திமுக., ஆட்சியை வெளுத்து வாங்கும் பாட்டி என்று பரவும் 2020ம் ஆண்டு வீடியோ!

கோழிக்கு வரி, குஞ்சுக்கு வரி, அவுக ஆத்தாளுக்கு வரி என்று எல்லாவற்றுக்கும் வரி வசூலிக்கும் தமிழ்நாடு அரசு என்று தி.மு.க ஆட்சியை மூதாட்டி ஒருவர் வெளுத்து வாங்கினார் என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிராமத்து மூதாட்டி ஒருவரிடம் “சொளையா ஆயிரம், ஆயிரம் வாங்குனே, எப்படி வாங்குனே?” என்று ஒருவர் கேள்வி எழுப்பும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading

மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் 2019ல் ராஜினாமா செய்ததை தற்போது பரப்புவதால் சர்ச்சை…

‘’கமல்ஹாசனின் திமுக ஆதரவு பிடிக்காமல் பொருளாளர் சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சி.கே.குமரவேல் உள்ளிட்டோர் ராஜினாமா,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி (+91 9049044263) சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் ஆய்வு மேற்கொண்டபோது, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பலரும் இதே செய்தியை உண்மை என நம்பி ஷேர் […]

Continue Reading

நிர்மலா சீதாராமனின் தந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தந்தை எளிய வாழ்க்கை வாழ்கிறார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதியவர் ஒருவரை சந்திக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் ஊழல் பெருச்சாளி கோடீஸ்வர அரசியல்வாதிகள் மத்தியில் இப்படி நல்ல தமிழ் பேசி சாதாரண வாழ்க்கை வாழும் இந்தியாவின் நிதி […]

Continue Reading

பிக் பாஸ் தமிழ் சீசன் 6; மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என்றாரா பத்திரிகையாளர் செந்தில்வேல்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 இறுதிப் போட்டிக்கு மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் கூறியதாக, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், குறிப்பிட்ட ட்வீட் லிங்கை தேடி எடுத்தோம். அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.   Twitter Claim Link l Archived Link […]

Continue Reading

துணிவு படம் தோற்றதால் விஜயின் குடும்பம் பற்றி அவதூறு பரப்புகிறார்கள் என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

துணிவு படம் தோற்றதால் விஜயின் குடும்பம் பற்றி அவதூறு பரப்புகிறார்கள் என்று தந்தி டிவி வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: சமூக வலைதளங்களின் வரவு காரணமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில், 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட்ட துணிவு, வாரிசு படங்கள் பற்றி பரபரப்பான செய்திகள் பகிரப்படுகின்றன. அஜித் ரசிகர்கள் தங்களது […]

Continue Reading

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கக் காசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளதா?

‘’ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் 2 கிராம் தங்கக் காசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link l Archived Link உண்மை அறிவோம்: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் […]

Continue Reading

துணிவை துரத்தி அடித்த விஜய் என்று தந்தி டிவி நியூஸ் கார்டு வெளியிட்டதா?

துணிவை துரத்தி அடித்த விஜய் என்று தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் மற்றும் அஜித் படத்தை வைத்து தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “துணிவை துரத்தி அடித்த விஜய்… பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணி திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. இந்நிலையில் வெளியாகி […]

Continue Reading

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்தாரா கனிமொழி?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கனிமொழி விமர்சித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive “மதுக்கடையை மூடுறேன், 10 மணிக்கு மேல் மது விற்பனை இல்லை என்று சொல்றாங்க, ஆனாலும் அதற்கு அப்புறம் 11, 12 மணிக்கு கூட விற்கப்படுகிறது என்பதை தெளிவாக அவங்களே எடுத்து போட்டிருக்காங்க. இதில் இருந்தே இந்த ஆட்சி மதுவிலக்கு கொள்கையில் எவ்வளவு உறுதியாக […]

Continue Reading

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பொங்கல் விருந்து அளித்த வீடியோ இதுவா?

‘’ இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பொங்கல் விருந்து அளித்த வீடியோ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook claim Link l Archived Link  இதுபற்றி வாசகர் ஒருவர் நம்மிடம் வாட்ஸ்ஆப் (9049053770) வழியே சந்தேகம் கேட்டிருந்த நிலையில், இதே செய்தியை சத்யம் நியூஸ் தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்ததைக் கண்டோம். ‘’வாழை இலையில் அறுசுவை உணவு…பொங்கல் விழாவைக் கொண்டாடிய இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் என்ற தலைப்பில் […]

Continue Reading

கோவை பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் சிறுத்தைகள் நுழைந்ததா?

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்குள் இரண்டு சிறுத்தைகள் நுழைந்தன என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பழைய கட்டிடத்திற்குள் இருந்து இரண்டு சிறுத்தைகள் வெளியே வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Thalapathi Thiyagu Dmk Kovai என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 […]

Continue Reading

சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தபின் ஆளுநர் ரவி தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினாரா?

‘’ சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தபின் ஆளுநர் ரவி தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும்போது, ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதுதொடர்பான வீடியோ மற்றும் செய்திகள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரபரப்பாக பரவின.    tribuneindia.com […]

Continue Reading

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் திமுக அலுவலகமாக மாற்றப்பட்டதா?

‘’டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் திமுக அலுவலகமாக மாற்றம்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Tweet Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை திமுக அலுவலகம் என்று குறிப்பிட்டு தமிழ்நாடு அரசாங்கம் மாற்றியதாகக் கூறப்படுவது தவறான தகவல். இதுபற்றி நாம் அரசு தலைமைச் செயலகம் தரப்பில் விசாரித்தபோது, ‘’இது அரசின் தவறு அல்ல. கூகுள் மொழிபெயர்ப்பில் […]

Continue Reading

போதையில் அத்துமீறிய அண்ணாமலை என்று தினமலர் செய்தி வெளியிட்டதா?

‘’போதையில் அத்துமீறிய அண்ணாமலை என்று தினமலர் செய்தி,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Tweet Claim Link I Archived Link உண்மை அறிவோம்: சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அண்ணாமலை சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுபற்றி ஊடகங்களில் அப்போது செய்தி பரபரப்பாக பகிரப்பட்டது.  puthiyathalaimurai link இந்த சூழலில், மேற்கண்ட தகவல் பலரால் உண்மை என நம்பி பகிரப்படுகிறது. குறிப்பிட்ட தகவல் பற்றி […]

Continue Reading

கர்நாடகாவில் மெட்ரோ தூண் சாய்ந்து தாய் – மகள் பலி என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

பாஜக ஆளும் கர்நாடகாவில் ஊழல் தலைவிரித்தாடுகிறது, இதன் காரணமாக மெட்ரோ தூண் சாய்ந்து தாய் மகள் பலி என்று நியூஸ் 7 தமிழ் வெளியானது போல ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக ஆளும் கர்நாடக மாநில பெங்களூரில் தலைவிரித்தாடும் ஊழல் […]

Continue Reading

கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் திமுக அரசு ரூ.10 லட்சம் தருகிறதா?

‘’ கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் திமுக அரசு ரூ.10 லட்சம் தருகிறது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (9049053770) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் ஆய்வு மேற்கொண்டோம்.  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட தகவல் பற்றி நாம் சென்னை அம்பத்தூர் போலீசாரை (உதவி ஆணையர் அலுவலகம்) தொடர்பு கொண்டோம். அவர்கள் பேசுகையில், ‘’அம்பத்தூர், அயப்பாக்கம் பிரதான சாலை, […]

Continue Reading

ஆளுநர் ரவியை பார்த்து வியந்தேன் என்று உசைன் போல்ட் கூறினாரா?

தமிழ்நாடு ஆளுநர் ரவியைப் பார்த்து வியந்தேன் என்று உலக முன்னணி ஓட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட் கூறியதாக ஒரு நையாண்டி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ரவியை பார்த்து வியந்த உசைன் போல்ட். சட்டசபையிலிருந்து ஆளுநர் ரவி ஓடிய காட்சியை பார்த்து வியந்ததாக பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் […]

Continue Reading

மாரிதாஸ் தலைமறைவு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

மாரிதாஸ் மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கை ரத்து செய்த மதுரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நீக்கியதைத் தொடர்ந்து மாரிதாஸ் தலைமறைவு என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரபல வலதுசாரி யூடியூபர் மாரிதாஸ் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தலைமறைவான மாரிதாஸ் தேடுதல் பணியில் 2 […]

Continue Reading

கொடநாடு என்று கூறியதும் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினாரா எடப்பாடி பழனிசாமி?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடநாடு பற்றிப் பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியினர் அவையிலிருந்து வெளியேறுகின்றனர். முதலமைச்சர் பேசும் […]

Continue Reading

கொரோனா வசூல் பணத்தில் புடவை வாங்கிய துர்கா ஸ்டாலின் என்று பரவும் விஷம பதிவு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி கொரோனா நிவாரண நிதி வசூலில் இருந்து ரூ.1 கோடிக்கு புடவை வாங்கி அணிந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானி குடும்பத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை சந்தித்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “ரூ.1 கோடி தங்க […]

Continue Reading

சினிமா பாட்டிற்கு நடனமாடும் கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்கள்- இந்த வீடியோ திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டதா?

‘’திமுக ஆட்சியில் பள்ளி குழந்தைகள் முன்பாக, சினிமா பாட்டிற்கு நடனமாடும் கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்கள், இதுவே திராவிட மாடல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  30/12/2022 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’பள்ளிக்குழந்தைகளை இப்படித்தான் வளர்க்கணும் , இதுவே திராவிட மாடல் , உதயநிதி ரசிகர் மன்ற தலைவரை கல்வி அமைச்சரா டங்கா மாரி தான்,’’ என்று […]

Continue Reading

மது அருந்திவிட்டு திருப்பதிக்குச் சென்ற அண்ணாமலை என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மது அருந்திவிட்டுச் சென்றதாகவும் பின்னர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடத்துவிட்டு சாமி தரிசனம் செய்தார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படத்துடன் கூடிய தினமலர் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஏழுமலையார் கோயிலுக்கு மது அருந்திவிட்டுச் சென்றாரா அண்ணாமலை? […]

Continue Reading

தமிழ்நாடு பெயர் விவகாரம்; ஆளுநர் ரவிக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தாரா?

‘’அறிஞர் அண்ணாவை சீண்டினால், சந்திரலேகாவுக்கு ஏற்பட்ட நிலைதான் ஆளுநர் ரவிக்கும் ஏற்படும்,’’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Tweet Claim Link l Archived Link இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்: ‘தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றே அழைக்கலாம்’ என்று ஆளுநர் ரவி கருத்து கூறியிருந்தார். இதனை பலரும் சமூக […]

Continue Reading

ஶ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை தி.மு.க குண்டர்கள் தாக்கியதாகப் பரவும் வீடியோ உண்மையா?

ஶ்ரீரங்கம்  ரங்கநாதர் கோவில் உள்பட தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களில் நடைபெறும் முறைகேடுகளை எதிர்த்து குரல் கொடுப்பவர் ரங்கராஜன் நரசிம்மன். இவரை தி.மு.க குண்டர்கள் தாக்கினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஐயப்ப மாலை அணிந்தவர்களைப் போல உள்ளவர்கள் உள்ளிட்ட பலர் யாரோ ஒருவரைத் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. தாக்கப்படுபவரின் முகம் காட்டப்படவில்லை. நிலைத் தகவலில், […]

Continue Reading

பாஜக எம்.எல்.ஏ., வானதியின் கணவர் சீனிவாசனுக்கு எச்.ஐ.வி. தொற்று என தினமலர் செய்தி வெளியிட்டதா?

‘’வானதியின் கணவர் சீனிவாசனுக்கு எச்.ஐ.வி., தொற்று,’’ என தினமலர் செய்தி வெளியிட்டதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263) அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதே செய்தி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இதர சமூக வலைதளங்களிலும் பகிரப்படுவதைக் கண்டோம்.  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட ஸ்கிரின்ஷாட் செய்தியின் கேப்ஷனில் VishwaHinduParisad என்று எழுதப்பட்டுள்ளது. அதனுடன் HIV என கூடுதலாக ஒரு […]

Continue Reading

FactCheck: மத்தியப் பிரதேசத்தில் காதலியை அடித்து உதைத்த முரட்டு காதலன் இந்துவா, முஸ்லீமா?

‘’மத்தியப் பிரதேசத்தில் காதலியை கொடூரமாக அடித்து உதைத்த காதலன் ஒரு முஸ்லீம், அவன் பெயர் அப்துல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார்.  உண்மை அறிவோம்: மேலே குறிப்பிட்டுள்ள சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில், ரேவா என்ற பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்ததாகும். பங்கஜ் திரிபாதி என்ற 24 […]

Continue Reading

அண்ணாமலை மது போதையில் பேசுகிறார் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘’அண்ணாமலை மது போதையில் பேசுகிறார் என்று புதிய தலைமுறை செய்தி,’’ என குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு நியூஸ் கார்டு பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதே செய்தியை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Tweet Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பாஜக […]

Continue Reading

மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் கூறி திமுக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதா?

மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் கூறி திமுக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதாக, ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட போஸ்டரை திமுக ஒட்டவில்லை. இது பாஜக சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டராகும். அதில் உள்ள எழுத்தின் வண்ணத்தை கறுப்பு சிவப்பு போன்றதாக மாற்றி, ஃபோட்டோஷாப் செய்து, இவ்வாறு வதந்தி பரப்புகின்றனர்.  இதற்கு மறுப்பு தெரிவித்து, திமுக ஐ.டி. […]

Continue Reading

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரூ.1 லட்சம் திருட்டு- நியூஸ் 7 தமிழ் பெயரில் பரவும் செய்தி உண்மையா?

‘’அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரூ.1 லட்சம் திருட்டு,’’ என்று பரவும் ஒரு செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் பகிரப்படும் மேற்கண்ட நியூஸ் கார்டை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (9049044263) நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: சமீபத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் […]

Continue Reading

தாம்பரம் மேயரின் குழந்தைக்கு திராவிட மாடல் என்று பெயர் சூட்டினாரா மு.க. ஸ்டாலின்?

தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணனின் குழந்தைக்கு திராவிட மாடல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏபிபி நாடு என்ற ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணன் குழந்தைக்கு ” திராவிட மாடல் ” என பெயர் […]

Continue Reading

ரேசன் கடைகளில் சர்க்கரைக்குப் பதிலாகக் கருப்பட்டி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததா? 

‘’ரேசன் கடைகளில் இனி சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Claim Tweet Link I Archived Link உண்மை […]

Continue Reading

ரஃபேல் கடிகார ரசீது திருடு போய்விட்டது என்று அண்ணாமலை கூறினாரா?

ரஃபேல் விமான ஆவணங்கள் திருடுபோன போது தன்னுடைய கடிகார ரசீதும் திருடு போய்விட்டது என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கடந்த 2019ம் ஆண்டு ரஃபேல் ஆவணங்கள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டன.  என்னுடைய கடிகாரத்திற்கான ரசீதும் அந்த […]

Continue Reading

இந்துக்களிடம் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

ரஜினிகாந்த் ஏ.ஆர்.ரஹ்மானுடன் தர்காவுக்கு சென்றது மிகப்பெரிய தவறு, இதற்காக இந்துக்களிடம் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் தர்கா சென்று வழிபாடு செய்த புகைப்படம் மற்றும் அர்ஜூன் சம்பத் படத்தை ஒன்று சேர்த்து நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “காவியை அவமதிக்காதீர்கள் ரஜினி… தர்காவுக்கு பச்சை துண்டு அணிந்து […]

Continue Reading

அண்ணாமலை அலுவலகத்தில் மோடி, நட்டா படங்களுடன் நித்தியானந்தா புகைப்படமும் இருந்ததா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளைச் சந்தித்த இடத்தில் பாஜக முன்னோடிகள் புகைப்படத்துடன் நித்தியானந்தா படமும் மாட்டப்பட்டிருந்ததாக சிலர் புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் இருக்கும் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பாஜக முன்னோடிகள் மற்றும் பிரதமர் மோடி, நட்டா ஆகியோர் புகைப்படங்களுடன் பிரபல சாமியார் நித்தியானந்தா படமும் இருப்பதாக வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அந்த […]

Continue Reading

வீட்டில் இருந்தே பென்சில் பேக் செய்யும் வேலையா?- நட்ராஜ் நிறுவனம் பெயரில் பரவும் வதந்தி!

நட்ராஜ் பென்சில் நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்குகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பென்சில், பேனாக்களை அட்டைப்பெட்டியில் அடுக்குவது போன்று புகைப்படங்கள் ஒன்றாக சேர்த்து பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நட்ராஜ் பென்சில் நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்குகிறது, 1 மாத சம்பளம் உங்கள் ✔30000   அட்வான்ஸ் 15000✔ பென்சில் […]

Continue Reading

டாஸ்மாக் கடை செல்ல இலவச பஸ் பாஸ் கேட்ட விவசாயி; 2018 செய்தியை தற்போது பரப்பும் நெட்டிசன்கள்!

தி.மு.க ஆட்சியில் ஒருவர் மது அருந்த டாஸ்மாக் கடைக்கு சென்று வர தனக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்ததாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினகரன் நாளிதழ் வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “உள்ளூரில் கடை இல்லாததால் டாஸ்மாக் கடைக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் […]

Continue Reading

மெரினாவில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்பு என்று பரவும் பழைய வீடியோ!

சென்னை மெரினா கடற்கரையில் மாண்டஸ் புயல் காரணமாக மழை நீர் சூழ்ந்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சென்னை மெரினா கடற்கரையில் மழை நீர் தேங்கியிருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மாண்டஸ் புயல் காரணமாக நேற்று பெய்த பலத்த மழையால் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை மழைநீர் சூழ்ந்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

அண்ணாமலைக்கு கல்தா என பரவும் நியூஸ் கார்டை தினமலர் வெளியிட்டதா?

அண்ணாமலைக்கு கல்தா; ஆதரவு நடிகைக்கு ஸ்வீட் தா என்று தினமலர் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு கல்தா; ஆதரவு நடிகைக்கு ஸ்வீட் தா! கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள், சீனியர் நிர்வாகிகளுடனான மோதல் போக்கு, தன்னிச்சையான நடவடிக்கைகளால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுமாறு […]

Continue Reading

‘குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று செந்தில்வேல் கூறினாரா?

‘’குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று செந்தில்வேல் சவால்,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263) அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதே ட்வீட் ஸ்கிரின்ஷாட்டை பலரும் ஃபேஸ்புக்கில் உண்மையென நம்பி பகிர்வதைக் கண்டோம்.  Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:மேற்கண்ட பதிவுகளில் கூறுவது போல, குஜராத் தேர்தலில் […]

Continue Reading

சபரிமலை ஐயப்பன் அற்புத காட்சி என்று பகிரப்படும் வேறொரு வீடியோவால் குழப்பம்…

‘’சபரிமலை ஐயப்பன் அற்புத காட்சி,’’ என்று கூறி யூடியுப்பில் பகிரப்படும் வீடியோ ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Youtube Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவின் தலைப்பில், ‘’##காணக் கிடைக்காத அற்புத காட்சி## ##சபரிமலை ##சுவாமியே சரணம் ஐயப்பா ##,’’ என்று எழுதப்பட்டுள்ளதால், பலரும் இதனை உண்மையான சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை காட்சி என்று நினைத்து கமெண்ட் பகுதியில் குழப்பமடைந்துள்ளனர்.  சபரிமலை உண்மையில் தற்போதைய கேரளாவில் அமைந்துள்ளது. ஆனால், […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலை என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

உத்தரப் பிரதேசத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலை, என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.தகவலின் விவரம்: Claim Tweet Link I Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட வீடியோவை நன்கு உற்று பார்த்தால், அதில், சீன மொழியில் ஒரு லோகோ இருப்பது தெரிகிறது.  இதன்படி, APP என சீன மொழியில் எழுதப்பட்டுள்ளதன் அடிப்படையிலும், ரிவர்ஸ் இமேஜ் முறையிலும் தொடர்ந்து தகவல் தேடியபோது, இது சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ […]

Continue Reading

ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்ததா?

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தமிழர்களின் பொழுதுபோக்கை விட இந்து மதத்தினர் தெய்வமாக வணங்கும் பசு மற்றும் காளை மாடுகளின் நலன்தான் முக்கியம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “குறிப்பிட்ட ஒரு மாநில மக்களின் பொழுதுபோக்கை […]

Continue Reading

‘அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக்தான்’ என்று செந்தில் பாலாஜி கூறினாரா?

‘’அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக்தான் என்று திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் ஒரு நியூஸ் கார்டு வைரலாகப் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் நாம் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.  Facebook Claim Link I Archived […]

Continue Reading

ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சீட்டுக்கட்டு விளையாடுவது பற்றிய பாடம்- உண்மை என்ன?

6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சீட்டுக்கட்டு விளையாட்டு பற்றிய பாடம்- உண்மை என்ன? ‘’6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரம்மி விளையாடுவது எப்படி என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றுள்ளது,’’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Linkஇதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, அதன் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் கேட்டிருந்தார். 01/12/2022 அன்று பதிவிடப்பட்டுள்ள […]

Continue Reading

சூதாட்டம் என்பது இந்து மதத்தின் அங்கம் என்று அண்ணாமலை கூறினாரா?

சூதாட்டம் என்பது மகாபாரத காலத்தில் இருந்து இந்து மதத்தின் அங்கம். அதை ஒழிப்பது இந்து கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சி என்று அண்ணாமலை கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சூதாட்டம் என்பது மஹாபாரத காலத்திலிருந்தே ஹிந்து மதத்தின் ஒரு அங்கம். ஆன்லைன் சூதாட்டங்களை முறைப்படுத்தலாமே […]

Continue Reading

FlFA 2022 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியை அனுப்பக்கூடாது என்று மோடி உத்தரவிட்டாரா?

‘’கத்தாரில் நடைபெறும் FlFA 2022 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியை அனுப்பக்கூடாது என்று மோடி உத்தரவு,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, ஏராளமானோர் இதை ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம்.  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று பார்த்தால், இல்லை என்பதே பதில். ஆம். இது மோடிக்கு […]

Continue Reading

பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் தவறே செய்தாலும் தண்டிக்க முடியாது என்று அண்ணாமலை கூறினாரா?

தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தவறே செய்தாலும் அவரைத் தண்டிக்கும் தகுதி தனக்கில்லை என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் புகைப்படங்களுடன் ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கமலாலயம் என்கிற ஹஸ்தினாபுரத்தின் […]

Continue Reading

மின் கட்டணம் – ஆதார் இணைப்பு அறிவிப்பை மின் வாரியம் திரும்பப் பெற்றதா?

மின் கட்டணம் செலுத்த ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை மின் வாரியம் திரும்பப் பெற்றது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்குத் தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த நியூஸ் கார்டில், “மின் கட்டணம் செலுத்த ‘ஆதார்’ […]

Continue Reading

ராமாயணம் டிவி சீரியல் பாடலைப் பாடும் அமெரிக்க குழந்தைகள் என்று பரவும் வீடியோ உண்மையா? 

‘’ராமாயணம் டிவி சீரியல் பாடலைப் பாடும் அமெரிக்க குழந்தைகள்’’, என்று பரவும் வீடியோ பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதே தகவல் ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றிலும் பகிரப்படுகிறது. Facebook Claim Link l Archived Link  2020ம் ஆண்டு முதலாகவே, இந்த வீடியோ பகிரப்படுவதைக் கண்டோம்.   Sharechat Link I Archived Link  உண்மை அறிவோம்:  குறிப்பிட்ட வீடியோவின் ஒரு […]

Continue Reading

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இளையராஜாவை சந்தித்தாரா? 

‘’ கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இளையராஜாவை சந்தித்து எளிமையான முறையில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Tweet Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட புகைப்படம் கடந்த 2017ம் ஆண்டு இளையராஜா தனது 74வது பிறந்த நாளில், ரசிகர்களுடன் நடத்திய சந்திப்பு ஒன்றில் எடுக்கப்பட்டதாகும். இந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. இதுபற்றி ஊடகங்களிலும் […]

Continue Reading

பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம் முன் ஆணுறை வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டதா?

‘’பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம் முன் ஆணுறை வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Claim Tweet Link l Archived Link உண்மை அறிவோம்: பாஜக.,வை சேர்ந்த திருச்சி சூர்யா சிவா மற்றும் டெய்சி ஆகியோர் ஃபோன் மூலமாக ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டிக்கொண்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. FactCrescendo Tamil Link […]

Continue Reading