ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டதா?

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்று சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்தியக் கொடியின் நிறம் அடிக்கப்படுவது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கூகுள் மேப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லை கோட்டை (loc) எடுத்து விட்டது. இனி ஒரே #காஷ்மீர் […]

Continue Reading

ஏர் இந்தியா விமானத்தை திருப்பி அனுப்பியதா கத்தார் அரசு?

‘’ஏர் இந்தியா விமானத்தை திருப்பி அனுப்பிய கத்தார் அரசு, அசிங்கப்பட்ட மோடி,’’ எனும் தலைப்பில் ஷேர் செய்யப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  Facebook Claim Link Archived Link இதேபோல, மேலும் சில ஃபேஸ்புக் பதிவுகளும் பகிரப்படுகின்றன.  Facebook Claim Link Archived Link இதே செய்தியை நமது வாசகர் ஒருவரும் வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார்.  […]

Continue Reading

இந்த சம்பவம் குஜராத்தில் நிகழவில்லை; முழு விவரம் இதோ!

‘’நோயாளி முன்னே புகை பிடிக்கும் குஜராத் அரசு மருத்துவர்,’’ என்ற தலைப்பில் ஷேர் செய்யப்படும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  மேற்குறிப்பிட்ட தகவலை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி வைத்தார். இந்த தகவல் வாட்ஸ்ஆப்பில் அதிகம் பகிரப்படுவதாகவும், இதன் நம்பகத்தன்மை பற்றி பரிசோதிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.  இதே தகவலை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என விவரம் தேடியபோது, சிலர் இதனை பகிர்ந்திருந்ததைக் […]

Continue Reading

அமித்ஷாவுக்கு புற்றுநோயா? ஃபேஸ்புக் வதந்தி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எலும்பு புற்றுநோய் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. மதம் சார்ந்த கருத்துக்களுடன் “Chondrosarcoma என்பது நாய்களுக்கு வரும் எலும்பு புற்றுநோய். அரிதாகத்தான் மனிதர்களுக்கு வருமாம். அதுவும் இடுப்பு எலும்பில் வந்தால் கடுமையான வேதனை இருக்குமாம். அமெரிக்கா-டெக்சாசில் உள்ள எம்.டி ஆண்டர்சன் கேன்சர் மருத்துவமனையில் அப்பாயின்ட்மென்ட் கிடைத்தும் […]

Continue Reading

பீகாரில் மூன்று பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சாதி காரணமா?

பீகாரில் சாதிய வன்கொடுமை காரணமாக மூன்று பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வரைலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண்களுக்கு மொட்டை போடுவது, தட்டில் எதையோ அருந்தச் செய்வது உள்ளிட்ட புகைப்படங்களை கொலாஜாக பகிர்ந்துள்ளனர். அவற்றின் மேல் மற்றும் கீழ் பகுதியில் போட்டோஷாப் முறையில் டைப் செய்துள்ளனர். அதில், “சாதிய வன்கொடுமை. பீகாரில் மூன்று பெண்களுக்கு மொட்டையடித்து மனித […]

Continue Reading

பாபா ராம்தேவ் கொரோனா நிவாரணம் கொடுத்ததால் ரூ.2212 கோடி கடன் தள்ளுபடியா? -உண்மை அறிவோம்

பாபா ராம்தேவ் கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 கோடி அளித்ததால், அவருடைய கடன் ரூ.2212 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாபா ராம்தேவ், மோடியுடன் ராம்தேவ் இருக்கும் படங்களை வைத்து புகைப்பட பதிவு ஒன்றைத் தயாரித்துள்ளனர். அதில், நேற்று: பாபா ராம்தேவ் கொரோனா நிவாரணமாக 25 கோடி நிதியுதவி. இன்று: பாபா […]

Continue Reading

மசூதிக்குள் சாராய ஊரல் போட்ட இஸ்லாமியர்கள்?- ஃபேஸ்புக் விஷமம்!

கேரளாவில் மசூதிக்குள் கள்ளச்சாராய ஊரல் போட்ட இஸ்லாமியர்கள் கைது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரஷர் குக்கர், பிளாஸ்டிக் டப்பா, அடுப்பு ஆகியவற்றுடன் போலீசார் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளா காஸர்கோட்டில் மசூதிக்குள் கள்ள சாராயம் ஊரல் போட்ட டப்லீசை வெளுத்து வாங்கிய கேரள காக்கிகள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவைத் தமிழக இந்துக்கள் […]

Continue Reading

அயோத்தியில் பசி காரணமாக சாது மரணம் அடைந்தாரா?- ஃபேஸ்புக் வதந்தி

அயோத்தியில் பசி காரணமாக வயதான சாமியார் ஒருவர் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் ஒரு படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வயதான பெரியவர் ஒருவர் இறந்து கிடக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தியில் பசியால் மரணமடைந்த சாது. மத்தபடி அடிச்சி கொன்னா மட்டும்தான் குற்றம். பசில செத்தா பிரச்சனை இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Anas Bin Asraf என்பவர் 2020 […]

Continue Reading

கேரள அரசு கொடுத்த உணவைத் தூக்கி எறிந்த வட இந்திய தொழிலாளர்கள்… ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

சொந்த ஊர் திரும்பும் வட இந்தியர்கள் ரயில் ஏறிய நிலையில் கேரள அரசு கொடுத்த உணவைத் தூக்கி வீசியதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில், ரயில் நிலையத்தை ரயில் கடக்கிறது. நடைமேடையில் உணவு பொட்டலங்கள் சிதறிக் கிடக்கின்றன. ரயிலில் உள்ளவர்கள் போராட்டக் குரல் […]

Continue Reading

உ.பி வருமான வரித்துறை துணை கமிஷனர் வீட்டில் புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியதா?

உ.பி-யில் வருமான வரித்துறை துணை கமிஷனர் வீட்டில் நடந்த சோதனையில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுக்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டுக்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உபி வருமான வரித்துறை துணை கமிஷ்னர் வீட்டில் நடந்த சோதனையில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுகள்..!! பாஜக […]

Continue Reading

இந்திய தேசிய கீதம் பாடிய அமெரிக்கர்கள்? வைரல் தகவலின் முழு விவரம்!

கொரோனாவைக் குணப்படுத்த ஹைட்ராக்ஸிகுரோரோகுயின் மாத்திரை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க அமெரிக்க மாணவர்கள் ஒன்றிணைந்து இந்திய தேசிய கீதத்தை பாடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 வெளிநாட்டினர் இந்திய தேசிய கீதம் பாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், ஹைட்ரோக்சி குளோரோகுயின் மாத்திரை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி கூறும் வகையில் மாணவர்கள் பாடியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் […]

Continue Reading

சூரத்தில் இருந்து நடந்து சென்ற குடும்பம் தற்கொலை செய்துகொண்டதா?- ஃபேஸ்புக் வதந்தி

கொரோனா ஊரடங்கு காரணமாக சூரத்திலிருந்து நடந்து சென்ற குடும்பம் ஒன்று பசி கொடுமை தாங்க முடியாமல் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஏப்ரல் 6, 2020 அன்று இரா.செல்வ குமார் என்பவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்த பதிவை சரவணன் என்பவர் 2020 மே 2ம் தேதி ஷேர் செய்துள்ளார். குடும்பமே தற்கொலை செய்துகொண்ட […]

Continue Reading

ஜாய் ஆலூக்காஸ் அதிபர் துபாயில் தற்கொலை செய்துகொண்டாரா?- ஃபேஸ்புக் வதந்தி

ஜாய் ஆலூக்காஸ் அதிபர் தற்கொலை செய்து கொண்டதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜாய் ஆலூக்காஸ் அதிபர் அரக்கல் துபாயில் தற்கொலை செய்துகொண்டார் என்று செய்தித்தாள் ஒன்றில் வந்த செய்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. Sadiq Basha என்பவர் 2020 ஏப்ரல் 30ம் தேதி இந்த செய்தியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். Facebook Link Archived Link அதேபோல், ஜாய் […]

Continue Reading

இது ரிஷி கபூர் சாகும் முன்பாக எடுத்த வீடியோ இல்லை!

‘’ரிஷி கபூர் சாகும் முன்பு எடுத்த கடைசி வீடியோ,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு வீடியோவைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதேபோன்ற தகவலை பலரும் வைரலாக ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது.  Facebook Claim Link 1 Archived Link Facebook Claim Link 2 Archived Link உண்மை அறிவோம்: பாலிவுட் நடிகர் ரிஷி […]

Continue Reading

சமூக இடைவெளியை பின்பற்றும் மிசோரம் மார்க்கெட்: புகைப்படம் உண்மையா?

மிசோரம் மாநிலத்தில் சமூக இடைவெளி சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அழகாக இடைவெளி விட்டு காய்கறி உள்ளிட்ட பொருட்களை சாலையில் விற்க ஏற்பாடு செய்யப்பட்ட படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மிசோரம் என்ற பகுதியும் நம்ம நாட்லதான் இருக்கு. எவ்வளவு அழகாக சமூக இடைவெளியை பின்பற்றி அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார்கள் இந்த மக்கள். பார்க்கவே […]

Continue Reading

இஸ்லாமியருக்கு அடைக்கலம் கொடுத்த இந்து பெண்ணை ஆர்எஸ்எஸ் தாக்கியதாக பரவும் வதந்தி!

இஸ்லாமிய குடும்பத்துக்கு அடைக்கலம் கொடுத்த இந்து பெண்ணை ஆர்.எஸ்.எஸ் காவி வெறியர்கள் தாக்கியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண்மணி ஒருவர் உணவு அருந்துகிறார், அவர் அருகில் மற்றொரு பெண்மணி நிற்கும் புகைப்படத்தையும், நிற்கும் பெண்மணியைப் போல உள்ளவர் முகத்தில் ரத்தக் காயம் உள்ள படத்தையும் பகிர்ந்துள்ளனர். அந்த படத்தின் மீது, “முஸ்லிம் குடும்பத்துக்கு அடைக்கலம் கொடுத்த இந்து […]

Continue Reading

கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் வைத்துக் கொடுத்தாரா அமீர்கான்?

கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் வைத்து இந்தி நடிகர் அமீர் கான் வழங்கியதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர் அமீர் கான், மாவு பாக்கெட்டில் பணம் இருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒவ்வொரு மாவு பாக்கெட்டுக்குள்ளும் 15000 ரூபாய் ஏழைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி. டில்லியில் ஏழைகள் வாழ்கிற பகுதிக்கு -23/04/2020- இரவில் ஒரு லாரி வந்தது. […]

Continue Reading

கேரளாவில் பூஜை செய்த பெண்ணை தாக்கிய கிறிஸ்தவ மிஷனரிகள்? உண்மை இதோ!

கேரளாவில் பரசுராம ஜெயந்தியைக் கொண்டாடிய தலித் பழங்குடியின பெண்ணை கிறிஸ்தவ மிஷனரிகள் தாக்கியதாக படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மூதாட்டி ஒருவரின் முகத்தில் ரத்தம் வடியும் புகைப்படம், கிருஷ்ணர் சாமி சிலை தரையில் உடைத்து வீசப்பட்டிருக்கும் படங்களைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், கேரளா, தலித் பழங்குடியின மூதாட்டி பரசுராம ஜெயந்தியை முன்னிட்டு இன்று பூஜை செய்த காரணத்தால் […]

Continue Reading

செவிலியரை இஸ்லாமியர் காலில் விழ வைத்த ஆந்திர எம்.எல்.ஏ?

ஆந்திராவில் டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்தவர் காலில் செவிலியர் ஒருவரை எம்.எல்.ஏ விழ வைத்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமியர் ஒருவர் காலை செவிலியர் ஒருவர் தொடுவது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்ட மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் செவிலியர் இவர். இவரை கர்னூல் தொகுதி எம்எல்ஏ மிரட்டி […]

Continue Reading

மாலத்தீவு முன்னாள் அதிபர் மடியில் சோனியா அமர்ந்திருக்கும் படம் உண்மையா!

சோனியா காந்தி மாலத்தீவு முன்னாள் அதிபர் மடியில் அமர்ந்திருப்பது போன்று போட்டோஷாப் செய்யப்பட்ட அநாகரீகமாக  படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். வதந்தியின் விவரம்: Facebook Link Archived Link மாலத்திவு முன்னாள் அதிபர் மாமூன் மடியில் சோனியா காந்தி நெருக்கமாக அமர்ந்திருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “ஒவ்வொன்றாக அம்பலம் ஏறுகிறது அன்டானியோ மைனோவின் விஷமங்கள்.. கொரானா லாக்டௌன் ‘நல்லது’…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

மகாராஷ்டிராவில் சாதுக்களை கொன்றவர்களை போலீசார் அடித்து கைது செய்தனரா?

மகாராஷ்டிர மாநிலத்தில் சாதுக்களை அடித்து கொலை செய்த வன்முறை கும்பலை போலீசார் அடித்து கைது செய்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 2 நிமிடம் 10 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில் இளைஞர்கள், முதியவர்கள் என பலரையும் போலீசார் அடித்து விரட்டுகின்றனர். பார்க்க பலர் இஸ்லாமியர்கள் போல உள்ளனர். வீடு புகுந்தும் […]

Continue Reading

பசி தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட குடும்பம்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

ஊரடங்கு நேரத்தில் பசி கொடுமை காரணமாக உத்தரப்பிரதேசத்தில் ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினரின் படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மோடியின் ஏழைகளை ஒழிக்கும் திட்டம் துவங்கிவிட்டது (பசியின் கொடுமையால் உத்தரப்பிரதேசத்தில் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டனர்)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தமிழன் மு.செ. பாலா […]

Continue Reading

மகாராஷ்டிராவில் சாதுக்களைக் கொன்ற இஸ்லாமியர்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

மகாராஷ்டிராவில் சாதுக்கள் மற்றும் கார் டிரைவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மத சாயம் பூசும் வகையில் பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மகாராஷ்டிராவில் கிராம மக்களால் கொடூரமான முறையில் சாதுக்கள் அடித்து கொல்லப்படும் வீடியோ மற்றும் கொல்லப்பட்டவர்களின் படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில், “மும்பை ….. பாலகர் மாவட்டம் காசாபகுதியில் தனது குருநாதர் மரணத்திற்கு சென்று கொண்டிருந்த இந்து சாதுக்களை […]

Continue Reading

ஜன் தன் யோஜனா திட்டத்தில் ரூ.500 நிதி உதவி பெற்றாரா நிடா அம்பானி?

‘’நிடா அம்பானி ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.500 பணம் பெற்றுக் கொண்டார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவலை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link  Facebook Claim Link 2 Archived Link இதனை பலரும் நிடா அம்பானி வெளியிட்ட உண்மையான ட்விட்டர் பதிவு என்றே நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:  மத்திய அரசு கோவிட் 19 ஊரடங்கு […]

Continue Reading

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை கொடுத்ததால் சுவிஸ் மலையில் இந்திய கொடிக்கு மரியாதையா?

இந்தியாவிடமிருந்து கொரோனாவுக்கான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையைப் பெற்றதால் ஆல்ப்ஸ் மலையில் இந்திய கொடியை அலங்கரித்து நன்றி தெரிவித்த சுவிட்சர்லாந்து என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலை மீது இந்திய தேசியக் கொடி ஒளிர்விக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இந்தியாவிடமிருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பெற்ற ஸ்விட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள சிகரத்தை மூவர்ணக் கொடியால் […]

Continue Reading

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கேட்டு பாகிஸ்தான் இளைஞர்கள் கொடி பிடித்தார்களா?

பாகிஸ்தான் இளைஞர்கள் காஷ்மீர் வேண்டாம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை கொடுங்கள் என்று இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து கொடி பிடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமூக ஊடகத்தில் யாரோ ஷேர் செய்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்தள்ளனர். அதில் படத்தில், இளைஞர்கள் ஒரு பேனரில், எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பேனரை […]

Continue Reading

கர்நாடகாவில் ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்ற தேரோட்டம்- புகைப்படம் உண்மையா?

கர்நாடகா மாநிலம் கலாபுராகி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற தேர் திருவிழா நடந்தது என்று ஒரு படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பல்லாயிரக் கணக்கானோர் திரண்ட தேர் திருவிழா புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “கர்நாடகம் கலாபராகி மாவட்டத்தில் இன்று நடந்த தேரோட்டத்தில் கூட்டம். கொரோனாவுக்கு காரணம் யார்? ஊடகங்கள் இதை வெளியிடாமல் இருப்பது ஏன்? மத்திய பாஜக அரசின் […]

Continue Reading

பிரதமர் மோடி பேசியதை பார்த்து டிவியை உடைத்த நபர்- வீடியோ செய்தி உண்மையா?

மோடியின் நேரலை அறிவிப்பைப் பார்த்து கோபத்தில் டி.வி-யை ஒருவர் உடைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 வெறும் 20 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில் மோடி வீடுகளில் விளக்கேற்றுமாறு அழைப்பு விடுத்தது தொடர்பான செய்தி காட்சிகள் வருகின்றன. இதைப் பார்த்த நபர் டி.வி-யை தூக்கிப்போட்டு உடைக்கிறார்.  நிலைத் தகவலில், “அடப்பாவமே.. இவன் நம்மள […]

Continue Reading

பொருளாதார வீழ்ச்சி பற்றி ரத்தன் டாடா கருத்து தெரிவித்தாரா?- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

இந்தியப் பொருளாதாரம் பற்றி ரத்தன் டாடா மிக நீண்ட கருத்தை வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரத்தன் டாடா படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “TATA குழுமத்தின் முன்னாள் தலைவரும், கொடைவள்ளலும் ஆன_ *திரு.இரத்தன் டாடா அவர்களின் கருத்துப்பதிவு* : “கொரனாவின் விளைவாக பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடையும் என நிபுணர்கள் கணிக்கிறார்கள். எனக்கு […]

Continue Reading

பீகார் பாஜக நபருடன் பீலா ராஜேஷ் என்று பகிரப்படும் படம் உண்மையா?

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீகார் மாநில பா.ஜ.க பிரமுகருடன் உள்ளதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலாளார் பீலா ராஜேஷ் காவி நிற ஆடை அணிந்த நபர் ஒருவருடன் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், “பீகார் பி.ஜே.பி நபருடன்… பீலா ராஜேஷ்… எப்படி கட்டமைப்பு” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த படத்தை Abdul Rahman […]

Continue Reading

கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ய உலகிலேயே இந்தியா அதிக கட்டணம் வசூலிக்கிறதா?

‘’கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய இந்தியாவில் ரூ.4500 வசூலிக்கப்படுகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link இதில், மோடியின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் அருகே, கொரோனா பரிசோதனை செய்ய ‘’ஈரான், சீனா, ஐரோப்பியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் இலவசமாகவும், பாகிஸ்தான் ரூ.500, வங்கதேசம் ரூ.300 எனவும் வசூலிக்கின்றன. டிஜிட்டல் இந்தியாவில் ரூ.4500 வசூலிக்கப்படுகிறது,’’ […]

Continue Reading

குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கியதில் உ.பி டாக்டர் வந்தனா திவாரி மரணம் அடைந்தாரா?

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைக்கு சென்ற டாக்டர் வந்தனா திவாரி குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கியதில் உயிரிழந்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். ஆங்கிலத்தில், “டாக்டர் வந்தனா திவாரி இன்று மரணம் அடைந்தார். அவரது ஆன்மா இளைப்பாற வேண்டுவோம். கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற இவரை குறிப்பிட்ட […]

Continue Reading

மருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா?

நிர்வாணமாக மருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் நபர் வீடியோ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 2.19 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளனர். அதில் நிர்வாண கோலத்தில் ஒருவர் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைக்கிறார். அவரை இஸ்லாமியர் ஒருவர் அடித்து துரத்துகிறார். வெளியே செல்ல முயன்ற அவரை பேன்ட் – […]

Continue Reading

மோடி அழைப்பின்பேரில் விளக்கேற்றினாரா பினராயி விஜயன்?

பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கேற்றியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பினராயி விஜயன் அறை விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, விளக்கொளியின் முன் அமர்ந்திருப்பது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், தமிழக கம்யூனிஸ்டுக கவனத்திற்கு… பினராயி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Premnath OM VainavShaiva என்பவர் ஏப்ரல் 5, 2020 அன்று வெளியிட்டுள்ளார்.  […]

Continue Reading

வாட்ஸ்ஆப் குழு அட்மின்களுக்கு போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளதா?

‘’வாட்ஸ்ஆப் குழு அட்மின்களுக்கு போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது,’’ என்ற தலைப்பில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் ஃபார்வேர்ட் செய்யப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: நமது நண்பர் ஒருவருக்கு வாட்ஸ்ஆப் வழியாக வந்த இச்செய்தியை, நம்மிடம் அனுப்பி உண்மை அறியும் சோதனை நடத்த கேட்டுக் கொண்டார். இதனை பேஸ்புக்கிலும் சிலர் பகிர்ந்திருந்ததை கண்டோம்.  உண்மை அறிவோம்: கொரோனா வைரஸ் பற்றி வித விதமான மீம்ஸ்கள், நகைச்சுவை பதிவுகள் மட்டுமின்றி […]

Continue Reading

ஏப்ரல் 15 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மீண்டும் தொடங்குகிறதா?

‘’ஏப்ரல் 15 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவை மீண்டும் ரயில்வே தொடங்குகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: FB Claim Link Archived Link 1 GizBotTamil Link Archived Link 2 இந்த செய்தியில் வரும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ரயில் பயணச்சீட்டிற்கான முன்பதிவு தொடங்க உள்ளதாகக் கூறியுள்ளனர். இதேபோல, விமான டிக்கெட் பதிவும் தொடங்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.  இதே செய்தியை, […]

Continue Reading

கொரோனா வைரஸ்: அக்‌ஷய் குமார், தோனி நிதி உதவி செய்தார்களா?

கொரோனா நிவாரண நிதியாக இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.180 கோடியும், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ரூ.20 கோடியும் வழங்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link பிரதமர் மோடி, இந்தி நடிகர் அக்‌ஷய் குமார், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஆகியோரின் படத்தைக் கொண்டு பதிவை உருவாக்கியுள்ளனர். அதில், “பாரத பிரதமர் திரு.மோடி ஜி அவர்களிடம் கொரோனா நிவாரணி நிதி…! […]

Continue Reading

ராஜஸ்தானில் ராணுவம் உருவாக்கிய பிரம்மாண்ட மருத்துவமனை படம்!- ஃபேஸ்புக் வதந்தி

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சில மணி நேரங்களில் இந்திய ராணுவம் பிரம்மாண்ட மருத்துவமனையை அமைத்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரம்மாண்ட ராணுவ மருத்துவ மனை போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. அதன் உட்புறத் தோற்றம் மற்றும் ராணுவ மருத்துவ அதிகாரிகள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவை மிஞ்சிய இந்திய ராணுவத்தின் அருமையான செயல். சில மணிநேரங்களிலேயே ஆயிரம் […]

Continue Reading

உ.பி-யில் சாமி சிலைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா?

உ.பி-யில் கடவுள் சிலைகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்ய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதன் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாமி சிலைகளுக்கு ஸ்டெதாஸ்கோப் வைத்து பரிசோதனை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “கடவுள்களுக்கும் கரோனா உள்ளதா? மருத்துவர்கள் நேரில் சோதனை. சாமிகளுக்கு கரோனா தொற்று உள்ளதா என்று […]

Continue Reading

நிர்பயா குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ஜோசப் குரியன் இவரா?

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய ஜோசப் குரியன் படம் என்று ஒருவருடைய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஒரு நபரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் கீழே, “நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய ஜோசப் குரியன்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Spr என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மார்ச் 20 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து […]

Continue Reading

இடதுசாரிகள் என்பதால் நிர்பயா குற்றவாளிகள் உடனே தண்டிக்கப்பட்டனரா?

‘’நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள் என்பதால் உடனே தண்டிக்கப்பட்டுவிட்டனர்,’’ என்று திருமுருகன் காந்தி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இது உண்மையா என ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ‘’திருமுருகன் காந்தி, நிர்பயா பலாத்கார வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள், எனவேதான் அவர்களுக்கு உடனே தண்டனை விதிக்கப்பட்டது,’’ என்று கூறி ட்விட்டரில் பதிவு வெளியிட்டதாக, […]

Continue Reading

பசுமாட்டிடம் பாலியல் அத்துமீறல் செய்த இஸ்லாமிய இளைஞர்?- ஃபேஸ்புக் வதந்தி

பசுமாட்டிடம் பாலியல் அத்துமீறல் செய்து கொன்ற இஸ்லாமிய இளைஞன் கேரளாவில் கைது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பசுமாடு இறந்து கிடக்கும் கொடூரமான புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “பசவை கட்டிவைத்து நீர் ஆகாரம் எதுவுமின்றி இரண்டு நாட்களாக கற்பழித்த இஸ்லாமிய இளைஞன் கேரளாவில் கைது. செய்தி… அமைதி மார்க்கம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை லட்சுமி […]

Continue Reading

மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் என்று பிரதமர் மோடி சொன்னாரா?- ஃபேஸ்புக் வீடியோவால் பரபரப்பு

மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 1.11 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் முதலில் மோடி பேசுகிறார். அப்போது, “மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்” என்கிறார். “பீஃப் எக்ஸ்போர்ட்” என்று மோடி குறிப்பிட்டது மீண்டும் மீண்டும் காட்டப்படுகிறது. அதைத் தொடர்ந்து […]

Continue Reading

16 வயது சிறுமியை மணந்த 83 வயது முதியவர்!- வைரல் புகைப்படம் உண்மையா?

83 வயதான இஸ்லாமியர் ஒருவர் 16 வயதான சிறுமியை திருமணம் செய்துள்ளார் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதியவரும் இளம் பெண்ணும் மாலையும் கழுத்துமாக இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “16க்கும் 83க்கும் கல்யாணம். அமைதி மார்க்கத்தில் மட்டுமே சாத்தியம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை Erachakulam Kaliyappan என்பவர் 2020 மார்ச் 9 […]

Continue Reading

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போலீசார் போராட்டம்!- வைரல் புகைப்படம் உண்மையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போலீசார் போராட்டத்தில் குதித்தாக சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சி.ஏ.ஏ, என்.ஆர்.சி வேண்டாம் என்று ஆங்கிலத்தில் அட்டை பிடித்தபடி இருக்கும் போலீசாரின் படங்கள் கொலாஜ் செய்து பகிரப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில் “குடியுரிமையை எதிர்த்து போலீசும் போராட்டத்தில் குதித்து விட்டார்கள்..” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, திருமா தம்பி விசிக என்ற ஃபேஸ்புக் ஐடி […]

Continue Reading

கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை அடித்த இந்திய போலீஸ்!- வைரல் வீடியோ உண்மையா?

இந்திய போலீஸ் அதிகாரி ஒருவர் கைக்குழந்தையுடன் வந்த இளம் பெண்ணை லத்தியால் அடிக்கிறார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 17 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதில், ஒரு பெண் ஓடுகிறார். அவருக்குப் பின்னால் கையில் குழந்தையுடன் பெண் ஒருவர் வருகிறார். போலீஸ் அதிகாரி போன்ற ஒருவர் அந்த பெண்ணை லத்தியால் […]

Continue Reading

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டாரா? பரபரப்பை ஏற்படுத்திய டிஎன் நியூஸ் 24 இணையதளம்!

‘’பிரியங்கா காந்தி கைது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே செய்தியை மேலும் சில பேஸ்புக் பக்கங்களிலும் பகிர்ந்துள்ளனர்.  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:இந்த ஃபேஸ்புக் பதிவுகளில் பகிரப்பட்டுள்ள செய்தி லிங்க், முதலில் டிஎன்நியூஸ்24 இணையதளத்தில் வெளியிடப்பட்டதாகும். அதன் தலைப்பில் ‘பிரியங்கா கைது’ என்று கூறியுள்ளனர். இதனை சமூக ஊடகங்களில் […]

Continue Reading

மகாராஷ்டிராவில் 24 வயது முஸ்லீம் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக பதவியேற்றாரா?

‘’மகாராஷ்டிராவில் 24 வயது முஸ்லீம் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக பதவியேற்றார்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் புகைப்படம் சிலவற்றை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் உண்மையா என்ற சந்தேகத்தில் தகவல் தேடினோம். முதலில இதுபற்றி ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என […]

Continue Reading

டெல்லி கலவரத்தில் போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சாரூக்கானந்தா கைது- ஃபேஸ்புக் விஷமம்

டெல்லி கலவரத்தில் துப்பாக்கியால் சுட்ட ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி சாரூக்கானந்தா கைது என்று நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டெல்லியில் கைது செய்யப்பட்ட ஷாரூக்கின் படத்தை நிலைத் தகவலில், டெல்லி கலவரத்தில் துப்பாக்கியால் சுட்ட RSS கைக்கூலி சாரூக்கானந்த ஐயங்கார் கைது. சட்டையை கழட்டியபோது பூணூல் இருந்தது அம்பலம் – டெல்லியிலிருந்து @news7tamil புலனாய்வுதுறை […]

Continue Reading

ஆயுதங்கள் சிக்கியது ஆம் ஆத்மி கவுன்சிலர் வீடா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா?- விபரீத ஃபேஸ்புக் பதிவுகள்

டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் ஆயுதங்கள் கிடைத்ததாக ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதே படத்தை வெளியிட்டு டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் வீடு என்று மற்றொரு தரப்பினர் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மிகப்பெரிய குடோனில் நூற்றுக்கணக்கான வாட்கள் உள்ளன. அதை போலீசார் கைப்பற்றி காட்சிக்கு வைத்துள்ளனர். சோஃபா முழுக்க இயந்திரத் துப்பாக்கியாக உள்ளது. இந்த மூன்று […]

Continue Reading