FACT CHECK: குடிசைக் கொளுத்தி வெடியை தடை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறினாரா?

புதிதாக விற்பனைக்கு வந்துள்ள குடிசை கொளுத்தி வெடியைத் தடை செய்ய வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “குடிசை கொளுத்தி வெடி விவகாரம் – ராமதாஸ் கண்டனம். புதிதாக விற்பனைக்கு வந்துள்ள குடிசை கொழுத்தி வெடி […]

Continue Reading

FactCheck: ஒரு டிக்கெட் விலை ரூ.2925?- அண்ணாத்த படம் பற்றி பகிரப்படும் வதந்தி…

‘’அண்ணாத்த திரைப்படத்தின் ஒரு டிக்கெட் விலை ரூ.2925,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம் ‘அண்ணாத்த’. இதன் ஒரு டிக்கெட் விலை ரூ.2925 எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். Facebook Claim Link I Archived Link  உண்மை அறிவோம்:இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் […]

Continue Reading

FactCheck: நரிக்குறவர்களுக்கு அன்னதானம்; சேகர் பாபுவை எச்.ராஜா கண்டித்தாரா?

‘’சேகர் பாபுவின் செயல் கண்டிக்கத்தக்கது,’’ என்று எச்.ராஜா பேசியதாகக் கூறி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதே தகவலை ஃபேஸ்புக்கிலும் பலர் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:சென்னையை அடுத்த மாமல்லபுரம் […]

Continue Reading

FACT CHECK: கிறிஸ்தவர்கள் தீபாவளி போனஸ் வாங்கக் கூடாது என்று மோகன் சி லாசரஸ் கூறினாரா?

கிறிஸ்தவர்கள் தீபாவளி போனஸை கையால் கூடத் தொடக் கூடாது என்று கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் கூறியதாக ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. அதில், “தீபாவளி போனஸை “கிறித்துவர்கள்” கையால் கூடத் தொடக் கூடாது..! Bro. Mohan C. […]

Continue Reading

FACT CHECK: பெட்ரோல் விலை உயர்வுக்கு மட்டும் போராடுவது ஏன் என்று அண்ணாமலை கேட்டாரா?

அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு போராடாதவர்கள், ஆடம்பர பொருளான பெட்ரோல் விலை உயர்வுக்கு மட்டும் போராடுவது ஏன் என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேட்டதாக பரவும் வதந்தி. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க வெளியிட்டது போன்ற போட்டோ கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விலையேறிய போது போராடாதவர்கள் ஆடம்பர பொருளான பெட்ரோல் விலையேறினால் மட்டும் போராட வருவது […]

Continue Reading

Rapid FactCheck: ஆர்எஸ்எஸ் நபர் சௌமியா தேசாய் இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

‘’ஆர்எஸ்எஸ் ஆர்வலர் சௌமியா தேசாய் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக்கில் இதனை பகிர்வதை கண்டோம். Facebook Claim Link I Archived Link ‘’குஜராத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர் சௌமியா தேசாய், […]

Continue Reading

FACT CHECK: வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட இஸ்கான் துறவி என்று பகிரப்படும் படம் உண்மையா?

வங்கதேச இஸ்கான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட துறவி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எரிந்த நிலையில் இருக்கும் சிலை ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பங்களாதேசில் எரிக்கப்பட்ட இஸ்கான் துறவி…. அந்த மரணவலியை பொறுத்துக்கொண்டு இறைவனை நினைத்து அமர்ந்திருக்கிறார்…. எந்தளவுக்கு என்றால்.. எத்தனை தாக்குதல் தந்தாலும்… தாங்கள் வணங்கும் […]

Continue Reading

FACT CHECK: பேருந்தில் பயணிகளை சந்தித்த மு.க.ஸ்டாலின்?- வைரலாகும் பழைய புகைப்படத்தால் குழப்பம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகுந்த முன்னேற்பாடு செய்துகொண்டு, பஸ் பயணிகளை சந்தித்த படம், என்று சமூக ஊடகங்களில் சிலர் பழைய படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive மு.க.ஸ்டாலின் பஸ்ஸில் பயணிகளுடன் பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆமா..திடீர்னு(?) பஸ்ஸூக்குள்ளே தோரணம் எப்படி வந்துச்சு? எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?.. சென்னையன்ஸ அவ்வளவு பலகீனமாவா இருக்கீங்க..ஏமாறுமளவு?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

FactCheck: ஹெல்மெட் போடாத பொதுமக்களை போலீசார் கேள்வி கேட்கக்கூடாது என்று முதல்வர் அறிவித்தாரா?

‘’தலைக்கவசம் அணிவது, அவர்களின் தனிப்பட்ட விருப்பம், ஹெல்மெட் அணியாதவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கக்கூடாது,’’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link […]

Continue Reading

FACT CHECK: இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் தமிழர்கள் இல்லை என்று சீமான் கூறியதாகப் பரவும் வதந்தி!

இஸ்லாமியனும், கிறிஸ்தவனும் தமிழனே இல்லை என்று சீமான் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இணையதள ஊடகம் ஒன்று வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மதம் மாறுங்கள். இஸ்லாமியனும், கிறிஸ்தவனும் தமிழனே இல்லையே… ஒன்று அரேபிய மதம், இன்னொன்று ஐரோப்பிய மதம். தமிழனின் சமயம் சைவம், மாலியம், சிவ சமயம். திரும்பி வா! […]

Continue Reading

FactCheck: பாஜக.,வினரை மிரட்டி லஞ்சம் வாங்கினாரா அண்ணாமலை?- பாலிமர் நியூஸ் பெயரில் பரவும் வதந்தி…

‘’பாஜக.,வினரை மிரட்டி பல கோடி ரூபாய் வாங்கிய அண்ணாமலை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: பாலிமர் நியூஸ் லோகோவுடன் உள்ள இந்த செய்தியை, வாசகர் ஒருவர் +919049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். Twitter Claim Link I Archived Link இதன்பேரில் நாமும் ஆய்வு செய்ய தொடங்கினோம். உண்மை […]

Continue Reading

FACT CHECK: ஒரு ஜெபம் வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று பால் தினகரன் விளம்பரம் செய்தாரா?

ஒரு ஜெபம் வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் விளம்பரம் செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வெளியிட்டது போன்ற ஆங்கிலத்தில் போஸ்டரை விமர்சித்து யாரோ ஃபேஸ்புக்கில் வெளியிட அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர்.  அந்த ஆங்கில விளம்பரத்தில், “சிறப்பு சலுகை, […]

Continue Reading

FactCheck: எரிபொருள் விலை உயர்வை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் செல்க என்று அண்ணாமலை கூறினாரா?

‘’எரிபொருள் விலை உயர்வை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள்,’’ என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: FB Claim Link I Archived Link இந்த செய்தியை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இதுபற்றி நாம் புதிய தலைமுறை ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் சரவணனை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, […]

Continue Reading

FactCheck: ஜக்கி வாசுதேவை கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்?- எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தால் சர்ச்சை…

‘’காடு எங்கடா ஜக்கி,’’ என்று கேள்வி கேட்ட வானதி சீனிவாசன் எனக் கூறி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் புகைப்படம் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் பலரும் இதனை உண்மை போல ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I […]

Continue Reading

FACT CHECK: வங்கதேசத்தில் இஃப்தார் விருந்து வழங்கிய இஸ்கான் துறவி படுகொலை செய்யப்பட்டாரா?

வங்கதேசத்தில் கடந்த ரம்ஜான் மாதத்தின் போது 30 நாட்களும் இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பின்போது உணவளித்த இஸ்கான் வைஷ்ணவ துறவியை இஸ்லாமியர்கள் படுகொலை செய்தார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive யாரோ வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவின் மொழி பெயர்ப்பை புகைப்படமாக எடுத்து பதிவிட்டுள்ளனர். அதில், இந்து துறவி ஒருவர் இஸ்லாமியர்களுக்கு உணவு வழங்கும் புகைப்படம் உள்ளது. […]

Continue Reading

FACT CHECK: பள்ளி பாடப் புத்தகத்தில் இயேசு கதையை சேர்த்தேன் என்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் லயோலா கல்லூரி இயக்குநர் கூறினாரா?

கிறிஸ்தவ, மதமாற்றக் கருத்துக்களை பள்ளி பாட புத்தகத்தில் ரகசியமாக சேர்த்தேன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் லயோலா கல்லூரி முதல்வர் கூறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாதிரியார்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. திடீரென்று ஒருவர் மைக் பிடித்து பேசும் காட்சிகள் வருகின்றன. அவர் ஆங்கிலத்தில் பேசுகிறார். […]

Continue Reading

FactCheck: ராமனா, ராவணனா, யார் உண்மையில் கடவுள்? வைரல் செய்தியால் சர்ச்சை…

‘’ராவணன் கடவுளா, ராமன் கடவுளா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வைரல் செய்தி ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ‘’யார் உண்மையில் கடவுள்? சீதையை மீட்க ராமன் கட்டிய பாலம் உண்மையானால், சீதையை கடத்த ராவணன் கட்டிய பாலம் எங்கே? ராமன் கடவுளா, ராவணன் கடவுளா,’’ எனும் அர்த்தத்தில் மேற்கண்ட நியூஸ்கார்டில் எழுதியுள்ளனர். இது பார்ப்பதற்கு, முன்னணி ஊடகம் வெளியிட்ட நியூஸ்கார்டு டெம்ப்ளேட் போலவே இருப்பதால், உண்மையான […]

Continue Reading

FactCheck: திருமாவளவனுக்கு பெண் பார்க்கும் வன்னியரசு என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

‘’திருமாவளவனுக்கு பெண் பார்க்கும் வன்னியரசு,’’ என்று கூறி தந்தி டிவி லோகோவுடன் பகிரப்படும் செய்தி ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி, உண்மை என்று கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் ஆய்வு செய்ய தொடங்கினோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இதுவரை திருமணம் […]

Continue Reading

FACT CHECK: தனித் தமிழ்த்தேசியம் கேட்டு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சீமான் அறிவித்தாரா?

தனித் தமிழ்த்தேசியம் கேட்டு, டெல்லியில் மிக விரைவில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீமான் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உண்ணாவிரதப் போராட்டம். தனித் தமிழ்தேசியம் கேட்டு, டெல்லியில் மிகவிரைவில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் […]

Continue Reading

FACT CHECK: திருப்பதியில் நடிகர் சிவக்குமார் உல்லாசமா?- விஷமத்தனமான வதந்தி!

திருப்பதியில் இளம் பெண்ணுடன் நடிகர் சிவகுமார் உல்லாசமாக இருந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இணைய ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளனர். அதில், “இளம் பெண்ணுடன் திருப்பதியில் உல்லாசம்… கைதாகிறாரா சிவகுமார்.? சென்னை விரைகிறது ஆந்திர போலீஸ்..!” என்று இருந்தது. மேலும் கூடுதலாக, “யோக்கியன் வேடம் கலைகிறது” என்று […]

Continue Reading

FACT CHECK: ‘திருட்டு ரயில் திமுக’ என்று பேனர் பிடித்த ஐபிஎல் ரசிகர்?- உண்மை என்ன?

துபாயில் நடந்த ஐ.பி.எல் இறுதி போட்டியின் போது ரசிகர் ஒருவர் மைதானத்தில் திருட்டு ரயில் திமுக என்று போஸ்டர் பிடித்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் புகைப்பட பதிவு ஒன்றை நம்முடைய சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770)  அனுப்பி, இந்த படம் உண்மையானதுதானா என்று கேள்வி எழுப்பியிருந்தார். விளையாட்டு மைதானத்தில் ரசிகர் ஒருவர் “திருட்டு இரயில் திமுக” என்ற போஸ்டரை பிடித்திருக்கும் புகைப்படத்துடன் […]

Continue Reading

FactCheck: காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்திய தமிழர்- பழைய செய்தியை தற்போது பகிர்வதால் குழப்பம்!

‘’காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்திய தமிழர்- கண்டுகொள்ளாத ஊடகங்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: ‘’காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை கடந்த 238 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர்களான சுப்புசுந்தரம் செட்டியார் தம்பதி நடத்தியுள்ளனர், இதனை ஊடகங்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை,’’ என்று இந்த புகைப்பட செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி, உண்மையா என்று […]

Continue Reading

FACT CHECK: இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே உணவு டெலிவரி என்று சொமேட்டோ அறிவித்ததா?

இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே உணவு டெலிவரி செய்வோம் என்று சொமேட்டோ அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டுடன் புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் இனி விற்பனை செய்வோம்” என Zomato நிறுவனம் அறிவிப்பு. […]

Continue Reading

FactCheck: மு.க.ஸ்டாலினுக்கு ஐநா சபை பாராட்டு எனக் கூறி பகிரப்படும் ஆதாரமற்ற செய்தி…

‘’மு.க.ஸ்டாலினுக்கு ஐநா சபை பாராட்டு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் யூடியுப் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  FB Claim Link I Archived Link உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், First Junction என்ற யூடியுப் சேனல் வெளியிட்ட வீடியோ ஒன்றின் லிங்கை ஷேர் செய்துள்ளனர். அந்த வீடியோவில், ஆதாரங்கள் அல்லது மேற்கோள் எதுவும் காட்டாமல், போகிற போக்கில் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி ஐநா […]

Continue Reading

FACT CHECK: மன்மோகன் சிங் கடந்த அக்டோபர் 16ம் தேதி காலமானார் என்று பரவும் வதந்தி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மன்மோகன் சிங் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இதய அஞ்சலி.. இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் காலமானார். உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி காலமானார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை பிரியாத வரம் வேண்டும் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

FACT CHECK: அதிமுக தோல்விக்குத் தகுதியற்ற தலைமைதான் காரணம் என்று சி.வி.சண்முகம் கூறினாரா?

அதிமுக தோல்விக்குத் தகுதியற்ற தலைமைதான் காரணம் என்று சி.வி.சண்முகம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஏபிபி நாடு வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக அஇஅதிமுக என்கிற பேரியக்கம் படுதோல்வி அடைந்திருப்பதற்கு தகுதியற்ற தலைமையே காரணம் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்” […]

Continue Reading

FactCheck: தேர்தல் பிரசாரத்தின்போது கலா மாஸ்டர், பாஜக அண்ணாமலை மசாலா பாடலுக்கு நடனம் ஆடினார்களா?

‘’தேர்தல் பிரசாரத்தின்போது கலா மாஸ்டரும், பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையும் மசாலா பாடலுக்கு நடனமாடினார்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நடனமாடும் நிகழ்வு, சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 முன்னிட்டு பதிவு செய்யப்பட்டதாகும். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பாகப் போட்டியிட்ட அண்ணாமலையை ஆதரித்து, சினிமா நடன இயக்குனர் கலா […]

Continue Reading

FACT CHECK: நாம் தமிழர் கட்சியை கலைக்க சீமான் முடிவு என நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதா?

நாம் தமிழர் கட்சியைக் கலைக்க சீமான் முடிவு செய்துள்ளார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நாம் தமிழர் கட்சி கலைப்பு? அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்வியை சந்திப்பதால் நாம் தமிழர் கட்சியை கலைக்க […]

Continue Reading

FACT CHECK: வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு சீல் வைக்க முடியுமா என்று அண்ணாமலை கேட்டாரா?

வாராக்கடனுக்குத் தீர்வு சீல் வைப்பதுதான் என்றால் குபேரனிடம் கடன்வாங்கிய வெங்கடேசப்பெருமாளின் ஆலயத்துக்கு சீல் வைக்க முடியுமா என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் கே.அண்ணாமலை புகைப்படத்துடன் பிபிசி தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வாராக்கடனுக்குத் தீர்வு சீல் வைப்பதுதான் என்றால் […]

Continue Reading

FACT CHECK: சீமான் அறிக்கைகள் என்று பரவும் விஷம போட்டோஷாப் படங்கள்!

சீமான் வெளியிட்ட அறிக்கைகள் என்று சமூக ஊடகங்களில் சில விஷமத்தனமான அறிக்கைகள் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீமான் கையெழுத்திட்ட நாம் தமிழர் கட்சியின் அறிக்கை ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “உத்தரவு. எனது அருமை தம்பி சந்தோஷ் நடராஜன் ஈபெல் கோபுரத்தின் முன் புகைப்படம் எடுக்க விரும்புகிறான். எனவே தம்பிக்கு பிரான்ஸ் நாட்டுக் குடியுரிமை வழங்க உத்தரவிடுகிறேன். புரட்சி வாழ்த்துகளுடன் சீமான், தலைமை […]

Continue Reading

FACT CHECK: முகமது நபியை தவறாக வரைந்த ஸ்வீடன் கார்ட்டூனிஸ்ட் கார் விபத்தா?

முகமது நபியை சர்ச்சைக்குரிய வகையில் கார்ட்டூனாக வரைந்த ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த லார்ஸ் வில்க்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive டிரக் ஒன்றில் கீழ் கார் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரியும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அல்லாஹ்வின் தண்டனை மிகவும் கொடூரமானது. ஸ்வீடன் மூதேவியின் லார்ஸ் வில்க்ஸ் மரணம் […]

Continue Reading

FACT CHECK: பஹ்ரைன் மன்னர் பாதுகாப்பு ரோபோவுடன் வந்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?

பஹ்ரைன் மன்னர் ரோபோ பாதுகாப்புடன் விமான நிலையம் வந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அரேபியர் போன்று ஆடை அணிந்த நபர் ஒருவர் நடக்க, அவருக்குப் பின்னால் இயந்திர மனிதன் (ரோபோ) நடந்து செல்கிறது. நிலைத் தகவலில், “பஹ்ரைன் நாட்டு மன்னர் தனது 360 கேமராக்கள் மற்றும் கைத்துப்பாக்கி இணைக்கப்பட்டட ரோபோவுடன் துபாய் விமான நிலையம் […]

Continue Reading

FACT CHECK: உலகின் முதல் ரயில் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

உலகின் முதல் ரயில் ஓட்டம் என்று ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பழைய காலத்து நீராவி ரயில் பயண வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உலகின் முதல் ரயில் ஓட தொடங்கியது, சுமார் 211 ஆண்டுகளுக்கு முன்பு 1809 டிசம்பர் 24 ல் வீடியோ பார்க்க வேண்டியது. பயணத்தின் போது சில சுவாரஸ்யமான நிகழ்வுகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

FACT CHECK: அருணாச்சல பிரதேசத்தில் தாக்கப்பட்ட சீன ராணுவ வீரர்கள் படமா?

அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த நேருக்கு நேர் மோதல் காட்சி என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீன ராணுவ வீரர்கள் தாக்கப்படுவது போன்று படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “நேற்று அருணாச்சல் பிரதேசத்தில் இந்தியா சீன நேருக்கு நேர் மோதல்..  பல சீனர்களின் மூக்கை உடைத்து அவர்களை இந்திய […]

Continue Reading

FactCheck: எச்.ராஜா தலைமறைவு என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘’எச்.ராஜா தலைமறைவு,’’ என்று கூறி புதிய தலைமுறை லோகோவுடன் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் ( ) எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்து சமய அறநிலையத் துறை […]

Continue Reading

FACT CHECK: நாம் தமிழர் கட்சியிலிருந்து சாட்டை துரைமுருகன் நீக்கப்பட்டதாகப் பரவும் போலியான அறிக்கை!

நாம் தமிழர் கட்சியில் இருந்து சாட்டை துரைமுருகன் அக்டோபர் 11, 2021 அன்று நீக்கப்பட்டார் என்று ஒரு அறிக்கை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நாம் தமிழர் கட்சி வெளியிட்டது போன்ற அறிவிப்பு பகிரப்பட்டுள்ளது. அதில், அ.துரைமுருகன் என்பவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் என்று இருந்தது. நிலைத் தகவலில், “மேடையிலேயே சாட்டை முருகனைக் கண்டிக்கவேண்டியது […]

Continue Reading

FactCheck: ஜெயலலிதா கையில் குற்றவாளி என எழுதப்பட்ட போஸ்டர்- உண்மை என்ன?

‘’ஜெயலலிதா கையில் குற்றவாளி என எழுதப்பட்ட போஸ்டர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும தகவல் தேடியபோது பலரும் இதனை உண்மை என நம்பி ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:கடந்த 2013ம் ஆண்டு காவிரி நடுவர் […]

Continue Reading

FACT CHECK: 1947ல் நேதாஜி புகைப்படத்துடன் ரூபாய் நோட்டு வெளியானதா?

1947ம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புகைப்படத்துடன் கூடிய ரூபாய் நோட்டு இந்தியாவில் புழக்கத்திலிருந்தது என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புகைப்படத்துடன் கூடிய ரூபாய் நோட்டு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “1947ம் ஆண்டு இந்திய ரூபாய் நோட்டு நேதாஜி படத்துடன். அதிகம் பகிருங்கள்” என்று இருந்தது. இந்த பதிவை Vishwa […]

Continue Reading

FACT CHECK: காங்கிரஸ் கட்சி சின்னத்தை அழித்தாரா பிரியங்கா காந்தி?

காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை பிரியங்கா காந்தி பெருக்கி அகற்றினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தரையில் வரையப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தைப் பெருக்கி சுத்தம் செய்வது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மதிப்பிற்குரிய பிரியங்கா காந்தி அவர்கள் அறையில் உள்ள காங்கிரஸ் கட்சியினை கூட்டி […]

Continue Reading

FACT CHECK: யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் தேநீர் கடை நடத்துகிறாரா?

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் தேநீர் கடை வைத்துள்ளார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்று தோற்றம் அளிக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உபி முதல்வரின் மூத்த சகோதரர் இன்னும் விளக்கமில்லாத தேநீர் கடையில் இருந்து குறைந்த வருமானத்தில் பிழைத்து வருகிறார். ❤️❤️❤️ ஆனால் […]

Continue Reading

FACT CHECK: 2024ல் கருணாநிதி பிரதமர் ஆவார்?- செந்தில் பெயரில் பரவும் போலியான ட்வீட்

அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய பார்ப்பனியமும் ஒன்றிணைந்து உலகை சீரழிக்க முயலும் முயற்சியை 2024ல் கருணாநிதி பிரதமர் ஆகி தவிடுபொடியாக்குவார் என்று செய்தியாளர் செந்தில்வேல் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்டது போன்ற ட்வீட் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “அறம் மீறி அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய பார்ப்பனியமும் ஒன்றிணைந்து உலகை சீரழிக்க முயலும் […]

Continue Reading

FACT CHECK: சீமான் பற்றி எச்.ராஜா கேட்டதில் தவறில்லை என்று அண்ணாமலை கூறினாரா?

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் பற்றி எச்.ராஜா கேட்டதில் தவறு இல்லை என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஹெச் ராஜா கேட்டதில் தவறில்லை. ஹெச் ராஜா அவர்கள் கேட்டதில் தவறில்லை ஆனால் இன்னும் சரியாக சீமானின் […]

Continue Reading

FactCheck: பாகிஸ்தானில் வாழும் 210 வயது பெண்மணி; ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

‘’பாகிஸ்தானில் வாழும் 210 வயது பெண்மணி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link ‘’ பாகிஸ்தானில் உள்ள அதிக வயதான தாய், சில நாட்களூக்கு முன் தனது 210 வயது பிறந்தநாளை கொண்டாடினார்,’’ என்று குறிப்பிட்டு, இந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் புகைப்படம் […]

Continue Reading

FactCheck: மோடியின் வருகையை எதிர்த்து அமெரிக்க மக்கள் போராட்டம் நடத்தினரா?

‘’மோடியின் வருகையை எதிர்த்து அமெரிக்க மக்கள் போராட்டம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனை பலரும் தற்போது நிகழ்ந்தது போல குறிப்பிட்டு, ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதைக் கண்டோம். உண்மை அறிவோம்:இந்திய பிரதமர் மோடி, அமெரிக்காவிற்கு சமீபத்தில் சுற்றுப் பயணமாகச் சென்றிருந்தார். இதன்போது நடைபெற்ற போராட்டம், சம்பவம் என்று கூறி சமூக வலைதளங்களில் நாள்தோறும் […]

Continue Reading

FactCheck: எச்.ராஜா தனது தந்தையை போன்றவர் என்று சீமான் கூறினாரா?

‘’எச்.ராஜா தனது தந்தையை போன்றவர் என்று சீமான் கருத்து,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதன் பேரில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நியூஸ்கார்டு இரண்டுமே […]

Continue Reading

FACT CHECK: சிலை திருட்டில் ஈடுபட்ட பா.ஜ.க-வைச் சேர்ந்த 4 பேர் கைது என்று பரவும் தவறான தகவல்!

சிலை திருட்டில் ஈடுபட்டு வந்த பாஜக-வைச் சேர்ந்த நான்கு பேரை தஞ்சை மாவட்ட போலீஸ் கைது செய்தது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே, அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கோவில் சிலைகளுடன் நான்கு பேர் நிற்கும் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டுடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “சிலைத் திருட்டில் ஈடுபட்டு […]

Continue Reading

FactCheck: தூத்துக்குடியில் ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் கனிமொழி பேருந்து நிழற்குடை திறந்து வைத்தாரா?

தூத்துக்குடியில் ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை ஒன்றை கனிமொழி திறந்துவைத்துள்ளார், என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவலை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ தூத்துகுடி மக்களுக்கு கிடைத்த ஜேக்பாட். உலகிலேயே மிக விலை உயர்ந்த நிழற்குடை. வெறும் 154 லட்சம் மட்டுமே. அதாகப்பட்டது 1கோடியே 54 லட்சம். விடியல் அரசின் உலகசோதனை,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதன் […]

Continue Reading