கீழே தோண்டியதால் அது கீழடி என்று ராஜேந்திர பாலாஜி சொன்னாரா?

‘’கீழே தோண்டியதால் அது கீழடி,’’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்னதாக, ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராஜேந்திர பாலாஜி கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி ‘’கீழே தோண்டினால் அது கீழடி, மேலே தோண்டியிருந்தால் அது மேலடி,’’ என விமர்சித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சையாகப் […]

Continue Reading

பெண் பாதுகாப்பில் முதல் இடம் பிடித்த திருநெல்வேலி: உண்மை அறிவோம்!

‘’பெண் பாதுகாப்பில் திருநெல்வேலி நகரம் முதலிடம் பிடித்துள்ளது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டிருந்த ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  செப்டம்பர் 24, 2019 அன்று இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், நியூஸ் 7 பெயரில், நியூஸ் கார்டு ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த நியூஸ் கார்டில், ‘’ஆசியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழ தகுதியான 20 நகரங்களின் பட்டியலில் ஒன்றுமே இடம்பெறாத நிலையில் […]

Continue Reading

காஷ்மீர் வன்முறை என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

காஷ்மீரில் நிகழும் வன்முறைகளின் தொகுப்பு போல சில புகைப்படங்களை ஒன்று சேர்த்து கொலாஜ் வடிவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இவற்றின் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  எங்கும் ரத்த வெள்ளமாகக் காணப்படும் புகைப்படம், சாலையில் கொட்டிக்கிடக்கும் ரத்தத்தைத் துடைக்க சணல் பையைக் கொண்டு வரும் காவலர், தாக்குதலால் முகத்தில் காயம் பட்ட சிறுவன், அழும் தாயைப் பார்க்கும் சிறுவன் என நான்கு படங்களை ஒன்று சேர்த்து ஒரே படமாக […]

Continue Reading

அர்ச்சகர்களை வைத்து பெரியார் ஃபவுண்டேஷன் பூமி பூஜையா?

அர்ச்சகர்களை வைத்து, யாகம் செய்து பெரியார் ஃபவுண்டேஷனுக்கு பூமி பூஜை நடத்தப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வெள்ளை வேட்டி மற்றும் கருப்பு நிற சட்டை அணிந்த பலர் யாக சாலையில் அமர்ந்துள்ளனர்.  ஒருவர் மட்டும் காவி வேட்டி அணிந்துள்ளார். சில பெண்களும் கருப்பு புடவையில் உள்ளனர். படம் தெளிவின்றி உள்ளது. இதனால், படத்தில் உள்ளவர்கள் யார் […]

Continue Reading

குதிரையில் அமர்ந்திருக்கும் வீரர் சிலைகள் பற்றி கூறப்படும் தகவல்கள் உண்மையா?

‘’குதிரையில் அமர்ந்திருக்கும் வீரர்களின் சிலை பின்னணியில் பல அரிய தகவல்கள் உள்ளன,’’ என்று ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Vikatan EMagazine இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பள்ளி மாணவர் ஒருவரது புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, குதிரை வீரர்கள் சிலையில், குதிரையில் கால்கள், இருக்கும் நிலையை பொறுத்து, அதில் அமர்ந்திருப்பவர் எப்படி இறந்தார் […]

Continue Reading

வி.சி.க-வை தடை செய்ய தமிழக அரசு பரிந்துரை?- பரபரப்பு ஃபேஸ்புக் பதிவு!

பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், தேதி, நேரம் எதுவும் இல்லை. அதில், “தொடர்ந்து பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் […]

Continue Reading

இந்தியா என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு டிக்சனரியில் விளக்கம் கூறப்பட்டுள்ளதா?

‘’இந்தியா என்பதன் அர்த்தம் பற்றி ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரியில் விளக்கம் கூறப்பட்டுள்ளது,’’ எனக் கூறி, ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Ponni Ravi என்பவர் ஆகஸ்ட் 24, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில் , ‘’அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் பெயர் ஆங்கிலத்திலும் மாறாமல் உள்ளது. ஆனால், இந்தியாவின் உண்மையான பெயர் பாரதம் ஆகும். […]

Continue Reading

அம்பானிக்காக 50க்கும் மேற்பட்ட கோவில்களை மோடி இடித்ததாக வதந்தி!

மோடி அரசு குஜராத்தில் 50க்கும் மேற்பட்ட இந்து கோவில்களை இடித்துத் தள்ளி, அந்த இடத்தை அம்பானி பெயருக்கு மாற்றிக்கொடுத்துள்ளதாக ஒரு வீடியோவுடன் கூடிய தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 Alawdeen Shaikalawdeen என்ற ஃபேஸ்புக் ஐடி-யில் இருந்து 2019 செப்டம்பர் 23ம் தேதி ஓர் வீடியோ பகிரப்பட்டுள்ளது. 1.11 நிமிடங்கள் மட்டும் அந்த வீடியோ […]

Continue Reading

யோகி ஆதித்யநாத் கோமியம் குடிக்கும் புகைப்படம் உண்மையா?

‘’மாட்டு சிறுநீரை குடிக்கும் மனிதன், நிர்வாணமாக இருக்கும் மனிதனை வணங்கும் மக்கள்,’’ என்ற தலைப்பில் வைரலாகப் பகிரப்பட்டு வரும் வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link A Stanley என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை கடந்த செப்டம்பர் 19, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், நிர்வாணமாக நிற்கும் ஒருவரை பொதுமக்கள் வணங்குவது போன்றும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோமியத்தை […]

Continue Reading

விஜய் ரசிகர்களை அடிக்கச் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்? – ஃபேஸ்புக் வதந்தி!

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தான் விஜய் ரசிகர்களை அடிக்க உத்தரவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் படம் உள்ளது. அதன் அருகில், “நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் தான் வெளியில் […]

Continue Reading

வள்ளியூரில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதி அடைந்த சித்தர் உடல் கண்டுபிடிக்கப்பட்டதா?

‘’வள்ளியூர் கோவிலில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதி அடைந்த சித்தர் உடல் கண்டுபிடிப்பு,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Bala A Kumar என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்திருக்கிறார். இதில் கூறப்பட்டுள்ளதை உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படம் உண்மையான […]

Continue Reading

கீழடி மக்கள் வாஸ்து முறையை பின்பற்றியுள்ளனர்: அமர்நாத் ராமகிருஷ்ணன் பெயரில் பரவும் வதந்தி

‘’கீழடியில் வாழ்ந்த மக்கள் வாஸ்து சாஸ்திரம், மத வழிபாடுகொண்டவர்களாக இருந்துள்ளனர்,’’ என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசியதாக ஒரு தகவல் வைரலாக பரவி வருவதைக் காண நேரிட்டது. இதன் நம்பத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Kumaran R Geddin என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை கடந்த செப்டம்பர் 23ம் தேதி வெளியிட்டுள்ளார். இதில், கீழடி அகழ்வாராய்ச்சியின் கண்காணிப்பாளராக பதவி வகித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியதாகச் சில தகவல்களை குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, […]

Continue Reading

வங்கிகளில் ரூ.1000-க்கு மேல் பணம் எடுக்க முடியாது- குழப்பம் தந்த செய்தி தலைப்பு!

இனி இந்த வங்கிகளில் ரூ.1000க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்று குறிப்பிட்டு அறிவிக்கப்படாத பண மதிப்பு இழப்பு நடவடிக்கையா என்று கேள்வியை எழுப்பு ஒரு செய்தியை கலைஞர் செய்திகள் வெளியிட்டிருந்தது. அப்படி எந்த எந்த வங்கிகளில் இனி பணம் எடுக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்கள், அது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link  Archived Link 2 “இனி இந்த வங்கிகளில் ரூ.1000 க்கு […]

Continue Reading

சென்னை – சேலம் எட்டு வழிச் சாலையை வலியுறுத்திய திமுக எம்.பி செந்தில் குமார்? – பரபரப்பு ஃபேஸ்புக் பதிவு

“சேலம் வழியே எட்டு வழிச் சாலை அமைத்தே தீர வேண்டும்” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து தி.மு.க எம்.பி செந்தில்குமார் மனு அளித்ததாகவும் மு.க.ஸ்டாலின் நிலைப்பாட்டுக்கு எதிராக அவர் செயல்படுவது போலவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இரண்டு பிரேக்கிங் நியூஸ் கார்டுகளை ஒன்று சேர்த்துப் பதிவிட்டுள்ளனர். முதலில் உள்ள பிரேக்கிங் கார்டில், மத்திய அமைச்சர் நிதின் […]

Continue Reading

தமிழக ஆளுநரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்: உண்மை அறிவோம்!

‘’தமிழக ஆளுநரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link 1  Asianet Tamil Link  Archived Link 2 ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை, இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஏசியாநெட் தமிழ் இணையதள செய்தியை […]

Continue Reading

தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்கவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு: செல்லூர் ராஜூ பற்றி வதந்தி

‘’தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்கவே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது,’’ என்று செல்லூர் ராஜூ பேசியதாக, ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Bright Singh என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை செப்டம்பர் 23, 2019 அன்று வெளியிட்டுள்ளார். நியூஸ் 7 தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு போலவே இருப்பதால், இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து […]

Continue Reading

ராணுவ வீரர்கள் பலியாவது இயற்கை என்று கூறினாரா மு.க.ஸ்டாலின்?

ராணுவ வீரர்கள் பலியாவது இயற்கை. அதற்காக இஸ்லாமிய சகோதரர்களைத் தவறாக சித்தரிக்கக் கூடாது என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசியதாக, நியூஸ் 7 நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் 2019 பிப்ரவரி 15ம் தேதி வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நியூஸ்கார்டுடன், சினிமா திரைப்பட காட்சி புகைப்படம் ஒன்று இணைக்கப்பட்டு போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், […]

Continue Reading

திருவாரூரில் மீத்தேன் குழாய் வெடித்ததாக பரவும் புகைப்படம்!

திருவாரூரில் மீத்தேன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது என்று தீவிபத்து படங்கள் சில சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இவை திருவாரூரில் நடந்ததா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link “திருவாரூரில் மீத்தேன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. லைக் வேண்டாம், ஷேர் பண்ணி எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் நண்பர்களே” என்ற நிலைத்தகவலுடன் நான்கு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. முதல் படத்தில் பள்ளத்தில் குழாய் உள்ளது. அதைப் பலரும் பார்வையிடுகின்றனர். இரண்டாவது படத்தில், தீக் காயத்தால் பாதிக்கப்பட்ட […]

Continue Reading

“கீழடியில் கிடைத்த சிவலிங்கம்..?” – தொடரும் ஃபேஸ்புக் வதந்தி!

கீழடியில் ஊடகங்களின் கவனத்தை திசை திருப்பி, ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 880 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கிடைத்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வரலாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கீழடியில் எடுக்கப்பட்ட மண் பானை படம் உள்பட மூன்று படங்களை ஒன்று சேர்த்து கொலாஜ் செய்து புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “இன்று கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 880 வருட பழமையான சிவலிங்கம், அபிஷேக […]

Continue Reading

“ஜெயலலிதா காலில் விழுந்த நடிகர் விஜய்?” – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் படம்!

நடிகர் விஜய் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலில் விழும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலில் திரைப்பட நடிகர் விஜய் விழுவது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அருகில் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளார்.  வேறு ஒருவர் ஷேர் செய்த பதிவை அப்படியே ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அதன் மீது “விஜய் […]

Continue Reading

கீழடியில் இருந்து 3000 ஆண்டுகள் பழமையான இயேசு கிறிஸ்து சிலை கண்டுபிடிக்கப்பட்டதா?

‘’கீழடியில் இருந்து 3000 ஆண்டுகள் பழமையான இயேசு கிறிஸ்து சிலை கண்டுபிடிக்கப்பட்டது,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பக்கோடா பாய்ஸ் எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை செப்டம்பர் 22 அன்று வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:கீழடி ஆய்வின் 4ம் கட்ட […]

Continue Reading

வங்கிகளுக்கு 7 நாள் விடுமுறையா?

‘’வங்கிகளுக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்பட்டு வரும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link 1  PuthiyaThalaimurai  Archived Link 2 புதிய தலைமுறை இணையதளத்தில் வெளியிட்ட செய்தியின் லிங்கை, இந்த ஃபேஸ்புக் பதிவில் இணைத்து பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியை படித்து பார்த்தபோது, அதில், ‘’இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு 26, 27 தேதிகளில் வேலை நிறுத்தம் செய்வதால் […]

Continue Reading

தனது காதலனின் மேனேஜரையும் விட்டு வைக்காத நயன்தாரா: சர்ச்சை கிளப்பும் செய்தி

‘’விக்னேஷ் சிவனை மட்டுமா?- காதலனின் மேனேஜரையும் விட்டு வைக்காத நயன்தாரா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Asianet Tamil Link Archived Link 2 இது ஏசியாநெட் தமிழ் நியூஸ் இணையதளத்தில் வெளியான ஒரு செய்தியின் லிங்க் ஆகும். அந்த செய்தியின் தலைப்பில் ‘’விக்னேஷ் சிவனை மட்டுமா?.. காதலனின் மேனேஜரையும் விட்டு வைக்காத நயன்தாரா…!,’’ எனக் […]

Continue Reading

“தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேனர்?” – ஃபேஸ்புக்கில் வைரல் ஆகும் படம்!

தமிழகத்தில் பேனர் வைக்க தடை விதித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க-வினர் வழிநெடுக நன்றி கூறி பேனர் வைத்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அ.தி.மு.க பேனர் வழி நெடுக்க வைக்கப்பட்டுள்ளது. அதில், பேனர் வைக்க தடை விதித்த பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நன்றி, நன்றி, நன்றி என்று அ.தி.மு.க அமைச்சர்கள் பேனர் வைத்தது போல […]

Continue Reading

“கீழடியில் கிடைத்த விநாயகர் நாணயம்?” – ஃபேஸ்புக்கில் பரவும் புதிய தகவல்!

கீழடி அகழ்வாராய்ச்சியில் விநாயகர் உருவம் பதித்த நாணயம் கிடைத்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link விநாயகர் உருவம் பதிக்கப்பட்ட நாணயத்தின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கீழடி அகழ்வாராய்ச்சியில் விநாயகர் உருவம் பதித்த நாணயம் வடிவிலான ஓடு கண்டுபிடிப்பு” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, ஆகமம் ஜானகிராமன் என்பவர் 2019 செப்டம்பர் 22ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை […]

Continue Reading

எந்த தமிழனும் உண்மையான இந்தியன் கிடையாது: ராஜேந்திர பாலாஜி பெயரில் பரவும் வதந்தி

‘’இந்தியாவிற்குள் இருக்கும் எந்த தமிழனுமே உண்மையான இந்தியன் கிடையாது,’’ என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாக, ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Royapuram Khadhar Chennai‎facebook DMK என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாகக் கூறி ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்து, அதன் மேலே, […]

Continue Reading

இந்திய இரும்புத் திரைகளால் மறைக்கப்பட்டுள்ள காஷ்மீர்… வைரல் புகைப்படம் உண்மையா?

இந்திய இரும்புத் திரைகளால் மறைக்கப்பட்ட காஷ்மீர் என்று இரண்டு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 இரண்டு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. முதல் படத்தில், தாயும் மகளும் கதறி அழும் காட்சி உள்ளது. இரண்டாவது புகைப்படத்தைப் பார்க்கக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு முதுகு மற்றும் பின்புறத்தில் அடிவாங்கிய நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காட்சியின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. ஆனால் இந்த புகைப்படங்கள் […]

Continue Reading

க.அன்பழகன் 2 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம்; உண்மை அறிவோம்!

‘’க.அன்பழகன் 2 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும், ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Students Against Corruption 2.0 எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் ஒரு வயதான பெண் மற்றும் இளம் வயது பெண் ஆகியோருடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் உள்ளது. அந்த 2 பெண்களும், […]

Continue Reading

கீழடி எல்லாம் ஏமாற்று வேலை என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாகப் பரவும் தகவல்!

கீழடி எல்லாம் ஏமாற்று வேலை, தமிழர்களுக்கு என்று தனி அடையாளம் இருந்தது கிடையது என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி தொலைக்காட்சி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், பொன். ராதாகிருஷ்ணன் புகைப்படம் உள்ளது. அதன் அருகில், கீழடி எல்லாம் ஏமாற்று வேலை. தமிழர்களுக்கு என்று தனித்த அடையாளம் இருந்தது […]

Continue Reading

நீ என்ன பத்தினியா என்று கஸ்தூரியை பார்த்து லதா கேட்டாரா?

‘’நீ என்ன பத்தினியா?- பிரபு, சத்யராஜ் உன்ன தடவியது மறந்துபோச்சா கஸ்தூரி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1  Cine Café Link Archived Link 2 Day one cooking tips தினம் ஒரு சமையல் எனும் ஃபேஸ்புக் ஐடி, செப்டம்பர் 14, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், […]

Continue Reading

தமிழை ஒழிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சொன்னதா?

தமிழை ஒழித்திடு, சமஸ்கிருதம், இந்தியை புகுத்திடு என்று இந்து முன்னணி பேனர் பிடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பல ஆண்டுகளாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்யும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “ஒழித்திடு ஒழித்திடு தமிழை ஒழித்திடு… புகுத்திடு புகுத்திடு இந்தி சமஸ்கிருதம் புகுத்திடு – இந்து முன்னணி” என்று உள்ளது. அதற்கு மேல், “தமிழர் எல்லாம் இந்துனு சொன்னவங்க […]

Continue Reading

கேரளாவில் ஐயப்பனை இழிவுபடுத்திய எஸ்எஃப்ஐ நபர்களை போலீசார் அடித்தார்களா?

‘’கேரளாவில் ஐயப்பனை இழிவுபடுத்திய எஸ்எஃப்ஐ நபர்களை போலீசார் அடித்தார்கள்,’’ என்ற தலைப்பில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link VS. Senthil kumar என்பவர் இந்த வீடியோ பதிவை பகிர்ந்துள்ளார். இந்த பதிவின் மேலே, ‘’ஓம் சுவாமி சரணம் ஐயப்பா..! சுவாமி ஐயப்பனை இழிவுபடுத்தி ஓவியம் வரைந்த கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பான SFI சேர்ந்தவர்களுக்கு சிறப்பான கவனிப்பு,’’ என […]

Continue Reading

ஜாகீர் நாயக் மலேசிய குடியுரிமை பெற்றவரா?

‘’ஜாகீர் நாயக் மலேசியா குடியுரிமை பெற்றுவிட்டார்,’’ என ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Akmal Nazeer Deen என்பவர் இந்த பதிவை கடந்த செப்டம்பர் 15, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், ஜாகீர் நாயக் மலேசியு குடியுரிமை பெற்றுவிட்டதாகக் கூறியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்தியாவில் பிறந்த […]

Continue Reading

போட்டோஷாப்பில் ஹெல்மெட் போட்டுவிட்டு… இதெல்லாம் தேவையா?

சாலையில் உள்ள பள்ளத்தில் ஒருவர் விழுந்தது போலவும் அவருக்கு உதவி செய்ய வந்த காவலரைப் பார்த்து ஹெல்மெண்ட் மட்டும் போட சொல்லுங்க ரோடு ஒழுங்கா போட்டுடாதீங்க, என்று அவர் கூறுவது போலவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரவுகிறது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஷேர் செய்த அந்த படம் உண்மையானதா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து விழுந்தது போல படம் […]

Continue Reading

ப.சிதம்பரம் அச்சடித்த டபுள் நம்பர் நோட்டுக்கள்! – பகீர் ஃபேஸ்புக் பதிவு

ப.சிதம்பரத்தால் அச்சடிக்கப்பட்ட டபுள் நம்பர் நோட்டுக்கள் மட்டும் சுமார்  லட்சம் கோடி என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதன் கீழ், “சிதம்பரத்தால் அச்சடிக்கப்பட்ட டபுள் நம்பர் நோட்டுக்கள் மட்டும் சுமார் 6 லட்சம் கோடி – […]

Continue Reading

வைகோ, திருமாவளவன் எம்பி பதவிக்கு ஆபத்தா?- உண்மை அறிவோம்!

‘’வைகோ, திருமாவளவன் எம்பி பதவிக்கு ஆபத்து,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதில் கிடைத்த விவரங்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 News Link Archived Link 2 ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியை இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் வைரலாக பகிர தொடங்கியுள்ளனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட செய்தியின் தலைப்பில், […]

Continue Reading

பாலியல் வன்முறை, துன்புறுத்தல் காரணமாக கோபி மீது அதிரடி நடவடிக்கையா?

‘’பாலியல் வன்முறை, துன்புறுத்தல் காரணமாக கோபி மீது அதிரடி நடவடிக்கை,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 News Link Sathiyam TV எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இது, சத்தியம் டிவி இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்க் ஆகும். அந்த செய்தியின் தலைப்பில், ‘’என்ன ஆச்சு இந்த கோபிக்கு..! […]

Continue Reading

நாசாவிற்கு பதில் சிக்னல் அளித்த விக்ரம் லேண்டர்: முன்னுக்குப் பின் முரணான செய்தி

‘’நாசாவிற்கு பதில் சிக்னல் அளித்த விக்ரம் லேண்டர்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: FB Link 1 Archived Link 1 FB Link 2 Archived Link 2 இது உண்மையில் Tamil Gizbot இணையதளத்தில் வந்த செய்தியின் லிங்க் ஆகும். அதனை, ஒன் இந்தியா மற்றும் தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியின் முழு […]

Continue Reading

“அமெரிக்காவில் இரண்டாவது மொழியாக தமிழ்” – ஃபேஸ்புக் வதந்தி!

அமெரிக்காவில் அந்நாட்டு அரசு தமிழை இரண்டாவது மொழியாக பாடசாலைகளில் கற்பிக்க அனுமதி வழங்கியுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வெளிநாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தமிழ்  எழுத்துக்கள் அச்சிடப்பட்ட துணிப்பையை மாட்டியபடி நிற்கிறார். நிலைத் தகவலில், “அமெரிக்காவில் அந்நாட்டு அரசு தமிழை இரண்டாம் மொழியாக பாடசாலைகளில் கற்பிக்க அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்கா அரசுக்கு நன்றிகள். வாழ்க தமிழ், வளர்க […]

Continue Reading

குவைத்தில் சிக்கிய தமிழ் பெண்- மீட்கப்பட்ட பிறகும் பரவும் வீடியோ!

குவைத்தில் ஊதியம், உணவின்றி தவிப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கண்ணீர்விட்டபடி பேசும் வீடியோ  சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Archived Link 2 Facebook Link 2 Archived Link 3 அழுதபடி பேசும் செவிலியர் போல ஆடை அணிந்த பெண் ஒருவரின் வீடியோ ஒன்றை அருண் குமார் என்பவர் 2019 செப்டம்பர் 15ம் தேதி ஷேர் செய்திருந்தார். […]

Continue Reading

சிங்கப்பூரின் புதிய 10 லட்ச டாலர் நோட்டு; ஃபேஸ்புக் படம் உண்மையா?

சிங்கப்பூர் நாட்டின் புதிய 10 லட்ச டாலர் நோட்டு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிங்கப்பூரின் ஒரு மில்லியன் டாலர் நோட்டு புகைப்படம் என்று ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதன் கீழ், “சிங்கப்பூரின் புதிய டாலர் வெளியீடு. இந்திய ரூபாய் மதிப்பில் 4.7 கோடி கோடி ரூபாய் ஒரே நோட்டில்” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது. இன்று ஒரு தகவல் என்று […]

Continue Reading

எச்.ராஜா அமைச்சர் பதவியில் உள்ளாரா?

‘’எச்.ராஜா அமைச்சர் பதவியில் உள்ளார்,’’ எனும் தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Anbu Gk என்பவர் இந்த பதிவை கடந்த ஆகஸ்ட் 30, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், எச்.ராஜா மற்றும் மோடி புகைப்படத்தை இணைத்து பகிர்ந்துள்ளார். அதன் மேலே, ‘’ஒரு உண்மையான இந்து முஸ்லீம் உடன் ஒன்றாகச் சாப்பிட மாட்டான்- எச்.ராஜா, பாஜக […]

Continue Reading

சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவிய கேவா ஸ்டோன் கிரஷ் டானிக்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

‘’சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவிய கேவா ஸ்டோன் கிரஷ் டானிக்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இது உண்மையா என சந்தேகத்தில் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்த Page ஐ இங்க லைக் பண்ணுங்க ப்ளிஸ்.  என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஏப்ரல் 9, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், Keva Stone Crush Tonic பாட்டிலின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் அருகே […]

Continue Reading

இரக்கத்தை உண்டாக்கிய ஃபேஸ்புக் பதிவு; ஷேர் செய்தால் ரூ.8 கிடைக்குமா?

சிறுமி ஒருவரின் அறுவைசிகிச்சைக்கு ரூ.8 லட்சம் தேவைப்படுவதாகவும், இந்த பதிவை ஷேர் செய்தால் ரூ.8 கிடைக்கும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தரையில் படுத்திருக்கும் சிறுமி, அருகில் பெற்றோர் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அவர்கள் யார், எந்த ஊர், சிறுமிக்கு என்ன பிரச்னை என்று எந்த ஒரு தகவலையும் அளிக்கவில்லை.  நிலைத் தகவலில், “8 லட்சம் வேண்டும், ஆப்ரேஷன் […]

Continue Reading

தெலுங்கானாவை தெறிக்கவிட்ட தமிழிசை! – பரபரப்பை ஏற்படுத்திய ஏஷியாநெட் நியூஸ்

தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசையின் தெறிக்கவிடும் செயல்பாடுகள் காரணமாக தெலங்கானா மாநிலத்துக்கே நுரைதள்ளியதாக ஏஷியாநெட் தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 வெற்றிகரமான தோல்வி… முதலமைச்சரான எதிர்க்கட்சி தலைவர், தெறிக்கவிடும் தமிழிசை என்று ஏஷியாநெட் தமிழ் வெளியிட்ட செய்தியை 2019 செப்டம்பர் 16ம் தேதி அன்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனை […]

Continue Reading

ஆந்திர போலீசா? தெலுங்கானா போலீசா?- குழப்பத்தில் தி இந்து தமிழ்!

‘’ஆந்திர போலீசார், பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்காமல் ஹெல்மெட் மற்றும் லைசென்ஸ், இன்சூரன்ஸ் ஆவணங்களை எடுத்து தருகிறார்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 News Link Archived Link 2 Tamil The Hindu எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை செப்டம்பர் 14, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், இந்து தமிழ் இணையதளத்தில் வெளியான […]

Continue Reading

10-ம் வகுப்பில் ஸ்டாலின் தோல்வி: ஆர்டிஐ பெயரில் பரவும் தகவல் உண்மையா?

10-ம் வகுப்பில் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பா.ஜ.க-வினர் பதில் பெற்றுள்ளதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாலிமர் செய்தி தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு போல உள்ளது. அதில், “தி.மு.க தலைவர் ஸ்டாலின் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பா.ஜ.க-வினர் கேட்ட […]

Continue Reading

இதோ லோஸ்லியாவின் புகைப்படம்: குழப்பும் ஃபேஸ்புக் பதிவு…

‘’இதோ லோஸ்லியாவின் புகைப்படம்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link உன் நினைவுகளோடு நான் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், சிவகுமார், ரோஜா, மோனிகாவின் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், லோஸ்லியா இதில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:சம்பந்தப்பட்ட பதிவில் […]

Continue Reading

பேனர் வைக்க மாட்டோம் என்று கூறி திமுகவினர் பேனர் வைத்தார்களா?

‘’பேனர் வைக்க வேண்டாம் என கூறிய தளபதிக்கு வாழ்த்துகள்,’’ என்று கூறி திமுகவினர் பேனர் வைத்ததாகக் கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Phone Wire Pinchi Oru Vaaram Aachu என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மு.க.ஸ்டாலின் பேனர் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, இப்படிக்கு தளபதியின் விழுதுகள், என எழுதியுள்ளனர். பார்ப்பதற்கு நகைச்சுவையாக […]

Continue Reading

“சீமானை கண்டித்த சுந்தர் பிச்சை” – ஃபேஸ்புக் பதிவு உண்மை அறிவோம்!

சீமான் இந்து மதத்தை விமர்சிப்பதை கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கண்டித்துள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கருத்து கூறியதாக கோபன்ஹேகன் பல்கலைக் கழக ப்ரஸ் தகவல் வெளியிட்டதாக ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “திரு.சீமான் அவர்கள் தமிழர் என்றால் இந்து மதத்தை மட்டும் விமர்சிப்பது ஏன்? உருது […]

Continue Reading