இந்திரா காந்தி கணவர் ஃபெரோஸ் கான், மாமனார் யூனுஸ் கான்?- ஃபேஸ்புக் விஷமம்

கணவர் ஃபெரோஸ் கான் மற்றும் மாமனார் யூனூஸ்கானுடன் இந்திரா காந்தி உள்ள படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நேரு, இந்திரா காந்தியின் பழைய படம் பகிரப்பட்டுள்ளது. அதில் இளைஞர் ஒருவரின் படம் சிவப்பு கோட்டால் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், “இதுதான் யூனுஸ்கான்  மகன் ஃபிரோஸ்கான். அதாவது நேருவின் மகளாகிய இந்திராவின் கணவன். இதில் புரியாத புதிர் என்ன என்றால், […]

Continue Reading

ஜேம்ஸ்பாண்ட் பட நாயகியின் படத்தை சோனியா காந்தி என்று பரப்பும் விஷமிகள்!

ஜேம்ஸ் பாண்ட் பட நாயகி ஒருவரின் புகைப்படத்தை எடுத்து ‘அன்னை என்று அழைக்கப்படும் கட்சித் தலைவியின் படம்,’ என்று கூறி சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். உண்மை அறிவோம்: Facebook Link Archived Link சோனியாகாந்தியின் முகத்தோற்றம் கொண்ட கருப்பு வெள்ளைப் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த பெண்மணி யார் என்று தெரிகிறதா? அங்கே டான்சர் இங்கே அன்னை! எனக்கல்ல” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Murugan Madasamy என்பவர் 2020 ஜூன் […]

Continue Reading

ராகுல் காந்தி சந்தித்தது புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என்று பகிரப்படும் வதந்தி!

வெளிமாநில தொழிலாளர்களை ராகுல் காந்தி சந்தித்ததாக வெளியான படத்தில் உள்ளவர் உண்மையில் வெளிமாநில தொழிலாளர் இல்லை… ஷூட்டிங் முடிந்து அவர் காரில் புறப்பட்ட போது எடுத்த படம் என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராகுல் காந்தி புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்த புகைப்படமும் அவர் சந்தித்த தொழிலாளர்கள் காரில் புறப்பட்டு சென்ற படமும் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வெளிமாநில தொழிலாளர் […]

Continue Reading

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா?

உத்தரப்பிரதேச தொழிலாளர்களுக்காக பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பஸ்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது ரயில் அல்ல! புலம்பெயர்ந்த உ.பி தொழிலாளிகளுக்காக இளம் இந்திரா பிரியங்கா காந்தி அவர்கள் அனுப்பிய பேருந்துகள்! ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, பலரும் ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

மாலத்தீவு முன்னாள் அதிபர் மடியில் சோனியா அமர்ந்திருக்கும் படம் உண்மையா!

சோனியா காந்தி மாலத்தீவு முன்னாள் அதிபர் மடியில் அமர்ந்திருப்பது போன்று போட்டோஷாப் செய்யப்பட்ட அநாகரீகமாக  படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். வதந்தியின் விவரம்: Facebook Link Archived Link மாலத்திவு முன்னாள் அதிபர் மாமூன் மடியில் சோனியா காந்தி நெருக்கமாக அமர்ந்திருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “ஒவ்வொன்றாக அம்பலம் ஏறுகிறது அன்டானியோ மைனோவின் விஷமங்கள்.. கொரானா லாக்டௌன் ‘நல்லது’…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டாரா? பரபரப்பை ஏற்படுத்திய டிஎன் நியூஸ் 24 இணையதளம்!

‘’பிரியங்கா காந்தி கைது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே செய்தியை மேலும் சில பேஸ்புக் பக்கங்களிலும் பகிர்ந்துள்ளனர்.  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:இந்த ஃபேஸ்புக் பதிவுகளில் பகிரப்பட்டுள்ள செய்தி லிங்க், முதலில் டிஎன்நியூஸ்24 இணையதளத்தில் வெளியிடப்பட்டதாகும். அதன் தலைப்பில் ‘பிரியங்கா கைது’ என்று கூறியுள்ளனர். இதனை சமூக ஊடகங்களில் […]

Continue Reading

இடது கையால் மரியாதை செலுத்திய ராகுல்?- பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

தேசியக்கொடிக்கு ராகுல் காந்தி இடது கையால் மரியாதை செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராகுல் காந்தி இடது கையால் மரியாதை செய்யும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “லூசு பப்பு இது இந்தியா. உன் தாய்நாடு இத்தாலி இல்லை. தேசியகொடிக்கு வலது கைய்யால தான் சல்யூட் அடிக்கணும்னு தெரியாத ஒரு முட்டாள்தான் காங் பிரதமர் வேட்பாளர்! […]

Continue Reading

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்தாரா பிரதமர் மோடி?

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி விப்லவ் தாக்கூர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் மோடி விழித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மக்களவையில் இருக்கும் பிரதமர் மோடி மற்றும் மாநிலங்களவையில் பேசும் விப்லவ் தாக்கூர் வீடியோ காட்சிகளை ஒன்றிணைத்து 1.14 நிமிடத்துக்கு ஒரே வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.  நிலைத் தகவலில், “பாராளுமன்றத்தில் கேள்விகளுக்கு […]

Continue Reading

நேருவை கன்னத்தில் அறைந்த வித்யானந்த் விதேவ்- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

நேருவின் முகத்தில் ஸ்வாமி வித்யானந்த் விதே அறைந்தார் என்றும் அவருக்கு பதிலடி கொடுக்க வந்த நேருவை பின்னல் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினார்கள் என்றும் படத்துடன் கூடிய ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நேருவை யாரோ பின்னால் இழுக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இந்த பதிவை படிச்சதும் அம்புட்டு சந்தோஷம் எனக்கு! நீங்களும் அனுபவிங்க! நேருவின் முகத்தில் ஸ்வாமி […]

Continue Reading

எச்.ராஜாவை விமர்சித்த அன்புமணி ராமதாஸ்: ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

நெல்லை கண்ணனைக் கைது செய்யக் கோரும் எச்.ராஜாவைத்தான் கைது செய்திருக்க வேண்டும் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டாக்டர் அன்புமணி ராமதாஸ் பற்றிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “நெல்லை கண்ணனைக் கைது செய்யக் கோரும் எச்.ராஜாவைத்தான் கைது செய்திருக்க வேண்டும். […]

Continue Reading

புதுச்சேரி அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

புதுச்சேரி காங்கிரஸ் அரசை தரங்கெட்ட ஆட்சி என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்ததாகவும், இதனால் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி முறிவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதுச்சேரி நாராயணசாமி படத்தின் அருகில், “யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரிக்கு முதலிடம் – மத்திய அரசின் தரவரிசைப் பட்டியல்” என்று உள்ளது. அதற்கு கீழ், மு.க.ஸ்டாலின் படத்தின் அருகில், “தரங்கெட்ட ஆட்சிக்கு […]

Continue Reading

டெல்லியில் 40 லட்சம் மக்கள் திரண்ட பேரணியை நடத்திய காங்கிரஸ்- ஊடகங்கள் மறைத்ததா?

டெல்லியில் 40 லட்சம் மக்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணியை காங்கிரஸ் கட்சி நடத்தியதாகவும் ஆனால் அதை ஊடகங்கள் செய்தியாக வெளியிடாமல் மறைத்துவிட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 ராகுல், பிரியங்கா படங்களுடன் மக்கள் கடல் போல இருக்கும் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாற்பது லட்சம் மக்கள் […]

Continue Reading

1954ம் ஆண்டு அமெரிக்காவில் நேருவுக்கு கிடைத்த வரவேற்பு: ஃபேஸ்புக் படம் உண்மையா?

இந்தியாவுக்காக 3259 நாட்கள் சிறையில் வாடிய நேரு, அமெரிக்கா சென்றபோது கிடைத்த வரவேற்பு என்று ஒரு ட்வீட் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் வெளியிட்ட ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “1954ம் ஆண்டு நேருவுக்கும் இந்தியா காந்திக்கும் சிறப்பான வரவேற்பு அளித்த அமெரிக்க மக்கள்… எந்த ஒரு ஊடகத் தொடர்பு பிரசாரம், […]

Continue Reading

காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் காந்தியை கண்டித்த பெண்மணி: வீடியோ உண்மையா?

காஷ்மீர் மக்களுக்கு ஏன் தொந்தரவு தருகின்றீர்கள். மோடி ஆட்சியில் காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வது உங்களுக்குப் பொறுக்கவில்லையா என்று ராகுல் காந்தியைப் பார்த்து பெண் ஒருவர் கேட்டதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 29 விநாடிகள் ஓடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் பெண் ஒருவர் இந்தியில் பேசுவது போல் உள்ளது. அவரை […]

Continue Reading

ப.சிதம்பரம் கைது நிகழ்வை நேரலையில் பார்த்து ரசித்த மோடி?

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்படும் நிகழ்வைப் பிரதமர் மோடி தன்னுடைய அலுவலகத்திலிருந்து நேரலையில் பார்த்து கைத்தட்டி மகிழ்ந்தது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 வெறும் ஏழு விநாடிகள் மட்டுமே ஓடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி தன்னுடைய அலுவலகத்தில் உள்ள தொலைக்காட்சி திரையைப் பார்த்து […]

Continue Reading

“உலகின் மிகவும் ஊழல் மலிந்த கட்சிகள் பட்டியலில் தி.மு.க!” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

உலகின் மிகவும் ஊழல் மலிந்த கட்சிகள் பட்டியலில் தி.மு.க-வுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளதாக ஒரு புகைப்படத்துடன் கூடிய தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஒரு இன்ஃபோகிராபிக்ஸ் கார்டு பகிர்ந்துள்ளனர். அதில், தி.மு.க உலக அளவில் 4வது ஊழல் கட்சி என சர்வே முடிவு சொல்கிறது என்று தலைப்பு உள்ளது. ஃபாக்ஸ் நியூஸ் டாட் காம் 2017ம் ஆண்டு வெளியிட்ட சர்வே […]

Continue Reading

மத்திய பிரதேச பெண் அமைச்சர் இமார்த்தி தேவி பா.ஜ.க-வை சேர்ந்தவரா?

கழிவறையில் உணவு சமைப்பது பிரச்னைக்குரியது இல்லை என்று மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி கூறியிருந்தார். அவர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி புகைப்படம் மற்றும் தமிழ் திரைப்படத்தின் காட்சி ஒன்று ஒன்றின் கீழ் ஒன்றாக வைக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது. அமைச்சரின் படத்தின் மேல், “கழிவறையில் உணவு […]

Continue Reading

உத்தரகாண்ட் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் 35 இடங்களில் வெற்றி: ஃபேஸ்புக் வதந்தியால் குழப்பம்

‘’உத்தரகாண்ட் மாநில உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் 35 இடங்களில் வெற்றி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மண்ணின் மைந்தன் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இது ஏற்கனவே மற்றொருவர் பகிர்ந்த பதிவை ஸ்கிரின்ஷாட் எடுத்து பகிரப்பட்டதாகும். இதில், ‘’உத்திர காண்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 42ல் 35 இடங்களில் காங்கிரஸ் வெற்றி. […]

Continue Reading

“மன்மோகன் சிங்குக்கு எம்.பி சீட் மறுத்த தி.மு.க!” – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழகத்தில் மாநிலங்கள் அவை எம்.பி சீட் வழங்க தி.மு.க மறுத்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மு.க.ஸ்டாலின் மற்றும் பழைய திரைப்படத்தில் நடிகை சரோஜாதேவி பங்கேற்ற திரைப்பட காட்சியைப் பகிர்ந்துள்ளனர். நடிகை சரோஜா தேவியின் படத்தின் மீது மன்மோகன் என்று எழுதப்பட்டுள்ளது. தமிழக ராஜ்யசபா சீட்டுக்கு மன்மோகன் சிங்கை ஆதரிக்க தி.மு.க […]

Continue Reading

“மன்மோகன் சிங் வீடு தேடிச் சென்ற மோடி!” – சமூக ஊடகங்களில் பரவும் தகவல் உண்மையா?

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, அவரது வீட்டுக்குச் சென்று பிரதமர் மோடி சந்தித்ததாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I News Link I Archived Link 2 “முன்னாள் பிரதமர் மன்மோகனை சந்திக்க வீடு தேடி வந்த பிரதமர் மோடி! எதற்குத் தெரியுமா?” என்று தலைப்பிட்டு patrikai.com என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நிதி […]

Continue Reading

பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு ரூ.562 கோடி கொடுத்து வெளிநாடு தப்பிய நீரவ் மோடி?– ஃபேஸ்புக் பகீர்

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.562 கோடி கொடுத்த பிறகே அவர்கள் தன்னை வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல அனுமதித்தார்கள் என்று நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு செய்து வெளிநாட்டுக்கு தப்பி பிரபல வைர வியாபாரி ஓடிய நீரவ் மோடி படம் வைக்கப்பட்டுள்ளது. அதில், “காங்கிரஸிற்கு ரூ.562 கோடி […]

Continue Reading

“மூன்றே மாதத்தில் உடைந்த மோடி கட்டிய பாலம்…” – ஃபேஸ்புக் பதிவு கிளப்பிய பரபரப்பு!

குஜராத்தில் மோடி முதல்வராக இருக்கும்போது அடிக்கல் நாட்டி, இந்திய பிரதமர் ஆன பிறகு திறந்துவைத்த பாலம் ஒன்று திறப்பு விழா கண்ட மூன்றே மாதத்தில் இடிந்து விழுந்துவிட்டது என்று ஒரு படத்துடன் கூடிய தகவல் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived link 1 I Archived link 2 உடைந்த சாலை பாலம் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் […]

Continue Reading

இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த சவுதி இளவரசர்?

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை, ஜெய் ஶ்ரீராம் என்று சொல்ல கட்டாயப்படுத்தினால், சவுதியில் உள்ள இந்துக்கள் அனைவரையும் இஸ்லாமியராக மாற்றுவேன் என்று இந்தியாவுக்கு சவுதி இளவரசர் எச்சரக்கை விடுத்ததாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: குடிக்கிற கஞ்சியிலே மண்ணள்ளி போடப்போற…… RSS -BJP இந்துத்தீவிரவாதிகளால் வயித்துப்பிழைப்புக்காக சென்ற இந்துக்களுக்கு ஆபத்து. Archived link ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க இந்துத் தீவிரவாதிகளால் வயிற்றுப் பிழைப்புக்காக சவுதி சென்ற […]

Continue Reading

தன்னுடைய உதவியாளர் கொலை வழக்கில் ஸ்மிருதி இரானிக்கு தொடர்பா?

அமேதி தொகுதியில் வெற்றிபெற காரணமாக இருந்த தன்னுடைய உதவியாளர் கொலைக்கு ஸ்மிருதி இரானியே காரணம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மார்ட்டின் உதவியாளர் இறந்தால் அது மார்ட்டின் கைவண்ணம். ஸ்மிருதி ராணி உதவியாளர் இறந்தால் அது யார் கைவண்ணம்?? Archived link மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செட்டிங்கை வெளியிடுவேன் என்று மிரட்டியதால் ஸ்மிருதி இரானி உதவியாளர் சுட்டுக்கொலையா என்று உங்கள் நியூஸ் (Satire news) […]

Continue Reading

கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலங்களில் பா.ஜ.க புறக்கணிக்கப்பட்டதா?

இந்தியாவில், கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க வெற்றிபெறவில்லை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link வாழ்க வளமுடன் என்று கூறி ஒரு புள்ளிவிவர புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கல்வியறிவு அடிப்படையில் மாநிலங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த பத்தியில், பா.ஜ.க பெற்ற தொகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. முடிவில், கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. என்ற திருக்குறளையும் வெளியிட்டுள்ளனர். […]

Continue Reading

பல தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 2,11,820 தானா?

“பல தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு ஒன்றாகவே உள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை பார்த்துள்ளது” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஓட்டு மிஷின்சாரியாக தான் வேலை செய்துள்ளது Archived link பல தொகுதிகளில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் ஒரே மாதிரியாக உள்ளது என்று பட்டியலிடப்பட்டுள்ளது. பா.ஜ.க-வின் போலோ […]

Continue Reading

இஸ்லாமியராக மாறி பெரோஸ் காந்தியை திருமணம் செய்த இந்திரா! – 77 ஆண்டுகள் கழித்து சர்ச்சையை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு

ஒடுங்கியிருந்த இஸ்லாமியர்களுக்கு தனி நாடு பெற்றுத்தந்தவர் என்பதால் காந்தி பாகிஸ்தானின் தந்தை என்றும், இந்திரா காந்தி ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்ய, இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார் என்றும், இந்திரா காந்தியின் உண்மையான பெயர் மைமுனா பேகம் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம் தகவலின் விவரம்: Archived link “1942ல் லண்டனில் இஸ்லாம் மதம் மாறி, மைமுனா பேகம் என பெயர் மாற்றி, பெரோஸ்கானை திருமணம் […]

Continue Reading

எக்ஸிட்போல் முடிவைக் கண்டு துள்ளிக் குதித்த லண்டன்வாசிகள்? – வேகமாக பரவும் வீடியோ!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவில் பா.ஜ.க அதிக இடங்களை பெறும் என்று ஒளிபரப்பானதைக் கண்டு, லண்டனில் உள்ள மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் துள்ளிக் குதித்ததாக ஒரு வீடியோவை பா.ஜ.க ஆதரவாளர் கல்யாணராமன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர். அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: exit poll லன்டனில் , மக்களின் அதிரும் ஆரவாரம் பாருங்கள்???????? Archived link ஒரு பெரிய திரையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு […]

Continue Reading

இந்திரா காந்தியின் கையைப் பிடித்து சீண்டிய தேசபக்தர்; நேரு அதிர்ச்சி– ஃபேஸ்புக் வதந்தி!

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு விமானத்திலிருந்து நேருவும், இந்திராகாந்தியும் இறங்கியதாகவும் அப்போது ஒருவன் சிறுமி இந்திராவின் கையைப் பிடித்து இழுத்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link சோனியா காந்தி காலில் சிங் ஒருவர் விழும் படத்தில், “முன்னாள் பிரதமரின் நிலை. உலகத்தில் எந்த ஜீவராசிக்கும் வரக்கூடாது… ஒ.பி.எஸ், இ.பி.எஸ்-ஐ கிண்டல் செய்யும் உபிஸ்… இதுதான் காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங் நிலை” […]

Continue Reading

கழுத்தில் சிலுவை டாலருடன் பிரியங்கா காந்தி! –சமூக ஊடகங்களில் பரவும் படம் உண்மையா?

ஒரு படத்தில் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடனும் மற்றொரு படத்தில் கழுத்தில் சிலுவை டாலருடனும் பிரியங்கா காந்தி இருப்பது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link முதல் படத்தில் பிரியங்கா காந்தி, ருத்ராட்ச மாலைகள் அணிந்திருக்கும் படத்தை வைத்துள்ளனர். அடுத்த படத்தில், பிரியங்கா காந்தி, சிலுவை டாலர் உள்ள செயினை அணிந்திருப்பது போன்ற படத்தை வைத்துள்ளனர். மிக மோசமான தடித்த வார்த்தைகளுடன் பதிவு தொடங்குகிறது. பொது […]

Continue Reading

சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ராகுல் காந்தி பற்றி பரவும் புகைப்படம் உண்மையா?

சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ராகுல் காந்தி பற்றி ஃபேஸ்புக்கில் வைரலாகப் பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: படத்தில் போலீஸ் தூக்கி கொண்டு வருவது சிவராஜ்சிங் சௌகான், பாஜக தலைவர்,.. மற்றொரு படம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி… Archived Link இந்த பதிவில், வெள்ள நீரில் சிவராஜ் சிங் சவுகானை போலீசார் தூக்கிக் கொண்டு வருவது போலவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் […]

Continue Reading

நாக்பூர் ஆர்.பி.ஐ பெட்டகத்திலிருந்து 200 டன் தங்கம் மாயமா?

நாக்பூர் இந்திய ரிசர்வ் வங்கி பெட்டகத்தில் இருந்து 200 டன் தங்கம் மாயமாகிவிட்டதாகவும் சௌகிதார் மோடி களவாணி, என்று ஒரு பதிவு சமூக ஊடகத்தில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நாக்பூர் RBI பெட்டகத்தில் இருந்து 200டன் தங்கத்தை காணவில்லையாம்…சௌகிதார் மோடி களவாணி ஹே. ! Archived link சுவரில் ஓட்டை ஓட்டு, சிலர் பணத்தைக் கொள்ளை அடித்து செல்வது போலவும், காவலாளி போல் மார்ஃபிங் செய்யப்பட்ட மோடியிடம் மக்கள் […]

Continue Reading

ஃபானி புயல் ஒடிசாவை தாக்க பாஜக.,தான் காரணம் என்று ராகுல் காந்தி சொன்னாரா?

‘’பானி புயல் ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா போன்ற மாநிலங்களை தாக்குவதற்கு, பாஜக.,வின் சதிதான் காரணம்,’’ என்று ராகுல் காந்தி சொன்னதாகக் கூறி, பலரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்து வருகிறார்கள். இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவை எம்பெட் செய்ய முடியவில்லை என்பதால், அதனை ஸ்கிரின்ஷாட் எடுத்து இங்கே பகிர்ந்துள்ளோம். Nagarajan Sai என்பவர் பகிர்ந்துள்ள இந்த பதிவு உண்மையா, பொய்யா என பரிசோதிக்கும்படி, நமது வாசகர் தரப்பில் இருந்து […]

Continue Reading

கங்கை நீர் கண்ணாடி போல சுத்தமாகிவிட்டதா?

கங்கை நதி மிகவும் தூய்மையாக மாறிவிட்டது போலவும், அதில் இருந்து பிரியங்கா காந்தி தண்ணீர் அருந்துவது போலவும் ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். உண்மை அறிவோம்: மறுப்போர் இல்லை… Archived link கங்கை நதி முன்பு இருந்த நிலை, இப்போது இருக்கும் நிலை என்று கொலாஜ் செய்யப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. முதல் படத்தில், கங்கை நதி மாசடைந்து, சாக்கடை போல உள்ளது. அதில் மன்மோகன் சிங் படம் […]

Continue Reading

ராமர் கோயில் கட்ட விடாமல் காங்கிரஸ் முட்டுக்கட்டை: அமித் ஷா பேசியதன் விவரம் என்ன?

‘’எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே,’’ என்ற தலைப்பில் ஒரு மீம் பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. உண்மை என நம்பி வைரலாகப் பகிரப்பட்டு வரும் இந்த பதிவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link மார்ச் 21ம் தேதி இந்த ஃபேஸ்புக் பதிவை, Vasanth Kumar என்பவர் வெளியிட்டுள்ளார். இதில், மோடி, அமித் ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ஒன்றாக நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’எத்தனை […]

Continue Reading

வெள்ள சேதத்தை பார்வையிட வந்த இடத்தில் சமோசா சாப்பிட்ட ராகுல்! – வைரல் வீடியோ உண்மையா?

வெள்ள பாதிப்பை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்ற ராகுல் காந்தி, சமோசாவை ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்ததாக ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: வெள்ளம் பாதித்த பகுதிகளை மிகவும் சிரத்தையுடன் பார்வையிடும் வருங்கால இத்தாலிய பிரதமர்…என்னே ஒரு அக்கறை சமோசா மேல… Archived link ஹெலிகாப்டரில் ராகுல் காந்தி அமர்ந்திருக்கிறார். அருகில் ஒரு கவரில் இருந்து சமோசாவை எடுத்து அருகில் உள்ளவர்கள், வீடியோ எடுப்பவர் என அனைவருக்கும் […]

Continue Reading

ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டாரா?

“ரஃபேல் போர் விமானம் விவகாரத்தில் நான் பொய் சொன்னேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக ஒரு பதிவு வைரலாகி வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: Archived link ராகுல் காந்தி கண்ணடிக்கும் படத்துக்கு அருகே, மன்னித்து விடுங்கள் என்று மிகப்பெரிய தலைப்பிட்டுள்ளனர். அதில், “ரஃபேல் விவகாரத்தில் நான் பொய் தான் சொன்னேன். தேர்தல் பிரசார வேகத்தில் அப்படி பேசினேன். அதற்காக மன்னிப்பு […]

Continue Reading

ஒருவேளைக்கு 432 வகை உணவுகளை சாப்பிடும் மோடி?

பிரதமர் மோடி மேசையில் குவிக்கப்பட்ட உணவு வகைகளை ருசி பார்ப்பது போன்ற படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனுடன் 432 வகை உணவுகளை சாப்பிடும் ஏழைத்தாயின் மகன் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிய முடிவு செய்தோம். வதந்தியின் விவரம்: அம்மாவும், மகனும் பேசிக் கொண்டது. அம்மா ; டேய் மகனே நீ பலைய கஞ்சியும் மிலகாயும் சாப்ட தால ஏழை தாயின் மகனாக ஆகிவிட முடியாது. நம்ம நாட்டு மக்கலோட காசுல 432 […]

Continue Reading

அய்யாக்கண்ணுவை டெல்லியில் போராடத் தூண்டியது திமுக, காங்கிரஸ் கட்சிகளா?

தங்களை டெல்லியில் போராடத் தூண்டியதே தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள்தான் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாக செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: ? விதி விளையாடுது . ?? Archived link மோடிக்கு எதிராக எங்களை டெல்லி வரை சென்று போராட இயக்கியதே தி.மு.க, காங்கிரஸ்தான் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாக நியூஸ்7 தொலைக்காட்சி நியூஸ் […]

Continue Reading

எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு? – விஷம செய்தி வெளியிட்ட இணையதளம்!

‘’பின்னால் கை வைத்த விவகாரம் எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு?,’’ என்ற தலைப்பில் செய்தி ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தால், குஷ்பு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிவிட்டது போன்று தலைப்பு இருந்தது. எனவே, இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: பின்னால் கைவைத்த விவகாரம் எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு? Archived link குஷ்பு சுந்தர் ஒருவர் கன்னத்தில் அறையும் படம் மற்றும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி […]

Continue Reading

எச்.வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடியா?

கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடி பறப்பதாக ஒரு செய்தி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதுபற்றி உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தினோம். தகவலின் விவரம்: வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடி வாழ்க உம் நாட்டப்பற்று Archived link கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாகனத்தில் சென்று எச்.வசந்தகுமார் வாக்கு கேட்கும் படத்தை வெளியிட்டு, அதில். ‘’வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடி… வாழ்க உன் நாட்டுப்பற்று,’’ என்று நிலைத்தகவல் வெளியிட்டுள்ளனர். அந்த படத்தில், பச்சை […]

Continue Reading

மோடியின் சொத்து மதிப்பு ரூ.7115 கோடியா?

2014ம் ஆண்டு பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.1.41 கோடி… இன்றைக்கு அது 7115 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக, ஒரு பதிவு சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த தகவலின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: லஞ்சம் வாங்காத உத்தம புத்திரனின் சொத்து கணக்கு தேர்தல் ஆணையத்திடம். காட்டியது இது. காட்டாமல் உள்ள சொத்து மதிப்பு யார் அறிவார் பராபரமே… Archived link இதில், மோடியின் […]

Continue Reading

பாகிஸ்தான் ஆதரவுடன் வயநாட்டில் போட்டியிடும் ராகுல்காந்தி?

பாகிஸ்தான் கொடியுடன் சென்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் என்று ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிரான மனநிலையில் இருக்கும்போது, ஒரு கட்சியின் தேசிய தலைவர் பாகிஸ்தான் கொடியுடன் செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்த பதிவின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ???? நன்றாக சிந்திக்க வேண்டும் கேரள மாநிலம் இருப்பது இந்தியாவில் கேரளாவில் வயநாடு தொகுதியில் […]

Continue Reading

பிரதமர் மோடி அரசுப் பணத்தை தவறாக பயன்படுத்தினாரா?

‘அரசுப் பணத்தை யாரும் தவறுதலாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன்,’ என்று சொன்ன பிரதமர் மோடி, வெளிநாட்டு சுற்றுப் பயணம், மேக்அப், உணவு, வெளிநாட்டு பயணம் போன்றவற்றுக்காக பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்துவிட்டதாக, ஒரு செய்தி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம் Archived link இந்த பதிவை கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்டுள்ளனர். அதில், அரசு […]

Continue Reading

ஒழித்துக்கட்டுவோம் காங்கிரஸ், திமுக.,வை: போட்டோஷாப் பதிவு

‘’ஒழித்துக்கட்டுவோம் காங்கிரஸ், தி.மு.க.,வை,’’ என்று ஒரு புகைப்பட பதிவு சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த புகைப்படத்தில் சந்தேகம் எழவே, இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். முடிவு உங்கள் பார்வைக்கு. தகவலின் விவரம்: ஒழீத்துகட்டுவோம் காங்கிரஸ் திமுக வை?? Archive link சோனியா காந்தி, ராகுல் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை தகவல் என்ற செய்தி உள்ள அட்டையைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஒருவர் நிற்கும் படத்துடன், ஒ(ழீ)ழித்துகட்டுவோம் காங்கிரஸ், தி.மு.க-வை என்று நிலைத்தகவல் […]

Continue Reading

மாணவியின் கேள்வியால் நொந்து நூடுல்ஸ் ஆன ராகுல் காந்தி?

‘என் தந்தைக்கும் உங்களுக்கும் ஒரே வயதுதான் நீங்கள் எப்படி இளைஞர் ஆக முடியும், கல்லூரி மாணவியிடம், நொந்து நூடுல்ஸ் ஆன ராகுல்,’ என்று ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. கல்லூரி மாணவிகள் கேள்வி கேட்டதால் ராகுல் ஓட்டம் எடுத்தார் என்று பல வதந்திகள் உலாவும் நேரத்தில், இதிலாவது உண்மை இருக்குமா என்று ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு. வதந்தியின் விவரம் எனது தந்தைக்கும் உங்களுக்கும் ஒரே வயதுதான் நீங்கள் எப்படி இளைஞர் ஆகமுடியும் கல்லூரி மாணவியிடம் நொந்து நூடுல்ஸான ராகுல் ! TNNEWS24 […]

Continue Reading

ராகுல்காந்தி பற்றி டைம் மேகசின் கேலிச்சித்திரம் வெளியிட்டதா?

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்றும் பயங்கரவாதிகளை வளர்த்துவிடுவதே காங்கிரஸ் கட்சிதான் என்றும் பிரபல டைம் பத்திரிகை அட்டைப்படம் மற்றும் செய்தி வெளியிட்டுள்ளதாக ஒரு கார்ட்டூன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு. வதந்தியின் விவரம்:அசிங்கம் செய்தது–. உலக பத்திரிக்கை ஊடகம்.”. நியுயார்க் டைம்ஸ்..” பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிக்கும்..கைகூலியாம்..காங்கிரஸ் ..!! உலகம் கீழீத்து தொங்கவிட்டது..ராகுல் காந்தியை…??..உலகம் எச்சரிக்கை செய்கிறது.!!. கேவலப்பட்டது… காங்கிரஸ்.. ராகுல் […]

Continue Reading