கொரோனா தயவால் 10ம் வகுப்பில் வெற்றி பெற்ற முதியவர்!– ஃபேஸ்புக் வதந்தி

தெலங்கானாவில் முதியவர் ஒருவர் 47 ஆண்டுகளாக தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து வந்த நிலையில், அரசு ஆல் பாஸ் என்று அறிவித்ததால் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதியவர் ஒருவர் தேர்வு எழுதும் படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “ஐயாவோட பெயர் முகமது பரக்கத் அலி. தெலுங்கானா மாநிலம். வயது 82. 47 ஆண்டுகளாக தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு எழுதி […]

Continue Reading

உ.பி-யில் சிறுமியின் நாக்கை அறுத்து பூஜை செய்ததாக பரவும் வதந்தி!

உத்தரப் பிரதேசத்தில் சிறுமி ஒருவரின் நாக்கை அறுத்து பூஜை நடத்தியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாக்கு துண்டான பெண் ஒருவரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “உத்திரப் பிரதேச மாநிலம் பண்டல்கண்டில் கொரோனாவிலிருந்து ஊரைக் காப்பாற்றுகிறோம் என்று 8வது படிக்கும் மாணவியின் நாக்கை அறுத்து பூஜை நடத்திய கொடூரம். யானைக்குப் பொங்கிய உத்தமர்கள் விராத்கோலி, மேனகா காந்தி, […]

Continue Reading

விபூதி பூசியதால் பிரக்ஞானந்தாவின் சாதனையை மறைத்த திராவிட ஊடகங்கள்!- ஃபேஸ்புக் விஷமம்

நெற்றியில் விபூதி போட்ட காரணத்தால் மும்பையில் நடந்த 18 வயதிற்குட்பட்டோருக்கான உலக செஸ் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சிறுவன் பிரக்ஞானந்தாவின் சாதனையை திராவிட (தமிழ்) ஊடகங்கள் மறைத்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “திராவிடத்தின் பெயரில் திட்டமிட்டு மறைக்கப்படும் சாதனை சிறுவனின் புகழ். நெற்றியில் விபூதி […]

Continue Reading

மோடியை எதிர்த்து களம் இறங்கிய பெண் போலீஸ் அதிகாரி!- ஃபேஸ்புக் வதந்தி

பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்று டி.வி நடிகை ஒருவர் படத்தை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link டி.வி நடிகை ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மோடியை எதிர்த்து களமிறங்கிய இந்த பெண் IPS அதிகாரிக்கு ஒரு சேர் செய்து ஆதரவளிக்கலாமே நண்பர்களே!” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை ‎ஈரோட்டு வேந்தன் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Chandru Covai என்பவர் ஜூன் 7ம் […]

Continue Reading

2020 ஜூன் முதல் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் சேவைக் கட்டணம் உயர்த்தப்படுகிறதா?

‘’2020 ஜூன் 1ம் தேதி முதல் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் சேவைக்கட்டணம் உயர்த்தப்படுகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link Facebook Claim Link 2 Archived Link இந்த பதிவில், பாலிமர் டிவி வெளியிட்ட வீடியோ செய்தி ஒன்றை இணைத்துள்ளனர். அதில், ‘’ஜூன் 1ம் தேதி முதல் ஒவ்வொரு முறை எஸ்பிஐ ஏடிஎம்மில் […]

Continue Reading

மகாராஷ்டிராவில் பசுவுக்கு வெடி மருந்து உணவு கொடுக்கப்பட்டதா?

மகாராஷ்டிராவில் கோதுமை மாவில் வெடி மருந்தை வைத்து பசுவுக்கு கொடுக்கப்பட்டதாக பசுவின் படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வாய்ப்பகுதி சிதைந்து காணப்படும் பசு ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடுத்து ஒரு கொடூரம் #மகாராஷ்டிராவில்.. கோதுமை மாவில் வெடிமருந்து வைத்து கொடுத்த மர்ம மனிதர்கள்.. பெரும்பாலும் அந்த கூட்டத்துக்கு சில விலங்குகளை சுத்தமா பிடிக்காது.. 1, மாடு – […]

Continue Reading

உ.பி-யில் தண்ணீர் எடுத்ததற்காக பட்டியலினப் பெண்ணை சவுக்கால் அடித்தார்களா?

உத்தரப் பிரதேசத்தில் தண்ணீர் எடுத்தார் என்பதற்காக பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை சாதி வெறியர்கள் சவுக்கால் அடித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 இந்த வீடியோ பதிவில், ஒரு பெண்ணை சிலர் சேர்ந்து மிகக் கொடூரமான முறையில் தாக்குகின்றனர். இதை ஊரோ சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது. யாரும் தடுக்க முயலவில்லை. இந்தியில் […]

Continue Reading

அமெரிக்காவில் வங்கியை உடைத்து மக்களுக்கு பணம் வழங்கினார்களா?- உண்மை அறிவோம்!

அமெரிக்காவில் வங்கியை உடைத்து பணத்தை எடுத்து மக்களுக்குப் பகிர்வதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கார் மீது நிற்கும் ஒருவர் பணத்தை வாரி இறைக்கிறார். மக்கள் அனைவரும் பணத்தை எடுக்க ஓடுகின்றனர். கீழே அரபி மொழியில் ஏதோ எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்காவிலுள்ள வங்கியை உடைத்து பணத்தை மக்களுக்கு பகிர்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

மாஸ்க் அணியாவிட்டால் பாஜக உறுப்பினர் அட்டை தரப்படும் என்று போலீசார் கூறினரா?

‘’மாஸ்க் அணியாவிட்டால் பாஜக உறுப்பினர் அட்டை தரப்படும் என போலீசார் எச்சரிக்கை,’’ என்று கூறி பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link நியூஸ் 7 டிவி வெளியிட்டதைப் போல இந்த பிரேக்கிங் நியூஸ் கார்டு உள்ளது. இதனால் பலர் உண்மை என நம்பி குழப்பமடைந்துள்ளனர். இந்த செய்தியை வேறு டெம்ப்ளேட்டில் மற்றொரு ஃபேஸ்புக் பயனாளரும் பகிர்ந்திருந்தார்.  Facebook Claim […]

Continue Reading

இஸ்லாமியர்கள் பற்றி கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பேசியது என்ன?

‘’இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள், அவர்களுக்கு பணத்தை வீணாக்க வேண்டாம், இஸ்லாமிய கொரோனா நோயாளிகளை விஷம் கொடுத்து கொன்றோம்,’’ என்று கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் என்று கூறப்படும் பெண்மணி புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் “முஸ்லீம்கள் தீவிரவாதிகள், அவர்களுக்கு பணத்தை வீணாக்க வேண்டாம் என்பதால் முஸ்லீம் கொரனா […]

Continue Reading

டிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா?

‘’டிரம்ப் ஆட்சி மீது கடுங்கோபத்தில் அமெரிக்க மக்கள்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த வீடியோவில், டிரம்ப் உருவ பொம்மையை சிலர் குத்தியும், உதைத்தும் விளையாடுவதைக் காண முடிகிறது. ஆனால், இதனை தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் அரசியல் கொந்தளிப்பு சூழலுடன் தொடர்புபடுத்தி பகிர்ந்துள்ளனர். இதனால், இது உண்மையாக இருக்கும் […]

Continue Reading

விஜய் மல்லையா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டாரா?

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டதாகவும் அவர் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தினகரன் நாளிதழ் வெளியிட்ட இணைப்பை ஆதாரமாகக் கொண்டு பதிவிட்டுள்ளனர். அந்த செய்தியில், “லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டார்: ஆர்தர் ரோடு சிறையில் அடைப்பு” என்று இருந்தது. இந்த பதிவை Senthil Karthick‎ […]

Continue Reading

எல்லைச் சுவரை உடைக்கும் சீன ராணுவ வீரர்கள் வீடியோ; உண்மை என்ன?

லடாக்கில் இந்திய எல்லை சுவரை சீன ராணுவ வீரர்கள் உடைப்பதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக் கல் சுவரை எட்டி உதைத்து உடைக்க முயற்சிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவர்களை இந்திய வீரர்கள் தடுக்கின்றனர். நிலைத் தகவலில், “இந்தியா எல்லை சுவர்களை உடைக்கும் சீன ராணுவம்.. வெறும் கைகளால் […]

Continue Reading

மலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு!

‘’மலப்புரத்தைச் சேர்ந்த மக்கள் கொடூர மனம் கொண்டவர்கள், யானையை வெடி வைத்துக் கொன்றுவிட்டார்கள்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்படுகிறது. இது முஸ்லீம் மக்களை குறிவைக்கும் வெறுப்புணர்வு பிரசாரமாக உள்ளதென்று நமது வாசகர்கள் முறையிட்டதால் இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link Facebook Claim Link Archived Link இதுபோல, பலரும் மலப்புரம் பகுதி மக்கள் செய்த கொடூரம், என்று கூறி தகவல் பகிர்ந்து […]

Continue Reading

அயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகளா இவை?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகள் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அகழ்வாராய்ச்சி செய்வது, பூமியில் இருந்து கிடைத்த புத்தர் சிலைகள் என 10-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், இந்தியா வரலாறு என்பதே பெளத்தத்திற்க்கும் பார்பனியத்திற்க்கும் இடையே நிகழ்ந்த மோதல்களே.! பெளத்தம் வீழ்த்தப்பட்டு பார்பனியம் சூழ்ச்சியால் வென்றது.! என்ற அண்ணல் […]

Continue Reading

இங்கிலாந்தின் ஹிஜாப் அணிந்த முதல் பெண் நீதிபதி- குழப்பம் தந்த ஃபேஸ்புக் புகைப்படம்

பிரிட்டனின் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் ஒருவர் முதன் முறையாக நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று அமெரிக்க நீதிமன்ற படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே, இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமெரிக்க நீதிமன்றம் ஒன்றின் நீதிபதி படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “பிரிட்டனில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் முதன்முறையாக நீதிபதியாக நியமனம்! 40 வயதுடைய ராபியா அர்ஷாத்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Mohaideen Sain […]

Continue Reading

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் போராட்டம் நடந்ததா?- ஃபேஸ்புக் வதந்தி

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 வெள்ளை மாளிகை போன்று தோற்றம் அளிக்கும் மிகப்பெரிய கட்டிடத்துக்குள் மக்கள் நுழைகின்றனர். ஆடியோ தமிழில் உள்ளது. போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், அதிபர் தப்பியோடினார் என்றும் குறிப்பிடுகின்றனர். வீடியோவின் நிலைத் தகவலில், “அமெரிக்க வெள்ளை மாளிகை உள்ளே […]

Continue Reading

பகத் சிங் சகோதரியின் மரண செய்தியை மறைத்த ஊடகங்கள்!- ஃபேஸ்புக் வதந்தி

பகத் சிங்கின் சகோதரி கடந்த மே 30ம் தேதி மரணம் அடைந்ததாகவும் அது பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் மறைத்துவிட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பகத் சிங்கின் சகோதரி படம் என்று ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “சுதந்திரத்திற்கு உயிர் நீத்த பகத் சிங்கின் சகோதரி பிரகாஷ் கயுர் 30-5-2020 இயற்கை எய்தினார். துரதிஷ்டவசமாக இந்த தேசிய குடும்பத்தைச் […]

Continue Reading

மோடிக்கு மேக்கப் செய்தபோது எடுத்த வீடியோவா இது?

மக்கள் வரிப் பணத்ததை மேக்அப் போட ஊதாரித்தனமாக செலவு செய்த பிரதமர் மோடி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மேடம் டுசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் மோடியின் மெழுகு சிலை வைக்க அளவு எடுத்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எனக்கு தெரிந்து இந்த உலகத்திலேயே நாட்டு மக்களின் பணத்தை இப்படி ஊதாரி […]

Continue Reading

கோ பேக் சைனா ஆர்மி என்று இந்திய ராணுவம் பேனர் பிடித்ததா?

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்துள்ள நிலையில், கே பேக் சைனா ஆர்மி என்று இந்திய ராணுவ வீரர்கள் பேனர் பிடித்து வருவதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராணுவ வீரர்கள் பேனர் பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. நிலைத் தகவலில், “இதுவரை சைனா ஆர்மி முன்னேறி 35 ஆயிரம் சதுர மைல் […]

Continue Reading

பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா?

‘’பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடி,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில் பாலிமர் டிவியின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர்.  உண்மை அறிவோம்:மேற்கண்ட செய்தி பார்க்க உண்மை போலவே இருப்பதால், இதுபற்றி ஃபேஸ்புக்கில் வேறு யாரேனும் தகவல் பகிர்ந்துள்ளனரா என விவரம் […]

Continue Reading

சீனாவை எதிர்த்து இந்திய ராணுவத்துடன் இணைந்த இஸ்ரேல் ராணுவம்?- ஃபேஸ்புக் வதந்தி

சீனாவை எதிர்த்து இந்திய ராணுவத்துடன் இஸ்ரேல் ராணுவம் இணைந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அயல் நாட்டு ராணுவ வீரர்கள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராணுவத்துடன் இணைந்தது….. இஸ்ரேல் ராணுவம்….. பாரத் மாதகி ஜெய்….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Bharath Bharath என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2020 மே 27ம் தேதி […]

Continue Reading

வெட்டுக்கிளியை தொடர்ந்து சவூதியில் காகங்களின் படையெடுப்பா?

இந்தியாவில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் சவூதி அரேபியாவில் காகங்களின் படையெடுப்பு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 காகம் போன்ற பறவை கூட்டமாக பறக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. என்ன பேசுகிறார்கள் என்று சரியாக கேட்கவில்லை. நிலைத் தகவலில், “சவூதியில் காக்கைகளின் படையெடுப்பு! என்ன நடக்குது இந்த பூமியில்” என்று குறிப்பிட்டுள்ளனர் இந்த […]

Continue Reading

மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட ராணுவ வாகனமா இது?

மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட உடனடி பாலம் அமைக்கும் ராணுவ வாகனம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ராணுவ டேங்க் போன்ற வாகனங்கள் ஆற்றுக்குள் சென்று பாலம் போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றின் மீது ராணுவ வாகனங்கள் பயணிக்கின்றன. எந்த இடத்திலும் இந்திய ராணுவத் தளவாடம் என்பதற்கான அடையாளம் […]

Continue Reading

வி.பி.துரைசாமி பற்றி கி.வீரமணி சொன்னதாகப் பரவும் போலியான ட்வீட்!

‘’வி.பி.துரைசாமி எனக்கு உணவு வாங்கித் தரவில்லை,’’ என்று கூறி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ட்வீட் வெளியிட்டதாக பகிரப்படும் ஒரு தகவலை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், கி.வீரமணி பெயரில் வெளியிடப்பட்ட ட்வீட் போன்ற ஒரு ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். இது பார்க்க உண்மையானதைப் போன்று உள்ளதால், பலர் குழப்பமடைந்துள்ளனர்.  உண்மை அறிவோம்:திமுகவின் துணை பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, […]

Continue Reading

உ.பி செல்லாமல் வழி தவறி ஒடிஷா வந்த ரயில்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

மராட்டியத்திலிருந்து கோரக்பூர் செல்ல வேண்டிய ரயில் தடம் மாறி ஒடிஷா வந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரயில் படத்துடன் கூடிய புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மராட்டியத்திலிருந்து கோரக்பூர் செல்ல வேண்டிய ரயில் தடம் மாறி ஒரிசா சென்று விட்டது. இந்த மாதிரி கூத்துலாம் எங்காவது நாம பார்த்திருப்போமா… டிஜிட்டல் இந்தியா ஹே” என்று […]

Continue Reading

ரெட்மி ஃபோன் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறதா?- ஆன்லைன் மோசடி!

‘’ரெட்மி ஃபோன் ரூ.10க்கு கிடைக்கிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் விளம்பரம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook claim link  Archived link  மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைத்து, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.  உண்மை அறிவோம்:மேற்கண்ட விளம்பரம் நம்பக்கூடியதாக இல்லை. ஏனெனில், ரூ.10க்கு யாரும் ஸ்மார்ட்ஃபோன் விற்க வாய்ப்பில்லை. இருந்தாலும், சந்தேகத்தின் பேரில் Flipkart […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் தலித் என்பதால் பெண் வியாபாரி தாக்கப்பட்டாரா?

உ.பி-யில் தலித் என்பதாலேயே வியாபாரம் செய்த பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 போலீசார் முன்னிலையில் பெண் ஒருவரை அடிக்கும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தலித் பெண் வியாபாரம் செய்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை. அவர்களும் இந்துக்கள் இல்லயா, #பூணுல் மட்டும்தான் #இந்துக்களா காவிநாயே. உபியில் அரங்கேறிய சம்பவம்” என்று […]

Continue Reading

எர்ணாகுளத்தில் நடிகர் மம்மூட்டி கட்டிய புதிய வீட்டின் வீடியோவா இது?

மலையாள நடிகர் மம்மூட்டி கட்டிய வீடு என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பிரம்மாண்ட வீடு ஒன்றின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்த வீடு யாருக்கு உரிமையானது என்று எந்த தகவலும் இல்லை. நிலைத் தகவலில், “கேரளாவில் முன்னணி நடிகர் மம்மூட்டி அவர்கள் எர்ணாகுளத்தில் புதிய இல்லம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

மஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது? – ஃபேஸ்புக் வதந்தி

மஹா ராணா பிரதாப் என்ற மன்னர் பயன்படுத்திய வாள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பழங்கால வாள் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “நம் பூர்வ மண்ணின் மைந்தர் சக்கரவர்த்தி  மஹாராணா பிரதாப் போர்க்களத்தில் பயன்படுத்திய 50 கிலோ எடைகொண்ட  போர் வாள். நம்மால் வாளை தூக்கக்கூட முடியாது வாளை சுழற்றி சண்டையிடுவது என்பது நினைத்து கூட […]

Continue Reading

புலம்பெயர் தொழிலாளர்கள் மோடி உருவபொம்மையை செருப்பால் அடித்தார்களா?

சொந்த ஊர் திரும்பிய வடஇந்தியர்கள் மோடியின் உருவ பொம்மையை செருப்பால் அடித்ததாக, ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மோடி உருவ பொம்மையை சுற்றி அமர்ந்து பெண்கள் செருப்பால் அடிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “விழித்துகொண்ட ஊருக்கு போன வடக்கன் லடுக்கிகள்…” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவை, Anbarasu Natarajan என்பவர் 2020 மே […]

Continue Reading

கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.5000 தருகிறதா?- வாட்ஸ்ஆப் வதந்தி!

‘’கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.5000 தருகிறது,’’ என்று கூறி ஒரு தகவல் வாட்ஸ்ஆப் வழியே வைரலாக பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  நமது வாசகர் ஒருவர் இதனை வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டார். இதே தகவலை பலரும் வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளனர். இதுதவிர, ஃபேஸ்புக்கிலும் இதனை பலர் உண்மை என நம்பி பகிர்வதைக் கண்டோம்.  Facebook Claim Link […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா?

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதாக, சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஆம்பன் புயல் பாதிப்பை பார்வையிட சென்ற பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்கள் ஹெலிகாப்டரில் ஏறச் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஹெலிபேட் அமைக்கப்பட்ட இடத்தில் திரண்டிருந்தவர்கள் சௌகிதார் சோர் ஹே அதாவது காவல்காரன் ஒரு […]

Continue Reading

அயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த சிவலிங்கமா இது?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த சிவ லிங்கம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சங்கிலியால் கட்டி தூக்கப்படும் சிவலிங்கம் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ராமர் கோவில் அஸ்திவாரம் தோண்டறப்பொ கிடைச்ச சிவலிங்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Chandra Sekkar என்பவர் 2020 மே 24ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் […]

Continue Reading

தமிழக அரசு மட்டன், சிக்கனுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளதா?- விஷமத்தனமான வதந்தி!

‘’மட்டன், சிக்கன் போன்ற இறைச்சிகளுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link  இந்த பதிவில், ஒரு விளம்பர அறிவிக்கை போன்ற ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதில், ‘’மட்டன் சிக்கன் இறைச்சிகளுக்கு அரசால் விலை நிர்ணயம். மட்டன் ரூ.550 (ஒரு கிலோ), சிக்கன் ரூ.200 (ஒரு கிலோ). இன்று முதல் இறைச்சி கடைகளுக்கு மாவட்ட ஆட்சியரால் […]

Continue Reading

இயக்குனர் மோகனை விமர்சித்த கவுதம் வாசுதேவ் மேனன்- போலிச் செய்தியால் சர்ச்சை

‘’இயக்குனர் மோகனை கவுதம் வாசுதேவ் மேனன் விமர்சித்தார்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், இயக்குனர் மோகன், சமீபத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட குறும்படம் ஒன்றை பற்றி விமர்சித்ததைப் போலவும், அதற்கு கவுதம் பதில் கூறியதாகவும் ஒரு ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர்.  உண்மை அறிவோம்:இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில், சிம்பு, திரிஷா நடிப்பில், […]

Continue Reading

கடலில் மிதக்கும் மசூதி… ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

கடலில் மிதக்கும் மசூதி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் அப் எண்ணுக்கு (+91 9049044263)  மேற்கண்ட ஃபேஸ்புக் லிங்கை அனுப்பி வைத்து அது உண்மையா என்று கேட்டார். அதன் அடிப்படையில் இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். கடலில் […]

Continue Reading

கரையை கடந்த ஆம்பன் புயல் என்று கூறி பகிரப்படும் பழைய வீடியோ!

மேற்கு வங்க மாநிலம் திகாவில் பலத்த சூறைக்காற்றுடன் கரையைக் கடந்த ஆம்பன் புயல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஒன் இந்தியா தமிழின் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், பெட்டிக்கடை போல தென்படும் ஒரு சிறிய கட்டிடம் புயல் காற்றில் நொருங்கி விழுகிறது. மே 20, 2020 அன்று இந்த வீடியோ […]

Continue Reading

சாலையில் வரிசையாக சரிந்து கிடக்கும் லாரிகள்; ஆம்பன் புயல் காரணமா?

120 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு வங்கத்தை தாக்கிய ஆம்பன் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 1.16 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரிகள் சரிந்து கிடக்கின்றன. வீடியோவில், லாரி இயக்கப்படும் சப்தம் மட்டுமே கேட்கிறது. இது எங்கே […]

Continue Reading

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளித்த சீக்கியர்கள்: புகைப்படம் உண்மையா?

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சீக்கியர்கள் மருத்துவ சிகிச்சை அளித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை ஓரமாக ஏழை மக்களுக்கு சீக்கியர்கள் சிகிச்சை அளிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “போற்றுதலுக்குரிய புகைப்படம். ஆயிரக்கணக்கான தூரங்கள் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சீக்கியர்கள் செய்யும் அவசிய சேவை” என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து […]

Continue Reading

உணவு கொடுத்ததால் ஜோதிமணியை ஆதரிக்கிறேன் என்று சுப வீரபாண்டியன் சொன்னாரா?

‘’உணவு கொடுத்ததால் ஜோதிமணியை ஆதரிக்கிறேன்,’’ என்று சுப. வீரபாண்டியன் சொன்னதாகக் கூறி ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  இதில், சுப. வீரபாண்டியன், ‘’ஜோதிமணி எனக்கு உணவு அளித்தவர் என்பதால் அவரை மரியாதைக் குறைவாக பேசிய கரு.நாகராஜனை கண்டிக்கிறேன்,’’ என ட்வீட்டரில் பகிர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 […]

Continue Reading

ராகுல் காந்தி சந்தித்தது புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என்று பகிரப்படும் வதந்தி!

வெளிமாநில தொழிலாளர்களை ராகுல் காந்தி சந்தித்ததாக வெளியான படத்தில் உள்ளவர் உண்மையில் வெளிமாநில தொழிலாளர் இல்லை… ஷூட்டிங் முடிந்து அவர் காரில் புறப்பட்ட போது எடுத்த படம் என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராகுல் காந்தி புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்த புகைப்படமும் அவர் சந்தித்த தொழிலாளர்கள் காரில் புறப்பட்டு சென்ற படமும் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வெளிமாநில தொழிலாளர் […]

Continue Reading

நாயிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பாஜக?- ஃபேஸ்புக் விஷம பதிவு

சென்னையில் நாயை பா.ஜ.க இளைஞன் கற்பழித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link செய்தி ஒன்றின் மொபைல் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “சென்னையில் பயங்கரம்! நடுரோட்டில் வைத்து நாயைக் கதற கதற கற்பழித்த (பஜக) இளைஞன்!” என்று உள்ளது. நிலைத் தகவலில், “நாயை கற்பழித்த சங்கீஸ்சென்னையில் ஆட்டை தொடர்ந்து தற்போது நாயின் கற்புகள் சூறயாடபடுகிறது, இதனை அனைவரும் பகிர்ந்து கண்டனங்களை எழுப்பி […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் இந்துக்களை தாக்கும் முஸ்லீம்கள்- வைரல் வீடியோ உண்மையா?

‘’மேற்கு வங்கத்தில் இந்துக்களை தாக்கும் முஸ்லீம்கள். அடித்தே கொல்கிறார்கள்,’’ என்ற தலைப்பில் வைரலாக பரவும் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், இளைஞர்கள் சிலரை பொதுமக்கள் கடுமையாக தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதன் மேலே, ‘’ தீதி ஆளும் மேற்கு வங்காளத்தில் ஜிஹாதிகளின் ஆட்டம்… ஹிந்துக்களை காஃபீர்கள் என அடித்தே கொள்கின்றனர்… […]

Continue Reading

குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததால் தலித் பெண் தாக்கப்பட்டாரா?- ஃபேஸ்புக் வதந்தி

இந்தியாவில் குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் பெண் தாக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தலையில் மிகப்பெரிய வெட்டுக் காயத்துடன், முகம் முழுக்க ரத்தம் வடிந்தபடி உள்ள பெண்ணின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இந்தியா, இந்து மதத்தால் அழிந்துவிடும். குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் பெண் தாக்கப்பட்டுள்ளார். இடம் – முபாரக்பூர்” என்று குறிப்பிட்டு ஒரு […]

Continue Reading

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட நபர்களை கண்டுகொள்ளாத உத்தவ் தாக்கரே!- உண்மை என்ன?

மகாராஷ்டிராவில் வடாலா ரயில் நிலையத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பப்பட்டதாகவும் இதை மகாராஷ்டிராவின் சிவசேனா முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டுகொள்ளவில்லை என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ரயில் நிலையத்தில் அரசியல் தலைவர் போல உள்ள ஒருவர் தன்னுடைய குழுவினருடன் நடந்து செல்கிறார். ரயில் ஏற நின்றிருந்த சிலர் ஜிந்தாபாத் என்று குரல் […]

Continue Reading

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா?

உத்தரப்பிரதேச தொழிலாளர்களுக்காக பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பஸ்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது ரயில் அல்ல! புலம்பெயர்ந்த உ.பி தொழிலாளிகளுக்காக இளம் இந்திரா பிரியங்கா காந்தி அவர்கள் அனுப்பிய பேருந்துகள்! ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, பலரும் ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் கர்நாடக பஸ் கண்டக்டர் வெற்றி என பரவும் வதந்தி

கர்நாடகாவில் அரசு பஸ் கண்டக்டர் ஒருவர் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடத்துனர் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “பெங்களூரு அரசு பேருந்தில் கண்டக்டராக இருந்த மது என்பவர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிக்கான யுபிஎஸ்சி மெயின் தேர்வில் தேர்ச்சி. கண்டக்டராக இருந்தவர் கலெக்டராகும் தேர்வில் வெற்றி.. சாதாரண […]

Continue Reading

மோடி உருவ பொம்மையை எரிக்கும் வெளிநாட்டினர்!- ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

மோடியின் உருவ பொம்மையை வெளிநாட்டினர் எரிப்பதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Facebook Link 2 Archived link 1 Archived link 2 மோடியின் உருவபொம்மை எரிக்கப்படும் வீடியோ ஒன்றை Iŋterŋatiioŋal Ƿwįƞçǯzx என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2020 மே 15ம் தேதி ஷேர் செய்திருந்தார். இதன் அசல் பதிவு, Alawdeen Shaikalawdeen என்பவரால் 2019ம் ஆண்டு […]

Continue Reading

பாகிஸ்தானில் 21 இந்து குடும்பத்தினர் தீயிட்டு எரிக்கப்பட்டனரா?- முழு விவரம் இதோ!

‘’பாகிஸ்தானில் 21 இந்து குடும்பத்தினர் தீயிட்டு எரிக்கப்பட்டனர்,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு தகவலை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ஆண் ஒருவர் காயத்துடன் இருக்க, குடியிருப்புகள் தீயிட்டு கொளுத்தப்படும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் வாழும் 21 இந்து குடும்பத்தினரை குழந்தைகளோடு வைத்து எரித்த இஸ்லாமிய பயங்கரவாதிகள். இந்து பெண்கள் மீது […]

Continue Reading