சோமாலியாவை தொடர்ந்து சொந்தமாக விமான சேவை இல்லாத நாடாக மாறியதா இந்தியா?

‘’சோமாலியா நாட்டை தொடர்ந்து சொந்தமாக விமான சேவை இல்லாத நாடாக மாறிய இந்தியா,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  வச்சி செய்வோம் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஏர் இந்தியா தொடர்பான கார்ட்டூன் ஒன்றை பகிர்ந்து, அதன் மேலே, ‘’சொந்தமாக விமான சேவை இல்லாத இரண்டாவது நாடாக மாறியது […]

Continue Reading

கன்னியாகுமரியில் நடந்த சிஏஏ-வுக்கு எதிரான பேரணியின் படமா இது?

கன்னியாகுமரி மாவட்டத்தில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நடந்த பேரணியின் படம் என்று ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை முழுக்க மக்கள் தலைகளாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அதனுடன் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் படங்களையும் சேர்த்து வெளியிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசின் c a a க்கு எதிராக இது வரை இல்லாத […]

Continue Reading

பள்ளிவாசலுக்கு புர்கா அணிந்து அரிவாளுடன் வந்தது ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதியா?

பெங்களூரு பள்ளி வாசல் முன்பாக புர்ஹா போட்டுக் கொண்டு கையில் கத்தியுடன் கலவரம் செய்யும் நோக்கில் திரிந்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி பிடிபட்டான் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 3.06 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில், ஒருவர் இஸ்லாமியப் பெண்கள் அணிந்திருக்கும் புர்கா அணிந்துள்ளார். வீடியோவில் பேசும் நபர், இது பெங்களூருவில் […]

Continue Reading

பெங்களூருவில் புர்கா அணிந்து வந்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்: வைரல் வீடியோ உண்மையா?

பெங்களூருவில் நடக்கும் போராட்டங்களை சீர்குலைக்க முஸ்லிம் பெண் வேடத்தில் புர்கா அணிந்து வந்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 3.42 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், புர்கா அணிந்த ஒருவரை சிலர் சுற்றிவளைத்து புர்காவை கழற்றும்படி கூறுகிறார்கள். சிறிது நேரத்தில் புர்காவை கழற்றும்போது அந்த நபர் ஆண் […]

Continue Reading

குடியரசு தினத்தில் இந்திய போர் விமானங்கள் நடுவானில் உருவாக்கிய திரிசூலம் புகைப்படம் இதுவா?

‘’குடியரசு தினத்தில் இந்திய போர் விமானங்கள் சாகசம் செய்த திரிசூலம் புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  மேற்கண்ட பதிவை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்த புகைப்படம் உண்மையா என்ற சந்தேகத்தில் கூகுளில் பதிவேற்றி ஆதாரம் தேடினோம். அப்போது, இது மார்ஃபிங் செய்யப்பட்ட ஒன்று என்பதற்கான […]

Continue Reading

பசு மாட்டின் உடலில் உலக வரைபடம்! – பரவசத்தை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

உடுப்பியில் உள்ள பசுவின் உடலில் உலக வரைபடம் உள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link உலக வரைபடத்துடன் உள்ள பசுவின் படத்தை பகிர்ந்துள்ளனர்.  படத்தின் மேல் மற்றும் கீழ் பகுதியில், “பசுவின் உடலில் உள்ள வரைபடம். உடுப்பியில் உள்ள இந்த பசுவின் உடல் முழுவதும் உலக வரைபடத்தின் தோற்றம் அச்சு மாறாமல் அப்படியே உள்ளது. இயற்கையின் அற்புதம்” […]

Continue Reading

இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமரா… அதிபரா? – சர்ச்சையை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

பாகிஸ்தான் பிரதமர் என்று குறிப்பிடுவதற்கு பதில் பாகிஸ்தான் அதிபர் என்று குறிப்பிட்டு இம்ரான்கான் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் லெட்டர் பேடில் பத்திரிகை செய்தி வெளியாகி உள்ளது. அதில், பாகிஸ்தான் அதிபர் (பிரதமரை அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்) இம்ரான் கான் கையொப்பம் உள்ளது.  அந்த பத்திரிகை செய்தியில், “கராச்சி […]

Continue Reading

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மோடியின் மனைவி பங்கேற்றாரா?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் என்று ஒரு செய்தியை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மோடியின் மனைவி யசோதா பென் போன்ற ஒருவர் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோடிக்கு எதிராக போராடும் மோடியின் மனைவி. இது தேவயா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை செய்யது அபுதாஹீர் என்பவர் 2020 ஜனவரி […]

Continue Reading

உ.பி-யில் சேதப்படுத்தப்பட்டு பூட்டப்பட்ட 600 கிறிஸ்தவ ஆலயங்கள்; ஃபேஸ்புக் படம் உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் 600 கிறிஸ்தவ ஆலயங்கள் மூடப்பட்டதாகவும், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்தவ, சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link உடைக்கப்பட்ட தேவாலயம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. மேலும், ஒரு நபரை போலீஸ்காரர்கள் துப்பாக்கியைக் கொண்டு தாக்கும் படம், போலீசார் காலில் விழுந்து பெண் அழும் படம், பெண் ஒருவரின் தலை அருகே துப்பாக்கியை பிடித்தபடி காவலர் […]

Continue Reading

நேருவை கன்னத்தில் அறைந்த வித்யானந்த் விதேவ்- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

நேருவின் முகத்தில் ஸ்வாமி வித்யானந்த் விதே அறைந்தார் என்றும் அவருக்கு பதிலடி கொடுக்க வந்த நேருவை பின்னல் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினார்கள் என்றும் படத்துடன் கூடிய ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நேருவை யாரோ பின்னால் இழுக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இந்த பதிவை படிச்சதும் அம்புட்டு சந்தோஷம் எனக்கு! நீங்களும் அனுபவிங்க! நேருவின் முகத்தில் ஸ்வாமி […]

Continue Reading

2018-ம் ஆண்டில் 1.34 லட்சம் இந்தியர்கள் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்துகொண்டனரா?

‘’2018ம் ஆண்டில் 1.34 லட்சம் இந்தியர்கள் வேலையின்மை காரணமாக தற்கொலை,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Kingdom Joker – பாணபத்திர ஓணாண்டி என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஜெயா பிளஸ் ஊடகம் வெளியிட்ட ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். ஜெயா பிளஸ் நியூஸ் கார்டு லிங்க் கீழே […]

Continue Reading

பிரதமர் மோடி கொல்கத்தாவில் போராட்டத்திற்கு பயந்து படகில் பயணித்தாரா?

‘’போராட்டத்திற்கு பயந்து படகில் பயணித்த மோடி,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்த புகைப்படம் மற்றும் மோடி கப்பலில் செல்லும் புகைப்படம், மோடிக்கு எதிரான போராட்டத்தின் புகைப்படம் ஆகியவற்றை கொலாஜ் […]

Continue Reading

சிஏஏ-க்கு எதிராக பேசிய மடாதிபதி; கோபம் அடைந்த கர்நாடக முதல்வர்: உண்மை என்ன?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மடாதிபதி பேசியதாகவும் இதனால் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கோபமடைந்ததாகவும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 சாமியார் ஒருவர் பேசுகிறார். அருகிலிருந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா திடீரென்று ஆவேசமாக எழுந்து அவருடன் உரையாடுகிறார். அவரை அமரும்படி அந்த சாமியார் கூறுகிறார். இருவருக்குமிடையே வாக்குவாதம் நடக்கிறது. பிறகு எடியூரப்பா அமர்கிறார்.  47 […]

Continue Reading

எட்வினாவுடன் ஜவஹர்லால் நேரு நெருக்கமாக இருக்கும் படம் உண்மையா?

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு பெண்கூட நெருக்கமாக இருப்பது போன்ற படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நேரு போன்ற தோற்றம் அளிக்கும் நபர், பெண் ஒருவரை பிடித்தபடி காதல் செய்யும் படத்தை பகிர்ந்துள்ளனர். அந்த பெண்ணைப் பார்க்க மவுண்ட்பேட்டனின் மனைவி எட்வினா போல உள்ளது. நிலைத் தகவலில், “நேரு மாமா சுதந்திரத்துக்குப் போராடியதை பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading

ஏ.பி.வி.பி தலைவன் மும்பையில் கள்ள நோட்டு அடித்ததாக பரவும் தகவல் உண்மையா?

ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி தலைவன் கள்ள நோட்டு அச்சடித்தது பற்றி மும்பையில் விசாரணை நடந்து வருகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஏ.பி.வி.பி மற்றும் தாமரை சின்னம் மற்றும் கட்டுக்கட்டாக 2000ம் ரூபாய் நோட்டுக்களை பார்வையிடும் போலீசார் படம் என பலவற்றை ஒன்று சேர்த்து கொலாஜ் வடிவில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அகில இந்திய ஏ.பி.வி.பி தலைவன் […]

Continue Reading

கோட்சே புகைப்படத்தை வணங்கினாரா அமித்ஷா?

“காந்தியை படுகொலை செய்த பயங்கரவாதி கோட்சேவை வணங்கும் அமித்ஷா” என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான அமித்ஷா புகைப்படம் ஒன்றை வணங்கும் படம் பகிரப்பட்டள்ளது. நிலைத் தகவலில், “காந்திஜி படுகொலை செய்த பயங்கரவாதி கோட்ஸேவை வணங்கி. மகாத்மாவால் கட்டமைக்கப்பட்ட இந்தியாவை துவேசம் செய்ய தயார் ஆகும் சீடன்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading

ஜே.என்.யூ மாணவர் சங்க தலைவி ஆயிஷ் கோஷ் கைக்கட்டு சர்ச்சை- உண்மை அறிவோம்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் ஒரே நாளில் இடது மற்றும் வலது கையில் மாற்றி மாற்றிக் கட்டுப் போட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் வலது கையில் கட்டுப் போட்டு பேசுவது போன்று ஒரு படம், இடது […]

Continue Reading

எஸ்டிபிஐ-யை தடை செய்வேன் என்று அமித்ஷா கூறியதாக பரவும் வதந்தி!

“எஸ்.டி.பி.ஐ-யை தடை செய்ய முடிவெடுத்தால் உடனே தடை செய்துவிடுவேன், யாருடைய கருத்தையும் கேட்கமாட்டேன்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமித்ஷா படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “SDPI யை தடை செய்ய முடிவெடுத்துவிட்டால் உடனே தடை செய்துவிடுவேன். மற்றவரின் கருத்தைக் கேட்க நான் […]

Continue Reading

பாகிஸ்தான் பிரதமருடன் ராகுல் காந்தி மற்றும் மம்தா இருக்கும் படம் உண்மையா?

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தளபதியுடன் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சித்து உள்ளிட்டவர்கள் இருப்பது போன்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்தியா டுடேவின் ஆஜ்தக் இந்தி ஊடகம் வெளியிட்ட படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அந்த படத்தில், பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், ராணுவ தளபதி உரையாடுகிறார்கள். அவர்களுக்கு பின்னால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க […]

Continue Reading

பெண்ணின் மானத்தோடு விளையாடும் இந்திய ராணுவம்?- ஃபேஸ்புக் பகீர் படம்

“அஸ்ஸாமில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண் போராளியை ராணுவம் நடத்தும் விதத்தைப் பாருங்கள்” என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண் ஒருவரின் டீ-ஷர்ட்டை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் இழுக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஒரு மனநோயாளியின் வார்த்தையாகவே இதனை பார்க்கிறேன். அஸ்ஸாமில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண் […]

Continue Reading

2020 தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் முஸ்லீம் பண்டிகைகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டதா?

‘’தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் முஸ்லீம் பண்டிகைகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளன,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Prince Ennares Periyar எனும் ஃபேஸ்புக் ஐடி, ஜனவரி 2, 2020 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், திட்டமிட்டே தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் முஸ்லீம் பண்டிகைகளை பாஜக புறக்கணித்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் ரூ.500 வாங்கிக்கொண்டு கல் வீசிய முதியவர்?

ரூ.500 வாங்கிக்கொண்டு கலவரத்தில் கல்வீசச் சென்ற முதியவருக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து உ.பி போலீசார் நோட்டீஸ் அனுப்பியதாக ஒரு படம் ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமிய முதியவர் ஒருவர் கல் வீசும் புகைப்படம் உள்ளது. அதின் மேல் பகுதியில், “மாமா 500 ரூபாய் வாங்கிக்கொண்டு கல் வீச சென்றார். உத்தரப்பிரதேச போலீசார் ரூ.1,50,00 மதிப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமரின் மகன்?- ஃபேஸ்புக் நியூஸ் கிளிப் உண்மையா?

அமெரிக்காவில் இந்திய முன்னாள் பிரதமர் ஒருவரின் மகன் போதை மருந்து, அளவுக்கு அதிகமான பணம் வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டதாக ஒரு நியூஸ் கிளிப் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 2001ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியான தி பாஸ்டன் என்ற இதழின் செய்தி கிளிப் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய அரசியல்வாதி பாஸ்டன் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட […]

Continue Reading

ராகுல் காந்தியிடம் தவறாக நடந்துகொண்ட உத்தரப்பிரதேசம் போலீசார்?

“ராகுல் காந்தியிடம் இந்த அளவுக்கு நடந்துகொள்ளும் உத்தரப்பிரதேச காவல்துறை இஸ்லாமியர்களிடம் எந்த அளவுக்கு நடந்துகொள்ளும்” என்று பதிவு ஒன்று ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மோட்டார் பைக்கில் பின்னால் அமர்ந்திருக்கும் ராகுல் காந்தியின் கையைப் பிடித்து போலீஸ் அதிகாரி ஒருவர் இழுக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். போலீசார் பலர் அவர்களைச் சுற்றி வளைக்கின்றனர். மற்றொருவர் மோட்டார் பைக்கின் சாவியை எடுக்க முயல்கிறார்.  நிலைத் தகவலில், […]

Continue Reading

உத்தரப் பிரதேச போலீஸ் முன்னிலையில் அட்டூழியம் செய்யும் சங்கி? உண்மை விவரம்!

உத்தரப்பிரதேச போலீசார் முன்னிலையில் இஸ்லாமியர் ஒருவரை வலதுசாரி ஆதரவாளர் தாக்குவதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காவலர் ஒருவர் இஸ்லாமியர் ஒருவரை பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. காவலர் அருகில் சாதாரண உடையில் உள்ள நபர் அந்த இஸ்லாமியரின் தாடியைப் பிடித்து இழுக்கிறார்.  நிலைத் தகவலில், “உ.பி போலீஸ்க்கு முன்னால் அட்டூழியம் செய்யும் சங்கி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Mohmed […]

Continue Reading

போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி?- ஃபேஸ்புக் வைரல் பதிவு

போலீஸ் வேடத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் உள்ளார் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் ஒருவர் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link 1 Archived link 2 மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் ஆர்.எஸ்.எஸ் சீருடையுடன் ஒருவர் உள்ள புகைப்படம், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் போல இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சேர்த்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

1857 சிப்பாய் புரட்சியில் சாவர்க்கர் பங்கேற்றார் என்று அமித்ஷா கூறினாரா?

1857ம் ஆண்டு நடந்த சிப்பாய் புரட்சியில் சாவர்க்கர் பங்கேற்றார் என்று அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்தியா டுடே ஆங்கிலத்தில் வெளியிட்ட செய்தி ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “வீர சாவர்க்கர் இன்றி 1857 புரட்சி வரலாறு ஆகியிருக்காது – அமித்ஷா” என்று தலைப்பிட்டிருந்தனர். இதன் கீழ், சாவர்க்கரின் விக்கிப்பீடியா பதிவு படத்தை வைத்துள்ளனர். அதில் சாவர்க்கர் […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் கல் எறிந்ததால் காயம் அடைந்த குழந்தை: உண்மை என்ன?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் நடத்திய கல்வீச்சில் படுகாயம் அடைந்த குழந்தை என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 குழந்தை ஒன்றின் தலையில் அடிபட்டு ரத்தம் வழியும் காட்சி, தலையில் அந்த குழந்தைக்கு கட்டுப்போட்டப்பட்ட எடுத்த படத்தை இணைத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், […]

Continue Reading

மின்னணு வாக்குப்பதிவு முறைகேட்டில் பாஜக ஈடுபட்டது நிரூபணம்! – அதிர்ச்சி ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பா.ஜ.க முறைகேடு செய்து வெற்றிபெற்றது நிரூபணமாகியுள்ளது என்றும் இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடியின் படத்துடன் ஒரு போட்டோ கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் இ.வி.எம் மோசடியால் தான் பா.ஜ.க வெற்றிபெற்றது. ஆதாரங்கள் நிரூபணமானது. தேர்தல் ஆணையத்திற்கு […]

Continue Reading

போராட்டக்காரர்கள் கழுத்தில் மிதித்த போலீஸ் அதிகாரி!- வைரல் படம் உண்மையா?

டெல்லி ஜாமியா போராட்டத்தில் கலந்துகொண்டவர் கழுத்தில் போலீஸ் அதிகாரி மிதிப்பது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காவல் துறை அதிகாரி ஒருவர் போராட்டக்காரர் கழுத்தில் மிதிப்பது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். இந்த படம் ஜாமியா போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது என்று நிலைத் தகவலில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அதில், “இந்த ஆண்டின் சிறந்த காவலர், ஏன்டா டேய் இரக்கமில்லையா உனக்கு  #JamiaProtest, […]

Continue Reading

பாகிஸ்தான் பிரதமருடன் இஸ்லாமிய கலவரக்காரர்கள்? – விஷம ஃபேஸ்புக் பதிவு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் இஸ்லாமிய கலவரக்காரர்கள் இருக்கிறார்கள் என்று பத்திரிகையாளர்கள் படம் பகிரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் இந்திய பத்திரிகையாளர்கள் பர்க்கா தத் மற்றும் சுஹாசினி ஹைதர் ஆகியோர் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. மற்றொரு புகைப்படத்தில் டெல்லி ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவிகளுடன் பர்க்கா தத் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இரண்டிலும் பர்க்கா தத் மட்டும் […]

Continue Reading

ராகுல் காந்தியுடன் இருப்பது டெல்லி மாணவியா?- ஃபேஸ்புக் பதிவின் உண்மை அறிவோம்!

டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது, மாணவர் ஒருவரை போலீசார் இழுத்துப்போட்டு அடிக்கும்போது அதைத் தடுத்த பெண், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் உள்ளார். அவர்தான் போராட்டத்தைத் தூண்டிவிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மாணவி ஒருவர் மைக் உடன் நிற்கும் படம் மற்றும் ராகுல் காந்தியுடன் பேசும் படத்தை கொலாஜ் செய்துள்ளனர். இதனுடன், டெல்லி மாணவிகள் படங்களையும் பகிர்ந்துள்ளனர். […]

Continue Reading

முஸ்லீம்கள் கல்லெறிந்ததில் கண் இழந்த குழந்தை- ஃபேஸ்புக் படம் உண்மையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் முஸ்லீம்கள் ரயில் மீது கல் எறிந்ததில் குழந்தை ஒன்றுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கண்ணில் காயம் அடைந்த குழந்தை ஒன்றின் படத்தின் மீது போட்டோஷாப்பில் எழுதப்பட்ட போட்டோ கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், “மேற்கு வங்கத்தில் முஸ்லீம்கள் ரயிலில் கல்லெறிந்ததில் சிக்கி ஒற்றை கண்ணை […]

Continue Reading

மாணவிகளை அடித்த ஏ.பி.வி.பி நபருடன் ரஜினி? – ஃபேஸ்புக்கில் பரபரப்பு

டெல்லியில் போலீசுடன் கலந்து மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி நிர்வாகி தாக்குதல் நடத்தினார் என்றும் அவர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டெல்லியில் காவலர் உடையில் ஏ.பி.வி.பி நிர்வாகி உள்ளார் என்று கூறும் படம் மற்றும் நடிகர் ரஜினிகாந்துன் ஒருவர் தேசிய கொடியோடு இருக்கும் படத்தை இணைத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “போலிஸ் உடையில் போலிஸ் […]

Continue Reading

குடியுரிமை திருத்தத்தை ஆதரித்து பிரமாண்ட பேரணி: தவறான புகைப்படம்!

‘’குடியுரிமை திருத்தத்தை ஆதரித்து பிரமாண்ட பேரணி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த ஒரு வைரல் புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Jeevanandam Paulraj என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், திரளான மக்கள் கூட்டம் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து, அதன் மேலே, ‘’குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து பெருகி வரும் பேராதரவு,’’ என எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை […]

Continue Reading

போலீஸ் வேடத்தில் இருந்த நபர் ஏ.பி.வி.பி நிர்வாகியா? டெல்லி போலீஸ் மறுப்பு!

டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் ஏ.பி.வி.பி நிர்வாகி என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஏ.பி.வி.பி நிர்வாகி Bharat Sharma என்பவரின் ஃபேஸ்புக் ப்ரொஃபைல் படம் மற்றும் டெல்லியில் போராட்டம் நடத்தியவர்களை தாக்கிய சாதாரண உடையில் இருந்த நபர் படங்களை இணைத்து பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “போலிஸ் வேடத்தில் ABVP பயங்கரவாதிகள் மாணவர்களை கடுமையாக […]

Continue Reading

ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்: ஃபேஸ்புக் வதந்தி

டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link துப்பாக்கி, தோட்டா உள்ளிட்ட ஆயுதங்கள் மேசையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், இது என்ன? ஆயுதக் குவியல்! பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து கைப்பற்றப் பட்டதா?இல்லை! இல்லவே இல்லை!! பிறகென்ன? எப்படி? யாரிடம் […]

Continue Reading

அமர் ஜவான் ஜோதி நினைவு சின்னத்தை தாக்கிய பங்களாதேஷ் முஸ்லீம்: உண்மை என்ன?

‘’அமர் ஜவான் ஜோதி நினைவு சின்னத்தை தாக்கிய பங்களாதேஷ் முஸ்லீம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Siva Varman என்பவர் கடந்த டிசம்பர் 14, 2019 அன்று இந்த பதிவை இந்து தமிழ்நாடு என்ற ஃபேஸ்புக் குரூப்பில் பகிர்ந்துள்ளார். இதில், அமர் ஜோதி நினைவு சின்னத்தை முஸ்லீம் ஒருவர் எட்டி உதைப்பதை போன்ற […]

Continue Reading

டெல்லியில் 40 லட்சம் மக்கள் திரண்ட பேரணியை நடத்திய காங்கிரஸ்- ஊடகங்கள் மறைத்ததா?

டெல்லியில் 40 லட்சம் மக்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணியை காங்கிரஸ் கட்சி நடத்தியதாகவும் ஆனால் அதை ஊடகங்கள் செய்தியாக வெளியிடாமல் மறைத்துவிட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 ராகுல், பிரியங்கா படங்களுடன் மக்கள் கடல் போல இருக்கும் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாற்பது லட்சம் மக்கள் […]

Continue Reading

பெண் வேடம் அணிந்து போராட்டத்தில் பங்கேற்கும் ஆண்கள்! – ஃபேஸ்புக் படம் உண்மையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் பெண்கள் வேடத்தில் ஆண்கள் பங்கேற்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண்களின் உள்ளாடையை அணிந்த ஒரு நபரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆண் பெண் வேடம் அணிந்து போராடுவது ரொம்ப சில்லறை தனம்டா. நியாயமான முறையில் அமைதியா போராடி பேச்சு வார்த்தைகள நடத்துங்க” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்தை, […]

Continue Reading

தனி நாடு கேட்டு போராடிய மலப்புரம் முஸ்லீம்கள்: உண்மை என்ன?

‘’தனி நாடு கேட்டு போராடிய மலப்புரம் முஸ்லீம்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Thankaraj P என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ராகுல் காந்தி எம்பியாக தேர்வு செய்யப்பட்ட கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் முஸ்லீம்கள் பச்சைக் கொடி பிடித்து, தனி நாடு கேட்டு போராடுகிறார்கள், எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் […]

Continue Reading

போராட்டக்காரர்களிடமிருந்து தப்பிய அஸ்ஸாம் முதல்வர் – படம் உண்மையா?

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களின் தாக்குதலில் இருந்து அஸ்ஸாம் முதல்வர் தப்பி ஓடும் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இரும்பு குழாயால் அமைக்கப்பட்ட படியில் அஸ்ஸாம் முதல்வர் இறங்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தப்பித்து ஓடும் அசாம் முதல்வர். அஸ்ஸாமில் வெடித்தது மக்கள் புரட்சி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Satheesh Kumar என்பவர் […]

Continue Reading

சி.ஏ.பி-க்கு எதிராக மும்பையில் திரண்ட மக்கள்- ஃபேஸ்புக் படம் உண்மையா?

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மும்பை முகமது அலி சாலையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை முழுக்க மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இன்று மும்பை முகம்மத் அலீ சாலையில் CAB, NRC ஆகியவற்றுக்கு எதிராக ஆர்ப்பரிக்கிற மக்கள் திரள்..!” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Shajahan Banu […]

Continue Reading

நிர்மலா சீதாராமன் பற்றி பரவும் தகவல்கள் உண்மையா?

‘’நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் தகவல்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  பாசிசபாஜக ஆட்சிஒழிக எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி, நீட், ஆட்டோமொபைல் வீழ்ச்சி மற்றும் வெங்காயம் விலை உயர்வு பற்றி பல்வேறு விதமாக கருத்து வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் […]

Continue Reading

ஐதராபாத் என்கவுன்டர் புகைப்படம் இதுவா?

‘’ஐதராபாத் என்கவுன்டர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link IndiaGlitz Link  Archived Link  IndiaGlitz Tamil இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளது. இதே செய்தியை தங்களது இணையதளத்திலும் பகிர்ந்துள்ளனர். ஆனால், இதில் உள்ள புகைப்படம் மட்டும் குழப்பமாக உள்ளது. உண்மை அறிவோம்: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் திஷா (பிரியங்கா ரெட்டி) […]

Continue Reading

நாங்க எல்லாம் வெங்காயம் சாப்பிடவே மாட்டோம் என்று நிர்மலா சீதாராமன் பேசினாரா?

நாடாளுமன்றத்தில் வெங்காயம் விலை உயர்வு தொடர்பாக நடந்த விவாதத்தின்போது, “நான் வெங்காயம், பூண்டு சாப்பிடவே மாட்டேன். அதனால் கவலையில்லை” என்று கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.  இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 நாங்ககெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவே மாட்டோம்… டோன்ட் ஒர்ரி… நிர்மலாவின் பொளேர் பேச்சு ஒன்று ஒன் இந்தியா தமிழின் செய்தி சமூக ஊடகத்தில் […]

Continue Reading

மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா அறிவித்தாரா?

இந்தியா முழுவதும் மதமாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமித்ஷா படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்தியா முழுவதும் மதம் மாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும் மத்திய உள்துறை அமைச்சர் – அமித்ஷா” என்று உள்ளது. நிலைத் தகவலில், “அமித்ஷாவின் […]

Continue Reading

கன்றை கயிறு கட்டி காரில் இழுத்துச் சென்று கொன்ற பாஜக நபர்?

ராஜஸ்தான் பா.ஜ.க நிர்வாகி ஒருவர், சாலையில் சென்ற போது குறுக்கே வந்து விழுந்து கார் ஹெட்லைட்டை உடைத்த கன்றை அடித்து, காரின் பின்னால் கயிறு கட்டி 10 கி.மீ தூரம் இழுத்துச் சென்று கொன்றதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கார் ஒன்றின் பின்னால் கன்று ஒன்று கட்டப்பட்டுள்ளது. காரில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்துடன் இந்தியில் ஒரு […]

Continue Reading

இந்தியா என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு டிக்சனரியில் விளக்கம் கூறப்பட்டுள்ளதா?

‘’இந்தியா என்பதன் அர்த்தம் பற்றி ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரியில் விளக்கம் கூறப்பட்டுள்ளது,’’ எனக் கூறி, ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Ponni Ravi என்பவர் ஆகஸ்ட் 24, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில் , ‘’அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் பெயர் ஆங்கிலத்திலும் மாறாமல் உள்ளது. ஆனால், இந்தியாவின் உண்மையான பெயர் பாரதம் ஆகும். […]

Continue Reading

ஆந்திர போலீசா? தெலுங்கானா போலீசா?- குழப்பத்தில் தி இந்து தமிழ்!

‘’ஆந்திர போலீசார், பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்காமல் ஹெல்மெட் மற்றும் லைசென்ஸ், இன்சூரன்ஸ் ஆவணங்களை எடுத்து தருகிறார்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 News Link Archived Link 2 Tamil The Hindu எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை செப்டம்பர் 14, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், இந்து தமிழ் இணையதளத்தில் வெளியான […]

Continue Reading