எடப்பாடி பழனிசாமியை பின்பற்றி மு.க.ஸ்டாலின் வயலில் நாற்று நடச் சென்றாரா?

‘’எடப்பாடி பழனிசாமியை காப்பி அடித்து மு.க.ஸ்டாலின் வயலில் நாற்று நடச் சென்றார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படம் பற்றி உண்மை அறிய இதனை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இது பல ஆண்டுகளாகவே […]

Continue Reading

செல்லூர் ராஜூ திறந்து வைத்த ரவுண்டானாவில் ஓட்டை: வைரல் புகைப்படம் உண்மையா?

‘’மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்த ரவுண்டானா இடிந்து விழுந்தது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் சில புகைப்படங்களை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த புகைப்படத்துடன் மேலும் சில புகைப்படங்களை சேர்த்து சிலர் தகவல் பகிர்வதையும் காண நேரிட்டது.  Facebook Claim Link Archived Link இந்த புகைப்படங்களை பலர் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

சிறுபான்மையினர், தலித் ஓட்டுகள் வேண்டாம் என்று ராஜேந்திர பாலாஜி பேசினாரா?

தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில் நியூஸ் 7 பெயரில் ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்து, சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் ஆதரவு தேவை இல்லை என்று ராஜேந்திர பாலாஜி சொன்னதாக, எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட செய்தி முதலில் நியூஸ்7 டிவி சேனல் வெளியிட்டதா என்ற சந்தேகத்தில் தகவல் தேடினோம். அப்போது இது உண்மையில் நியூஸ் 7 வெளியிட்டது […]

Continue Reading

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுகவினரை விமர்சித்தாரா?

‘’பாஜக மட்டும் இல்லையென்றால் அதிமுகவினர் பிச்சை எடுக்கும் நிலை வரும்,’’ என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாக பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள நியூஸ் கார்டு தந்தி டிவி பெயரில் போலியாக உருவாக்கப்பட்டதாகும். இதுதொடர்பாக, தந்தி […]

Continue Reading

சென்னை துறைமுகத்தில் சிங்கங்கள் நுழைந்ததா? வதந்தியால் பொதுமக்கள் பீதி!

‘’சென்னை துறைமுகத்தில் நுழைந்த 3 சிங்கங்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் சில ஃபேஸ்புக் பதிவுகளை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link உண்மை அறிவோம்: இதுபற்றி வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் ஏற்கனவே தகவல் பகிரப்பட்டதால் பொதுமக்களும் இது உண்மை என நம்பி அச்சம் அடைந்தனர். எனவே, இது உண்மையா, பொய்யா என்ற சந்தேகத்தில் பாலிமர் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் விரிவான செய்தி வெளியிட்டுள்ளன. […]

Continue Reading

மார்த்தாண்டம் பகுதியில் நாய் இறைச்சி விற்றது இவர்களா?

‘’மார்த்தாண்டம் பகுதியில் நாய் இறைச்சி விற்றவர்கள் பிடிபட்டனர்,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்படும் சில புகைப்படங்களை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link கடந்த 2018, ஜனவரி 14ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதனை இன்றளவும் பலர் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்வதை காண முடிகிறது.  உண்மை அறிவோம்:மேற்கண்ட சம்பவம் போல ஏதேனும் உண்மையிலேயே மார்த்தாண்டம் பகுதியில் நிகழ்ந்ததா […]

Continue Reading

தமிழ் மொழிக்கு தனிச்சிறப்புகள் இல்லை என்று முரளிதர் ராவ் கூறினாரா?

‘’தமிழ் மொழிக்கு தனிச்சிறப்புகள் இல்லை,’’ என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதர் ராவ் சொன்னதாக ஒரு தகவல் வைரலாக பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே செய்தியை மேலும் ஒரு ஃபேஸ்புக் பயனாளர் பகிர்ந்துள்ளார். அதையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.  Facebook Claim Link Archived Link  உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் கூறியுள்ளதுபோல எங்கேனும் பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக […]

Continue Reading

விஜயேந்திர சரஸ்வதி அசைவம் சாப்பிடுவோரை விமர்சித்தாரா? நியூஸ் 7 பெயரில் வதந்தி

‘’அசைவம் சாப்பிடுவோர் இந்துக்கள் அல்ல,’’ என்று விஜயேந்திர சரஸ்வதி விமர்சித்ததாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்கின்றனர். உண்மை அறிவோம்:விஜயேந்திரர் சமீபத்தில் எங்கேனும் இவ்வாறு சொன்னாரா என்று தகவல் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஊடகத்திலும் செய்தி வெளியாகவில்லை. விஜயேந்திரர் பற்றி கடைசியாக செய்தி […]

Continue Reading

திமுக ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் போல தமிழ்நாடு மாறிவிடும் என்று உலக அமைதிக்கான அமைப்பு அறிவித்ததா?

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஐ.நா-வால் பயங்கரவாத நாடாக அறிவிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் போலவே தமிழ்நாடும் மாறும், என உலக அமைதிக்கான அமைப்பு (World Peace Organization) நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிபிசி செய்தி வாசிப்பாளர் ஒருவரின் படத்துடன் பிபிசி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய மாநிலம் […]

Continue Reading

வன்னியர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்தாரா?

“ஒடுக்கப்பட்ட அப்பாவி மக்கள் மீது வன்னிய சமூகத்தினர் நடத்தும் தாக்குதல் கண்டனத்துக்குரியது. வன்னியர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்”, என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒடுக்கப்பட்ட அப்பாவி மக்கள் மீது வன்னிய சமூகத்தினர் […]

Continue Reading

வண்ணாரப்பேட்டையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபர்!- ஃபேஸ்புக் படம் உண்மையா?

வண்ணாரப்பேட்டையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அரை நிர்வாண கோலத்தில் இளைஞர் ஒருவரை போலீசார் இருவர் அழைத்து வருகின்றனர். பின்னணியில் எஸ்டிபிஐ கொடி உள்ளது.  நிலைத் தகவலில், “வண்ணாரப்பேட்டையில் பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்த சல்மான் என்பனை போலிசார் கைது செய்தனர்!” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Suresh Babu என்பவர் 2020 […]

Continue Reading

திருப்பூரில் குழந்தை கடத்தில் ஈடுபட்ட கும்பல் கைது?- பதற்றத்தை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

திருப்பூரில் குழந்தைகள் கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டதாகவும், வட இந்தியாவிலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் குழந்தை கடத்த திருப்பூர் வந்துள்ளதாகவும் கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link கைவிலங்கு போடப்பட்ட இளைஞர்கள் ஐந்து பேர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வைத்து போட்டோ கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ள குழந்தை கடத்தல் கும்பலில்.. 5 பேர் திருப்பூர் பகுதியில் […]

Continue Reading

கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாரா பொன் ராதாகிருஷ்ணன்?

பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மறைந்த சங்கராச்சாரியார் முன்னிலையில் பொன் ராதாகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருக்கும் படத்தையும் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பொன் ராதாகிருஷ்ணன் தலையில் கை வைத்து ஆசிர்வதிக்கும் படத்தையும் சேர்த்து பகிர்ந்துள்ளனர். சங்கராச்சாரியாருடன் உள்ள படத்தில், “இந்து […]

Continue Reading

அர்ஜூன் சம்பத் மது அருந்தும் புகைப்படம் உண்மையா?

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், மது அருந்துவது போன்று புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அர்ஜூன் சம்பத் ஒரு அறையில் சிலருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய மேசை மீது மது பாட்டில்கள் உள்ளன. படுக்கையில் அமர்ந்துள்ள ஒருவர் கையில் மது கிளாஸ் உள்ளது. இந்த படத்தை Troll 420 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 பிப்ரவரி […]

Continue Reading

டெல்லியில் 36 இடங்களில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க தோல்வியைத் தழுவியதா?

டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 36 தொகுதிகளில் 2000-ம் வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்திலேயே பா.ஜ.க தோல்வியை தழுவியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமித்ஷா, மோடி, அத்வானி படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இலவசங்களைத் தவிர்த்து, பா.ஜ.கவுக்கு வாக்களித்த டெல்லியின் 40% வாக்காளர்களுக்கு மிக்க நன்றி.  தில்லி: பிஜேபி தோல்வியடைந்த ஓட்டு வித்தியாசம்..  […]

Continue Reading

ஐஎஸ் பயங்கரவாதிகள் எய்ட்ஸ் கிருமியை பரப்புவதாக தமிழக போலீசார் எச்சரிக்கை வெளியிட்டனரா?

தமிழகத்தில் இலவச ரத்தப் பரிசோதனை செய்கிறோம் என்று கூறி எய்ட்ஸ் நோயை ஐ.எஸ் பயங்கரவாதிகள் பரப்பி வருவதாக தமிழக போலீஸ் வெளியிட்ட போன்ற அறிவிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக போலீஸ் லோகோவுடன் ஒரு அறிவிப்பு வாட்ஸ் ஆப்-பில் வைரலாக பரவி வருகிறது. அதில், “Attention. எச்சரிக்கை. அவசரம்… அவசரம்… யாராவது உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நாங்கள் […]

Continue Reading

குடியுரிமையை நிரூபிக்காவிட்டால் தடுப்பு முகாம் உறுதி: ஜெயக்குமார் பெயரில் வதந்தி

‘’குடியுரிமை நிரூபிக்க முடியவில்லை எனில் தடுப்பு முகாமில் அடைக்கப்படுவார்கள்,’’ என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  Muruganantham Ramasamy  என்பவர் Shankar A. என்பவருடன் இணைந்து மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி பெயரில் பிப்ரவரி 17, 2020ம் தேதியிடப்பட்ட ஒரு நியூஸ் கார்டை இதில் பகிர்ந்து, அதன் […]

Continue Reading

அகமதாபாத்தில் குடிசையை மறைத்து எழுப்பப்பட்ட சுவர்; புகைப்படம் உண்மையா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி குஜராத்தில் குடிசைப் பகுதிகளை மறைக்க ஏழு அடி சுவர் அமைக்கப்பட்டுள்ளது என்ற தலைப்பில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சுவர் எழுப்பப்படுவதற்கு முன்பு, எழுப்பப்பட்ட பிறகு என்று இரண்டு படங்கள் ஒன்று சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது. சுவர் எழுப்பப்படுவதற்கு முந்தைய படத்தில் சாதா இந்தியா என்றும், சுவர் எழுப்பப்பட்ட படம் டிஜிட்டல் இந்தியா என்றும் […]

Continue Reading

சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸ் தாக்கி 70 வயது முதியவர் உயிரிழந்தாரா?

‘’சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸ் தாக்கி 70 வயது முதியவர் உயிரிழந்தார்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் வைரல் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதே புகைப்படத்துடன் கூடிய செய்தியை மேலும் பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதை காண முடிந்தது.  உண்மை அறிவோம்:சென்னை வண்ணாரப்பேட்டையில் பிப்ரவரி 14ம் தேதி இரவு குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து முஸ்லீம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதன்போது […]

Continue Reading

இந்து மதத்திற்கு பாதுகாப்பான கட்சி என்றால் பா.ஜ.க என்று அஜித் கூறினாரா?

இந்து மதத்திற்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது பா.ஜ.க மட்டுமே என்று அஜித் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 2019ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நடிகர் அஜித் படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்து மதத்திற்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது பாஜக மட்டுமே நடிகர் அஜித்” […]

Continue Reading

பாஜக இப்படியே தோற்றுக் கொண்டிருந்தால் நாடே சுடுகாடு ஆகிவிடும் என்று ரஜினி சொன்னாரா?

‘’பாஜக இப்படியே தோற்றுக்கொண்டிருந்தால் நாடே சுடுகாடு ஆயிடும்,’’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னதாகக் கூறும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Thirumeni Saravanan என்பவர் இந்த பதிவை பிப்ரவரி 12, 2020 அன்று வெளியிட்டுள்ளார். அவரது புரொஃபைல் பார்த்தபோது, ‘மூத்த பத்திரிகையாளராக பணிபுரிகிறேன்’, என்று குறிப்பிட்டிருந்தார். அதனால், அவர் வெளியிடும் பதிவுகள் உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பி […]

Continue Reading

ஜெயலலிதா காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசன் படமா இது?

ஜெயலலிதா காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசன் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜெயலலிதாவின் காலில் ஒருவர்  சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறார். ஜெயலலிதா கையில் உறுப்பினர் கார்டு உள்ளது. காலில் விழுந்தவர் யார் என்று தெரியவில்லை. புகைப்படத்தில் dinamalar.com என்ற வாட்டர் மார்க் தெரிகிறது.  நிலைத் தகவலில், “ஜெயலலிதா காலில் விழுந்து கிடக்கும் திண்டுக்கல் சீனிவாசன்..” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நிகழ்வில் சீமான் பங்கேற்கவில்லையா?

‘’தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நாளன்று சீமான் வரவில்லை,’’ எனும் தலைப்பில் வைரலாக பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய் தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Chandresh Kumar Yadav என்பவர் இந்த பதிவை பிப்ரவரி 5, 2020 அன்று வெளியிட்டுள்ளார். இதில், எச்.ராஜாவின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ தமிழில் தான் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று போராடிய #சுடலையும் […]

Continue Reading

கிறிஸ்தவ மத பிரசாரத்தில் பங்கேற்றாரா நடிகர் விஜய்?

நடிகர் விஜய் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் பங்கேற்றார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 வெறும் 7 விநாடி ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். அதில் இந்திய தேசியக் கொடி இருக்கிறது. நடிகர் விஜய் உடன், வெளிநாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் அருகில் இருக்கிறார். பின்னணியில் அமெரிக்க தூதரகங்களில் செயல்படும் அமெரிக்கன் சென்டரின் சின்னமும் உள்ளது. […]

Continue Reading

முதல்வரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தாரா சீமான்? – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆபாசமாக பேசிய வழக்கில் சீமான் மன்னிப்புக் கடிதம் வழங்கினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு ஒன்றை அளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “முதல்வரை ஆபாசமா பேசிய வழக்கில்..மன்னிப்பு கடிதம்.. கொடுத்தார் சீமான்.. மண்டியிட்ட மான தமிழ் பிள்ளை” […]

Continue Reading

லார்டு லபக் தாஸ் என்று ஒருவர் உண்மையில் இருந்தாரா?

‘’லார்டு லபக் தாஸ் என்று ஒருவர் இருந்தார். அவரை மெட்ராஸ் (சென்னை) மக்களுக்கு மிகவும் பிடிக்கும்,’’ என்று கூறி பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவில், ஆங்கிலேயே அதிகாரி போல தோற்றமளிக்கும் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து, ஆங்கிலத்தில், ‘’லார்டு லபக்தாஸ் என்பவர் உண்மையில் யார்? இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி, ஆன்மிகவாதி. இவரை மதராஸ் […]

Continue Reading

நடிகர் விஜய் வீட்டில் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டதா?- ஃபேஸ்புக் வதந்தி

நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் கிடைத்த பணம் மற்றும் ஆபரணங்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கட்டுக்கட்டாக ரூ.2000 மற்றும் ரூ.100 நோட்டு அடுக்கு வைக்கப்பட்டுள்ள படத்தை பகிர்ந்துள்ளனர். அந்த படத்தில் நகைகள் கொஞ்சம் உள்ளன. நிலைத் தகவலில், “நடிகர் விஜயின் வீட்டில் நடந்த. IT ரெய்டில் கிடைத்த பணம் மற்றும் ஆபரணங்கள் […]

Continue Reading

விஜய்க்குச் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு பற்றி சமயம் தமிழ் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

‘’ரெய்டில் ரூ.65 கோடி பணம் பறிமுதல்,’’ என்ற தலைப்பில் சமயம் தமிழ் இணையதளம் வெளியிட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link 1 Samayam Tamil Link Archived Link 2 உண்மை அறிவோம்: மேற்கண்ட சமயம் தமிழ் ஃபேஸ்புக் பதிவில் ‘’ரூ.65 கோடி பறிமுதல்: விஜய்யை பிடித்து விசாரிக்க காரணம் தெரிஞ்சிடுச்சு,’’ என்ற தலைப்பையும், அதே அவர்களின் இணையதள […]

Continue Reading

சமஸ்கிருதம் தவிர மற்ற மொழிகளில் அர்ச்சனை- தடை விதிப்போம் என்று அமித் ஷா கூறினாரா?

‘’சமஸ்கிருதம் தவிர மற்ற மொழிகளில் அர்ச்சனை செய்வதற்கு தடை விதிப்போம்,’’ என்று அமித் ஷா சொன்னதாகக் கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Rowthiram Pazhagu  எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில் தந்தி டிவி வெளியிட்டது போன்ற ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்து, ‘’சமஸ்கிருதம் தவிர்த்த மொழிகளில் அர்ச்சனை செய்வதை சட்டத்தின் […]

Continue Reading

மது பாட்டில் கடத்திய பெண் பா.ஜ.க மகளிர் அணி செயலாளரா?- சர்ச்சை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

பா.ஜ.க மகளிர் அணி செயலாளர் அனுசுயா என்பவர் புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு மது பாட்டில் கடத்தியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தின் அருகே அமர்ந்திருக்கிறார். அவர் முன்பாக இரண்டு பைகளில் மது பாட்டில்கள் உள்ளன. நிலைத் தகவலில், “பாஜக கட்சியின் மகளிர் அணி செயலாளர் அனுசுயா பாண்டிசேரில இருந்து கடலூருக்கு “புரட்சிப்பயணம்” மேற்கொண்டபோது” என்று […]

Continue Reading

தி.மு.க தோல்வியடையும் என்று பிரசாந்த் கிஷோர் கூறினாரா?

இனி மேற்கொண்டு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக திமுக பேசிவந்தால் 2021 தேர்தலில் தி.மு.க தோல்வி அடையும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இரண்டு நியூஸ் கார்டுகளை ஒன்றாக சேர்த்துப் பதிவிட்டது போல உள்ளது. மேலே உள்ள நியூஸ் கார்டில், தி.மு.க-வுடன் இனி பணியாற்றவா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கீழே தந்தி டி.வி நியூஸ் கார்டு […]

Continue Reading

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டதா? சர்ச்சை கிளப்பிய புகைப்படம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் படம் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சீனாவில் கொரோனோ வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க மிக வேகமாக கட்டப்பட்ட மருத்துவமனை படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மோடி ஆட்சியில் மதுரையில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை” என்று குறிப்பிட்டு “பாரத் மாதாகி ஜே, மோடி த மாஸ்” என்று ஹேஷ் டேக் செய்துள்ளனர். […]

Continue Reading

திருப்பூரில் துறைமுகம் கட்டுவோம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தாரா?

‘‘திருப்பூரில் துறைமுகம் கட்டுவோம்,’’ என்று மு.க.ஸ்டாலின் அறிவித்ததாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  ராஜன் காந்தி என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்வதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்:இந்த நியூஸ் கார்டு உண்மையா என்ற சந்தேகத்தில் fotoforensics.com இணையதளத்தில் பதிவேற்றி, ஆய்வு செய்தோம். அப்போது, […]

Continue Reading

அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த எல்லை காந்தி வந்தபோது எடுத்த புகைப்படமா இது?

பேரறிஞர் அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த கான் அப்துல் கஃபார் கான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எல்லை காந்தி என்று அழைக்கப்படும் கான் அப்துல் கஃபார் கானின் பழைய புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில் “பேரறிஞர் அண்ணாவின் மறைவின்போது தள்ளாத வயதிலும் ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தினர் எல்லை காந்தி எனப்படும் கான் அப்துல் கஃபார்கான்” என்று […]

Continue Reading

பிரசாந்த் கிஷோருக்கு சவால் விட்ட ஓபி ரவீந்திரநாத் குமார்?- தந்தி டிவி பெயரில் வதந்தி

‘’பிரசாந்த் கிஷோர் என்ன, யார் வந்தாலும் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றிக்கனியை பறித்து மோடிஜி காலடியில் சமர்ப்பிப்போம்,’’ என்று ஓபி ரவீந்திரநாத் எம்பி கூறியதாகப் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  உண்மை அறிவோம்: திமுக.,வுக்கு வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் ஆலோசனை வழங்குவதற்காக, பிரசாந்த் கிஷோரை அக்கட்சி ஆலோசகராக நியமித்துள்ளது. இதையொட்டி பலரும் சமூக ஊடகங்களில் […]

Continue Reading

கார்ப்பரேட் ஒழிப்பு ஆலோசனை நடத்திய திருமாவளவன், சீமான்? அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு

“டாடா மினரல் தண்ணீரைக் குடித்துக்கொண்டே கார்ப்பரேட் ஒழிப்பு ஆலோசனை நடந்தது” என்று தொல் திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த தகவலின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தேன். தகவலின் விவரம்: Facebook Link Archived Link விடுதலைச் சிறுத்தைகள் தொல் திருமாவளவன், நாம் தமிழர் சீமான், பாரதி ராஜா, இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் அமர்ந்து பேசும் படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேல் பகுதியில், “டாடா மினரல் தண்ணீரைக் […]

Continue Reading

மக்கள் ஒற்றுமையாக வசிப்பதில் தமிழக அளவில் ராமநாதபுரம் முதலிடம்: பேஸ்புக் வதந்தி

‘’ஜாதி மத பேதம் இல்லாமல் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதில் முதல் மாவட்டமாக ராமநாதபுரம் உள்ளது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இந்த பதிவில் ராமநாதபுரம் ரயில் நிலைய புகைப்படத்தை பகிர்ந்து, ‘’தமிழகத்தில் ஜாதி, மத பேதம் இல்லாமல் ஒற்றுமையாக மக்கள் வாழும் மாவட்டமாக முதல் இடத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தேர்வு,’’ என்று எழுதியுள்ளனர். […]

Continue Reading

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களை நாய் என்று விமர்சித்தாரா ஓ.பி.ஆர்?

“குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் நாய்கள் இங்கு குரைப்பதை நிறுத்திவிட்டு பாகிஸ்தானில் குடியேறலாம்” என்று அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தேனி அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் நாய்கள் இங்கே குரைப்பதை நிறுத்திவிட்டு பாகிஸ்தானில் குடியேறலாம் […]

Continue Reading

நடிகை மஞ்சுளா மரணம்: பழைய செய்தியை புதிதுபோல பகிர்ந்த இணையதளம்!

‘’நடிகை மஞ்சுளா மரணம்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link 1 Mediatimez Link Archived Link 2 இதே செய்தியை மேலும் பலர் பகிர்ந்திருந்ததை காண நேரிட்டது. உண்மை அறிவோம்:நடிகை மஞ்சுளா கடந்த 2013ம் ஆண்டு உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றைத்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர்.  7 ஆண்டுகள் பழைய செய்தியை […]

Continue Reading

மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் கிடையாது என்று ரஜினி கூறினாரா?

“மிரட்டிய உடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் கிடையாது” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரஜினி படத்துடன் கூடிய நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் “மன்னிப்பு கேட்க முடியாது ரஜினிகாந்த் அதிரடி! மிரட்டிய உடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் […]

Continue Reading

தமிழக பா.ஜ.க தலைவராக எச்.ராஜா தேர்வு; சான்றிதழ் உண்மையா?

தமிழக பாஜக தலைவராக எச்.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ஒரு சான்றிதழ் சமூகம் ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பாஜக தலைவர் பதவிக்கு ஜனவரி 17 2020 அன்று தேர்தல் நடந்ததாகவும் இதில் ராஜா வெற்றி பெற்றார் என்றும் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் இந்த பதிவை வெளியிட்டவர் எச்.ராஜா உடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.  இந்த பதிவை Chandrasekaran Ganessin என்பவர் 2020 ஜனவரி […]

Continue Reading

பெரியார் – மணியம்மை திருமண புகைப்படம் இதுவா?

‘’பெரியார்- மணியம்மை திருமணம்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Murugesh Mudhaliyar என்பவர் ஜனவரி 22, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில் பெரியார் முன் பெண் ஒருவர் மாலை அணிந்து நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’பொண்டாட்டிக்கு தாலி கட்டாதே.. அது பெண் அடிமைத்தனம்னு சொல்லி, மகளுக்கு தாலி கட்டிய […]

Continue Reading

பா.ஜ.க-வை கீழ்த்தரமான கட்சி என்று கூறினாரா நடிகர் அஜித்?

“எனது உண்மை ரசிகர்கள் யாரும் பாஜக போன்றதொரு கீழ்த்தரமான கட்சியில் இணைய மாட்டார்கள்” என்று நடிகர் அஜித்குமார் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர் அஜித் படத்துடன் கூடிய, நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் “எனது உண்மையான ரசிகர்கள் யாரும் பாஜக போன்றதொரு கீழ்த்தரமான கட்சியில் இணைய மாட்டார்கள் – […]

Continue Reading

நடிகர் ரஜினிகாந்த் அகால மரணம்: ஃபேஸ்புக் வதந்தியால் திடீர் பரபரப்பு

‘’நடிகர் ரஜினிகாந்த் அகால மரணம்,’’ என்ற பெயரில் பகிரப்பட்டிருந்த ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  அன்புசெல்வன் அன்பு எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலர் உண்மை என நம்பி வைரலாக பகிர அதேசமயம், சிலர் இது தவறான செயல் என்று கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி […]

Continue Reading

நிர்மலா தேவி விவகாரத்தில் ஸ்டாலின், தமிழன் பிரசன்னாவுக்குத் தொடர்பா? ஃபேஸ்புக் விஷமம்

கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க வழக்கறிஞர் தமிழன் பிரசன்னாவுக்கு தொடர்பு இருப்பதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் தி.மு.க வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா ஆகியோ படங்களுடன் பகிரப்பட்ட பதிவு ஒன்றை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டது போல உள்ளது. அதில், “நிர்மலா தேவி விவகாரத்தில் விலகுகிறது மர்மம்! […]

Continue Reading

ஆறு ஏழை குழந்தைகளை தத்தெடுத்த கடலூர் ஆசிரியை கயல்விழி! – உண்மை அறிவோம்

கடலூரில் ஆறு ஏழை குழந்தைகளை தத்தெடுத்து அவர்கள் கல்விச் செலவை ஏற்றுக்கொண்ட ஆசிரியை கயல்விழி என்று சீமானின் மனைவி கயல்விழி படத்தை பகிர்ந்துள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி படத்தை பகிர்ந்தள்ளனர். அதன் மீது, “கடலூரில் 6 ஏழை குழந்தைகளை தத்தெடுத்து அவர்கள் கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியை கயல்விழி. மனம் இருந்தால் […]

Continue Reading

ஃபேக்ட் கிரஸண்டோ பெயரில் வெளியான போலி உண்மை கண்டறியும் அறிக்கை!

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் பதிவுகள் உண்மையா என்று கண்டறிந்து ரிப்போர்ட் செய்யும் ஃபேக்ட் கிரஸண்டோ பெயரிலேயே போலி பதிவுகள் பகிரப்படுவது அதிர்ச்சியாக உள்ளது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link நம்முடைய வாசகர் ஒருவர் மேற்கண்ட ஃபேஸ்புக் லிங்கை அனுப்பி இந்த ஃபேக்ட் செக் செய்தது நீங்களா என்று கேட்டனர்.  அதில், தினத்தந்தி வெளியிட்ட செய்தி கிளிப் உடன் ஃபேக்ட் கிரஸண்டோவின் மிக்ஸர் முத்திரை இருந்தது. ஃபோட்டோஷாப் முறையில், “துரை முருகன் […]

Continue Reading

பொங்கல் விடுமுறை: நியூஸ் 18 ஊடகத்தின் பழைய செய்தியை பரப்பும் ஃபேஸ்புக் பயனாளர்கள்!

‘’பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல – மத்திய அரசு அறிவிப்பு,’’ என்று நியூஸ் 18 ஊடகம் செய்தி வெளியிட்டதாகக் கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Sudhaji Mps Sudhaji Mps என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை ஜனவரி 10, 2020 அன்று வெளியிட்டுள்ளார். இதில், நியூஸ் 18 ஊடகம் வெளியிட்ட பழைய செய்தியை பகிர்ந்து, அதன் கீழே, தமிழர் […]

Continue Reading

காலை உணவுத் திட்டத்தை தொடங்குகிறதா தமிழக அரசு?

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்க உள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link “வரலாற்றில் இடம் பெறுகிறார் தமிழக முதலமைச்சர். இந்தியாவின் முதல்முறையாக #தமிழகத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு  காலை_உணவுத் திட்டம் அறிமுகம். இட்லி, சப்பாத்தி, பொங்கல் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய பச்சைப்பயறு, கேழ்வரகு அடை, குதிரைவாலி, சாமைக்கஞ்சி, கொண்டைக்கடலை வழங்க முதலமைச்சர் எடப்பாடி […]

Continue Reading

கோவை குண்டுவெடிப்புக்கு தி.மு.க திட்டம் தீட்டியது என்று அழகிரி கூறியதாக பரவும் செய்தி உண்மையா?

கோவை குண்டுவெடிப்புக்கு அப்போது ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க தான் திட்டம் தீட்டியது என்று மு.க.அழகிரி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி டி.வி செய்தி ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “கோவையில் குண்டு வைக்கத் திட்டம் தீட்டிக் கொடுத்ததே அப்போதைய ஆளுங்கட்சியான திமுக தான். ஸ்டாலினை இல்லை என்று சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம் – மு.க.அழகிரி” என்ற […]

Continue Reading