ராமநாதபுரத்தில் லஞ்சம் கேட்ட டிராஃபிக் போலீஸை புரட்டியெடுத்த குட்டியானை ஓட்டுநர்- உண்மை என்ன?

ராமநாதபுரத்தில் லஞ்சம் கேட்ட டிராஃபிக் போலீஸை புரட்டியெடுத்த குட்டியானை ஓட்டுநர் என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதேபோல, மற்றொரு பதிவில், தன்னை தாக்கிய போலீஸ் அதிகாரியை திருப்பி தாக்கிய டிரைவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு என்றும் மற்றொரு ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது. இவ்விரு பதிவுகளும் ஒரே செய்தி பற்றியவை என்பதால், இவற்றின் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்:…சற்றுமுன் அதிகமாக பகிரவும் ப்ளீஸ்… ராமநாதபுரத்தில் லஞ்சம் […]

Continue Reading

பொறியியல் கல்லூரிகளுக்குத் தடை விதித்த அண்ணா பல்கலைக்கழகம்?– ஒன் இந்தியா செய்தியால் குழப்பம்!

பொறியியல் கலந்தாய்வு தொடங்க உள்ள சூழலில், பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதித்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது என்ற தலைப்பில் வெளியான செய்தி வியப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நம்முடைய ஆய்வை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: மாணவர்களே உஷார்.! பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதித்து அண்ணா பல்கலை அதிரடி.! Archived link 1 Archived link 2 ஒன் இந்தியா தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில், பொறியியல் கல்லூரிகளுக்கு தடைவிதித்த அண்ணா பல்கலைக் கழகம் என்று ஒரு செய்தி […]

Continue Reading

இந்திரா காந்தியின் கையைப் பிடித்து சீண்டிய தேசபக்தர்; நேரு அதிர்ச்சி– ஃபேஸ்புக் வதந்தி!

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு விமானத்திலிருந்து நேருவும், இந்திராகாந்தியும் இறங்கியதாகவும் அப்போது ஒருவன் சிறுமி இந்திராவின் கையைப் பிடித்து இழுத்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link சோனியா காந்தி காலில் சிங் ஒருவர் விழும் படத்தில், “முன்னாள் பிரதமரின் நிலை. உலகத்தில் எந்த ஜீவராசிக்கும் வரக்கூடாது… ஒ.பி.எஸ், இ.பி.எஸ்-ஐ கிண்டல் செய்யும் உபிஸ்… இதுதான் காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங் நிலை” […]

Continue Reading

தந்தி டிவி நிகழ்ச்சியில் திமுக, அமமுக கட்சிகளை விமர்சித்த ராஜேந்திர பாலாஜி!

‘’திமுக, அமமுக கட்சிகளை போட்டு கிழி கிழி,’’ என்ற தலைப்பில், தந்தி டிவி நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதை வீடியோவாக ஃபேஸ்புக்கில் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:அன்னே ராஜேந்திர பாலாஜி அன்னே….இவ்ளோ நாள் எங்க அன்னே இருந்தீங்க….#DMK#AMMKபோட்டு கிழி கிழி…… Archived Link இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காரசாரமாகப் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவர் பேசும் மேடை, […]

Continue Reading

கழுத்தில் சிலுவை டாலருடன் பிரியங்கா காந்தி! –சமூக ஊடகங்களில் பரவும் படம் உண்மையா?

ஒரு படத்தில் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடனும் மற்றொரு படத்தில் கழுத்தில் சிலுவை டாலருடனும் பிரியங்கா காந்தி இருப்பது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link முதல் படத்தில் பிரியங்கா காந்தி, ருத்ராட்ச மாலைகள் அணிந்திருக்கும் படத்தை வைத்துள்ளனர். அடுத்த படத்தில், பிரியங்கா காந்தி, சிலுவை டாலர் உள்ள செயினை அணிந்திருப்பது போன்ற படத்தை வைத்துள்ளனர். மிக மோசமான தடித்த வார்த்தைகளுடன் பதிவு தொடங்குகிறது. பொது […]

Continue Reading

கோட்சே சிலைக்கு மோடி மரியாதை செலுத்தினாரா!

பிரதமர் மோடி, காந்தி சிலைக்கு வணக்கம் செலுத்தாமல் கை கோர்த்தபடி நிற்பது போலவும், கோட்சே சிலைக்கு மட்டும் அஞ்சலி செலுத்துவது போலவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: கோட்சே என்ற தீவிரவாதியின் சிலையை வணங்கும் மோடி ஒரு குற்றவாளியே.. Archived link முதல் படத்தில் காந்தி சிலைக்கு ஜப்பான் பிரதமர் அஞ்சலி செலுத்துகிறார். அவருக்கு அருகில் கை கோத்தபடி பிரதமர் மோடி நிற்கிறார். அந்த படத்தில், […]

Continue Reading

டூரிஸ்ட் கைடாக இருந்தவர் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை அறிவோம்!

‘’ஏன்டா டூரிஸ்ட் கைடா இருந்த ஆளை பிரதமராக்குனா ஊரு சுத்தமா என்னய்யா செய்வான்,’’ என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதில் பிரதமர் மோடியின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link நீதியின் குரல் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை கடந்த மே 15ம் தேதி பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading

மத போதகர்களால் கற்பழிக்கப்படும் பெண்கள் போலீசில் புகார் செய்யக்கூடாது: போப் ஆண்டவர் சொன்னது என்ன?

‘’மத போதகர்களால் கற்பழிக்கப்படும் பெண்கள் காவல்துறையில் புகார் செய்யக்கூடாது,‘’ என்று போப் ஆண்டவர் சொன்னதாகக் கூறி, ஃபேஸ்புக்கில் ஒரு சர்ச்சை பதிவை காண நேரிட்டது. அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link Pragash R Goundar என்பவர் இந்த பதிவை கடந்த மே 14ம் தேதி பகிர்ந்துள்ளார். இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக, ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:முதலில் இந்த பதிவு, இவராகச் சொந்தமாக தயாரித்ததில்லை என […]

Continue Reading

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக நடவு நட்ட வயல்களில் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம்!

தரங்கம்பாடி அருகே நடவு நட்ட வயல்களில் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம் என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுவரை 12 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ள இந்த பதிவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link மே 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவில், பொக்லைன் இயந்திரங்கள் ஒரு நெல்வயலில் இறங்கி, சேதம் செய்யும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதன் மேலே, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக, தரங்கம்பாடி அருகே நடவு நட்ட […]

Continue Reading

ஹெல்மெட் போடாத இருசக்கர வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்கில் நுழைய தடை! – ஃபேஸ்புக் பதிவு உண்மை என்ன?

வருகிற 1ம் தேதி முதல், ஹெல்மெட் போடாத இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கில் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link “இனி ஹெல்மெட் போடாவிட்டால் பெட்ரோல் பங்க்கிற்குள் நுழையவே முடியாது… வரும் 1ம் தேதி முதல் புதிய அதிரடி… குழந்தைகளை கற்பழக்கிறவனை எல்லாம் ஜாமீனில் விட்டுடுங்க ஹெல்மெட் போடாதவனை கரெக்டா பிடிங்க. இந்த ஹெல்மெட் சட்டம் வந்த பிறகுதான் […]

Continue Reading

ஜெயலலிதா பொறுக்கி எடுத்த விஞ்ஞானிகள்: தமிழக அமைச்சர்கள் பற்றிய ஃபேஸ்புக் பதிவு

‘’ஜெயலலிதாவால் பார்த்து பொறுக்கி எடுக்கப்பட்ட தரமான விஞ்ஞானிகள்,’’ என்று கூறி, தமிழக அமைச்சர்களை கேலி செய்து ஒரு ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டிருந்தனர். அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டிருந்த இப்பதிவில் உள்ள உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link மே 7ம் தேதி இந்த பதிவு, வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி அனைவரையும் கிண்டல் செய்து, அவர்கள் பேசியது மற்றும் அவர்கள் சமீபத்தில் செய்தது போன்ற செயல்களையும் சேர்த்து பகிர்ந்துள்ளனர். […]

Continue Reading

இது உண்மையாக இருந்தால் நானும் பாஜகவை எதிர்ப்பேன்: ஃபேஸ்புக் பதிவின் உண்மை விவரம்!

‘’இது உண்மையாக இருந்தால் நானும் பாஜக.,வை எதிர்ப்பேன்,’’ என்று கூறி, ஃபேஸ்புக்கில் ஒருவர், விகடன் செய்தியை மேற்கோள் காட்டி பதிவிட்டிருந்தார். இதனைப் பலரும் ஷேர் செய்திருந்தார்கள். எனவே, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link கடந்த மே மாதம் இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், விகடன் இணையதளத்தில் வெளியான செய்தியை இணைத்து, இதன் மேலே, ‘’இது உண்மையாக இருந்தால், நானும் பாஜக.,வை எதிர்ப்பேன்… எதைச் செய்தாலும், கண் மூடிக்கொண்டு ஆதரிக்கும் […]

Continue Reading

கமல்ஹாசன் பற்றிய வரலாற்று உண்மைகளை சொல்லும் நேரம் வந்துவிட்டது- கௌதமி பேட்டி அளித்தாரா?

“கமல்ஹாசன் பற்றிய வரலாற்று உண்மைகளை சொல்லும் நேரம் வந்துவிட்டது” என்று கௌதமி பேட்டி அளித்துள்ளதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: கமல்ஹாசன் பற்றிய வரலாற்று உண்மைகளை சொல்லும் நேரம் வந்துவிட்டது கௌதமி பேட்டி Archived link “கமல்ஹாசன் பற்றிய வரலாற்று உண்மைகளை சொல்லும் நேரம் வந்துவிட்டது – கௌதமி பேட்டி” என்று நியூஸ் கார்டு வெளியாகி உள்ளது. அந்த நியூஸ் கார்டில் […]

Continue Reading

“தமிழகத்தை அழிக்கும் மத்திய அரசு தேசிய விருதைக் கொடுத்தாலும் வாங்கமாட்டேன்” – விஜய் சேதுபதி சொன்னது உண்மையா?

மத்திய அரசு தேசிய விருது கொடுத்தாலும் அதை வாங்கமாட்டேன் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஆண்பிள்ளை Archived link பிரதமர் மோடி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி படத்தை ஒன்றாக வைத்து, அதன் மேல் பகுதியில், “தமிழகத்தை அழிக்கிற மத்திய அரசின் தேசிய விருதை நிச்சயம் வாங்க மாட்டேன். எனக்கு என் மண், என் தமிழ் மக்கள்தான் முக்கியம்” […]

Continue Reading

ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி பற்றிய பதிவால் சர்ச்சை

‘’திருட்டுக் காவலாளிகள்,’’ என்ற தலைப்பில், ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி பற்றி, விஷமத்தனமாக பதிவிடப்பட்டுள்ள ஒரு ஃபேஸ்புக் பதிவு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அதில், கிடைத்த தகவல்கள் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Stalin Panimayam என்பவர் மேற்கண்ட பதிவை, கடந்த ஏப்ரல் 12ம் தேதி வெளியிட்டுள்ளார். இதில், திருட்டுக் காவலாளிகள் எனக் குறிப்பிட்டு, அதன் கீழே, ஸ்மிருதி இரானி புகைப்படத்தை வைத்து, அவர் 2014ல் பி.காம். படித்ததாகச் சொன்னார் என்றும், 2019ல் பிளஸ் 2 […]

Continue Reading

தமிழக அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர்கள் சேர சட்ட திருத்தம் செய்யப்பட்டதா?

தமிழக அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்கவும், தமிழக அரசுப் பணிகளில் சேரவும் ஓ.பன்னீர்செல்வம் சட்ட திருத்தம் செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: Archived link தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் படங்களை சேர்த்து, பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

காந்தி உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்ட இந்து மகாசபை தலைவர்!

இந்து மகாசபை தலைவர் பூஜா சகுண பாண்டே, காந்தி உருவபொம்மையை துப்பாக்கியால் சுடுவது போல, ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, இந்த பெண் இந்து தீவிரவாதியா அல்லது கிறிஸ்தவரா, இஸ்லாமியரா எனக் கேட்டு, ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவு வெளியிட்டுள்ளார். அது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருவதால், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link மே 15ம் தேதி, Jaffar Ali Melur என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’இந்து மதத்தைச் […]

Continue Reading

பிரதமரை ‘சௌகிதார் சோர் ஹே’ என்ற சிறுமி: வைரல் வீடியோ உண்மையா?

தன்னைப் பார்த்து கை அசைத்த சிறுமியை அழைத்து மேடையில் பிரதமர் மோடி பேச வைத்ததாகவும், அந்த சிறுமி, “சௌகிதார் சோர் ஹே” என்றதாகவும் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link வீடியோவில், மோடி ஒரு சிறுமியை மேடையில் பேசச் செய்கிறார். அந்த சிறுமி, “சௌகிதார் சோர் ஹே” என்று சொல்கிறார். இந்த வீடியோவை Rajamohamad Raja என்பவர் 2019 மே 5ம் […]

Continue Reading

கல் உப்பை வாயில் வைத்தால் ஹார்ட் அட்டாக் சரியாகுமா? – விபரீத ஃபேஸ்புக் பதிவு!

‘’ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். இரண்டு கல் உப்பை நாக்கின் அடியில் அல்லது உதட்டினுள் வைத்து தண்ணீர் அருந்தினால் போதும், சரியாகிவிடும்,’’ என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link நெஞ்சுவலியால் மார்பைப் பிடித்தபடி உள்ள ஒருவர் வரைபடத்தை வெளியிட்டு, அதன் கீழ் “இதய அடைப்பு (ஹார்ட அட்டாக்) ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். உடனடியாக இரண்டு கல் உப்பை எடுத்து […]

Continue Reading

இனி எவனும் நீட்டு காட்டுன்னு வந்தா கொண்டேபுடுவேன்: வைரல் பதிவால் சர்ச்சை

‘’இனி எவனும் நீட்டு காட்டுன்னு வந்தா, வக்காளி கொண்டேபுடுபேன்,’’ என எழுத்துப்பிழைகளுடன் கூடிய ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்து, அதன் முடிவுகளை இங்கே தொகுத்துள்ளோம். தகவலின் விவரம்: Archived Link தீ தமிழன் என்பவர் கடந்த மே மாதம் 3ம் தேதியன்று, இப்பதிவை பகிர்ந்துள்ளார். இதில், அர்விந்த் கெஜ்ரிவால், டெல்லியில் படிக்கும் தமிழ் மாணவர்கள் பற்றி பேசியதாக ஒரு செய்தியையும், ராஜ்கிரண் புகைப்படத்தையும் வைத்து பதிவிட்டுள்ளனர். அதில், ‘’உங்க […]

Continue Reading

நித்யானந்தா தலைமையில் ஆசிரமங்கள் அமைக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதா?

‘’மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நித்யானந்தா தலைமையில் ஆசிரமங்கள் அமைக்கப்படும்…!,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதன் விவரம் இதோ… தகவலின் விவரம்: Archived Link மக்கள் உரிமை குரல் என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை, ஏப்ரல் 8ம் தேதி வெளியிட்டுள்ளது. நித்யானந்தாவும், எச்.ராஜாவும் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’வெளியானது 2019 நாடாளுமன்ற தேர்தலின் […]

Continue Reading

“என் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கமல்” – கௌதமி சொன்னது உண்மையா?

‘’என் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால்தான் நடிகர் கமலை விட்டு பிரிந்தேன்,’’ என்று நடிகை கௌதமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: #பொம்பளபொருக்கிகமல் Twitter trend Archived link நடிகர் கமல், நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமியுடன் இருக்கும் புகைப்படமும், நடிகை கௌதமியுடன் சுப்புலட்சுமி இருக்கும் படத்தையும் இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. அந்த படத்தில், “என் மகளை கமல் பாலியல் பலாத்காரம் செய்ய […]

Continue Reading

பாகிஸ்தான் பிரதமரின் ஆசி பெற்ற வேட்பாளர் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை என்ன?

‘’பாகிஸ்தான் பிரதமரின் ஆசி பெற்ற வேட்பாளர் மோடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link I Support Thirumurugan Gandhi என்ற ஃபேஸ்புக் குழு கடந்த ஏப்ரல் 10ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பிரதமர் மோடியின் புகைப்படத்தையும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பற்றி நியூஸ் 7 தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன்கீழே, பாகிஸ்தான் […]

Continue Reading

“தோனியிடம் மன்னிப்பு கேட்ட சச்சின்!” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

“ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் தோனிக்கு ரன் அவுட் அளித்தது சரியில்லை. அதனால், அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: https://www.facebook.com/groups/489428884557185/permalink/1303489323151133/ Archived link சச்சின் படத்துடன் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்த நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மும்பை அணியின் மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கர், ‘தோனியின் ரன்-அவுட்தான் மும்பை […]

Continue Reading

கல்ராஜ் மிஸ்ரா இன்னமும் மத்திய அமைச்சர் பதவியில் உள்ளார்: தி இந்து தமிழ் திசைக்கு வந்த குழப்பம்

‘’மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா,’’ என்று கூறி ஒரு செய்தியை தி இந்து தமிழ் திசை இணையதளம் வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை, தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் இந்து தமிழ் திசை பகிர்ந்துள்ளது. கல்ராஜ் மிஸ்ரா இன்னமும் மத்திய அமைச்சர் பதவியில் தொடர்கிறாரா என்ற கோணத்தில் இதுபற்றி நாம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: குடிமக்கள் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக பாஜக உறுதி அளிக்கவில்லை: மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா மறுப்பு Archived […]

Continue Reading

பா.ஜ.க ஆதரவாளர்களிடம் மட்டும் ரூ. 40 லட்சம் கோடி கருப்பு பணம்: விக்கிலீக்ஸ் வெளியிட்டதாகப் பரவும் வதந்தி!

இந்தியாவில் இருந்து வெளிநாட்டு வங்கிகளில் ரூ.72 லட்சம் கோடி கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ரூ.40 லட்சம் கோடி பாஜ.க ஆதரவு பெற்ற தொழிலதிபர்களிடம் இருப்பதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியானதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவல் அறிவோம்: Archived link விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அறிவிப்பு வெளியிடுவது போன்ற படத்தில், “இந்தியாவில் இருந்து பதுக்கப்பட்ட கருப்பு பணம் எழுபத்தி இரண்டு லட்சம் கோடி. அதில் […]

Continue Reading

கோவை குடிநீர் கோவிந்தா: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

‘’கோவை குடிநீர் கோவிந்தா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை, காண நேரிட்டது. இதனைப் பலரும் வைரலாக ஷேர் செய்து வருவதால், இதன் உண்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: கோவை குடிநீர் கோவிந்தா….!!! கோவையை வச்சு செய்ய கங்கனம் கட்டிவிட்டார்கள் காவி கார்பரேட் கூட்டம்… இனி திராவிட தேசிய கட்சிகளை நம்பி வாக்களித்தால்…சர்வநாசம் நிச்சயம்…. Archived Link கடந்த மார்ச் 26ம் தேதியன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒரு வீடியோ […]

Continue Reading

தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கியால் சுடும்போது குறுக்கே போனதால் 13 பேர் இறந்தனர்! – அன்புமணி கூறியதாக பரவும் வதந்தி

தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கியால் சுடும்போது குறுக்கே போனதால் 13 பேர் இறந்ததாக பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் ஆகி உள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஸ்டெர்லைட் சம்பவம் Archived link நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மேல், “போலீசார் துப்பாக்கியால் சுடும்போது குறுக்கே போனதால் 13 பேர் இறந்தனர் – அன்புமணி” என்று உள்ளது. படத்துக்கு கீழே, “கேவலம் பதவிக்காகவும் […]

Continue Reading

எல்லோரா கைலாசநாதர் கோயில் தமிழனின் கட்டிடக்கலையா?

ஃபேஸ்புக்கில், தமிழனின் கட்டிடக்கலையின் அழகு என்று கூறி ஒரு புகைப்படம் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தமிழனின் கட்டிட கலையின் அழகை பிடித்தவர்கள் #ஷேர்பண்ணுங்க…. Archived link தமிழனின் கட்டிடக்கலையின் அழகைப் பிடித்தவர்கள் ஷேர் செய்யுங்கள் என்று கூறி மலையை குடைந்து உருவாக்கப்பட்ட அழகிய கோவிலின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. கோவிலின் பெயர், எங்கே உள்ளது என்று எந்த ஒரு தகவலும் இந்த பதிவில் இல்லை. கீர்த்தி சூரேஷ் என்ற நபர் […]

Continue Reading

இஸ்ரேலின் இன்னொரு கொடூர முகம்தான் ஐஎஸ்ஐஎஸ்: ஃபேஸ்புக் தகவலின் உண்மை என்ன?

‘’ஐஎஸ் தீவிரவாதிகளை வளர்த்துவிடுவதே இஸ்ரேல் நாடுதான்,’’ என்கிற ரீதியில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் அடிப்படையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதன் விவரம் இதோ… தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட பதிவில், ஐஎஸ் தீவிரவாதிகளை வளர்த்துவிட்டு, உலகம் முழுக்க இஸ்லாம் என்றால் அது பயங்கரவாதம்தான் என பரப்புரை செய்து, இஸ்லாம் மதத்தை […]

Continue Reading

வாக்குப் பதிவு இயந்திரம் உத்திரமேரூரில் உடைக்கப்பட்டதா?

‘’உத்திரமேரூரில் வாக்கு எந்திரத்தின் சீல் உடைக்கப்பட்டது,’’ என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. அதன் உண்மைத்தன்மை பற்றி நாம் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு, ஏப்ரல் 20ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். ஆம் நாங்கள் சமூக விரோதிகள் என்ற பெயரிலான ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. உண்மை அறிவோம்:இந்த பதிவில், வாக்கு இயந்திரங்களை சிலர் சரிபார்ப்பதுபோன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் […]

Continue Reading

ஜப்பான் ரயில் நிலையத்தில் தமிழ் மொழியில் அறிவிப்பு உண்மையா?

ஜப்பான் ரயில் நிலையம் ஒன்றில், தமிழ் மொழியில் அறிவிப்பு செய்யப்படுவதாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தமிழ் நம் அடையாளம் ?? #அதிகம்_பகிரவும் Archived link வழிகாட்டி அறிவிப்பு பலகை ஒன்றில், ஜப்பான் மற்றும் தமிழ் மொழியில் அறிவிப்பு வைத்திருப்பது போல உள்ளது. தமிழில் உள்ள அறிவிப்பில் ‘படிக்கட்டில் வலது பக்கமாக செல்லவும்’ என்று உள்ளது. Shin-Okubo என்று ஆங்கிலத்திலும் உள்ளது. இந்த படத்தில், “ஜப்பான் […]

Continue Reading

20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது: சர்க்காரியா கமிஷனிடம் கருணாநிதி இப்படி சொன்னாரா?

‘’20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது,’’ என்று கருணாநிதி, சர்க்காரியா கமிஷன் முன்பு, சாட்சியம் அளித்ததாகக் கூறி, ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: #ஊழலின் பிதாமகன்… கட்டுமரம் Archived Link ஏப்ரல் 6ம் தேதி Mohan Raj என்பவர் இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளார். இதனை உண்மை என நம்பி, ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்த பதிவை பார்க்கும்போதே இது […]

Continue Reading

இஸ்லாமியர் தெருவிற்குள் நுழைந்ததால் இந்து சன்னியாசி தாக்கப்பட்டாரா?

இஸ்லாமியர்கள் வசிக்கும் தெருவில் சென்ற இந்து சன்னியாசி ஒருவர் தாக்கப்பட்டதாக ஒரு ஃபேஸ்புக் பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: முஸ்லிம் தெருவில் இந்து சாமியார்கள் நுழையக்கூடாதா..??? #இது_இந்தியாவா,,,, இல்லை #பாகிஸ்தானா..??? Archived link உடல் முழுக்க விபூதி பூசியது போன்று உள்ள ஒருவரை சிலர் சுற்றி நின்று தாக்குகின்றனர். அந்த நபர் கையெடுத்துக் கும்பிடும் படமும் உள்ளது. படத்தின் மேல், “ஒரு இஸ்லாமியனின் மதவெறி. ஹிந்து […]

Continue Reading

மோடி கோரிக்கையை ஏற்று சவூதி அரசு 850 கைதிகளை விடுதலை செய்யவில்லை: ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை

‘’மோடியின் கோரிக்கையை ஏற்று சவூதி அரசு 850 கைதிகளை விடுதலை செய்யவில்லை. சவூதியில் ரமலான் மாதத்தை முன்னிட்டு பொது மன்னிப்பாக அவர்களை விடுதலை செய்துள்ளனர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ரமளான் மாத பொது மன்னிப்பாக சௌதி அரேபிய அரசு சிறைக் கைதிகளை ஆண்டு தோறும் விடுதலை செய்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 850 இந்தியர்களையும் விடுதலை செய்துள்ளது. அதை தனது […]

Continue Reading

நீதிமன்றமே சொன்னாலும் 8 வழிச்சாலை அமைப்போம்: பொன்.ராதாகிருஷ்ணன் பற்றிய செய்தி உண்மையா?

நீதிமன்றமே சொன்னாலும் சேலம் 8 வழிச் சாலை அமைப்பது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் படத்துடன், “நீதிமன்றமே சொன்னாலும் 8 வழிச் சாலை வருவது உறுதி” என்று உள்ளது. பார்க்க, தனியார் செய்தித் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு போல உள்ளது. இதன் “கீழே, […]

Continue Reading

அர்விந்த் கெஜ்ரிவால் பேசியதற்கும், தமிழ்நாடு வேலை தமிழருக்கே என்பதற்கும் என்ன தொடர்பு?

‘’தமிழ்நாடு வேலை தமிழருக்கே போராட்டம் விளைவு,’’ என்று கூறி ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: #தமிழ் பிரிவினை போராட்டம் விளைவு…!#அனைத்து மாநிலங்களிலும் #மொழி #பிரிவினை பேச #ஆரம்பித்தால் நிலைமை நினைத்து பாருங்கள்..? மே 4ம் தேதி பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், கெஜ்ரிவால் பற்றி நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியை இணைத்து, ‘’தமிழ் பிரிவினை போராட்டம் விளைவு, அனைத்து மாநிலங்களிலும் மொழி பிரிவினை பேச ஆரம்பித்தால் நிலைமை […]

Continue Reading

சிதம்பரத்தில் திமுக வன்னியர்கள் எனக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று திருமாவளவன் சொன்னாரா?

‘’சிதம்பரத்தில் திமுக வன்னியர்களின் ஓட்டு எனக்குத் தேவையில்லை என்று திருமாவளவன் பேசியதால் பரபரப்பு,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதன் விவரம் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்:வன்னியர்கள் ஓட்டு எனக்கு தேவையில்லை திருமாவளவன் திட்டவட்டம்.பிரச்சாரம் செய்ய ஊருக்குள் அனுமதிக்காததால் திருமாவளவன் ஆத்திரம். Archived Link ஏப்ரல் 11ம் தேதியன்று, இந்த பதிவை கோபிநாத் தமிழன் என்பவர் பகிர்ந்துள்ளார். இதில், திருமாவளவனின் புகைப்படத்தை பகிர்ந்து,’’வன்னியர்கள் ஜாதி […]

Continue Reading

சைமன் என்று வேட்புமனுவில் குறிப்பிட்ட சீமான்?- பரவும் போலி வேட்பு மனு

2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சீமான், தன்னுடைய வேட்பு மனுவில் சைமன் என்னும் சீமான் என்று குறிப்பிட்டதாக ஒரு வேட்பு மனுவின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நாம் தமிழர் சீமான். வேட்புமனுவில் தன் உண்மையான பெயர் சைமன் என்றும் தன் தந்தை பெயர் செபாஸ்டியன் என்றும் குறிப்பிட்ட பத்திரம் போட்டோ. Archived link நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2016 சட்டமன்ற […]

Continue Reading

அமிதாப் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.50 ஆயிரம் பென்ஷன் அறிவித்தாரா யோகி ஆதித்யநாத்?

அமிதாப் பச்சன், அவர் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், அவர் மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோருக்கு உ.பி பா.ஜ.க அரசு தலா ரூ.50 ஆயிரம் பென்ஷன் வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: BJP-யின் ஆட்சி ஒரு மானங்கெட்ட ஆட்சி என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு ! Archived link அமிதாப்பச்சன், ஜெயாபச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் […]

Continue Reading

அன்புமணி ராமதாஸ் மீது 12 குற்ற வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுவது உண்மையா?

‘’இந்தியா முழுவதும் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் குற்ற வழக்குகள் அதிகம் உள்ள வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. ஆதாரத்திற்கு, தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டையும் சேர்த்து பகிர்ந்துள்ளதால், இந்த பதிவில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Hemanathan Murugesan என்பவர் திமுக இணையதள அணி என்ற ஃபேஸ்புக் குழுவில் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், தந்தி டிவி […]

Continue Reading

அம்மா அனுப்பும் பணத்தில் மோடி உல்லாச வாழ்வு வாழ்கிறாரா?

அம்மா அனுப்பும் பணத்தில் மோடி உல்லாச வாழ்வு வாழ்வதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்துள்ளோம். தகவலின் விவரம்: தரமான வடை ஜி ??? Archived Link இந்த பதிவை ஏப்ரல் 24ம் தேதியன்று, அரசியல் உண்மைகள் 2.0 என்ற ஃபேஸ்புக் ஐடி வெளியிட்டுள்ளது. இதில், நியூஸ் 7 தொலைக்காட்சி பெயரில் வெளியான நியூஸ் கார்டை வைத்து, அதன் கீழே பதிவரின் […]

Continue Reading

கேரள பள்ளிகள் அனைத்தும் தமிழில் தகவல் தொழில்நுட்ப பாடம் நடத்த பினராயி விஜயன் உத்தரவிட்டாரா?

கேரளாவில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழில் தகவல் தொழில்நுட்ப புத்தகங்களை வெளியிடவும், தமிழ் படிக்கும் மாணவர்களுக்கக சிறப்பு தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம் Archived link கேரள முதல்வர் பினராயி விஜயன் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே,” கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் […]

Continue Reading

கூடங்குளம் அணு உலையில் சரி செய்ய முடியாத அளவுக்கு பிரச்னை உள்ளதா?

‘’கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்று அப்துல் கலாம் உரையாற்றினார். அவர் இறந்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இன்று மத்திய அரசு அணு உலையில் சரி செய்ய முடியாத தொழில்நுட்ப பிரச்னைகள் இருக்கிறது,’’ என்ற தலைப்பில் ஒரு பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link ‘’கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து மக்கள் போராடினார்கள். மத்திய மாநில அரசுகள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் மக்கள் போராட்டத்தில் […]

Continue Reading

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாததற்கு மாநில அரசுகள் காரணமா?

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாததற்கு, மாநில அரசுகள்தான் காரணம், என்ற தலைப்பில் தினமலர் வெளியிட்ட வீடியோ, வைரலாகப் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:ஏன்�பெட்ரோல் டீசல் ஜி.எஸ்.டி.யில் வரவில்லை? | Petrol | Diesel price | GST #gst #petrol #diesel Archived Link ஏப்ரல் 4ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி மற்றும் பெட்ரோல், டீசல் விலை போன்ற வார்த்தைகள் இருப்பதன் காரணமாக, பலரும் […]

Continue Reading

மூளைச்சாவு என்பது ஏமாற்று வேலையா?

“மூளைச்சாவு பித்தலாட்டத்தின் உச்சம்! மூளை இறக்குமா? இந்த பதிவு விழிப்புணர்வுக்கானது” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதில், மூளைச்சாவு என்பது மக்களை ஏமாற்றும் மோசடி என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மூளைச்சாவு – பித்தலாட்டத்தின் உச்சம் ! https://www.facebook.com/groups/638741463130558/permalink/904744589863576/ Archived link மூளைச்சாவு என்ற பெயரில் உடல் உறுப்புக்கள் கொள்ளை  அடிக்கப்படுகின்றன என்று மிகப்பெரிய கட்டுரை வடிவில் பதிவு உள்ளது. இதில், முக்கிய […]

Continue Reading

சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ராகுல் காந்தி பற்றி பரவும் புகைப்படம் உண்மையா?

சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ராகுல் காந்தி பற்றி ஃபேஸ்புக்கில் வைரலாகப் பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: படத்தில் போலீஸ் தூக்கி கொண்டு வருவது சிவராஜ்சிங் சௌகான், பாஜக தலைவர்,.. மற்றொரு படம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி… Archived Link இந்த பதிவில், வெள்ள நீரில் சிவராஜ் சிங் சவுகானை போலீசார் தூக்கிக் கொண்டு வருவது போலவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் […]

Continue Reading

திருச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தி.க உறுப்பினர் – வேகமாகப் பரவும் தகவல் உண்மையா?

திருச்சியில் 6 வயது சிறுமியைக் கற்பழித்த பாலியல் வழக்கில் தலைமறைவான தி.க உறுப்பினரை போலீசார் பிடிக்கும் வரை ஷேர் செய்யுங்கள், என்று ஒரு பதிவு வேகமாக ஷேர் செய்யப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link பெரியார் சிலை அருகே நிற்கும் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், மேலே திருச்சியில் 6 வயது சிறுமி கற்பழிப்பு பாலியல் வழக்கில் தலைமறைவான தி.க உறுப்பினர் இவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் கீழ் பகுதியில், போலீசார் […]

Continue Reading

ஒடிசாவை பானி புயல் தாக்கியதற்கு எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின் கூறியது உண்மையா?

‘’ஒடிசாவில் பானி புயல் தாக்கியதற்கு காரணமான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதைப் போன்ற ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரம் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. வதந்தியின் விவரம்:…ஒடிசாவில் பானி புயல் தாக்குதல் காரணமாண தமிழக முதல்வர் எடிபாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்… Archived Link மே 5ம் தேதியன்று இந்த பதிவை தர்மபுரி […]

Continue Reading

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடினால் கைது செய்யக்கூடாது – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையா?

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடினால் கைது செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தீர்ப்புக்கு நன்றிங்க அய்யா.. Archived link டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் யாரையும் கைது செய்யக் கூடாது என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு என்று இதில் கூறப்பட்டுள்ளது. இதன் கீழ் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் […]

Continue Reading