FACT CHECK: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் படம் இது இல்லை!

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் படம் என்று சமூக ஊடகங்களில் பலரும் ஒரு இளம் பெண்ணின் படத்தை பகிர்ந்து வருகின்றனர். அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இளம் பெண் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவில், “வன்புணர்வு செய்து ஐந்து கிலோமீட்டர் தூரம் துப்பட்டாவால் கழுத்தில் கட்டி இழுத்து செல்லப்பட்டு, கால்கள் முறிக்கப்பட்டு, கழுத்து திருகப்பட்டு, முதுகெலும்பும் நொறுக்கப்பட்டு, நாக்கு குதறப்பட்டு ஒரு தலித் […]

Continue Reading

FACT CHECK: இளம் வயதில் அன்னை தெரசா என்று பகிரப்படும் வியட்நாம் பெண்ணின் படம்!

அன்னை தெரசாவின் இளம் வயது புகைப்படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 அன்னை தெரசா படத்துடன் இளம் வயது பெண்மணி ஒருவரின் புகைப்படத்தை இணைத்து பகிர்ந்துள்ளனர். அதில், “எங்கு தேடினாலும் கிடைக்காத அழகிய புகைப்படங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அன்னை தெரசா இளம் […]

Continue Reading

FACT CHECK: சத்தியமங்கலம் வனப் பகுதியில் ராமாயண கால ஜடாயு பறவை கண்டுபிடிக்கப்பட்டதா?

சத்தியமங்கலம் வனப் பகுதியில் புனிதத் தன்மை வாய்ந்த ஜடாயு பறவை கண்டறியப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கழுகு ஒன்று பல முயற்சிகளுக்குப் பிறகு சிறகை விரித்து பறக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இராமாயணத்தின் கதைக்கு புகழ் பெற்ற ஜடாயு ஆபூர்வ −தெய்வீக புனிதத்தன்மை வாய்ந்த ஜடாயு பறவை வகை இனத்தினை […]

Continue Reading

வெறும் 10 நிமிடத்தில் டோக்கியோ சென்ற புல்லட் ரயில்?- டிஜிட்டல் வதந்தி

‘’வெறும் 10 நிமிடத்தில் 502 கிலோ மீட்டர் கடந்து டோக்கியோ சென்றடைந்த அதிவேக புல்லட் ரயில்,’’ எனக் கூறி பகிரப்படும் வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைதளங்களில் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இதனை நமது வாசகர் ஒருவர், நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி வைத்து, உண்மை கண்டறிந்து சொல்லும்படி கேட்டார். இதன்பேரில், நாம் ஆய்வு மேற்கொள்ள தொடங்கினோம். முதலில், இதனை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என தேடியபோது, பலர் […]

Continue Reading

சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்ட போது எடுத்த புகைப்படம் இதுவா?

‘’சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடந்தபோது எடுத்த புகைப்படம்,’’ எனக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 29, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், பணம், நகைகள் நிறைந்து கிடக்கும் புகைப்படம் ஒன்றை இணைத்து, அதன் மேலே, ‘’ சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் நகைகள் என அப்போது கைப்பற்றியவர்களே […]

Continue Reading

திமுக பற்றி பகிரப்படும் எடிட் செய்யப்பட்ட போஸ்டர்!

‘’என்றும் எதிர்க்கட்சி தலைவராக தளபதி ஸ்டாலின்,’’ என்று கூறி பகிரப்படும் திமுக போஸ்டர் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், ‘’என்றும் எதிர்க்கட்சி தலைவராக தளபதி அவர்கள் தான் என்பது மக்கள் முடிவு செய்துள்ளனர். சு. சண்முகம். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர்,’’ என எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி பற்றி பகிரப்படும் தவறான பேனர் புகைப்படம்!

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி பகிரப்படும் பேனர் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.  Facebook Trending Link இதேபோல, ட்விட்டரிலும் ஏராளமானோர் இதனை உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.  Twitter Trending Link உண்மை அறிவோம்:சாமானின் முதல்வர் எனக் […]

Continue Reading

FACT CHECK: பாதிரியார் தப்பி ஓடும் வீடியோ இந்தோனேஷியா நிலநடுக்கத்தின் போது எடுத்ததா?

இந்தோனேஷியாவில் பூகம்பம் ஏற்பட்ட போது கிறிஸ்தவ ஆலயத்தில் இருந்த பாதிரியார் தப்பி ஓடியதாகவும், மசூதியில் இருந்த இமாம் தொடர்ந்து தொழுகை செய்ததாகவும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 இரண்டு காணொளிகளைத் தொகுத்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், இந்தோனேஷியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில […]

Continue Reading

FACT CHECK: விவசாய சட்டத்தைக் கண்டித்து டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியா?- இது பழைய வீடியோ!

டெல்லியில் மோடி அரசு கொண்டு வந்த விவசாய சட்டத்தை எதிர்த்து 2வது நாளாக விவசாயிகள் பேரணி நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பிரம்மாண்ட பேரணி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் லோகோ உள்ளது. நிலைத் தகவலில், “மோடியின் விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 2வது நாளாக விவசாயிகள் பேரணி. பல்வேறு மாநிலங்களின் […]

Continue Reading

FACT CHECK: லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள் போராட்டத்தை மீடியாக்கள் மறைத்ததா?

சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் மசோதாவை எதிர்த்து லட்சக் கணக்கில் விவசாயிகள் திரண்டு நடத்திய போராட்டத்தை மீடியாக்கள் மறைத்தன என்று கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link லட்சக் கணக்கில் திரண்ட மக்களின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீடியாக்கள் அமைதியோ அமைதி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஹேஷ்டேக்கில் Farmers Protest, farmers protest […]

Continue Reading

FACT CHECK: அஸ்ஸாம் அரசியல்வாதி வீடியோவை நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என்று பரப்பும் நெட்டிசன்கள்!

ஆங்கிலத்தில் பேசத் திணறும் அரசியல்வாதியின் வீடியோவை நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என்று சமூக ஊடகங்களில் பலரும் பரப்பி வருகின்றனர்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஆங்கிலத்தில் பேசத் திணறும் இளைஞர் ஒருவரின் வீடியோவை பகிர்ந்துள்ளனர். வீடியோவிலேயே “வடக்கன்ஸ். நீட் தேர்வில் பாஸ் ஆன உடன் எடுத்த பேட்டி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நீட் தேர்வில் இவன் தேர்ச்சி!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வீடியோவில் நிஜத்தின் நிழல் என்ற […]

Continue Reading

FACT CHECK: பஞ்சாபில் வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தாக்குதலா?

பஞ்சாபில் வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “பஞ்சாப்பில் வேளாண் மசோதாக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் தாக்கப்படும் விவசாயிகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை JALLIKATTU-Veeravilaiyattu என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 செப்டம்பர் 25ம் தேதி […]

Continue Reading

இந்த புகைப்படத்தில் இருப்பவர் ஃபேஷன் டிசைனர் கிர்சாய்தா ரோட்ரிகஸ் இல்லை!

‘’இந்த புகைப்படத்தில் இருப்பவர் பிரபல ஃபேஷன் டிசைனர், புற்றுநோயில் பாதிக்கப்பட்டவர்,’’ என்று கூறி ஒரு தகவல் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 25, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த பதிவில், பெண் ஒருவர் புற்றுநோய் சிகிச்சையில் உள்ளதைப் போன்ற புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’அவர் பிரபல ஃபேஷன் டிசைனர். நிறைய வசதிகள் இருந்தும் புற்றுநோய் பாதித்து மருத்துவமனையில் […]

Continue Reading

FACT CHECK: ஹரியானாவில் பாஜக எம்.எல்.ஏ முகத்தில் சாணி அடித்த விவசாயிகள்; முழு உண்மை என்ன?

ஹரியானாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ முகத்தில் சாணி அடித்த விவசாயிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஒருவர் முகத்தில் மை போல ஏதோ பூசப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “தீ பரவட்டும்… நெற்றியில் சந்தனம் வைப்பது போல் கிட்ட போய் ஹரியானா பிஜேபி எம்.எல்.ஏ முகத்தில் சாணியை பூசி செருப்பால் அடித்த விவசாயிகள்….!! […]

Continue Reading

பைக் ரேசில் கீழே விழுந்தவர் மீண்டும் வேறு ஒரு பைக்கில் சென்று ஜெயித்ததாக பரவும் வீடியோ உண்மையா?

பைக் ரேஸ் பந்தயத்தில் கீழே விழுந்த வீரர் மீண்டும் எழுந்து வந்து வேறு ஒரு பைக்கில் சென்று வெற்றி பெற்றதாக வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 தன்னம்பிக்கை வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அதில் பைக் ரேசர் டிராக்கில் கீழே விழுகிறார். பின்னர், அவர் தொடங்கிய இடத்துக்கு ஓடி வந்து வேறு ஒரு பைக்கை எடுத்துக் கொண்டு சென்று வெற்றி […]

Continue Reading

FactCheck: ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி ஒரு விதவை என பரவும் தவறான தகவல்!

‘’ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி ஒரு விதவை,’’ எனக் கூறி பகிரப்படும் தகவலை ஃபேஸ்புக்கில் கண்டோம். இதனை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 23, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிட்டுள்ளனர். இதில், ‘’மதுவதந்தி உன்னிடம் ஒரு கேள்வி. நீங்க கணவரை இழந்தவராமே, உங்க வர்ணாசிரமப்படி நீங்கள் விதவையாமே, அது உண்மையாக இருந்தால், நீங்கள் தலைக்கு மொட்டையடித்து, வெள்ளைப் புடவை அணிந்து, பொட்டு வைக்காமல் வீட்டிலேயே […]

Continue Reading

Factcheck: இந்த பெண் பிரசவத்திற்குப் பின் இறந்ததால் டாக்டர் கதறி அழுவதாக பரவும் வதந்தி!

‘’14 ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பெற்ற இந்த பெண் பிரசவித்த கையோடு இறந்ததால் டாக்டர் கதறி அழுகிறார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link கடந்த செப்டம்பர் 16, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், புதிதாய் பிறந்த பச்சிளங்குழந்தை தாயின் அருகில் அழுகிற புகைப்படத்தையும், மருத்துவப் பணியாளர் சீருடையில் உள்ள மற்றொருவர் […]

Continue Reading

Fact Check: 50 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலரா இது?

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலர், என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமூக ஊடகங்களில் வந்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளது போல உள்ளது. சங்கு போல தோற்றம் அளிக்கும் ஒன்றின் மீது, “50 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் திரிசங்குமலர் அனைவரும் பார்த்து மகிழுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த படத்தை ‎தோட்டம் Garden விவசாயம் Farming […]

Continue Reading

Fact Check: அயோத்தி ராமர் கோயில் மணியடிக்கும் குரங்கு; தவறான தகவல்!

அயோத்தி ராமர் கோவில் மணியை குரங்கு ஒன்று அடிக்கிறது எனக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கோவில் கொடி மரத்தை குரங்கு ஒன்று அசைக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பூஜை நேரத்தில் மனிதனால் அசைக்க முடியாத ஆலைய மணியை அசைக்கும் குரங்கு…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

Fact Check: தமிழக சட்டமன்ற தேர்தலில் 660 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ராகவன் கூறினாரா?

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பா.ஜ.க 660 இடங்களில் வெற்றி பெறும் என்று தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாளிதழில் ஒன்ற வெளியான, “தமிழகத்தில் தனித்துப்போட்டியிட்டால் 660 இடங்களில் ஜெயிப்போம்! – பா.ஜ.க பொதுச் செயலாளர் பேட்டி” என்ற செய்தியின் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், இந்த அறிவாளியை வைத்திருக்கும் […]

Continue Reading

Fact Check: தெருவில் உட்கார்ந்து காய்கறி விற்கும் இன்ஃபோசிஸ் சுதா நாராயணமூர்த்தி?

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா நாராயணமூர்த்தி தெருவில் உட்கார்ந்து காய்கறி விற்பதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா நாராயணமூர்த்தி காய்கறி விற்பனை செய்வது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தன் மன அகங்காரம் நீங்க திருமதி சுதா மூர்த்தி அவர்கள் (இன்ஃபோசிஸ் நிறுவனர்) வருடத்தில் ஒரு நாள் சாலையோர காய்கறி விற்கிறாா்கள். […]

Continue Reading

தமிழ்நாடு பாஜகவில் நாய்கள் பிரிவு தொடங்கப்பட்டதா?

‘’தமிழ்நாடு பாஜகவில் நாய்கள் பிரிவுக்கு புதிய துணைத் தலைவர் நியமனம்,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 Facebook Claim Link 4 Archived Link 4 இதன்படி, பாஜக நிர்வாகிகள் நாயுடன் […]

Continue Reading

Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்!

வட மாநிலங்களில் நீட் தேர்வு நடைபெறும் விதம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தேர்வு எழுதும் மாணவர் ஒருவருக்கு ஆசிரியை உதவும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. தெளிவாக அதில் 10ம் வகுப்பு வாரியத் தேர்வு என்று உள்ளது. நிலைத் தகவலில் “தமிழ்நாடு (vs) வட மாநிலம்…!!! நீட் தேர்வு மையத்தின் பாரபட்சம்…!!! தமிழகத்தில் தாலி கழட்டும் கட்டுப்பாடு வடமாநிலத்தில் அதிகாரிகள் […]

Continue Reading

விஜிபி ‘சிலை மனிதன்’ தாஸ் கொரோனா வைரஸ் பாதித்து இறக்கவில்லை!

‘’விஜிபி சிலை மனிதன் தாஸ் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்துவிட்டார்,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இதுபோல, நிறைய பேர் விஜிபி சிலை மனிதர் தாஸ் உயிரிழந்துவிட்டதாகக் கூறி தகவல் பகிர்ந்து வருகின்றனர். ‘’இது அவரது தனிப்பட்ட வாழ்வை பாதிப்பதாக உள்ளது, இப்படி எங்கேயும் செய்தி வெளியாகவில்லை. அவர் […]

Continue Reading

நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு: அர்ஜூன் சம்பத் பற்றிய தகவல் உண்மையா?

‘’நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 19, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், அர்ஜூன் சம்பத் மற்றும் சூர்யா இருவரும் நேரடியாகக் கருத்து மோதலில் ஈடுபட்டது போன்ற ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் […]

Continue Reading

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஐபிஎஸ் அதிகாரி ஆனதாக பகிரப்படும் வதந்தி

‘’ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஐபிஎஸ் அதிகாரி ஆன வியப்பான சம்பவம்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்பட தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 7, 2020 அன்று இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், பெண் ஒருவரும், 2 ஆண்களும் போலீஸ் சீருடை அணிந்தபடி ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ ஒரே […]

Continue Reading

போதை மருந்து காரணமாக நடிகை ஶ்ரீதேவி கொலை செய்யப்பட்டதாக பரவும் தகவல் உண்மையா?

நடிகை ஶ்ரீதேவி போதை மருந்து உட்கொண்டதால் உயிரிழந்தார் என்று துபாய் மருத்துவமனை உடற்கூறு ஆய்வு முடிவு கூறுகிறது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link துபாய் சுகாதாரத் துறை வழங்கிய நடிகை ஶ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வு முடிவு நகல் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஸ்ரீதேவி கொலை ரிப்போர்ட் அவுட். ரெண்டு வருஷம் கழிச்சு உண்மைகள் வெளியேவருது. பாலிவுட், போதைப்பொருள் மாபியாக்களின் […]

Continue Reading

கையடக்க டிரோன் கண்டுபிடித்த அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி?- முழு விவரம் இதோ!

கையடக்க தானியங்கி டிரோனை உருவாக்கி சாதனை படைத்த அமெரிக்க வாழ் இளம் விஞ்ஞானி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் வரும் அவர் யார் என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கையடக்க, நம்முடைய கையை நகர்த்துவதன் மூலம் தானாக செயல்படும் மிகச்சிறிய டிரோன் கருவியின் அறிமுக வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்கவாழ் இந்திய இளம் விஞ்ஞானியின் சிறந்த கண்டுபிடிப்பு […]

Continue Reading

மலேசிய போலீசில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண் அடித்துக் கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி

‘’மலேசிய போலீசில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண் அடித்துக் கொலை,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 16, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், மலேசிய போலீசில் பணிபுரியும் பெண்கள் சிலரின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’மலேசியாவில் அடித்தே கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி பெண்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் […]

Continue Reading

சாலையில் நடனம் ஆடினாரா சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்?

சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.பி சஞ்சய் ராவத் சாலையில் நடனமாடியதாக சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 சிவசேனா கட்சியின் பிரபல நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் போல் உள்ள ஒருவர் நடனமாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என்ன சஞ்சய் ராவத் இன்னொரு ஆட்டம் ஆடுவோமா?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Vijayakumar Arunagiri என்பவர் […]

Continue Reading

ஸ்கூல் வாடகை கட்ட முடியவில்லை என்று ரஜினிகாந்த் கூறியதாக பரவும் வதந்தி

‘’ஸ்கூல் வாடகை கட்ட முடியவில்லை,’’ என்று ரஜினிகாந்த் கூறியதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:கடந்த ஆகஸ்ட் மாதம், நடிகை ஜோதிகா, தஞ்சை அரசு மருத்துவமனைக்கு, மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவும் வகையில், ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.  KumudamOnline […]

Continue Reading

டான்ஸ் நிகழ்ச்சி நடுவர்களை மிரட்டிய பா.ஜ.க தலைவர்- ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவர்களை பா.ஜ.க பிரமுகர் மிரட்டினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தன்னுடைய தந்தை பிரபல புள்ளி என்பதால் தன்னை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்கிறார். இதனால் நடுவர்கள் அவரை வெளியேற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாஜக தலைவருடைய மகனாம் டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சி நொய்டாவில் […]

Continue Reading

இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா?

‘’இந்தி ஒரு மென்மையான மொழி,’’ என்று இளையராஜா கூறியதாக, சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 7, 2020 வெளியான இந்த ஃபேஸ்புக் பதிவில், இளையராஜா பெயரை குறிப்பிட்டு ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’ஒரு மொழியை கற்றுக் கொண்டால்தான், அந்த மொழியின் புலமை தெரியும். இந்தி ஒரு மென்மையான மொழி – இளையராஜா,’’ என்று எழுதியுள்ளனர். […]

Continue Reading

திப்பு சுல்தான் என்று கூறி பகிரப்படும் தான்சானியா நபரின் புகைப்படம்!

திப்பு சுல்தானின் அசல் படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link படம் ஒன்றை வீடியோ வடிவில் பகிர்ந்துள்ளனர். அதில், “பாட புத்தகங்களில் திப்பு சுல்தான். உண்மையில் திப்பு சுல்தான்” என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், திப்பு சுல்தான் உண்மை முகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Dinesh Yadav என்பவர் 2020 மே 11ம் தேதி […]

Continue Reading

நடிகர் சூர்யா மற்றும் கவுண்டர் சமூகம் பற்றி கல்யாண ராமன் விமர்சித்தாரா?

‘’காட்ட வித்து கள்ளு குடிச்ச நேரத்துல ஒழுங்கா இந்தி படிச்சிருந்தா நீட்ல பாஸாகியிருக்கலாம்,’’ என்று பாஜக ஆதரவாளர் கல்யாணராமன் கூறியதாகக் கூறி ஒரு தகவல் சமூக வலைதளத்தில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ட்வீட்டரில் சர்ச்சையான கருத்து பகிர்வதன் மூலமாக பிரபலமானவர் கல்யாண ராமன். பாஜக ஆதரவாளரான இவர், சிலருக்கு நேரடி […]

Continue Reading

நீட் தேர்வு ஆதரவு புத்தகம் வெளியிட்டாரா சூர்யா?- முழு விவரம் இதோ!

நீட் தேர்வை ஆதரித்து நடிகர் சூர்யா மற்றும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு ஆகியோர் புத்தகம் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர் சூர்யா, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோர் புத்தகம் ஒன்றை வெளியிடும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சூர்யாவும் நீதிபதி சந்துறுவும் 2017இல் […]

Continue Reading

இந்தியை எதிர்த்து கடுமையாக போராடிய ஸ்டாலின் என்று பகிரப்படும் வீடியோ… உண்மை அறிவோம்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியைக் கடுமையாக எதிர்த்துப் போராடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அது பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வங்க மொழி பேசும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “திமுக தலைவர் #இந்தியை எதிர்த்து கடுமையாக #போராடிய தருணம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை […]

Continue Reading

கர்நாடகாவில் பாகிஸ்தான் கொடியுடன் தமிழக கார்? – ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு

கர்நாடகாவில் பாகிஸ்தான் கொடியுடன் வந்த நபரைப் பிடித்து இந்திய தேசியக் கொடியை ஏற்ற வைத்து அனுப்பிய காவலர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 காரில் பிறை – நட்சத்திரத்துடன் கூடிய பச்சை நிற கொடியை அகற்றி, இந்திய தேசியக் கொடி பொருத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தான் கொடியுடன் வலம் […]

Continue Reading

உறை பனியில் இந்திய ராணுவ வீரர்- இது எங்கே எடுத்த புகைப்படம் தெரியுமா?

உறைய வைக்கும் பனியில் தேசம் காக்கும் நமது ராணுவ வீரர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பனியில் காவல் காக்கும் ராணுவ வீரர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாம் இங்கு நிம்மதியாக தூங்க தனது தூக்கத்தை தொலைத்து, உயிரை உறைய வைக்கும் பனியில் தேசம் காக்கும் நமது ராணுவ சகோதரருக்கு ஒரு சல்யூட் போடுங்களேன். ஜெய்ஹிந்த்” என்று […]

Continue Reading

துணை முதல்வர் பதவி கேட்டு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியதா?

‘’துணை முதல்வர் பதவி கேட்டு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 11, 2020 அன்று இந்த செய்தியை நியூஸ் 7 தமிழ் ஊடகம் பகிர்ந்துள்ளது. இதில், ‘’தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என […]

Continue Reading

+2 தேர்வை நிறுத்தலாமா என்று அண்ணாமலை கேட்டாரா?- போலி ட்வீட்!

12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலையின் ட்வீட் ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பா.ஜ.க-வைச் சேர்ந்த அண்ணாமலை ட்வீட் பதிவு ஒன்றின் படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், “12th fail ஆகிட்டோம்னு வருசா வருசம்தான் சில மனவலிமை குறைந்த மாணவர்கள் சாகுறாங்க. எதுக்கு 12th வச்சுருக்கீங்க?  அது போலதான் #NEET entrance. இந்தியா […]

Continue Reading

திமுக தலைவராக வருவேன் என்று கனிமொழி சொன்னதாகப் பரவும் வதந்தி

‘’திமுக தலைவராக பொறுப்பேற்பேன்,’’ என்று கனிமொழி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், தந்தி டிவி பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’தலைவர் ஸ்டாலின் மறைவுக்குப் பின் நான்தான் திமுக தலைவராக பொறுப்பேற்பேன் – கனிமொழி,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

பிரதமர் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி ரஃபேல் போர் விமானம் இணைக்கப்பட்டதா?

பரிசுத்த வேதாகமத்தில் இருந்து வேத வசனங்களை வாசித்து வெளியுறவுத் துறை அமைச்சர், பிரதமர் முன்னிலையில் ரஃபேல் போர் விமானம் இந்திய விமானப்படையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 இந்திய விமானப் படையில் ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் விழாவில் நடந்த சர்வமத பிரார்த்தனையில் கிறிஸ்தவ பிரார்த்தனை காட்சி வீடியோ பகிரப்பட்டுள்ளது.  […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் பற்றி பகிரப்படும் பழைய செய்தி!

‘’மு.க.ஸ்டாலின் 6 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என்று கூறினார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 11, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், மு.க.ஸ்டாலின் பற்றி புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, சன் டிவி, மாறன் சகோதரர்களின் சொத்து விவரம் உள்ளிட்டவற்றை பற்றியும் விமர்சித்து […]

Continue Reading

மும்பையில் சாலை நடுவே கட்டப்பட்ட மசூதி என்று பகிரப்படும் வதந்தி!

மும்பையில் சாலையின் நடுவே மசூதி கட்டப்பட்டுள்ளது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் ஒரு படம் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலையின் குறுக்கே மசூதி இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மும்பையில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட மசூதி. இதுதான் இந்திய சிறுபான்மையினர் சுதந்திரம். எங்கே நடு நிலை ஹிந்துக்கள் ?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Chandran Palanimalai என்பவர் 2020 செப்டம்பர் […]

Continue Reading

கள்ள நோட்டு அச்சடித்து சிக்கிய ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வினர்; வீடியோ உண்மையா?

கள்ள நோட்டு அச்சடித்து சிக்கிய பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கட்டுக்கட்டாக புதிய 2000ம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 1000ம் ரூபாய் நோட்டு கட்டுக்கள், அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணங்கள் இருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

புலம்பெயர் தமிழர்களிடம் நிதி கேட்டு சீமான் அறிக்கை வெளியிட்டதாகப் பரவும் வதந்தி

‘’புலம்பெயர் தமிழர்களிடம் நிதி உதவி கேட்டு சீமான் அறிக்கை,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பெயரில் வெளியான அறிக்கை […]

Continue Reading

சவுக்கு சங்கருடன் உணவு அருந்தும் கல்யாணசுந்தரம்- உண்மை என்ன?

‘’சவுக்கு சங்கருடன் உணவு அருந்தும் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட துரோகிகள்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  இதில், தமிழ்த் தேசிய ஆர்வலர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் உணவு அருந்தும் புகைப்படம் ஒன்றை இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’ துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ஒரு இனம் இந்த வரலாறு தொடர்கிறது அதற்கு சான்று இதோ சவுக்கு சங்கருடன் உணவு அருந்தும் ஒரு […]

Continue Reading

ஏ.டி.எம்-களில் பிராந்திய மொழி நீக்கமா? திருச்சி சிவா, நிர்மலா சீதாராமன் பற்றி பரவும் வதந்தி

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்-களில் பிராந்திய மொழிகளை நீக்க உத்தரவிட்டதாக திருச்சி சிவா கூறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தி.மு.க மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா ஆகியோர் புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஆதாரம் கேட்ட நிதியமைச்சர் – முக்காடு போட்டுக்கொண்ட திமுக. ஆதாரம் கேட்ட நிதியமைச்சர் – முக்காடு […]

Continue Reading

பெரியார் பல்கலைக் கழகத்தில் பி.ஏ இந்தி கற்றுத் தரப்படுவதாக பரவும் வதந்தி!

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பிஏ இந்தி கற்றுத் தரப்படுகிறது என்று சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சேலம் தந்தை பெரியார் பல்கலைக் கழக லோகோவுடன் பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், வழங்கப்படும் பாடங்கள் என்ற தலைப்பின் கீழ் பி.ஏ இந்தி என்று இருந்தது. நிலைத் தகவலில், “ஹிந்தி வேண்டான்னு இப்போ எதுக்குடா சண்டை போடுறீங்க காசு கொடுத்தா பெரியார் பல்கலைக் […]

Continue Reading