாடை இல்லாமல் தனது கணவருடன் சென்ற பிரியங்கா சோப்ரா.! Behind Talkies என்ற இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இணையதளத்தில் வெளியிட்ட இச்செய்தியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தும் உள்ளனர். அதனால், நம் கவனத்திற்கு இது […]

Continue Reading

பிரதமர் மோடிக்கு விசா வழங்க மறுத்த சிங்கப்பூர்: உண்மை அறிவோம்!

பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் அரசு விசா வழங்க மறுத்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: சிங்கப்பூர் அதிரடி நடவடிக்கை Archived link பிரதமர் மோடியின் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “விசா மறுப்பு… *** அடித்து விரட்டியது சிங்கப்பூர் அரசு” என்று உள்ளது. படத்தின் கீழ்ப் பகுதியில், “மனிதனைக் கொல்லும் மனித மிருகங்களுக்கு சிங்கப்பூரில் அனுமதி இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading

செருப்பு அணிந்தபடி குருவாயூர் கோவிலுக்குச் சென்ற மோடி– ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை

குருவாயூர் சென்ற பிரதமர் மோடி, செருப்புக் காலுடன் கிருஷ்ணன் கோவிலுக்குள் சென்றார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அல்பனுக்கு வாழ்வு வந்தால் குருவாயூர் கோவிலில் செருப்பு போட்டு நடப்பானாம் அவன் யார் ? Archived Link கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் பிரதமர் நடந்து செல்லும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், பிரதமர் காலில் செருப்பு இருப்பதை சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளனர். […]

Continue Reading

ஆந்திர துணை முதல்வராக ரோஜா நியமனம்: ஃபேஸ்புக் வதந்தியால் பரபரப்பு

‘’ஆந்திர துணை முதல்வர் ஆனார் ரோஜா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Balaji C என்பவர் இந்த பதிவை இணையதள திமுக என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனை பலரும் உண்மை என நம்பி, ரியாக்சன் செய்து வருகிறார்கள். உண்மை அறிவோம்:இதுதொடர்பாக, முதலில் ஃபேஸ்புக்கில் ஏதேனும் செய்தி கிடைக்குமா என தேடிப் பார்த்தோம். இப்படி பலரும் ரோஜா பற்றி […]

Continue Reading

1000 பேர் உயிரைக் கொடுத்தாவது இந்தியை எதிர்ப்போம்– வைகோ கூறியதாக பரவும் தகவல்!

தொண்டர்கள் ஆயிரம் பேர் உயிரைக் கொடுத்தாவது ஹிந்தியை எதிர்ப்போம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: ஸ்டாலின் உம் என்று கூறட்டும் , பிரளயத்தை ஏற்படுத்துவோம் – வைகோ Archived link புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், “நான் சரியென்று சொன்னால் சாக உண்மையான தொண்டர்கள் […]

Continue Reading

உலக வர்த்தக மைய தாக்குதலில் பின்லேடனுக்கு தொடர்பு இல்லை– சிஐஏ மன்னிப்பு கோரியதா?

அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் இரட்டை கோபுர தாக்குதலுக்கும் பின் லேடனுக்கும் தொடர்பு இல்லை என்று சி.ஐ.ஏ கண்டறிந்துள்ளதாகவும் இது தொடர்பாக அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளதாகவும் ஒரு செய்தி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஆப்கானிஸ்தானை நாசமாக்கியது எங்கள் அயோக்கியத் தனமேயன்றி வேறில்லை. Archived link அமெரிக்க இரட்டை வர்த்தக மைய கோபுர தாக்குதலுக்கும் பின் லேடனுக்கும் சம்பந்தமில்லை. மன்னிப்பு கோரிய அமெரிக்க உளவுத் துறை என்று கூறப்பட்டுள்ளது. […]

Continue Reading

ஆந்திராவில் முழு மது விலக்கு அறிவித்தாரா ஜெகன் மோகன் ரெட்டி?

‘’ஆந்திராவில் முழு மது விலக்கு – ஜெகன் மோகன் அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link கிராமத்து இளைஞனின் நாளைய விடியல்கள் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை மே 27ம் தேதி வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ஆந்திராவில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் […]

Continue Reading

அலிகார் 2 வயது சிறுமி கொலையை மறைத்த ஊடகங்கள்! – எல்லை மீறும் சமூக ஊடக வதந்தி!

அலிகாரில் 2 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் இதைப் பற்றிய செய்தியை  ஊடகங்கள் வெளியிடவில்லை என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை அறிவோம்… தகவலின் விவரம்: ஆசிபாவை பற்றி செய்தி வெளியிட்ட தமிழக ஊடகங்கள் ஏன் இதை பற்றி எந்த செய்தியும் வெளியிடவில்லை..? #ஊடகங்களே_ஏன்_இந்த_பாரபட்சம்.  #please_maximum_share Archived link படத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதனுடன் […]

Continue Reading

போலி 500 ரூபாய் நோட்டுகள்- ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

500 ரூபாய் நோட்டுகளில் போலியான நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு ஜூன் 5ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒரு 500 ரூபாய் நோட்டின் புகைப்படதை, போலி என்றும், மற்றொரு 500 ரூபாய் புகைப்படத்தை ஓகே என்றும் எழுதி, பகிர்ந்துள்ளனர். மேலே, ‘’Pls do not accept Rs.500 Currency note on which the […]

Continue Reading

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி கைது செய்தியை மறைத்த ஊடகங்கள்- விஷம பதிவு!

ஜார்கண்ட் மாநிலத்தில் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி கைது செய்யப்பட்டதாகவும் அதை ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் மறைத்துவிட்டதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட அன்னை?? தெரசாவின் மிஷனரி ஆப் சாரிட்டியின் சிஸ்டர் கைது… வழக்கம் போல *** ஊடகங்கள் கள்ள மவுனம் Archived link கன்னியாஸ்திரி ஒருவர் தலையில் கை வைத்தபடி கார் ஒன்றில் அமர்ந்திருக்கும் […]

Continue Reading

மும்பை துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழன் பெயரைச் சூட்டிய மத்திய அரசு– நிஜமா?

மும்பை துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழன் பெயரை மத்திய அரசு சூட்டியுள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் குத்துவிளக்கேற்றுகிறார். அவர் அருகில் தேவேந்திர ஃபத்னாவீஸ் உள்ளிட்டவர்கள் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். பின்னணியில், ராஜேந்திர சோழன் 1 என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதன் அருகில், ராஜேந்திர சோழன் சிலை மற்றும் கப்பலின் புகைப்படம் பிரேம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் […]

Continue Reading

தேவி லால் இந்தியில் பேசியதை கனிமொழி தமிழில் மொழி பெயர்த்தாரா?

‘’கனிமொழிக்கு இந்தி தெரியும்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதன் முடிவுகள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Archived Link இதில், கனிமொழி சிறு வயதில் தனது தந்தை கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ முப்தாண்டுகளுக்கு முன்பு 1989ல் சென்னை கடற்கரையில் அன்றைய பிரதமர் வி.பி.சிங் கலந்து கொண்ட தேசியமுன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அன்றைய துணை பிரதமர் […]

Continue Reading

எச். ராஜா மாரடைப்பால் மரணம்: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் வதந்தி

‘’பாஜக தேசிய செயலாளர் திரு. எச்ச ராஜா மாரடைப்பால் மரணம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வதந்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link அரசியல் அதிரடி என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் அரசியல் உள்நோக்கத்திற்காக, வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:பாஜக தேசிய செயலாளராக உள்ள எச்.ராஜா தனது சர்ச்சையான கருத்துகளால் அவ்வப்போது, பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். சமீபத்தில் நடந்து […]

Continue Reading

மருத்துவ படிப்பில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீடு இல்லை என உத்தரப் பிரதேச அரசு அறிவிப்பு: ஃபேஸ்புக் வதந்தி

‘’இனி மருத்துவ படிப்புகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீடு இல்லை என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது‘’, என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Manickam Bhoudhan என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டை மருத்துவ படிப்புகளில் உத்தரப் பிரதேச அரசு ரத்து செய்துள்ளதாகக் கூறியுள்ளார். அதன் மேலே, காம கொடூரனின் […]

Continue Reading

மோடி ஆட்சியில் ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 104ல் இருந்து 43வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா– வதந்தியா; உண்மையா?

ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் ஒரே ஆண்டில், 104வது இடத்தில் இருந்து 43வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளதாகவும் மோடி அரசின் செயல்பாடுதான் காரணம் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link கார் ஒன்றிலிருந்து இறங்கும் பிரதமர் மோடியை மலர்களை தூவி வரவேற்கும் படத்தை வெளியிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 104வது இடத்திலிருந்து 43வது இடத்துக்கு இந்தியா முன்னேறியது. மோடி […]

Continue Reading

பிற மாநிலங்களில் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வாபஸ் பெற்ற இ.பி.எஸ்! – நியூஸ்7 செய்தி உண்மையா?

பிற மாநிலங்களில் தமிழை பயிற்று மொழியாக்குமாறு பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் கோரிக்கை விடுத்தார். வேறு விதமான சந்தேகங்களை அந்த ட்வீட் கிளப்பியதால், அதை டெலீட் செய்துவிட்டார். இதைத் தொடர்ந்து, தன்னுடைய கருத்தை முதலமைச்சர் வாபஸ் பெற்றார் என்று ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் வெளியாகி உள்ளது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link 1 Archived link 2 பிற மாநிலங்களில் தமிழை பயிற்று மொழியாக்குமாறு விடுத்த கோரிக்கையை முதல்வர் […]

Continue Reading

சிம்லா முத்துச்சோழன் தனது மகன் இந்தியில் மார்க் வாங்கியதை பெருமையுடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டாரா?

‘’தனது மகன் இந்தி உள்ளிட்ட பாடங்களில் மார்க் வாங்கியதை பெருமையுடன் பதிவிட்ட சிம்லா முத்துச்சோழன்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link மாரிதாஸ் காணொளிகள் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சிம்லா முத்துச்சோழன் ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும், அவரது மகனின் மார்க்‌ஷீட் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளனர். இதன் மேலே, ‘’இது யார் தெரியுமா? திமுக […]

Continue Reading

44 வயதில் முதல்வரான யோகி ஆதித்யநாத்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

‘’26 வயதில் எம்பி, 44 வயதில் முதல்வர் ஆன யோகி ஆதித்யநாத்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Prabu என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், யோகி ஆதித்யநாத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’26 வயதில் பாராளுமன்ற உறுப்பினர், 44 வயதில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜி அவர்களுக்கு பிறந்த நாள் […]

Continue Reading

ராகுல் காந்தியை கண்ணீர் மல்க வரவேற்ற அமேதி வாக்காளர்கள்- வீடியோ உண்மையா?

அமேதி நாடாளுமன்ற தொகுதிக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தொண்டர்கள் கண்ணீர் மல்க வரவேற்றதாக, ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அமெதி சென்ற ராகுலுக்கு தொண்டர்களின் கண்ணீர் மல்க வரவேற்பு.!!!?? Archived link வீடியோ ஒன்றில் ராகுல் காந்தியை மக்கள் சூழ்ந்து நிற்கின்றனர். பின்னணியில் சோக இந்தி பாடல் ஒன்று ஒலிக்கிறது. கதறி அழும் அவர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறுகிறார். இந்த வீடியோவை […]

Continue Reading

காவி சீருடைக்கு மாறுகிறதா இந்திய கிரிக்கெட் அணி? – பரபரப்பை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு

இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியை காவி நிறமாக மாற்றப்படுகிறது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காவி நிற ஜெர்ஸியில் இருப்பது போன்ற படம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “காவி சீருடைக்கு மாறும் இந்திய அணி… அரசியல் நிர்பந்தமா? அனாவசிய மாற்றமா?” என்று உள்ளது. இதன் கீழ், “தமிழ்நாட்ட நினைச்சாதான் பயமா இருக்கு. இந்த கலர […]

Continue Reading

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு காலத்தில் கிரிமினல் குற்றவாளி! – பகீர் ஃபேஸ்புக் பதிவு

மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷாவை சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் கைது செய்ததாக ஒரு பழைய புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், அவர் கிரிமினல் என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அன்று இவர் ஒரு கிரிமினல் – இன்று இவர் மத்திய உள்துறை அமைச்சர்.இன்னோரு வர் அன்று ஒரு கொலையாளி இன்று ஒரு மத்திய மந்திரி. Archived link அமித் ஷா கைது […]

Continue Reading

தமிழ் மொழியில் கனடா தேசிய கீதம்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

“ஜூன் 1ம் தேதி கனடாவின் 150வது சுதந்திரதினத்தையொட்டி தமிழில் கனடா தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இன்று (june 1 st) தமிழுக்கு பெருமை. கனடாவிற்கு நன்றி Archived link கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ படத்துடன் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “கனடாவின் 150வது சுதந்திர தினத்தையொட்டி முதன் முறையாக கனடாவின் தேசியகீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டுள்ளது. 4 […]

Continue Reading