உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ள பாலம் இதுவா?

‘உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ள பாலத்தின் புகைப்படம்,’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link  ‘’உத்திரபிரதேசத்தில் நாளை திறக்க உள்ள பாலம். யோகிடா.🔥🔥’’ என்று குறிப்பிட்டு மேற்கண்ட பதிவை KarthikGnath420 என்ற ட்விட்டர் ஐடி கடந்த நவம்பர் 30, 2022 அன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதனை வாசகர் ஒருவர் உண்மையா, என்று நம்மிடம் […]

Continue Reading

அண்ணாமலைக்கு கல்தா என பரவும் நியூஸ் கார்டை தினமலர் வெளியிட்டதா?

அண்ணாமலைக்கு கல்தா; ஆதரவு நடிகைக்கு ஸ்வீட் தா என்று தினமலர் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு கல்தா; ஆதரவு நடிகைக்கு ஸ்வீட் தா! கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள், சீனியர் நிர்வாகிகளுடனான மோதல் போக்கு, தன்னிச்சையான நடவடிக்கைகளால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுமாறு […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலை என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

உத்தரப் பிரதேசத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலை, என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.தகவலின் விவரம்: Claim Tweet Link I Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட வீடியோவை நன்கு உற்று பார்த்தால், அதில், சீன மொழியில் ஒரு லோகோ இருப்பது தெரிகிறது.  இதன்படி, APP என சீன மொழியில் எழுதப்பட்டுள்ளதன் அடிப்படையிலும், ரிவர்ஸ் இமேஜ் முறையிலும் தொடர்ந்து தகவல் தேடியபோது, இது சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ […]

Continue Reading

ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்ததா?

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தமிழர்களின் பொழுதுபோக்கை விட இந்து மதத்தினர் தெய்வமாக வணங்கும் பசு மற்றும் காளை மாடுகளின் நலன்தான் முக்கியம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “குறிப்பிட்ட ஒரு மாநில மக்களின் பொழுதுபோக்கை […]

Continue Reading

குஜராத்தில் தேர்தல் நடந்த முறை என்று பரவும் மேற்கு வங்க வீடியோ!

குஜராத்தில் வாக்கு இயந்திரத்தைக் கூட பார்க்க அனுமதிக்காமல் பணியாளர்களே வாக்களித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வாக்குப்பதிவு மையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், வாக்களிக்க வரும் நபர்களை வாக்களிக்க அனுமதிக்காமல், வாக்குச் சாவடியில் இருக்கும் நபர் ஒருவர் வாக்குகளை பதிவு செய்கிறார். நிலைத் தகவலில், “குஜராத்தில் தேர்தல் நடந்த முறை. வாக்காளரை, வாக்கு இயந்திரத்தை […]

Continue Reading

சூதாட்டம் என்பது இந்து மதத்தின் அங்கம் என்று அண்ணாமலை கூறினாரா?

சூதாட்டம் என்பது மகாபாரத காலத்தில் இருந்து இந்து மதத்தின் அங்கம். அதை ஒழிப்பது இந்து கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சி என்று அண்ணாமலை கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சூதாட்டம் என்பது மஹாபாரத காலத்திலிருந்தே ஹிந்து மதத்தின் ஒரு அங்கம். ஆன்லைன் சூதாட்டங்களை முறைப்படுத்தலாமே […]

Continue Reading

பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் தவறே செய்தாலும் தண்டிக்க முடியாது என்று அண்ணாமலை கூறினாரா?

தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தவறே செய்தாலும் அவரைத் தண்டிக்கும் தகுதி தனக்கில்லை என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் புகைப்படங்களுடன் ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கமலாலயம் என்கிற ஹஸ்தினாபுரத்தின் […]

Continue Reading

பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம் முன் ஆணுறை வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டதா?

‘’பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம் முன் ஆணுறை வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Claim Tweet Link l Archived Link உண்மை அறிவோம்: பாஜக.,வை சேர்ந்த திருச்சி சூர்யா சிவா மற்றும் டெய்சி ஆகியோர் ஃபோன் மூலமாக ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டிக்கொண்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. FactCrescendo Tamil Link […]

Continue Reading

சிறந்த அக்கா – தம்பிக்கான போட்டி நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்தாரா?

டெய்சி – சூர்யா பெயரில் சிறந்த அக்கா – தம்பிக்கான போட்டி நடத்தப்படும், கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்ததாக சில நையாண்டி நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று சில நியூஸ் கார்டுகளை நெட்டிசன்கள் சிலர் பகிர்ந்து வருகின்றனர். ஒரு நியூஸ் கார்டில், “டெய்சி-சூர்யா பெயரில் சிறந்த அக்கா-தம்பிக்கான போட்டி. டெய்சி சரண் – […]

Continue Reading

பாஜக.,வில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று காயத்ரி ரகுராம் கூறினாரா?

‘’ பாஜக.,வில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை,’’ என்று காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: பாஜக.,வைச் சேர்ந்த திருச்சி சூர்யா சிவா மற்றும் டெய்சி ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சில ஆடியோ பதிவுகள் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், இதற்கு காயத்ரி ரகுராமை காரணம் காட்டி, மாநில […]

Continue Reading

பிராமணர்களுக்கு எதிரானவர் அண்ணாமலை என்று காயத்ரி ரகுராம் கூறினாரா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பிராமணர்களுக்கு எதிரானவர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காயத்ரி ரகுராம் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிராமணர்களுக்கு எதிரானவர் அண்ணாமலை! பாஜகவில் பிராமணர்கள் யாரும் முக்கியப் பொறுப்புக்கு வரக்கூடாது என நினைக்கிறார் அண்ணாமலை. எந்த […]

Continue Reading

பாஜக நிர்வாகிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆதாரம் உள்ளது என காயத்ரி ரகுராம் கூறினாரா?

அத்துமீறிய பாஜக நிர்வாகிகள் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்று காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காயத்ரி ரகுராம் புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அத்து மீறிய நிர்வாகிகள்; பகீர் ஆதாரங்களுடன் காயத்ரி ரகுராம். கட்சிக்குள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்களை வெளிக்கொண்டு வருவதற்காகவே […]

Continue Reading

ஆகாசப் புளுகர் அண்ணாமலை என்று காயத்ரி ரகுராம் பேட்டி அளித்தாரா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகாசப் புளுகர் என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஆகாசப் புளுகர் அண்ணாமலை! உண்மையைப் பேசியதால் தான் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். உண்மையைப் பேசுபவர்களுக்கு அங்கு […]

Continue Reading

பாஜக.,வினர் மீது குஜராத் மக்கள் தாக்குதல் நடத்தினார்களா?

குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்த பா.ஜ.க-வினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆட்டோவில் பிரசாரம் செய்து வரும் பா.ஜ.க-வினர் மீது சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நான் உருவாக்கிய குஜராத் என திரு மோடி அவர்கள் பெருமைப்படப் பேசிய குஜராத்தில் மக்கள் பாஜகவுக்கு […]

Continue Reading

பிரதமர் மோடி தமிழை தேசிய மொழியாக அறிவித்தாரா?

‘’ காசி தமிழ் சங்கமத்தில் பிரதமர் மோடி தமிழை தேசிய மொழியாக அறிவித்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (9049053770) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார்.  Twitter Claim Link l Archived Link  உண்மை அறிவோம்:காசி எனப்படும் தற்போதைய வாரணாசியில் பாஜக முன்முயற்சியில், ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனை மோடி […]

Continue Reading

குஜராத்தில் பா.ஜ.க வேட்பாளருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதா?

குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக வேட்பாளர் ஒருவருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I Archive தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜக வேட்பாளர் ஒருவருக்கு செருப்பு மாலை அணிவிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஜராத்தில் பஜாக வேட்பாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு” […]

Continue Reading

குஜராத் பா.ஜ.க கூட்டத்தில் மது விநியோகிக்கப்பட்டது என்று பரவும் வீடியோ உண்மையா?

குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், தொண்டர்களுக்கு மது விநியோகிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க தொப்பி அணிந்த ஒருவர் மற்றவர்களுக்கு கிளாஸில் மது ஊற்றிக் கொடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் மேற்படி பாஜக கூட்டத்தில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Senthil […]

Continue Reading

மோடி தமிழ்நாடு வந்தால் நானே நேரில் வரவேற்பேன் என்று சீமான் கூறினாரா?

‘’பிரதமர் மோடி தமிழகம் வந்தால் நானே அவரை நேரில் வரவேற்பேன் என்று சீமான் பேச்சு,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் இது பகிரப்படுவதைக் கண்டோம்.  Claim Tweet Link l Archived Link  உண்மை அறிவோம்:  […]

Continue Reading

மேம்பால ரயிலில் இருந்து தண்ணீர் கொட்டும் வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டதா?

சென்னையில் மேம்பாலம் ஒன்றில் வாகனம் செல்லும் போது மழை நீர் அருவி போல கீழே சாலையில் நிற்பவர்கள் மீது கொட்டியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேம்பாலம் ஒன்றில் பஸ் போன்ற வாகனம் ஒன்று செல்கிறது. அப்போது மேம்பாலத்தில் தேங்கியிருந்த மழை நீர் அந்த வாகனத்தில் சக்கரத்தில் பட்டு கீழே கொட்டுகிறது. கீழே சாலையில் வாகனவோட்டிகள், […]

Continue Reading

மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அண்ணாமலை நன்றி கூறினாரா?

குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்குபாலம் விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி கூறினார் என்று ஒரு விஷம பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவின் தமிழாக்கம் பகிரப்பட்டுள்ளது. அதில், “குஜராத் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த […]

Continue Reading

அண்ணாமலையை புறக்கணிக்கிறோம் என்று தந்தி டிவி அறிவித்ததா?

பத்திரிகையாளர்களை அவமதிக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பைப் புறக்கணிக்கிறோம் என தந்தி டிவி அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை அவமதிக்கும் தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பை இனி தந்தி தொலைக்காட்சி […]

Continue Reading

நாங்கள் என்ன தேவிடியன் ஸ்டாக்ஸா என்று எச்.ராஜா கேட்டாரா?

‘’நாங்கள் என்ன தேவிடியன் ஸ்டாக்ஸா,’’ என்று எச். ராஜா கேள்வி கேட்டதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Twitter Claim Link I Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட […]

Continue Reading

விசாரணை கமிஷன் அறிக்கை வீண் என்று அண்ணாமலை கூறினாரா?

ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் அளித்த அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் விசாரணை வீண் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive தினமலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “விசாரணை அறிக்கை வீண். நீதிபதிகளே ஊழலில் திளைக்கும் போது ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் மட்டும் எப்படி சரியான அறிக்கையை […]

Continue Reading

பாஜக குறைந்தது 6 முறை ஆட்சியில் அமர்வது அவசியம் என்று சர்வதேச நீதிபதி கூறினாரா?

600 ஆண்டுகால அவமானங்களையும் 70 ஆண்டுகால சீர்கேடுகளையும் துடைத்தெறிய 6 முறையாவது பாஜக ஆட்சியில் அமர வேண்டும் என்று சர்வதேச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி மற்றும் வெளிநாட்டைச் சார்ந்த ஒருவர் புகைப்படங்களை வைத்து புகைப்பட பதிவை உருவாக்கியுள்ளனர். மோடியின் புகைப்படத்துக்குக் கீழ், “600 ஆண்டு […]

Continue Reading

டெல்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் பலர் புத்தமதம் தழுவினர் என்று கதிர் நியூஸ் கூறியதா?

‘’டெல்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் நேற்று பலர் புத்தமதத்திற்கு மாறினர் – கதிர் நியூஸ் ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதே செய்தியை பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதை கண்டோம்.  Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட செய்தியை கதிர் நியூஸ் வெளியிடவில்லை. இதுபற்றி நாம் […]

Continue Reading

ஜேசிபி பக்கெட் பொருத்தப்பட்ட புதிய வந்தே பாரத் ரயில் என பரவும் போலியான புகைப்படம்!

வந்தே பாரத் ரயிலில் புதிய தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வந்தே பாரத் ரயிலின் முன்புறத்தில் ஜேசிபி இயந்திரத்தில் உள்ள பக்கெட் அமைப்பு பொருத்தப்பட்டது போன்று படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விரைவில் ஜப்பான் முதலீட்டில் ., உத்தரபிரதேசத்தில் நிறுவப்படவுள்ள புதிய தொழில்நுட்பம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த படத்தை Praveen Chitti என்ற […]

Continue Reading

முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்று மோடியை அண்ணாமலை கேட்டுக்கொண்டாரா?

‘’முக்குலத்தோரை கண்டுகொள்ள வேண்டாம் என்று அண்ணாமலை சொன்னதால், தேவர் ஜெயந்தியில் பங்கேற்கும் திட்டத்தை மோடி கைவிட்டுவிட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேட்டது. தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ள தேவர் ஜெயந்தியில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக ஒரு செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அத்துடன் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டப்படும் […]

Continue Reading

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்டுகிறார் மோடி என தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட உள்ளார் என தந்தி டிவி செய்தி வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பெயர் ஆணை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!!! […]

Continue Reading

சிங்கப்பூர் ஹோட்டல் படத்தை குஜராத் மருத்துவமனை என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

சிங்கப்பூரின் மெரினா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) ஹோட்டல் புகைப்படத்தை, குஜராத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு ஃபேஸ்புக் லிங்க் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த லிங்க்கை திறந்து பார்த்த போது, சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஹோட்டல் ஒன்றின் புகைப்படம் இருந்தது. நிலைத் […]

Continue Reading

வந்தே பாரத் ரயில் சக்கரம் தட்டையாக மாறியது என்று பரவும் வதந்தி!

வந்தே பாரத் ரயில் சக்கரம் சரியான முறையில் தயாரிக்காத காரணத்தால் பாரம் தாங்காமல் தட்டையானது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் சக்கரம் தட்டையாக இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டயர் பஞ்சர் ஆகும்போது லோடு தாங்காம கார் அல்லது லாரி மாதிரி வாகனங்களின் ரிம் சப்பையாகும். எத்தனையோ விதமான ரயில் விபத்துகளைப் பாத்திருப்போம். […]

Continue Reading

அமெரிக்காவில் எந்த ஒரு நாட்டு அமைச்சருக்கும் கிடைக்காத சிறப்பான வரவேற்பு ஜெய்சங்கருக்கு கிடைத்ததா?

அமெரிக்காவின் பென்டகனில் உள்ள ராணுவ தலைமையகத்தில் வேறு எந்த ஒரு நாட்டுத் தலைவருக்கும் கிடைக்காத சிறப்பான வரவேற்பு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கிடைத்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமெரிக்காவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “புதிய சக்திவாய்ந்த இந்தியாவின் […]

Continue Reading

RAPID FACT CHECK: அண்ணாமலை ரூ. 5000 கோடி விவகாரம்; கழுகார் எக்ஸ்க்ளூசிவ் என பரவும் வதந்தி!

மத்திய அமைச்சர் ஒருவருக்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ரூ.5000 கோடியை வெளிநாட்டில் முதலீடு செய்யச் சென்றுள்ளார் என்று ஜூனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் இதழின் ஒரு பகுதியை புகைப்படமாக எடுத்து பதிவிட்டுள்ளனர். கழுகார் எக்ஸ்க்ளூசிவ் என்று பெட்டி செய்தியாக உள்ளது. அதில், “மத்திய அமைச்சரவையின் […]

Continue Reading

ரூ.5000 கோடி கடத்திய அண்ணாமலை என ஜூ.வி அட்டைப்படம் வெளியிட்டதா?

அண்ணாமலை கடத்திச் சென்ற ரூ.5000 கோடி யாருடைய பணம் என்று ஜூனியர் விகடனில் வெளியிட்டது போன்று அட்டைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு ஃபேஸ்புக் லிங்க் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த லிங்கை திறந்து பார்த்தோம். அதில் ஜூனியர் விகடன் […]

Continue Reading

இந்தோ- சீனப் போரில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் புகைப்படம் உண்மையா?

இந்தோ – சீன பேரில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் வீரர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பி, அது உண்மையா என்று கேட்டிருந்தார். சீக்கிய ராணுவ வீரர்களின் புகைப்படம் அது. அதற்கு கீழ் தமிழில், “1965 சீனாவுடனான யுத்தத்தின் போது போர் முனையில் ஸ்வயம்சேவகர்கள்” என்று […]

Continue Reading

தரையில் படுத்து மோடியை புகைப்படம் எடுத்த நபர் என்று பரவும் படம் உண்மையா?

பிரதமர் மோடி நடந்து செல்கையில், வருக்கு பக்கவாட்டில் புகைப்பட கலைஞர் ஒருவர் படுத்திருந்து புகைப்படம் எடுப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புகைப்பட கலைஞர் ஒருவர் தரையில் படுத்து மோடியை புகைப்படம் எடுப்பது போன்ற படத்தை பயன்படுத்தி புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மாப்பிள்ளை, இந்த கேமரா மேன் படுகிற பாட்டை பார்த்தால் பாவமா இருக்குடா, […]

Continue Reading

காரைக்காலில் மின்தடை; மக்கள் அவதி- திமுக அரசு காரணமா?

‘’காரைக்காலில் மின்தடை, விடியாத அரசின் அவலம்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link l Archived Link காரைக்கால் பகுதியில் தொடர் மின் தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் இரவு நேரத்தில் சாலை மறியல் செய்தனர் என்று தந்தி டிவி வெளியிட்ட செய்தியை எடுத்து, அதன் மேலே ‘’ இனி விடியாது தமிழகம், காரைக்கால் மாவட்டம் முழுவதும் மீண்டும் 2 மணிநேரத்திற்கும் மேலாக #தொடர்_மின்தடை […]

Continue Reading

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை அனுமதிக்காவிட்டால் நிர்வாண போராட்டம் நடத்துவோம் என்று பாஜக அறிவித்ததா?

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காவிட்டால், நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கதிர் என்ற ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “RSS சார்பில் அம்மண போராட்டம் நடைபெறும். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி தராவிட்டால், […]

Continue Reading

பிஎஃப்ஐ தடை காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயரும் என நட்டா கூறினாரா?

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இயக்கங்கள் தடை செய்யப்பட்டுவிட்டதால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்று ஜே.பி.நட்டா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாலை மலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்த PFI உள்ளிட்ட இயக்கங்கள் தடை செய்யப்பட்டுவிட்டதால் இனி வரும் […]

Continue Reading

கேமிரா மூடியைக் கழற்றாமல் புகைப்படம் எடுத்தாரா மோடி?

கேமரா மூடியைக் கூட கழற்றாமல் மோடி புகைப்படம் எடுத்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி புகைப்படம் எடுப்பது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. கேமராவின் மூடி கழற்றப்படாமல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் இருக்கும் ஒருவன் கேமரா இல்லாமலும் போட்டோ எடுப்பான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Maraimalainagar மறைமலைநகர் […]

Continue Reading

Rapid FactCheck: மோடி, திரௌபதி முர்மு, யோகி ஆதித்யநாத் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவின் இளமைக்கால புகைப்படம் இதுவா?

‘’மோடி, யோகி ஆதித்யநாத், ஏக்நாத் ஷிண்டே மற்றும் திரௌபதி முர்மு ஆகியோரின் இளமைக்கால புகைப்படம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த தகவலை ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி மட்டுமின்றி தமிழிலும் பலர் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட புகைப்படத்தில், யோகி ஆதித்யநாத் பற்றியது மட்டுமே உண்மையாகும். இதுபற்றிய செய்தி ஆதாரம் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் வெற்றுப் பேச்சு பேசுவதாக ஜூனியர் விகடன் அட்டைப் படம் வெளியிட்டதா?

ஸ்டாலின் வெற்றுப் பேச்சு பேசுவதாக, காற்று போன பலூன் போன்று ஜூனியர் விகடன் அட்டைப் படம் வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று அட்டை படம் பகிரப்பட்டுள்ளது. அதில், காற்று போன பலூன் போல ஸ்டாலின் பறப்பதாக படம் உருவாக்கப்பட்டிருந்தது. அதனுடன், “வெறும் பேச்சு! ஸ்டாலின் புஸ்ஸ்…” என்று இருந்தது. இந்த பதிவை […]

Continue Reading

அண்ணாமலையுடன் மோதல் காரணமாக அரசியலை விட்டு விலகப் போவதாக அறிவித்தாரா பிடிஆர்?

என் செருப்புக்குக் கூட சமம் இல்லை என்று அண்ணாமலை தாக்கியதால், அரசியலை விட்டு வெளியேறப் போவதாக நிதியமைச்சர் பி.தியாகராஜன் (பிடிஆர்) ட்வீட் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “18 மாதங்களுக்கு முன்பு என்னுடைய பணி வாழ்வை விட்டுவிட்டு அரசியலில் நுழைந்து பிறகு இன்று முதன் முறையாக தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது” என்ற […]

Continue Reading

புல்புல் இறைச்சி விற்ற கடைக்காரரிடம் பா.ஜ.க நிர்வாகி தகராறு செய்தார் என்று பரவும் போலியான செய்தி!

சாவர்க்கர் பறந்து சென்ற புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கறிக்கடைக்காரரிடம் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் தகராறு செய்தார் என நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக நிர்வாகி கைது. சாவர்க்கர் பறந்து சென்ற புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கூறி […]

Continue Reading

பா.ஜ.க மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவு… எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அதிகமா?

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் பெட்ரோல் விலை மிகக் குறைவாக இருப்பது போலவும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க போன்ற எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பது போலவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாநிலங்கள் அளவில் பெட்ரோல் விலை நிலவரம் எப்படி உள்ளது என்று ஆங்கிலத்தில் புகைப்பட […]

Continue Reading

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட காசியின் தந்தைக்கு பா.ஜ.க-வில் பதவி வழங்கப்பட்டதா?

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட காசி என்பவரின் தந்தை சமீபத்தில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். அவர் பா.ஜ.க-வில் இணைந்ததாகவும் அவருக்கு கலாச்சார அணி மாவட்ட துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டதாகவும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகவில் இணைந்த காசியின் […]

Continue Reading

பசுமாட்டை பதம் பார்த்த பாஜக தலைவர் என பரவும் படம் உண்மையா?

மத்திய பிதேச மாநில பா.ஜ.க இளைஞரணி தலைவர் பசு மாட்டிடம் தவறாக நடந்துகொண்டதற்காகக் கைது செய்யப்பட்டார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பசு மாட்டின் அருகே இளைஞர் ஒருவருடன் போலீசார் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பசுமாட்டை பதம் பார்த்த மத்தியபிரதே பாஜக இளைஞரணி தலைவர். பசுவின் கதறலை கேட்டு ஊர் மக்கள் விரட்டி […]

Continue Reading

இலங்கையின் நிலை இந்தியாவிற்கும் வரும் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதா?

இலங்கையில் ஏற்பட்டதைப் போன்று விரைவில் இந்திய பொருளாதாரமும் வீழ்ச்சியடையும் என்று உலகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் பலரும் உண்மை போல பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading

கணிதப் பாடத்தில் சிலுவைக் குறியீடு; இந்துக்கள் படிக்கக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

‘’கணிதப் பாடத்தில் சிலுவைக் குறியீடு உள்ளதால், இந்துக்கள் அதனை படிக்கக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:மேற்கண்ட தகவல் நகைச்சுவைக்காகப் பகிரப்படுவதைப் போல தோன்றினாலும், உண்மையில், இப்படி அர்ஜூன் சம்பத் பேசியிருக்க வாய்ப்பில்லை. வேண்டுமென்றே அவரை உள்நோக்கத்துடன் கேலி செய்யும் வகையில் யாரோ சிலர் இப்படியான நியூஸ் கார்டை புதிய தலைமுறை […]

Continue Reading

வீட்டு வாடகை செலுத்தும் அனைவருக்கும் 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதா?

வீட்டு வாடகை செலுத்தும் அனைவருக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:சமீபத்தில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில், ‘குடியிருப்புக் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, அதில் தொழில் நடத்தும் தனி நபர் அல்லது நிறுவனம், ஜிஎஸ்டி.,யின் கீழ் பதிவு செய்திருக்கும்பட்சத்தில் அவர்கள், வாடகை செலுத்தும்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி […]

Continue Reading

அர்ஜூன் சம்பத் சகோதரர் பாலியல் தொழில் செய்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்டாரா?

‘’கோவையில் விபச்சார விடுதி நடத்தியதால் அர்ஜூன் சம்பத் உறவினர் கணேசமூர்த்தி என்பவர் கைது,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மேற்கண்ட தகவலை +91 9049044263 மற்றும் +919049053770 ஆகிய எண்களில் நமக்கு வாசகர்கள் தொடர்ச்சியாக அனுப்பி வைத்து, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதேபோல, கதிர் நியூஸ் லோகோவுடன் கூடிய செய்தி ஒன்றையும் சிலர் பகிர்கின்றனர். Facebook Claim […]

Continue Reading