ராணுவ வீரர் உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரும் வீடியோவா இது?

சீன தாக்குதலில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 தேசியக் கொடி போர்த்தப்பட்டது போன்ற வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி எடுத்துச் செல்வது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் உடல் சொந்த […]

Continue Reading

தி ஸ்பை கிரானிக்கல் புத்தகத்தை ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் எழுதினாரா?

‘’ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட மன்மோகன் சிங் மற்றும் ஹமீது அன்சாரி,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், மன்மோகன் சிங், ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் அசாத் துர்ரானி எழுதிய புத்தகத்தை வெளியிட்ட தேச துரோகிகள், இவர்களை […]

Continue Reading

இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்?- விஷம பதிவு

இந்திய ராணுவத்தை கண்டித்தும், சீன ராணுவத்தை வாழ்த்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கழுத்தில் இந்திய ராணுவம் ஒழிக என்றும் சீன ராணுவத்தை ஆதரிப்போம் என்று எழுதப்பட்ட பிரசார அட்டையை கழுத்தில் மாட்டியுள்ளனர்.  […]

Continue Reading

ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம் என்று மோடி கூறினாரா!

ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கினோம் என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடியின் பழைய புகைப்படம் மற்றும் சிறுவன் ஒருவனின் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மோடி படத்துக்கு அருகே, “ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கியுள்ளோம் – மோடி” என்று உள்ளது. சிறுவன் மோடியிடம் கேள்வி […]

Continue Reading

சீன தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் உடல் கொண்டு செல்லப்படும் படமா இது?

லடாக் எல்லையில் சீன ராணுவம் தாக்கியதில் பலியான இந்திய ராணுவ வீரர்களின் உடல் கொண்டு செல்லப்படுகிறது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தேசியக் கொடி, மலர் வளையம் வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படும் வீரர்களின் உடல்கள் அடங்கிய பெட்டியின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், சீன எல்லையில் நடந்த போரில் இந்திய வீரர்கள் இறந்த உடல்கள் ஒரு இடத்தில் […]

Continue Reading

Fact Check: மகாராஷ்டிராவில் சாதி வெறி காரணமாக சிறுவர்கள் நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்டனரா?

மகாராஷ்டிராவில் உணவு திருடியதற்காகத் தலித் சிறுவர்கள் நிர்வாணப்படுத்தித் தாக்கப்பட்டதாக ஒரு படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிறுவர்களை நிர்வாணமாக்கி, தலையில் அறைகுறையாக முடியை மழித்து, செருப்பை மாலையாக அணிவித்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், மகாராஷ்டிராவில் பசி தாக்க முடியாமல் உணவு திருடியதற்காக தலித் சிறுவர்களை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கிய சாதி வெறியர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், […]

Continue Reading

ரயிலில் தொங்கும் வடக்கன்ஸ்… இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

ரயிலில் தொங்கிக் கொண்டு செல்லும் வட இந்தியர்கள் என்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. அது இந்தியாவில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரயிலில் குழந்தையுடன் படியில் தொங்கிக் கொண்டு செல்லும் பெற்றோர் படம் பகிரப்பட்டுள்ளது. குழந்தை நெரிசல் காரணமாக அழுகிறது. நிலைத் தகவலில், “அடுத்த முறை ஓட்டு போடும் முன் தமிழனிடம் ஆலோசனை கேளுங்க டா வடக்கணுங்களா….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Shabbeer என்பவர் 2020 […]

Continue Reading

சென்னை வர்த்தக மையம் குவாரண்டைன் சென்டரில் நோயாளிகள் லுங்கி டான்ஸ் ஆடினரா?

சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள குவாரண்டைன் சென்டரில் உள்ள நோயாளிகள் குத்தாட்டம் போடுவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மிகப்பெரிய அரங்கில் படுக்கைகள் போடப்பட்டுள்ளன. அங்கிருந்தவர்கள் இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடுகின்றனர். நிலைத் தகவலில், “சென்னையில #Corona ku பயந்து டவுசர் கிழியுது ஆனா #Corona Ward la லுங்கி டான்ஸ் ஆடிட்டு […]

Continue Reading

சாலையோரத்தில் பிரசவம்; இந்த பெண்ணின் அவல நிலைக்கு யார் காரணம்?

‘’சொந்த ஊருக்கு நடந்து சென்றதால் ஏழைப்பெண்ணிற்கு சாலையோரம் பிரசவம் நிகழ்ந்த பரிதாபம்,’’ என்று கூறி பகிரப்படும் வைரல் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஜூன் 10, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்த பதிவில், சாலையோரமாக, பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ஏழைப்பெண்ணை இப்படி நீண்ட தொலைவு நடக்க விட்டு, சாலையோரம் பிரசவம் நிகழ வைத்த […]

Continue Reading

நியூசிலாந்தைப் போல பெங்களூருவிலும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதா? – விபரீத ஒப்பீடு

நியூசிலாந்தை விட அதிக மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்திய எடியூரப்பாவை பா.ஜ.க-வை சேர்ந்தவர் என்பதால் ஊடகங்கள் பாராட்டவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூசிலாந்து மற்றும் பெங்களூருவை ஒப்பிட்டு புகைப்பட பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், பாராட்ட மறந்த ஊடகங்கள்… காரணம் அது பிஜேபி ஆளும் மாநிலம். ஒரு நாட்டைவிட தன் நகரத்தின் நோயை கட்டுப்படத்திய தலைமை” […]

Continue Reading

கொரோனா தயவால் 10ம் வகுப்பில் வெற்றி பெற்ற முதியவர்!– ஃபேஸ்புக் வதந்தி

தெலங்கானாவில் முதியவர் ஒருவர் 47 ஆண்டுகளாக தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து வந்த நிலையில், அரசு ஆல் பாஸ் என்று அறிவித்ததால் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதியவர் ஒருவர் தேர்வு எழுதும் படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “ஐயாவோட பெயர் முகமது பரக்கத் அலி. தெலுங்கானா மாநிலம். வயது 82. 47 ஆண்டுகளாக தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு எழுதி […]

Continue Reading

உ.பி-யில் சிறுமியின் நாக்கை அறுத்து பூஜை செய்ததாக பரவும் வதந்தி!

உத்தரப் பிரதேசத்தில் சிறுமி ஒருவரின் நாக்கை அறுத்து பூஜை நடத்தியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாக்கு துண்டான பெண் ஒருவரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “உத்திரப் பிரதேச மாநிலம் பண்டல்கண்டில் கொரோனாவிலிருந்து ஊரைக் காப்பாற்றுகிறோம் என்று 8வது படிக்கும் மாணவியின் நாக்கை அறுத்து பூஜை நடத்திய கொடூரம். யானைக்குப் பொங்கிய உத்தமர்கள் விராத்கோலி, மேனகா காந்தி, […]

Continue Reading

இந்த வயதான தம்பதியினர் ஒடிசாவை சேர்ந்தவர்களா?

‘’ஒடிசாவைச் சேர்ந்த இந்த வயதான தம்பதியினர் ஒரே நாளில் இறந்துவிட்டனர்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், வயதான முதியவர் மற்றும் அவரது மனைவி இறந்து கிடக்கும் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ஒடிசா மாநிலத்தில் ஒரே நாளில் ஒரு மணி நேர இடைவெளியில் உயிரை விட்ட கணவன், மனைவி என்று எழுதியுள்ளனர்.  இதனைப் […]

Continue Reading

மகாராஷ்டிராவில் பசுவுக்கு வெடி மருந்து உணவு கொடுக்கப்பட்டதா?

மகாராஷ்டிராவில் கோதுமை மாவில் வெடி மருந்தை வைத்து பசுவுக்கு கொடுக்கப்பட்டதாக பசுவின் படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வாய்ப்பகுதி சிதைந்து காணப்படும் பசு ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடுத்து ஒரு கொடூரம் #மகாராஷ்டிராவில்.. கோதுமை மாவில் வெடிமருந்து வைத்து கொடுத்த மர்ம மனிதர்கள்.. பெரும்பாலும் அந்த கூட்டத்துக்கு சில விலங்குகளை சுத்தமா பிடிக்காது.. 1, மாடு – […]

Continue Reading

உ.பி-யில் தண்ணீர் எடுத்ததற்காக பட்டியலினப் பெண்ணை சவுக்கால் அடித்தார்களா?

உத்தரப் பிரதேசத்தில் தண்ணீர் எடுத்தார் என்பதற்காக பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை சாதி வெறியர்கள் சவுக்கால் அடித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 இந்த வீடியோ பதிவில், ஒரு பெண்ணை சிலர் சேர்ந்து மிகக் கொடூரமான முறையில் தாக்குகின்றனர். இதை ஊரோ சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது. யாரும் தடுக்க முயலவில்லை. இந்தியில் […]

Continue Reading

இஸ்லாமியர்கள் பற்றி கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பேசியது என்ன?

‘’இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள், அவர்களுக்கு பணத்தை வீணாக்க வேண்டாம், இஸ்லாமிய கொரோனா நோயாளிகளை விஷம் கொடுத்து கொன்றோம்,’’ என்று கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் என்று கூறப்படும் பெண்மணி புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் “முஸ்லீம்கள் தீவிரவாதிகள், அவர்களுக்கு பணத்தை வீணாக்க வேண்டாம் என்பதால் முஸ்லீம் கொரனா […]

Continue Reading

பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்!

‘’பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim 1 Archived Link Facebook Claim 2 Archived Link  Facebook Claim 3 Archived Link  Facebook Claim 4 Archived Link  Facebook Claim 5 Archived Link Facebook Claim 6 Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவைப் போல, மேலும் பலரும் […]

Continue Reading

விஜய் மல்லையா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டாரா?

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டதாகவும் அவர் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தினகரன் நாளிதழ் வெளியிட்ட இணைப்பை ஆதாரமாகக் கொண்டு பதிவிட்டுள்ளனர். அந்த செய்தியில், “லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டார்: ஆர்தர் ரோடு சிறையில் அடைப்பு” என்று இருந்தது. இந்த பதிவை Senthil Karthick‎ […]

Continue Reading

எல்லைச் சுவரை உடைக்கும் சீன ராணுவ வீரர்கள் வீடியோ; உண்மை என்ன?

லடாக்கில் இந்திய எல்லை சுவரை சீன ராணுவ வீரர்கள் உடைப்பதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக் கல் சுவரை எட்டி உதைத்து உடைக்க முயற்சிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவர்களை இந்திய வீரர்கள் தடுக்கின்றனர். நிலைத் தகவலில், “இந்தியா எல்லை சுவர்களை உடைக்கும் சீன ராணுவம்.. வெறும் கைகளால் […]

Continue Reading

அயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகளா இவை?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகள் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அகழ்வாராய்ச்சி செய்வது, பூமியில் இருந்து கிடைத்த புத்தர் சிலைகள் என 10-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், இந்தியா வரலாறு என்பதே பெளத்தத்திற்க்கும் பார்பனியத்திற்க்கும் இடையே நிகழ்ந்த மோதல்களே.! பெளத்தம் வீழ்த்தப்பட்டு பார்பனியம் சூழ்ச்சியால் வென்றது.! என்ற அண்ணல் […]

Continue Reading

பகத் சிங் சகோதரியின் மரண செய்தியை மறைத்த ஊடகங்கள்!- ஃபேஸ்புக் வதந்தி

பகத் சிங்கின் சகோதரி கடந்த மே 30ம் தேதி மரணம் அடைந்ததாகவும் அது பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் மறைத்துவிட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பகத் சிங்கின் சகோதரி படம் என்று ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “சுதந்திரத்திற்கு உயிர் நீத்த பகத் சிங்கின் சகோதரி பிரகாஷ் கயுர் 30-5-2020 இயற்கை எய்தினார். துரதிஷ்டவசமாக இந்த தேசிய குடும்பத்தைச் […]

Continue Reading

மோடிக்கு மேக்கப் செய்தபோது எடுத்த வீடியோவா இது?

மக்கள் வரிப் பணத்ததை மேக்அப் போட ஊதாரித்தனமாக செலவு செய்த பிரதமர் மோடி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மேடம் டுசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் மோடியின் மெழுகு சிலை வைக்க அளவு எடுத்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எனக்கு தெரிந்து இந்த உலகத்திலேயே நாட்டு மக்களின் பணத்தை இப்படி ஊதாரி […]

Continue Reading

கோ பேக் சைனா ஆர்மி என்று இந்திய ராணுவம் பேனர் பிடித்ததா?

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்துள்ள நிலையில், கே பேக் சைனா ஆர்மி என்று இந்திய ராணுவ வீரர்கள் பேனர் பிடித்து வருவதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராணுவ வீரர்கள் பேனர் பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. நிலைத் தகவலில், “இதுவரை சைனா ஆர்மி முன்னேறி 35 ஆயிரம் சதுர மைல் […]

Continue Reading

பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா?

‘’பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடி,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில் பாலிமர் டிவியின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர்.  உண்மை அறிவோம்:மேற்கண்ட செய்தி பார்க்க உண்மை போலவே இருப்பதால், இதுபற்றி ஃபேஸ்புக்கில் வேறு யாரேனும் தகவல் பகிர்ந்துள்ளனரா என விவரம் […]

Continue Reading

சீனாவை எதிர்த்து இந்திய ராணுவத்துடன் இணைந்த இஸ்ரேல் ராணுவம்?- ஃபேஸ்புக் வதந்தி

சீனாவை எதிர்த்து இந்திய ராணுவத்துடன் இஸ்ரேல் ராணுவம் இணைந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அயல் நாட்டு ராணுவ வீரர்கள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராணுவத்துடன் இணைந்தது….. இஸ்ரேல் ராணுவம்….. பாரத் மாதகி ஜெய்….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Bharath Bharath என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2020 மே 27ம் தேதி […]

Continue Reading

மாஸ்க் இன்றி கூடிய கூட்டம்… லாக் டவுன் காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவா?

மாஸ்க் இன்றி, சமூக இடைவெளி இன்றி கூடிய மிகப்பெரிய கூட்டம் என்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 சாலையில் இளைஞர்கள் திரண்டு நிற்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. இது எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் அந்த வீடியோவில் இல்லை. நிலைத் தகவலில், “மாஸ்க்காவது சமூக விலகலாவது பசி வந்தா பத்தும்பறக்கும்.பிஜேபியால் இந்தியாவின் ஒட்டு […]

Continue Reading

மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட ராணுவ வாகனமா இது?

மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட உடனடி பாலம் அமைக்கும் ராணுவ வாகனம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ராணுவ டேங்க் போன்ற வாகனங்கள் ஆற்றுக்குள் சென்று பாலம் போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றின் மீது ராணுவ வாகனங்கள் பயணிக்கின்றன. எந்த இடத்திலும் இந்திய ராணுவத் தளவாடம் என்பதற்கான அடையாளம் […]

Continue Reading

உ.பி செல்லாமல் வழி தவறி ஒடிஷா வந்த ரயில்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

மராட்டியத்திலிருந்து கோரக்பூர் செல்ல வேண்டிய ரயில் தடம் மாறி ஒடிஷா வந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரயில் படத்துடன் கூடிய புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மராட்டியத்திலிருந்து கோரக்பூர் செல்ல வேண்டிய ரயில் தடம் மாறி ஒரிசா சென்று விட்டது. இந்த மாதிரி கூத்துலாம் எங்காவது நாம பார்த்திருப்போமா… டிஜிட்டல் இந்தியா ஹே” என்று […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் தலித் என்பதால் பெண் வியாபாரி தாக்கப்பட்டாரா?

உ.பி-யில் தலித் என்பதாலேயே வியாபாரம் செய்த பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 போலீசார் முன்னிலையில் பெண் ஒருவரை அடிக்கும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தலித் பெண் வியாபாரம் செய்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை. அவர்களும் இந்துக்கள் இல்லயா, #பூணுல் மட்டும்தான் #இந்துக்களா காவிநாயே. உபியில் அரங்கேறிய சம்பவம்” என்று […]

Continue Reading

சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா?

‘’சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை அனுமதிக்க மறுத்து போராட்டம் அறிவித்துள்ள கேரள கம்யூனிஸ்ட் கட்சி,’’ எனும் தலைப்பில் பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ‘’இந்தியாவிற்குள் தொழில் தொடங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மறுத்து கேரள கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையொட்டி, மே 22ம் தேதி போராட்டம் கூட அறிவித்துள்ளது,’’ என்று மேற்கண்ட ஃபேஸ்புக் […]

Continue Reading

மஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது? – ஃபேஸ்புக் வதந்தி

மஹா ராணா பிரதாப் என்ற மன்னர் பயன்படுத்திய வாள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பழங்கால வாள் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “நம் பூர்வ மண்ணின் மைந்தர் சக்கரவர்த்தி  மஹாராணா பிரதாப் போர்க்களத்தில் பயன்படுத்திய 50 கிலோ எடைகொண்ட  போர் வாள். நம்மால் வாளை தூக்கக்கூட முடியாது வாளை சுழற்றி சண்டையிடுவது என்பது நினைத்து கூட […]

Continue Reading

புலம்பெயர் தொழிலாளர்கள் மோடி உருவபொம்மையை செருப்பால் அடித்தார்களா?

சொந்த ஊர் திரும்பிய வடஇந்தியர்கள் மோடியின் உருவ பொம்மையை செருப்பால் அடித்ததாக, ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மோடி உருவ பொம்மையை சுற்றி அமர்ந்து பெண்கள் செருப்பால் அடிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “விழித்துகொண்ட ஊருக்கு போன வடக்கன் லடுக்கிகள்…” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவை, Anbarasu Natarajan என்பவர் 2020 மே […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா?

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதாக, சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஆம்பன் புயல் பாதிப்பை பார்வையிட சென்ற பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்கள் ஹெலிகாப்டரில் ஏறச் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஹெலிபேட் அமைக்கப்பட்ட இடத்தில் திரண்டிருந்தவர்கள் சௌகிதார் சோர் ஹே அதாவது காவல்காரன் ஒரு […]

Continue Reading

அயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த சிவலிங்கமா இது?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த சிவ லிங்கம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சங்கிலியால் கட்டி தூக்கப்படும் சிவலிங்கம் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ராமர் கோவில் அஸ்திவாரம் தோண்டறப்பொ கிடைச்ச சிவலிங்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Chandra Sekkar என்பவர் 2020 மே 24ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் […]

Continue Reading

திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா? உண்மை அறிவோம்!

‘’திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானது,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அதில் கிடைத்த தகவல்களை கீழே இணைத்துள்ளோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது போல உண்மையில், திருச்சி விமான நிலையம் தனியாருக்குச் சொந்தமானதா என்ற சந்தேகத்தில் தகவல் தேட தொடங்கினோம்.  இதன்படி, […]

Continue Reading

கரையை கடந்த ஆம்பன் புயல் என்று கூறி பகிரப்படும் பழைய வீடியோ!

மேற்கு வங்க மாநிலம் திகாவில் பலத்த சூறைக்காற்றுடன் கரையைக் கடந்த ஆம்பன் புயல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஒன் இந்தியா தமிழின் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், பெட்டிக்கடை போல தென்படும் ஒரு சிறிய கட்டிடம் புயல் காற்றில் நொருங்கி விழுகிறது. மே 20, 2020 அன்று இந்த வீடியோ […]

Continue Reading

மோடிக்கு வணக்கம் சொன்ன மம்தா பானர்ஜி- முழு உண்மை இதோ!

‘’மோடியை மதிக்காத மம்தா பானர்ஜி, எவ்ளோ கெஞ்சியும் வணக்கம் வைக்கல,’’ என்ற தலைப்பில் வித விதமாக பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவுகளின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதேபோன்ற தகவலை மேலும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இதுதொடர்பான வீடியோ கூட பகிர்வதைக் காண முடிகிறது.  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆம்பன் புயல் கோர தாண்டவமாடியது. இதனால், அங்கு […]

Continue Reading

சாலையில் வரிசையாக சரிந்து கிடக்கும் லாரிகள்; ஆம்பன் புயல் காரணமா?

120 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு வங்கத்தை தாக்கிய ஆம்பன் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 1.16 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரிகள் சரிந்து கிடக்கின்றன. வீடியோவில், லாரி இயக்கப்படும் சப்தம் மட்டுமே கேட்கிறது. இது எங்கே […]

Continue Reading

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளித்த சீக்கியர்கள்: புகைப்படம் உண்மையா?

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சீக்கியர்கள் மருத்துவ சிகிச்சை அளித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை ஓரமாக ஏழை மக்களுக்கு சீக்கியர்கள் சிகிச்சை அளிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “போற்றுதலுக்குரிய புகைப்படம். ஆயிரக்கணக்கான தூரங்கள் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சீக்கியர்கள் செய்யும் அவசிய சேவை” என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து […]

Continue Reading

ராகுல் காந்தி சந்தித்தது புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என்று பகிரப்படும் வதந்தி!

வெளிமாநில தொழிலாளர்களை ராகுல் காந்தி சந்தித்ததாக வெளியான படத்தில் உள்ளவர் உண்மையில் வெளிமாநில தொழிலாளர் இல்லை… ஷூட்டிங் முடிந்து அவர் காரில் புறப்பட்ட போது எடுத்த படம் என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராகுல் காந்தி புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்த புகைப்படமும் அவர் சந்தித்த தொழிலாளர்கள் காரில் புறப்பட்டு சென்ற படமும் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வெளிமாநில தொழிலாளர் […]

Continue Reading

குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததால் தலித் பெண் தாக்கப்பட்டாரா?- ஃபேஸ்புக் வதந்தி

இந்தியாவில் குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் பெண் தாக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தலையில் மிகப்பெரிய வெட்டுக் காயத்துடன், முகம் முழுக்க ரத்தம் வடிந்தபடி உள்ள பெண்ணின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இந்தியா, இந்து மதத்தால் அழிந்துவிடும். குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் பெண் தாக்கப்பட்டுள்ளார். இடம் – முபாரக்பூர்” என்று குறிப்பிட்டு ஒரு […]

Continue Reading

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட நபர்களை கண்டுகொள்ளாத உத்தவ் தாக்கரே!- உண்மை என்ன?

மகாராஷ்டிராவில் வடாலா ரயில் நிலையத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பப்பட்டதாகவும் இதை மகாராஷ்டிராவின் சிவசேனா முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டுகொள்ளவில்லை என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ரயில் நிலையத்தில் அரசியல் தலைவர் போல உள்ள ஒருவர் தன்னுடைய குழுவினருடன் நடந்து செல்கிறார். ரயில் ஏற நின்றிருந்த சிலர் ஜிந்தாபாத் என்று குரல் […]

Continue Reading

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா?

உத்தரப்பிரதேச தொழிலாளர்களுக்காக பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பஸ்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது ரயில் அல்ல! புலம்பெயர்ந்த உ.பி தொழிலாளிகளுக்காக இளம் இந்திரா பிரியங்கா காந்தி அவர்கள் அனுப்பிய பேருந்துகள்! ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, பலரும் ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் கர்நாடக பஸ் கண்டக்டர் வெற்றி என பரவும் வதந்தி

கர்நாடகாவில் அரசு பஸ் கண்டக்டர் ஒருவர் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடத்துனர் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “பெங்களூரு அரசு பேருந்தில் கண்டக்டராக இருந்த மது என்பவர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிக்கான யுபிஎஸ்சி மெயின் தேர்வில் தேர்ச்சி. கண்டக்டராக இருந்தவர் கலெக்டராகும் தேர்வில் வெற்றி.. சாதாரண […]

Continue Reading

மோடி உருவ பொம்மையை எரிக்கும் வெளிநாட்டினர்!- ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

மோடியின் உருவ பொம்மையை வெளிநாட்டினர் எரிப்பதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Facebook Link 2 Archived link 1 Archived link 2 மோடியின் உருவபொம்மை எரிக்கப்படும் வீடியோ ஒன்றை Iŋterŋatiioŋal Ƿwįƞçǯzx என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2020 மே 15ம் தேதி ஷேர் செய்திருந்தார். இதன் அசல் பதிவு, Alawdeen Shaikalawdeen என்பவரால் 2019ம் ஆண்டு […]

Continue Reading

இனி கைலாஷ் யாத்திரை செல்ல சீனாவின் அனுமதி தேவையில்லை?- ஃபேஸ்புக்கில் பரவும் உளறல்

இனி கைலாஷ் யாத்திரை செல்ல சீனாவின் அனுமதி தேவையில்லை என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கைலாஷ் மானசரோவர் புகைப்படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இனி கைலாஷ் யாத்திரை செல்ல சீன அனுமதி தேவையில்லை… டெல்லியில் இருந்து கைலாஷ் மானஸ்ரோவர் இனி 750 கிலோமீட்டர் மட்டுமே. இந்துக்களின் கனவுத்திட்டத்தை நனவாக்கியது இந்திய இராணுவம். ஹெலிகாப்டரில் பாட்டன் டேங்கிகளையும், பீரங்கிகளையும் […]

Continue Reading

கைக்குழந்தை உடன் ரயில் பெட்டிகள் இடையே பயணிக்கும் பெண்– வீடியோ உண்மையா?

‘’மோடியின் செயல்பாடுகளால் ரயில் பெட்டிகள் இணைப்பு கம்பிகள் மீது கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் அமர்ந்து செல்கிறார்,’’ என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ரயில் பெட்டிகள் இணைப்புப் பகுதி மீது கைக்குழந்தையுடன் அமர்ந்து பயணிக்கும் பெண்மணியின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவின் செயல்பாடுகள் உலகத்தையே திரும்பப் பார்க்க வைத்துள்ளது. மோடியின் செயல்பாடுகளை உலகமே பாராட்டுகிறது […]

Continue Reading

கொரோனா ஊரடங்கு; சாலையில் நடந்து சென்றதால் காயமடைந்தவரா இந்த பெண்?

ஊரடங்கு காரணமாக சாலையில் நடந்து சென்றதால் பாதங்கள் கிழிந்ததாக ஒரு மூதாட்டியின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கிழிந்த தன்னுடைய பாதங்களைக் காட்டும் மூதாட்டியின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஆட்சியாளர்களே கொஞ்சமாவது இரக்கம் வரவில்லையா…. நடந்து நடந்து கால்கள் பிய்ந்தது தான் மிச்சம். . வீடு வரவில்லை…” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Abdul Rahman என்பவர் மே 14ம் தேதி பகிர்ந்துள்ளார். […]

Continue Reading

கொரோனா ஊரடங்கு; இந்த வயதான நபர் நடந்தே சொந்த ஊர் செல்கிறாரா?

‘’கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த போக்குவரத்து வசதியும் இன்றி சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் நபர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி உண்மைத்தன்மை பற்றி பரிசோதிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்பேரில் தகவல் தேட தொடங்கினோம்.  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:வயதான முதியவர் தனது குடும்பத்தினருடன் கண்ணீர் மல்க […]

Continue Reading

மும்பையில் இருந்து மேற்கு வங்கம் சென்ற தொழிலாளர்கள் ரயில் வீடியோ உண்மையா?

மும்பையிலிருந்து மேற்கு வங்கம் சென்ற ரயில் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ரயில் இன்ஜின் முழுக்க பயணிகள் தொங்கியபடி செல்லும் ரயில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். 2.15 நிமிடம் இந்த வீடியோ செல்கிறது. வீடியோவில், “மும்பையில் இருந்து மேற்கு வங்கம் சென்ற ரயில், 10-5-2020” என குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் டிஜிட்டல் […]

Continue Reading