பசுமாட்டை பதம் பார்த்த பாஜக தலைவர் என பரவும் படம் உண்மையா?

மத்திய பிதேச மாநில பா.ஜ.க இளைஞரணி தலைவர் பசு மாட்டிடம் தவறாக நடந்துகொண்டதற்காகக் கைது செய்யப்பட்டார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பசு மாட்டின் அருகே இளைஞர் ஒருவருடன் போலீசார் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பசுமாட்டை பதம் பார்த்த மத்தியபிரதே பாஜக இளைஞரணி தலைவர். பசுவின் கதறலை கேட்டு ஊர் மக்கள் விரட்டி […]

Continue Reading

இலங்கையின் நிலை இந்தியாவிற்கும் வரும் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதா?

இலங்கையில் ஏற்பட்டதைப் போன்று விரைவில் இந்திய பொருளாதாரமும் வீழ்ச்சியடையும் என்று உலகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் பலரும் உண்மை போல பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading

இந்தி பேசும் நபர் கோதுமை மாவு பிசையும் காட்சி என்று பரவும் இந்தோனேஷியா வீடியோ!

இந்திக்காரர் கடைசியில் கோதுமை மாவு பிசையும் முறை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உள்ளாடை மட்டும் அணிந்த நபர், கூடையில் இருக்கும் ஏதோ ஒரு பயிறு வகையை மிதித்து கழுவுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த நபர் தன்னுடைய உள்ளாடைக்குள் தண்ணீர் ஊற்ற, அது அந்த கூடைக்குள் இருந்த பயிறுக்குள்ளும் செல்கிறது. நிலைத் தகவலில், […]

Continue Reading

காஷ்மீரில் கல் வீசிய நபரை இந்திய ராணுவம் துப்பாக்கியால் சுட்டதா?

காஷ்மீரில் கல் வீசி தொந்தரவு செய்த பாகிஸ்தான் ஆதரவாளரை இந்திய ராணுவம் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, ரிவர்ஸ் இமேஜ் முறையில் நாம் கூகுளில் தகவல் தேடியபோது, இது இந்தியாவில் நிகழ்ந்தது இல்லை என்றும், பொலிவியா நாட்டில் நிகழ்ந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பான […]

Continue Reading

ஆகஸ்ட் 18 சத்ரபதி சிவாஜி பிறந்த நாள் என்று பரவும் வதந்தி!

ஆகஸ்ட் 18ம் தேதி சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சத்பரதி சிவாஜியின் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “AUG 18 சத்திரபதி வீர சிவாஜி. ஹிந்து சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய சத்ரபதி வீர சிவாஜி பிறந்த தினம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சத்ரபதி வீர சிவாஜி பிறந்த தினம் […]

Continue Reading

இந்த பேப்பர் போடும் சிறுவன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இல்லை; முழு விவரம் இதோ!

‘’அப்துல் கலாம் சிறுவயதில் சைக்கிள் ஓட்டிச் சென்று வீடு வீடாக பேப்பர் போடும் வேலை பார்த்தபோது எடுத்த புகைப்படம்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் படம் ஒன்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக்கில் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link […]

Continue Reading

பாரத தாயை மதமாற்றம் செய்து நமாஸ் செய்ய வைத்த இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்திய தாயை முஸ்லிமாக மதமாற்றம் செய்து, மண்டியிட வைத்து, இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற முயல்கிறார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பள்ளிச் சிறுவர்கள் நடத்திய நாடகத்தின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் சிறுமி ஒருவர் இந்தியத் தாய் போல வேடமிட்டு இருக்கிறார். அப்போது, இஸ்லாமியர்கள் போல உடை அணிந்த சிறுவர்கள் வந்து இந்தியத் தாய்க்குத் தலையில் […]

Continue Reading

மறைந்த தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் கடைசி வீடியோவா இது?

தொழிலதிபரும், பங்குச் சந்தை வர்த்தகருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உயிரிழப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு சக்கர நாற்காலியில் அமர்ந்தவாரு நடனமாடிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராகேஷ் ஜுன்ஜுன்வாலா சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இந்தி பாடலுக்கு நடனமாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Mr. Rakesh Jhunjhunwala who died today this video […]

Continue Reading

75வது சுதந்திர தினம்: வெளிநாடுகளில் மூவர்ணக் கொடி காட்சிப்படுத்தப்பட்டது என்று பரவும் படங்கள் உண்மையா?

பிரான்சின் ஈஃபில் டவர், பிரேசிலின் இயேசு சிலை, கோலாலம்பூர் இரட்டை கோபுரம் உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் எல்லா இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய தேசியக் கொடியின் மூவர்ணம் அலங்கரிக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் உள்ள ஈஃபில் டவர், கோலாலம்பூர் இரட்டை கோபுரம். பைசா நகர சாய்ந்த […]

Continue Reading

Rapid FactCheck: காணாமல் போன இந்த சிறுமி மங்களூரில் கிடைத்தாரா?

‘’காணாமல் போன இந்த சிறுமி மங்களூரில் பிச்சைக்காரர்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதே தகவலை பலரும் ஃபேஸ்புக்கில் உண்மை என நம்பி பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading

வீட்டு வாடகை செலுத்தும் அனைவருக்கும் 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதா?

வீட்டு வாடகை செலுத்தும் அனைவருக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:சமீபத்தில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில், ‘குடியிருப்புக் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, அதில் தொழில் நடத்தும் தனி நபர் அல்லது நிறுவனம், ஜிஎஸ்டி.,யின் கீழ் பதிவு செய்திருக்கும்பட்சத்தில் அவர்கள், வாடகை செலுத்தும்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி […]

Continue Reading

ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ பங்கேற்றாரா?

ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ அஷ்ரப் பங்கேற்றார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவர் மேடையில் பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அவருக்கு பின்புறம் இந்து அமைப்பின் தலைவர் ஒருவர் புகைப்படம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#எவ்வளவு எடுத்துச்சொன்னாலும் இந்த முஸ்லீம் லீக் MLAக்களுக்கு அறிவுகிடையாது… மஞ்சேஸ்வரம் MLA M.K.M அஷ்ரப் RSSஸின் […]

Continue Reading

காமன்வெல்த் போட்டியில் இதுவரை இல்லாத அளவில் இந்தியா அதிக வெற்றி பெற்றதா?

காமன்வெல்த் போட்டியில் இதுவரை இல்லாத வகையில் வீரர்கள் அதிக அளவில் பதக்கம் வென்றதாகவும் அதற்கு மோடி தலைமையிலான அரசே காரணம் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: காமன்வெல்த் போட்டியில் பிரதமர் மோடியின் நடவடிக்கையால்தான் இந்தியா நான்காவது இடத்தை பிடித்து என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 2022 காமன்வெல்த் போட்டியின் பதக்கப் பட்டியலுடன் இந்த பதிவை பலரும் பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

வட இந்தியாவில் ஒன்றாக அமர்ந்து நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

வட இந்தியாவில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வீடியோ மற்றும் அதனுடன் தகவல் ஒன்றை சேர்த்து அனுப்பிய வாசகர் ஒருவர், இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த வீடியோவில் மாணவர்கள் தரையில் அமர்ந்து தேர்வு எழுதும் காட்சி இடம்பெற்றிருந்தது. அவர் அனுப்பிய பதிவில் “வடநாட்டில் நீட் தேர்வு […]

Continue Reading

காமன்வெல்த் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஹிமா தாஸ் தங்கம் வென்றார் என பரவும் வீடியோ உண்மையா?

காமன்வெல்த் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதன் முறையாக தங்கம் வென்றால் ஹிமா தாஸ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ காமன்வெல்த் போட்டியின் போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “காமன்வெல்த் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதன் முறையாக தங்கம் வென்றார் ஹீமா தாஸ்” என்று குறிப்பிட்டு வீடியோ பகிரப்பட்டுள்ளது. “காமன்வெல்த் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதன் […]

Continue Reading

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே செல்போனை செதுக்கிய தமிழன் என்று பகிரப்படும் வதந்தி!

செல்போன், ஸ்மார்ட் போன்களை பல ஆண்டுகளுக்கு முன்பே கோயிலில் செதுக்கிய தமிழன் என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி அது பற்றி உண்மையா என்று கேட்டிருந்தார். இரண்டு பெண் சிலைகளின் புகைப்படத்துக்கு கீழே “பின்னால் வர போகும் செல்போன், ஸ்மார்ட் போன்களை பல ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கினானே எம் தமிழன்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  […]

Continue Reading

மலப்புரம் கலெக்டராக இந்து ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனரா?

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் கலெக்டராக இந்து ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்கள் பேரணியாகச் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. மலையாளத்தில் கோஷம் எழுப்புகின்றனர். நிலைத் தகவலில், “கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தினுடைய மாவட்ட கலெக்டராக ஹிந்துவை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் …!! இனிமேலாவது தமிழகத்தில் […]

Continue Reading

குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடை விதித்தாரா திரௌபதி முர்மு?

குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு திரௌபதி முர்மு தடை விதித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்ற பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்று சிலர் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பி வருகின்றனர்.  ஆங்கிலத்தில் பரவும் புகைப்பட பதிவை தமிழாக்கம் செய்து பலரும் பதிவிட்டு […]

Continue Reading

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இளமைக்காலம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மகாராஷ்டிர முதல்வர் தொடக்கக் காலத்தில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த போது எடுத்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவுடன் ஒருவர் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன் ஆங்கிலத்தில், “மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டெ 1997ம் ஆண்டு ஆட்டோ டிரைவாக இருந்த போது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “1997ல் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த ஏக்நாத் […]

Continue Reading

இரண்டாம் நரசிம்மவர்மன் தாளகிரி சிவன் கோயிலில் செதுக்கிய கணினி மற்றும் கீபோர்டு சிற்பம் இதுவா?

‘’தாளகிரி சிவன் கோயிலில் இரண்டாம் நரசிம்மவர்மன் கோயிலில் செதுக்கிய கணினி மற்றும் கீ போர்டு சிற்பம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் நமக்கு +91 9049044263 மற்றும் +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் எண்களில் அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக், ட்விட்டரில் பகிர்வதையும் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

கிறிஸ்தவ போதகர் ஸ்டெயின்ஸ் கொல்லப்பட்ட கிராமத்தின் கவுன்சிலராக திரௌபதி முர்மு இருந்தாரா?

1999ம் ஆண்டு ஒடிஷாவில் கிறிஸ்தவ மத போதகரும் சமூக சேவகருமான கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தபோது, அந்த கிராமத்தின் கவுன்சிலராக திரௌபதி முர்மு இருந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive கிறிஸ்தவ மத போதகரும் சமூக சேவகருமான கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன்னுடைய இரண்டு மகன்களுடன் இருக்கும் […]

Continue Reading

ஒரு பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவரானால் இட ஒதுக்கீட்டை ஒழிக்கலாம் என்று அம்பேத்கர் கூறினாரா?

‘’பழங்குடியினப் பெண் என்றைக்கு இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆகிறாரோ அன்றைய நாளில் இட ஒதுக்கீட்டை ஒழித்திட வேண்டும்- டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்வதை கண்டோம். […]

Continue Reading

ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை 40 ஆக மாற்றுவேன் என்று மோடி கூறினாரா?

‘’ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை 40 ஆக குறைப்பேன் என்று மோடி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கூறினார்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் எண் வழியே அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதேபோல, கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பலரும் தகவல் பகிர்ந்து வருகின்றனர். FB Claim Link I […]

Continue Reading

ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் ஓட்டலில் மாட்டிறைச்சி விற்பனை என்று பகிரப்படும் வதந்தி…

ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் ஓட்டலில் மாட்டிறைச்சி விற்பனை என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:ஸ்மிருதி இரானி மகள் ஜோயிஷ் இரானி சட்டவிரோதமான முறையில் கோவாவில் ரெஸ்டாரண்ட் மற்றும் பார் ஒன்றை சட்டவிரோதமான முறையில் நடத்துவதாக, காங்கிரஸ் கட்சி தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனை ஏற்கனவே ஸ்மிருதி இரானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். The […]

Continue Reading

ராம்நாத் கோவிந்தின் வணக்கத்தை கவனிக்காமல் கேமரா பார்த்தாரா மோடி?

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுதற்கு முன்பு நடந்த பிரிவுபச்சார விழாவில் ராம்நாத் கோவிந்த் வணக்கம் கூறிய போது அவருக்கு பதில் வணக்கம் கூறாமல் மோடி கேமராவை பார்த்துக்கொண்டிருந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு ராம்நாத் கோவிந்த் வணக்கம் செலுத்துகிறார். பிரதமர் மோடி கேமராமேக்களை பார்த்தபடி […]

Continue Reading

சமையல் அறையில் திரௌபதி முர்மு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சமையல் அறையில் மிகவும் எளிமையாக வாழ்ந்த திரௌபதி முர்மு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சமையல் அறையில் ஒரு பெண் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மிகவும் எளிமையா வாழ்ந்த இவரைத்தான்.. மோடி ஜனாதிபதியாக்கி இருக்கிறார்…!!! ஸ்ரீ திரெளபதி_முர்மூ…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Mylai Rama என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் […]

Continue Reading

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்த தி.மு.க அரசு காரணமா?

ஃபோர்டு இந்தியா நிறுவனம் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதற்கு தி.மு.க அரசு தான் காரணம் என்பது போன்று பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் வெளியான கடைசி காருக்கு ஊழியர்கள் கண்ணீர் மல்க விடை கொடுத்தது தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த விடியல் […]

Continue Reading

ஐதராபாத் வந்த மோடியை தமிழிசை மற்றும் அவரது டிரைவர் மட்டுமே வரவேற்றார்களா?

ஐதராபாத் வந்த பிரதமர் மோடியை தெலங்கானா ஆளுநர் தமிழிசை மற்றும் அவரது டிரைவர் என இரண்டு பேர்தான் வரவேற்றார்கள் என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive பிரதமர் மோடியை தமிழிசை சௌந்திரராஜன் வரவேற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என்னடா இது நாட்டோட பிரதமருக்கு வந்த சோதனை .. ?? தெலுங்கானாவுல கால வச்சவுடனே வரவேற்தது இரண்டே பேர் […]

Continue Reading

ஜவஹர்லால் நேரு குடும்பம் முஸ்லீம் வழிவந்தவர்களா? திட்டமிட்டு பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

ஜவஹர்லால் நேரு குடும்பம் முஸ்லீம் வழிவந்தவர்கள் என்று நேருவின் தனிப்பட்ட உதவியாளராக இருந்த எம்.ஓ.மத்தாய் புத்தகம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், இந்திய அரசியல் வரலாறு பற்றிய எந்த அடிப்படை புரிதலும் இன்றி இந்து – முஸ்லீம் விரோதத்தை வளர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் […]

Continue Reading

தெலங்கானாவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டதா துணை ராணுவம்?

தெலங்கானாவில் கடந்த 2021ம் ஆண்டு வெள்ளத்தில் மூழ்கிய ஜேசிபி இயந்திரத்தில் சிக்கியவர்களை துணை ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் மீட்ட வீடியோவை தற்போது நடந்தது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மழை வெள்ளத்தில் சிக்கிய ஜேசிபி வாகனத்துக்குள் இருந்தவர்களை மீட்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “தெலங்கானாவில் கடும் வெள்ளப்பெருக்கு – ஆற்றில் ஜேசிபி வாகனத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட துணை ராணுவம்.. பதபதைக்கவைக்கும் […]

Continue Reading

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக இந்திய அரசு அறிவித்ததா?

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக, இந்திய அரசு அறிவித்துள்ளது என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தனர். இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த வதந்தி கடந்த […]

Continue Reading

மோகன் பகவத்திடம் ஆசி பெற்ற திரௌபதி முர்மு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வேட்பளாராக போட்டியிடும் திரௌபதி முர்மு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திடம் ஆசி பெற்றதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திரௌபதி முர்மு மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இருவரும் இணைந்து இந்திய அன்னை ஓவியத்துக்கு வணக்கம் செலுத்தும் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மூத்த குடிமகளா? திரௌபதி […]

Continue Reading

வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 3-ல் இருந்து 164வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டதா?

வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 3வது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 164வது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டது போன்ற ட்வீட் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “இந்தியா தற்போது 193 நாடுகள் அடங்கிய உலகின் வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 164வது இடத்தில் உள்ளது. 2011ல் மிகப்பெரிய […]

Continue Reading

மின் மயானத்திற்கும் இனி ஜிஎஸ்டி என்று நிர்மலா அறிவித்தாரா?

மின் மயானத்திற்கும் இனி ஜிஎஸ்டி என நிர்மலா சீதாராமன் அறிவித்தார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆனந்த விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மின் மயானத்திற்க்கும் இனி ஜிஎஸ்டி வரி! மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க மத்திய அரசு முடிவு!” என்று […]

Continue Reading

ராதாரவி ஒரு நாலாந்தரப் பேச்சாளர் என்று அண்ணாமலை கூறினாரா?

நடிகர் ராதா ரவியை நாலாந்தரப் பேச்சாளர் என்று அண்ணாமலை விமர்சித்தார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராதா ரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் குடித்துவிட்டுப் பேசுவதைப் பொருட்படுத்தத் தேவையில்லை. பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை அக்யூஸ்டுகள் என்று குறிப்பிட்டது […]

Continue Reading

ராம்நாத் கோவிந்துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு மறுக்கப்பட்டதா?

ஜனாதிபதியாகவே இருந்தாலும் சிவப்பு கம்பளத்தில் வர முடியாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிவப்பு கம்பளத்தில் நடந்து வருகிறார். அவருக்கு அருகில் சிவப்பு கம்பளத்துக்கு வெளியே ஓரமாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நடந்து வரும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஜனாதிபதியாகவே இருந்தாலும் ரெட் கார்பெட்டில் […]

Continue Reading

இந்துத்துவம் எனும் பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா?

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே, இந்துத்துவம் என்ற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்துத்துவம் என்கிற […]

Continue Reading

பா.ஜ.க மூத்த தலைவர்களின் மகள்கள் இஸ்லாமியர்களை திருமணம் செய்தனரா?

பா.ஜ.க, இந்து அமைப்புகளின் தலைவர்களின் மகள்கள் எல்லாம் இஸ்லாமியர்களை திருமணம் செய்துள்ளார்கள் என்பது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரின் படங்களை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எல்.கே.அத்வானியின் மகள் பிரதிபா அத்வானி பிராமண கணவனை உதறிவிட்டு ஒரு முஸ்லீமை வாழ்க்கை துணையாக்கியபோது […]

Continue Reading

ஸ்கூட்டர் ஓட்டி பழகிய மம்தா பானர்ஜி என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

மேற்கு வங்க முதல்வர் இருசக்கர வாகனம் ஓட்ட மேற்கொண்ட பயிற்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் தொண்டர்கள் மற்றும் போலீசார் சூழ மம்தா பானர்ஜி இருசக்கர வாகனம் ஓட்டி வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாட்டில் ஸ்டாலின் சைக்கிள்களில்… அங்க மம்தா மூதேவி ஸ்கூட்டர் பழகுறாளாம். அதுவும் ரோட்டில் இவ்வளவு அடியாட்கள் […]

Continue Reading

லைக்ஸ் வாங்க இஸ்ரேல் புகைப்படத்தை எடுத்து இந்திய ராணுவ வீராங்கனை என பரப்பும் நெட்டிசன்கள்!

இஸ்ரேல் பெண் ராணுவ வீரர் படத்தை லைக் வாங்குவதற்காக என்னையெல்லாம் உங்களுக்கு பிடிக்குமா என கேட்டு சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ராணுவ வீரர் ஒருவரின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். படத்தின் மீது, “ஒரு நடிகைன்னா உங்களுக்கு புடிக்கும்… என்னையெல்லாம் உங்களுக்கு புடிக்குமா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Pavani என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூன் 19ம் தேதி பதிவிட்டிருந்தார். […]

Continue Reading

பிரதமர் மோடி சாதுக்களுடன் இருக்கும் புகைப்படத்தை வைத்து பொருளாதாரத்தை சரி செய்ய ஆலோசனை என கிண்டல்!

பொருளாதாரத்தை சரி செய்வது எப்படி என சன்னியாசிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார் என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive பிரதமர் மோடி இந்து மதத் துறவிகளுடன் அமர்ந்து பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “பொருளாதாரத்தை சரி செய்வது எப்படி? மயில்களுக்கு அரிசி போடுவது எப்படி? – நிபுணர்களுடன் […]

Continue Reading

இட ஒதுக்கீட்டை நம்பி நான் வரல… இளையராஜா பெயரில் பொய்ச் செய்தி வெளியிட்ட குமுதம்!

‘’இட ஒதுக்கீட்டை நம்பி நான் வரல, என்னோட திறமையில்தான் வந்தேன்,’’ என்று கூறி இளையராஜா பேசியதாக, சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த நியூஸ் கார்டை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டார். இதன்பேரில் நாம் தகவல் தேடியபோது பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக் போன்றவற்றில் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

விவசாயிகள் போராட்ட வீடியோவை எடுத்து நுபுர் சர்மா கைது என்று பரப்பும் நெட்டிசன்கள்!

‘’நுபுர் சர்மா கைது செய்யப்பட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பாஜக.,வைச் சேர்ந்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் சமீபத்தில் நபிகள் நாயகம் பற்றி தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை சர்வதேச அளவில் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, இஸ்லாமிய நாடுகள் பலவும் இந்தியாவிற்கு கண்டனம் […]

Continue Reading

கோவாவில் பசுவை விரட்டிய வெளிநாட்டுப் பெண்ணை சங் பரிவார் அமைப்பினர் தாக்கினரா?

கோவா கடற்கரையில் பசு மாட்டை விரட்டிய வெளிநாட்டுப் பெண்ணை சங் பரிவார் அமைப்பினர் தாக்கினர் என ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடற்கரையில் இருவர் தாக்கிக் கொள்கின்றனர். அதில் ஒருவர் அயல் நாட்டினர் போல உள்ளார். மற்றொருவர் இந்தியர் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே சமரசம் செய்ய சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால், வெளிநாட்டைச் சார்ந்த […]

Continue Reading

Rapid FactCheck: ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டு டைம் ஊடகம் அட்டைப் படம் வெளியிட்டதா?

‘’ஹிட்லருடன் ஒப்பிட்டு மோடி புகைப்படத்தைச் சித்தரித்து டைம் ஊடகம் அட்டைப் படம் வெளியிட்டது,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பலர் உண்மை போல குறிப்பிட்டு, ஷேர் செய்வதைக் கண்டோம். Twitter Claim Link […]

Continue Reading

அக்னிபாத் திட்டத்திற்கு மாற்றாக ஜலபாத் திட்டம் என்று மோடி அறிவித்தாரா?

‘’அக்னிபாத் திட்டத்திற்கு மாற்றாக ஜலபாத் என்ற புதிய திட்டத்தை மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவித்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +919049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் பலர் இதனை ஷேர் செய்வதைக் கண்டோம். […]

Continue Reading

கான்பூரில் முஸ்லீம்கள் போராட்டம் தொடங்கும் முன்பாக பா.ஜ.க.,வினரிடம் பேசிய போலீஸ் அதிகாரியின் வீடியோவா இது?

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, இஸ்லாமியர்கள் கலவரத்தில் ஈடுபடலாம், வெடிகுண்டு வைத்திருக்கலாம் என்று பா.ஜ.க-வினர் போலீசாரிடம் கூறினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காவல் துறை அதிகாரி இந்தியில் ஏதோ பேசுகிறார். நிலைத் தகவலில், “#கான்பூர்_போராட்டத்தில்_வெடிகுண்டு போலீஸாரிடம்_பாஜக_உரையாடல். உபி. அலகாபாத் மாவட்டம் கான்பூர் பிராக்யராஜ் பகுதியில், நபிகளார் அவமதிப்பு பிரச்சாரம் செய்த, […]

Continue Reading

மீண்டும் மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டணச் சலுகை அமலுக்கு வருகிறதா?

மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் கட்டண சலுகை வழங்கும் திட்டம் மீண்டும் அமலுக்கு வருகிறது என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குமுதம் வெளியிட்ட நியூஸ் கார்டை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மீண்டும் அமலுக்கு வருகிறது ரயில் பயண கட்டண சலுகை. 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதம் 58 வயதுக்கு மேற்பட்ட […]

Continue Reading

இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்ததா ஐக்கிய அரபு அமீரகம்?

‘’இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இந்த பதிவின் கமெண்ட்களில், இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்ததைப் போன்று பலர் குறிப்பிடுவதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்:இவர்கள் குறிப்பிடுவதைப் போல, இந்தியாவில் இருந்து கோதுமை […]

Continue Reading

இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து அம்மா உணவகங்களுக்கு சமையல் எண்ணெய் வாங்கும்படி அண்ணாமலை கூறினாரா?

அம்மா உணவகங்களுக்கு தேவையான சமையல் எண்ணெயை இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும் என்று அண்ணாமலை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதேபோல, ஃபேஸ்புக்கிலும் இதனை சிலர் உண்மை போல குறிப்பிட்டு, பகிர்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading