டாஸ்மாக் கடை செல்ல இலவச பஸ் பாஸ் கேட்ட விவசாயி; 2018 செய்தியை தற்போது பரப்பும் நெட்டிசன்கள்!

தி.மு.க ஆட்சியில் ஒருவர் மது அருந்த டாஸ்மாக் கடைக்கு சென்று வர தனக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்ததாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினகரன் நாளிதழ் வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “உள்ளூரில் கடை இல்லாததால் டாஸ்மாக் கடைக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் […]

Continue Reading

மெரினாவில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்பு என்று பரவும் பழைய வீடியோ!

சென்னை மெரினா கடற்கரையில் மாண்டஸ் புயல் காரணமாக மழை நீர் சூழ்ந்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சென்னை மெரினா கடற்கரையில் மழை நீர் தேங்கியிருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மாண்டஸ் புயல் காரணமாக நேற்று பெய்த பலத்த மழையால் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை மழைநீர் சூழ்ந்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

‘சபரிமலையில் மோடி வருகை’ என்று பகிரப்படும் கேரள ஆளுநர் வீடியோ!

சபரி மலைக்கு பிரதமர் மோடி வந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெளிவில்லாத வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் இருப்பது கேரள மாநில ஆளுநர் போல இருந்தது. ஆனால் நிலைத் தகவலில், “சபரிமலையில் பிரதமர் நரேந்திர மோடி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Balu Subramaniam என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2022 டிசம்பர் 6ம் […]

Continue Reading

மும்பை – நாக்பூர் எக்ஸ்பிரஸ் சாலை படமா இது?

மும்பையிலிருந்து நாக்பூர் வரை அமைக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் வே என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “மும்பை டு -நாக்பூர் எக்ஸ்பிரஸ்- வே ₹55,000 கோடியில் பிரமாண்ட சாலை” என்று குறிப்பிட்டு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் மிகவும் பிரம்மாண்டமான, மேம்பாலத்தின் புகைப்படம் முகப்பு படமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மும்பை – நாக்பூர் விரைவுச் சாலைத் திட்டம் 2015ம் […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ள பாலம் இதுவா?

‘உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ள பாலத்தின் புகைப்படம்,’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link  ‘’உத்திரபிரதேசத்தில் நாளை திறக்க உள்ள பாலம். யோகிடா.🔥🔥’’ என்று குறிப்பிட்டு மேற்கண்ட பதிவை KarthikGnath420 என்ற ட்விட்டர் ஐடி கடந்த நவம்பர் 30, 2022 அன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதனை வாசகர் ஒருவர் உண்மையா, என்று நம்மிடம் […]

Continue Reading

மோடி தொடங்கிவைத்த வந்தே பாரத் ரயில் பெட்டியில் கசியும் தண்ணீர்?- வைரல் வீடியோ உண்மையா?

‘’மோடி தொடங்கிவைத்த வந்தே பாரத் ரயிலில் தண்ணீர் ஒழுகும் பரிதாபம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Claim Tweet Link I Archived Link உண்மை அறிவோம்: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை பெரம்பூரில் உள்ள ICF தொழிற்சாலையில், வந்தே பாரத் என்ற பெயரில் வர்த்தக பயன்பாட்டுக்கான அதிவேக ரயில்களை இந்திய ரயில்வே தயாரித்து வருகிறது. இந்த ரயில்களை நாடு முழுவதும் முக்கியமான 6 […]

Continue Reading

அண்ணாமலைக்கு கல்தா என பரவும் நியூஸ் கார்டை தினமலர் வெளியிட்டதா?

அண்ணாமலைக்கு கல்தா; ஆதரவு நடிகைக்கு ஸ்வீட் தா என்று தினமலர் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு கல்தா; ஆதரவு நடிகைக்கு ஸ்வீட் தா! கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள், சீனியர் நிர்வாகிகளுடனான மோதல் போக்கு, தன்னிச்சையான நடவடிக்கைகளால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுமாறு […]

Continue Reading

‘குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று செந்தில்வேல் கூறினாரா?

‘’குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று செந்தில்வேல் சவால்,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263) அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதே ட்வீட் ஸ்கிரின்ஷாட்டை பலரும் ஃபேஸ்புக்கில் உண்மையென நம்பி பகிர்வதைக் கண்டோம்.  Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:மேற்கண்ட பதிவுகளில் கூறுவது போல, குஜராத் தேர்தலில் […]

Continue Reading

சபரிமலை ஐயப்பன் அற்புத காட்சி என்று பகிரப்படும் வேறொரு வீடியோவால் குழப்பம்…

‘’சபரிமலை ஐயப்பன் அற்புத காட்சி,’’ என்று கூறி யூடியுப்பில் பகிரப்படும் வீடியோ ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Youtube Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவின் தலைப்பில், ‘’##காணக் கிடைக்காத அற்புத காட்சி## ##சபரிமலை ##சுவாமியே சரணம் ஐயப்பா ##,’’ என்று எழுதப்பட்டுள்ளதால், பலரும் இதனை உண்மையான சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை காட்சி என்று நினைத்து கமெண்ட் பகுதியில் குழப்பமடைந்துள்ளனர்.  சபரிமலை உண்மையில் தற்போதைய கேரளாவில் அமைந்துள்ளது. ஆனால், […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலை என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

உத்தரப் பிரதேசத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலை, என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.தகவலின் விவரம்: Claim Tweet Link I Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட வீடியோவை நன்கு உற்று பார்த்தால், அதில், சீன மொழியில் ஒரு லோகோ இருப்பது தெரிகிறது.  இதன்படி, APP என சீன மொழியில் எழுதப்பட்டுள்ளதன் அடிப்படையிலும், ரிவர்ஸ் இமேஜ் முறையிலும் தொடர்ந்து தகவல் தேடியபோது, இது சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ […]

Continue Reading

ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்ததா?

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தமிழர்களின் பொழுதுபோக்கை விட இந்து மதத்தினர் தெய்வமாக வணங்கும் பசு மற்றும் காளை மாடுகளின் நலன்தான் முக்கியம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “குறிப்பிட்ட ஒரு மாநில மக்களின் பொழுதுபோக்கை […]

Continue Reading

‘அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக்தான்’ என்று செந்தில் பாலாஜி கூறினாரா?

‘’அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக்தான் என்று திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் ஒரு நியூஸ் கார்டு வைரலாகப் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் நாம் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.  Facebook Claim Link I Archived […]

Continue Reading

குஜராத்தில் தேர்தல் நடந்த முறை என்று பரவும் மேற்கு வங்க வீடியோ!

குஜராத்தில் வாக்கு இயந்திரத்தைக் கூட பார்க்க அனுமதிக்காமல் பணியாளர்களே வாக்களித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வாக்குப்பதிவு மையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், வாக்களிக்க வரும் நபர்களை வாக்களிக்க அனுமதிக்காமல், வாக்குச் சாவடியில் இருக்கும் நபர் ஒருவர் வாக்குகளை பதிவு செய்கிறார். நிலைத் தகவலில், “குஜராத்தில் தேர்தல் நடந்த முறை. வாக்காளரை, வாக்கு இயந்திரத்தை […]

Continue Reading

குலாப் ஜாமுனில் சிறுநீர் கழித்த வட இந்தியர் என்று பரவும் வீடியோ; உண்மை என்ன?

பாத்திரம் நிறைய உள்ள குலாப் ஜாமுனில் வட இந்தியர் ஒருவர் சிறுநீர் கழித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாத்திரம் நிறைய உள்ள குலாப் ஜாமுனில் ஒருவர் சிறுநீர் கழிப்பது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த நபரின் முதுகில் “வடக்கன்” என்று எடிட் செய்து எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வேற ஒன்னுல குலோப்ஜாமுள இனிப்பு கூடிருச்சாம்… […]

Continue Reading

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காப்பாற்றப்பட்ட பூனை என்று பரவும் வீடியோ உண்மையா?

கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது ஸ்டேடியத்தின் உச்சியிலிருந்து கீழே விழுந்த பூனையை ரசிகர்கள் காப்பாற்றினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஸ்டேடியம் ஒன்றின் மேற்கூரை விளிம்பிலிருந்து பூனை ஒன்று கீழே விழும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த பூனையை விளையாட்டைக் காண வந்த ரசிகர்கள் காப்பாற்றுகின்றனர். நிலைத் தகவலில். “பூனையின் உயிரை […]

Continue Reading

ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சீட்டுக்கட்டு விளையாடுவது பற்றிய பாடம்- உண்மை என்ன?

6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சீட்டுக்கட்டு விளையாட்டு பற்றிய பாடம்- உண்மை என்ன? ‘’6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரம்மி விளையாடுவது எப்படி என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றுள்ளது,’’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Linkஇதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, அதன் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் கேட்டிருந்தார். 01/12/2022 அன்று பதிவிடப்பட்டுள்ள […]

Continue Reading

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது இயேசுவை ஆராதிக்கும் வீரர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் முழந்தாள் படியிட்டபடி நடந்து இயேசுவுக்கு நன்றி கூறிய கால்பந்தாட்ட வீரர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கால்பந்தாட்ட வீரர்கள் இருவர், முழந்தாள் படியிட்டு, கையில் பைபிள் ஏந்தியபடி பிரார்த்தனை செய்துகொண்டே கால்பந்து மைதானத்தை கடக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Thank you JESUS.Happy Christmas உலகக் […]

Continue Reading

சூதாட்டம் என்பது இந்து மதத்தின் அங்கம் என்று அண்ணாமலை கூறினாரா?

சூதாட்டம் என்பது மகாபாரத காலத்தில் இருந்து இந்து மதத்தின் அங்கம். அதை ஒழிப்பது இந்து கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சி என்று அண்ணாமலை கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சூதாட்டம் என்பது மஹாபாரத காலத்திலிருந்தே ஹிந்து மதத்தின் ஒரு அங்கம். ஆன்லைன் சூதாட்டங்களை முறைப்படுத்தலாமே […]

Continue Reading

குஜராத்தில் வாக்கு கேட்டுச் சென்ற காங்கிரஸ் கட்சியினரை எருமை முட்டியதா?

குஜராத்தில் வாக்கு கேட்டுச் சென்ற காங்கிரஸ் கட்சியினர் மீது எருமை மாடுகள் முட்டியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: எருமை மாடுகள் கூட்டமாக இருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவற்றின் முன்னாள் காங்கிரஸ் கொடியுடன் மூன்று பேர் நிற்கின்றனர். திடீரென்று எருமை மாடு ஒன்று வேகமாக ஓடிவந்து முட்ட முயற்சிக்கிறது. நிலைத் தகவலில், “காங்கிரஸ் நிர்வாகிகள் குஜராத்தில் ஓட்டு கேட்க சென்றபோது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை […]

Continue Reading

Explainer: இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போருக்கு எச்சரிக்கை என்று பரவும் வீடியோ; உண்மை என்ன?

இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருவோரைத் தாக்கி, வாகனங்கள், பணம், நகை கொள்ளையடிக்கப்படுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு வீடியோ ஒன்றை அனுப்பி, அது எங்கு நடந்தது என்று கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் இந்த வீடியோ பற்றி எந்த ஒரு தகவலையும் அவர் பகிரவில்லை. உண்மைப் பதிவைக் காண: Facebook […]

Continue Reading

FlFA 2022 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியை அனுப்பக்கூடாது என்று மோடி உத்தரவிட்டாரா?

‘’கத்தாரில் நடைபெறும் FlFA 2022 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியை அனுப்பக்கூடாது என்று மோடி உத்தரவு,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, ஏராளமானோர் இதை ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம்.  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று பார்த்தால், இல்லை என்பதே பதில். ஆம். இது மோடிக்கு […]

Continue Reading

பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் தவறே செய்தாலும் தண்டிக்க முடியாது என்று அண்ணாமலை கூறினாரா?

தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தவறே செய்தாலும் அவரைத் தண்டிக்கும் தகுதி தனக்கில்லை என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் புகைப்படங்களுடன் ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கமலாலயம் என்கிற ஹஸ்தினாபுரத்தின் […]

Continue Reading

மின் கட்டணம் – ஆதார் இணைப்பு அறிவிப்பை மின் வாரியம் திரும்பப் பெற்றதா?

மின் கட்டணம் செலுத்த ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை மின் வாரியம் திரும்பப் பெற்றது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்குத் தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த நியூஸ் கார்டில், “மின் கட்டணம் செலுத்த ‘ஆதார்’ […]

Continue Reading

ராமாயணம் டிவி சீரியல் பாடலைப் பாடும் அமெரிக்க குழந்தைகள் என்று பரவும் வீடியோ உண்மையா? 

‘’ராமாயணம் டிவி சீரியல் பாடலைப் பாடும் அமெரிக்க குழந்தைகள்’’, என்று பரவும் வீடியோ பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதே தகவல் ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றிலும் பகிரப்படுகிறது. Facebook Claim Link l Archived Link  2020ம் ஆண்டு முதலாகவே, இந்த வீடியோ பகிரப்படுவதைக் கண்டோம்.   Sharechat Link I Archived Link  உண்மை அறிவோம்:  குறிப்பிட்ட வீடியோவின் ஒரு […]

Continue Reading

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இளையராஜாவை சந்தித்தாரா? 

‘’ கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இளையராஜாவை சந்தித்து எளிமையான முறையில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Tweet Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட புகைப்படம் கடந்த 2017ம் ஆண்டு இளையராஜா தனது 74வது பிறந்த நாளில், ரசிகர்களுடன் நடத்திய சந்திப்பு ஒன்றில் எடுக்கப்பட்டதாகும். இந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. இதுபற்றி ஊடகங்களிலும் […]

Continue Reading

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கழித்து இப்போதுதான் அருணாச்சலில் விமான நிலையம் அமைக்கப்பட்டதா?

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகு, இப்போதுதான் அருணாச்சல பிரதேசத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அருணாச்சல பிரதேசத்தின் வரைபடம் மற்றும் விமானநிலையத்தின் விமான ஓடுபாதை ஆகிய படங்களை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்து #அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் முதல் கிரீன்ஃபீல்ட் […]

Continue Reading

பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம் முன் ஆணுறை வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டதா?

‘’பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம் முன் ஆணுறை வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Claim Tweet Link l Archived Link உண்மை அறிவோம்: பாஜக.,வை சேர்ந்த திருச்சி சூர்யா சிவா மற்றும் டெய்சி ஆகியோர் ஃபோன் மூலமாக ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டிக்கொண்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. FactCrescendo Tamil Link […]

Continue Reading

சிறந்த அக்கா – தம்பிக்கான போட்டி நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்தாரா?

டெய்சி – சூர்யா பெயரில் சிறந்த அக்கா – தம்பிக்கான போட்டி நடத்தப்படும், கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்ததாக சில நையாண்டி நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று சில நியூஸ் கார்டுகளை நெட்டிசன்கள் சிலர் பகிர்ந்து வருகின்றனர். ஒரு நியூஸ் கார்டில், “டெய்சி-சூர்யா பெயரில் சிறந்த அக்கா-தம்பிக்கான போட்டி. டெய்சி சரண் – […]

Continue Reading

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு நிகழ்ந்தது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தோனேஷியா கடலுக்கு அடியில்* *எரிமலை வெடித்த காட்சி. 💥 மொபைல்* *இருட்டியபின் 15 வினாடி காத்திருக்கவும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த வீடியோ பதிவை Saravanan Ramanujadasan […]

Continue Reading

சிறுவர்கள் குரான் ஓதும் வீடியோ உலகக் கோப்பை கால்பந்து தொடக்க விழாவில் எடுக்கப்பட்டதா?

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடக்க விழாவின் போது சிறுவர்கள் குரான் ஓதும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெள்ளை ஆடை அணிந்த சிறுவர்கள் ஓடிவரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த சிறுவர்கள் அமர்ந்து குரான் ஓதுகின்றனர். பெரியவர் ஒருவர் அவர்களுக்கு குரான் ஓத கற்றுக்கொடுப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. வீடியோவில், “At […]

Continue Reading

பாஜக.,வில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று காயத்ரி ரகுராம் கூறினாரா?

‘’ பாஜக.,வில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை,’’ என்று காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: பாஜக.,வைச் சேர்ந்த திருச்சி சூர்யா சிவா மற்றும் டெய்சி ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சில ஆடியோ பதிவுகள் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், இதற்கு காயத்ரி ரகுராமை காரணம் காட்டி, மாநில […]

Continue Reading

உலகக் கோப்பை கால்பந்தாட்ட மைதானத்தில் தொழுகை நடத்தப்பட்டதா?

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி (FIFA World Cup Qatar 2022) நடைபெறும் மைதானத்தில் தொழுகை நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விளையாட்டு மைதானம் ஒன்றில் தொழுகை நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “FIFA உலகக் கோப்பை கால் பந்தாட்ட மைதானத்தில் தொழகை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

இரவில் பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க வாகனம் ஏற்பாடு செய்து தருகிறதா போலீஸ்?

இரவில் பெண்கள் வீட்டுக்கு செல்ல வாகனம் ஏதும் இல்லை என்றால் காவல் துறைக்கு போன் செய்தால், வாகனம் ஏற்பாடு செய்து தரப்படும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட் பாட் எண்ணுக்குப் புகைப்பட பதிவு ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதில், “காவல்துறை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது என்னவென்றால் இரவு […]

Continue Reading

பிராமணர்களுக்கு எதிரானவர் அண்ணாமலை என்று காயத்ரி ரகுராம் கூறினாரா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பிராமணர்களுக்கு எதிரானவர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காயத்ரி ரகுராம் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிராமணர்களுக்கு எதிரானவர் அண்ணாமலை! பாஜகவில் பிராமணர்கள் யாரும் முக்கியப் பொறுப்புக்கு வரக்கூடாது என நினைக்கிறார் அண்ணாமலை. எந்த […]

Continue Reading

பாஜக நிர்வாகிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆதாரம் உள்ளது என காயத்ரி ரகுராம் கூறினாரா?

அத்துமீறிய பாஜக நிர்வாகிகள் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்று காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காயத்ரி ரகுராம் புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அத்து மீறிய நிர்வாகிகள்; பகீர் ஆதாரங்களுடன் காயத்ரி ரகுராம். கட்சிக்குள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்களை வெளிக்கொண்டு வருவதற்காகவே […]

Continue Reading

2022 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளைப் பார்த்தால் 50 ஜிபி டேட்டா இலவசமா?

‘’2022 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை பார்த்தால், 50 ஜிபி டேட்டா இலவசம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் சிலர் தொடர்ந்து, நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தனர். இதே தகவல் ஃபேஸ்புக்கிலும் பகிரப்படுகிறது.  Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பட்ட வாட்ஸ்ஆப் செய்தியில், ஒரு லிங்க் இணைத்துள்ளனர். இந்த லிங்க் […]

Continue Reading

2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஐசிசி சிறந்த அணியில் அர்ஷ்தீப் சிங் பெயர் இடம்பெற்றதா?

‘’2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த அணியை அறிவித்தது ஐசிசி,’’ என்று குறிப்பிட்டு சன் நியூஸ் வெளியிட்ட ஒரு செய்தியை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: சமீபத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, 2022ம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை சிறந்த அணி […]

Continue Reading

ஆகாசப் புளுகர் அண்ணாமலை என்று காயத்ரி ரகுராம் பேட்டி அளித்தாரா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகாசப் புளுகர் என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஆகாசப் புளுகர் அண்ணாமலை! உண்மையைப் பேசியதால் தான் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். உண்மையைப் பேசுபவர்களுக்கு அங்கு […]

Continue Reading

FIFA உலகக் கோப்பை தொடக்க விழாவில் ஜாகீர் நாயக் உரை கேட்டு நான்கு பேர் மதம் மாறினார்களா?

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட தொடக்க விழாவில் ஜாகீர் நாயக்கின் உரையைக் கேட்டு நான்கு பேர் உடனடியாக இஸ்லாம் மதத்துக்கு மாறினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கின் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அரபியில் ஒருவர் சொல்ல, அதை மற்றவர்கள் சொல்வது போன்று வீடியோ உள்ளது. நிலைத் தகவலில், “FIFA […]

Continue Reading

பாஜக.,வினர் மீது குஜராத் மக்கள் தாக்குதல் நடத்தினார்களா?

குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்த பா.ஜ.க-வினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆட்டோவில் பிரசாரம் செய்து வரும் பா.ஜ.க-வினர் மீது சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நான் உருவாக்கிய குஜராத் என திரு மோடி அவர்கள் பெருமைப்படப் பேசிய குஜராத்தில் மக்கள் பாஜகவுக்கு […]

Continue Reading

பிரதமர் மோடி தமிழை தேசிய மொழியாக அறிவித்தாரா?

‘’ காசி தமிழ் சங்கமத்தில் பிரதமர் மோடி தமிழை தேசிய மொழியாக அறிவித்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (9049053770) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார்.  Twitter Claim Link l Archived Link  உண்மை அறிவோம்:காசி எனப்படும் தற்போதைய வாரணாசியில் பாஜக முன்முயற்சியில், ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனை மோடி […]

Continue Reading

குஜராத்தில் பா.ஜ.க வேட்பாளருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதா?

குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக வேட்பாளர் ஒருவருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I Archive தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜக வேட்பாளர் ஒருவருக்கு செருப்பு மாலை அணிவிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஜராத்தில் பஜாக வேட்பாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு” […]

Continue Reading

துபாயில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை தரப்பட்டதா?

துபாய் நாட்டில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு, அடுத்த 15 நிமிடத்தில் மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் தரப்பட்டது, என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770)  அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, இந்த வீடியோ செய்தி கடந்த 2018ம் ஆண்டு முதலே பகிரப்பட்டு வருவதைக் […]

Continue Reading

திராவிடர் கழகம் நடத்திய சூரிய கிரகண விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணி பெண் மரணமா?

‘’ திராவிடர் கழகம் நடத்திய சூரிய கிரகண மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணி பெண் மரணம்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்:  குறிப்பிட்ட செய்தியின் நம்பகத்தன்மை பற்றி திராவிடர் கழகம் சார்பாக, வழக்கறிஞர் குமாரதேவன், ‘’இது மிகவும் தவறான தகவல். அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதுபற்றி திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடு விடுதலையில் […]

Continue Reading

குஜராத் பா.ஜ.க கூட்டத்தில் மது விநியோகிக்கப்பட்டது என்று பரவும் வீடியோ உண்மையா?

குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், தொண்டர்களுக்கு மது விநியோகிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க தொப்பி அணிந்த ஒருவர் மற்றவர்களுக்கு கிளாஸில் மது ஊற்றிக் கொடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் மேற்படி பாஜக கூட்டத்தில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Senthil […]

Continue Reading

வாட்ஸ்அப் பயன்படுத்தும் நேரத்தை குறைக்க மோடி அரசு முடிவு செய்துள்ளதா?

இந்தியாவில் வாட்ஸ் அப் செயலியை குறிப்பிட்ட நேரத்துக்கு தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் மாத கட்டணம் ரூ.500 வசூலிக்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்-அப் சாட்பாட் எண்ணுக்கு ஒரு வீடியோவை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். நியூஸ்7 தமிழ் வெளியிட்டது போன்று வீடியோவில் லோகோ இருந்தது.  அதில் […]

Continue Reading

மோடி தமிழ்நாடு வந்தால் நானே நேரில் வரவேற்பேன் என்று சீமான் கூறினாரா?

‘’பிரதமர் மோடி தமிழகம் வந்தால் நானே அவரை நேரில் வரவேற்பேன் என்று சீமான் பேச்சு,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் இது பகிரப்படுவதைக் கண்டோம்.  Claim Tweet Link l Archived Link  உண்மை அறிவோம்:  […]

Continue Reading

தி.மு.க அமைச்சர்களுக்கு வணக்கம் கூறாமல் மோடி தவிர்த்தாரா?

தனக்கு வணக்கம் தெரிவித்த தமிழக அமைச்சர்களுக்கு பதில் வணக்கம் கூறுவதை மோடி தவிர்த்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காந்திகிராம நிகர்நிலை பல்கலைக் கழக விழாவில் பங்கேற்க மோடி வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அப்போது, தமிழக அமைச்சர் கீதா ஜீவன் வணக்கம் கூற மோடி கடந்து செல்வது போன்று காட்சி உள்ளது. நிலைத் தகவலில், “மங்குனிகளுக்கு […]

Continue Reading

கால்பந்தாட்ட வீராங்கனை மரணம்; பா.ஜ.க நிர்வாகியிடம் விசாரணை என்று பரவும் போலி நியூஸ் கார்டுகள்!

மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவை இரண்டு நாட்களுக்கு முன்பு பா.ஜ.க நிர்வாகி அமர் பிரசாத் சந்தித்தார் என்றும் அவரை போலீஸ் விசாரித்து வருகிறது என்றும் நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க நிர்வாக அமர் பிரசாத் ரெட்டி புகைப்படத்துடன் புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக பிரமுகரிடம் […]

Continue Reading

பத்திரிகையாளர்களை சந்திக்காதவர் என்று மோடியை விமர்சித்தாரா மேயர் பிரியா?

பத்திரிகையாளர்களை சந்திக்காத மோடி என்று பிரதமரை சென்னை மாநகராட்சி மேயல் பிரியா விமர்சித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பத்திரிகையாளர்களை சந்திக்காத மோடி! சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகள் சிறப்பாக நடைபெறுவதால், அதை தாங்கிக்கொள்ள முடியாத பாஜகவினர், நான் பேசும்போது […]

Continue Reading