44 வயதில் முதல்வரான யோகி ஆதித்யநாத்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

‘’26 வயதில் எம்பி, 44 வயதில் முதல்வர் ஆன யோகி ஆதித்யநாத்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Prabu என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், யோகி ஆதித்யநாத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’26 வயதில் பாராளுமன்ற உறுப்பினர், 44 வயதில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜி அவர்களுக்கு பிறந்த நாள் […]

Continue Reading

ராகுல் காந்தியை கண்ணீர் மல்க வரவேற்ற அமேதி வாக்காளர்கள்- வீடியோ உண்மையா?

அமேதி நாடாளுமன்ற தொகுதிக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தொண்டர்கள் கண்ணீர் மல்க வரவேற்றதாக, ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அமெதி சென்ற ராகுலுக்கு தொண்டர்களின் கண்ணீர் மல்க வரவேற்பு.!!!?? Archived link வீடியோ ஒன்றில் ராகுல் காந்தியை மக்கள் சூழ்ந்து நிற்கின்றனர். பின்னணியில் சோக இந்தி பாடல் ஒன்று ஒலிக்கிறது. கதறி அழும் அவர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறுகிறார். இந்த வீடியோவை […]

Continue Reading

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு காலத்தில் கிரிமினல் குற்றவாளி! – பகீர் ஃபேஸ்புக் பதிவு

மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷாவை சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் கைது செய்ததாக ஒரு பழைய புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், அவர் கிரிமினல் என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அன்று இவர் ஒரு கிரிமினல் – இன்று இவர் மத்திய உள்துறை அமைச்சர்.இன்னோரு வர் அன்று ஒரு கொலையாளி இன்று ஒரு மத்திய மந்திரி. Archived link அமித் ஷா கைது […]

Continue Reading

தேர்தலில் ஜெயித்தால் ரூ.72000 பணம் தருகிறோம் என்று ஸ்டாலின் சொன்னாரா?

‘’தேர்தலில் ஜெயித்தால் ரூ.72000 தருகிறேன் என்று சொன்னியே சுடல,’’ என்ற தலைப்பில், மு.கஸ்டாலின் புகைப்படத்தை மையமாக வைத்து பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link புதியதோர் தமிழகம் செய்வோம் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மு.க.ஸ்டாலின் புகைப்படத்தையும், சுப்ரமணியபுரம் படத்தில் வரும் காட்சி ஒன்றையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’தேர்தல்ல ஜெயிச்சா 72000 தருவேன், […]

Continue Reading

ராகுல் காந்தியிடம் இந்தி பேசிய ஸ்டாலின் பேரன் பேத்திகள்: ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

மு.க.ஸ்டாலின் பேரன், பேத்திகள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இந்தியில் பேசி அசத்தியதாக ஒரு ஃபேஸ்புக் பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ராகுல் காந்தியிடம் இந்தி பேசி அசத்திய ஸ்டாலின் பேரன் பேத்திகள்….. உங்க வீட்டு பிள்ளைகள் இந்தி படிக்கலாம் எங்க பிள்ளைகள் இந்தி படிக்க கூடாதா ? Archived link தி.மு.க தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் […]

Continue Reading

குஜராத் கலவரத்திற்கு காரணமானவர் பிரதமர்: ஃபேஸ்புக் பதிவால் குழப்பம்

‘’குஜராத் கலவரத்திற்கு காரணமானவன் பிரதமர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link Troll Mafia என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மோடி, அமித் ஷா, பிரதாப் சாரங்கி, சாத்வி பிரக்யா சிங் தாகூர் உள்ளிட்டோர் புகைப்படங்களை பகிர்ந்து, அதன் மேலே, ‘’குஜராத் கலவரத்திற்கு காரணமானவன் பிரதமர், நீதிபதியை கொன்றவன் உள்துறை அமைச்சர், பாதிரியாரை குழந்தைகளோடு எரித்து கொன்றவன் […]

Continue Reading

காவிப்படை அணிவகுப்பை நடத்தினாரா யோகி ஆதித்யநாத்?

வாரணாசியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற காவிப்படை அணிவகுப்பு ஒன்றை நடத்தியதாக ஃபேஸ்புக்கில் சிலர் பதிவிட்டுள்ளனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாரணாசியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற காவிப்படை அணிவகுப்பு Archived link இரண்டு படங்களை இணைத்துப் பதிவிட்டுள்ளனர். அதில், மாடி பஸ் போன்ற ஒன்றில் நிறைய பேர் உள்ளனர். லட்சக்கணக்கானோர் திரண்டு பேரணி செல்வது போல் உள்ளது. முழுக்க காவி பொடி தூவப்பட்டு, காவி வண்ணமாக […]

Continue Reading

கருணாநிதி பிறந்த நாள் சர்வதேச ஊழல் தினமா?

‘’கருணாநிதி பிறந்த நாள் – சர்வதேச ஊழல் தினம்,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link குமரிமைந்தர்கள் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பார்க்கும்போதே ஃபோட்டோஷாப் செய்த ஒன்று என தெளிவாக தெரிகிறது. இருந்தாலும், இதனை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட பதிவில் ரெட் மார்க் செய்த பகுதியில், […]

Continue Reading

திருவள்ளுவர் சிலை சிங்கார சென்னையில் உள்ளது: ஃபேஸ்புக் பதிவால் வந்த சர்ச்சை

‘’சிங்கார சென்னை,’’ என்ற தலைப்பில், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் சென்னையில் உள்ளதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Aashiq என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சென்னை கத்திப்பாரா மேம்பாலம், டைடல் பார்க், வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, அண்ணா நூற்றாண்டு நூலகம், மெட்ரோ, கோயம்பேடு பேருந்து நிலையம், சிஎம்பிடி பழ மற்றும் பூ […]

Continue Reading

இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த சவுதி இளவரசர்?

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை, ஜெய் ஶ்ரீராம் என்று சொல்ல கட்டாயப்படுத்தினால், சவுதியில் உள்ள இந்துக்கள் அனைவரையும் இஸ்லாமியராக மாற்றுவேன் என்று இந்தியாவுக்கு சவுதி இளவரசர் எச்சரக்கை விடுத்ததாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: குடிக்கிற கஞ்சியிலே மண்ணள்ளி போடப்போற…… RSS -BJP இந்துத்தீவிரவாதிகளால் வயித்துப்பிழைப்புக்காக சென்ற இந்துக்களுக்கு ஆபத்து. Archived link ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க இந்துத் தீவிரவாதிகளால் வயிற்றுப் பிழைப்புக்காக சவுதி சென்ற […]

Continue Reading

தன்னுடைய உதவியாளர் கொலை வழக்கில் ஸ்மிருதி இரானிக்கு தொடர்பா?

அமேதி தொகுதியில் வெற்றிபெற காரணமாக இருந்த தன்னுடைய உதவியாளர் கொலைக்கு ஸ்மிருதி இரானியே காரணம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மார்ட்டின் உதவியாளர் இறந்தால் அது மார்ட்டின் கைவண்ணம். ஸ்மிருதி ராணி உதவியாளர் இறந்தால் அது யார் கைவண்ணம்?? Archived link மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செட்டிங்கை வெளியிடுவேன் என்று மிரட்டியதால் ஸ்மிருதி இரானி உதவியாளர் சுட்டுக்கொலையா என்று உங்கள் நியூஸ் (Satire news) […]

Continue Reading

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லையாம்- குதர்க்கமான ஃபேஸ்புக் பதிவு

‘’விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லையாம், பால்ராஜாம்,’’ என்ற கிண்டல் தொனியில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link ஆமைக்கறி சைமன் 3.0 என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதனை பார்க்கும்போதே, சீமானை கிண்டல் செய்கிறேன் பேர்வழி என, வேண்டுமென்றே, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கீழ் இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளார்கள் என தெளிவாகிறது. இருந்தாலும், இதனை உண்மை என நம்பி பலரும் […]

Continue Reading

“மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகள்!” – ரஜினிகாந்த் பெயரில் பரவும் ஃபேஸ்புக் பதிவு

“மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகள்” என்று ரஜினிகாந்த் கூறியதாக நியூஸ்7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: பிழைக்க வந்த நாயின் பேச்சை பார்….இந்த லூசு பின்னாடியும் ஒரு மதி கெட்ட தமிழ் கூட்டம்…த்த்த்தூதூதூ????? Archived link நியூஸ்7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டில், “மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள்” என்று உள்ளது. அதே படத்தில் மிகச் சிறியதாக, “பிரதமர் மோடிக்கு […]

Continue Reading

எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு ஆதரவு அளித்த பா.ம.க? – நகைச்சுவை என்ற பெயரில் விஷம செய்தி

சென்னை – சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பா.ம.க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அந்த திட்டத்துக்கு பா.ம.க தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளது என்றும் ஒரு கருத்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு பாமக ஆதரவு. ?️?மானங்கெட்ட பிழைப்பு ?️ Archived link தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிகர் செந்தில் நடித்த காட்சியை எடுத்து, […]

Continue Reading

எஸ்.ஆர்.எம் பல்கலையில் மூன்று மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை? – விஷமத்தனமான ஃபேஸ்புக் போஸ்ட்

எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் மூன்று மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link மூன்று பெண்கள் இறந்து கிடக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “எஸ்.ஆர்.எம் கல்லூரி 3 பெண்கள் கற்பழித்து கொலை. இதை மறைப்பதற்கு சினிமா பைத்தியங்களை வைத்து நேசமணி கூத்தாடி வடிவேலு கதையைப் பரப்பிவிட்டுள்ளது வேதனை. எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக தற்கொலை செய்திகளை […]

Continue Reading

ஆஸ்திரேலிய பாதிரியாரை உயிரோடு எரித்துக் கொன்றவர் பிரதாப் சாரங்கி– பகீர் ஃபேஸ்புக் பதிவு

மத்திய அமைச்சரவையில் மிகவும் எளிமையான நபர் என்று சமூக ஊடகங்களில் கொண்டாடப்படுபவர் பிரதாப் சாரங்கி. ஒடிஷாவில் ஆஸ்திரேலிய பாதிரியாரையும் அவரது இரண்டு மகன்களுடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருக்கும் தொடர்பு உண்டு என்று பகீர் குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மீடியா பயங்கரவாதம்! Archived link ஆஸ்திரேலிய பாதிரியாரின் குடும்ப படம், எரிக்கப்பட்ட அவரது வாகனம் மற்றும் பிரதாப் சாரங்கி பதவி ஏற்றபிறகு பிரதமர் […]

Continue Reading

குங்கும பொட்டு வைத்திருந்த மு.க.ஸ்டாலின்!

‘’மு.க.ஸ்டாலின் குங்கும பொட்டு வைத்திருந்தார்,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இது பார்ப்பதற்கு சந்தேகமாக இருந்ததால், இதுபற்றி உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link DMK Fails என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்துவருகின்றனர். உண்மை அறிவோம்:ஸ்டாலின் குங்கும பொட்டு வைத்திருப்பது உண்மையான என்ற சந்தேகத்தில் ஃபேஸ்புக்கில் இதுதொடர்பாக வேறு ஏதேனும் பதிவு வெளியாகியுள்ளதா, என தேடிப் […]

Continue Reading

பினராயி விஜயன் மானஸ்தன்; ரஜினி மானங்கெட்ட ஜென்மம்: ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை

‘’பினராயி விஜயன் மானஸ்தன், இங்கேயும் சில மானங்கெட்ட ஜென்மங்கள் இருக்கானுங்களே,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இது பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: Archived Link அச்சம் தவிர் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை மே 29ம் தேதி வெளியிட்டுள்ளது. பினராயி விஜயன் புகைப்படத்தையும், ரஜினி நடித்த மன்னன் படக் காட்சிகளையும் இணைத்து, ‘’மோடி பதவியேற்பு விழாவில் பினராயி விஜயன் கலந்துகொள்ளவில்லை, ரஜினி மட்டும் கலந்துகொள்கிறார். மானங்கெட்ட ஜென்மம்,’’ […]

Continue Reading

மோடி பதவி ஏற்றதைக் கொண்டாடிய வெளிநாட்டு மக்கள்! –உண்மை அறிவோம்!

பிரதமர் மோடி பதவி ஏற்பதை வெளிநாட்டில் உள்ள மக்கள் பார்த்து கொண்டாடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link ஒரு பெரிய திரையில், இரண்டாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்கும் விழா காட்சி ஒளிபரப்பாகிறது. அவர், பதவி ஏற்க தன்னுடைய பெயரைக் கூறியதும், அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துக் கொண்டாடுகின்றனர். இந்த வீடியோவை, பாஜக-இராமநாதபுரம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 மே […]

Continue Reading

கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலங்களில் பா.ஜ.க புறக்கணிக்கப்பட்டதா?

இந்தியாவில், கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க வெற்றிபெறவில்லை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link வாழ்க வளமுடன் என்று கூறி ஒரு புள்ளிவிவர புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கல்வியறிவு அடிப்படையில் மாநிலங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த பத்தியில், பா.ஜ.க பெற்ற தொகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. முடிவில், கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. என்ற திருக்குறளையும் வெளியிட்டுள்ளனர். […]

Continue Reading

ஜனாதிபதிக்கு மனு அனுப்பிய மூன்று கல்லூரி மாணவிகள் மர்ம மரணம்? விஷமத்தமான ஃபேஸ்புக் பதிவு

ஜனாதிபதிக்கு மனு அனுப்பிய சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியை சேர்ந்த மூன்று மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாகவும் இதனால் உண்மை தெரியும் வரை அந்த கல்லூரியை இழுத்து மூட வேண்டும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link தாமரைக்கண்ணா என்பவர் 2019 மே 29ம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஜனாதிபதிக்கு மனு அனுப்பிய மூன்று மாணவிகள் மர்மமான முறையில் […]

Continue Reading

அடமானத்தில் இருக்கும் நகைகளை மீட்டுத் தருகிறார் தருமபுரி எம்.பி! – ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

தருமபுரி எம்.பி டாக்டர் செந்தில்குமார் தருமபுரி மாவட்டத்தில் உள்ளவர்கள் அடமானம் வைத்திருக்கும் நகைகளை எல்லாம் மீட்டுத் தரப் போகிறார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தருமபுரி மாவட்டத்தில் நகை அடகு வைத்தோர் வரும் 30ந் தேதிக்குள் ரசீது எடுத்து சென்று நாடாளுமன்ற உறுப்பினர் DNVசெந்தில்குமார் இடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்! Archived link தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் டாக்டர் செந்தில் […]

Continue Reading

வாக்களிக்க வேண்டாம் என்று ரூ.500 தந்து, கையில் மை வைத்த பா.ஜ.க.,வினர்! – உத்தரப்பிரதேச நிகழ்வு நிஜமா?

உத்தரப்பிரதேசத்தில், வாக்குச்சாவடிக்கு யாரும் வர வேண்டாம் என்று ரூ.500 கொடுத்து கையில் மையும் வைத்துச் சென்ற பா.ஜ.க-வினர் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: BJP ஆட்கள் வந்தார்கள் விரலில் மை வைத்தார்கள் ரூ 500 தந்தார்கள் வாக்குச்சாவடிக்கு யாரும் வர வேண்டாம் என்று சொன்னார்கள் . ஒரு கிராமமே திரண்டு புகார் சொல்கிறது . இலக்ஷன் கமிசன் நடவடிக்கை எடுக்குமா? https://www.facebook.com/groups/dmkfans/permalink/2808019169270389/ Archived link […]

Continue Reading

டைம் பத்திரிகை மோடியை கிண்டல் செய்து கார்ட்டூன் வெளியிட்டதா?

‘’மோடியை கிண்டல் செய்து டைம் பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டுள்ளது,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவை மே 26ம் தேதி Sivasuriya என்பவர் வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 2வது முறையாக பிரதமர் மோடி ஆட்சியமைக்க […]

Continue Reading

தொழிலாளர்கள் குடிலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிக்கியது உண்மையா?

தொழிலாளர்கள் குடிலில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், மோடிக்கு தேர்தல் ஆணையம் பொய்யான வெற்றியைத் தேடித் தந்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தேர்தல் கமிஷன்.. மோடிக்கு புரோக்கர் வேலை பார்த்து வெற்றியை தேடித்தந்த காட்சி… Archived link 1.24 நிமிடம் ஓடக் கூடிய வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தகரத்தால் ஆன குடிசை ஒன்றில் நிறைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர […]

Continue Reading

பல தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 2,11,820 தானா?

“பல தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு ஒன்றாகவே உள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை பார்த்துள்ளது” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஓட்டு மிஷின்சாரியாக தான் வேலை செய்துள்ளது Archived link பல தொகுதிகளில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் ஒரே மாதிரியாக உள்ளது என்று பட்டியலிடப்பட்டுள்ளது. பா.ஜ.க-வின் போலோ […]

Continue Reading

மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாகக் கூறி மத்திய பிரதேசத்தில் 3 பேர் மீது கொடூர தாக்குதல்!

‘’மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி பிரச்னையால் 3 பேர் மீது கொடூர தாக்குதல்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்:விகடன் இணையதளம் குறிப்பிட்ட செய்தியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. Archived Link மே 25ம் தேதி வெளியிடப்பட்ட அந்த செய்தியின் விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும். இதன்படி, மத்திய பிரதேசம் மாநிலத்தின் சியோனி பகுதியில் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட […]

Continue Reading

ராகுல் காந்தியை கண்ணீர் மல்க வரவேற்ற அமேதி வாக்காளர்கள்- வீடியோ உண்மையா?

அமேதி நாடாளுமன்ற தொகுதிக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தொண்டர்கள் கண்ணீர் மல்க வரவேற்றதாக, ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அமெதி சென்ற ராகுலுக்கு தொண்டர்களின் கண்ணீர் மல்க வரவேற்பு.!!!?? Archived link வீடியோ ஒன்றில் ராகுல் காந்தியை மக்கள் சூழ்ந்து நிற்கின்றனர். பின்னணியில் சோக இந்தி பாடல் ஒன்று ஒலிக்கிறது. கதறி அழும் அவர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறுகிறார். இந்த வீடியோவை […]

Continue Reading

சமூக செயற்பாட்டாளர் நந்தினி பற்றிய அவதூறு… எல்லை தாண்டிய ஃபேஸ்புக் பதிவு!

சமூக செயற்பாட்டாளர் நந்தினி, இனி விபசாரம் செய்யமாட்டேன் என்று பேனர் எழுதி, கையில் பிடித்திருப்பது போன்ற ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த தொண்டு நாயை ,,,,கன்ட இடத்தில் செருப்பால் அடிக்கவும்,,,,,, Archived link சமூக செயற்பாட்டாளர் நந்தினி ஆனந்தன் கையில் ஒரு பேனரைப் பிடித்தபடி நிற்கிறார். அதில், “இனி விபச்சாரம் செய்ய மாட்டேன்” என்று எழுதப்பட்டுள்ளது. இதை தம்பி கோபாலன் என்பவர் மே 26ம் […]

Continue Reading

ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றாரா மோடி?

‘’ரூ.15 லட்சம் பணம் போடுறேன்னு பொய் பிரச்சாரம் பண்ணி மக்களை ஏமாத்தி ஜெயித்தவர் மோடி‘’, என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link அச்சம் தவிர் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை மே 28ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், ரஜினிகாந்த் ஊடகங்களில் அளித்த பேட்டியை மேற்கோள் காட்டி, அதன் கீழே, நாட்டாமை படத்தில் மனோரமா பேசும் காட்சி புகைப்படத்தை இணைத்துள்ளனர். ‘’நேரு, […]

Continue Reading

பாஜக வெற்றி பெற்ற விரக்தியில் புலம்பிய மம்தா பானர்ஜி: வைரல் வீடியோவால் குழப்பம்

‘’மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால் விரக்தியடைந்து மிக மோசமாக நடந்துகொண்ட மம்தா பானர்ஜி‘’, என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வீடியோ பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link PN செய்திகள் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை, மே 28ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், மம்தா பானர்ஜி ஆக்ரோஷமாக, வங்க மொழியில் கோஷம் போடுகிறார். அவரை ஊடகத்தினர் சுற்றி வளைத்து பேட்டி எடுக்கின்றனர். அந்த இடத்தை […]

Continue Reading

பா.ஜ.க வெற்றி கொண்டாட்டத்தில் இஸ்லாமிய பெண் தாக்கப்பட்டாரா?

பா.ஜ.க வெற்றி கொண்டாட்டத்தில் இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக, ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: BJP யினரின் அசத்தலான வெற்றிக் கொண்டாட்டம் https://www.facebook.com/jeyakumarhosanna/videos/1438940216246359/ Archived link வீடியோவில், பர்தா அணிந்த இஸ்லாமிய இளம்பெண் ஒருவரை இளைஞர்கள் சுற்றி வளைத்துத் தாக்குகின்றனர். அவரது பர்தாவை இழுத்தும், அவர் மீது மாவை வீசியும் தண்ணீரைக் கொட்டியும், அடித்தும் வரம்பு மீறி செயல்படுகின்றனர். அந்த பெண்ணின் அலறல் […]

Continue Reading

கனிமொழி சொந்தமாக சாராய ஆலை வைத்துள்ளார்: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

‘’தனது சொந்த சாராய ஆலையை கனிமொழி மூடுவாரா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link காலத்தின்குரல் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த மே மாதம் 26ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள் மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோரின் புகைப்படங்களை இணைத்து, அதன் மேலே, ‘’60,575 வாக்குகள் பெற முடிந்த காளியம்மாவால் […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை மக்கள் கைப்பற்றியது உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை மக்கள் கைப்பற்றியதாகவும் இனியும் தேர்தல் ஆணையத்தை நம்ப முடியாது என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உபியில் மீண்டும் EVM சிக்கியது..! இந்த *** தேர்தல் ஆணையத்தை நம்பி ஒரு புன்னியமும் இல்லை..!! Archived link லாரியில் நிறைய வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கப்பயன்படும் தகர பெட்டிகள் உள்ளன. இந்த லாரியை செல்லவிடாமல் பலர் முற்றுகையிடுவது போல் மற்றொரு படம் உள்ளது. […]

Continue Reading

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததால் மோடிக்கு ஆபத்து! – தரம்தாழ்ந்த ஃபேஸ்புக் பதிவு

காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரண்டாவது முறையாக தொடர்ந்து வெற்றிபெற்று முதல்வர் பதவிக்கு வந்தவர்கள் உடனடியாக மரணம் அடைந்தனர். அந்த வகையில் பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த இரங்கல் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதில் உள்ள விவரங்களின் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link கடுப்பேத்துறார் மை லார்டு (Kadupethurar My Lord) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், 2019 மே 23ம் தேதி ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading

“நாட்டின் தோல்வி” என்று ராகுல்காந்திக்கு ஆதரவாக ட்வீட் செய்த ரகுராம் ராஜன்?

“ராகுல்காந்தி சாத்தியமான அனைத்தையும் செய்துவிட்டார். மக்கள் பொய்யுணர்வுக்கும், மத துவேஷத்துக்கும் வீழ்ந்தால் அது அவருடைய தோல்வியில்லை, நாட்டின் தோல்வி” என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ட்வீட் செய்துள்ளதாக ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ரகுராம் ராஜன் ட்வீட்ஸ். ராகுல் காந்தி இந்தத் தேர்தலில் சாத்தியமான எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார், மேலும் அவர் செய்த அனைத்தையும் சரியாகச் செய்தார், மக்கள் பொய்யுணர்வுக்காகவும், மத […]

Continue Reading

மோடி கலந்துகொண்ட ‘வந்தே பாரத்’ ரயில் தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவா?

கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி கலந்துகொண்ட வந்தே பாரத் ரயில் பயண தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவு செய்யப்பட்டதாக ஒரு செய்தி சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலின் தொடக்க விழாவுக்கு 52 லட்சம் செலவிடப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. #pmmodi Narendra Modi #narendramodi #northernrailway #vandhebharatrail Archived link 1 Archived link 2 […]

Continue Reading

வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய பாஜக, தேர்தல் ஆணையம் சதித்திட்டம்: சர்ச்சை கிளப்பும் வீடியோ

இந்திய அளவில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய, பாஜக.,வும், தேர்தல் ஆணையமும் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறி, ஒரு பரபரப்பு வீடியோ ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை பரிசோதித்தோம். வதந்தியின் விவரம்: Archived Link இந்த பதிவில், Tricolour News Network என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சியின் செய்தி வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதில் ஒரு வெள்ளைக்காரப் பெண் பேசுகிறார். அவர், இந்திய தேர்தல் பற்றியும், வாக்குப் பதிவு இயந்திரங்களில் […]

Continue Reading

பொன். ராதாகிருஷ்ணன் தோல்விக்கு மத ரீதியான ஓட்டுகள் காரணமா?

‘’பொன்.ராதாகிருஷ்ணன் தோற்றதற்கு மத வேறுபாடுதான் காரணம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link நாங்க நாகர்கோவில் காரங்க என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பொன்.ராதாகிருஷ்ணன் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’குமிரியில் நீங்கள் மதத்தால் தோற்று போகலாம், ஆனால் நீங்கள் செய்த சாதனைகள் என்றும் உங்கள் புகழ் பாடும்!!!,’’ என்று எழுத்துப் பிழைகளுடன் எழுதியுள்ளனர். இதனை பலரும் […]

Continue Reading

தமிழக விவசாயிகளுக்காக இந்திய நதிகளை காவிரியுடன் இணைப்போம்: இந்தியா டுடே பேட்டியில் நிதின் கட்கரி சொன்னாரா?

மக்களவை தேர்தல் முடிவுகளை அடுத்து, “விவசாயிகளின் நன்மை கருதி, உடனடியாக, தேசிய நதிகளை காவிரியுடன் இணைத்து, தமிழகம் செழிக்க பாடுபடுவேன்,’’ என்று இந்தியா டுடே டிவியில் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி, கண்ணீர் மல்க பேசியதாக, சில ஃபேஸ்புக் வதந்திகளை பார்க்க நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். வதந்தியின் விவரம்: Archived Link Archived Link மேற்கண்ட 2 ஃபேஸ்புக் பதிவுகளிலுமே ஒரே விசயத்தைத்தான் கூறியுள்ளனர். அதன் விவரம் கீழே வருமாறு: ***நேற்று […]

Continue Reading

தேனி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 3 லட்சம் வாக்குகள் விடுபட்டதா? – புதிய கணக்கால் பரபரப்பு!

தேனி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 3 லட்சம் ஓட்டுகள் மாயமாகி விட்டதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link தமிழ் நாளிதழ் ஒன்றில் தேர்தல் முன்னிலை – வெற்றி நிலவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தேனி நாடாளுமன்றத் தொகுதி வாக்குகளின் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் ஐந்து இடங்களுக்கு வந்த வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை மட்டும் கூட்டி 8 லட்சம் வாக்குகள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் கடையில் இருந்து 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதா?

நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி முறைகேடு நடந்ததாகவும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடை ஒன்றில் இருந்து 300 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இவற்றின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உத்திரபிரதேசத்தில் கடையொன்றில் 300க்கும் அதிகமான EVM மெஷின்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. Archived link உத்தரப்பிரதேசத்தில் 300க்கும் அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில், சேமிப்பு கிடங்கு போல, ஷட்டர் போடப்பட்ட […]

Continue Reading

“நாதுராம் கோட்சே தீவிரவாதி இல்லை… அவர் தேசியவாதி!” – அன்புமணி ராமதாஸ் பேச்சு உண்மையா?

நாதுராம் கோட்சே மிகப்பெரிய தேசியவாதி, அவரை தீவிரவாதி என்பதை நாங்கள் ஏற்க மாட்டேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: கமலஹாசன் பேச்சுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்….!!! நாதுராம் கோட்சே நாட்டுப்பற்றுடைய மிகப்பெரிய தேசியவாதி அவரை தீவிரவாதி என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்…!!! Archived link இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உடன் அன்புமணி நிற்கும் புகைப்படம் […]

Continue Reading

மக்களவைத் தேர்தல் 2019 வெற்றிக்காக மோடியை கட்டியணைத்து அத்வானி வாழ்த்தினாரா?

‘’பிரதமர் மோடியை வாழ்த்திய பாஜக மூத்த தலைவர் அத்வானி,’’ என்ற தலைப்பில் ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Kalaiselvi Samyraj என்பவர் மே 23ம் தேதி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இது 2019 மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து நடைபெற்ற சம்பவம் என்பதுபோல அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட புகைப்படத்தில், மோடியை அரவணைத்து, அத்வானி […]

Continue Reading

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உயிரிழந்தார்: விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

‘’பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சற்று முன் வீரமரணம் அடைந்தார்,’’ என்ற தலைப்பில் ஒரு விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link நக்கல் மன்னன்-2.0 என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை, மே 23ம் தேதி வெளியிட்டுள்ளது. இது வேடிக்கையாக இருந்தாலும், அரசியல் விஷமத்தனம் நிறைந்ததாக உள்ளது. பலரும் இதனை உண்மை போல பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மே 23ம் தேதி இந்திய […]

Continue Reading

வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு மரியாதை செலுத்தும் மோடி: புகைப்படம் உண்மையா?

தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் மோடி, வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம். தவலின் விவரம்: நீ இருக்கும் வரை நானே பிரதமர் Archived link வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பிரதமர் மோடி வணக்கம் செலுத்துவது போன்று படம் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நீ இருக்கும் வரை நானே பிரதமர்” என்று கூறுவது போல, எழுதப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வந்துள்ள […]

Continue Reading

பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜாவுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி அறிவிக்கப்பட்டதா?

“பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோருக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்கப்பட உள்ளதாக பா.ஜ.க அறிவித்துள்ளது” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ராஜ்ய சபா எம்பியாக குமரி மைந்தன் திரு #பொன்னார்அவர்களும் திரு #Hராஜா ஜிஅவர்களும் பாஜக மேலிடம் அறிவிப்பு. Archived link தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பொன் ராதாகிருஷ்ணன், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த எச்.ராஜா ஆகியோருக்கு மாநிலங்கள் அவை உறுப்பினர் […]

Continue Reading

டென்னிஸ் ராக்கெட் வைத்து டேபிள் டென்னிஸ் விளையாடிய மு.க.ஸ்டாலின்: வைரல் புகைப்படம்

‘’டென்னிஸ் ராக்கெட் வைத்து டேபிள் டென்னிஸ் விளையாடினார் மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி, ஒரு ஃபேஸ்புக் புகைப்பட பதிவை காண நேரிட்டது. இதனைப் பலரும் வைரலாக ஷேர் செய்து வருவதால், இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link கடந்த மே 13ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. பூபாலன் சிதம்பரம் சிட்டங்காடு என்பவர் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி, அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது: அஜய் அகர்வால் சொன்னது என்ன?

‘’ தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது? பாஜக மூத்த தலைவர்!,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. சத்தியம் தொலைக்காட்சி பகிர்ந்துள்ள இச்செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது? பாஜக மூத்த தலைவர்!#BJP #Ajay_Agarwal #Parliament_election_2019 #PM #Modi Archived Link சத்தியம் தொலைக்காட்சியின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியை அப்படியே, அவர்களின் அதிகாரப்பூர்வ […]

Continue Reading

இஸ்லாமியராக மாறி பெரோஸ் காந்தியை திருமணம் செய்த இந்திரா! – 77 ஆண்டுகள் கழித்து சர்ச்சையை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு

ஒடுங்கியிருந்த இஸ்லாமியர்களுக்கு தனி நாடு பெற்றுத்தந்தவர் என்பதால் காந்தி பாகிஸ்தானின் தந்தை என்றும், இந்திரா காந்தி ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்ய, இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார் என்றும், இந்திரா காந்தியின் உண்மையான பெயர் மைமுனா பேகம் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம் தகவலின் விவரம்: Archived link “1942ல் லண்டனில் இஸ்லாம் மதம் மாறி, மைமுனா பேகம் என பெயர் மாற்றி, பெரோஸ்கானை திருமணம் […]

Continue Reading