நடிகர் ரஜினிக்கு தவெக தலைவர் விஜய் நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறினாரா?

‘’நடிகர் ரஜினிக்கு தவெக தலைவர் விஜய் நேரில் பிறந்தநாள் வாழ்த்து,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ்கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நடிகர் ரஜினிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து. பேரன்பிற்கும், மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல […]

Continue Reading

‘ஆமை புகுந்த வீடும், சீமான் புகுந்த வீடும் விளங்காது’என்று ரஜினிகாந்த் கூறினாரா?

‘’ஆமை புகுந்த வீடும், சீமான் புகுந்த வீடும் விளங்காது,’’ என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’தம்பி சீமான் என்னை வந்து சந்தித்தது உண்மை, ஆமை புகுந்த வீடும் சீமான் புகுந்த வீடும் விளங்காது என்பதால் இந்த உண்மையை ரசிகர்களாகிய உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன். […]

Continue Reading

“வேட்டையன் படம் சரியில்லை என்ற யூடியூப் விமர்சகர்” என்று பரவும் பதிவு உண்மையா?

ரஜினிகாந்தின் வேட்டையன் படம் சரியில்லை என்று யூடியூப் விமர்சகர் ஒருவர் கடுமையாக விமர்சித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook யூடியூப் திரை விமர்சகர் ஒருவர் சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த வேட்டையன் திரைப்படம் சரியாக இல்லை என்று கூறியது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “First half , second half rendumey mmbiruchu pola 😭😭🤣🤣  […]

Continue Reading

‘நெல்சனுக்கு ரஜினியால் ஏற்பட்ட விபரீதம்’ என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘’நெல்சனுக்கு ரஜினியால் ஏற்பட்ட விபரீதம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’நெல்சன் க்கு ரஜினி யால் ஏற்ப்பட்ட விபரீதம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை. ரஜினியின் ரசிகர் ரவுடி கிருஷ்ணனுக்கு ரஜினி சொல்லிய வார்த்தைக்காக அடைக்கலம் கொடுத்தாரா சந்தேகத்தில் […]

Continue Reading

‘கையில் மதுவுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ சிறுவன் முன்பாக, கையில் மதுவுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link  இதில், ‘’ சிறுவன் முன்னாடி மதுபானத்தை கையில் வைத்திருக்கும் வந்தேறி ரஜினி 🔥🔥🔥’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து […]

Continue Reading

‘குருமூர்த்தி சொல்வதில் உண்மையில்லை’ என்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தாரா?

‘’குருமூர்த்தி சொல்வதில் உண்மையில்லை’’ என்று ரஜினிகாந்த் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  one india tamil லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’குருமூர்த்தி சொல்வதில் உண்மையில்லை – முதல்வர் பதவி குறித்தோ அண்ணாமலை குறித்தோ ஆடிட்டர் குருமூர்த்தியுடன் எப்போதும் விவாதித்தது இல்லை. அவரது கருத்து மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது […]

Continue Reading

இந்துக்களிடம் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

ரஜினிகாந்த் ஏ.ஆர்.ரஹ்மானுடன் தர்காவுக்கு சென்றது மிகப்பெரிய தவறு, இதற்காக இந்துக்களிடம் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் தர்கா சென்று வழிபாடு செய்த புகைப்படம் மற்றும் அர்ஜூன் சம்பத் படத்தை ஒன்று சேர்த்து நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “காவியை அவமதிக்காதீர்கள் ரஜினி… தர்காவுக்கு பச்சை துண்டு அணிந்து […]

Continue Reading

மீண்டும் அரசியலுக்கு வரலாமா என்று ஆலோசிக்க உள்ளதாக ரஜினிகாந்த் கூறினாரா?

மீண்டும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்க மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினி. மீண்டும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்க உள்ளேன். […]

Continue Reading

ரஜினிகாந்த் புகைப்படம்; ஸ்டீபன் சோந்தெய்ம் மரணம்: முன்னுக்குப் பின் முரணான செய்தியால் குழப்பம்…

‘’பிரபல இசையமைப்பாளர் மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்,’’ என்று குறிப்பிட்டு, ரஜினிகாந்த் புகைப்படத்துடன் பகிரப்படும் செய்தி ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: FB Post Link I Archived Link Online14Media.Com Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியை பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியின் தலைப்பில், ‘’சற்று முன் பிரபல இசையமைப்பாளர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்,’’ என்று எழுதியுள்ளனர். அதன் கீழே ரஜினிகாந்த் […]

Continue Reading

FactCheck: ஒரு டிக்கெட் விலை ரூ.2925?- அண்ணாத்த படம் பற்றி பகிரப்படும் வதந்தி…

‘’அண்ணாத்த திரைப்படத்தின் ஒரு டிக்கெட் விலை ரூ.2925,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம் ‘அண்ணாத்த’. இதன் ஒரு டிக்கெட் விலை ரூ.2925 எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். Facebook Claim Link I Archived Link  உண்மை அறிவோம்:இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் […]

Continue Reading

FactCheck: அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என ஆலோசிக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறினாரா?

‘’அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என ஆலோசிக்கிறேன்- ரஜினிகாந்த்,’’ எனக் கூறி பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த நியூஸ் கார்டை +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு, வாசகர் ஒருவர் அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனை பலர் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading

FACT CHECK: இரட்டை இலை பேனரை தூக்கிப்பிடித்த ரஜினி… போட்டோஷாப் படத்தால் பரபரப்பு!

இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி பேனர் ஒன்றை ரஜினிகாந்த் தூக்கிப்பிடித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ரஜினிகாந்த் “வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு” என்ற பதாகையை பிடித்தபடி நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Breaking : சற்றுமுன் நடந்த சுர்ஜிக்கள் அட்டாக் . Breaking 🙂 Another surgical strike 🙂 கதம் கதம்” என்று […]

Continue Reading

FACT CHECK: திமுக-வுக்கு வாக்களித்தால் தமிழகத்தைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி கூறினாரா?

தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி அறிவித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், “திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. – நடிகர் ரஜினிகாந்த்” என்று இருந்தது.  […]

Continue Reading

FactCheck: பாஜக.,விற்கு வாக்களிக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறினாரா?

‘’பாஜக.,விற்கு வாக்களிக்க வேண்டாம் – ரஜினிகாந்த்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ராணுவ வீரர்கள், மக்கள் என யாரையும் அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. ஆகவே சிந்தித்து வாக்களியுங்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனைப் […]

Continue Reading

FACT CHECK: ரஜினிகாந்த் படத்தின் மீது ஊற்றிய பால்… சாலையில் தேங்கிய நீரை அருந்திய மூதாட்டி… உண்மை இதோ!

ரஜினிகாந்த் கட் அவுட்டுக்கு அவரது ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யும்போது, சாலையில் தேங்கிய அதை மூதாட்டி ஒருவர் அருந்துவது போன்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook  I Archive ரஜினிகாந்த் படத்துக்கு அவரது ரசிகர்கள் பால் ஊற்ற, சாலையில் கழிவு நீருடன் கலந்த அதை மூதாட்டி ஒருவர் எடுத்து அருந்துவது போல புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “2020ல் என்னை […]

Continue Reading

FACT CHECK: தன் பெயரை அ.தி.மு.க, பா.ஜ.க பயன்படுத்தக் கூடாது என்று ரஜினி அறிக்கை வெளியிட்டாரா?

தன்னுடைய பெயர், புகைப்படத்தை அ.தி.மு.க, பா.ஜ.க பயன்படுத்தக் கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக, சன் நியூஸ் தமிழ் நியூஸ் கார்டு ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகவுக்கும் அதிமுகவும் எக்காரணம் கொண்டும் எனது பெயரையோ என் புகைப்படங்களையோ தேர்தலில் பயன் படுத்தக் கூடாது” என்று உள்ளது.  […]

Continue Reading

FactCheck: தமிழர்களை இழிவுபடுத்தி துக்ளக் பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டதா?

‘’தமிழர்களை இழிவுபடுத்தி துக்ளக் பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டுள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  மேற்கண்ட கார்ட்டூனை, நமது வாசகர் ஒருவர், வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். அதனை சற்று பெரிபடுத்தி கீழே இணைத்துள்ளோம்.  இது, 7.06.2017 தேதியிட்டு வெளிவந்த துக்ளக் பத்திரிகையின் அட்டைப் புகைப்படம் ஆகும். அதில், ஒரு கார்ட்டூனும் இடம்பெற்றுள்ளது. அந்த கார்ட்டூனில், எறும்புகள் […]

Continue Reading

ஆன்மீக ஜனதா கட்சி என்ற பெயர் கேட்டு ரஜினி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளாரா?

‘’ரஜினிகாந்த், தேர்தல் ஆணையத்திடம், ஆன்மீக ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க விண்ணப்பித்துள்ளார்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link  இதில், ரஜினி பற்றி நியூஸ் 7 தமிழ் ஊடகம் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்து, கவுண்டமணி, செந்தில் சினிமா காட்சி ஒன்றையும் இணைத்து, பதிவிட்டுள்ளனர். […]

Continue Reading

முரசொலி மாறனின் ஆலோசகராக அர்ஜூன மூர்த்தி பணிபுரிந்தாரா?

‘’முரசொலி மாறனின் ஆலோசகராக அர்ஜூன மூர்த்தி பணிபுரிந்தார்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த புகைப்படத்தை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி, இதில் முரசொலி மாறனுடன் இருப்பர் யார், என சந்தேகம் கேட்டிருந்தார். மேலும், ஃபேஸ்புக்கில், ‘இதில் இருப்பவர் அர்ஜூன மூர்த்தி,’ என்றும், ‘அவர் முரசொலி மாறனிடம் பணிபுரிந்தார்,’ என்றும் ஃபேஸ்புக்கில் தகவல் பகிர்வதாக, […]

Continue Reading

ரஜினிகாந்த் பற்றி அவரது ரசிகர்கள் ‘புண்டரே’ என்று போஸ்டர் ஒட்டியதாகப் பரவும் வதந்தி

‘’ரஜினிகாந்த் பற்றி புண்டப்ரே புண்டரே எனக் கூறி அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பாக, திருவொற்றியூர் பகுதியில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால், இதில், ‘’புண்டப்ரே புண்டரே‘’, எனக் கூறியுள்ளதால், இதனை வைத்து, ரஜினியையும், அவரது ரசிகர்களையும் கிண்டல் செய்து பலரும் […]

Continue Reading

FACT CHECK: திருப்பதியில் எடைக்கு எடை பணக் கட்டுகளை துலாபாரம் கொடுத்த ரஜினி?

திருப்பதியில் நடிகர் ரஜினிகாந்த் எடைக்கு எடை பணக் கட்டுகளை துலாபாரம் கொடுத்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 நம்முடைய வாசகர் ஒருவர் ரஜினிகாந்த் தொடர்பான வீடியோ ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதே போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பல ஆண்டுகளாக பகிரப்பட்டு வருவதைக் காண […]

Continue Reading

ஸ்கூல் வாடகை கட்ட முடியவில்லை என்று ரஜினிகாந்த் கூறியதாக பரவும் வதந்தி

‘’ஸ்கூல் வாடகை கட்ட முடியவில்லை,’’ என்று ரஜினிகாந்த் கூறியதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:கடந்த ஆகஸ்ட் மாதம், நடிகை ஜோதிகா, தஞ்சை அரசு மருத்துவமனைக்கு, மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவும் வகையில், ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.  KumudamOnline […]

Continue Reading

இ-பாஸ் விவகாரம்; மன்னிப்பு கேட்டாரா ரஜினிகாந்த்?- இன்ஸ்டாகிராம் விஷமம்

இ-பாஸ் இன்றி சென்றதற்காக உங்க வீட்டுப் பிள்ளையாக நினைத்து மன்னிச்சிருங்க என்று ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டது போன்று ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Instagram Link Archived Link ரஜினியின் ட்விட் பதிவு ஒன்று ஷேர் செய்யப்பட்டுள்ளது. அதில், “நான் E-Pass இல்லாம பண்ணை வீட்டுக்கு போனதை எல்லோரும் உங்க வீட்டு பிள்ளையா நினச்சு மன்னிச்சிருங்க” என உள்ளது. அதை வைத்து மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

ரஜினிக்குப் பயந்து மு.க.ஸ்டாலின் வணக்கம் வைத்ததாக பரவும் வதந்தி…

‘’ரஜினிகாந்துக்கு பயந்து வணக்கம் வைத்த மு.க.ஸ்டாலின்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ரஜினிகாந்தின் புகைப்படத்தை பார்த்து, மு.க.ஸ்டாலின் வணங்குகிறார் என்பதைப் போல தகவல் இடம்பெற்றுள்ளது. இது பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், இதில் உள்ள கமெண்ட்களை பார்க்கும்போது, ‘’ரஜினியை பார்த்து ஸ்டாலின் பயந்துவிட்டார்; ஸ்டாலின் ஒரு மக்கு,’’ என்பன போன்ற கருத்துகள் […]

Continue Reading

ராகவேந்திரா மண்டபத்தை தர முடியாது என்று லதா ரஜினிகாந்த் கூறவில்லை!

கொரோனா சிகிச்சைக்கு மண்டபங்கள் தேவைப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு அங்கு பராமரிப்பு பணி நடைபெற உள்ளது என்று லதா ரஜினிகாந்த் அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: புதிய தலைமுறை நியூஸ் டிக்கரோடு, தினத்தந்தி முதல் பக்கத்தை இணைத்து புகைப்பட பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி செய்தியில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த 750 திருமண மண்டபங்களில் முகாம்கள், பள்ளி, கல்லூரிகளில் 50 […]

Continue Reading

ரஜினி, கமலுடன் மோடி நிற்கும் போலியான புகைப்படம்!

நடிகர் ரஜினி மற்றும் கமலுக்கு மத்தியில் மோடி இருக்கும் வகையில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த்துக்கு நடுவே அவர்கள் தோள் மீது கைபோட்டபடி நரேந்திர மோடி நிற்கும் பழைய புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், “ரெண்டு பேருமே நம்ப ஜீயோட சிஷ்யனுங்கதான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Ameer Sulthan S என்பவர் […]

Continue Reading

பாஜக இப்படியே தோற்றுக் கொண்டிருந்தால் நாடே சுடுகாடு ஆகிவிடும் என்று ரஜினி சொன்னாரா?

‘’பாஜக இப்படியே தோற்றுக்கொண்டிருந்தால் நாடே சுடுகாடு ஆயிடும்,’’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னதாகக் கூறும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Thirumeni Saravanan என்பவர் இந்த பதிவை பிப்ரவரி 12, 2020 அன்று வெளியிட்டுள்ளார். அவரது புரொஃபைல் பார்த்தபோது, ‘மூத்த பத்திரிகையாளராக பணிபுரிகிறேன்’, என்று குறிப்பிட்டிருந்தார். அதனால், அவர் வெளியிடும் பதிவுகள் உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பி […]

Continue Reading

மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் கிடையாது என்று ரஜினி கூறினாரா?

“மிரட்டிய உடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் கிடையாது” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரஜினி படத்துடன் கூடிய நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் “மன்னிப்பு கேட்க முடியாது ரஜினிகாந்த் அதிரடி! மிரட்டிய உடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் […]

Continue Reading

நடிகர் ரஜினிகாந்த் அகால மரணம்: ஃபேஸ்புக் வதந்தியால் திடீர் பரபரப்பு

‘’நடிகர் ரஜினிகாந்த் அகால மரணம்,’’ என்ற பெயரில் பகிரப்பட்டிருந்த ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  அன்புசெல்வன் அன்பு எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலர் உண்மை என நம்பி வைரலாக பகிர அதேசமயம், சிலர் இது தவறான செயல் என்று கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி […]

Continue Reading

ராஜீவ் காந்தி உயிரோடு இருந்தால் மன்னித்திருப்பார் என்று ரஜினி பேசினாரா?

‘’ராஜீவ் காந்தி உயிரோடு இருந்தால் சிறையில் வாடும் 7 தமிழர்களை மன்னித்திருப்பார்,’’ என்று கூறி வைரலாக பரவி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Babu Raj Babu என்பவர் கடந்த டிசம்பர் 12ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்ய ஒருசிலர் கமெண்ட் பிரிவில், ‘இப்படி […]

Continue Reading

மாணவிகளை அடித்த ஏ.பி.வி.பி நபருடன் ரஜினி? – ஃபேஸ்புக்கில் பரபரப்பு

டெல்லியில் போலீசுடன் கலந்து மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி நிர்வாகி தாக்குதல் நடத்தினார் என்றும் அவர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டெல்லியில் காவலர் உடையில் ஏ.பி.வி.பி நிர்வாகி உள்ளார் என்று கூறும் படம் மற்றும் நடிகர் ரஜினிகாந்துன் ஒருவர் தேசிய கொடியோடு இருக்கும் படத்தை இணைத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “போலிஸ் உடையில் போலிஸ் […]

Continue Reading

சிஏபி சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி?

குடியுரிமை சட்ட திருத்தத்தை வரவேற்று ரஜினி பேசியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரஜினிகாந்த் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சிஏபி-க்கு ரஜினி ஆதரவு! நாட்டின் பாதுகாப்பிற்காக சில கடினமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை வரவேற்கிறேன். நாட்டு மக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. – […]

Continue Reading

எம்ஜிஆர் அடித்தபோது காப்பாற்றியவர் கருணாநிதி: ரஜினி பெயரில் போலி செய்தி!

“எம்.ஜி.ஆர் என்னை கட்டி வைத்து அடித்தபோது காப்பாற்றியவர் கருணாநிதி” என்று ரஜினிகாந்த் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை நியூஸ் கார்டுடன் ஒரு சினிமா காட்சியை சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “எம்.ஜி.ஆர் என்னை கட்டிவைத்து அடித்தபோது காப்பாற்றியவர் கருணாநிதி – ரஜினிகாந்த்” என்று இருந்தது. சினிமா காட்சிப் பகுதியில், “கருணாநிதி உன்னை காப்பாற்றினது […]

Continue Reading

சீமானை விமர்சித்த ஹரி நாடார்: நியூஸ்7 செய்தி உண்மையா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார் விமர்சித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் பழைய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சுயேட்சையாக நின்ற என்னை ஜெயிக்க துப்பில்லை, நடிகர் ரஜினிகாந்த் பற்றி நீங்கள் பேசலாமா? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஹரி நாடார் கேள்வி” […]

Continue Reading

சீமானை விமர்சித்த ரஜினிகாந்த்; பரபரப்பை ஏற்படுத்தும் நியூஸ் கார்டு!

“ராஜீவ் காந்தி மரணம் பற்றி சீமான் பேசியது அபத்தம். மனநிலை சரியில்லாதவர் கூட அப்படி பேசமாட்டார்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. 2019 அக்டோபர் 16ம் தேதி அந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “சீமான் சர்ச்சை – ரஜினி […]

Continue Reading

ரஜினி ஸ்கூல் வாடகை பாக்கி பொய் பிரசாரமா? – வைரல் ஃபேஸ்புக் செய்தி

ரஜினிகாந்த் பள்ளிக்கூட வாடகை பாக்கி என்பது பொய் பிரசாரம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link திரைப்பட தயாரிப்பாளரான கலைஞானத்திற்கு ரூ.45 லட்சத்தில் வீடு ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் வாங்கிக் கொடுத்ததாகக் கூறி, அதுதொடர்பான புகைப்படங்கள் கொலாஜாக பகிரப்பட்டுள்ளன. அவற்றின் மேல், “கலைஞானத்திற்கு 45 லட்சத்தில் வீடு… ஸ்கூல் வாடகை பாக்கி என்று பொய் பிரசாரம் செய்தவர்கள், உங்கள் மனசாட்சியை […]

Continue Reading

சூப்பர் ஸ்டாருடன் இளம் வயதில் நடித்த ஸ்ரீ திவ்யா: ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பும் செய்தி

‘’6 வயதில் சூப்பர் ஸ்டாருடன் நடித்த ஸ்ரீதிவ்யா,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம் ஒரே செய்தியை பல பதிவர்கள் பகிர்ந்துள்ளனர். அவற்றின் இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. Facebook Link1 Archived Link1 Facebook Link2 Archived Link2 Facebook Link3 Archived Link3 Facebook Link4 Archived Link4 இவர்கள் அனைவரும் பகிர்ந்துள்ள செய்தி Cine Café என்ற […]

Continue Reading

“மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகள்!” – ரஜினிகாந்த் பெயரில் பரவும் ஃபேஸ்புக் பதிவு

“மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகள்” என்று ரஜினிகாந்த் கூறியதாக நியூஸ்7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: பிழைக்க வந்த நாயின் பேச்சை பார்….இந்த லூசு பின்னாடியும் ஒரு மதி கெட்ட தமிழ் கூட்டம்…த்த்த்தூதூதூ????? Archived link நியூஸ்7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டில், “மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள்” என்று உள்ளது. அதே படத்தில் மிகச் சிறியதாக, “பிரதமர் மோடிக்கு […]

Continue Reading

பினராயி விஜயன் மானஸ்தன்; ரஜினி மானங்கெட்ட ஜென்மம்: ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை

‘’பினராயி விஜயன் மானஸ்தன், இங்கேயும் சில மானங்கெட்ட ஜென்மங்கள் இருக்கானுங்களே,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இது பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: Archived Link அச்சம் தவிர் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை மே 29ம் தேதி வெளியிட்டுள்ளது. பினராயி விஜயன் புகைப்படத்தையும், ரஜினி நடித்த மன்னன் படக் காட்சிகளையும் இணைத்து, ‘’மோடி பதவியேற்பு விழாவில் பினராயி விஜயன் கலந்துகொள்ளவில்லை, ரஜினி மட்டும் கலந்துகொள்கிறார். மானங்கெட்ட ஜென்மம்,’’ […]

Continue Reading