மும்பை விமான நிலையத்தை வாங்க அதானி பெற்ற கடனை தள்ளுபடி செய்ததா எஸ்பிஐ?

மும்பை விமான நிலையத்தை வாங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து அதானி பெற்ற ரூ.12,770 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடியுடன் அதானி இருக்கும் புகைப்படம், பாரத ஸ்டேட் வங்கி லோகோவுடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் “மும்பை விமான நிலையம் வாங்கியதற்கு அதானியின் கடன் தொகை 12,770 கோடி […]

Continue Reading

இந்தியர்களைப் போல விலைவாசி உயர்வை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாரா கோத்தபய ராஜபக்‌ச?

‘’இந்தியர்களைப் பார்த்து, விலைவாசியை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கை மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அறிவுரை,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இதனைப் பகிர்ந்துள்ள நபர் @Muthalvant, சென்னையில் IBC Tamil என்ற ஊடகத்தில் பணிபுரிவதாக அவரது சுய விவர பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் வாசகர்கள் நம்மிடம் விளக்கம் […]

Continue Reading

பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்த பெண்ணை உள்ளே விட மறுத்த ஓட்டல் பணியாளர் ஒரு இந்தியரா?

‘’ஹிஜாப் அணிந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த இந்தியர் பணியிடை நீக்கம், ஓட்டலை மூடியது பஹ்ரைன் அரசு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதே செய்தியை கலைஞர் செய்திகள் ஊடகமும் வெளியிட்டிருந்ததைக் கண்டோம். Kalaignar Seithigal Link I Archived Link உண்மை அறிவோம்:சமீபத்தில் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்தபடி, […]

Continue Reading

மான் வேட்டையாடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ என்று பகிரப்படும் வங்கதேச வீடியோ!

காங்கிரஸ் எம்.எல்.ஏ பூங்காவுக்கு சென்று மான்களை வேட்டையாடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பூங்காவில் மான்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அப்போது கையில் துப்பாக்கி வைத்துள்ள நபர் ஒருவர் மான்களை நோக்கி சுடுகிறார். இறந்த மானின் முன்பு துப்பாக்கியை உயர்த்தி காட்டி போஸ் கொடுக்கிறார். நிலைத் தகவலில், “காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அனில் உபாத்யாய் பூங்காவில் […]

Continue Reading

இந்திய ராணுவம் இலங்கை சென்றதாக பரவும் வதந்தி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பிரச்னையை சமாளிக்க இந்திய ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொழும்பில் தரையிறங்கிய மூன்று இந்திய இராணுவ விமானம்  நேற்று நள்ளிரவு, ஸ்ரீலங்காவில்  ஏற்பட்ட  அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா அதன்  நட்பு நாடான இலங்கையை, பாதுகாக்கும் நோக்கில் […]

Continue Reading

மக்களின் பேராசையே பெட்ரோல் விலை உயர காரணம் என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

‘’பொதுமக்கள் பேராசையில் அதிக வாகனம் வாங்குவதே பெட்ரோல் விலை உயர காரணம் என்று நிர்மலா சீதாராமன் கருத்து,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்வதாக, நடுத்தர மக்கள் […]

Continue Reading

சோனியாவுக்கு மரியாதை கொடுக்கத் தவறிய மோடி என்று பரவும் படம்- உண்மை என்ன?

சோனியா காந்தி வணக்கம் தெரிவித்த போது, பிரதமர் மோடி கைக்கட்டி நின்று அவமரியாதை செய்தார் என்று ஒரு புகைப்பட பதிவு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் புகைப்பட பதிவு ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். பிரதமர் மோடி கைக்கட்டியபடி நிற்க, சோனியா காந்தி வணக்கம் சொல்வது போன்று அந்த படம் இருந்தது. அந்த […]

Continue Reading

பாகிஸ்தான் டிவி வழியே பண்டிட்களிடம் மன்னிப்பு கேட்ட காஷ்மீர் இஸ்லாமியர்?- முழு விவரம் இதோ!

‘’பாகிஸ்தான் டிவி மூலமாக, காஷ்மீர் பண்டிட்களுக்கு நிகழ்ந்த வன்முறைகளை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்ட காஷ்மீர் இஸ்லாமியர்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link டிவி நிகழ்ச்சி ஒன்றின் காட்சிகளை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ The Kashmir Files படம் பகைமையை வளர்க்கும்னு உருட்டுபவர்கள் கவனத்திற்கு … இப்படி மனிதத்தையும் தட்டி எழுப்பும் என்பதை சொல்லும் காணொளி […]

Continue Reading

ஹிஜாப் விவகாரம்; மும்பை உயர் நீதிமன்றத்தின் 2018 உத்தரவு தற்போது பரவுவதால் சர்ச்சை…

‘’ஹிஜாப் அணிய மாணவியருக்கு அனுமதி,’’ என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’மாணவிகள் பள்ளிகள் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று சொல்ல கல்லூரி மேனேஜ்மென்றுகளுக்கோ பிறின்ஸிபலுக்கோ தலைமை ஆசிரியர்களுக்கோ எந்த உரிமையும் இல்லை மும்பை உயர்நீதிமன்றம்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

உ.பி-யில் 165 இடங்களில் வாக்குகளை பிரித்து பாஜக வெற்றிக்கு ஓவைசி உதவினாரா?

நடந்து முடிந்த உத்தரப்பிரதேச தேர்தலில் 165 இடங்களில் ஓவைசி வாக்குகளைப் பிரித்து, பாஜக வெற்றிக்கு காரணமாக அமைந்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஓவைசி புகைப்படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “200 வாக்குகள் வித்தியாசத்தில் 7 தொகுதிகள். 500 வாக்குகள் வித்தியாசத்தில் 23 தொகுதிகள். 1000 வாக்குகள் வித்தியாசத்தில் 49 தொகுதிகள். 2000 வாக்குகள் […]

Continue Reading

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பார்க்கும்போது அத்வானி மற்றும் யோகி ஆதித்யநாத் கதறி அழுதனரா?

‘’தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பார்க்கும்போது கதறி அழுத அத்வானி மற்றும் யோகி ஆதித்யநாத்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பதிவுகள் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதேபோல, யோகி ஆதித்யநாத் அழுவதைப் போன்ற ஒரு வீடியோவையும் பகிர்ந்து, காஷ்மீர் ஃபைல்ஸ் பார்க்கும்போது அவர் அழுதார் என்று தகவல் பரப்புவதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: ஜம்மு […]

Continue Reading

மோகன் பகவத்துடன் ஓவைசி இருக்கும் படம் உண்மையா?

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி இருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உடன், அசாதுதீன் ஓவைசி அமர்ந்திருப்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இப்பொழுது தெரிகிறதா யார் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறார் என்று மோகன் […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் ஓட்டுப் போடாமல் இருப்பதற்காக வாக்காளர்களுக்கு ரூ.500 கொடுத்ததா பாஜக?

‘’உத்தரப் பிரதேசத்தில் ஓட்டுப் போடாமல் இருப்பதற்காக வாக்காளர்களுக்கு ரூ.500 கொடுத்த பாஜக.,வினர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பதிவு ஒன்றை கண்டோம். இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இந்த பதிவின் கமெண்ட் பிரிவில் இதே வீடியோவில் உள்ள பெண் பேசும் மற்றொரு வீடியோவையும் இணைத்துள்ளனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோக்களில் News18 ஊடகத்தின் லோகோ இடம்பெற்றுள்ளதால், இதுபற்றி நாம் ஆய்வு செய்தோம். அப்போது, இதுபற்றி ஏற்கனவே […]

Continue Reading

இந்தியாவில் இருந்துகொண்டே உக்ரைனில் இருப்பதாக வீடியோ வெளியிட்ட பெண் கைது என்று பரவும் தகவல் உண்மையா?

இந்தியாவில் இருந்துகொண்டே உக்ரைனில் சிக்கிக்கொண்டதாக சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டதாகவும் அவரை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்தனர் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளம் பெண் ஒருவரின் புகைப்படத்துடன் இந்தியில் வெளியான ஃபேஸ்புக் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “தேச துரோகிகள்..! தான், உக்ரைனில் தற்போது […]

Continue Reading

உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை தோளிலா ஏற்றி வர முடியும் என்று நிர்மலா சீதாராமன் கேட்டாரா?

‘’சொந்த நாட்டில் படிக்காமல் உக்ரைன் சென்ற மாணவர்களை என் தோளிலா ஏற்றிக் கொண்டு இந்தியா வர முடியும்,’’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாகக் கூறி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் பலரும் இதனை உண்மை என நம்பி […]

Continue Reading

தேர்தலில் தோற்றால் நாடு முழுவதும் தீ வைப்பேன் என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா?

‘’உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் தோற்றால், இந்தியா முழுவதும் தீ வைத்துக் கொளுத்துவேன் என்று யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, கடந்த 2019ம் ஆண்டு முதலே இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி ஷேர் […]

Continue Reading

இமய மலையில் வாழும் 200 வயது இந்து மத துறவி என்று பரவும் வீடியோ உண்மையா?

இமய மலையில் 200 ஆண்டுகள் ஒரு இந்து மத துறவி வாழ்ந்து வருகிறார் என்றும் அவர் சிவ நாமத்தையே உணவாக கொண்டு வாழ்ந்து வருகிறார் என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உடல் மெலிந்த துறவி ஒருவரின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சிவன் நாமமே உணவு..இமாலய மலையில் 200 வருடங்களாக வாழும் துறவியின் வைரல் வீடியோ” […]

Continue Reading

இஸ்லாமிய பெண்கள் மீது தண்ணீரை வாரி இரைக்கும் வீடியோ கர்நாடகாவில் எடுக்கப்பட்டதா?

கர்நாடகாவில் புர்கா அணிந்த இஸ்லாமிய பெண்கள் மீது இந்துத்துவ அமைப்பைச் சார்ந்தவர்கள் தண்ணீரை வாரி இரைத்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புர்கா அணிந்த இஸ்லாமிய பெண்கள் மீது இளைஞர்கள் சிலர் தண்ணீரை வாரி இரைக்கின்றனர். அவர்களிடமிருந்து தப்பி இஸ்லாமிய பெண்கள் வேகமாக ஓடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஹிஜாப் அணிந்த மாணவிகள் மீது […]

Continue Reading

ஹிஜாப் அணிந்து வந்து போலீஸ் மீது பாஜக.,வினர் கல் வீசியதாகப் பரவும் வதந்தி!

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்து போலீஸ் மீது கல் எறிந்த சங்கிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஹிஜாப் அணிந்த ஆண் ஒருவரை போலீசார் கைது செய்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் பெண்கள் போன்ற வேடத்தில் ஹிஜாப் அணிந்து கொண்டு போலீசார் மீது கல் […]

Continue Reading

அல்லாஹூ அக்பர் கோஷமிட்ட கர்நாடகா மாணவியின் உண்மை முகம் இதுவா?

கர்நாடகா ஹிஜாப் மாணவியின் உண்மை முகம் என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:சமீபத்தில் கர்நாடகாவில் இந்து மத ஆதரவாளர்களுக்கு மத்தியில் மாணவி ஒருவர் துணிச்சலாக அல்லஹூ அக்பர் என கோஷமிட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள், செய்திகள் ஊடகங்களிலும் பரவின. இந்த நிகழ்வை மையப்படுத்தி, குறிப்பிட்ட […]

Continue Reading

குஜராத்தில் நடந்த கொடூர கொலையை வைத்து தமிழ்நாட்டில் வாக்கு கேட்கும் பா.ஜ.க-வினர்!

குஜராத்தில் முஸ்லிமாக மதம் மாற மறுத்ததால் இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார், அதனால் பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சூரத்தில் ஒரு இந்து பெண் முஸ்லீமாக மாற மறுத்ததால் ஒரு மதவெறியன்  முஸ்லீம் ஒரு ஹிந்து  பெண்ணைக் […]

Continue Reading

இஸ்ரோ வடிவமைத்த ரேடியோ கார்டன் செயலி என்று பகிரப்படும் வதந்தி…

‘’இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட ரேடியோ கார்டன் செயலி,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது போல, Radio Garden Live என்பது ஆன்லைன் வழியே, உலக வரைபடம் கொண்டிருக்கும். அதில், உலகம் முழுக்க எந்தெந்த பகுதிகளில் வானொலி நிலையங்கள் செயல்படுகின்றன என்பதைக் குறிக்கும் வகையில் பச்சை நிறத்தில் புள்ளிகள் […]

Continue Reading

அல்லாஹூ அக்பர் என்று கோஷமிட்ட கல்லூரி மாணவி என்று பகிரப்படும் படங்கள் உண்மையா?

கர்நாடகாவில் தன்னை சூழ்ந்து ஜெய் ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்பிய மாணவர்களுக்கு எதிராக அல்லாஹூ அக்பர் என்று கோஷம் எழுப்பிய பெண்ணின் படங்கள் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கர்நாடகாவில் புர்கா அணிந்து வந்த இஸ்லாமிய கல்லூரி மாணவி ஒருவரை ஏராளமான இந்து மாணவர்கள் சூழ்ந்து கொண்டு ஜெய் ஶ்ரீராம் கோஷம் எழுப்பினர். பதிலுக்கு அந்த […]

Continue Reading

கர்நாடகாவில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு காவிக் கொடி ஏற்றப்பட்டதா?

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு, காவிக் கொடியை மாணவர்கள் ஏற்றினார்கள் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கொடி கம்பம் உச்சியில் காவிக் கொடியை இளைஞர் ஒருவர் கட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்னாடகா : ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை அகற்றி காவிக் கொடியேற்றிய மாணவர்கள்” […]

Continue Reading

ஆப்கானிஸ்தானில் மொபைல் போன் வைத்திருந்தால் மரண தண்டனையா?

ஆப்கானிஸ்தானில் மொபைல் போன் வைத்திருந்தால் மரண தண்டனை என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, ரிவர்ஸ் இமேஜ் முறையில் கூகுளில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இது பாகிஸ்தானைச் சேர்ந்தது என்பதற்கான சில செய்தி மற்றும் வீடியோ ஆதாரங்கள் கிடைத்தன. The Tribune Link I The News Link […]

Continue Reading

நாட்டிலே மதக் கலவரம் செய்திட வாக்களிப்பீர் பாஜக என பகிரப்படும் வதந்தி…

‘’நாட்டிலே மதக் கலவரம் செய்தட வாக்களிப்பீர் பாஜக,’’ என்று கூறி பகிரப்படும் போஸ்டர் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட போஸ்டரை பார்த்தாலே, பாஜக.,வை கேலி செய்யும் நோக்கில் பகிரப்படும் போலியான ஒன்று என தெரிகிறது. இருந்தாலும், பலர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதால், சந்தேகத்தின் […]

Continue Reading

தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

சமூக நீதியை காக்க தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக, ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு தமிழ்நாடு போன்ற மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், மத்திய அரசு இதனை கண்டும் காணாதது போல செயல்படுவதாக, கல்வி ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். […]

Continue Reading

தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த முஸ்லீம் பெண்- உண்மை என்ன?

‘’தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த முஸ்லீம் பெண்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். அதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலர் இந்த தகவலை ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த சம்பவம் ஜனவரி 26, […]

Continue Reading

பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாரா?

‘’பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link குறிப்பிட்ட வீடியோ பற்றிய தகவலை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:பிரதமர் மோடி மனைவி யசோதாபென் குஜராத்தில் நடைபெற்ற 2017 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்படி காங்கிரஸ் தரப்பில் […]

Continue Reading

அஇஅதிமுக தோல்வி அடையும் என்று எச்.ராஜா கூறினாரா?

‘’அஇஅதிமுக தோல்வி அடையும் என்று எச்.ராஜா சவால்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் இரண்டு விதமான நியூஸ் கார்டுகளைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதேபோல, மற்றொரு நியூஸ் கார்டும் பகிரப்படுகிறது. அதனையும் கீழே இணைத்துள்ளோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், அஇஅதிமுக […]

Continue Reading

ஆந்திரா குண்டூர் ஜின்னா கோபுரத்தில் அமித்ஷா உத்தரவால் தேசிய கொடி வர்ணம் பூசப்பட்டதா?

ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள பழமையான ஜின்னா டவரில் தேசிய கொடியேற்ற தடை விதிக்கப்பட்டதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு அடிப்படையில் அந்த கோபுரத்துக்கு தேசிய கொடியின் மூவர்ணம் பூசப்பட்டது என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு புகைப்படங்களை ஒப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஜின்னா டவர் , ஆந்திரா குண்டூரி்ல் உள்ளது , […]

Continue Reading

பிரியாணி அண்டா பத்திரம்; தமிழ் ஊடகங்களின் பெயரில் பகிரப்படும் வதந்தி…

‘’பாஜக போராட்டம் நடத்துவதால் சென்னை வள்ளுவர் கோட்டம் சுற்றியுள்ள பகுதிகளில் பிரியாணி கடைகள் மூடப்படுகின்றன,’’ எனக் குறிப்பிட்டு பகிரப்படும் நியூஸ் கார்டுகள் சிலவற்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’நாளை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளதை தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரியாணி கடைகள் அடைக்கப்படுகிறது. பிரியாணி அண்டாக்கள் திருடு போவதை தவிர்க்க நாளை ஒருநாள் மட்டும் இந்த […]

Continue Reading

மதுரை மேயர் பதவிக்கு மாரிதாஸ் முயற்சி என்று கதிர் நியூஸ் செய்தி வெளியிட்டதா?

‘’மதுரை மேயர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிட எனக்கு சீட் தரவில்லை என்று மாரிதாஸ் வேதனை தெரிவித்தார்,’’ எனக் கூறி பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு முழுக்க நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத் தாக்கல் செய்யும் […]

Continue Reading

ராகுல் காந்தியின் குடி என்ன என்று சீமான் கேட்டதாகப் பகிரப்படும் வதந்தி…

‘’ராகுல் காந்தியின் குடி என்ன என்று சீமான் கேள்வி,’’ எனக் குறிப்பிட்டு நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வது, கமெண்ட் பகிர்வதையும் கண்டோம். Facebook Claim Link I Archived Link […]

Continue Reading

உ.பி-யில் பா.ஜ.க பெண் வேட்பாளரை விரட்டிய மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க பெண் வேட்பாளரை பொது மக்கள் விரட்டி அடித்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவரை பொது மக்கள் விரட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோ தெளிவில்லாமல் உள்ளது. நிலைத் தகவலில் “உ.பியில் ஓட்டுக்கெட்டு சென்ற #பாஜக பெண் வேட்பாளரைக் கல்லால் அடித்து விரட்டிய ஊர் மக்கள் (இந்து விரோதி, தேச விரோதிகள்)…. தரமான […]

Continue Reading

பாஜக வேட்பாளரை விரட்டியடித்த உ.பி., மக்கள் என்று பரவும் பழைய வீடியோ!

உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளரை மக்கள் விரட்டியடித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு வீடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் ஒரு நபரை பலர் துரத்துகின்றனர். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர். இதனுடன் பதிவு ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “உ.பி பாஜக வேட்பாளரை காவல் அதிகாரிகள் பத்திரமாக […]

Continue Reading

இளமையில் வறுமையில் வாடிய மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோய் என்று பரவும் வதந்தி!

மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோய் தன்னுடைய குழந்தைப் பருவத்தில் மைக்கா சுரங்கத்தில் வேலை செய்ததாகக் கல்லூரி மாணவிகளிடம் கூறியதாக ஒரு கதை சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கலெக்டர் ஏன் மேக்கப் போடவில்லை…? மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீமதி. ராணி சோயாமோய், கல்லூரி மாணவர்களுடன் […]

Continue Reading

டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் திருவள்ளுவர் சிலை இடம் பெற்றதா?

டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் மத்திய கல்வித் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்தியில் திருவள்ளுவர் உருவ சிலை வைக்கப்பட்டிருந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டெல்லியில் நடந்த குடியரசு தின ஊர்வலத்தில் இடம் பெற்ற வாகனம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டில்லி குடியரசு தின ஊர்வலத்தில் மத்திய கல்வி துறை […]

Continue Reading

2011ல் சோனியாவின் மருத்துவமனை செலவுக்காக மத்திய அரசு ரூ.1880 கோடி செலவிட்டதா?

‘’2011ம் ஆண்டில் சோனியாவின் மருத்துவமனை செலவுக்காக, அவர் வெளிநாட்டில் சென்று சிகிச்சை பெற ரகசியமாக மத்திய அரசு ரூ.1880 கோடியை அப்போதைய காங்கிரஸ் அரசு செலவிட்டது,’’ என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவதைக் கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு, வாசகர் ஒருவர் அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் […]

Continue Reading

ஆஸ்கர் யூடியுப் தளத்தில் ஜெய் பீம் படம்; தந்தி டிவி பெயரில் பரவும் போலியான செய்தி!

‘’5000 டாலர் கொடுத்து ஆஸ்கர் யூடியுப் சேனலில் ஜெய் பீம் படத்தை வெளியிட்ட சூர்யா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:நடிகர் சூர்யா […]

Continue Reading

குடியரசு தின அணிவகுப்பில் கருணாநிதி சிலை நீக்கம்; மு.க.ஸ்டாலின் விளக்கம் கூறியதாகப் பரவும் வதந்தி…

‘’குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த கருணாநிதி சிலை நீக்கப்பட்டது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம்,’’ எனக் குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பாலிமர் நியூஸ் லோகோவுடன் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் உண்மையா எனக் கேட்டு சந்தேகம் எழுப்பியிருந்தார். இந்த செய்தியை ஃபேஸ்புக்கிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை […]

Continue Reading

ஜீ டிவி உரிமையாளர் முன்பாக மோடி கை கட்டி நின்றாரா?

ஜீ டிவி (Zee) உரிமையாளர் முன்பு பிரதமர் மோடி கைக்கட்டி நின்றார் என்று ஒரு புகைப்படத்தைச் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சில மாதங்களுக்கு முன்பு தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பிரதமர் மோடியை சந்தித்தபோது எடுத்த படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இவர்தான் Zee tmail tv ஓனராம் மோடியைவே கையை கட்டி நிற்க்க வெச்சுருக்கார் அப்போ ஆடு […]

Continue Reading

இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை; தமிழ்நாடு அரசின் முடிவை அண்ணாமலை எதிர்த்தாரா?

‘’இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை நிறுவ தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு, அண்ணாமலை எதிர்ப்பு ,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, வாசகர் ஒருவர் உண்மையா என கேட்டிருந்தார். எனவே, ஆய்வு செய்ய தொடங்கினோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாட்டின் தென் மாநிலங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் அமைந்துள்ள […]

Continue Reading

தமிழ் டிவி சேனல்களை அண்ணாமலை மிரட்டியதாக பரவும் வதந்தி!

‘’தமிழ் டிவி சேனல்களுக்கு அண்ணாமலை மிரட்டல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை கேலி செய்து, சிறுவர்கள் பேசியதாகக் கூறி சர்ச்சை எழுந்துள்ளது. இதன்பேரில், பாஜக நிர்வாகிகள், ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களின் வழியே கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி ஜீ தொலைக்காட்சி மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

தமிழ்நாடு முழுக்க பால்வாடிகள் முன்பாக போராட்டம் நடத்துவோம் என்று அண்ணாமலை கூறவில்லை!

தமிழ்நாடு முழுக்க பால்வாடிகள் முன்பாக போராட்டம் நடத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளதாகக் கூறி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்வதையும் கண்டோம்.  Facebook Claim Link I […]

Continue Reading

புதரில் லேசான அசைவு காரணமாக ராஜீவ் காந்தி பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பிச்சைக்காரர் உயிரிழந்தாரா?

காந்தி நினைவிடத்தில் ராஜீவ் காந்தி அஞ்சலி செலுத்த வந்த போது புதரில் லேசான அசைவு ஏற்படவே, பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பிச்சைக்காரர் உயிரிழந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive காந்தி நினைவிடத்தில் ராஜீவ் காந்தி அஞ்சலி செலுத்தும் மிக பழைய வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது ராஜ்காட் செல்கிறார்! […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் பெரியார் சிலையை யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தாரா?

உத்தரப் பிரதேசத்தில் பெரியார் சிலையை திறந்து வைத்த யோகி ஆதித்யநாத் என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link  சாமியார் என நினைத்து, உத்தரப் பிரதேசத்தில் பெரியார் சிலையை யோகி ஆதித்யநாத் திறந்து வைத்துள்ளார் என்று குறிப்பிட்டு, பலரும் இந்த புகைப்படத்தை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் ட்ரோல் செய்யும் நோக்கில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: உத்தரப் […]

Continue Reading

FactCheck: குஜராத்தில் 70,000 கி.மீ. நீளத்திற்கு கால்வாய் மீது சோலார் பேனல்கள் நிறுவப்பட்டதா?

குஜராத் மாநிலத்தில் 70,000 கிமீ நீளத்திற்கு கால்வாய் மீது சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்:இந்தியாவின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சக்தி தயாரிப்பு மையம் குஜராத் மாநிலத்தில் நிறுவப்பட்டு வருகிறது. 726 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்த […]

Continue Reading

விமானநிலையத்தில் சிறுநீர் கழித்த ஷாரூக்கான் மகன் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஷாரூக்கான் மகன் ஆர்யான்கான் போதை தலைக்கேறி விமான நிலையத்தில் பொது வெளியில் சிறுநீர் கழித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு வீடியோ மற்றும் பதிவு ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், இளைஞர் ஒருவர் விமானநிலையத்தில் பொது வெளியில் சிறுநீர் கழிக்கிறார். அந்த பதிவில், “ஷாருக்கான் மகன் ஆர்யான்கான் போதை ததலைக்கேறி  பண்ணும் […]

Continue Reading

வறட்டியால் கொரோனாவை விரட்டுவோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாகப் பரவும் வதந்தி!

வறட்டியால் கொரோனாவை விரட்டுவோம் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive யோகி ஆதித்யநாத் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வரட்டியால் கொரோனாவை விரட்டுவோம். பசுஞ்சாணத்தால் செய்யப்பட்ட வரட்டியை எரிப்பதால் கொரோனா வைரஸ் அழிகிறது – உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்” என்று […]

Continue Reading