மத்திய அரசு ராமாயண தபால் தலையை 2020 ஜூலையில் வெளியிட்டதா?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ள நிலையில் 2020 ஜூலை 25ம் தேதி ராமாயண காட்சிகள் தபால் தலையை வெளியிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராமாயண காட்சிகள் ஸ்டாம் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இன்று மத்திய அரசால் வெளியிடப்பட்ட புனித நூல் ராமாயண ஸ்டாம்ப்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Kumar Kumar […]

Continue Reading

நவோதயா பள்ளிகளை திறக்கும்படி தமிழக அரசுக்கு தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதா?

‘’நவோதயா பள்ளிகளை திறக்கும்படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:   Facebook Claim Link Archived Link  ஜூலை 30, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவில், ‘’மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் துவங்க நீதிமன்றம் அனுமதி, ஜெய் மோடி சர்க்கார்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக […]

Continue Reading

மீத்தேன் திட்டத்தை தொடங்கியது திமுக.,தான் என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாரா?

‘’மீத்தேன் திட்டம் தொடர்பாக திமுக மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு,’’ என்று கூறி பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:மேற்குறிப்பிட்ட செய்தியை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் யாரேனும் தகவல் பகிர்ந்துள்ளனரா என்று விவரம் தேடினோம். அப்போது, நிறைய பேர் இந்த தகவலை கடந்த 2019ம் ஆண்டு முதலாக ஷேர் செய்யும் விவரம் தெரியவந்தது. Facebook Claim […]

Continue Reading

130 ஆண்டுக்கு முந்தைய நாகர்கோவில்- திருவனந்தபுரம் சாலையின் புகைப்படம் இதுவா?

1891ம் ஆண்டு எடுக்கப்பட்ட நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையின் தோற்றம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஃபேஸ்புக்கில் Ebron JSabin என்பவர் 2020 ஜூலை 27ம் தேதி ஒரு பதிவை ஷேர் செய்திருந்தார். உண்மையில் அந்த பதிவு 2019ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி KK BOYS என்ற ஐடி கொண்ட நபரால் பதிவிடப்பட்டு இருந்தது. அந்த […]

Continue Reading

இ-பாஸ் விவகாரம்; மன்னிப்பு கேட்டாரா ரஜினிகாந்த்?- இன்ஸ்டாகிராம் விஷமம்

இ-பாஸ் இன்றி சென்றதற்காக உங்க வீட்டுப் பிள்ளையாக நினைத்து மன்னிச்சிருங்க என்று ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டது போன்று ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Instagram Link Archived Link ரஜினியின் ட்விட் பதிவு ஒன்று ஷேர் செய்யப்பட்டுள்ளது. அதில், “நான் E-Pass இல்லாம பண்ணை வீட்டுக்கு போனதை எல்லோரும் உங்க வீட்டு பிள்ளையா நினச்சு மன்னிச்சிருங்க” என உள்ளது. அதை வைத்து மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல் விலை குறைவாக விற்க காரணம் என்ன?

‘’இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல் விலை குறைவு,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல் விலை குறைவு என்றும், இந்தியாவில் இருந்துதான் இலங்கை பெட்ரோல் இறக்குமதி செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்கின்றனர். உண்மை அறிவோம்:முதலில் ஒரு விசயம், வெளிநாட்டில் விற்பனை செய்யப்படும் பொருளை […]

Continue Reading

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் போடவில்லையா?

‘’கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, பொள்ளாச்சி சம்பவத்தில் சிக்கியவர்கள் மீது வழக்குப் போடவில்லை,’’ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு உடன் சினிமா காட்சியை சேர்த்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நியூஸ் கார்டு பகுதியில், “கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் […]

Continue Reading

சத்யராஜ் மகள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவா?

‘’பகுத்தறிவு பேசும் சத்யராஜின் மகள் திருமணம் பிராமணர் மந்திரம் ஓத நடந்தது,’’ என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link திருமணம் ஒன்றின் படங்கள் கொலாஜ் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது. அதின் மீது, “பெரியார் மண்ணு, தேங்காய் பண்ணு என்று வீரவசனம் பேசுற பகுத்தறிவு பகலவன் சத்யராஜ், தன் மகள் திருமணத்தை பிராமணர் தாலி மந்திரம் ஓத நடத்திய அற்புத தருணம். பகுத்தறிவு […]

Continue Reading

காவி உடுத்தி பூணூல் அணிந்து வந்த பாதிரியார்! – ஃபேஸ்புக் வதந்தி

பாதிரியார் ஒருவர் காவி உடை உடுத்தி, பூணூல் அணிந்து மதமாற்ற நடவடிக்கையில் இறங்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 காவி உடுத்தி பூணூல் அணிந்த ஒருவர் மைக் பிடித்து பேசுகிறார். அருகில் கிறிஸ்தவ பாதிரியார் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். படத்தின் மீது “காவி உடுத்தி பூணூல் அணிந்த பாதிரியார். […]

Continue Reading

FactCheck: ராமர் கோயில் கட்டும் இடத்தில் டைம் கேப்சூல் பதிக்கப்படுகிறதா?

‘’ராமர் கோயில் கட்டும் இடத்தில் டைம் கேப்சூல் பதிக்கப்படுகிறது,’’ என்று கூறி பரவி வரும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஜூலை 28, 2020 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ எதிர்கால சந்ததிக்காக..!! அயோத்தி ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’ 👌👌,’’ என்று எழுதியுள்ளனர். இது உண்மை என நம்பி […]

Continue Reading

பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் நடிகர்கள் கார்த்தி, சூர்யாவை மிரட்டினாரா?

‘’பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் நடிகர்கள் கார்த்தி, சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 இதில், புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றையும், நடிகர்கள் கார்த்தி, சூர்யா நாட்டை விட்டே ஓட நேரிடும் என்று கூறி கல்யாணராமன் பெயரில் வெளியான ட்விட்டர் பதிவு ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். இதனை […]

Continue Reading

இந்த இடம் இந்தியாவில் இல்லை; எங்கே உள்ளது தெரியுமா?

‘’இந்த இடம் இந்தியாவில் உள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, ‘’ஸ்மார்ட் சிட்டியும் வேண்டாம், டிஜிட்டல் இந்தியாவும் வேண்டாம், இந்த இயற்கை அழகு வேண்டுமென நினைப்பவர்கள் ஷேர் பன்னுங்க,’’ என்று எழுதியுள்ளனர். இதனை உண்மை என நம்பி, ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

சபரிமலை ஐயப்பன் மாலை போட்டு ஏமாற்றும் கிறிஸ்தவர்கள்? முழு விவரம் இதோ!

சபரிமலை யாத்திரிகர்கள் போல ஐயப்பன் மாலை போட்டு கிறிஸ்தவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஐயப்ப பக்தர்கள் முழங்கால் படியிட்டு வழிபாடு நடத்தும் புகைப்படம் மற்றும் அவர்களுடன் பாதிரியார் ஒருவர் பேசும் படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “இவர்கள் எல்லாம் சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு. இதுகள் எல்லாம் […]

Continue Reading

இஸ்லாமிய புனித பயணத்திற்கு மகளை வழியனுப்பினாரா சுப்பிரமணியன் சாமி?

இஸ்லாமிய புனித பயணம் செல்லும் தன்னுடைய மகளை வழியனுப்ப வந்த சுப்பிரமணியன் சுவாமி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமிய பெண்களுடன் சுப்பிரமணியன் சுவாமி இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த படத்தின் மீது “வெச்சான் பாருங்க ட்விஸ்ட். உம்ராவுக்கு போகும் தன் மகளை வழியனுப்ப வந்த சுப்பிரமணிய சுவாமி” என எழுதப்பட்டுள்ளது. இந்த பதிவை அ.இல.சிந்தா என்பவர் […]

Continue Reading

இந்தோனேசியாவில் உள்ள இந்த நுழைவாயிலை ராஜ ராஜ சோழன் கட்டினாரா?

‘’இந்தோனேசியாவில் உள்ள இந்த நுழைவாயிலை ராஜ ராஜ சோழன் கட்டினார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 இந்த புகைப்படம் கடந்த சில ஆண்டுகளாகவே, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் […]

Continue Reading

ரஜினிக்குப் பயந்து மு.க.ஸ்டாலின் வணக்கம் வைத்ததாக பரவும் வதந்தி…

‘’ரஜினிகாந்துக்கு பயந்து வணக்கம் வைத்த மு.க.ஸ்டாலின்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ரஜினிகாந்தின் புகைப்படத்தை பார்த்து, மு.க.ஸ்டாலின் வணங்குகிறார் என்பதைப் போல தகவல் இடம்பெற்றுள்ளது. இது பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், இதில் உள்ள கமெண்ட்களை பார்க்கும்போது, ‘’ரஜினியை பார்த்து ஸ்டாலின் பயந்துவிட்டார்; ஸ்டாலின் ஒரு மக்கு,’’ என்பன போன்ற கருத்துகள் […]

Continue Reading

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவியேற்கிறாரா எல்.கணேசன்?- ஃபேஸ்புக் வதந்தி

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவியேற்கும் இல.கணேசனுக்கு வாழ்த்துக்கள் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பதவியேற்கும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு இல.கணேசன் ஜி அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை  […]

Continue Reading

அப்காசியாவின் உலகின் மிக ஆழமான குகையில் சிவலிங்கம் இருந்ததா?

மத்திய தரைக்கடல் பகுதியில் ஜார்ஜியா அருகே உள்ள அப்காசியாவில் உள்ள உலகின் மிகவும் ஆழமான குகையில் சிவலிங்கம் இருந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link லிங்கத்தின் மீது முகம் இருப்பது போன்ற சிவலிங்கம், பாம்பு வாயில் இருந்து சிவலிங்கத்தின் மீது தண்ணீர் கொட்டுவது, மிக ஆழமான குகைகளின் படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “எங்கும் ஷிவமயம்..! இந்த பூமியில் […]

Continue Reading

பெரியார் சிலை அவமதிப்பைக் கண்டு கதறி அழுத வைகோ! – விஷம வீடியோ

பெரியார் சிலை அவமதிப்பைக் கண்டு ம.தி.மு.க பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்ணீர்விட்டு அழுதார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அழும் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “பெரியார் சிலை அவமதிப்பை கண்டு கண்ணீர் விட்டு அழுதார் வைகோ.. பெரியார் சிலை அவமதிப்பை கண்டு கண்ணீர் விட்டு அழுதார் வைகோ.. கடவுள் […]

Continue Reading

பெரியார் சிலை என நினைத்து வள்ளுவர் சிலைக்கு சாயம் பூசப்பட்டதா?

பெரியார் சிலை என நினைத்து வள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்ட படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “பெரியார் சிலை என நினைத்து… வள்ளுவர் சிலைக்கு சாயம் பூசிய சங்கிகள். கருத்துதான் குருடு என்றால் கண்ணுமாடா குருடு. தமிழகரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

திமுகவிடம் பணம் வாங்கியதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஒப்புக் கொண்டாரா?

‘’திமுகவிடம் பணம் வாங்கியதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஒப்புக் கொண்டார்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், கலவர காட்சி ஒன்றை இணைத்து, அதன் கீழே சு.வெங்கடேசன் எம்பியின் புகைப்படத்தையும் வைத்துள்ளனர். அதன் அருகில், ‘’மதுரை கம்யுனிஸ்ட் வேதனை. திமுகவிடம் ரூ.25 கோடி வாங்கியதால் எங்களை பிச்சைக்காரர்கள் என அழைப்பதை ஏற்க முடியாது – […]

Continue Reading

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ பற்றி பரவும் போலி நியூஸ் கார்டு!

‘’தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, எச்.ராஜாவுக்கு ஆதரவாகப் பேசினார்,’’ என்று கூறி பகிரப்படும் நியூஸ் கார்டின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், அமைச்சர் கடம்பூர் ராஜூ பற்றி புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டதைப் போன்ற நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’எச்.ராஜாவை தவிர எந்த மதத்தை யார் புண்படுத்தினாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது – அமைச்சர் கடம்பூர் ராஜூ,’’ என்று […]

Continue Reading

உல்லாச விடுதியில் காயத்ரி ரகுராம் சிக்கியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டதா?

பிரபல நடிகை காயத்ரி ரகுராம் பாலியல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகை காயத்ரி ரகுராம் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது.  இந்த பதிவை E Prabavalavan என்பவர் 2020 ஜூலை 21ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

ஷூ பாலிஷ் செய்யும் சிறுவன் அரசு பொதுத் தேர்வில் 93% மதிப்பெண் பெற்றது உண்மையா?

அரசு பொதுத் தேர்வில் ஷூ பாலிஷ் செய்யும் சிறுவன் ஒருவன் 500க்கு 465 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் படம் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் பற்றி ஆய்வு நடத்தினோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ‘ஷூ பாலிஷ் செய்யும் சிறுவன் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பகலில் 12 மணி நேர மக்களின் அழுக்கான ஷூக்களை பாலிஷ் செய்த #C _ ravidas.. இரவில் படித்தது, 465 of 500 […]

Continue Reading

ட்ரோன் சாதனையாளர் எனக் கூறப்படும் பிரதாப் பற்றிய சில உண்மைகள்!

‘’ட்ரோன் சாதனையாளர் பிரதாப்,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் நாள்தோறும் பகிரப்படும் தகவல்கள் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதுதொடர்பான செய்தி லிங்கை கீழே இணைத்துள்ளோம்.  News Link Archived Link இந்த செய்தியில், ‘’கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் பிரதாப், டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை ரிமோட் மூலம் இயக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர். இவரது தயாரிப்புகள் உலக அளவில் வரவேற்கப்படுகின்றன. இவரின் திறமையை அங்கீகரித்து, விருது […]

Continue Reading

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று தி.மு.க மனு கொடுத்ததா?

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று தி.மு.க மனு கொடுத்ததாக ஒரு பதிவு வாட்ஸ்அப்-ல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களிலும் அதை சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று நம்முடைய வாசகர் கேட்டதன் அடிப்படையில் ஆய்வு நடத்தினோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 avatarnews.in Archived link 2 தி.மு.க எம்.பி கனிமொழி படத்துடன் செய்தி இணைப்பு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் லெட்டர் பேடு ஒன்றும் உள்ளது. பார்க்கும்போது தி.மு.க […]

Continue Reading

மெசேஜ் ஃபார்வேர்ட் செய்தால் வாட்ஸ்ஆப் எதுவும் பணம் தருகிறதா?

‘’இந்த மெசேஜை ஃபார்வேர்ட் செய்தால் வாட்ஸ்ஆப் பணம் தருகிறது,’’ என்று கூறி பகிரப்பட்ட தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  இதனை நமது வாசகர் ஒருவர், வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி வைத்து, நம்பகத்தன்மை பற்றி தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், வீடியோவை முதலில் பார்வையிட்டோம். அப்போது, வீடியோவில் ஒரு சிறுவன் காயங்களுடன் மருத்துவமனையில் படுத்திருப்பது போன்ற காட்சியை இணைத்து, பின்னணியில், ‘’இந்த சிறுவன் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவன். விபத்து ஒன்றில் […]

Continue Reading

மூன்று நிமிடத்திற்கு மேல் காத்திருந்தால் சுங்கச் சாவடி கட்டணம் கிடையாதா?

‘’3 நிமிடத்திற்கு மேல் காத்திருந்தால் சுங்கச்சாவடி கட்டணம் கிடையாது,’’ என்று கூறி கடந்த சில ஆண்டுகளாகவே பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் பகிரப்பட்ட பதிவை மெமரீஸ் முறையில் ஜூலை 19, 2020 அன்று மறுபகிர்வு செய்துள்ளனர். இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். எனவே, இந்த செய்தி எப்படி […]

Continue Reading

ரிஷிகேஷில் உள்ள முருகன் கோயிலா இது?

ரிஷிகேஷில் உள்ள முருகன் கோயில் கொடி மரத்தின் மீது மயில் அமர்ந்ததாகக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கோவில் கொடி மரணத்தின் மீது மயில் ஒன்று பறந்து வந்து அமர்கிறது. நிலைத் தகவலில், “திரு முருகன் கோவில் (ரிஷிகேஷ் உத்தரகண்ட்)” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை RSS TAMILNADU ☑ என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

பாஜக தமிழக தலைவர் முருகன் தமிழர்களை காட்டுமிராண்டி எனக் கூறினாரா?

‘’பாஜக தமிழக தலைவர் முருகன் தமிழர்களை காட்டுமிராண்டி என விமர்சித்தார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஜூலை 20, 2020 அன்று பகிரப்பட்ட இந்த பதிவில், பாஜக தமிழ்நாடு ட்விட்டர் ஐடியில் இருந்து ஒரு பதிவு வெளியிடப்பட்டதாகக் கூறி அதற்கான ஸ்கிரின்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’முருகன் தமிழ்க்கடவுள் என்பதெல்லாம் திராவிடக் கூட்டம் கிளப்பி விட்ட கதை. […]

Continue Reading

திருப்பதி தேவஸ்தான தலைவரின் மனைவி பைபிள் வைத்திருந்தாரா? முழு விவரம் இதோ!

திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கிறிஸ்தவர், அவரது மனைவி பைபிள் வைத்திருந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகனுக்கு அவரது தாயார் முத்தம் கொடுப்பது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். அருகில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி உள்ளார். கையில் பைபிள் வைத்தபடி ஒருவர் உள்ளார். அந்த படத்துடன் பதிவு ஒன்று உள்ளது. அதில், […]

Continue Reading

மழை நீர் தேங்கிய மருத்துவமனை புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டது இல்லை!

பீகார் மருத்துவமனை வார்டுக்கு உள்ளே தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மருத்துவமனை வார்டுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படம், டாக்டர் ஒருவர் டிரை சைக்கிளில் வெள்ளத்துக்கு இடையே அழைத்துச் செல்லப்படும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீகார் அரசு மருத்துவமனையின் அவலநிலையை பாருங்கள்..!!! மருத்துவர்கள், மருத்துவமனை எங்கும் சாக்கடை நீரால் நிரம்பி […]

Continue Reading

நடிகர் விவேக்கின் தாயார் இறந்தது எப்போது?

‘’நடிகர் விவேக் தாயார் இன்று இறந்துவிட்டார்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், நடிகர் விவேக் அவரது தாயாருடன் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ ஆழ்ந்த இரங்கல் செய்தி #நடிகர் விவேக் அவர்களின்.. தாயார் S.#மணியம்மாள் (86), இன்று இயற்கை எய்தினார்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

பீகாரில் ரூ.264 கோடியில் கட்டிய பாலம் 29 நாளில் விழுந்ததா?

பீகாரில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியில் ரூ.264 கோடியில் கட்டப்பட்ட பாலம் 29 நாளில் இடிந்து விழுந்தது என்று குறிப்பிட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமீபத்தில் பீகாரில் பாலம் இடிந்து விழுந்ததாக செய்திகள் வெளியானது. அந்த புகைப்படத்துடன் மோடி படத்தை இணைத்து பதிவிட்டுள்ளனர். படத்தின் மீது, “பீகாரில் பாஜக கூட்டணி மெகா ஊழல். ரூ.264 கோடியில் கட்டி […]

Continue Reading

ஊடகங்கள் நடுநிலை தவறி நடக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் போலி ட்வீட்!

ஊடகங்கள் நடுநிலை தவறி நடப்பதாக பேச்சு அடிபடுகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று வாசகர்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அது பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஸ்டாலின் ட்வீட் செய்தது போன்ற ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “சில நாட்களாக சமூக வலைதளங்களில், ஊடகங்கள் நடுநிலை தவறி நடப்பதாக பேச்சு அடிப்படுகிறது. இந்நிலையில் தமிழ் நாட்டிலேயே கலைஞர் தொலைக்காட்சி […]

Continue Reading

அயோத்தி ராமர் கோயில் கட்டும் இடத்தில் தலைமை பூசாரி பலாத்காரம் செய்தாரா?

‘’அயோத்தி ராமர் கோயில் கட்டுமிடத்தில் தலைமை பூசாரி பலாத்காரம் செய்த காட்சி,’’ என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  ஜூலை 15, 2020 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில் ஏற்கனவே பகிரப்பட்ட ஒரு பதிவின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்து, அதன் மேலே, ‘’இனி ராம பக்தாளிடமிருந்து பெண்களை காப்பாற்றனும் போல, ராமன் என்ன பண்ணானோ அதைத்தான் ராம பக்தாளும் […]

Continue Reading

கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலுக்கு திமுக உதவும் என்று மு.க.ஸ்டாலின் கூறவில்லை!

‘’கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலுக்கு திமுக உதவி செய்யும்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் புதிய தலைமுறை லோகோவுடன், நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலுக்கு ‘திமுக தேவையான சட்ட உதவிகளை வழங்கும்,’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது என்று இளவரசர் சார்லஸ் கூறினாரா?

இந்தியாவில் சர்வாதிகார ஹிட்லர் ஆட்சி நடக்கிறது என்று இங்கிலாந்து அதிபர் சார்லஸ் வேதனை தெரிவித்தார் என்று கூறி சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “இந்தியாவில் சர்வாதிகார ஹிட்லர் ஆட்சி நடக்கிறது சார்லஸ் வேதனை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அருகில் என்ன சங்கி காறி துப்புறான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

பா.ஜ.க நிதி உதவி செய்ததாக கறுப்பர் கூட்டம் கூறியதா?- போலி நியூஸ்கார்டு

கடவுள் வழிபாட்டைப் பற்றி தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட பா.ஜ.க உதவி செய்தது என்று கறுப்பர் கூட்டம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகா நிதி உதவி??… நாத்தீகர்களை வைத்து கடவுள் மற்றும் வழிபாடுகளை தவறாக பேச தவறாக சித்தரிக்க பாஜகா நிதி உதவி வழங்கியதாக […]

Continue Reading

கல்லீரலா… நுரையீரலா? – குழப்பம் தந்த ஃபேஸ்புக் பதிவு

கல்லீரலின் பெருமைகள் பற்றி பதிவிட்டுள்ள ஒரு ஃபேஸ்புக் பதிவில் நுரையீரல் படம் வைக்கப்பட்டிருந்தது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பை விளக்கும் நுரையீரல் படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல […]

Continue Reading

Fact Check: பெரியார் புகைப்படத்தை வைத்து பகிரப்படும் விஷமத்தனமான தகவல்!

மகளைத் தொட்டிலிலும், கட்டிலிலும் போட்டு தாலாட்டிய தலைவர் பெரியார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குழந்தையுடன் பெரியார் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “மகளை தொட்டிலிலும் பின், கட்டிலிலும் போட்டு தாலாட்டிய ஒரே தலைவன்டா எங்க பெரியார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ‎பாஜக இளைஞர் அணி – தமிழ்நாடு BJYM TamilNadu என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

மூன்று கண்கள் உள்ள குழந்தை என்று பகிரப்படும் தவறான வீடியோ!

‘’மூன்று கண்கள் உள்ள குழந்தை,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: இந்த வீடியோ உண்மையா, பொய்யா என தகவல் தேடும் முன்பு, ஒருமுறை உற்று கவனித்தபோது, இதில் ஒரு ட்ரிக் இருப்பதைக் காண முடிந்தது. அதாவது, அந்த குழந்தையின் வலது கண் அசைவது போலவே, 3வது கண் அசைவும் […]

Continue Reading

கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனல் குழு இவர்கள்தான் என்று கூறி பரவும் ‘ஜிப்ஸி’ புகைப்படம்!

இவர்கள் கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனல் குழு பிரதிநிதிகள் என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: கந்தசஷ்டி கவசத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் என்ற யூடியுப் சேனல் மீது பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இறை பக்தர்கள் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்கேற்ப, கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலில் பணிபுரிந்தவர்கள் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் திருமணம் பற்றி பகிரப்படும் வதந்திகளும், உண்மையும்!

‘’மு.க.ஸ்டாலின் திருமணத்திற்கு காமராஜர் வந்ததாகக் கூறப்படும் பொய்ச் செய்தி,’’ என்று கூறி பரவும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 ‘’காமராஜர் பிறந்தது 1975, அக்டோபர் 2ம் தேதி; மு.க.ஸ்டாலின் திருமணம் செய்தது அக்டோபர் 20, 1975,’’ என்று தகவல் பகிரப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்ப தொடங்கியுள்ளனர். […]

Continue Reading

பினராயி விஜயன் மகள் திருமணத்தில் ஸ்வப்னா பங்கேற்றாரா?

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகளின் திருமண விழாவில் தங்கக் கடத்தலில் சிக்கிய ஸ்வப்னா பங்கேற்றதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பினராயி விஜயன் மகள் திருமண புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு பெண் மணியின் தலையை சிவப்பு நிறத்தில் வட்டமிட்டுக் காட்டியுள்ளனர்.  நிலைத் தகவலில், “மிக விரைவில் பிணநாறி விஜயனுக்கு சங்கு ஊதப்படும். கேரளாவில் ஹிந்துக்கள் […]

Continue Reading

தமிழகத்தில் இருந்து பெங்களூரு எடுத்துச் செல்லப்பட்ட பெருமாள் சிலைக்கு கும்பாபிஷேகமா?

தமிழகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பெருமாள் சிலை செதுக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து பெங்களூருவுக்குக் கொண்டு செல்லப்பட்ட செதுக்கப்படுவதற்கு முந்தைய பிரம்மாண்ட சிலை படங்கள் மற்றும்  சிலை செதுக்கப்பட்டு அதற்கு பூஜை செய்யப்படுவது போன்ற படங்கள் பகிரப்பட்டுள்ளன.  நிலைத் தகவலில், “தமிழகத்திலிருந்து பெங்களூர் எடுத்துச் செல்லப்பட்ட ஸ்ரீபெருமாள் சிலை சிறப்பாக […]

Continue Reading

சுட்டது திமுக எம்எல்ஏ இல்லை; அவரது கள்ள துப்பாக்கிதான் என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

‘’சுட்டது திமுக எம்எல்ஏ இல்லை, அவரது கள்ள துப்பாக்கிதான்,’’ என்று கூறி ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இந்த நியூஸ் கார்டை நமது வாசகர்கள் சிலர் வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து, சந்தேகம் எழுப்பியிருந்தனர். எனவே, இதனை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என்ற விவரம் தேடினோம். அப்போது நிறைய பேர் இதனை பகிர்வதை கண்டோம். Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim […]

Continue Reading

இந்த வீடியோ அமிதாப் பச்சனின் கொரோனா சிகிச்சை தொடர்பானது இல்லை!

‘’இந்த வீடியோ அமிதாப் பச்சனின் கொரோனோ சிகிச்சையின்போது எடுத்தது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ‘’அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் உள்ளிட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமிதாப், மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசுகிறார்,’’ என்று இந்த வீடியோ பற்றி குறிப்பிட்டுள்ளனர். இதனை உண்மை […]

Continue Reading

விருதுநகர் – சிவகாசி சாலையின் படம் இது இல்லை!

விருதுநகர் – சிவகாசி இடையேயான சாலையின் படம் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரம்மாண்ட மரத்தின் அடிப்பகுதியில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பஸ் ஒன்று வருவது போன்று படத்தை பகிர்ந்துள்ளனர். படத்தில், “விருதுநகர் டூ சிவகாசி சாலை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. Sathish Kumar என்பவர் 2020 ஜூலை 8 அன்று […]

Continue Reading

புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் படுத்து உறங்கும் புகைப்படமா இது?

கொரோனா ஊரடங்கு காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் படுத்து தூங்கிய புகைப்படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை ஓரத்தில் குடும்பத்தோடு சிலர் படுத்து தூங்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில் “இது நாட்டை ஆளத் தகுதியற்ற பிஜேபி கண்ட புதிய இந்தியா…! உ.பியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Sehana Kss […]

Continue Reading