கோமதி மாரிமுத்துவின் ஷூ பற்றிய சர்ச்சை!

‘’கிழிந்த காலணிகளுடன் ஓடினேன்,’’; ‘’என்னிடம் நல்ல ஷூ வாங்கக்கூட வசதியில்லை,‘’; ‘’அதிர்ஷ்டக்கார ஷூ என்பதால் பழைய ஷூவுடனே ஓடினேன், அது 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியது,’’ என கோமதி மாரிமுத்து பேட்டி அளித்ததாக, சமூக ஊடகங்களில் மாறி மாறி தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதுதவிர, ஒரு நல்ல ஷூ கூட வாங்கித் தர முடியாத வக்கற்ற தமிழக அரசு, மத்திய அரசுகளை கண்டிக்கிறோம் எனவும் பலர் விமர்சித்து வருகின்றனர். எனவே, இதன் உண்மைத்தன்மையை விரிவாக ஆய்வு செய்ய […]

Continue Reading

ராமர் கோயில் கட்ட விடாமல் காங்கிரஸ் முட்டுக்கட்டை: அமித் ஷா பேசியதன் விவரம் என்ன?

‘’எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே,’’ என்ற தலைப்பில் ஒரு மீம் பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. உண்மை என நம்பி வைரலாகப் பகிரப்பட்டு வரும் இந்த பதிவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link மார்ச் 21ம் தேதி இந்த ஃபேஸ்புக் பதிவை, Vasanth Kumar என்பவர் வெளியிட்டுள்ளார். இதில், மோடி, அமித் ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ஒன்றாக நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’எத்தனை […]

Continue Reading

அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என்று சி.எஸ்.கே வீரர்கள் சொன்னார்களா?

‘’அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம்,’’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர்கள் கூறுவது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரின் வேண்டுகோள் என்று பகிரப்பட்டுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தை தாங்கிய அட்டையை பிடிப்பது போல உள்ளது. அதில், ‘தமிழ் சகோதர […]

Continue Reading

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த கனிமொழி?- வைரல் வீடியோ

‘’பணம் கொடுத்த கனிமொழி, தேர்தல் ஆணையம் பார்வையில் படும் வரை பகிருங்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் கனிமொழிக்கு ஆரத்தி எடுக்கப்படுகிறது. ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பணம் வழங்குகிறார். எங்கே, எப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை. இந்த […]

Continue Reading

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி விஜய் பேசியது என்ன?

‘’மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய நடுத்தர மக்களே – நடிகர் விஜய்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் வீடியோ செய்தி காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய நடுத்தர மக்களே! – நடிகர் விஜய். Archived Link ஏப்ரல் 4ம் தேதி தமிழன் டா – Thamilan Da என்ற ஃபேஸ்புக் குழு […]

Continue Reading

இலங்கை குண்டுவெடிப்பில் 7 பவுத்த தீவிரவாதிகள் கைது?- உண்மை அறிவோம்!

‘’இலங்கையில் பௌத்த மதத்தைச் சேர்ந்த 7 தீவிரவாதிகள் கைது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இது உண்மையா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதன் விவரம் இதோ உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவை Pakkerali Mdali என்பவர் கடந்த ஏப்ரல் 22ம் தேதி வெளியிட்டிருக்கிறார். இதில், மேல்சட்டை இல்லாத இளைஞர் ஒருவரை இலங்கை போலீசார் அழைத்துச் செல்கின்றனர். அதேன் மேலே, ‘’இலங்கை குண்டுவெடிப்புக்கு முஸ்லீம்கள் காரணம் […]

Continue Reading

சாமி சிலைக்கு மலர் தூவி வழிபட்டாரா மு.க.ஸ்டாலின்?– வைரல் புகைப்படம்

திராவிடம் மண்டியிட்டது என்ற தலைப்பில், சாமி சிலை ஒன்றுக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி வழிபடுவது போன்ற படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம் திராவிடம் மண்டியிட்டது ……. த்தா இனிமே எவனாது பெரியார் பொரியார்ன்னு வந்தா 10, செருப்படி விழும் சொல்லி வை Archived link இந்த புகைப்படத்தில் சாமி சிலை ஒன்றுக்கு சிவப்பு நிற ஆடை அணிந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் […]

Continue Reading

இரட்டை இலைக்கு ஓட்டுப் போட வேண்டாம்: ஜெயலலிதா பற்றி பரவும் ஃபோட்டோஷாப் பதிவு

‘’நீங்கள் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட வேண்டாம்,’’ என மறைந்த ஜெயலலிதா சொல்வது போல ஒரு ஃபோட்டோஷாப் புகைப்படம் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பரவி வருகிறது. இதை பார்க்கும்போதே, ஃபோட்டோஷாப் செய்யப்பட்டதுதான் என தெளிவாக தெரிந்தாலும், ஆயிரக்கணக்கானோர் அதிகம் ஷேர் செய்வதால் இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தோம். தகவலின் விவரம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவை எம்பெட் செய்ய முடியவில்லை என்பதால், அதன் ஸ்கிரின்ஷாட்டை இங்கே இணைத்துள்ளோம். Archived Link இந்த பதிவை Muthu Raj […]

Continue Reading

கட்டண சேனல்களில் விளம்பரம் கூடாது: யோகி ஆதித்யநாத் உத்தரவு உண்மையா?

கட்டண சேனல்களில் விளம்பரம் இருக்கக் கூடாது, என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக, சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. தொலைக்காட்சி உரிமம் வழங்குவது மற்றும் தொலைக்காட்சி சேவை கட்டுப்பாடு அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படி இருக்க இந்த செய்தி உண்மைதானா என்று ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: #இந்தியாவின் மிகபெரிய மாநிலத்தில் #யோகிஅரசு அதிரடி உத்தரவு.‌. அனைத்து கட்டண சேனல்களுக்கும் விளம்பரம் இருக்கக்கூடாது அப்படி இல்லை எனில் […]

Continue Reading

வெள்ள சேதத்தை பார்வையிட வந்த இடத்தில் சமோசா சாப்பிட்ட ராகுல்! – வைரல் வீடியோ உண்மையா?

வெள்ள பாதிப்பை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்ற ராகுல் காந்தி, சமோசாவை ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்ததாக ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: வெள்ளம் பாதித்த பகுதிகளை மிகவும் சிரத்தையுடன் பார்வையிடும் வருங்கால இத்தாலிய பிரதமர்…என்னே ஒரு அக்கறை சமோசா மேல… Archived link ஹெலிகாப்டரில் ராகுல் காந்தி அமர்ந்திருக்கிறார். அருகில் ஒரு கவரில் இருந்து சமோசாவை எடுத்து அருகில் உள்ளவர்கள், வீடியோ எடுப்பவர் என அனைவருக்கும் […]

Continue Reading

ராகுல் காந்தி இத்தாலியில் வாங்கிய அடுக்கு மாடி கட்டிடம்: செய்தி உண்மையா?

‘’ராஜீவ்காந்தி மகன் பப்பு ராகுல் வின்சி இத்தாலியில் வாங்கி வைத்திருக்கும் அடுக்கு மாடி கட்டிடங்கள்,’’ என்ற தலைப்பில் வைரல் வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது உண்மையா, என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்தியாவில் கொள்ளையடித்து ராஜீவ்காந்தி மகன் பப்பு ராகுல் வின்சி இத்தாலியில் வாங்கி வைத்திருக்கும் அடுக்கு மாடி கட்டிடங்களை பாருங்கள் பிரமித்து போய்விடுவீர்கள் இவர்கள் உண்மையான கொள்ளைக்கூட்டங்கள் மக்களே உணர்ந்து கொள்ள வேண்டும் Archived Link ஏப்ரல் 29ம் தேதி […]

Continue Reading

ராணுவ தேர்வு கேள்வித்தாளை திருடி விற்ற 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது?

‘’ராணுவத் தேர்வு கேள்வித்தாள் திருடிய 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது‘’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு செய்திப் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறிய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு ஏப்ரல் 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘’இந்திய இராணுவத் தேர்விலும் ஊழல்! இந்திய இராணுவத் தேர்வுக்கான கேள்வித்தாளை திருடி 10 கோடிக்கு விற்றதாக மராட்டியம் மற்றும் கோவாவைச் சேர்ந்த 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தானே மாநகர […]

Continue Reading

பாஜக தலைவர் வீட்டில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்: ஃபேஸ்புக் வைரல் செய்தி

‘’மத்தியப் பிரதேச பாஜக தலைவர் வீட்டில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் வீடியோ செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். விவரம் இதோ உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: Archived Link ஏப்ரல் 3ம் தேதியன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் பேட்டி தர, வீடியோவில் பாஜக பிரமுகர் ஒருவரையும், ஆயுதங்கள் பலவற்றையும் காட்டுகிறார்கள். இதுவரை 19 ஆயிரம் பேர் […]

Continue Reading

ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டாரா?

“ரஃபேல் போர் விமானம் விவகாரத்தில் நான் பொய் சொன்னேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக ஒரு பதிவு வைரலாகி வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: Archived link ராகுல் காந்தி கண்ணடிக்கும் படத்துக்கு அருகே, மன்னித்து விடுங்கள் என்று மிகப்பெரிய தலைப்பிட்டுள்ளனர். அதில், “ரஃபேல் விவகாரத்தில் நான் பொய் தான் சொன்னேன். தேர்தல் பிரசார வேகத்தில் அப்படி பேசினேன். அதற்காக மன்னிப்பு […]

Continue Reading

மோடிக்கு வாக்களிக்க வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள்?

‘’சொந்த செலவில் வெளிநாடுகளில் இருந்து மோடிஜிக்கு வாக்கு அளிக்க வந்த நம்முடைய சொந்தங்கள் என்று,’’ ஒரு புகைப்படம் சமூக ஊடகத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link எஸ்கலேட்டரில் ஏராளமானவர்கள் பா.ஜ.க காவி நிற டி-ஷர்ட் அணிந்து செல்கின்றனர். சிலர் ‘மோடி ஒன்ஸ் மோர்’ என்ற வாசகம் இடம் பெற்ற டி-ஷர்ட் அணிந்துள்ளனர். அந்த இடம் பார்க்க ஷாப்பிங் மால் போல இருக்கிறது. இவர்கள் வெளிநாடுகளில் […]

Continue Reading

எந்த பட்டனை அழுத்த வேண்டும் என்று எழுதி வந்த மு.க.ஸ்டாலின்? – வைரல் புகைப்படம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்களிக்கச் சென்ற மு.க.ஸ்டாலின், எந்த பட்டனை அழுத்த வேண்டும் என்று எழுதிவைத்து வந்ததாக ஒரு படம் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்… தகவலின் விவரம்: துண்டு சீட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமாட Archived link மு.க.ஸ்டாலின் கையில் ஒரு அட்டை உள்ளது. அதில், ஏதோ எழுதப்பட்டது போல காட்டியுள்ளனர். அதை பெரிதாக்கி காட்டியதுபோன்று மற்றொரு புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஓட்டுப் போட 2ம் பொத்தானை […]

Continue Reading

சசிகலா குடும்பத்தினரை பார்த்ததே கிடையாது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

‘’சசிகலா குடும்பத்தினரை பார்த்ததே கிடையாது,’’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாகக் கூறி, ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:சசிகலா குடும்பத்தினரை பார்த்ததே கிடையாது: எடப்பாடி பழனிச்சாமிஇது உலக மகா நடிப்புடா சாமி.. Archived Link Political Press Attitude என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை கடந்த 2018 செப்டம்பர் 28ம் தேதி வெளியிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரையிலும் 1.64 லட்சம் பேர் ஷேர் […]

Continue Reading

ஒருவேளைக்கு 432 வகை உணவுகளை சாப்பிடும் மோடி?

பிரதமர் மோடி மேசையில் குவிக்கப்பட்ட உணவு வகைகளை ருசி பார்ப்பது போன்ற படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனுடன் 432 வகை உணவுகளை சாப்பிடும் ஏழைத்தாயின் மகன் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிய முடிவு செய்தோம். வதந்தியின் விவரம்: அம்மாவும், மகனும் பேசிக் கொண்டது. அம்மா ; டேய் மகனே நீ பலைய கஞ்சியும் மிலகாயும் சாப்ட தால ஏழை தாயின் மகனாக ஆகிவிட முடியாது. நம்ம நாட்டு மக்கலோட காசுல 432 […]

Continue Reading

தஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள்: வைரல் செய்தியால் பரபரப்பு

‘’தஞ்சை பெரிய கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை அகற்றிவிட்டு இந்தியில் கல்வெட்டு பதிக்கிறார்கள்,’’ என்று கூறி, ஒரு வீடியோவும், அதுதொடர்பான பதிவுகளும் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகின்றன. உண்மையில் அப்படி ஏதேனும் சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதைக் கண்டும் காணாது இருக்கும் தஞ்சை பெரிய கோவில் நிர்வாகமும்,தமிழக அரசும் . இனியும் தமிழன் அமைதி காத்தால் உன் பெருமைமிகு வரலாறும் கல்வெட்டும் காற்றோடு கரைந்து போகும். […]

Continue Reading

மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம்: மும்பை பங்குச்சந்தை செய்தி உண்மையா?

மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம் என, மும்பை பங்குச்சந்தை வாரியம் கூறியதாக, ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதில், கிடைத்த விவரங்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Archived Link கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், மும்பை பங்குச்சந்தை வாரியமான BSE, பிரதமர் மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம் எனக் கூறி, டிராக்கர் ஓட்டியதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக, புகைப்படம் […]

Continue Reading

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு குற்றவாளியா சாத்வி பிரக்யா?

‘’அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய தீவிரவாதி சாத்வி பிரக்யாவை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link சாத்வியை போலீசார் அழைத்து வரும் படத்தின் மீது, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய தீவிரவாதி சாத்வி பிரக்யா சிங்குக்கு போபாலில் போட்டியிட பா.ஜ.க சீட் வழங்கியுள்ளது. தீவிரவாதிக்கு எம்.பி சீட் … இவங்கதான் தீவிரவாதத்தை ஒழிக்குறவங்க பார்த்துக்கோங்க மக்களே […]

Continue Reading

அய்யாக்கண்ணுவை டெல்லியில் போராடத் தூண்டியது திமுக, காங்கிரஸ் கட்சிகளா?

தங்களை டெல்லியில் போராடத் தூண்டியதே தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள்தான் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாக செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: ? விதி விளையாடுது . ?? Archived link மோடிக்கு எதிராக எங்களை டெல்லி வரை சென்று போராட இயக்கியதே தி.மு.க, காங்கிரஸ்தான் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாக நியூஸ்7 தொலைக்காட்சி நியூஸ் […]

Continue Reading

திமுக.,விற்கு ட்விட்டர் நிறுவனம் பணம் கொடுத்ததாக பரவும் வதந்தி!

‘’திமுகவுக்கு பணம் கொடுத்ததாக டிவிட்டர் நிறுவனம் ஒப்புதல்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இது உண்மையா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்: Archived Link கடந்த ஏப்ரல் 13ம் தேதியன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு போல ஒன்றை பகிர்ந்து, ‘GoBackModi என்ற பெயரில் பதிவு போடுவதற்காக, […]

Continue Reading

கள்ள ஓட்டு போடுவதற்காக கையை வெட்டிக் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்?

‘’கள்ள ஓட்டுப் போடுவதற்காகக் கையை வெட்டிக் கொண்ட பகுஜன் சமாஜ் தொண்டர்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. அந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். செய்தியின் விவரம்:கள்ள ஓட்டு போட மையை கத்தியால் சுரண்டியபோது விரலை வெட்டிக்கொண்ட பகுஜன் சமாஜ் தொண்டர். Archived Link ஏப்ரல் 19ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இது உண்மையா, பொய்யா எனத் தெரியாமல் பலரும் […]

Continue Reading

பாஜக.,வுக்கு வாக்களிக்கச் சொன்னாரா அபிநந்தன்?

‘’பாஜக.,வின் சதி அம்பலம்,’’; ‘’பாஜக.,வுக்கு பிரசாரம் செய்யும் அபிநந்தன்,’’ போன்ற தலைப்புகளில் ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பவர் விங் கமாண்டர் அபிநந்தனா என்ற சந்தேகத்தில் நாம் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரம் இதோ உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்:சீமான் கூறுவது போல், பாஜக வின் திட்டமிட்ட சதி அம்பலம் – இவர் யார் என்று தெரிகிறதா? Archived Link உண்மை அறிவோம்:இந்த பதிவை கடந்த ஏப்ரல் 13ம் […]

Continue Reading

வாக்குப் பதிவு ஆவண அறைக்குள் சென்ற விவகாரத்தில் மேலும் மூன்று பேர் சஸ்பெண்ட்?

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் சென்ற பெண் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருடன் சென்ற மூன்று அரசு ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அரசு ஊழியர் குற்றங்கள் என்ற ஃபேஸ்புக் குழு பதிவிட்டுள்ளது. இந்து தமிழ் நாளிதழில் இருந்து, இச்செய்தி எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவல் விவரம்: வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட், உதவி தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ்! […]

Continue Reading

தமிழர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள்: நிதின் கட்கரி பேசியது உண்மையா?

‘’தமிழர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள்- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,’’ என்ற தலைப்பில் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இந்த பதிவை உண்மை என நம்பி பலரும் வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு ஏப்ரல் 15ம் தேதி பகிரப்பட்டுள்ளது. இதனை எம்பெட் செய்யக்கூட முடியாதபடி செட்டிங்ஸ் வசதியை மாற்றியமைத்துள்ளனர். அவ்வளவு கவனமாக இருப்பவர் வெளியிடும் தகவலையும் […]

Continue Reading

பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அத்வானி சொன்னாரா?

‘’பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டாம்; நாட்டை விற்றுவிடுவார்கள்: அத்வானி உருக்கம்,’’ என்ற தலைப்பில் ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்:தயவு செய்து பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டாம் ……. நாட்டை விற்று விடுவார்கள் .#அத்வானி_உருக்கம்….. Archived Link இதில், அத்வானியின் புகைப்படத்தை பகிர்ந்து, அவர் கூறியதாகச் சில வார்த்தைகளை எழுதியுள்ளனர். ஆனால், இதற்கான ஆதார செய்தி அல்லது வீடியோ இணைப்பு […]

Continue Reading

வாக்குப் பதிவு பெட்டி இருந்த மையத்துக்கு சென்ற தாசில்தார் – எதிர்க்கட்சிகள் புகார் உண்மையா?

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக் கல்லூரிக்கு தாசில்தார் சென்றது தொடர்பாகவும் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலரை சந்தித்து புகார் மனு அளித்ததாகவும் கூறி ஃபேஸ்புக்கில் பதிவுகள் வைரலாகி வருகின்றன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மதுரை நாடாளுமன்றத் தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைத்திருக்கும் மையத்திற்குள் அத்துமீறி நுழைவு Archived link மதுரை நாடாளுமன்ற தொகுதியில் […]

Continue Reading

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை உண்மையா?

‘’மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டும் என #என்தளபதி அவர்கள் அறிக்கை,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. அந்த பதிவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:மதுரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது கழக நிர்வாகிகளும் – கூட்டணிக்கட்சி நிர்வாகிகளும் விழிப்போடு இருக்க வேண்டும்– தி.மு.க தலைவர் #என்தளபதி அவர்கள் அறிக்கை … Archived Link இந்த பதிவு […]

Continue Reading

மின்னணு வாக்குப் பதிவு முறையை கைவிட வேண்டும்: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

‘’மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்துவிட்டன, இந்தியாவும் கைவிட வேண்டும்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link ஏப்ரல் 21ம் தேதியன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திற்கும், வாக்குச் சீட்டு முறைக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றியும், வட இந்தியாவில் ஒருவர் கள்ள ஓட்டு போட்டது பற்றியும் பல்வேறு விசயங்களை குறிப்பிட்டுள்ளனர். இது […]

Continue Reading

எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு? – விஷம செய்தி வெளியிட்ட இணையதளம்!

‘’பின்னால் கை வைத்த விவகாரம் எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு?,’’ என்ற தலைப்பில் செய்தி ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தால், குஷ்பு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிவிட்டது போன்று தலைப்பு இருந்தது. எனவே, இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: பின்னால் கைவைத்த விவகாரம் எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு? Archived link குஷ்பு சுந்தர் ஒருவர் கன்னத்தில் அறையும் படம் மற்றும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி […]

Continue Reading

காமராஜரை அடக்கம் செய்ய கருணாநிதி இடம் தரவில்லை: உண்மை என்ன?

‘’முன்னாள் முதல்வர் காமராஜர் இறந்தபோது, அவருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு கடந்த ஏப்ரல் 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்றையும், காமராஜர் இறந்தபோது கருணாநிதி பார்வையிட்ட புகைப்படம் ஒன்றையும் சேர்த்து மீம் […]

Continue Reading

ஓட்டுக்குப் பணம் கொடுத்தாரா எடப்பாடி பழனிசாமி? – உண்மை அறிவோம்!

சேலத்தில் பெண்மணி ஒருவருக்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: முதல்வரே ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்..! வாழ்க ஜனநாயகம்…! வாழ்க தேர்தல் ஆணையம்..! Archived link வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பழம் விற்பனை செய்யும் பெண்மணி ஒருவருக்கு பணம் கொடுக்கும் காட்சி வீடியோவாக வெளியாகி உள்ளது. பின்னால் […]

Continue Reading

அதிமுக கோமாளிகளுக்கா உங்கள் ஓட்டு?- பிரேமலதா பேசியதன் உண்மை விவரம்!

‘’அதிமுக கோமாளிகளுக்கா ஓட்டுப் போட போகின்றீர்கள்,’’ என பிரேமலதா பேசியதாகக் கூறி, ஒரு வீடியோ, ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. பிரேமலதா சார்ந்துள்ள தேமுதிக தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில், அஇஅதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்த சூழலில், அவர் பற்றி கூறப்படும் இந்த பதிவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: பொதுக்கூட்டத்தில் பிரேமலதா ஆவேசம்! அதிமுக கோமாளிகளுக்கா ஓட்டு போட போகின்றீர்கள்? Archived Link இந்த பதிவு கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதுவரையிலும், […]

Continue Reading

தோல்வி பயம் காரணமாக தர்காவுக்கு சென்றாரா மோடி?

‘’தோல்வி பயம் துரத்தவே பிரதமர் மோடியும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தர்காவுக்கு சென்றனர்,’’ என்று ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: தோல்வி பயம் துரத்த தர்காவுக்குள் புகுந்த மோடி & யோகி சங்கிகள் பாணியில் சொல்வதானால் பாகிஸ்தான் கொடிக்கு மரியாதை செலுத்திய மோடி Archived link இந்த பதிவில், பகிரப்பட்டுள்ள புகைப்படத்தில், பிரதமர் மோடி பச்சை நிற போர்வை போர்த்தப்பட்ட சமாதி […]

Continue Reading

தமிழக வாக்காளர்களை ‘பிச்சைக்காரர்கள்’ என்று ஓ.பி.எஸ் கூறியது உண்மையா?

“பணத்திற்காக வாக்கை விற்கும் பிச்சைக்காரர்கள் உரிமைகளை எதிர்பார்க்கக் கூடாது” என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக, தந்தி தொலைக்காட்சி பெயரில் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவல் விவரம்: ஓபிஎஸ்சின் திமிர் பிடிச்ச இன்றைய அறிக்கை Archived link ஏப்ரல் 14ம் தேதி தந்தி தொலைக்காட்சி பிரேக்கிங் நியூஸ் கார்டில், ஓ.பன்னீர்செல்வம் புகைப்படத்துடன் செய்தி உள்ளது. இதில், “பணத்திற்காக வாக்கை விற்கும் பிச்சைக்காரர்கள் உரிமைகளை எதிர்பார்க்கக் கூடாது. […]

Continue Reading

சவூதி அரசர் சல்மான் காலில் விழுந்தாரா மோடி?

சவூதி அரசர் சல்மான் காலில் மோடி விழுந்து வணங்கியதாகக் கூறி ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் பார்ப்பதற்கு, நம்பும்படியாக இல்லை என்பதால், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்: Archived Link இதில், பிரதமர் மோடி, சவூதி அரசர் சல்மானின் காலில் விழுந்து ஆசிபெறுவது போன்ற புகைப்படம் பகிரப்பட்டு, அதன் மேலே ,இந்தியாவின் அனைத்து கேவலப்பட்ட ஊடகங்களும் மறைத்த புகைப்படம்…!! என எழுதியுள்ளனர். இதனை வேறு ஒருவர் பகிர்ந்த நிலையில், […]

Continue Reading

நான் தோற்றால் அதற்கு காரணம் பா.ஜ.க கூட்டணிதான்: தம்பிதுரை பேசியது உண்மையா?

‘’நான் கரூரில் தோற்றால் அதற்கு பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததே காரணமாக இருக்கும்,’’ – என தம்பிதுரை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: கரூர் மக்களவை தொகுதி ADMK வேட்பாளர் திரு M. தம்பித்துரை அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் நன்றி. Archived link “நான் கரூரில் தோற்றால் அதற்கு பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததே காரணமாக இருக்கும்” என்று மக்களவை துணை […]

Continue Reading

காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலைப்பேன் என ராகுல் சொன்னாரா?

கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்று ராகுல் காந்தி பேசியதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: தமிழக காங்கிரஸ் கட்சி வாய் திறந்து சொல்லவேண்டும் மக்களுக்கு கட்சியின் நிலைப்பாடு என்ன ௭ன்று. Archived link பெங்களூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், காவிரி ஆணையம் கலைக்கப்படும் என்று பேசியதாக […]

Continue Reading

இந்துக்களின் ஓட்டு பெறும் அளவுக்கு தி.மு.க தரம் தாழ்ந்துவிடவில்லை என்றாரா மு.க.ஸ்டாலின்?

இந்துக்கள் வாக்களித்துத்தான் வெற்றிபெற வேண்டும் என்றால் அப்படிப்பட்ட வெற்றி தி.மு.க-வுக்கு தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் பேசியதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம் நீங்க சொன்னதுக்கு பிறகு நாங்க ஓட்டு போட்டா ! நாங்க மனுசனே இல்லை !! Archived link இந்துக்கள் வாக்களித்துத்தான் வெற்றி பெறுவோமென்றால் அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை. இந்துக்களின் வாக்குபெறும் அளவுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தரம் […]

Continue Reading

ரேஷன் கடைகள் ஒழிக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கை: உண்மை என்ன?

‘’ரேஷன் கடைகள் ஒழிக்கப்படும்,’’ என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஒரு வைரல் பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:சுற்றி வளைத்து எங்கே போய் நிற்கிறானுகன்னு தெரியுதா? ரேஷன் கடைகளை மூடப்போறதா தேர்தல் அறிக்கையில் சொல்லியாச்சி. மக்களுக்குத் தேவையான பொருட்களை அந்த ஃப்ராடு சன்னியாசி நிறுவனம்தான் டோர் டெலிவரி செய்யப்போகுதாம்.. சிந்தித்து வாக்களியுங்கள் Archived Link பாஜக தேர்தல் அறிக்கை 2019 என பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் […]

Continue Reading

எச்.வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடியா?

கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடி பறப்பதாக ஒரு செய்தி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதுபற்றி உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தினோம். தகவலின் விவரம்: வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடி வாழ்க உம் நாட்டப்பற்று Archived link கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாகனத்தில் சென்று எச்.வசந்தகுமார் வாக்கு கேட்கும் படத்தை வெளியிட்டு, அதில். ‘’வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடி… வாழ்க உன் நாட்டுப்பற்று,’’ என்று நிலைத்தகவல் வெளியிட்டுள்ளனர். அந்த படத்தில், பச்சை […]

Continue Reading

காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும்: சிஐஏ, கேஜிபி, மொசாட் அறிக்கை- பிபிசி செய்தி உண்மையா?

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியே 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறும் என சிஐஏ, கேஜிபி, மொசாட் அறிக்கை சமர்ப்பித்துள்ளது என்ற தலைப்பில் ஒரு வாட்ஸ்ஆப் ஃபார்வேர்ட் மெசேஜை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில், கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்:‘’2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்று, ஆட்சியமைக்கும் என சிஐஏ, கேஜிபி, மொசாட் சர்வே நடத்தி […]

Continue Reading

செக்ஸ் வீடியோவில் அ.ம.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் சிக்கினாரா?

தேனி மக்களவைக்கு அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் செக்ஸ் வீடியோவில் சிக்கியதாக ஒன் இந்தியாவின் tamil.gizbot.com இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. தங்க தமிழ்ச்செல்வனும் சிக்கிவிட்டார் என்று நினைத்து சமூகவலைத்தளங்களில் இந்த செய்தி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. எனவே, இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: பெண்மிரட்டி பலாத்காரம்: செக்ஸ் வீடியோவில் சிக்கிய 2 அமமுக வேட்பாளர்! Archived link Archived link அ.தி.மு.க-வின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் […]

Continue Reading

மாட்டிறைச்சி விவகாரம்: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு என்ன?

‘’உத்தரப் பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு விதித்துள்ள தடையை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக் வைரல் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை அறிய முடிவு செய்தோம். அதில், கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்: அவமானபட்டான் மொட்டையன் Archived Link இந்த பதிவில், யோகி ஆதித்யநாத் புகைப்படம் மற்றும் பெண் ஒருவரின் பாதங்களை இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன்மீது, ‘’அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு, உபியில் மாட்டிறைச்சி தடை உத்தரவை 10 […]

Continue Reading

குடிபோதையில் எச்.ராஜா?- ஃபேஸ்புக் புகைப்படத்தால் சர்ச்சை

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்தபோது,  பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா மது போதையில் இருந்ததாக சமூக வலைத்தளங்களில் படத்துடன் செய்தி ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆராய்ந்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: குடிபோதையில் இருந்த எச்ச ராஜா!!! டென்ஷன் ஆன திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!!! சிவகங்கை தொகுதியில் பிரச்சாரம் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வேட்பாளர் எச்ச.ராஜாவுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார் அப்பொழுது எச்ச.ராஜா மது […]

Continue Reading

கள்ள ஓட்டு போட செயற்கை விரல்களை வாங்கியதா பா.ஜ.க?

கள்ள ஓட்டு போடுவதற்கு வசதியாக செயற்கை விரல்களை பா.ஜ.க வாங்கியிருப்பதாகவும், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பதாகவும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில், தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் வைரல் ஆகி வருகிறது. எனவே, இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு. செய்தியின் விவரம்: தமிழகத்தில் தாமரையே மலர. வைக்க. பாசிச. பாஜக. ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்கிற காவி பயங்கறவாத வெறி, ஓட்டு போட போலி […]

Continue Reading

ராகுல் பிரதமர் ஆக வேண்டும் என்றாரா அத்வானி?

‘’ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும்,’’ என்று பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவரான எல்.கே.அத்வானி தெரிவித்ததாகச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு: தகவலின் விவரம்: ராகுல் காந்திதான் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி… Archived link உண்மை அறிவோம்: பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. […]

Continue Reading

மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வெங்கடேசனுக்கு வரவேற்பு!

‘மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வெங்கடேசனுக்கு வரவேற்பு’ என்ற ஒரு பதிவை ஃபேஸ்புக்கில், காண நேரிட்டது. 10,000க்கும் அதிகமான ஷேர்களை பெற்றுள்ள இந்த செய்தி உண்மைதானா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:நாம் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை.. ஆனால் இவரை போன்றோர் நிச்சயம் வெல்ல வேண்டும்.. சிறப்பான தேர்வு ? Archived Link இந்த பதிவில், வெங்கடேசன் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’அரசியல் வேறுபாடு கடந்து மதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளராக […]

Continue Reading