ஸ்டாலின் அணிந்த கூலிங் ஜாக்கெட் விலை ரூ. 17 கோடி என்று பிடிஆர் கூறினாரா?

துபாய் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை ரூ.17 கோடி என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கூலிங் ஜாக்கெட் 17 கோடி. துபாய் […]

Continue Reading

அரசுப் பேருந்துகள் நிற்கும் ஓட்டல்கள் சைவமா, அசைவமா? தமிழ்நாடு அரசு கூறியது என்ன?

‘’சைவ ஓட்டல்களில் மட்டுமே அரசுப் பேருந்துகள் நிற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிடவில்லை. ஊடகங்கள் வதந்தி பரப்புகின்றன,’’ என்று குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்கள் பகிரும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் (SETC) சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் உணவு இடைவெளியின்போது சாலையோர ஓட்டல்களில் நின்று செல்வது வழக்கம். இதற்காக, […]

Continue Reading

தி.மு.க-வில் இருந்து கனிமொழி விலக உள்ளதாக நியூஸ் 7 செய்தி வெளியிட்டதா?

திமுக-வில் இருந்து கனிமொழி விலக உள்ளதாக நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கனிமொழி மற்றும் மு.க.ஸ்டாலின் புகைப்படங்களுடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கனிமொழி திமுகவில் இருந்து விலகல்? திமுகவில் அதிகரித்து வரும் பாலியல் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக கட்சியில் இருந்து […]

Continue Reading

உள்ளாட்சித் தேர்தல்: தி.மு.க 60 இடங்களில் டெபாசிட் இழந்தது என்று பரவும் வதந்தி!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 60 வார்டுகளில் டெபாசிட் இழந்தது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின், உதய சூரியன் சின்னத்துடன் கூடிய ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆளும் திமுக 60 இடங்களில் டெபாசிட் இழந்தது. பெரும்பாலான இடங்களில் பாஜக வேட்பாளர்களிடம் டெபாசிட் இழந்தது திமுக” […]

Continue Reading

நீட் தேர்வை கண்டித்து தற்கொலை செய்துகொள்வேன் என்றாரா மு.க.ஸ்டாலின்?

‘’நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்துகொள்வேன்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நியூஸ் கார்டை பார்த்தாலே அது எடிட் செய்யப்பட்டு, ‘’தற்கொலை’’ என்ற வார்த்தையை புதியதாக சேர்த்துள்ளனர் என்று தெரிகிறது. பார்க்கும்போதே போலி என்று தெரியும் இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி கேலி […]

Continue Reading

ஸ்டாலின் டீ குடித்ததால் கடையை மூடிய உரிமையாளர் என்று பரவும் வதந்தி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டீ குடித்ததால் கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக மூடிய டீ கடை உரிமையாளர் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் டீ குடிக்கும் புகைப்படத்துடன் கூடிய ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில் “ஸ்டாலின் டீ குடித்ததில் இருந்து கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தும் சமூக நீதி அமைப்பில் சேர முடியாது என்று மம்தா பானர்ஜி கூறினாரா?

ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி அமைப்பில் சேர வேண்டிய அவசியமில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மம்தா பானர்ஜி புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலினுக்கு மம்தா பேனர்ஜி பதிலடி. ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி அமைப்பில் சேர […]

Continue Reading

தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

சமூக நீதியை காக்க தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக, ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு தமிழ்நாடு போன்ற மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், மத்திய அரசு இதனை கண்டும் காணாதது போல செயல்படுவதாக, கல்வி ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். […]

Continue Reading

ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும்படி மு.க.ஸ்டாலின் கட்டாயப்படுத்துகிறார் என்று வேல்முருகன் கூறினாரா?

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்களைக் கட்டாயப்படுத்துகிறார் என்று வேல்முருகன் எம்.எல்.ஏ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஆளுநர் மாளிகையை முற்றுகையிடக் கூறி முதல்வர் ஸ்டாலின் எங்களை […]

Continue Reading

பொங்கல் பரிசுத் தொகுப்பு; தமிழ்நாட்டு மக்களை மு.க.ஸ்டாலின் விமர்சித்தாரா?

‘’இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களை விமர்சித்த மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டனர். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது ஃபேஸ்புக்கில் இதனை பலரும் உண்மை என்று நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link […]

Continue Reading

விவசாய, கல்விக் கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்று ஸ்டாலின் கூறினாரா?

கல்விக் கடன், விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கூறினோம். அதைத் தள்ளுபடி செய்வது சாத்தியமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கல்விக் கடன், விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்வதாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக […]

Continue Reading

குடியரசு தின அணிவகுப்பில் கருணாநிதி சிலை நீக்கம்; மு.க.ஸ்டாலின் விளக்கம் கூறியதாகப் பரவும் வதந்தி…

‘’குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த கருணாநிதி சிலை நீக்கப்பட்டது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம்,’’ எனக் குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பாலிமர் நியூஸ் லோகோவுடன் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் உண்மையா எனக் கேட்டு சந்தேகம் எழுப்பியிருந்தார். இந்த செய்தியை ஃபேஸ்புக்கிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை […]

Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா, அமைச்சர்களுக்கு இடையே மோதல் என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா என்றும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக முதலமைச்சருக்கு கொரனா தொற்று. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கொரனா தொற்று உறுதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

Continue Reading

நல்லாட்சி குறியீட்டில் தமிழ்நாட்டுக்கு 18வது இடம் கிடைத்ததா?

மாநில அரசுகளின் நிர்வாகம் குறித்த தரவரிசைப் பட்டியலான குட் கவர்னன்ஸ் இன்டெக்ஸ் பட்டியலில் தமிழ்நாடு 18வது இடம் பிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அஸ்ஸாம் முதல்வர் ஆகியோர் படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மாநில அரசுகள் நிர்வாகம் குறித்த தரவரிசைப் பட்டியல் ஒன்றை Good Governance Index என்ற […]

Continue Reading

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வளர்ச்சி பெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 11வது இடத்துக்கு தள்ளப்பட்டதா?

தி.மு.க ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் வளர்ச்சி பெறும் மாநிலங்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 11வது இடத்துக்கு தள்ளப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வெள்ளை அறிக்கை. வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடத்திலிருந்து 11வது இடத்திற்கு தள்ளப்பட்டது” […]

Continue Reading

ஒமிக்ரான்; தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அறிவித்ததா?- தந்தி டிவி பெயரில் வதந்தி…

‘’தமிழ்நாடு அரசு ஒமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி முதல் மார்ச் வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம். FB Claim Link I Archived Link உண்மை அறிவோம்:கொரோனா […]

Continue Reading

ஸ்டாலின் எங்கள் கால்களை நக்குகிறார் என்று பாஜக-வின் நாராயணன் கூறினாரா?

ஸ்டாலின் எங்கள் கால்களை நக்குகிறார் என்று தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சத்யம் டிவி வெளியிட்ட யூடியூப் வீடியோ முகப்பை ஸ்கிரீன்ஷாட் எடுத்தது போன்று ஒரு பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலின் எங்கள் கால்களை நக்குகிறார் பாஜக தலைவரின் திமிர் பேச்சு” என்று இருந்தது. அதற்கு […]

Continue Reading

தமிழ்நாடு அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது குறைக்கப்பட்டதா?

தமிழ்நாடு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்பட்டது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆகக் குறைப்பு அமல்..! 05-01-2022 முதல் அரசாணை வெளியீடு” என்று இருந்தது. இந்த பதிவை பசும்பொன் தாரா என்ற […]

Continue Reading

FACT CHECK: தமிழகத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டார் என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழ்நாட்டில் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டார் என்றும், தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்றும் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive பேருந்து ஓட்டுநர் ஒருவரை இளைஞர் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விடியா திமுக ஆட்சியில் மிக மோசமான நிலையில் தமிழகத்தின் சட்டம் ஓழுக்கு சீர் […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க ஆட்சியில் கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்ததா?

தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் என்று ஒரு இந்திய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாடு முதலிடம் கடன் வாங்கியதில் Credite goes to whom? கடன், தமிழ்நாடு, திமுக அராஜகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ராம் […]

Continue Reading

FACT CHECK: சீனப் போரின் போது தமிழக முதல்வராக அண்ணா இருந்தார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

இந்தோ – சீனப் போரின் போது இந்திய ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது அப்போதைய அண்ணாவின் ஆட்சி என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை வைத்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. சன் நியூஸ் கார்டு பகுதியில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரை! திமுகவுக்கு யாரும் […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க அரசு ஆரம்பித்த பெண்களுக்கான மதுக்கடை என்று பரவும் படம் உண்மையா?

விடியல் அரசின் பெண்களுக்கான மதுக் கடை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ சாட்பாட் வாட்ஸ் அப் எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். மதுக்கடை ஒன்றில் பெண் ஒருவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மேல், “விடியல் அரசின் மம்மி மதுக் கடை” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  அசல் […]

Continue Reading

FACT CHECK: கயிறு கட்டி ஆற்றைக் கடக்கும் மாணவர்கள் புகைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?

கயிறு கட்டி, அதன் மீது நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இப்படி ஒரு சூழல் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு உள்ளதால் இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பள்ளிக்கூட மாணவர்கள் ஆற்றைக் கடக்க, இரண்டு மரங்கள் இடையே கயிறு கட்டி, அதன் மீது நடந்து செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “பாலம் […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க ஆட்சியில் மதுரையில் பெண்களுக்கு தனி பார் திறக்கப்பட்டதா?

தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு என்று தனியாக மது பார் திறக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் மது அருந்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ் வளர்த்த மதுரையில் பெண்களுக்காக தனி பார் அமைத்து விடியல் சாதனை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Balachandar Nagarajan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 […]

Continue Reading

FACT CHECK: நிதி உதவிக்காக மத்திய அரசு என்று கூறினாரா மு.க.ஸ்டாலின்?

ஒன்றிய அரசு என்று கூறி வந்த மு.க.ஸ்டாலின், நிதி உதவி பெறுவதற்காக மத்திய அரசு என்று குறிப்பிட்டுள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “நெடுஞ்சாலைத் திட்டம்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!” என்று அச்சு ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின் புகைப்படத்தை யாரோ ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டதை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பதிவிட்டுள்ளனர். செய்தியில் மத்திய […]

Continue Reading

FACT CHECK: சென்னையில் வீட்டுக்குள் தேங்கிய வெள்ள நீரில் நீச்சல் கற்கும் பெண்- வீடியோ உண்மையா?

சென்னையில் வீட்டுக்குள் தேங்கிய மழை நீரில் பெண் ஒருவர் நீச்சல் கற்றுக்கொள்வது போன்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive வட இந்தியர் போல தோற்றம் அளிக்கும் பெண் ஒருவர், வீட்டில் தேங்கிய மழை நீரில் நீச்சல் அடிக்க அவரது கணவர் பயிற்சி அளிப்பது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வீட்டுக்குள் நீச்சல் பழக வழிவகை செய்த […]

Continue Reading

FACT CHECK: சென்னை வெள்ள பாதிப்பு என்ற பெயரில் தவறான வீடியோக்கள் பரவுவதால் குழப்பம்!

சென்னையின் வெள்ள பாதிப்பு என்று சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அவற்றைப் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சென்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்தின் மீது வெள்ளம் கரைபுரண்டோடும் விகடன் வெளியிட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சென்னை சைதாப்பேட்டை பாலம் இன்றைய நிலை-திமுக அரசு கதறல் ,தமிழகம் தத்தளிப்பு ! சென்னையை காப்பற்ற முடியாத திமுகவிற்கு எதிர்வரும் தமிழக மாநகராட்சி தேர்தலில் […]

Continue Reading

FactCheck: மழை நீர் வராமல் தடுக்க பொதுமக்கள் வீட்டின் கேட்களை மூடி வைக்கும்படி மு.க.ஸ்டாலின் கூறினாரா?

‘’மழை நீர் வீட்டிற்குள் வராமல் தடுக்க வீட்டின் கதவுகளை மூடி வையுங்கள்,’’ என்று பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார் என ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, இது பலராலும், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்டவற்றில் பகிரப்படுவதைக் கண்டோம். FB Claim Link […]

Continue Reading

FACT CHECK: மழை வெள்ளத்தில் நீச்சல் அடித்து மகிழும் சென்னை மக்கள் என நியூஸ் கார்டு வெளியிட்டதா புதிய தலைமுறை?

சென்னையில் பெய்த கன மழையினால் மக்கள் மகிழ்ச்சியாக குளித்து நீச்சல் அடித்து வருகின்றனர் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சென்னையில் பெய்த கனமழையினால் மக்கள் மகிழ்ச்சியாக குளித்து நீச்சல் அடித்து வருகின்றனர்! மகிழ்ச்சியில் மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து […]

Continue Reading

FACT CHECK: மழை நீர் தேங்கியதால் சென்னை மக்கள் சந்தோஷம் என்று தந்தி டிவி கூறியதா?

சென்னையில் மழை தண்ணீர் ஆங்காங்கே தேங்கியதால் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கிய சென்னைவாசிகள் என்று தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சென்னையில் கனமழை தொடரும். மழை தண்ணீர் ஆங்காங்கே தேங்கியதால் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கிய சென்னைவாசிகள்” என்று இருந்தது. நிலைத் தகவலில் […]

Continue Reading

FACT CHECK: ஸ்டாலின் ஆட்சியில் மழை வெள்ளம் என்று பகிரப்படும் பழைய படங்கள்!

ஸ்டாலின் ஆட்சியில் சென்னையில் பரிசல் மூலம் மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்றும், நீச்சல் குளம் போல சென்னை மாறிவிட்டது என்றும் சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட சூழலில், மு.க.ஸ்டாலின் ஆட்சி நிர்வாகம் காரணமாக சென்னையில் மழை நீர் தேங்கிவிட்டது என்று குற்றம்சாட்டும் வகையில் சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. […]

Continue Reading

FACT CHECK: பெட்ரோல் – டீசல் மீதான வரியை குறைத்ததா கேரள அரசு?

கேரளா மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மாநில அரசு குறைத்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்த் திரைப்பட காட்சி ஒன்றுடன் கூடிய புகைப்பட பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பு. பெட்ரோல் விலை ரூ.6.67, டீசல் விலை ரூ.12.33 குறைத்து மாநில […]

Continue Reading

FACT CHECK: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை மு.க.ஸ்டாலின் பாராட்டினாரா?

வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலினுடன் சிலர் நிற்கும் புகைப்படம் மற்றும் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு என வெளியான செய்தியை இணைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “வன்னியர் உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக […]

Continue Reading

FACT CHECK: பேருந்தில் பயணிகளை சந்தித்த மு.க.ஸ்டாலின்?- வைரலாகும் பழைய புகைப்படத்தால் குழப்பம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகுந்த முன்னேற்பாடு செய்துகொண்டு, பஸ் பயணிகளை சந்தித்த படம், என்று சமூக ஊடகங்களில் சிலர் பழைய படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive மு.க.ஸ்டாலின் பஸ்ஸில் பயணிகளுடன் பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆமா..திடீர்னு(?) பஸ்ஸூக்குள்ளே தோரணம் எப்படி வந்துச்சு? எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?.. சென்னையன்ஸ அவ்வளவு பலகீனமாவா இருக்கீங்க..ஏமாறுமளவு?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

FACT CHECK: பள்ளி பாடப் புத்தகத்தில் இயேசு கதையை சேர்த்தேன் என்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் லயோலா கல்லூரி இயக்குநர் கூறினாரா?

கிறிஸ்தவ, மதமாற்றக் கருத்துக்களை பள்ளி பாட புத்தகத்தில் ரகசியமாக சேர்த்தேன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் லயோலா கல்லூரி முதல்வர் கூறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாதிரியார்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. திடீரென்று ஒருவர் மைக் பிடித்து பேசும் காட்சிகள் வருகின்றன. அவர் ஆங்கிலத்தில் பேசுகிறார். […]

Continue Reading

FactCheck: மு.க.ஸ்டாலினுக்கு ஐநா சபை பாராட்டு எனக் கூறி பகிரப்படும் ஆதாரமற்ற செய்தி…

‘’மு.க.ஸ்டாலினுக்கு ஐநா சபை பாராட்டு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் யூடியுப் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  FB Claim Link I Archived Link உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், First Junction என்ற யூடியுப் சேனல் வெளியிட்ட வீடியோ ஒன்றின் லிங்கை ஷேர் செய்துள்ளனர். அந்த வீடியோவில், ஆதாரங்கள் அல்லது மேற்கோள் எதுவும் காட்டாமல், போகிற போக்கில் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி ஐநா […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க கூட்டணியில் இருந்து விலகுவதாக திருமாவளவன் அறிவித்தாரா?

தி.மு.க கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகுவதாக தொல் திருமாவளவன் அறிவிப்பு என்று சமூக ஊடகங்களில் ஒரு போலியான நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற திருமாவளவன் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம் கனத்த மன வேதனையுடன் திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம் – விசிக தலைவர் திருமாவளவன்” என்று இருந்தது. இந்த பதிவை சுரேஷ் […]

Continue Reading

FACT CHECK: விடுதலைச் சிறுத்தைகள் மீது திமுக சாதி வெறி காட்டுகிறது என்று வைகோ கூறினாரா?

அதிகாரம் கையில் இருப்பதால் வி.சி.க மேல் கட்டவிழ்த்து விட்டிருக்கும் சாதி வெறியை தி.மு.க நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிகாரம் கையில் இருப்பதால் திமுக விசிக மேல் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சாதிவெறியை நிறுத்திக்கொள்ள […]

Continue Reading

FACT CHECK: ஜெயலலிதா ஊழல்களை என் தலையில் கட்டுகிறது தி.மு.க என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழல்களை எல்லாம் என் தலையில் கட்ட பார்க்கிறது தி.மு.க அரசு என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “கடந்த பத்து வருடங்களில் 4 வருடங்கள் மட்டுமே […]

Continue Reading

FACT CHECK: தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் ரூ.65க்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக வதந்தி!

தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் ரூ.65க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததாக ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு! தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை 65 மட்டுமே. தமிழக அரசின் வரி 35 ஐ குறைத்து […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க தலித் அணித் தலைவராக வன்னியரசு நியமனம் என பரவும் போலியான நியூஸ் கார்டு!

தி.மு.க-வின் தலித் அணித் தலைவராக வன்னியரசுவை மு.க.ஸ்டாலின் நியமித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினுடன் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தலித்அணி தலைவர் வன்னியரசு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான வன்னியரசுவை தி.மு.க கட்சியின் தலித்அணி தலைவராக நியமித்து கழகத் தலைவர் […]

Continue Reading

FACT CHECK: பள்ளிக் கல்வித் துறைக்கு வெறும் ரூ.32 கோடி ஒதுக்கிவிட்டு, கருணாநிதி நினைவிடத்துக்கு ரூ.39 கோடி ஒதுக்கப்பட்டதா?

தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு 32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துவிட்டு, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவிடத்துக்கு 39 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகைப்படத்துடன் பதிவு ஒன்று போட்டோஷாப் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்திலுள்ள மொத்த பள்ளிக் கல்வித்துறைக்கு […]

Continue Reading

FACT CHECK: மு.க.ஸ்டாலின் காரில் தேசியக் கொடி தலைகீழாகப் பறந்ததாக பரவும் வதந்தி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் தேசியக் கொடி தலைகீழாக பறந்தது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive புதிய தலைமுறையில் வெளியான செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “விமான நிலையம், சென்னை, முதலமைச்சர் காரில் தலைகீழாகப் பறந்த தேசியக் கொடி” என்று இருந்தது. மேலும் அதன் மீது, தமிழ்நாடு முதல்வர் முத்துவேலு கருணாநிதி […]

Continue Reading

FactCheck: ஜனவரி 15 சுதந்திர நாள் என்று முதலமைச்சர் உரையின்போது மு.க.ஸ்டாலின் பேசினாரா?

‘’ஜனவரி 15 சுதந்திர நாள் என்று உளறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்றின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, அவர் ஜனவரி 15 சுதந்திர நாள் என்று உளறிவிட்டதாகக் கூறி, இந்த ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற […]

Continue Reading

FACT CHECK: 2024ம் ஆண்டு செங்கோட்டையில் ஸ்டாலின் கொடியேற்றுவார் என செந்தில்வேல் கூறினாரா?

வருகிற 2024ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமராக மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றுவார் என்று செய்தியாளர் செந்தில்வேல் கூறியதாக ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive செய்தியாளர் செந்தில் வெளியிட்ட ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “2024 ஆகஸ்ட் 15 சுதந்திரதின நாளில் செங்கோட்டையில் கொடியேற்று வார், வருங்கால இந்திய ஒன்றிய பிரதமர், முத்துவேல் […]

Continue Reading

FACT CHECK: பெட்ரோல், டீசல் விலையை குறைத்துவிட்டு வாகன ஓட்டிகளுக்கான அபராதத்தை உயர்த்தினாரா ஸ்டாலின்?

தமிழ்நாட்டில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 ரூபாய் குறைத்துவிட்டு வாகன ஓட்டிகளுக்கான அபராதத்தை தமிழ்நாடு அரசு அதிகரித்துவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உயர்த்தப்பட்ட அபராத தொகை சென்னையில் அமலுக்கு வந்தது என்று தினமலரில் வெளியான செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து புகைப்பட பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், “இதுக்கு நீ பெட்ரோல் டீசல் 3 […]

Continue Reading

FactCheck: ஒரு வீட்டில் ஒருவருக்கு மட்டுமே அரசுப் பணி?- ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை என பகிரப்படும் வதந்தி…

‘’ஒரு வீட்டில் கணவன் அல்லது மனைவி என யாரேனும் ஒருவர் மட்டுமே இனி அரசுப் பணியில் நீடிக்க முடியும்- திமுக அதிரடி நடவடிக்கை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே ( ) அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் […]

Continue Reading

FACT CHECK: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்தாரா முதலமைச்சர் ஸ்டாலின்?

தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி என்று புதிய தலைமுறையில் வெளியான செய்தியின் ஸ்கிரீன்ஷாட் மற்றும் சன் நியூஸ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சன் […]

Continue Reading

FACT CHECK: குடும்ப அட்டைக்கு ரூ. 1000 வழங்குவது சாத்தியமில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததாக பரவும் வதந்தி!

குடும்ப அட்டைக்கு மாதம் ரூ.1000ம் வழங்கும் திட்டம் சாத்தியமில்லாதது என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 மு.க.ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வது போன்ற படத்துடன் கூடி செய்தி ஊடகம் ஏதோ ஒன்று வெளியிட்ட இணைய செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். […]

Continue Reading

FACT CHECK: மத்திய அரசிடமிருந்து ரூ.52க்கு பெட்ரோல் வாங்கி அதிக விலைக்கு தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறதா?

மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு ரூ.52க்கு பெட்ரோலை வாங்கி 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது என்று சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் படத்துடன் புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெட்ரோல் விலை: மத்திய அரசின் விலை ரூ.52.75, தமிழக அரசின் விலை ரூ.99.82. கொள்ளை லாபம் […]

Continue Reading