ஜெயலலிதா காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசன் படமா இது?

ஜெயலலிதா காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசன் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜெயலலிதாவின் காலில் ஒருவர்  சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறார். ஜெயலலிதா கையில் உறுப்பினர் கார்டு உள்ளது. காலில் விழுந்தவர் யார் என்று தெரியவில்லை. புகைப்படத்தில் dinamalar.com என்ற வாட்டர் மார்க் தெரிகிறது.  நிலைத் தகவலில், “ஜெயலலிதா காலில் விழுந்து கிடக்கும் திண்டுக்கல் சீனிவாசன்..” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்தாரா பிரதமர் மோடி?

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி விப்லவ் தாக்கூர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் மோடி விழித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மக்களவையில் இருக்கும் பிரதமர் மோடி மற்றும் மாநிலங்களவையில் பேசும் விப்லவ் தாக்கூர் வீடியோ காட்சிகளை ஒன்றிணைத்து 1.14 நிமிடத்துக்கு ஒரே வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.  நிலைத் தகவலில், “பாராளுமன்றத்தில் கேள்விகளுக்கு […]

Continue Reading

கொரோனா வைரஸ்: மசூதி சென்று வழிபட்டாரா சீன அதிபர் ஜீ ஜின்பிங்?

‘’கொரோனா வைரஸ் பாதிப்பால் மசூதி சென்று வழிபட்ட சீன அதிபர் ஜீ ஜின்பிங்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  Irfan Ullah எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பிப்ரவரி 5, 2020 அன்று பகிர்ந்துள்ளது. இதில், சீன அதிபர் ஜீ ஜின்பிங் மசூதி ஒன்றுக்குச் சென்று, முஸ்லீம் சமூகத்தினருடன் பேசுகிறார். பிறகு […]

Continue Reading

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நிகழ்வில் சீமான் பங்கேற்கவில்லையா?

‘’தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நாளன்று சீமான் வரவில்லை,’’ எனும் தலைப்பில் வைரலாக பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய் தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Chandresh Kumar Yadav என்பவர் இந்த பதிவை பிப்ரவரி 5, 2020 அன்று வெளியிட்டுள்ளார். இதில், எச்.ராஜாவின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ தமிழில் தான் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று போராடிய #சுடலையும் […]

Continue Reading

சிஏஏவுக்குப் பிறகு பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டதா?

குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்த பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக 79 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே கருத்துக் கணிப்பு வெளியிட்டது என்று ஒரு பதிவ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்தியா டுடே சிஒட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆங்கிலத்தில் “நாட்டின் மனநிலை, மோடி […]

Continue Reading

தற்காலிக டெண்டில் வசிக்கும் குடியரசு முன்னாள் தலைவர் ஃபக்ருதீன் அலி குடும்பம் இதுவா?

முன்னாள் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீனின் குடும்பம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தற்காலிக டெண்ட் முன்பு வயதான ஆண், பெண், ஒரு சிறு குழந்தை இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தவலில், “முன்னாள் குடியரசுத்தலைவர் ஃபக்ருதீனின் குடும்பம் வாழும் நிலையை பாருங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Mohmed Meeran Saleem என்பவர் 2020 பிப்ரவரி 7ம் […]

Continue Reading

கிறிஸ்தவ மத பிரசாரத்தில் பங்கேற்றாரா நடிகர் விஜய்?

நடிகர் விஜய் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் பங்கேற்றார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 வெறும் 7 விநாடி ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். அதில் இந்திய தேசியக் கொடி இருக்கிறது. நடிகர் விஜய் உடன், வெளிநாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் அருகில் இருக்கிறார். பின்னணியில் அமெரிக்க தூதரகங்களில் செயல்படும் அமெரிக்கன் சென்டரின் சின்னமும் உள்ளது. […]

Continue Reading

முதல்வரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தாரா சீமான்? – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆபாசமாக பேசிய வழக்கில் சீமான் மன்னிப்புக் கடிதம் வழங்கினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு ஒன்றை அளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “முதல்வரை ஆபாசமா பேசிய வழக்கில்..மன்னிப்பு கடிதம்.. கொடுத்தார் சீமான்.. மண்டியிட்ட மான தமிழ் பிள்ளை” […]

Continue Reading

லார்டு லபக் தாஸ் என்று ஒருவர் உண்மையில் இருந்தாரா?

‘’லார்டு லபக் தாஸ் என்று ஒருவர் இருந்தார். அவரை மெட்ராஸ் (சென்னை) மக்களுக்கு மிகவும் பிடிக்கும்,’’ என்று கூறி பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவில், ஆங்கிலேயே அதிகாரி போல தோற்றமளிக்கும் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து, ஆங்கிலத்தில், ‘’லார்டு லபக்தாஸ் என்பவர் உண்மையில் யார்? இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி, ஆன்மிகவாதி. இவரை மதராஸ் […]

Continue Reading

நடிகர் விஜய் வீட்டில் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டதா?- ஃபேஸ்புக் வதந்தி

நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் கிடைத்த பணம் மற்றும் ஆபரணங்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கட்டுக்கட்டாக ரூ.2000 மற்றும் ரூ.100 நோட்டு அடுக்கு வைக்கப்பட்டுள்ள படத்தை பகிர்ந்துள்ளனர். அந்த படத்தில் நகைகள் கொஞ்சம் உள்ளன. நிலைத் தகவலில், “நடிகர் விஜயின் வீட்டில் நடந்த. IT ரெய்டில் கிடைத்த பணம் மற்றும் ஆபரணங்கள் […]

Continue Reading

கொல்கத்தாவில் தீவிரவாத பயிற்சி பெற்ற சிறுவர்கள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டார்களா?

கொல்கத்தாவில் தீவிரவாத பயிற்சி பெற்ற சிறுவர்கள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டதாக புகைப்படங்களுடன் கூடிய பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சோஃபா முழுக்க இயந்திரத் துப்பாக்கி அடுக்கி வைக்கப்பட்ட படம், போலீஸ் அதிகாரி பேட்டி அளிக்கும் படம், அவர் மேசையில் உள்ள கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் படம் மற்றும் இஸ்லாமியப் பெரியவர் ஒருவரை அழைத்துச் செல்லும் படம் என […]

Continue Reading

மங்களூருவில் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிரான்ஸ்பார்மரில் கை வைத்த நபர்- வீடியோ உண்மையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் ஒருவர் டிரான்ஸ்பார்மரில் கைவைத்து தற்கொலைக்கு முயன்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 29 விநாடி ஓடும் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அலறல் சத்தம் மட்டுமே கேட்கிறது. நிலைத் தகவலில், […]

Continue Reading

சமஸ்கிருதம் தவிர மற்ற மொழிகளில் அர்ச்சனை- தடை விதிப்போம் என்று அமித் ஷா கூறினாரா?

‘’சமஸ்கிருதம் தவிர மற்ற மொழிகளில் அர்ச்சனை செய்வதற்கு தடை விதிப்போம்,’’ என்று அமித் ஷா சொன்னதாகக் கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Rowthiram Pazhagu  எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில் தந்தி டிவி வெளியிட்டது போன்ற ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்து, ‘’சமஸ்கிருதம் தவிர்த்த மொழிகளில் அர்ச்சனை செய்வதை சட்டத்தின் […]

Continue Reading

மது பாட்டில் கடத்திய பெண் பா.ஜ.க மகளிர் அணி செயலாளரா?- சர்ச்சை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

பா.ஜ.க மகளிர் அணி செயலாளர் அனுசுயா என்பவர் புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு மது பாட்டில் கடத்தியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தின் அருகே அமர்ந்திருக்கிறார். அவர் முன்பாக இரண்டு பைகளில் மது பாட்டில்கள் உள்ளன. நிலைத் தகவலில், “பாஜக கட்சியின் மகளிர் அணி செயலாளர் அனுசுயா பாண்டிசேரில இருந்து கடலூருக்கு “புரட்சிப்பயணம்” மேற்கொண்டபோது” என்று […]

Continue Reading

தி.மு.க தோல்வியடையும் என்று பிரசாந்த் கிஷோர் கூறினாரா?

இனி மேற்கொண்டு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக திமுக பேசிவந்தால் 2021 தேர்தலில் தி.மு.க தோல்வி அடையும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இரண்டு நியூஸ் கார்டுகளை ஒன்றாக சேர்த்துப் பதிவிட்டது போல உள்ளது. மேலே உள்ள நியூஸ் கார்டில், தி.மு.க-வுடன் இனி பணியாற்றவா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கீழே தந்தி டி.வி நியூஸ் கார்டு […]

Continue Reading

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டதா? சர்ச்சை கிளப்பிய புகைப்படம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் படம் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சீனாவில் கொரோனோ வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க மிக வேகமாக கட்டப்பட்ட மருத்துவமனை படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மோடி ஆட்சியில் மதுரையில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை” என்று குறிப்பிட்டு “பாரத் மாதாகி ஜே, மோடி த மாஸ்” என்று ஹேஷ் டேக் செய்துள்ளனர். […]

Continue Reading

திருப்பூரில் துறைமுகம் கட்டுவோம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தாரா?

‘‘திருப்பூரில் துறைமுகம் கட்டுவோம்,’’ என்று மு.க.ஸ்டாலின் அறிவித்ததாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  ராஜன் காந்தி என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்வதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்:இந்த நியூஸ் கார்டு உண்மையா என்ற சந்தேகத்தில் fotoforensics.com இணையதளத்தில் பதிவேற்றி, ஆய்வு செய்தோம். அப்போது, […]

Continue Reading

அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த எல்லை காந்தி வந்தபோது எடுத்த புகைப்படமா இது?

பேரறிஞர் அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த கான் அப்துல் கஃபார் கான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எல்லை காந்தி என்று அழைக்கப்படும் கான் அப்துல் கஃபார் கானின் பழைய புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில் “பேரறிஞர் அண்ணாவின் மறைவின்போது தள்ளாத வயதிலும் ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தினர் எல்லை காந்தி எனப்படும் கான் அப்துல் கஃபார்கான்” என்று […]

Continue Reading

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும்படி மசூதி சென்று தொழுதாரா சீன பிரதமர்?

‘’தன் நாட்டு மக்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும்படி சீன பிரதமர் மசூதி சென்று தொழுதார்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரலாக பகிரப்படும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  Mohamed Lukman என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், அரசாங்க அதிகாரி போல தோன்றும் ஒருவர் தனது உதவியாளர்களுடன் மசூதியில் உள்ளே நுழைந்து தொழுகை நடத்தும் காட்சிகளை காண முடிகிறது. […]

Continue Reading

பிரசாந்த் கிஷோருக்கு சவால் விட்ட ஓபி ரவீந்திரநாத் குமார்?- தந்தி டிவி பெயரில் வதந்தி

‘’பிரசாந்த் கிஷோர் என்ன, யார் வந்தாலும் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றிக்கனியை பறித்து மோடிஜி காலடியில் சமர்ப்பிப்போம்,’’ என்று ஓபி ரவீந்திரநாத் எம்பி கூறியதாகப் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  உண்மை அறிவோம்: திமுக.,வுக்கு வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் ஆலோசனை வழங்குவதற்காக, பிரசாந்த் கிஷோரை அக்கட்சி ஆலோசகராக நியமித்துள்ளது. இதையொட்டி பலரும் சமூக ஊடகங்களில் […]

Continue Reading

கார்ப்பரேட் ஒழிப்பு ஆலோசனை நடத்திய திருமாவளவன், சீமான்? அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு

“டாடா மினரல் தண்ணீரைக் குடித்துக்கொண்டே கார்ப்பரேட் ஒழிப்பு ஆலோசனை நடந்தது” என்று தொல் திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த தகவலின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தேன். தகவலின் விவரம்: Facebook Link Archived Link விடுதலைச் சிறுத்தைகள் தொல் திருமாவளவன், நாம் தமிழர் சீமான், பாரதி ராஜா, இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் அமர்ந்து பேசும் படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேல் பகுதியில், “டாடா மினரல் தண்ணீரைக் […]

Continue Reading

சோமாலியாவை தொடர்ந்து சொந்தமாக விமான சேவை இல்லாத நாடாக மாறியதா இந்தியா?

‘’சோமாலியா நாட்டை தொடர்ந்து சொந்தமாக விமான சேவை இல்லாத நாடாக மாறிய இந்தியா,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  வச்சி செய்வோம் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஏர் இந்தியா தொடர்பான கார்ட்டூன் ஒன்றை பகிர்ந்து, அதன் மேலே, ‘’சொந்தமாக விமான சேவை இல்லாத இரண்டாவது நாடாக மாறியது […]

Continue Reading

கன்னியாகுமரியில் நடந்த சிஏஏ-வுக்கு எதிரான பேரணியின் படமா இது?

கன்னியாகுமரி மாவட்டத்தில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நடந்த பேரணியின் படம் என்று ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை முழுக்க மக்கள் தலைகளாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அதனுடன் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் படங்களையும் சேர்த்து வெளியிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசின் c a a க்கு எதிராக இது வரை இல்லாத […]

Continue Reading

பள்ளிவாசலுக்கு புர்கா அணிந்து அரிவாளுடன் வந்தது ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதியா?

பெங்களூரு பள்ளி வாசல் முன்பாக புர்ஹா போட்டுக் கொண்டு கையில் கத்தியுடன் கலவரம் செய்யும் நோக்கில் திரிந்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி பிடிபட்டான் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 3.06 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில், ஒருவர் இஸ்லாமியப் பெண்கள் அணிந்திருக்கும் புர்கா அணிந்துள்ளார். வீடியோவில் பேசும் நபர், இது பெங்களூருவில் […]

Continue Reading

மக்கள் ஒற்றுமையாக வசிப்பதில் தமிழக அளவில் ராமநாதபுரம் முதலிடம்: பேஸ்புக் வதந்தி

‘’ஜாதி மத பேதம் இல்லாமல் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதில் முதல் மாவட்டமாக ராமநாதபுரம் உள்ளது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இந்த பதிவில் ராமநாதபுரம் ரயில் நிலைய புகைப்படத்தை பகிர்ந்து, ‘’தமிழகத்தில் ஜாதி, மத பேதம் இல்லாமல் ஒற்றுமையாக மக்கள் வாழும் மாவட்டமாக முதல் இடத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தேர்வு,’’ என்று எழுதியுள்ளனர். […]

Continue Reading

பெங்களூருவில் புர்கா அணிந்து வந்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்: வைரல் வீடியோ உண்மையா?

பெங்களூருவில் நடக்கும் போராட்டங்களை சீர்குலைக்க முஸ்லிம் பெண் வேடத்தில் புர்கா அணிந்து வந்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 3.42 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், புர்கா அணிந்த ஒருவரை சிலர் சுற்றிவளைத்து புர்காவை கழற்றும்படி கூறுகிறார்கள். சிறிது நேரத்தில் புர்காவை கழற்றும்போது அந்த நபர் ஆண் […]

Continue Reading

பெரியார் படத்தை வெளியிட இயக்குனர் வேலு பிரபாகரனுக்கு ரஜினி உதவினாரா?

பெரியார் படம் வெளிவர வேண்டும் என்று ரஜினிகாந்த் தனக்கு பணம் கொடுத்து உதவினார் என்று இயக்குநர் வேலு பிரபாகரன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இயக்குநர் வேலு பிரபாகரன் படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மன்னிப்பு கேட்க முடியாது. பெரியார் படத்துக்கு பைனான்ஸ் செய்த பெரியாரிஸ்ட் கூட வட்டிக்கு வட்டிபோட்டு, என் வீட்டை எழுதி வாங்கிட்டான்க. […]

Continue Reading

ஆப்கானிஸ்தானில் பயணிகள் விமான விபத்து: உண்மை செய்தி என்ன?

‘’ஆப்கானிஸ்தானில் பயணிகள் விமான விபத்து: 83 பேரின் கதி என்ன,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் செய்திகளை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link 1 Samayam Tamil Link Archived Link 2 சமயம் தமிழ் வெளியிட்ட செய்தியைப் போலவே தினகரன், ஒன் இந்தியா தமிழ் உள்பட நிறைய இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. OneIndia Tamil Link  Archived Link  Dinakaran News Link  […]

Continue Reading

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களை நாய் என்று விமர்சித்தாரா ஓ.பி.ஆர்?

“குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் நாய்கள் இங்கு குரைப்பதை நிறுத்திவிட்டு பாகிஸ்தானில் குடியேறலாம்” என்று அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தேனி அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் நாய்கள் இங்கே குரைப்பதை நிறுத்திவிட்டு பாகிஸ்தானில் குடியேறலாம் […]

Continue Reading

பெரியார் ராமரை செருப்பால் அடித்தார் என்பதை கி.வீரமணி ஒப்புக் கொண்டாரா?

‘’பெரியார் ராமரை செருப்பால் அடித்தார் என்று கி.வீரமணி ஒப்புக் கொண்டார்,’’ எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது. தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  மாரிதாஸ் காணொளிகள் இந்த வீடியோவை கடந்த ஜனவரி 21ம் தேதியன்று வெளியிட்டுள்ளது. இதில், வீரமணி, ‘’பெரியார் ராமரை செருப்பால் அடித்த பின் திமுகவுக்கு 183 இடங்களில் வெற்றி கிடைத்தது,’’ என்று பேசுகிறார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து […]

Continue Reading

மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் கிடையாது என்று ரஜினி கூறினாரா?

“மிரட்டிய உடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் கிடையாது” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரஜினி படத்துடன் கூடிய நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் “மன்னிப்பு கேட்க முடியாது ரஜினிகாந்த் அதிரடி! மிரட்டிய உடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் […]

Continue Reading

தமிழக பா.ஜ.க தலைவராக எச்.ராஜா தேர்வு; சான்றிதழ் உண்மையா?

தமிழக பாஜக தலைவராக எச்.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ஒரு சான்றிதழ் சமூகம் ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பாஜக தலைவர் பதவிக்கு ஜனவரி 17 2020 அன்று தேர்தல் நடந்ததாகவும் இதில் ராஜா வெற்றி பெற்றார் என்றும் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் இந்த பதிவை வெளியிட்டவர் எச்.ராஜா உடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.  இந்த பதிவை Chandrasekaran Ganessin என்பவர் 2020 ஜனவரி […]

Continue Reading

பெரியார் – மணியம்மை திருமண புகைப்படம் இதுவா?

‘’பெரியார்- மணியம்மை திருமணம்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Murugesh Mudhaliyar என்பவர் ஜனவரி 22, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில் பெரியார் முன் பெண் ஒருவர் மாலை அணிந்து நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’பொண்டாட்டிக்கு தாலி கட்டாதே.. அது பெண் அடிமைத்தனம்னு சொல்லி, மகளுக்கு தாலி கட்டிய […]

Continue Reading

பா.ஜ.க-வை கீழ்த்தரமான கட்சி என்று கூறினாரா நடிகர் அஜித்?

“எனது உண்மை ரசிகர்கள் யாரும் பாஜக போன்றதொரு கீழ்த்தரமான கட்சியில் இணைய மாட்டார்கள்” என்று நடிகர் அஜித்குமார் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர் அஜித் படத்துடன் கூடிய, நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் “எனது உண்மையான ரசிகர்கள் யாரும் பாஜக போன்றதொரு கீழ்த்தரமான கட்சியில் இணைய மாட்டார்கள் – […]

Continue Reading

நடிகர் ரஜினிகாந்த் அகால மரணம்: ஃபேஸ்புக் வதந்தியால் திடீர் பரபரப்பு

‘’நடிகர் ரஜினிகாந்த் அகால மரணம்,’’ என்ற பெயரில் பகிரப்பட்டிருந்த ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  அன்புசெல்வன் அன்பு எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலர் உண்மை என நம்பி வைரலாக பகிர அதேசமயம், சிலர் இது தவறான செயல் என்று கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி […]

Continue Reading

இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமரா… அதிபரா? – சர்ச்சையை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

பாகிஸ்தான் பிரதமர் என்று குறிப்பிடுவதற்கு பதில் பாகிஸ்தான் அதிபர் என்று குறிப்பிட்டு இம்ரான்கான் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் லெட்டர் பேடில் பத்திரிகை செய்தி வெளியாகி உள்ளது. அதில், பாகிஸ்தான் அதிபர் (பிரதமரை அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்) இம்ரான் கான் கையொப்பம் உள்ளது.  அந்த பத்திரிகை செய்தியில், “கராச்சி […]

Continue Reading

பாஜகவில் இருந்து வெளியேறுவேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தாரா?

‘’பாஜகவில் இருந்து வெளியேறுவேன் – பொன்.ராதாகிருஷ்ணன்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Manickam Palaniyapan என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், தந்தி டிவி பெயரில் வெளியான நியூஸ் கார்டை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யாவிட்டால் பாஜகவிலிருந்து வெளியேறுவேன், என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னதாக […]

Continue Reading

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மோடியின் மனைவி பங்கேற்றாரா?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் என்று ஒரு செய்தியை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மோடியின் மனைவி யசோதா பென் போன்ற ஒருவர் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோடிக்கு எதிராக போராடும் மோடியின் மனைவி. இது தேவயா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை செய்யது அபுதாஹீர் என்பவர் 2020 ஜனவரி […]

Continue Reading

2018-ம் ஆண்டில் 1.34 லட்சம் இந்தியர்கள் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்துகொண்டனரா?

‘’2018ம் ஆண்டில் 1.34 லட்சம் இந்தியர்கள் வேலையின்மை காரணமாக தற்கொலை,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Kingdom Joker – பாணபத்திர ஓணாண்டி என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஜெயா பிளஸ் ஊடகம் வெளியிட்ட ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். ஜெயா பிளஸ் நியூஸ் கார்டு லிங்க் கீழே […]

Continue Reading

நிர்மலா தேவி விவகாரத்தில் ஸ்டாலின், தமிழன் பிரசன்னாவுக்குத் தொடர்பா? ஃபேஸ்புக் விஷமம்

கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க வழக்கறிஞர் தமிழன் பிரசன்னாவுக்கு தொடர்பு இருப்பதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் தி.மு.க வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா ஆகியோ படங்களுடன் பகிரப்பட்ட பதிவு ஒன்றை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டது போல உள்ளது. அதில், “நிர்மலா தேவி விவகாரத்தில் விலகுகிறது மர்மம்! […]

Continue Reading

பொன்.ராதாகிருஷ்ணன் மனநலம் சரியில்லாதவர் என்று எச்.ராஜா விமர்சித்தாரா?

பொன்.ராதாகிருஷ்ணன் மனநலம் சரியில்லாதவர் போன்று செயல்படுகிறார் என்று எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 18 தமிழ்நாடு ஆகிய நியூஸ் கார்டுகளை ஒன்று சேர்த்துப் பதிவிட்டுள்ளனர். நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டில், “மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு மனநலம் சரியில்லாதவர் போன்று செயல்படுகின்றார் – ஹெச்-ராஜா விமர்சனம்” என்று […]

Continue Reading

பிரதமர் மோடி கொல்கத்தாவில் போராட்டத்திற்கு பயந்து படகில் பயணித்தாரா?

‘’போராட்டத்திற்கு பயந்து படகில் பயணித்த மோடி,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்த புகைப்படம் மற்றும் மோடி கப்பலில் செல்லும் புகைப்படம், மோடிக்கு எதிரான போராட்டத்தின் புகைப்படம் ஆகியவற்றை கொலாஜ் […]

Continue Reading

சிஏஏ-க்கு எதிராக பேசிய மடாதிபதி; கோபம் அடைந்த கர்நாடக முதல்வர்: உண்மை என்ன?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மடாதிபதி பேசியதாகவும் இதனால் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கோபமடைந்ததாகவும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 சாமியார் ஒருவர் பேசுகிறார். அருகிலிருந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா திடீரென்று ஆவேசமாக எழுந்து அவருடன் உரையாடுகிறார். அவரை அமரும்படி அந்த சாமியார் கூறுகிறார். இருவருக்குமிடையே வாக்குவாதம் நடக்கிறது. பிறகு எடியூரப்பா அமர்கிறார்.  47 […]

Continue Reading

எட்வினாவுடன் ஜவஹர்லால் நேரு நெருக்கமாக இருக்கும் படம் உண்மையா?

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு பெண்கூட நெருக்கமாக இருப்பது போன்ற படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நேரு போன்ற தோற்றம் அளிக்கும் நபர், பெண் ஒருவரை பிடித்தபடி காதல் செய்யும் படத்தை பகிர்ந்துள்ளனர். அந்த பெண்ணைப் பார்க்க மவுண்ட்பேட்டனின் மனைவி எட்வினா போல உள்ளது. நிலைத் தகவலில், “நேரு மாமா சுதந்திரத்துக்குப் போராடியதை பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading

அல்லாஹூ அக்பர் என்ற கோஷமிட்டதால் பயந்து ஓடினாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்?

‘’அல்லாஹூ அக்பர் கோஷம் கேட்டு பயந்து ஓடிய அமெரிக்க அதிபர் டிரம்ப்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  கடந்த ஜனவரி 12, 2020 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், டிரம்ப் பேசும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவின் இடையே அல்லாஹூ அக்பர் என யாரோ ஒருவர் கோஷமிடும் சத்தம் கேட்க, அதைக் கேட்டு […]

Continue Reading

ஏ.பி.வி.பி தலைவன் மும்பையில் கள்ள நோட்டு அடித்ததாக பரவும் தகவல் உண்மையா?

ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி தலைவன் கள்ள நோட்டு அச்சடித்தது பற்றி மும்பையில் விசாரணை நடந்து வருகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஏ.பி.வி.பி மற்றும் தாமரை சின்னம் மற்றும் கட்டுக்கட்டாக 2000ம் ரூபாய் நோட்டுக்களை பார்வையிடும் போலீசார் படம் என பலவற்றை ஒன்று சேர்த்து கொலாஜ் வடிவில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அகில இந்திய ஏ.பி.வி.பி தலைவன் […]

Continue Reading

ஆறு ஏழை குழந்தைகளை தத்தெடுத்த கடலூர் ஆசிரியை கயல்விழி! – உண்மை அறிவோம்

கடலூரில் ஆறு ஏழை குழந்தைகளை தத்தெடுத்து அவர்கள் கல்விச் செலவை ஏற்றுக்கொண்ட ஆசிரியை கயல்விழி என்று சீமானின் மனைவி கயல்விழி படத்தை பகிர்ந்துள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி படத்தை பகிர்ந்தள்ளனர். அதன் மீது, “கடலூரில் 6 ஏழை குழந்தைகளை தத்தெடுத்து அவர்கள் கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியை கயல்விழி. மனம் இருந்தால் […]

Continue Reading

விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டாரா?

‘’விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Sakthi Vel எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், சுந்தரவள்ளி புகைப்படத்தை பகிர்ந்து, புதிய தலைமுறை நியூஸ் கார்டு போல உள்ள டெம்ப்ளேட்டில், ‘’இளம்பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட வைத்த தோழர் சுந்தரவள்ளி சென்னையில் […]

Continue Reading

ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் சிகரெட் பிடிக்கும் புகைப்படம் உண்மையா?

‘’ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் போராட்ட களைப்பை புகைவிட்டு போக்குகிறார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டும் வரும் புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  S Periandavan Erode எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில் ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் சிகரெட் பிடிப்பதாகக் கூறி ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

கோட்சே புகைப்படத்தை வணங்கினாரா அமித்ஷா?

“காந்தியை படுகொலை செய்த பயங்கரவாதி கோட்சேவை வணங்கும் அமித்ஷா” என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான அமித்ஷா புகைப்படம் ஒன்றை வணங்கும் படம் பகிரப்பட்டள்ளது. நிலைத் தகவலில், “காந்திஜி படுகொலை செய்த பயங்கரவாதி கோட்ஸேவை வணங்கி. மகாத்மாவால் கட்டமைக்கப்பட்ட இந்தியாவை துவேசம் செய்ய தயார் ஆகும் சீடன்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading