ட்விட்டரில் முதலிடம் பிடித்த விஸ்வாசம்- வைரல் செய்தி உண்மையா?

“ட்விட்டரில் இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்த அஜித், உச்சகட்ட கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்” என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 இந்தியாவிலேயே முதல் ஐந்து இடத்தில் முதலிடத்தைப் பிடித்த அஜித்! உச்சகட்ட கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள் என்ற தலைப்புடன் கூடிய செய்தி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த செய்தியை, Tamil360Newz என்ற […]

Continue Reading

சீமானை விமர்சித்த ஹரி நாடார்: நியூஸ்7 செய்தி உண்மையா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார் விமர்சித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் பழைய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சுயேட்சையாக நின்ற என்னை ஜெயிக்க துப்பில்லை, நடிகர் ரஜினிகாந்த் பற்றி நீங்கள் பேசலாமா? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஹரி நாடார் கேள்வி” […]

Continue Reading

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விபசாரம் குறைந்துள்ளது என்று ரவிசங்கர் பிரசாத் கூறினாரா?

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் விபசாரம் வெகுவாக குறைந்துள்ளது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாக ஒரு நியூஸ்கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜெயம் அசோக் நியூஸ் என்ற பெயரில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விபச்சாரம் வெகுவாக குறைந்துள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேச்சு” என்று உள்ளது. மேலும், […]

Continue Reading

தேள் கொட்டினால் இதய நோய் வராது: சமூக ஊடகத்தை கலக்கும் வதந்தி!

தேள் கொட்டினால் இதய நோய் வராது, தேனி கொட்டினால் உயர் ரத்த அழுத்தம் வராது, செய்யான் கடித்தால் சர்க்கரை நோய் வராது, சங்குழவி கடித்தால் புற்றுநோய் வராது என்று ஒரு பதிவு வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link உங்களுக்குத் தெரியுமா என்று தலைப்பிட்டு தேள் படத்துடன் கூடிய போட்டோ நியூஸ் கார்டு ஒன்று ஃபேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஒரு […]

Continue Reading

புதிய தலைமுறை கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மோடி, அமித்ஷா சிரித்தனரா?

புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் மோடி, அமித்ஷா, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் சிரிப்பது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 1.14 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அதில் […]

Continue Reading

கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்த எடப்பாடி: குழப்பிய நக்கீரன் தலைப்பு!

“கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்” என்று நக்கீரனில் வெளியான செய்தி குழப்பத்தை ஏற்படுத்தியது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Article Link Archived Link நக்கீரன் இணையதளம் வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய செய்தி ஒன்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்” என்று செய்தி இணைக்கப்பட்டு இருந்தது. 2019 நவம்பர் 9ம் தேதி பதிவிடப்பட்டுள்ள இந்த செய்தியை […]

Continue Reading

ராமர் கோவில் கட்ட மனைவியை அனுப்புகிறேன் என்று அர்ஜுன் சம்பத் கூறினாரா?

“அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக என் சார்பில் என் மனைவியை அனுப்புகிறேன்” என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ்கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக என் சார்பில் என் மனைவியை அனுப்புகிறேன் – அர்ஜுன் சம்பத், இந்து […]

Continue Reading

ராமரும் பாபரும் சூழ்ச்சி செய்து என் நிலத்தை பறித்துவிட்டனர்: ரஞ்சித் பெயரில் பரவும் வதந்தி

ராமரும், பாபரும் சூழ்ச்சி செய்து என் நிலத்தை பறித்துவிட்டனர் என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாபர் மசூதி இறுதி தீர்ப்பு என்று நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் படத்துடன் “ராமரும் பாபரும் சூழ்ச்சி செய்து என் நிலத்தை பறித்துவிட்டனர்! – […]

Continue Reading

தேவ மாதா மேரி கரு தரித்த நாள் டிசம்பர் 8: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

‘’தேவ மாதா மேரி கரு தரித்த நாள் டிசம்பர் 8,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Dumeels என்ற ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை நவம்பர் 7, 2019 அன்று பகிர்ந்துள்ளது. இந்த பதிவில், காலண்டர் தேதிகளின் புகைப்படத்தை பகிர்ந்து, ‘இந்த டவுட் யாராவது கிளியர் பண்ணுங்க‘ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை […]

Continue Reading

கனிமொழி வீடியோ வெளியானதா? ஃபேஸ்புக்கில் பரபரப்பை ஏற்படுத்திய பதிவு!

“கனிமொழி வீடியோ வெளியானது. உச்சகட்ட அவமானத்தில் தி.மு.க. என்ன ஒரு அசிங்கம்” என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 News Link Archived Link 2 தி.மு.க எம்.பி-க்கள் அ.ராசா, கனிமொழி புகைப்படத்தை சேர்த்து செய்தி பதிவு ஒன்று வெளியாகி உள்ளது. அதில், “கனிமொழி வீடியோ வெளியானது. உச்சக்கட்ட அவமானத்தில் தி.மு.க. என்ன ஒரு அசிங்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

திமுக மகளிரணியுடன் மகரஜோதி அன்று சபரிமலை செல்வேன் – கனிமொழி பெயரில் வதந்தி!

தி.மு.க மகளிரணியினருடன் மகர ஜோதி அன்று சபரிமலை செல்வேன் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தி.மு.க எம்.பி கனிமொழி புகைப்படத்துடன் கூடிய தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தி.மு.க மகளிரணியுடன் மகர ஜோதி அன்று சபரிமலை செல்வேன் – கனிமொழி பேச்சு” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. […]

Continue Reading

சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்படும் லயோலா கல்லூரி?

சென்னை லயோலா கல்லூரி உள்ள இடம் பிரபலமான சிவன் கோவில் ஒன்றுக்கு சொந்தமானது என்றும் அதன் குத்தகை 2021ம் ஆண்ட முடிவடைய உள்ளதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட பதிவை மொபைலில் ஸ்கிரீன்ஷாட் எடுத்தது போன்ற படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு செல்லும்வரை அதிகமாகப் பகிருங்கள். லயோலா கல்லூரி அமைந்திருக்கும் 96 […]

Continue Reading

1954ம் ஆண்டு அமெரிக்காவில் நேருவுக்கு கிடைத்த வரவேற்பு: ஃபேஸ்புக் படம் உண்மையா?

இந்தியாவுக்காக 3259 நாட்கள் சிறையில் வாடிய நேரு, அமெரிக்கா சென்றபோது கிடைத்த வரவேற்பு என்று ஒரு ட்வீட் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் வெளியிட்ட ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “1954ம் ஆண்டு நேருவுக்கும் இந்தியா காந்திக்கும் சிறப்பான வரவேற்பு அளித்த அமெரிக்க மக்கள்… எந்த ஒரு ஊடகத் தொடர்பு பிரசாரம், […]

Continue Reading

ரசீது இல்லா தங்கத்துக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க திட்டமா?

பொது மக்கள் வைத்திருக்கும் தங்கத்துக்கு ரசீது இல்லை என்றால் அதற்கு அதிகப்படியான அபராதம் விதிக்கும் திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் நரேந்திர மோடி படத்துடன் கூடிய போட்டோகார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “நடுத்தர மக்களின் சிறுசேமிப்புக்கு ஆப்பு” என்று தலைப்பிட்டுள்ளனர். மேலும், “மக்கள் ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அதிகபட்ச […]

Continue Reading

ரூ.133 கோடியில் தீபாவளி கொண்டாடிய யோகி அரசு: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு ரூ.133 கோடி செலவு செய்து தீபாவளி கொண்டாடியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Venkat Ramanujam என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 அக்டோபர் 31ம் தேதி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “5.5 லட்சம் தீபாவளி விளக்கு ஏற்றிய செலவு 133 கோடி : பாஜக யோகி அரசு. 1 […]

Continue Reading

400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் பகோடா மலர்: உண்மை என்ன?

400 ஆண்டுகளுக்கு ஒரு முலை மலரும் பகோடா மலர் இமயமலை திபெத்தில் பூத்துள்ளது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மிக உயரமான மலர் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மேல் பகுதியில், “400 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் பகோடா மலர் இமய மலை திபெத்தில்” என்று போட்டோஷாப்பில் டைப் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவை நாட்டு மருந்து சித்த […]

Continue Reading

கிறிஸ்தவராக மதம் மாறிய மோடி: ஃபேஸ்புக் வதந்தி!

பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க அதிரடி… கிறிஸ்தவத்திற்கு மாறினார் பிரதமர் மோடி என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த தேவாலயத்துக்கு பிரதமர் மோடி சென்றபோது எடுக்கப்பட்ட படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மீது, “பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க அதிரடி. கிறிஸ்தவத்திற்கு மாறினார் பிரதமர் மோடி. நாட்டேனியல் தாஸ் மோடி என்று பெயர் மாற்றி கிறிஸ்துவத்தை தழுவினார்” […]

Continue Reading

குவைத் பணக்காரர் நாசி அல் கார்கி மரணம்?

குவைத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் நாசி அல் கார்கி மரணம் அடைந்துவிட்டதாகவும், அவருடைய கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புடைய சொத்துக்களைப் பாருங்கள் என்று கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள ஒருவரின் புகைப்படம் மற்றும் சொகுசு விமானம், கப்பல், கார் உள்ளிட்டவற்றின் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில்,   “ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. ஆறடி நிலமே சொந்தமடா… குவைத்தில் பணக்காரர் […]

Continue Reading

பெரிய வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்வது சகஜம் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறினாரா?

பெரிய வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்வது சகஜம்தான். இதை அரசியலாக்கக் கூடாது என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 2019 மார்ச் 12 தேதியிடப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், ‘பெரிய வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்வது சகஜம்தான். […]

Continue Reading

பால் தினகரன் உதவவில்லை: சுஜித் தாய் வேதனை தெரிவித்தாரா?

”சிறுவன் சுஜித்தை காப்பாற்ற நூறு முறை பால் தினகரனுக்கு போன் செய்தேன், ஆனால் அவர் வரவில்லை” என்று சுஜித்தின் தாய் பேட்டி அளித்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தது போன்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், ”என் மகனை காப்பாற்ற நூறு முறை பால் தினகரனுக்கு போன் செய்தேன். பிராடு பாதிரி வரவே […]

Continue Reading

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க ரஷ்ய அதிபர் புடின் வருகிறாரா?

‘’அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க ரஷ்ய அதிபர் புடின் வருகிறார்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 OneIndia Tamil Link Archived Link 2 ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இணைத்துள்ளனர். இதே தகவலை தினகரன், ஏசியாநெட் தமிழ், நியூஸ்டிஎம் உள்ளிட்ட பல்வேறு செய்தி இணையதளங்கள் வெளியிட்டுள்ளன. அவற்றின் […]

Continue Reading

பிள்ளையார் கோவிலை அகற்ற வேண்டும்- சரவணா ஸ்டோர் பெயரில் பரவும் வதந்தி!

சரவணா ஸ்டோர் முன்பு உள்ள பிள்ளையார் கோவிலை அகற்ற வேண்டும் என்று சிலர் சரவணா ஸ்டோர் உரிமையாளரை அணுகியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 Article Link Archived Link 3 பிள்ளையார் கோவிலை உடனடியாக எடுக்கச் சொன்னவர்களுக்கு சரவணா ஸ்டோர் அண்ணாச்சி கொடுத்த பொளேர் பதிலடி! […]

Continue Reading

சர்தார் படேல் சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதா?

’சர்தார் படேல் சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சர்தார் படேல் சிலையில் வெள்ளை நிறத்தில் காணப்படும் சில கோடுகளை சுட்டிக்காட்டி, சிலை திறந்து ஒரே மாதத்தில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக, எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

காரப்பன் சில்க்ஸ் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா?- ஃபேஸ்புக் வதந்தி

சிறுமுகை காரப்பன் சில்க்ஸில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா உள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காரப்பன் சில்க்ஸ் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் ஜவுளிக்கடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து ஆபாசமாக பார்க்கிறார் முதலாளி” என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த பதிவை, Sabari R என்பவர் […]

Continue Reading

இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு?

இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட இந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 2.48 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இஸ்லாமியப் பெருமக்கள் அதிகமாக வாழ்கின்ற இந்தோனேசியா நாட்டில் பூமிக்கடியில் 7500 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவியருளிய சிவாலயம் கண்டுபிடிப்பு ! சைவ சமயத்தின், தமிழ்ச் […]

Continue Reading

மெயின் ரோட்டாண்டா வாம்மா; அமைச்சர் ஜெயக்குமார் பற்றி மீண்டும் பரவும் வதந்தி!

“மெயின் ரோட்டாண்ட வாம்மா இப்போ நம்மகிட்டயே டாக்டர் இருக்காங்க” என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் படங்களை ஒன்று சேர்த்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது – செய்தி” என்று உள்ளது. இதற்கு கீழ், அமைச்சர் ஜெயக்குமார் போனில் […]

Continue Reading

டாக்டர் பட்டம் பெற்றதற்காக எடப்பாடி பழனிசாமியை கேலி செய்தாரா தமிழிசை?

‘’டாக்டர் பட்டம் பெற்றதற்காக எடப்பாடி பழனிசாமியை கேலி செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Video Link  Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 22, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், பாஜக தமிழக முன்னாள் தலைவரும், இந்நாள் தெலுங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பேசுகிறார். அவர், ‘’ஒரு […]

Continue Reading

காரப்பா சில்க்ஸில் புடவை வாங்கு… கமல் பெயரில் பரவும் வதந்தி!

சிறுமுகை காரப்பா சில்க்ஸில் புடவை வாங்கு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ட்வீட் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாரப்பா ஊரினிலே பல கடையுண்டு யாரப்பா அங்கெல்லாம் துணி வாங்குவார்? காரப்பா சில்க்கினிலே புடவை வாங்கு ஜோரப்பா விலையும் தரமும் […]

Continue Reading

கீழடியில் இந்து கடவுள்களின் சிலை கிடைத்ததாக எச்.ராஜா பேசினாரா?

கீழடியில் இந்து கடவுள்களின் சிலை கிடைத்தது என்று எச்.ராஜா பேசுகிற ஒரு வீடியோவை பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வைரல் வீடியோவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link  காஞ்சி செந்தில் 2.0 என்பவர் இந்த வீடியோ பதிவை செப்டம்பர் 24, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசும் ஒரு காட்சியை இணைத்துள்ளனர். இதன் மேலே, ‘’கீழடி பற்றிய உண்மை தெரிஞ்ச […]

Continue Reading

400 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் மகாமேரு; காதில் பூ சுற்றும் ஃபேஸ்புக் பதிவு!

இமயமலைப் பகுதியில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மகாமேரு என்ற செடி பூத்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கோழியின் தலை போன்ற தோற்றம் கொண்ட மலர் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இயற்கையின் வினோதம். 400 வருடங்களுக்கு ஒரு முறை இமாலய மலையில் மலரும் , “மகாமேரு” அல்லது “ஆர்யா” பூ. இப்பொழுது […]

Continue Reading

பேச்சிப்பாறை அணையில் நீர் இடி விழும் காட்சி; வீடியோ உண்மையா?

‘’பேச்சிப்பாறை அணையில் நீர் இடி விழும் காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வீடியோ காட்சியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link  Archived Video Link  அன்பான இரு உள்ளங்கள் எனும் ஃபேஸ்புக் ஐடி அக்டோபர் 21, 2019 அன்று இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில், அணைக்கட்டு ஒன்றில் திடீரென நீருக்கடியில் எதோ வெடித்துச் சிதறும் காட்சி இடம்பெற்றுள்ளது. மேலே, ‘’ ⛈?⚡கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிபாறை […]

Continue Reading

ஃபேஸ்புக்கில் பரவும் திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை படம் உண்மையா?

திருவனந்தபுரம் – நாகர்கோவில் இடையேயான தேசிய நெடுஞ்சாலை குளம் போல காட்சி அளிப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை முழுக்க குண்டும் குழியுமாக இருக்கிறது. சாலையில் குளம்போல காட்சி அளிக்கும் பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணிக்கிறார். வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் பயனில்லாத சாலையாக அது உள்ளது. நிலைத் தகவலில் “திருவனந்தபுரம், நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை அவலநிலை. […]

Continue Reading

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இறந்துவிட்டதாகப் பரவும் வதந்தி உண்மையா?

‘’தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இறந்துவிட்டார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Link Archived Link Shahul Hameed என்பவர் இந்த பதிவை அக்டோபர் 20, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் புகைப்படத்தை பகிர்ந்து, அவரது பெயரை டைகர் எனக் குறிப்பிட்டு, மாவட்ட தெருநாய்கள் சங்க தலைவர் இறந்துவிட்டார், என்றும் கூறி, விமர்சித்துள்ளனர். இதனை […]

Continue Reading

அயோத்திக்கு பிறகு பூதாகரமாக வெடிக்கப் போகும் ஸ்ரீரங்கப்பட்டினம்?

அயோத்திக்கு பிறகு பூதாகரமாக வெடிக்க போகும் ஸ்ரீரங்கப்பட்டினம் திப்பு சுல்தான் கட்டிய மசூதி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 மசூதி ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மூளைக்கல்லில் முகம் போன்ற உருவம் தெரிகிறது. அந்த பகுதி மட்டும் காவி நிறத்தால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

சித்தியுடன் சின்னையா? ஃபேஸ்புக் விஷம புகைப்படம்

திரைப்பட நடிகை ஷகிலாவுடன் மாலையும் கழுத்துமாக டாக்டர் ராமதாஸ் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டாக்டர் ராமதாஸ் மற்றும் நடிகை ஷகிலா மாலையும் கழுத்துமாக உள்ளது போன்று படம் உள்ளது. இருவருக்கும் நடுவே டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளார். எடிட் செய்யப்பட்டது தெளிவாகத் தெரிகிறது. இந்த பதிவை, ராஜ லிங்கம் என்பவர் 2019 அக்டோபர் 18ம் […]

Continue Reading

ஐநா சபையிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தியதா இந்தியா?

ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து வாங்கிய கடன் அனைத்தையும் இந்தியா திருப்பி செலுத்திவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உலக வங்கியிடமிருந்தே கடன் பெறப்படும் சூழலில், ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து பெற்ற கடன் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருப்பது ஆச்சர்யத்தை அளித்து. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடி புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “United Nationsல் வாங்கப்பட்ட அனைத்துக் கடனையும் […]

Continue Reading

சீனாவில் உள்ள இந்து கோவில்களை செப்பனிட ஜின்பிங் உத்தரவு?

சீனாவில் உள்ள இந்து ஆலயங்களை செப்பனிட்டு தினமும் மூன்று வேளை பூஜைக்கு ஏற்பாடு செய்ய சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link “சீன அதிபர் ஜின்பிங் அதிரடி உத்தரவு… சீனாவில் உள்ள அனைத்து இந்து ஆலங்களையும் செப்பனிட்டு 3 வேளை பூஜைக்கு ஏற்பாடு…” என்று ஒரு போட்டோ கார்டு பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை […]

Continue Reading

சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன்; அற்புதம்மாள் பெயரில் பரவும் நியூஸ் கார்டு!

சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாயார் கூறியதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அக்டோபர் 16, 2019 காலை 10.10க்கு அந்த நியூஸ்கார்டு வெளியானதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அற்புதம்மாள் மற்றும் சீமான் படங்கள் […]

Continue Reading

அமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மன்மோகன் சிங்?

உலகின் மிகவும் நேர்மையானவர்கள் 50 பேர் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டதாகவும் அதில், இந்தியாவிலிருந்து இடம் பிடித்தது மட்டுமின்றி முதலிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்றும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Sheik Uduman என்பவர் மன்மோகன் சிங் படத்துடன் வெளியிட்டிருந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “உலகின் மிகவும் நேர்மையானவர்கள் 50 நபர்களின் […]

Continue Reading

மாமல்லபுரத்தை முன்வைத்த சீனா! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

சீன அதிபருடனான சந்திப்புக்கு வாரணாசியை மத்திய அரசு முன்வைத்தது என்றும் ஆனால் சீனாவோ, மாமல்லபுரத்தை முன் வைத்தது என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 18 தமிழ் நாடு வெளியிட்டது போன்ற செய்தியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில், “வாரணாசியைத் தேர்வு செய்த மத்திய அரசு… மாமல்லபுரத்தை முன் வைத்த சீனா…!” என்று இருந்தது. நிலைத் தகவலில், “மத மத […]

Continue Reading

சீமானை விமர்சித்த ரஜினிகாந்த்; பரபரப்பை ஏற்படுத்தும் நியூஸ் கார்டு!

“ராஜீவ் காந்தி மரணம் பற்றி சீமான் பேசியது அபத்தம். மனநிலை சரியில்லாதவர் கூட அப்படி பேசமாட்டார்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. 2019 அக்டோபர் 16ம் தேதி அந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “சீமான் சர்ச்சை – ரஜினி […]

Continue Reading

ரயில்வே துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தினாரா ஜெகன்மோகன் ரெட்டி?

‘’ரயில்வே துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கிய ஜெகன் மோகன் ரெட்டி,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பரவி வரும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மரணகலாய் எனும் ஃபேஸ்புக் ஐடி அக்டோபர் 11, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புகைப்படத்திற்கு, பெண்கள் பாலாபிஷேகம் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ […]

Continue Reading

கோபேக் மோடி ட்வீட் செய்த 256 பேர் மீது வழக்கு?

கோ பேக் மோடி என்று ட்வீட் செய்த 256 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழ்நாடு சைபர் கிரைம் அவேர்னஸ் ஆர்கனைசேஷன் (Tamilnadu Cyber Crime Awareness Organisation) என்ற லோகோவோடு பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று வெளியாகி உள்ளது. அதில், “கோ பேக் மோடி ட்வீட் […]

Continue Reading

சீமான் பேசியதற்கு மறுப்பு தெரிவித்து விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டனரா?

‘’சீமான் பேசியதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 OneIndia News Archived Link 2 Oneindia Tamil எனும் ஃபேஸ்புக் ஐடி தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியின் லிங்கை, இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளது. அந்த செய்தியை கிளிக் செய்து படித்தபோது, […]

Continue Reading

புரி ஜெகந்நாதர் கோயிலில் தடுத்து நிறுத்தப்பட்டாரா குடியரசுத் தலைவர்?

‘’புரி ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி தடுத்து நிறுத்தப்பட்டனர்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வைரல் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link Arumugam Bhel என்பவர் ஜூன், 30, 2018 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் வெளியிடப்பட்ட செய்தி எனக் கூறி, ஒடிசா புரி ஜெகந்நாதர் கோயிலுக்குள் […]

Continue Reading

ஆர்.எஸ்.எஸ் என்பதால் மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட குடும்பம்?

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்தார் என்பதற்காக ஒருவர் குடும்பத்தோடு படுகொலை செய்யப்பட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமீபத்தில் மேற்கு வங்கத்தில் படுகொலை செய்யப்பட்ட போந்து பிரகாஷ் பால் மற்றும் அவரது குடும்பத்தினர் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில், “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை ஆதரித்த ஒரே காரணத்திற்காக ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று […]

Continue Reading

பாஜக, அதிமுக அரசுகள் இருக்கும் வரை நீட் தொடரும்– விஜயபாஸ்கர் பெயரில் வதந்தி

பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இருக்கும் வரை நீட் தேர்வு தொடரும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அக்டோபர் 6, 2019 தேதியிட்ட புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜயபாஸ்கர் படம் உள்ளது. “பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இருக்கும் வரை நீட் தேர்வு தொடரும். […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியை கூப்பிட்டு செங்கோலை பிடிக்கச் சொன்னாரா எம்ஜிஆர்?

‘’எடப்பாடி பழனிசாமியை கூப்பிட்டு செங்கோலை பிடிக்கச் சொன்ன எம்ஜிஆர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link Anand Sekar என்பவர் செப்டம்பர் 23, 2019 அன்று இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இது அதிமுக.,வின் பழைய கட்சி நிகழ்ச்சி பற்றியதாகும். இதில், ஜெயலலிதா எம்ஜிஆர் கையில் வெள்ளி செங்கோல் ஒன்றை கொடுக்க, அதனை அருகில் இருக்கும் நபரை அழைத்து ஒரு கை […]

Continue Reading

சீமானுக்கு பதிலடி கொடுத்த ஜெகன் மோகன்?- ஃபேஸ்புக் நியூஸ் கார்டு உண்மையா?

“நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் யார் என்றே தெரியாது என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதிலடி கொடுத்தார்”- என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், ஜெகன் மோகன் ரெட்டி சீமானுக்கு பதிலடி! என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “சீமான் யாரென்றே எனக்குத் தெரியாது. […]

Continue Reading

கோவளம் கடற்கரையில் பாதுகாப்பு சோதனை; மோடி பற்றிய படம் உண்மையா?

ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட, வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் ஆய்வு செய்த கடற்கரையில் பிரதமர் மோடி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார் என்று சமூக ஊடகங்களில் பல படங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இவற்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நான்கு புகைப்படங்களை கொலாஜ் செய்து பகிர்ந்துள்ளனர். முதல் படத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் முழு கடற்கரையையும் சோதனை செய்தனர் என்று உள்ளது. இரண்டாவது படத்தில், பிளாஸ்டிக் குப்பைகள் பை நிறைய இருப்பது […]

Continue Reading